நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

FIFA 12– வீடியோ கேம்

FIFA-12 cover


ஏண்டா ஒரே ஒரு கேம் பதிவு மட்டும் தான் போட்டே? மேலே மெனுவில் Game Reviews க்ளிக் பண்ணினா ஒரு பதிவு மட்டும் தான் வருது. கொஞ்சம் அது பத்தியும் எழுதுப்பான்னு தினமும் ரசிகர்கள் ஃபேஸ்புக்கிலும் ஈமெயிலிலும் கேட்டுக் கேட்டு ஒரே தொல்லை …. அப்படின்னா நம்பவாப் போறீங்க? நாமளே ஒரு ஓரமா ஆர்வத்துல கடையை ஆரம்பிச்சுட்டு இப்ப ஆரம்பிச்ச பாவத்துக்காக உட்கார்ந்து ஈயோட்டிக்கிட்டிருக்கோம். யாரு வந்து இதையெல்லாம் விசாரிக்கப் போறது? எனக்கு மீண்டும் நம்ம ப்ளாக்குல ஒரு சேன்ஞ்சுக்கு ஒரு பதிவு போடுவோமேன்னு தோணிச்சு. ரிசல்ட் இந்தப் பதிவு. என்னை அப்படியெல்லாம் கேக்காத பயபுள்ளங்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

FIFA-12 fanart

நம்ம ஊர்ல அனேகமான பையன்களைக் உனக்குப் பிடிச்ச விளையாட்டு என்னான்னு கேட்டா கிரிக்கெட்ன்னு யோசிக்காம சொல்லிட்டு பேட்டோட போயிடுவானுங்க. ஆனா நம்மளுக்கு எப்பவுமே ஃபுட்பால் தான் … என் வரலாற்றில் ஒரு காலத்தில் எக்ஸாம் முடித்த காலக்கட்டத்தில் டீவி முன்பு முழுநாளும் Ten Action+ , ESPN இல் மாறி மாறி ஃபுட்பால் பார்ப்பதையே தொழிலாக வைத்திருந்தேன். நம்ம வீட்டில இருக்கிறவங்களும் வெறுத்துப் போய் “ஏண்டா … ஒரு பால் பின்னாடி 11பேர் ஓடுறதை எப்படிடா முழு நாளும் பார்த்துட்டுருக்கே? பேசாம கேடிவிக்கு மாத்திவிட்டு ரூம்ல போய் கிட” ன்னு அடிக்கடி செல்லமாகச் சொல்லியது அந்த பைத்தியத்திற்கு ட்ரீட்மெண்டாக அமைந்தது. அந்தப் பைத்தியம் தெளிந்த பின்னர் தான் ஹாலிவுட்ங்கிற ஒரு பெரிய பைத்தியத்திடம் மாட்டிக்கிட்டேன் (நம்ம வாழ்க்கையும் ஒரு வரலாறு தான். அதில் ஒரு எபிசோட் இது) .

டீவில பார்க்கிறது குறைஞ்சாலும் நாம தான் என்றும் பதினாறு கூட்டமாச்சே. ஏழு கழுதை வயசாகியும் வீடியோ கேம் விளையாடும் ஜீனியஸ் போன்ற அடல்ட் சிறுவர்களில் நானும் ஒருவன். முந்தியெல்லாம் சனி, ஞாயிறு எங்காவது ஃப்ரெண்ட்ஸ் ஒரு எட்டு பேர் நம்ம வீட்டுல கூடிடுவோம். ரெண்டு ரெண்டு பேரா நான்கு டீம் படி அன்னிக்கு முழு நாளும் Virtual FIFA 09 Tournament ஒன்னு நம்ம வீட்டுல நடக்கும். எல்லாரும் மேல்படிப்பு, வேலைன்னு பிரிஞ்சுட்டாலும் இன்றும் தனியாக ரூமில் ஃபீபா விளையாடுவது ஒரு சுகம்.

நான் வீடியோ கேம்ஸ் ரொம்பத் தீவிரமா விளையாடினாலும், First Person Shooters, Strategy, Adventure டைப் கேம்களை மட்டும் தான் எப்போதும் செலக்ட் பண்ணி விளையாடுவது. ஸ்போர்ட்ஸ் கேம்களில் பெரிதாக இன்ட்ரஸ்ட் இல்லை. என்னமோ தெரியலைங்க … இந்த ஃபுட்பால் கருமாந்திரம் மட்டும் மனதோடு ஒட்டிக்கிச்சு.

3

அந்த வகையில் Electronics Arts ரிலீஸ் பண்ணிய ஃபுட்பாலின் கடைசி வர்ஷன் பற்றித் தான் இன்று பார்க்கப் போறோம். PLAY ON !!!

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இந்த கேமைப் பற்றி சொல்ல இன்ட்ரோ எல்லாம் இல்லை. கேம் ஆரம்பிச்சதும் ரெஃப்ரீ விசில் ஊதுவார். அவர் மறுபடியும் இரண்டு முறை ஊதினால் ஹாவ் டைம். மீண்டும் தொடங்கி மூன்று முறை ஊதினால் ஃபுல் டைம். அதுவரைக்கும் யார் அதிகம் கோல் போடுவாங்களோ அந்த டீம் வெற்றி. இது தான் FIFA 12 … இல்லை மொத்த ஃபுட்பாலின் சாராம்சம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

உண்மையில பி.ஸி கேமர்ஸ் பாவம் செய்தவங்க. அனேகமான கேம்ஸ் கான்ஸோல்ல விளையாட சூப்பரா செய்வானுங்க. பி.ஸிக்கு மட்டும் ஒழுங்கா டெவலப் பண்ணாம விட்றுவானுங்க. சில கேம்ஸ் தனியா கான்ஸோல் மட்டும் தான். அதே போல கான்ஸோல் வாங்கினா கேம் டிவிடிக்கு மட்டும் தான் செலவு. பிஸி கேம் விளையாடுறவனுக்கு வருஷம் ஒழுங்கா கம்ப்யுட்டர க்ராபிக்ஸ் கார்ட், RAM, ப்ரொசசர் அப்டேட் பண்ணாம விட்டா அடுத்த வருஷம் வர்ற கேமை ஒழுங்கா விளையாட முடியாது? என்னக் கொடுமை சரவணன்?

2

இங்கும் FIFA 09 வரைக்கும் இந்த மாதிரித் தான். பி.ஸி வர்ஷன் எல்லாம் பழைய PS2 க்ராபிக்ஸ், எஞ்சின் பேஸ் பண்ணி டெவலப் செய்திருக்க, கான்சோல் வர்ஷன் எல்லாம் இப்போதைய FIFA போல செம அட்வான்ஸ். அப்புறம் FIFA 10ல கேம் எஞ்சினை மாற்றி, இப்போ கடைசியாக வந்த வர்ஷனில் பி.ஸி கேமர்ஸ் ஒரு கன்சோலில் கிடைக்கும் என்டர்டெயினிங் அனுபவத்தை கிட்டத்தட்ட கணனியில் முழுதாகப் பெறலாம். தாங்க் காட் ….

இதுவரை வந்துள்ள எல்லா ஃபுட்பால் கேம்களையும் விட ஒரு உண்மையான ஃபுட்பால் கேமிற்கு ரியாலிட்டியில் மிகவும் கிட்டிய சிமுலேஷனாகக் கருதப்படுவது இதுதான். இம்முறை 12ம் பதிப்பில் வெளியிட்டுள்ள பல சுவாரஸ்யமான அம்சங்கள் கேம்ப்ளேயை இன்னும் இன்ட்ரஸ்டிங்காக்கும்.

மிக முக்கியமான அம்சனம் இம்முறை அறிமுகப்படுத்தப்படும் Player Impact Engine. ப்ளேயர்கள் சட்டையை இழுக்கும்போது, ஸ்லைட் அடிக்கும்போது, ஃபிஸிக்ஸைப் பாவித்து வீரர்கள் இடிபடும் போது அடிபடும் இடம், மோதும் ஆட்களின் பலம், பாரம் போன்றவற்றின் மூலம் கணக்கிடப்பட்டு அதற்கேற்றாப் போல ரிசல்ட் படுகிறது. இது இன்னும் 100% மிகச் சரியாக வேலை செய்யாவிட்டாலும், இதுவரை எங்கும் பிரச்சினை வருவது போல இறுகியதில்லை. 

4

மேலும் புதிய அறிமுகங்களான Tactical Defending, Precision Dribbling போன்றவை கேம் விளையாடுவதை ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்படுத்தினாலும் பழகிய பின்னர் விரல்கள் ஆட்டோவாக உங்கள் கீபோர்ட்டில் சரியாக நிற்கும். நான் கீபோர்ட் பெரிதாக பாவிப்பதில்லை. கேம்பாட் ஒன்றில் விளையாடுவது இன்னும் செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். மேலும் Skill Moves எல்லாம் போடுவதற்கு கேம்பாட் தான் சரி.

FIFAவில் எனக்குப் பிடித்த இன்னொரு விடயம் இம்முறையும் கேமில் வீரர்களின் முகத்தை கிட்டத்தட்ட அதே போல செய்து எடுத்திருக்கிறாங்க. கீழே அட்டாச் பண்ணியுள்ள வீடியோவில் எப்படி முகங்களை டிசைன் பண்ணினாங்கன்னு இருக்கு. பாத்துக்கங்க. அதுமட்டுமில்லாம 500க்கும் மேற்பட்ட க்ளப்களை லைசென்ஸ் செய்தது மூலம் நாம் அதிலுள்ள நிறைய டீம்களில் ஒன்றை எடுத்து விளையாடலாம். PES 2012 என்றும் இன்னொரு ஃபுட்பால் கேம் இருக்கு. ஆனா எனக்கு அதில் உள்ளவர்களின் முகம் ஏதோ பேயடித்தது போல தெரிகிறது. மேலும் அவங்க நிறைய டீம்கள் லைசன்ஸ் பண்ணாததால் டீம் பெயர்கள், வீரர்களின் பெயர்கள் எல்லாம் வேறு மாதிரி இருக்கும். ஆனால் கேம்ப்ளே கொஞ்சம் ஃபீபாவை விட வேகம் கொஞ்சம் அதிகம். இன்ட்ரஸ்டிங். இரண்டில் உங்க டேஸ்டுக்கு ஒத்துவரும் கேமை செலக்ட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க.

1 
இது மட்டும் இல்லை.  இதில் மற்ற வீரர்களுடன் ஆன்லைன்ல விளையாடவும் முடியுமாம். ஆனா நம்ம காப்பி டவுன்லோட் பண்ணியது என்பதால ஸ்ரிக்ட்லி நோ என்ட்ரி. ஆனால் Assassins Creed, Mass Effect போன்ற நீண்ட கதைகளுடன் இருக்கும் கேமை மாதக்கணக்காக விளையாடாமல், கேமை கம்ப்ளீட் பண்ண முடியவில்லையே என ஆதங்கப்படும், ஒரு பத்து நிமிடம் மனதை ரிலாக்ஸ் பண்ண கேம் விளையாட நினைக்கும் நண்பர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.

காரணமில்லாமலா 2011ம் ஆண்டின் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் வீடியோ கேம்னு சொன்னாங்க?

சில யுகங்களுக்கு முன்னாடி ஒரே ஒரு கேம் பதிவு போட்டேன்னு சொன்னேனே தெரியுமா? அனேகமா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.  Elder Scrolls V : Skyrim பதிவையும் நேரமிருந்தா படிச்சுட்டு முடிஞ்சா விளையாடுங்க. கட்டாயம் மிஸ் செய்யக்கூடாத கேம் அது.

இந்த கேம் உருவான விதம் பற்றி, National Geographicல போகும் Megafactories எனும் ப்ரோகிராமில் ஒரு  எபிசோட் போட்டிருந்தாங்க. முழு எபிசோடிற்கான யுடியுப் விடியோ.கம்ப்யுட்டர் வீடியோ கேம்ஸ் பற்றி எழுதுவது உண்மையில் தேவை தானா என யோசிக்கிறேன். எத்தனை பேர் விளையாடுறாங்க ஒன்னும் தெரியாது. இத எழுதுற டைம்ல இரண்டு படத்தப் பற்றி எழுதிவிடலாம் போல இருக்கு. ப்ளீஸ் கருத்தைச் சொல்லுங்க.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

13 comments:

 1. //ஏண்டா ஒரே ஒரு கேம் பதிவு மட்டும் தான் போட்டே? மேலே மெனுவில் Game Reviews க்ளிக் பண்ணினா ஒரு பதிவு மட்டும் தான் வருது.//
  நம்புனா நம்புங்க.. நேத்து "ப்ரெண்ட்ஸ் பதிவை" படிக்க வந்துட்டு Game Reviews க்ளிக் பண்ணேன். ஏன் கேம் விமர்சனங்கள் எழுதலை?ன்னு கமெண்ட் ஒண்ணு போடலாம்னுதான் நினைச்சேன்.. பிறகு உங்களை வற்புறுத்துற மாதிரி ஆயிரும்னு விட்டுட்டு வந்துட்டேன்!

  ReplyDelete
 2. நானு PES 06ல இருந்து 11 வரைக்கும் கேம்ஸ் எல்லாம் விளையாடிட்டேன். FIFAல 09 மட்டும்தான்.. PES-ல வர்ற ball movement தான் எனக்கு ஒத்துவரும். பீஃபால pass பண்ற நேரமெல்லம் பந்து தரையோட உருண்டு போய் அவனுங்க கால்ல ஒட்டிக்கிறமாதிரி இருக்கும்..

  * நல்ல பதிவு. உங்களுக்கு வேண்டிய நேரத்தில் கேம் விமர்சனங்கள் எழுதுங்க!

  ReplyDelete
 3. அருமை பாஸ்...FIFA-12 கேம்-ஐ பத்தி ரொம்ப விரிவா எழுதி இருக்கேங்க..
  நான் FIFA-09 விளையாடி இருக்கேன்..அதுவே கிராபிக்ஸ் சூப்பரா இருந்துச்சு..FIFA-12 கேட்கவா வேண்டும்.....
  உங்க புட்பால் விளக்கம் வாய்பே இல்லை....
  //கம்ப்யுட்டர் வீடியோ கேம்ஸ் பற்றி எழுதுவது உண்மையில் தேவை தானா என யோசிக்கிறேன்//
  இப்படி எல்லாம் யோசிக்க கூடாது...ரொம்ப தப்பு... அடிக்கடி இல்லாட்டியும் கூட அப்ப அப்ப கேம் பத்தி எழுதுங்க..என்னக்கும் என்னோட Xbox-360 கேம்ஸ் பத்தி எழுதலாம்னு ஒரு எண்ணம் ஓடிக்கிட்டு இருக்கு.... அப்புறம் என்னக்கு துணை இல்லாம போயிரும்...

  ReplyDelete
 4. @JZ

  ஆகா ... டெலிபதி வொர்க் ஆகியிருக்கு போல.

  ReplyDelete
 5. @ராஜ்

  நன்றி ராஜ். எழுதும்போது Xboxல மட்டும் இல்லாமல் கம்ப்யுட்டரிலும் விளையாடக்கூடிய கேம்ஸா எழுதுங்க.

  ReplyDelete
 6. I am not game freak... but I am Hollywood craze guy.. so i expect more about hollywood movies... :)

  ReplyDelete
 7. @Manoj

  Yeah sure. Game reviews are not much appreciated and needed ... I guess. The stats show it well. Anyway, I will try to concentrate more on movies.

  ReplyDelete
 8. பழசே இன்னும் நல்லா தான் இருக்குங்க....விரிவா அலசியதுக்கு நன்றிங்க...EA Sports எந்த கேமும் வந்த உடனே வாங்க வீட்டை தான் விக்கணும்...எப்பவுமே போன ரெலீஸ் வாங்கியே பழகிப்போச்சு..

  ReplyDelete
 9. எங்களைப்போல் நினச்சதெல்லாம் எழுதாம படம்...டிவி.. கேம் பற்றி மட்டும் எழுதினால் எப்பவாவது எல்லாருக்குமே உபயோகமாய் இருக்கும் வலையாய் உங்களது மாறும் என்று நினைக்கிறேன்...தொடர்ந்து எழுதுங்கள் கேம் பற்றி இப்போது பின்னூட்டங்கள் குறைவாய் இருந்தாலும்....

  ReplyDelete
 10. i HAVE NOT PLAYED MUCH OF FIFA HOWEVER ITS WORTH TO SPEND TIME WITH UR SPEND.

  I am just playing Grand theft Auto IV now and need to buy FIFA 12 soon. just to spend some quality time with friends.

  keep continue wring about games, I am also thinking to write about those games I played.

  ReplyDelete
 11. மாப்ள இந்த கேம் பதிவுகள் மூலம் நீங்க வித்தியாசப்படுறீங்க..என்னை போல் ஆட்களுக்கு பிடித்த விஷயம் இது நன்றி!

  ReplyDelete
 12. சரி ... ரசிகப் பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாதம் அட்லீஸ்ட் விளையாடும் ஒரு கேம் பற்றியாவது எழுத முயற்சிக்கிறேன். கருத்தளித்தவங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 13. சூப்பர் கேம்

  ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
  ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...