நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Girl With The Dragon Tattoo [2011]

poster_(mid)_(url=t$s$p$s$w500$s$5HAFwNpkZtlxNeNp382yioGAWiu.jpg)

 

ஷ்வீடிஷ் மொழியில் 2005ல் வெளிவந்து, 2008ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் சக்கைப்போடு போட்ட புத்தகத்தை, 2009ம் ஆண்டு ஸ்வீடனில் The Girl with the Dragon Tattoo என்ற பெயரில் 13மில்லியன் பட்ஜெட்டில் திரைப்படமாக்கப்பட்டு உலகமெங்கும் 100மில்லியனுக்கும் மேல் வசூல் செய்த திரைப்படத்தை மீண்டும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்போகிறேன் என்று வேறு யாராவது சொல்லியிருந்தால் லூசுப்பயல் என்று சொல்லிவிட்டு அவனவன் வேலையைப் பார்க்கப் போயிருப்பான். ஆனால் அறிக்கை விட்டது ஹாலிவுட்டின் சிறந்த டைரக்டர்களில் ஒருவர் எனச் ரசிகர்களால் கொண்டாடப்படும் டேவிட் ஃபின்சர்.

இதனால் தான் நானும் போனவருடம் த மில்லேனியம் ட்ரைலாஜியை பார்ப்பதற்கு டவுன்லோட் செய்திருந்தாலும், ஏன் வீணாக தெரியாத மொழியில் சப்டைட்டிலையும் வாசித்துக் கொண்டு கஷ்டப்படவேண்டும் என வைத்துவிட்டேன். அதனால் அது எப்படிப்பட்ட படம் எனத் தெரியவில்லை. ஆனால் இரண்டிற்கும் பெரிதாக ஒரு வித்தியாசம் இருக்காது என நினைக்கிறேன். பார்த்தவர்கள் சொல்லவும்.

thumb2

தொடர்ந்து கீழே வாசிக்கும் முன்னர் கொஞ்சம் பொறுங்க …. உங்களுக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா? ஏனென்றால் புத்தகங்கள் நிச்சயமாக ஒரு படத்தைப் பார்ப்பதைவிட உங்களை அக்கதையுடனும் பாத்திரங்களுடனும் ஒன்றவைக்கும் என்பது என் கருத்து, அனுபவம். மேலும் படத்தில் சொல்லப்படாத பல விடயங்கள் உங்களுக்குத் படிக்கும்போது தெரியவரும். இப்போ யோக்கியன் போல பேசும் நானும் இன்னும் புத்தகத்தைப் படிக்கவில்லை. பொறுங்க … ஏசாதீங்க. The Game of Thrones தொடர் இப்பொழுது வெகு தீவிரமாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், இது வெயிட்டிங். சீக்கிரம் வாசிப்பேன். வாசிக்க விரும்புபவர்கள் இன்டர்நெட்டில் தேடினால் டவுன்லோட் பண்ணிக் கொள்ளலாம்.

நாவலைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ளவேண்டுமானால், கனவுகளின் காதலரின் இந்தப் பதிவையும் சன்னாசியின் இந்தப் பதிவையும் வாசித்துவிடுங்கள்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மிகேல் ப்ளொம்க்விஸ்ட் ஒரு பெரிய கோடிஸ்வரனுக்கு ( தமிழ்ல ஏன் கோடிக்கு அப்புறம் ட்ரில்லியன், ஸில்லியன் போல சொற்கள் இல்லை? )எதிராக ஒரு வழக்கில் தோற்றுப் போய் இருக்கும் வேளையில் ஹென்றிக் வேன்கர் எனப்படும் ஒரு பணக்காரன் தொலைந்து 40 வருடங்களாகும் ஹாரியட் என அழைக்கப்படும் அவளின் பேத்தியின் மறைவின் மர்மத்தைக் கண்டுபிடிக்க அழைக்கிறான். கண்டுபிடித்தால், மிக்கேலின் வழக்கை அவன் பக்கம் சாதகமாக்கக் கூடிய சாட்சியங்களைக் கையளிப்பதாகவும் வாக்களிக்கிறான். முக்கிய மர்மங்களை அவிழ்க்க முயற்சிக்கும் மிக்கேலின் உதவிக்கு லிஸ்பெத் எனும் இளம்பெண் சிபாரிசு செய்யப்படுகிறாள். இவள் ஏற்கனவே மிக்கேலைப் பற்றி பல விடயங்களை ஹென்றிக்கிற்கு விசாரித்துக் கொடுத்தவள். இவர்களுக்கு மெல்ல ஹென்றிக்கின் பெரிய குடும்பம் அறிமுகமாகின்றது.

thumb1
இவ்வேளையில் லிஸ்பெத்தின் கார்டியன் பாரலைஸ் ஆக, அவளின் புது கார்டியனாக வரும் குடும்ப லாயர் அவளின் பேங்க் அக்கவுண்டின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். முதலில் பணம் வேண்டுமெனில் லாலிபாப் சாப்பிட வேண்டும் எனச் சொல்லும் அவன் பின்னர் அவள் மீண்டும் பணம் கேட்டுச் செல்லும்போது அவளை கட்டிவைத்து பலவந்தமாக செக்ஸ் டார்ச்சர் செய்கிறான். ரகசியமாக கமெராவில் அதைப் பதிவு செய்யும் லிஸ்பெத் மீண்டும் பணம் கேட்பது போல சென்று அவனைப் அவன் வழியிலேயே பழி வாங்குகிறாள். மேலும் அவளின் பேங்க் அக்கவுண்ட்டில் அவனின் பொறுப்பை விட்டுவிடுமாறும், மேலும் அவளின் நடத்தை நன்று என்பது போலவும் ரிப்போர்ட் பண்ணச்சொல்லும் அவள், தவறினால் வீடியோவை இன்டர்நெட்டில் போட்டுவிடுவேன் எனவும் மிரட்டுகிறாள்.

விசாரணை தொடரும்போது மிக்கேலின் மீது துப்பாக்கிச் சூடும், அவன் தங்கியுள்ள வீட்டின் முன்பு அவனது பூனை வெட்டப்பட்டு கிடப்பது எனப் பலவிதமான தடங்கல்கள் ஏற்படுகின்றன. இதை சமாளித்து ஓல்ட் ஸ்கூல் மிக்கேலும், ஹேக்கிங், இன்டர்நெட் போன்ற புதிய முறைகளைக் கையாளும் லிஸ்பெத் ஜோடியும் ஹாரியட்டின் மறைவின் பின் உள்ள மர்மத்தை எவ்வாறு கண்டுபிடித்தார்கள் … மிக்கேலுக்கு அவன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுக்க சாட்சியங்கள் கிடைத்ததா என்பதெல்லாம் திரையில் அல்லது டிவிடியில்.

படத்தின் முடிவில் ஸ்விஸ் படத்தை விட ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கென்று கேள்விப்பட்டேன். உண்மையோ தெரியவில்லை. சீக்கிரம் சொல்கிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

கதை என்று பார்த்தால், மெயின் மேட்டருக்கு வருவதற்கு ரொம்பவே நேரத்தை எடுத்துக் கொள்றாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த இருவரின் வாழ்க்கைப் பின்னணியைப் பற்றி மாறி மாறி காட்டுறாங்க. அப்புறம் தான் இந்த ரெண்டு பேரும் மீட் பண்ணி மிஸ்ஸிங் லேடியின் மர்மத்தை கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறாங்க. திரைக்கதையை மிக அழகாக அவரது பாணியில் ஃபின்ச்சர் வேகமாக கொண்டு செல்கிறார். படம் முதலில் க்ளுக்களை தேடுவதாகத் தொடங்கி கடைசிக்கட்டத்தில் திடீர் திருப்பத்தை கொடுக்கிறது. வெகு சிலரே வில்லன் யார் எனத் தெரிந்து ஷாக் ஆகுவார்கள். நானும் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட சிலரை லாக் செய்து வைத்திருந்தேன் (எல்லா த்ரில்லர்களிலும் இது என் வழக்கம். நினைப்பவன் வில்லன் என்றால் ஒரு சிறு சந்தோஷம்)

girl with dragon tattoo 2011
படத்தின் முக்கிய கேரக்டராக டானியல் க்ரெய்க்கை (மிக்கேல்) கூறினாலும் அவர் டம்மிப் பீஸு. இந்தப் படத்தின் மிக இன்ட்ரஸ்டிங் விடயம், அனேகமாக படம் பார்க்கும் எல்லாருடைய மனதிலும் இடம்பிடிக்கப்போவது கட்டாயம் கேர்ள் வித் ட்ராகன் டாட்டூ ரூனி மாராவாகத் தான் இருக்கும். சிறுவயதில் மனநிலை பாதிக்கப்பட்ட, வக்கிரமான, வித்தியாசமான ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரத்தை மிக அழகாக திரையில் உயிர்ப்பித்திருக்கிறார். கட்டாயம் நம்மூரு சின்னத்திரை அழுமூஞ்சிகளுக்கும், சில நடிகைகளுக்கும் போட்டுக் காட்டணும். இம்முறை ஆஸ்காரில் சிறந்த நடிகைக்காக பரிந்துரை செய்யப்பட்டும் இருந்தார்.

போட்ட காசை திருப்பி எடுத்துவிட்டாலும், லாபம் மடங்கில் இல்லை. போட்டது 90மில்லியன் … இதுவரை பொறுக்கியது 102மில்லியன். ஏற்கனவே அரைச்சுவிட்ட மாவை ஏன் மீண்டும் அரைப்பானேன் என நிறையப் பேர் படத்தை ஸ்கிப் பண்ணியிருப்பாங்க போல. ஆனால் த்ரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்து.

 

My Rating – 70/100

 

படத்தின் ட்ரெயிலர்

 

 

அடுத்த பதிவில் சந்திக்கும்வரை,

ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

27 comments:

 1. நா ஸ்விடீஸ் படம் பாத்து இருக்கேன் நல்லா இருக்கும் அவ்ளோ தான். இது டவுன்லோடிங்...

  தமிழ்ல கோடிக்கு அப்புறமும் நிறைய நம்பர் இருக்கு அடிக்கடி மெயில் வரும் 100000000000000000000 இவ்ளோ நம்பர் வரைக்கும்.. :)

  ReplyDelete
 2. @...αηαη∂....

  எனக்கு தெரிந்து தமிழில் கோடிக்கு பின் சொற்கள் கேள்விப்பட்டதில்லை. நூறு கோடி, ஆயிரம் கோடி தான் ...

  ReplyDelete
 3. நான் இன்னும் ரெண்டு படமும் பார்க்கலை. நீங்க சொல்றதால ஸ்வீடிஷ்-வேர்ஷனை விட்டுட்டு இதை பார்க்கலாம்னு நினைக்குறேன்!
  (IMDB, RTல கூட 2009 படத்துக்கு 2,3 மார்க்கு குறைவாத்தான் போட்டிருக்காங்க..)

  டேவிட் ஃபின்ச்சர் எப்பவுமே படத்துல இறுதி சீனை கொஞ்சம் memorableஆ வைக்கப் பார்ப்பாரு.. ஸோ, படத்துல ட்விஸ்ட் இருக்கறது உண்மையாத்தான் இருக்கனும்!

  ReplyDelete
 4. படம் சுவாரஸ்யமாக இருக்கும்...போல...இன்னிக்கு பார்க்க வேண்டியதுதான்....

  ReplyDelete
 5. தமிழ்ல ஏன் கோடிக்கு அப்புறம் ட்ரில்லியன், ஸில்லியன் போல சொற்கள் இல்லை?

  Please open the link...
  http://tinypic.com/r/10fpbp2/5

  Regards

  Dr. Mahalingam
  Muscat

  ReplyDelete
 6. @Maha

  Wow. Thanks a lot. Is those words really true? Tamil just became super awesome ...

  ReplyDelete
 7. @வீடு K.S.சுரேஸ்குமார்

  உங்களுக்கு த்ரில்லர் படங்கள் பிடித்தால் இதுவும் பிடிக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 8. @JZ

  ஆமா JZ ... ஏன் தேவையில்லாம தெரியாத பாஷைல படத்தைப் பார்த்து வீணாக அவஸ்தப்படணும்? இங்கிலிஷ்லயே பாத்துருங்க.

  ReplyDelete
 9. டிவிடி வங்கி வந்து வச்சிருக்கேன் நேரம் கெடைக்கல பார்க்க. லேப் மீட்டிங் அது இதுன்னு கொஞ்சம் வேலை. !!

  ReplyDelete
 10. >>க …. உங்களுக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா? ஏனென்றால் புத்தகங்கள் நிச்சயமாக ஒரு படத்தைப் பார்ப்பதைவிட உங்களை அக்கதையுடனும் பாத்திரங்களுடனும் ஒன்றவைக்கும் என்பது என் கருத்து

  உண்மை தான் பிரிவோம் சந்திப்போம் நாவலை படித்தவர்கள் சுஜாதாவின் ஆளூமையை ஆனந்த தாண்டவம் படத்தில் மிஸ் செய்ததை உணர்ந்தார்கள்

  ReplyDelete
 11. >>ஹாலிவுட்ரசிகன்
  March 16, 2012 8:26 PM  எனக்கு தெரிந்து தமிழில் கோடிக்கு பின் சொற்கள் கேள்விப்பட்டதில்லை. நூறு கோடி, ஆயிரம் கோடி தான் ...

  ஆ ராசாவின் சொத்துக்கணக்கை எண்ணால் எழுதவும் ஹி ஹி

  ReplyDelete
 12. >>எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...

  உண்மைதான், பதிவை வாசிப்பவர்கள் 1000 பேர் எனில்கருத்தை பதிவு செய்பவர்கள் 10 பேர் தான்.. ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் சந்தோஷமே படைப்பு பற்றிய கருத்து பகிர்தலே

  ReplyDelete
 13. இந்தப்படம் இந்தியாவுல ரிலீஸ் ஆகாதுன்னு புரளிய கெளப்பறாங்க..பாக்கலாம்.

  ReplyDelete
 14. நான் இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் படம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்... அதனால் விமர்சனமும் படிக்கவில்லை. மன்னிக்கணும்.

  நான் கேள்விபட்ட வரை ஸ்வீடிஷ் மொழியில் வந்த படமும் நன்றாகவே உள்ளதாம். அதையும் பாருங்கள் தல.

  ReplyDelete
 15. @kanagu

  ஹ்ம்ம் ... கொஞ்ச காலம் செல்லட்டும். கதை கொஞ்சம் மறந்தபின் புத்தகத்தை வாசித்துவிட்டு பார்த்துவிடுகிறேன்.

  ReplyDelete
 16. @அசோக் குமார்

  நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 17. வணக்கம் நண்பா, புத்தகம் படிக்க நேரம் இல்லை. நேரம் கிடைக்கும் போது படிக்க முயற்சிக்கிறேன்.

  ட்ராக்கன் டட்டூ கேர்ள் பற்றிய அறிமுகப் படலத்திற்கு நன்றி. சந்தர்ப்பம் கிடைக்கும் போது படம் பார்க்க முயற்சிக்கிறேன். சீக்கிரம் முழுப் படத்தையும் பார்த்த பின்னர் உங்க பாணியில் ஒரு விமர்சனம் போடுங்க பாஸ்.

  ReplyDelete
 18. படம் இருக்கு பாஸ், நான் தான் இன்னும் பார்கல, உங்க விமர்சனத்தை வச்சு பார்க்கும் போது, படத்தை மிஸ் பண்ண கூடாதுன்னு தோனுது, இந்த வாரம் பார்துற வேண்டியது தான்.

  ReplyDelete
 19. @நிரூபன்

  பார்க்கலாம் மச்சி. சீக்கிரமே பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

  ReplyDelete
 20. @ராஜ்

  மிஸ் பண்ணவே கூடாத படம் இல்லை. ஆனால் ஸ்லோ மூவிங் த்ரில்லர் படங்கள் ஓகே என்றால், பிடிக்குமானால், டோன்ட் மிஸ்

  ReplyDelete
 21. go watch the swedish version of 180 minute of 3 movie not the dubbed version make sure you get the Stieg Larsson's Dragon Tattoo Trilogy: Extended Edition (The Girl with the Dragon Tattoo / The Girl Who Played with Fire / The Girl Who Kicked the Hornet's Nest)

  ReplyDelete
 22. @Anonymous

  Well ... I have the trilogy in swedish language. But not sure whether they are the Extended edition.

  ReplyDelete
 23. boss... intha padatha download panna poi antha (original) padatha download pannitten .... sari pathuthan vaipome yendru paarthum vitten..... indru ungal vimarsan padikaiyil than oru unmai purigirathu....

  ivar david fincher illa boss... namma ooru raja nu ninaikuren...

  peru, tatoo, idam, yellame onnu than..

  ReplyDelete
 24. hii.. Nice Post

  Thanks for sharing

  Best Regarding.

  More Entertainment

  For latest stills videos visit ..

  www.chicha.in

  ReplyDelete
 25. Swedish version : the missing girl lives in australia it's the only difference between English version.

  ReplyDelete
 26. @Vishnupria

  So I better stop with the English version. No need wasting time watching the Swedish version again.

  ReplyDelete
 27. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...