நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Friends [1994–2004]–காமெடி நாடகத் தொடர்

poster

இன்னிக்கி நாம பார்க்கப்போறதும்  ஒரு சிட்கொம் தான். சிட்கொம்னா என்னன்னு தெரிந்துகொள்ள The Big Bang Theory நாடக விமர்சனத்தின் இரண்டாவது பாராவை வாசிச்சுக்கோங்க.

நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் , செய்யும் நக்கல்கள் போன்றவற்றை திரையில் பார்க்கும்போது நமக்கும் பல பழைய ஞாபகங்கள் நினைவில் வந்து மனதிற்குள் சிரிப்பதில்லையா? அல்லது ஏதாவது ஒரு ரெஸ்டாரன்டிலோ, தியேட்டரிலோ நண்பர்களுடன் சேரும் போது நாம் செய்யும் அநியாயகங்கள் எத்தனை? Friends நாடகத்தின் வெற்றிக்கான காரணம் இது தான். நான் பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து என்ன வேலை இருந்தாலும் ஒவ்வொரு நாளும் படுப்பதற்கு முன் அட்லீஸ்ட் ஒரு எபிசோடாவது பார்க்காமல் விட்டது இல்லை. யார் இந்த 6 நண்பர்கள்? அவங்க எப்படிப்பட்டவங்க? பார்க்கலாம் வாங்க …

Friends-fanart

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

FRIENDS -- NBC Series -- Season 10: மோனிக்கா கெல்லர். சுத்தம் … சுத்தம் … சுத்தம். தானும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும், எப்பொழுதும் தான் சொல்வதை கேட்கவேண்டும். அவள் வாழும் இடமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் குறியாக உள்ளவள். யாராவது மீறினால் ஹை பிட்சில் இவள் கத்துவதில் காது கிழியும்.  மோனிக்காவின் அண்ணன் ரொஸ் கெல்லர். தொல்பொருள் துறையில் வேலை செய்பவன்.  கொஞ்சம் வித்தியாசமான கீக்கி டைப். அங்கீகாரத்தை மிகவும் எதிர்ப்பார்ப்பவன். அவனின் மனைவி ஒரு லெஸ்பியன் எனத் தெரியவந்ததும் டிவோர்ஸ் பண்ணிவிட்டு தனியாக வாழ்பவன். அடிக்கடி லவ், திருமணப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வான். அடுத்தவன் பேரு சான்ட்லர் பிங். பேரைப் பார்த்துவிட்டு சைனாக்காரன்னு நினைக்காதீங்க. ஒரு பெரிய கம்பெனியில் வேலை (என்ன வேலைன்னு சரியா தெரியல) செய்யும் இவன் வாயிலிருந்து நக்கலுடன் கூடிய கிண்டல்கள் நாடகம் முழுவதும் வரும். ஆண்மை அதாவது பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்கான கேஸ்.

சான்ட்லரின் கரெக்டருக்கு எதிரானவன் ஜோயி ட்ரிபியானி. ஒரு நடிகனாவதற்காக முயற்சி செய்துகொண்டிருப்பவன். பெண்கள் விஷயத்தில் எக்ஸ்பர்ட். ஆனால் எல்லாம் வன்-நைட்-ஸ்டான்ட் தான். மூளையை வேஸ்ட் செய்யாமல் கிட்னியால் யோசிப்பவன். அடுத்தது ரேச்சல் க்ரீன். மோனிக்காவின் ஸ்கூல்மேட். சிறுவயதில் பணக்கார குடும்பத்தில் வளர்ந்ததால், பெரும்பாலான பணக்காரப் பிள்ளைகள் போல ஃபேஷன், ஷாப்பிங் என சில ஆசைகளாலும் பழக்கங்களாலும் குட்டிச்சுவராப் போனவள். தனக்கு வேண்டியதை சிரித்துப் பேசி நைஸாக செய்து கொள்வதில் கில்லாடி. கூட்டத்தில் சரியாக ஒரு நிலையில் சரியாக இருக்காதவள் தான் ஃபீபி புஃபே. விளக்கமற்ற லூசு போல இருந்தாலும் காமென் சென்ஸ் அதிகம் இருக்கிறவள்.

fanart 
இந்த ஆறு நண்பர்களுக்கு இடையில் இடம்பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், அவர்கள் வாழ்க்கையில் இடம்பெறும் மாற்றங்கள், மலரும் காதல், திருமணங்கள் போன்றவை தான் ஃப்ரெண்ட்ஸ் நாடகத்தின் திரைச்சுருக்கம். கிட்டத்தட்ட 22 x 236 = 5192 நிமிடங்கள் = கிட்டத்தட்ட 86.5 மணி நேர காமெடி, சென்டிமெண்ட் பயணம். இதை சரக்கடிப்பது போல தினமும் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக ரசித்து ரசித்து பார்ப்பது ஒரு வித போதை.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

அதாவது வந்துங்க 1994ம் வருஷம் செப்டம்பர் மாதம் 22ம் திகதி … NBC சானல்ல ஐந்து நண்பர்கள் ஜாலியா அரட்டையடிச்சுட்டு இருக்காங்க. திடீர்னு தடதடதடன்னு திருமண உடையுடன் ஒரு பொண்ணு உள்ள நுழைகிறாள். “நான் கல்யாணம் கட்டிக்க இருந்தவன் என் நெருங்கின நண்பியோட கள்ளத்தொடர்பு வச்சிருந்திருக்கான். அது தான் திருமணத்தில் இருந்து இடையில் ஓடி வந்துட்டேன்” சொல்பவள் தான் ரேச்சல். இவ்வாறு வரும் ரேச்சல் மெதுவாக இந்த நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்கிறாள். இவர்களின் உதவியுடன் காபி ஷாப் ஒன்றில் வெயிட்டர் வேலையும் கிடைக்கிறது. இங்கிருந்து மெதுவாக ரொஸ் பாடசாலை நாட்களில் ரேச்சல் மீது கொண்டிருந்த ஒருதலைக் காதல், இது தெரியவந்து ஏற்படும் ரேச்சல்-ரொஸ் காதல், பின்னர் சான்ட்லர் மோனிக்கா காதல், ப்ரோபோசல்கள், திருமணங்கள், பிரிவுகள், வேலைகள், பிள்ளைகள் குட்டிகள் என மேற்குலக இளமைப் பருவ வாழ்க்கையை காமெடியுடனும், டபுள் மீனிங் வசனங்களுடனும், சென்டிமெண்டுடனும் ஒரு டூர் எடுத்துச் செல்லும் பயணமே ப்ரெண்ட்ஸ் நாடகம்.

tumblr_lhvann04GZ1qg42pfo1_500

டேவிட் க்ரேனும் மார்த்தா கோஃப்மென்னும் Friends நாடகத்தை தொடங்க மீடிங் போடும்போது கனவில் கூட நினைத்திருக்க மாட்டாங்க ….. எங்கோ நியு யோர்க் நகரின் மான்ஹாட்டன் பகுதியில், பக்கத்து பக்கத்து அபார்ட்மெண்ட்களில் வாழும் மூன்று ஆண்கள், மூன்று பெண்களின் ஜாலியான வாழ்க்கைக்கு 20 மில்லியன் அமெரிக்கர்களின் வாழ்க்கையைக் கட்டிப் போடக்கூடிய சக்தி இருக்கின்றது என்று. 1994ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பித்த இந்த தொலைக்காட்சியின் ஓட்டம், “வெற்றிகரமாக” பத்து ஆண்டுகள் சென்று நிறைவு பெறும் வரை  ரேடிங்கிலும் சரி, பார்வையாளர்களிலும் சரி … சற்றும் குறையவில்லை. வெற்றிக்கு இதன் இறுதி எபிசோடைப் பார்த்த 5 கோடி அமெரிக்கர்களும் சாட்சி.

Fanart 
ஒளிபரப்பு செய்யப்பட்ட காலத்திலிருந்து இதுவரை ஏகப்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறது (விக்கிபீடியா பார்த்துக் கொள்க). ஃப்ரெண்ட்ஸாக வந்து 6 பேருக்குமே அவர்களின் கேரியரில் ஒரு மிக முக்கிய மைல்கல் என இந்த நாடகத்தைச் சொல்லலாம். முக்கியமாக 40 வயதிலும் கவர்ச்சியாக செக்ஸியாக இருக்கும் ஜெனிஃபர் அனிஸ்டன் மற்றும் கோர்ட்னி கொக்ஸ். இது முடிந்த கையோடு ஜோயின் வாழ்க்கையை பற்றி Joey எனத் தனியாக ஒரு தொடர் இரண்டு சீசன்கள் வந்தது. (Star World இல் சீக்கிரம் ஒளிபரப்பாகவுள்ளது) ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை. ஊத்திக்கிச்சு. இதைத் தவிர சீரீஸின் இடையிலும் பல முக்கிய நடிகர்கள் இடையில் தரிசனம் தந்துவிட்டு போவார்கள் ப்ரூஸ் வில்லிஸ் உட்பட. ஆனாலும் காமெடி ஒருபக்கம் இருந்தாலும் கதையை கொண்டு போவதற்காக மீண்டும் மீண்டும் ரொஸ்-ரேச்சல் லவ்வை ஸ்பைடர்மேன் கல்யாணம் போல ஆரம்பித்து ஆரம்பித்து முடிப்பது எரிச்சலைத் தான் தரும். ஆனா நமக்கு காமெடி தானே முக்கியம். ஸோ யு ஆர் எக்ஸ்கியுஸ்ட் க்ரேன், கோஃப்மென்.

11

தொடர்ந்து நாடகத்துடன் ஒன்றிப் பார்க்கும்போது நாமும் அவர்களுடன் ஏழாவது நண்பனாக வாழ்வது போன்ற ஒரு ஃபீலிங் வரும். பார்க்க விரும்பினால் இந்தியன் Warner Bros இல் காலை 7.45க்கும் ஸ்டார் வேர்ல்ட் (Star World) சேனலில் பகல் 1.30க்கும் ஒளிபரப்பாகிறது. பார்க்க விரும்புபவர்கள் ஒரு மூணு எபிசோடை ட்ரை ஒன்று கொடுத்துப் பாருங்க. அப்புறம் டவுன்லோட் பண்ணியோ ஆன்லைனிலோ மிச்சத்தை பார்ப்பீங்க. நாடகம் பிடிக்கலைன்னா உங்க ஹாஸ்ய ரசனையில் ஏதோ கோளாறு இருக்குன்னு அர்த்தம். நல்ல டாக்டராப் பாருங்க.

ஃப்ரெண்ட்ஸ் பார்த்து முடியப்போகுது. முடிந்த கையோடு Two and a Half Men சீரிஸ், சீசன் 7 வரை ரெடியா கிடக்கு. அதை தொடங்க வேண்டியது தான். அதுக்குள்ள Game of Thrones இரண்டாவது சீசனும் தொடங்கிவிடும். நேரம் கிடைப்பது புளியங்கொம்பாகத் தான் இருக்கப் போகிறது.

Fanart

இந்த நாடகத்தின், எனக்குப் மிகவும் பிடித்த அழகான தீம் சாங் -


பதிவு பிடித்திருந்தா ஒட்டுக்கள் ப்ளீஸ்


அடுத்த பதிவில் சந்திக்கும்வரை,

ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

15 comments:

 1. ப்ரெண்ட் கிட்ட வாங்கி வைச்சு இருக்கேன்..., அடுத்த மாசம் பாக்கனும்., இந்த மாசம் கொஞ்சம் பிஸி...

  ReplyDelete
 2. Friends பத்தின அறிமுகம் மற்றும் அந்த தொடரின் கேரக்டர்களை பத்தி ரொம்ப நீட்டா எழுதி இருக்கேங்க.
  ரொம்ப காலத்துக்கு முன்னாடி சில எபிசோட்ஸ் பார்த்து இருக்கேன்...அவ்வளவு தான்...நண்பரே...

  ReplyDelete
 3. ரொம்ப வெள்ளைத்தனம்...இருந்தாலும் டைம் பாஸ்...

  ReplyDelete
 4. ஃப்ரண்ட்ஸ் தொலை காட்சி தொடரை பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். கல்லூரி நாட்களுக்கு சென்றது போல் இருக்கிறது. இதனை வெறித்தனமாக பார்த்த நாட்கள் அவை.

  அமெரிக்கர்களை பார்த்து நான் பொறாமை கொண்ட காலம் அது. அப்படி ஒரு வாழ்வு கிடைக்காதா என்று ஏங்கி இருக்கிறேன்.

  அதன் பின்னர் தான் தெரிந்தது திருப்பாச்சி படத்தை பார்த்து சென்னையை எந்த அளவிற்கு தெரிந்து கொள்ள முடியுமோ அதே அளவிற்கு தான் அமெரிக்க படங்களை பார்த்து அமெரிக்காவை தெரிந்து கொள்ள முடியும் என்பது :-)

  உங்களுக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 5. நல்ல ஒரு நண்பர்கள் பற்றிய நாடகத்தை ரெக்கமண்ட் செய்திருக்கிறீர்கள்.. பார்ப்போம்.. வெறும் இமேஜாக இல்லாமல் அனிமேஷனாக இருப்பது பதிவை இன்னும் ரசிக்க வைக்கிறது...

  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 6. "ப்ரெண்ட்ஸ்" என்னோட ஃபேவரிட் தொடர்களில் ஒன்று, ஆனாலும் முழுமையாக பார்த்து முடிக்கவில்லை.
  sitcom சீரீஸ் மட்டும்தான் எழுதுவீர்களா?

  ReplyDelete
 7. @...αηαη∂....

  கண்டிப்பா பார்த்துவிட்டு உங்க கருத்தை பதிவிடுங்க.

  ReplyDelete
 8. @ராஜ்

  ஃப்ரீ டைம் இருந்தா மேலே சொன்ன டீவி சேனல்களில் பாருங்க.

  ReplyDelete
 9. @SathyaPriyan

  வந்து கருத்திட்டுச் சென்றமைக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 10. @கவிதை காதலன்

  முடிஞ்சா டீவில பாருங்க. இல்ல ... டவுன்லோட் பண்ணிப் பாருங்க. உங்களுக்கு காமெடி பிடிக்கும்னா இதுவும் நிச்சயம் பிடிக்கும்.

  ReplyDelete
 11. ப்ரெண்ட்ஸ் எனக்கு புடிச்ச சீரீஸ்களில் ஒன்று.. இருந்தாலும் முழுதாக பார்த்து முடிக்கவில்லை!
  sitcom சீரீஸ் மட்டும்தான் எழுதுவீர்களா?

  ReplyDelete
 12. @JZ

  இல்லையே. இப்போ பார்க்கிற ட்ராமா எல்லாம் சிட்கொம் தான். என்னமோ தெரியல. இதுங்க மேல அப்படியொரு பைத்தியமா இருக்கு. சீக்கிரம் இன்னொரு ட்ராமா பத்தி எழுதலாம்.

  ReplyDelete
 13. நல்ல பதிவு.  மெல்லிய உணர்வுகளை காமெடியாக மாற்றும் வசனங்கள். எத்தனை முறை பார்த்திருப்பேனென்று எனக்கே தெரியாது.  அனைவருமே நல்ல நடிகர்கள்.  இதைப் பார்த்து விட்டு, கவுண்டமனியின் பன்னிக்குட்டித் தலையா போன்ற "காமெடிகள்" ஞாபகம் வந்து தொலைக்கிறது.  அடுத்தவனை வக்கிரமாக கேலி செய்வதை மட்டுமே காமெடி என்ற பெயரில் தமிழ் சினிமாவில் காட்டுகிறார்கள்.  இதை தொடங்கி வைத்தது எஸ்.வி.சேகரின் நாடகங்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 14. What day isn't today?

  ReplyDelete
 15. பாஸ் அப்படியே Mentalist பற்றி எழுதுங்களேன்...

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...