நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Expendables 2 (2012)

folder

ஸ்டாலோன் – தம்பிங்களா … நம் முதல் படம் கலெக்ஷன்ல பிச்சிக்கிச்சு.. திரும்பவும் கூட்டு சேர்றோம். பணத்த அள்ளுறோம்.

அண்ணனின் விழுதுகள்- அண்ணே … எல்லாம் சரி,, டைரக்ஷன் மட்டும் கையில எடுக்காதீங்கண்ணே. நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க.

ஸ்டாலோன் – சரிப்பா … இந்த முறை டைரக்ஷனை உண்மையான டைரக்டர் ஒருத்தர் பொறுப்புல விட்டுர்றேன். அப்படியே இந்தமுறை JCVDய கூட்டு சேர்க்கிறோம். டார்கெட் ஆடியன்ஸ் கொஞ்சம் அதிகமாவாங்கல்ல?

விழுதுகள் – அண்ணாச்சி…கதை என்னா?

ஸ்டாலோன் – கதையா? நம்மகிட்டயா? தம்பி பேசாம ஒரு அட்டைப் பெட்டி செட் அஞ்சு… எக்ஸ்ப்ளோசிவ்ஸ் கொஞ்சூண்டு மட்டும் எடுத்து வச்சிக்கோங்க. ஆங் … முக்கியமா நம்ம பழைய டப்பா ப்ளேன்! அசத்திடுவோம்!!

பார்ட் 2 எடுக்கலாம்னு முடிவு செஞ்சப்போ, இப்படித் தான் பேசி வச்சிருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். வழக்கமா இந்த மாதிரிப் படங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸை டார்கெட் பண்ணித் தான் எடுக்கப்படும். அதாகப்பட்டது,, படத்துல வர்ற ஹீரோ கரெக்டர் தவிர, மற்றைய living & non-living things அனைத்தும் வெடித்துச் சிதறணும்…காதுச் சவ்வு கிழியிஞ்சு ரத்தம் வர்ற மட்டும் ‘டமால் டுமீல்’ சத்தம் கேட்கணும்… சம்பந்தம் இருக்கோ இல்லையோ, அடிக்கடி ஏதாச்சு பஞ்ச் வசனம் அடிச்சுவிடணும்! சுருக்கமா சொல்றதுன்னா, நம்ம தெலுங்குப் ரசிகர்கள் போன்ற கூட்டம். கதையே இல்லண்ணாலும் பரவாயில்லை..மேலே சொன்ன அத்தனை மேட்டரும் இருந்தா அவங்களுக்கு வருஷத்தின் சூப்பர் டூப்பர் படம் இது தான்!!

thumb3


கதையா? ஹி ஹி … அதான் மேலயே சொன்னேன்ல? இருந்தாலும் பதிவின் நீளம் கருதி…Smile

பர்ஸ்ட்டு எபிசோட் - படத்தின் ஆரம்பமே சரவெடி போங்க….ஏதோ நேபாளத்துல இருக்கிற ஒரு சிறைக்குள்ள இருக்கிற ஆர்னல்ட காப்பாத்துறதுக்கு நம்ம 80s யூத்ஸ்,, 2000s அங்கிள்மாரெல்லாம் கிளம்புறாங்க. ஒரு செங்கல் … சாரி … ஒரு அட்டைப் பெட்டி விடாம அவ்வளத்தையும் பிரிச்சு மேஞ்சு அவரை காப்பாத்திடுறாங்க. அவரும் நெக்ஸ்ட்டு க்ளைமேக்ஸ்ல மீட் பண்றேன்னு சொல்லிட்டு எஸ்ஸாகிடுறாரு.

thumb5

நெக்ஸ்ட்டு எபிசோட் – அண்ணன் ப்ரூஸ் வில்லிஸ் வர்றாரு. முதல் பார்ட்ல பண்ணின சேதாரத்துக்கு எல்லாம் செய்கூலியா ஒரு மிஷனை செய்துத் தரணும்னு சொல்றாரு. அதாவது (வழக்கம்போலத் தான்) யூரோப்ல எங்கேயோ ஒரு மூலையில ஒளிச்சு வச்சிருக்கிற.., கெட்டவங்க கையில் சிக்கினால் “உலகையே அழிக்கக் கூடிய அளவு” ப்ளூட்டோனியத்தை எடுத்து வரணும். ஸ்டாலோன் வேணாம் வேணாம்னு (நாமளும் தான்) கதறியும் கேட்காம ஃப்ரீ ஆஃபரா ஒரு அட்டு சைனீஸ் பிகரையும் கூடவே அனுப்புறாரு.

எல்லாரும் யூரோப்க்கு பறக்கிராங்க. அங்க அந்த சைனீஸ் பொண்ணு ரெண்டு பட்டனை தட்டினதும், பெரிசா 2 நிமிஷத்துக்கொருமுறை ரீசேட் ஆகும் அதா இதான்னு பில்டப் கொடுத்த லாக்கர் திறந்துக்குது. எடுத்துட்டு வெளிய வர்றாங்க. அங்க என்ட்ரியாகுறாரு, நம்ம வில்லன் JCVD. வந்து நோகாம ‘கத்திமுனையில்’ நோம்பு கும்பிட்டு ப்ளூப்ரிண்ட வாங்கிட்டு பறந்திடுறாரு. போகும் போது கையரிக்குதேன்னு டீம்ல ஒருத்தன வேற போட்டுத் தள்ளிட்டு வேற போறாரு.

thumb1

அவ்வளவு தான் .. ஸ்டாலோன் செம்ம காண்டாகி….”டேய் வில்லன்!! (வில்லன் பேரே அது தான் Smile)..மவனே நீ செத்தடான்னு” கௌம்புறார். கூடவே அல்லக்கை நொல்லக்கை எல்லாம் போகுது. அப்புறம் க்ளைமேக்ஸ்ல ப்ரூஸ் வில்லிஸ், ஆரம்பத்தில் எஸ்ஸாகின அர்னால்ட், ப்ரூஸ், ஸ்பெஷல் கெஸ்ட் ச்சக் நொரிஸ் உதவியுடன் வழக்கம் போல வில்லனை அடிச்சு, புழிஞ்சு, காயப்போட்டு ப்ளூட்டோனியத்தையும், அதைத் எடுப்பதற்காக அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களையும் மீட்கிறார். எல்லாம் சுபம்!! (இந்த கடைசி மேட்டரை நம்ம டாகுட்டர் குருவி படத்துல வைரம், வைரம் தோண்டும் தொழிலாளர்கள் எனக் கையாண்டிருந்தார்னு நினைக்கிறேன். அரைகுறையா பார்த்தது. சரியா??)


கிட்டத்தட்ட The Avengersல எப்படி எல்லா சூப்பர்ஹீரோஸும் கூட்டு சேர்ந்தாங்களோ…அந்த மாதிரி தான் The Expendables முதல் பார்ட் வந்தப்போ, நம்ம எல்லா ஆக்ஷன்ஹீரோஸும் கூட்டு சேர்றாங்களேன்னு நம்பிக்கைல நானும் வாயப் பொளந்துட்டு எப்படா ஒரிஜினல் ப்ரிண்ட் வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் (கடைசில இப்புடி கவுத்திட்டிங்களேன்னு அதே வாயப் பொளந்ததும் வேற எபிசோட்) . அதுனாலயே இதை கொஞ்சம் ஆர்வமில்லாமல் தான் பார்த்தேன்.

thumb3

சுருக்கமா சொல்றதுன்னா…படத்துல கடைசிக் கட்டத்துல ஒரு டயலாக் வரும். ஸ்டாலோன் சொல்லுவாரு … “That plane belongs in a museum”. அதுக்கு ஆர்னால்ட் பஞ்ச் ரிப்ளை கொடுப்பாரு “We all do”ன்னு. உண்மை தான். இதை வாயப் பொளந்துட்டு பார்த்தா பல வருஷமா நீங்க ஆக்ஷன் படமே பார்த்ததில்லைன்னு அர்த்தம். 1980களிலிருந்து ஆக்ஷன் படத்திற்கென்னு என்ன பார்முலாவோ, அதை கொஞ்சமும் அச்சுப் பிசகாமல் ஃபாலோ பண்ணியிருக்காங்க.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது…புது டைரக்டர போட்டாலும் போட்டாங்க. சும்மா சீன் டூ சீன் பின்னிட்டாரு. ஏதோ வீடீயோ கேம் கணக்கா…மனுஷ உடம்பெல்லாம் மடங்குது..சிதறுது…ரத்தம் தெறிக்குது. ஆரம்பத்துல ஜெட்லியோட சூப்பர் ஃபைட் சீக்வன்ஸ் ஒண்ணும் இடையில் ஸ்டேடமின் ஃபைட் ஒண்ணும் இருக்கு. செம்ம கோரியோக்ராஃபி.!!

ஸ்டாலோனுக்கு இந்த முறை டைரக்டர் ப்ரெஷர் குறைஞ்சிட்டதால சும்மா கெத்தா கலக்கியிருக்கார். இந்த முறை எல்லா கேரக்டரும் கொஞ்சம் காமெடி பக்கம் சாய்ந்திருக்காங்க. ஆனாலும் எக்ஸ்ப்ரஷன்ஸ் = 0 .. புது வரவா லியம் ஹெம்ஸ்வெர்த் (Thor, Cabin in the Woodsல் வரும் க்றிஸ் ஹெம்வெர்த்தின் தம்பி). அவரோட ரோலும் இந்தப் படத்தோட ஓவர்.

thumb8

அப்புறம் நம்ம ஸ்பெஷல் கெஸ்ட் ச்சக் நொரிஸ் என்ட்ரி சூப்பர்!! தமிழ்ல எப்படி ரஜினிகாந்துக்கு ஜோக்ஸ் இருக்கோ, இங்கிலிஷ்ல அண்ணனுக்கு அதே அதே (ஹாலிவுட் பவர்ஸ்டார்??)… அதிலும் அவருக்கு அட்டகாசமா Dollars Trilogy பேக்ரவுண்ட் மியுசிக் எல்லாம் போட்டு பின்னிட்டாங்க.

நீதி, நேர்மை, நியாயம் … ஏதாச்சு கருத்தாழமுள்ள மெசேஜ் சொல்றது, இதெல்லாம் எதுவுமேயில்லை. 100% என்டர்டெயினர் தான். பெரிய பாப்கோர்ன் பாக்கெட் ஒண்ணு வாங்கி வச்சிட்டு அத மெதுவா ரசித்து மென்னுகிட்டே படம் பார்த்திங்கண்ணா, படத்துல லாஜிக் எல்லாம் யோசிக்கத் தோணாது. சாப்பிட்டு முடிய, படமும் முடிய … பாப்கோர்ன் சூப்பர்ன்னு (மறந்துட்டேன் … படமும் தான்)சொல்லிட்டு எழுந்திரிக்கலாம்!! Winking smile

இதுல இந்தப் படமும் கலெக்ஷன்ல வஞ்சம் பண்ணாததால் … அண்ணன் The Expendables 3க்கும் ஸ்க்ரிப்ட் ரெடி பண்றாப்ல. இந்த முறை Clint Eastwood, Wesley Snipes, Harrison Ford, Nicholas Cage எல்லாரையும் கேட்டுட்டு இருக்காராம். ஹ்ம்…எந்தத் தாத்தா வந்து நம்ம தாலிய அறுக்கப் போறாரோ தெரியல…அதுக்குள்ள உலகம் அழிஞ்சிடணும்..ஆண்டவா!!!

The Expendables 2 (2012) on IMDb

ட்ரெயிலர்

English Vinglish (2012)

English Vinglish Movie Tamil Version Posters Mycineworld Com
தியேட்டர்ல படத்தப் போட்டு மாசக்கணக்காச்சு… எல்லா முக்கிய விமர்சகர்களும் ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர்னு இந்தப் படத்தைப் பற்றி எழுதித் தள்ளிட்டாங்க. எதுக்கு ஆறிப் போன டீய எடுத்து சூடு பாக்குறன்னு பழகின பாவத்திற்காக என்னோட ப்ளாக்கை எட்டிப்பார்த்துவிட்டு போகும் வழக்கமான ரசிகர்கள் (5-6 பேர்) கேட்கலாம். அதுவுமில்லாம இந்த தமிழ் சினிமால்லாம் நம்ம ஏரியா சப்ஜெக்டே இல்ல.

சும்மா ஒரு ட்ரையல் முயற்சி தான்…பிடிச்சிருந்தா படிங்க. இல்லாட்டி அடுத்த ஹாலிவுட் பதிவில் சந்திக்கலாம்.


English-Vinglish-08

கதைன்னு சொல்லப்போனா ரொம்ம்ம்ப சிம்பிள்... ஆங்கிலம் பேசத் தெரியாததால் கிண்டலடித்துக் கொண்டும், பாடசாலைக்கு அழைத்துச் செல்லவும் தயங்கும் பிள்ளைகள், ருசியான சமையலுக்காகவும் இரவு நேர நெருக்கங்களுக்கும் மட்டும் நெருங்கும் பிஸியான கணவன். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், ஒரு உப்புசப்பற்ற வாழ்க்கையில் தனக்கென்று ஒரு சிறு அங்கீகாரத்தையும், அன்பையும் எதிர்ப்பார்க்கும் ஆங்கிலம் பேசத் தெரியாத, லட்டு செய்வதில் எக்ஸ்பர்ட்டான ஹவுஸ் வைஃப் ஷஷி.

திடீரென்று அக்காப் பொண்ணு கல்யாணத்திற்காக உதவிக்கு அமெரிக்கா வரச் சொல்லி ஃபோன் கால் வர, தனியாக நியு-யார்க் செல்லவேண்டிய நிலையில் ஷஷி. ஆங்கிலம் தெரியாமல் எப்படிச் சமாளிக்கப்போறோமோ என்று பயந்து கொண்டு செல்லும் ஷஷி, அங்கு சந்திக்கும் சில அவமானங்களுக்குப் பிறகு தானும் ஆங்கிலம் பேசிக் காட்டுவேன் என்று முடிவு கட்டிக் கொண்டு 4 வார ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ் ஒன்றில் சேருகிறார். பின் என்ன நடந்தது என்பது யூகிக்கக்கூடியது தான் என்றாலும் படத்தை சொன்ன விதத்தில் பாராட்டைப் பெறுகிறார் இயக்குனர்.


EV

படத்தின் வெற்றிக்கு யார் காரணமென்று கேட்டால் யோசிக்காமல் பட்டென்று விரலை ஸ்ரீதேவியின் பக்கம் சுட்டலாம். முழுப் படத்தையும் தாங்குபவர் இவர் தான். எனக்குப் மிகவும் பிடித்த பழைய…சீ சீ தப்பு தப்பு… எவர்க்ரீன் நடிகைகளில் ஒருவர் (மற்றது ராதா, நதியா, ஷாலினி). என்ன…முகம் கொஞ்சம் காஸ்மெடிக்ஸ் செய்து கொண்டது போலத் தெரிந்தாலும், வயது அரைச்சதத்திற்கு நெருங்குகிறது என்று கூற முடியாத அளவிற்கு மெயிண்டெய்ன் பண்ணிட்டு வர்றாங்க மேடம். பாடி மெயின்டெயினென்ஸ்ல ஹாலிவுட்டுக்கு டாம் க்ரூஸ்னா, தமிழ் சினிமாவுக்கு ஸ்ரீதேவியும், நதியாவும் தான் போலயிருக்கு! (ஆம்பளைங்களே வேஸ்ட்டு)

சினிமாவில் ரிட்டர்னாவதற்கு ஸ்ரீதேவிக்கு இதை விடச் சிறந்த ரோல் கிடைக்காது. ஷஷி கதாபாத்திரம் முழுக்க முழுக்க இவரையே மனதில் வைத்துக் கொண்டு செதுக்கியது போலத் தெரிகிறது. வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவு படம் மனதுக்கு ஒட்டியிருக்குமோ தெரியாது… பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். பாடி லேங்குவேஜிலும் சரி, ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸிலும் சரி … இவருக்கு நடிப்பின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கிறது. அதிலும் “என் பொண்டாட்டி லட்டு பிடிப்பதற்காகவே பொறந்தவ”ன்னு கணவன் சொல்லும்போது விரக்தியாக சிரிக்கும் இடமாகட்டும், ஆங்கிலம் தெரியாமல் காபி ஷாப்பில் தடுமாறும் இடமாகட்டும், மகளிடம் திட்டு வாங்கும்போது கண் கலங்கும் இடமாகட்டும், ஃப்ரெஞ்ச்காரனுடன் நெருக்கமாகும் ஒரு காட்சியில் தடுமாறுவது என்று பல இடங்களில் அம்மணியின் நடிப்பு அட்டகாசம். இதைப் போல வயதிற்கேற்ற யதார்த்தமான கதாபாத்திரங்களை செலக்ட் செய்தால் இன்னொரு ரவுண்ட் வருவார் என்பது நிச்சயம்!!

ஆங் … நம்ம தல ஒரு ஐந்து நிமிட சீனுக்கு என்ட்ரிய கொடுத்துவிட்டு போகிறார். அந்த சீன் அல்டிமேட்!!! முழு சீனுக்கும் தியேட்டர் ஃபுல்லா விசில், அப்ளாஸ் தான். அதில் “உங்கள் அமெரிக்க வருகையின் காரணம் என்ன?” என்று immigration அதிகாரி கேட்கும்போது “உங்க நாட்டின் பொருளாதாரத்தை டெவலப் செய்ய” என்று டயலாக் இடம் எல்லாம் அட்டகாசம்! அலட்டிக் கொள்ளாமல் அழகாக கெஸ்ட் ரோலை செய்துவிட்டு போய்விடுகிறார்.

19mp_Sridevi3_jpg_1182023g

மற்றபடி படத்தில் வரும் எல்லாரும் அவரவர் பங்குக்கு கலக்குகிறார்கள் முக்கியமா அந்த இங்கிலிஷ் க்ளாஸ் ஸ்டூடன்ட்ஸ். கொஞ்சம் போரடிக்கப்போகுது என்பது போல் இருக்கும் படம், ஷஷி நியு-யோர்க் வந்து அந்த ஆங்கில கோர்ஸில் சேர்ந்ததும் தான் மீண்டும் காமெடியோடு சுவாரஸ்யம் பிடிக்கிறது. மற்றபடி ஸ்ரீதேவியின் அக்காவின் இரண்டாவது மகளாக வரும் பொண்ணு (வேறு ஏதோ தமிழ்ப்படத்தில் பார்த்த ஞாபகம்) செம க்யுட்…அவளுக்கு ஏற்ற மாதிரியே அழகான ட்ரெஸிங்ஸும் கிடைக்க, ஸ்ரீதேவிக்கு அடுத்து இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்பது (இதற்காக நான் ஆண்டிஹீரோன்னு நினைச்சிக்க வேண்டாங்க…நாங்களும் யூத்து தான்) இவ தான்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தங்களுக்கான பணியை  நிறைவாகவும் அளவாகவும்  நிறைவேற்றியுள்ளன என்று தான் கூறவேண்டும். குறை கூறுமளவிற்கு இல்லை. கிட்டத்தட்ட 2மணி 15நிமிடம் ஓடும் படம்…எங்கும் போரடிக்கவில்லை, (மாற்றான் ஸ்கிப் பண்ண இன்னொரு காரணம் 3 மணி ரன்டைம்…யப்பா! பேக் வெந்துடும்) கதை இப்படித் தான் போகும் என்று தெரிந்தாலும். அதிலும் க்ளைமேக்ஸ் காட்சியில் திடீரென்று சத்யராஜ், ரஜினிகாந்த் மாதிரி டப்பு டுப்பு இங்கிலிஷ் பேசாமல், அழகாக, நிதானமாக, தட்டுத் தடுமாறி சாதாரணமாக ஆங்கிலம் பேசி பாராட்டுவது படத்தை பலருக்கு இன்னும் ரசிக்க வைத்தது.

மாற்றானுக்கு போகலாம்னு நினைத்துவிட்டு, வீக்எண்ட் வேறு… எப்படியும் சினிசிட்டியில் கூட்டம் மோதும். போதாக்குறைக்கு பெரிய பில்டப்புடன் வந்த தாண்டவம் வேறு ருத்ரத்தாண்டவம் (நன்றி ராஜ் Smile) ஆடிக்காட்டியிருந்ததால், நேற்று (சனிக்கிழமை) தெஹிவளை கொன்கோர்ட்டில் இந்தப் படத்தைப் பார்த்தேன். படத்திற்கு வந்திருந்த முன் சீட் யூத் ஒருத்தன் “ஏண்டா கிழவி படத்திற்கெல்லாம் இழுத்துட்டு வர்ற? மாற்றானுக்கு போயிருந்தா காஜலையாவது சைட் அடிச்சிட்டு படம் பார்த்திருக்கலாம்”னு புராணம் பாடிட்டு இருந்தான். ஆனால் க்ளைமேக்ஸ் முடிந்ததும் தியேட்டர் முழுவதும் கைதட்ட, எழுந்து நின்று கைதட்டியவர்கள் அந்த இரண்டு ப்ரெண்ட்ஸும் தான்!!! இதே போதாதா படத்தின் வெற்றிக்கு காரணம் சொல்ல??!!

நிச்சயம் பாருங்க!!!! பிடிக்கும் … உங்களுக்கு ஆன்டிஸ் பிடிக்காதென்றாலும்.. Winking smile

ட்ரெயிலர்

விமர்சனம் பிடிச்சிருந்தா, கீழே ஓட்டுப்பட்டைகளில் என்னை நினைச்சு “இனிமே விமர்சனம் எழுதுவியா”ன்னு நல்லா ரெண்டு குத்து குத்திட்டு போகலாமே? Open-mouthed smile

The Cabin in the Woods (2011)

folder


இன்னிக்கும் ஹாரர் படம் தான் … மூணு பசங்க, ரெண்டு பொண்ணு … இந்த ஐந்து பேரும் வீக்எண்ட் தனியா குடி, போதை, செக்ஸ்னு ஜாலியா இருக்க ப்ளான் பண்ணி காட்டுக்குள்ள ஒரு காட்டேஜ்ஜுக்கு பிரயாணமாகிறாங்க. ஆனால் அந்த காட்டேஜ் சாதாரணப்பட்டது இல்ல. பின்னணில பல பெரிய சக்திகள் அங்கே விளையாடிட்டு இருக்கு. அவற்றால் அவங்க அங்கு சந்திக்கும் பயங்கரங்கள் தான் படத்தின் ஒன்லைன். 

அய்யோ!!! ஹாலிவுட் சினிமா கண்டுபிடிச்ச காலத்திலேந்து ஹாரர் படம்னு வர்ற முக்கால்வாசி படம் இந்தக் கதையைத் வச்சுத் தானே காசுப் பார்த்திட்டு வந்திருக்கு? இதுக்கு மேலயும் இதப் பார்க்கணுமான்னு ஒரு கேள்விய நீங்க கேட்பீங்க.. நிச்சயமா பார்க்கணும்!

ஏன்னா …

படம் பார்க்கிற நம்ம கூட விளையாடிப் பார்க்கணும்னு நினைச்சிட்டாங்க போலருக்கு இயக்குனர் ட்ரூ கொடார்ட்டும் தயாரிப்பாளர் வெஸ் வீடனும் (அவெஞ்சர்ஸ் இயக்கிய அதே ஆளு தான்). படத்துல எங்கயுமே க்ளிஷேங்கிற வார்த்தைக்கே இடமில்லை. ஆரம்பத்திலேயே வழக்கமான ஹாரர் படங்கள்ல நாம் பார்க்கிற பல காட்சிகளை வரிசையாக நமக்கு காட்டி, வழக்கமான படமோன்னு யோசிக்க வச்சு….சரி, கதை இப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறப்போ, அப்படியே கதையை யூ-டர்ன் அடிச்சு வேற திசைல திருப்பி ‘ஆஆஆஆ’ன்னு சொல்ல வைக்கிறாங்க.

thumb1

Shaun of the Dead, Zombieland மாதிரி குறிப்பிட்ட சில படங்கள் காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இது அந்த மாதிரியான ஹாரர் படமுமல்ல. ஆனால், அங்கங்கே கொஞ்சம் காமெடியையும் தெளித்துவிட்டு திரைக்கதையை சலிப்பில்லாமல் இயக்குனர் பின்னியிருக்கிறார். Serbian Film, Cannibal Holocaust போன்ற படங்களையே லஞ்ச் டைம்மில் அசால்ட்டாக பார்க்கும் சில இறுகிய வயிற்றுக்காரங்களுக்கு படத்தின் ஹாரர் கொஞ்சம் கம்மியாகவே தெரியலாம். ஆனால் திரும்பவும் சொல்றேன்….ஹாரர் கேடகரியில் இதுவொரு பரீட்சார்த்த முயற்சியே. உங்கள் வயிற்றைச் சுத்தப்படுத்தும் பேதிமருந்தல்ல!!

படத்துல ஆங்காங்கே நிறைய புகழ்பெற்ற ஹாரர் படங்களுக்கு ரெஃபரன்ஸ் வருது. அதெல்லாம் டைஹார்ட் ஹாரர் பேன்ஸுக்கு ஆட்டோமேடிக்கா மைண்ட்ல க்ளிக் ஆகும்…நமக்கு அந்தளவுக்கு ஹாரர் படங்கள் பற்றி மண்டைல இல்ல. ஏதோ ஒண்ணு ரெண்டு படம் ஞாபகம் வந்திச்சு. என்னோட ஃபேவரைட் சீன்னு சொல்லணும்னா,, முக்கால்வாசிப் படம் ஓடின பின் ஒரு சீக்வன்ஸ்ல இதுவரைக்கும் ஹாரர் படங்கள்ல தலையைக் காட்டின அத்தனை ஜீவராசிகளும், உருவங்களும் (ஃபேரி டேல்ஸ்ல அழகிய சாதுவான பிராணியா நினைச்சிட்டிருந்த யுனிகோர்ன் உட்பட) என்ட்ரியாகும் இடம் அதகளம்! அதன் பின் கொஞ்ச நேரம் தொடர்ந்து ஸ்க்ரீன் பூராவும் ரத்தமயம்! வழியில அகப்பட்டவனெல்லாம் க்ரைண்டர்ல மாட்டிக்கிட்ட மாதிரி சட்னி தான்!

2010லேயே வந்திருக்கவேண்டிய படம்… கைவசம் உரிமையை வைத்திருந்த எம்.ஜி.எம் ஸ்டுடியோ பட்ஜெட்ல நொந்து நூடில்ஸாகிட்டோம்னு அறிக்கை விட்டதால, அப்படியே ரீல் பொட்டிய தூக்கி ஒரு ஓரமா வச்சுட்டாங்க. அப்புறம் 2011ல விநியோக உரிமையை லயன்ஸ்கேட் நிறுவனம் வாங்கி . ரிலீஸ் பண்ணினா வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எங்கேயும் சோடை போகல. போட்ட காசுக்கு இரண்டு மடங்காகவே காசு பார்த்துட்டாங்க லயன்ஸ்கேட். ( வட போச்சே!! – எம்.ஜி.எம் )

thumb9

இதுக்குமேல படத்தோட முக்கியமான ட்விஸ்ட்டுகளைச் சொல்லாமல் எதுவுமே எழுத முடியாது … அப்படியே நான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் வேலை மெனக்கெட்டு நீங்க படிக்கப்போறதும் கிடையாது. போதாக்குறைக்கு சொன்னா படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் கெட்டுப்போய் விடும். அதுனால பேசாம நீங்க படத்தையே பார்த்துக்கோங்களேன்?! இதுவரைக்கும் எந்த ஹாரர் படமும் கொடுக்காத ஒரு புது ஃப்ரெஷ் எக்ஸ்பீரியன்ஸை இந்தப் படம் உங்களுக்குக் கொடுக்கும். கியாரண்டீட்!!!



ஒரு தமிழ்ப்படம் பற்றி எழுதி வச்சிருக்கேன். நிறையப் பேரு எழுதிட்டாங்க. நானும் அதையே தான் எழுதியிருக்கேன். போடுறதா வேணாமா???

யப்பாடி இந்த மாசத்திற்கு மூணு பதிவு போட்டாச்சு!!! Target achieved…. ரெஸ்ட் எடுத்துக்கலாமா? Smile

The Thing (1982)

folder

இப்போ அமெரிக்காவுல ஹாலோவீன் சீசனாமே? திரும்பின பக்கமெல்லாம் ஒரே பேய்ப்பட மயமா இருக்கு. நம்ம ப்ளாக் வேற அடிக்கடி ஹாலிவுட் ஹாலிவுட்னு உளறிட்டு இருக்கும் ஒரு மேற்கத்தேய வலைப்பூ!!?? என்பதால் சம்பிரதாயத்திற்காக ஒரு ஹாரர் படம். ஹாரர் படங்கள் பார்ப்பது மிக மிகக் குறைவு … முடிந்தால் இந்த மாதத்திற்குள் இன்னொரு ஹாரர் படத்தையும் எழுதப் பார்க்கிறேன்.

யாருப்பா அங்கப் போறது”ன்னு (Who Goes There) 1930ல கேம்ப்பெல்னு ஒருத்தர் இங்கிலிஷ்ல புத்தகம் எழுதினாராம். புத்தகமும் செம ஹாரரா இருந்துடிச்சு போல. இதே கதையை பேஸ் பண்ணி 4 படம் எடுத்துத் தள்ளிட்டாங்க ஹாலிவுட்காரங்க. (இந்த நாலு படத்தில் Alien படமும் அடங்கும்). இந்தப் படமும் புத்தகத்தின் “நமக்குள் ஒன்று“ என்ற தீமை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான். ஆனால் படம் மாட்டினது, 1970-80களில் ஹாரர் படங்களுக்குப் பெயர் போன ஒரு இயக்குனர் ஜான் காபெண்டர் கையில். அவர் இயக்கிய எல்லாப் படங்களிலும் தன்னோட பர்சனல் பேவரைட்ன்னு சொல்லிக் கொள்ளும் படம் இது.


thumb3

கதை என்னான்னா ….

பூமியில் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு ஸ்பேஷ்-ஷிப் வந்து விழுகிறது….
..
ஓபனிங் டைட்டில்
..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளை வெளேறென்று பனி படர்ந்த அன்டார்ட்டிக் பிரதேசம். அதில் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு ஹஸ்கி நாய். பின்னால் ஒரு ஹெலிகாப்டர் துரத்துகிறது. அதிலிருந்து ஹை-பவர் ரைபில் ஒன்றின் மூலம் குறிவைத்து சுட்டுக் கொண்டு வரும் ஒரு மனிதன். எப்படியோ அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டுவரும் அந்த நாய், ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை அடைகிறது. அதற்குள் குடித்துக் கொண்டும், பிலியட்ஸ் விளையாடிக் கொண்டும் ஆராய்ச்சி தவிர மற்ற எல்லா விஷயங்களும் செய்து கொண்டிருக்கும் சயின்டிஸ்ட் கூட்டம் ஹெலி சத்தம் கேட்டு வெளியே வருகிறது.

thumb1

ஹெலியை லேன்ட் பண்ணிவிட்டு வெளியே இறங்கும் அந்த மனிதன், புரியாத ஏதோ ஒரு பாஷையில் நாயைக் காட்டி ஏதோ கத்துகிறான். துப்பாக்கியால் நாயை சுடுகிறான். நாய்க்கு ஒரு கிரனேட் எடுத்து வீசப் போகும்போது தவறுதலாக அது ஹெலியில் விழ….ஹெலிகாப்டர் காலி. அந்தப் பைத்தியத்துடன்?? பேச்சுவார்த்தை சரியாக வராததால், சயின்டிஸ்ட் கூட்டத்தில் ஒருவன் அவனைக் சுட்டு கொன்றுவிடுகிறான். கேபின் ஃபீவர் வந்ததால் தான் அவனுக்கு அந்தக் கோளாறு என்று முடிவு கட்டிவிட்டு, அந்த நாயை மற்ற ஹஸ்கி நாய்களுடன் அடைக்கிறார்கள்.

ஆனால் இரவானதும் அடைக்கப்பட்ட நாய் ஒரு ஏலியனாக உருமாறி அங்கிருக்கும் நாய்களைத் தாக்குகிறது. அப்பொழுது தான் அவர்களுக்கு அந்த நாய் உருவத்தில் இருந்தது ஒரு ஏலியன் என்றும், அது தாக்குபவர்களை உட்கொண்டு அவர்களின் உருவத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு அவர்களை இமிடேட் செய்யக்கூடியது என்றும் தெரியவருகிறது. இப்பொழுது குழுவில் ஒவ்வொருவராக அந்த ஏலியனால் தாக்கப்பட, ஏற்கனவே ஒவ்வொருவருக்கும் மற்றவர் மேலுள்ள சந்தேகம், தனிமை என்பவையும் சேர்ந்து தன் பங்குக்கு சேர்த்து ஆட்டிப்படைக்க என்ன நடந்தது என்பது மீதிப்படம்.


thumb5


சந்தேகமேயில்லாமல் படத்தின் சிறப்பு இதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தான். பக்கெட் பக்கெட்டாக வியர்வையை … சாரி …. ரத்தத்தை சிந்தி அருமையான விஷுவல் எஃபெக்ட்ஸ். அதிலும் அந்த ஏலியன் உருமாறும் காட்சிகளில் அந்த டம்மிகளும், கொடுக்கி போன்ற உறுப்புக்கள்….பச்…மேக்கப் உச்சம். ‘சி.ஜி’யெல்லாம் திரைப்படங்களுக்கு எண்ட்ரீயாகுமுன்பே எஃபெக்ட்ஸ்ல புகுந்து விளையாடிட்டாங்க. அண்மையிலெல்லாம் “படத்திற்காக உயிரைக் கொடுத்து உழைச்சாருய்யா தலைவரு” என்ற வசனங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ரொப் பொட்டின் வாரத்தில் ஏழு நாள் வீதம், ஒரு வருஷத்தை செட்டிலேயே மேக்கப்பிற்காக கழித்ததால் வேலை முடிந்ததும் உடல்நிலை மிகவும் மோசமாகி ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டாராம்.

படம் முழுவதும் அன்டார்ட்டிக்காவில் நடப்பதாக காட்டப்படுகிறது. எனவே அந்த சயின்டிஸ்ட் குழு, ஏலியன் தவிர பல நூறு கிலோமீட்டருக்கு ஆள்நடமாட்டமே கிடையாது. உதவிக்கும் கூப்பிடமுடியாத வகையில் இடையில் ரேடியா, கொம்யுனிகேஷன் எல்லாம் நொறுங்கிவிடுது. படத்தின் த்ரில்லுக்கும் இந்தத் தனிமை ஒரு பெரிய பக்கபலம்.

படத்துல மருந்துக்கு கூட ஒரு பொண்ணக் கண்ணுல காட்டக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு இயக்குனர். நம்மள மாதிரி ஆளுங்க படத்துல ஃபிகருங்கள காட்டாம விட்டா பாதிக்கப்பட்டிருவாங்களேன்னு பாவம் பார்த்து ஒரு கம்ப்யுட்டர்க்கு பெண் வாய்ஸ் கொடுக்கவச்சிருக்காரு. அவ்வளவு தான். அவ்வ்வ். Crying face

TheThing82_01

ஆனா படத்தை ரிலீஸ் பண்றப்போ சின்ன ஒரு மிஸ்டேக் பண்ணிட்டாங்க. ஸ்பீல்பெர்க்கின் E.T. The Extra Terrestial வெளியிட்டு இரண்டு வாரங்களின் பின்னர் இவங்க படத்தை ஒரு அசட்டு தைரியத்துல வெளியிட்டாங்க. அந்த காலத்து மனுஷங்களுக்கு, காப்பெண்டரின் ஈவில் ஏலியனைவிட, ஸ்டீவனின் குறும்புக்கார அப்பாவி ஈ.டீ மிகவும் பிடித்துப் போக, கிட்டத்தட்ட 10 வருஷங்களுக்கு அதிக வசூல் செய்த படங்களில் ஈடீ இருந்தது எல்லாரும் அறிந்த விஷயமே. அதனால் காப்பெண்டரால் பெரிசா போட்டதை எடுத்துக்கொண்டதைத் தவிர வசூலில் பெரிசா ஒன்றும் சாதிக்கமுடியவில்லை. ஆனால்…டிவிடி வர்ஷன் ரிலீஸான பின்னர், இதற்கென்று ஒரு ஃபேன் பட்டாளம் உருவாகி … இன்றுவரை சிறந்த ஹாரர் படங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

The X-Files நாடகம் பார்த்திருந்தீங்கண்ணா, அதில் முதலாவது சீசனில் Ice என்று ஒரு எபிசோட் வரும். அதுவும் கிட்டத்தட்ட இதே கதை தான். இந்தப் படத்திற்கு ஒரு ட்ரிபியுட்டாக எடுக்கப்பட்ட எபிசோட்.

இதே பெயரில் 2011ல் ஒரு படம் வந்திருக்கு. அது இந்தப் படத்திற்கு முன் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கூறுகிறது. அதாவது அந்த ஏலியன் எப்படி மற்ற கேம்பில் இருந்து தப்பித்து நாய் வேடத்தில் இங்கு வந்து சேருகின்றது என்பது வரையான சம்பவங்கள். அதையும் எடுத்து வச்சிருக்கேன். பார்க்கணும். நல்லாயிருந்தா அதையும் எழுதுறேன். (NOOOOOooooooooooo) Smile

ஹாரர் விசிறிகள் நிச்சயம் எடுத்துப் பாருங்க…க்ளாஸிக் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் !!!


ட்ரெயிலர்

12 Monkeys (1995)

folder

இந்த வாரம் லூபர் (Looper) என்று ப்ரூஸ் வில்லிஸ் நடிப்பில் டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட ஒரு படம் வெளியாகியிருக்கு…. பார்த்தவங்க எல்லாம் ஆகா…ஓகோன்னு புகழ்றானுங்க. இப்ப IMDB ரேட்டிங் நேத்து 8.5, இப்ப 8.4ல நிக்குது (இன்னும் வோட் விழ 8க்கு கிட்ட வந்திடும்னு நினைக்கிறேன்), ரோட்டன் டொமாட்டோஸ் 93% காட்டுது. அட…பார்க்கலாம்னா, நம்ம நாட்டுல ரிலீஸ் பண்றது பற்றி பேச்சையேக் காணோம். அப்படியே இன்னும் ஒரு வாரத்துல வர்ற காமெரா ப்ரிண்ட சரி பார்த்துட்டு ஏதாச்சு சுடச்சுட எழுதலாம்னா, ஒரிஜினல் ப்ரிண்டா இல்லாட்டி படம் பார்க்கவும் மூட் வருதில்ல. நாம இன்னும் 3-4 மாசம் கழிச்சு படத்த பார்த்து, எழுத ஆரம்பிக்கிறப்போ … நம்மளப் பத்தி நினைச்சுப் பார்க்காம பயபுள்ளங்க நம்மள விட நல்லா விமர்சனமும் எழுதிடுறாங்க.

படத்தைப் பார்த்த சில பேர், லூபர் படத்தை இந்தப் படத்திற்கு கம்பேர் பண்ணியிருந்தாங்க. சரி … நம்மளால எது முடியுமோ, அதைத் தானனே பண்ண முடியும்? அதான் நானும் நல்லபுள்ள மாதிரி ப்ரூஸ் வில்லிஸ், ப்ராட் பிட் நடிப்பில் வந்த இந்தப் படத்தைப் பார்த்துட்டு எழுதலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.



thumb14 வருஷம் 2035 … 1997ல மாதிரி நடந்த ஒரு வைரஸ் பரவலினால் ஒட்டுமொத்த மனிதஇனமும் அழிந்து கிட்டத்தட்ட 1 வீதம் மட்டுமே எஞ்சுறாங்க. அந்த எஞ்சின கூட்டமும், தரைப்பகுதி வைரஸால் மாசடைந்ததால் நிலத்தின் கீழ் ஒரு சமூகத்தை அமைத்து வாழ்த்து வர்றாங்க. தரைப்பகுதியெல்லாம் இப்பொழுது காட்டுவிலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டது.

கோல் இந்த நிலக்கீழ் சமூகத்தில் இருக்கும் ஒரு கைதி. இந்த வைரஸ் பரவலிற்கான காரணமான ஆர்மி ஒவ் தி 12 மங்கிஸ் (Army of the 12 Monkeys) பற்றி ஆராயவும், மாற்றுமருந்து பற்றி ஏதாவது விஷயம் தேடிக்கொள்ளவும் அவனை ஒரு சயிண்டிஸ்ட் கும்பல் ஏதோ ரப்பர் ஷீட்ல சுத்தி காலத்தில் பின்னோக்கி 1995க்கு அனுப்புகிறது. யார் செய்த கோளாறோ? கோல் 1990ம் ஆண்டில் வந்து சேர்கிறான். வந்து சேர்ந்ததும் இவன் பேசுவது சுத்தப் பைத்தியக்காரத்தனமாக தெரிய … உடனே மென்டல் ஹாஸ்பிட்டல்ல கேத்ரின் ரெய்லி எனும் டாக்டரின் கண்காணிப்பின் கீழ் அட்மிட் பண்றாங்க.

ஹாஸ்பிட்டலில் கோலுக்கு ஜெஃப்ரி கொய்ன்ஸ் என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. ஜெப்ரியின் அப்பா வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற சயிண்டிஸ்ட். கொய்ன்ஸுக்கு அவனின் அப்பா ஆராய்ச்சிக்காக விலங்குகளை துன்புறுத்துவது பிடிப்பதில்லை. ஸுவில் அடைபட்டிருக்கும் விலங்குகளை எல்லாம் விடுவிக்கணும்னு நினைக்கிறான். கோல் ஹாஸ்பிட்டல்ல இருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது பிடிபட்டு அடைக்கப்படும்போது காணாமல் போய் மீண்டும் நிகழ்காலத்திற்கு அதாவது 2035க்கு வந்து சேர்கிறான்.

thumb1 இது போதாதென்று நடுநடுவில கோலுக்கு ஒரு கனவு திரும்பத் திரும்ப வருகிறது…ஏர்போட்டில் ஒரு சிறுவன்…கண் முன்னே போலீஸ் துப்பாக்கிச் சூடு பட்டு இறக்கும் ஒரு மனிதன்…அவனருகே மண்டியிட்டு அழும் ஒரு பெண்…இந்தக் கனவு படம் முழுவதும் மீண்டும் மீண்டும் கோலுக்கு வருகிறது…

இப்போ நிகழ்காலத்தில் அவனுக்கு ஒரு தெளிவற்ற ஆடியோ க்ளிப் போட்டு காட்டப்படுகிறது…அதில் ஆர்மி ஒவ் 12 மங்கிஸின் இருப்பிடம் பற்றி சொல்லப்படுகிறது. மேலும் சயிண்டிஸ்மார் கோலுக்கு ஆர்மி ஒவ் 12 மங்கிஸ் குழுவின் போட்டோவையும் காட்ட, அதில் ஜெஃப்ரியின் புகைப்படம்! மீண்டும் 1996ம் ஆண்டிற்கு பயணப்படுகிறான் கோல்.

ஓகே … நான் சொன்னது படத்தின் அரைவாசி தான். இவ்வளவு சொன்னதே போதும்! வைரஸின் பரவலுக்கு உண்மையிலேயே ஆர்மி ஒவ் தி 12 மங்கீஸ் குழு தான் காரணமா? 1996க்கு மீண்டும் போகும் கோலால் வைரஸின் பரவலைத் தடுக்க முடிந்ததா? அவன் காணும் கனவின் அர்த்தம் என்ன? இதையெல்லாம் நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.


thumb111962ம் வருஷத்துல வந்த La jetéeன்னு ஒரு ஃப்ரெஞ்ச் குறும்படம். (இதை விட அது நல்லாயிருக்கும்ன்னு சொன்னாங்க. நமக்கு தான் சப்டைட்டில் இல்லாம திக்குற கேஸாச்சே. அதான் இன்னும் சேர்ச்சிங்) அதை ரீமேக் பண்ற உரிமையை யுனிவர்ஸல் பிக்சர்ஸ் வாங்கி, டைரக்ட் பண்ற பொறுப்பை இயக்குனர் டெர்ரி கில்லியம்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க. இப்ப பிரச்சினை என்னான்னா…30 நிமிஷ குறும்படத்தை கிட்டத்தட்ட 1.30 மணிநேரத்திற்கு இழுக்கணும். ஓகே…என்ன செய்யலாம்? மெயின் கதையை அப்படியே வச்சிட்டு, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் பின்னணியை வச்சி கதையை லைட்டா இழுக்கலாம்னு இயக்குனர் நினைச்சிட்டாரு…, நமக்கும் அப்பப்போ வாய் மேல இழுக்குது (ஹாவ்வ்வ்)

படத்தைப் பார்க்கும்போது ரொம்ப க்ளோஸா வாட்ச் பண்ணுங்க.ஏன்னா பாவம்... ப்ரூஸ் வில்லிஸே இடையில அவர் இருக்கிறது நிஜ வாழ்க்கையிலயா இல்ல மாய வாழ்க்கையான்னு கன்பியுஸாகிடுவாரு…, என்னையும் சேர்த்து தான்! ஆனா அதுலயும் ஒரு நன்மை இருக்கு. என்னான்னா…, ப்ரூஸ் வில்லிஸ் மாதிரி நாங்களும் கொஞ்சம் கன்பியுஸாகியே இருக்கிறதால அடுத்து என்ன என்னன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்தோட கொஞ்சம் த்ரில்லிங்கா படம் மூவ் ஆகுது.

இத்தனைக்கும் எனக்கு நடிப்புல பிராட் பிட் தவிர வேறு யாரும் தேறின மாதிரி தோணல… யப்பா! சில இடங்களில் ஓவராத் தெரிஞ்சாலும் நட்டு கழன்ற கேஸ் மாதிரி நடிக்கிறது அவ்வளவு சுலபமில்ல (ஹி ஹி .. நாங்கல்லாம் இயல்பாவே அப்படித்தான்). அதிலயும் வாய் பேசிட்டே, பத்து விரல்லயும் மூவ்மெண்ட் கொடுத்துக்கொண்டு...உடம்பே நடிக்குது…கஷ்டம் தான். சிறந்த துணைநடிகருக்கு ஆஸ்கார் நொமினேட் செய்யப்பட்டாலும், The Usual Suspects கெவின் ஸ்பேசி விருதை ஈஸியா தட்டிட்டு போய்ட்டார். ப்ரூஸ் வில்லிஸின் நடிப்பு என்னிக்குமே இம்ப்ரெஸ் செய்ததில்லை…, இந்தப் படத்தையும் சேர்த்து. ஆனால் ஓகே.

க்ளைமேக்ஸ் – இது தான் படத்தின் உச்சக்கட்ட சுவாரஸ்யமே. படத்தின் ஆரம்பத்திலிருந்தே திரும்பத் திரும்ப க்ளேமேக்ஸ்தான் காட்டப்படும். ஆனால் கடைசியில் தான் நமக்கும், இது தான் விஷயம்னு புரியும்.

சில இடங்களில் குழப்பமாகவும், சில இடங்களில் மெயின் கதையை விட்டு வேறு எங்கயோ சுத்தினாலும் படம் நிச்சயம் பார்க்கவேண்டிய ரகம் தான். சயின்ஸ் ஃபிக்ஷன், டைம் ட்ராவல் படம் தேடிப் பார்க்கிறவங்க கட்டாயம் ரெண்டு முறை பார்க்கலாம்!


ட்ரெயிலர்