நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Hugo [2011]

hugo_ver9

 

மார்ட்டீன் ஸ்கோசெஸி ஏதோ 3Dயில் சின்னப்புள்ள படம் எடுக்குறாராமே …. முதல்ல கேள்விப்பட்டதும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். என்னடா இது, எப்பவும் சைக்கோ த்ரில்லர், இத்தாலியன் மாஃபியா, வன்முறைன்னு போட்டு கடையிறவரு திடீர்னு இப்படி??? வயசானதுல மனுசனுக்கு ஏதாச்சு மண்டைல நட்டு லூசாகி விட்டதோன்னு கூட டவுட்டு வந்துச்சு. “தம்பி … வயசானாலும் கைவசம் மேட்டர் இருக்கு. என்னை நம்பினோர் கைவிடப்படார். இதோப் பார்” என முகத்தில் அடித்தாற் போல பதிலளித்திருக்கிறார் ஸ்கோசெஸி.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

thumb1

பாரீஸ் ரயில்வே நிலையத்தில் ஓடும் கடிகாரங்களை திருத்தி, பராமரிக்கும் அந்த சிறுவனின் பெயர் ஹ்யுகோ கப்ரே. தந்தை இறந்தபின் அவனது மாமனார் அவனை தத்தெடுத்து வந்து தனது கடிகாரங்களை பராமரிக்கும் தொழிலை செய்ய வைக்கிறார். சிறிது காலத்தில் அவரும் இறந்துபோக அனாதைச் சிறுவர்களை பிடித்து இல்லங்களில் கொடுக்கும் ரயில்வே இன்ஸ்பெக்டரின் பார்வையில் இருந்து தப்ப, ரயில்வே நிலையத்தின் சந்து பொந்துகளிலும், அறைகளிலும் மறைந்து வாழ்கின்றான் ஹ்யுகோ.

அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் ஹ்யுகோ, தன் ஓய்வு நேரத்தை ரயில்வே நிலையத்தில் இருந்து திருடும் இயந்திரப் பொருட்களைக் கொண்டு, அவனின் தந்தை இறக்கும் முன் அவரின் கனவாக இருந்த ஆட்டோமேட்டன் எனப்படும் ரோபோ ஒன்றை திருத்துகிறான். ஒருமுறை ரயில்வே நிலையத்தில் விளையாட்டு பொம்மை திருத்தும் கடை வைத்திருக்கும் ஜோர்ஜ் என்ற கிழவனிடம் திருடும்போது மாட்டிக் கொள்ள இவனது வாழ்க்கை இன்னும் சிக்கலடைகிறது.

ஜோர்ஜ் திருடப்பட்ட பொருட்களை எடுக்கும்போது, ஹ்யுகோவின் ஆட்டோமேட்டன் பற்றிய நோட்புக்கையும் பார்த்துவிட்டு வாங்கி வைத்துக்கொள்கிறான். அதைக் கேட்டுச் செல்லும் ஹ்யுகோவிற்கு இஸபெல் எனும் ஜோர்ஜ் குடும்பத்தால் வளர்க்கப்படும் பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. இஸபெல் நோட்புக்கை ஹ்யுகோவிற்கு பெற்றுத்தர, நட்பு மலர்கிறது. பின்னர் ஹ்யுகோ, தன் வாழ்விடமான ரயில்வே சீலிங் மேலேயுள்ள அறை, சந்துகள் என்பவற்றை இஸபெல்லிற்கு காட்டுகிறான்.

thumb8


தொடர்ந்து பயணிக்கும் கதையில் அவர்களுக்கு ஜோர்ஜ் எனும் ரயில்வே நிலையத்தில் விளையாட்டுக்கடை வைத்திருக்கும் அந்தக் கிழவர், திரையுலகம் கொண்டாடும் பிரான்ஸ் நாட்டின் திரைப்பட முன்னோடி ஜோர்ஜ் மெலியஸ் எனும் மேதை என்பது தெரியவருகிறது. யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு மனமொடிந்து, திரையுலகு வெறுத்து ஒதுங்கியுள்ள ஜோர்ஜை எப்படி மீண்டும் எவ்வாறு இச்சிறுவர்கள் மீட்டார்கள் என்பது மீதிக் கதை.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மார்ட்டின் ஸ்கோசெசி படம் என்பதால் நிறைய … நிறைய எதிர்ப்பார்ப்புக்களுடன் திரையரங்கிற்குள் நுழைந்தேன் (என் ரூமைத் தான் சொன்னேன். எனக்கு அதுதான் தியேட்டர்). ஸ்கோசெசி படம் என்னும் போது எதிர்ப்பார்ப்புக்கள் வருவது சகஜம் தான். அந்த வகையில் திரைக்கதையில் மட்டும் கொஞ்ஞ்ஞ்சம் (நோட் இட் கொஞ்ஞ்ஞ்சம் தான்) ஏமாற்றம்.

படம்
The Invention of Hugo Cabret என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் புத்தகம் Georges Méliès இன் வாழ்க்கையை இன்ஸ்பைர் செய்து எழுதப்பட்டது.

ஆனால் அந்த ஏமாற்றத்தையெல்லாம் தூக்கி வீசவைத்துவிட்டார்கள் திரைப்படக் குழுவினர். ப்ளாட்டான திரைக்கதையை கொண்ட படம் என்றாலும், அந்த இரண்டு மணி நேரங்கள் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவம் என்றுத் தான் கூறவேண்டும். நம் வீட்டில் 3D பார்க்கும் வசதி இல்லாததால் அந்த அனுபவத்தை இழந்துவிட்டேன்
(அவ்வ்வ்வ்) ஆனால் வாசித்த வரை Avatarக்கு பிறகு 3Dஐ மிகச் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றிப் பெற்ற படம் இது தான் என்கிறார்கள். அந்த ரயில்வே நிலையம், பாரீஸ் என எல்லா விடயத்தையும் pixel-by-pixel ஆகப் பார்த்து கட்டியிருக்கிறார்கள். Absolute Perfection !!!!

thumb2


இம்முறை ஆஸ்கார் விருதுகளில் Best Picture, Art Direction, Cinematography என மூன்று பிரிவுகளில் போட்டியிடுகிறது. பெஸ்ட் பிக்சர் பிரிவில் The Tree of Life, The Artist படங்களும் இருப்பதால் கட்டாயம் இப்பிரிவில் விருது கிடைக்காது. ஆனால் மற்ற இரு பிரிவுகளில் ஒன்றிலாவது விருது கிடைக்காவிட்டால் ஆச்சரியம் தான்.

சிறுபிள்ளைகளுக்கான படம் என்று சொன்னாலும், அனைத்து வயது தரப்பினரும் அனுபவிக்க வேண்டிய ஒரு படம். முக்கியமாக இரண்டாம் அரைவாசியில் வரும் ஜோர்ஜ் இன் சினிமா காட்சிகள், உலகசினிமா-ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு பாடம் கொண்டாட்டமாக அமையும். என்னைப் பொறுத்தவரை இரண்டாம் பாகமே படத்தை தூக்கி நிறுத்துகிறது.

பென் கிங்ஸ்லி அமைதியான வீதியோரக் கடைக் கிழவருக்கும், ஜோர்ஜ் மெலியஸிற்கும் இடையில் காட்டும் நடிப்பின் மாற்றம் படத்தில் வரும் மற்ற எல்லா நடிகர்களின் நடிப்பையும் ஓரங் கட்டிவிடுகிறது. ஸ்டார்-ஒவ்-த-மூவி இவர்தான். சிறுவர்களாக வரும் ஆஸா பட்டர்ஃபீல்ட், க்லோ மொரெட்ஸ் இருவரின் நடிப்பும் அருமை. ரயில்வே நிலைய இன்ஸ்பெக்டரின் காதல் கதை படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் ரசிக்கக் வைக்கிறது.

thumb4


"The Artist was made as a love letter to cinema" ன்னு சொல்லியிருந்தாங்க. படம் பார்க்காததால் எப்படின்னு தெரியல. ஆனால் Hugoவும் எனக்கு பொறுத்தவரை ஸ்கோசெசி சினிமா உலகுக்கும் தான் ரசித்த ஜோர்ஜ் மெலியஸிற்கும் அனுப்பும் ஒரு காதல் கடிதம் போலத் தான் தோன்றுகிறது. இதுவரை வந்த இவரின் படஙகளில் சினிமாவிற்கு நெருக்கமான படம் என்றும் இதைச் சொல்லலாம்.

மார்ட்டின் இப்படம் மூலம் நமக்கு பழையப் படங்கள் ஏன் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப் படுகின்றன என்று சொல்ல முயற்சிக்கிறார் என நினைக்கிறேன். கதையில் அடிக்கடி முன்னும் பின்னும் காட்டப்படும் அந்தப் பழைய ப்ளாக் அன்ட் வைட் படங்களின் அந்த Charming effect படம் முடிந்தபின்பும் மனதில் நிற்கின்றன. அதே நேரம் கனவிற்குள் கனவு சீன் ஒன்றும் படத்தில் வருகிறது (நாம இன்ஸெப்சன் பார்த்துட்டே கூலா இருந்தவங்க. நமக்கேவா??? )

இப்படம் பார்த்துக்கொண்டிக்கும் போது “வாவ் … கட்டாயம் ஆஸ்கார் கிடைக்கவேண்டிய படம் இது” எனத் தோன்றினாலும், படம் முடிந்த பின் அந்த “நெஞ்சைத் தொட்டுவிட்டது டச்” மனதில் வரவில்லை. மனதில் பாதிப்பை ஏற்படுத்தவும் இல்லை. வடிவேலு மாதிரி சொன்னா “இருக்கு ஆனா இல்லை”.  ஆனால் பார்த்தால் மனதில் ஒரு திருப்தி வருவது நிச்சயம்.


Hugo - வீ வாண்ட் மோர் மார்ட்டின் !!!

My Rating – 86/100


படத்தின் ட்ரெயிலர் -

அருமையான படம் பார்க்கச் சுண்டி இழுக்கும் ட்ரெயிலர்.

 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

முழுப்படத்தையும் ஆன்லைனில் பார்க்க இங்கே க்ளிக்கவும்

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிஸ்கி குறும்படம் :

இன்று PirateBay தளம் பக்கம் சென்றபொழுது இந்தக் குறும்படம் பற்றிப் போட்டிருந்தாங்க. முழுக்க 3Dயில் அழகான ஒரு ஆக்சன் குறும்பட முயற்சி. வசனங்களே இல்லாமல் பின்னணி இசையின் துணையுடன் மட்டும். 15நிமிடம் ஒதுக்க முடிந்தால் பாருங்க.பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் ஓட்டுப் போட்டுவிடுங்க …

Moneyball [2011]

folder
ஃபர்ஸ்ட் சுயபுராணம் -
இந்த வாரம் முழுவதும் “கண்டிப்பாக பார்க்கிறேன், டவுன்லோடுகிறேன்” அப்படின்னு சொன்ன சில ஹாலிவுட் படங்களையும், தவறவிட்ட சில நல்ல தமிழ்ப் படங்களையும் பார்த்துவிடுவது என்ற முடிவில் ஓட்டிக்கொண்டு இருந்தேன். அனேகமாக அடுத்த வாரமும் இது தொடரும். (ஏன்னா இந்த ஹாலிவுட்ரசிகன் சொன்ன வாக்கை காப்பாற்றுவான். ஹி .. ஹி ... பார்த்தவற்றை கீழே அண்மையில் பார்த்த படங்கள் பகுதியில் சொல்கிறேன்) மேலும் கருந்தேளார் பரிந்துரைத்த ஷெர்லாக் ஹோம்ஸ் நாடகத்தையும் தொடர்ந்து பார்த்து வருவதால் பதிவுகள் எழுத நேரம் பெரிதாக கைகூடி வரவில்லை. சீக்கிரம் கொஞ்சம் அதிகமாக எழுதப் பார்க்கிறேன்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இனி இன்றைய படம் -

ஸ்போர்ட்ஸ் பற்றிய கதை, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர், ப்ராட் பிட், ஓக்லாண்ட்(???) ஏஸின் 2002ம் வருட 20 தொடர் வெற்றிக்குப் பின் உள்ள உண்மைக் கதை என பல எதிர்ப்பார்ப்புகளுடன் பார்த்த படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்றால் கொஞ்சம் நிச்சயமாக என்றுதான் சொல்லவேண்டும். ( இந்த ஸ்டைல் எங்கேயோ பார்த்த மாதிரி இல்ல? ஹி ஹி ) 

ஃபுட்போல் அளவிற்கு எனக்கு பேஸ்போல் பற்றிப் பெரிய அளவில் ஞானம் இல்லாததால் 100 வீதம் படம் என்னுடன் ஒட்டவில்லை. நிறைய சொற்கள் படம் பார்க்கும் போது எனக்கு புரியவில்லை [Playoffs, Post-Season, First Base, Getting on Base …. ] . ஆனாலும் யதார்த்தமான, உண்மைக் கதையாலும், ப்ராட் பிட்டின் நடிப்பாலும் படம் பிடித்திருந்தது. ஏதோ …  என்னால் முடிந்தவரை, புரிந்தவரை  படத்தைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை

படம் நகர்வது பில்லி பீன் எனும் ஓக்லாண்ட் அத்லெடிக்ஸின் ஜெனரல் மனேஜரை சுற்றி. சிறுவயதில் பேஸ்போலில் ஆல்ரவுண்டராக இருந்து படத்தின் ஆரம்பத்தில் 2011ம் ஆண்டின் சீசனில் நியுயோர்க் யான்கீஸிடம் தோற்றதால் கடுப்பிலும், டீமின் முக்கிய புள்ளிகள் 3 பேர் (பேரெல்லாம் எதுக்கு இப்ப? கன்டினியு ரீடிங்) கன்டிராக்ட் பீரியட் முடிந்து லீக்கின் பெரிய டீம்களுடன் ஒப்பந்தமாவதால் டென்சனிலும் ஆபிஸில் உட்கார்ந்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார். நல்ல ப்ளேயர்ஸ் சிலரை எடுத்துப் போடலாம் என்றால் டீம் நிர்வாகத்திடம் சல்லிக் காசு இல்லை. ஏதாவது புது முறையை இவ்வருடம் கையாளலாம் என்றால் அவரிடம் வேலை செய்யும் ஸ்கௌட்ஸ்க்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை.
thumb2 
அந்த மூவரையும் ஈடு செய்வதற்காக பில்லி Cleveland Indians டீமிடம் விளையாட்டு வீரர்களை கைமாற்றச் செல்லும்போது பீடர் ப்ராண்ட் எனும் யேல் யுனிவர்ஸிட்டி பட்டதாரியின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. பீட்டரிற்கு பேஸ்பால் வீரர்களை தெரிவு செய்வதில் ஒரு வித்தியாசமான விதம் இருப்பதை தெரிந்துகொள்ளும் பில்லி மறுநாளே பீட்டரை தன்னிடம் அஸிஸ்டென்ட் மனேஜராக வேலைக்கு சேர்த்துக் கொள்கிறான்.
பீட்டர் புள்ளிவிபரவியல் (அதாங்க Statistics) முறையை பாவித்து ப்ரொஃபெஷனலாக விளையாடாததால் மற்ற டீம்களால் ஒதுக்கப்பட்ட, மிகவும் குறைந்த விலைக்கு வாங்கக் கூடிய நல்ல திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து (சேற்றில் இருக்கும் செந்தாமரைகள்) பில்லிக்கு சொல்கிறான். ஆனால் அவர்களின் திறமைகளை அவர்கள் தற்போது எவ்வாறு விளையாடுகிறார்கள் என மதிப்பிடாமல் கம்ப்யுட்டர் மூலம் அவர்களின் புள்ளிவிபரங்களை மட்டும் வைத்து மதிப்பிடுகிறான். பில்லியின் பழைய ஸ்கௌட்ஸ்க்கு இந்த புதிய முறை பிடிக்கவில்லை. அவர்கள் ப்ளேயர்ஸ் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை வைத்தே வாங்கவேண்டும் என சொல்கிறார்கள்.

இதுப் போதாததற்கு ஏஸின் கோச், பில்லியுடன் ஏற்படும் கண்ட்ராக்ட் பிரச்சினையால் டீமை பழைய முறையிலேயே விளையாட வைக்கிறான். டீம் தோற்க பழி பில்லி மேல் விழுகிறது.

நடப்புச் சாம்பியனான நியுயோர்க் யான்கீஸின் பட்ஜெட்டின் 1/3 பங்கு பட்ஜெட்டுடன் பில்லியும், பீட்டரும் எவ்வாறு சீசனை சமாளித்தார்கள், பின்னர் என்ன நடந்தது என்பதை கட்டாயம் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

நூறு ரன் எடுக்க, அந்த நூறு ரன்களையும் அடிக்கக் கூடிய ஸ்டார் ப்ளேயர்ஸ் தேவையில்லை. பத்து ரன்கள் அடிக்கக்கூடிய 10 பேர் போதும்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
thumb5

படத்தின் கதையை மேலோட்டமாகப் பார்த்தால் அனேகமான ஸ்போர்ட்ஸ் படங்கள் போல ஒரு நோஞ்சான் டீம் கடைசியில் எப்படி சாதிக்கிறார்கள் என்பது போல இருக்கும். மெயின் கதை பழைய மேட்டர் போல தெரிந்தாலும் என்றாலும் புள்ளிவிபரங்கள், டீமைச் சுற்றி படத்தை நகர்த்தாமல் மேனேஜரை வைத்து எடுத்தது என ஒரு புதிய பரிமாணத்தில் படத்தை கொடுத்திருக்கிறார்கள். திரைக்கதை எழுதியவர் ஸ்டீவன் செய்லியன் (The Girl With Dragon Tatoo [2011], Schindler’s List). இயக்கியவர் பென்னட் மில்லர் (2005ம் ஆண்டு சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கார் விருது).

இவர்கள் தவிர படத்தின் உயிர்நாடி என்று சொல்லக்கூடியவர் ப்ராட் பிட் (மேலே ஃபோடோவில் சிரித்துக் கொண்டு இருக்கிறாரே. அவர் தான்). இவரை தெரியாதவங்க இங்கிலீஸு படம் பார்க்காதவங்க என சொல்லலாம். (Oceans சீரீஸில் வந்திருப்பார்). இவரின் நடிப்பின் வித்தியாசம் பிரமிக்கத்தக்கது. The Curious Case of Benjamin Button படத்திலும், Oceans series, Mr & Mrs. Smith படங்களிலும் இவரின் நடிப்பிற்கு உள்ள வித்தியாசத்தைப் பார்க்கலாம். படத்தின் கரெக்டருக்கு இவர் பொருந்தாமல், அந்தக் கரெக்டர் இப்படித் தான் இருக்கும் என காட்டுவது இவரின் ஷ்பெஷாலிட்டி. படம் முழுவதும் இவர் ராஜ்ஜியம் தான். மிக அழகாக பில்லி பீன் கதாபாத்திரத்தை நடித்திருக்கிறார். தான் நம்பும் விடயத்தை  நம்பாமல் நொட்ட சொல்லிக்கொண்டு இருப்பவர்களை ஒதுக்கிவிட்டு தான் சரியென நினைப்பதை செய்து சாதிக்க நினைக்கும் வெறி, நெருங்கிப் பழகினால் விளையாட்டு வீரர்களை கைமாற்றுவது கடினம் என டீமை விட்டு ஒதுங்கியே இருப்பது என நன்றாக நடித்திருக்கிறார்.

அடுத்த பாராட்டு அவருக்கு பக்கத்தில் நிற்கும் ஜோனா ஹில்லிற்கு. Superbad படத்தில் பார்த்ததைவிட இதில் காமெடிக்கான பங்கு கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் நிறைவான நடிப்பு. ஒரு கணனி கீக் ஆக நடிக்க, பேச தனியாக ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ் டியுடரிடம் ட்ரெயினிங் எடுத்தாராம். மற்றபடி படத்தில் வரும் கோச், மற்றும் விளையாட்டு வீரர்கள் தம் பாத்திரங்களை அழகாக நடித்து கொடுத்திருக்கின்றனர்.
thumb3

படத்தின் தொழில்நுட்ப விடயங்களும் நன்றாகவே இருந்தன. படத்தின் அதிகமான காட்சிகள் ஒரு பேஸ்போல் ஸ்டேடியத்தின் அடியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. பின்னணி இசை கலக்கலாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் வரும் அமைதி படத்தின் நொடிகளின் சூழலுக்கு பெரிய உதவி.

குறை என்று சொல்லப் போனால், படம் அங்கங்கே கொஞ்சம் அதிகமாக இழுக்கப்பட்டது போன்ற ஒரு ஃபீலிங். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். இடையில் வரும் ப்ராட் பிட்டிற்கும் அவரின் மகளிற்கும் இடையிலான காட்சிகள் தேவையில்லாதது போல காட்சியளித்தாலும் படத்தின் இறுதியில் பில்லியின் முடிவிற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

2012ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், ஏற்கனவே வெளிவந்த விடயங்களில் இருந்து எழுதப்பட்ட சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், Best Sound Mixing என 6 பிரிவுகளில் போட்டியிடுகிறது. கோல்டன் க்ளோப் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டாலும் தவறவிட்டுவிட்டது. Midnight in Paris (சீக்கிரம் எழுதுவேன்) தவிர மற்ற பரிந்துரைக்கப்பட்ட படங்களைப் பார்க்காததால் விருதைப் பெற எவ்வளவு சான்ஸ் இருக்கிறது என சரியாக கூற முடியவில்லை.

ஆனாலும் நேரத்தை போக்க நல்ல படம் ஒன்று தேடிக் கொண்டு இருந்தால் கட்டாயம் எடுத்துப் பாருங்கள். இரண்டு மணி நேரம் ஒதுக்கி அமைதியான மூட் உடன் பாருங்கள்.

Moneyball – 81 / 100


படத்தின் ட்ரெயிலர் :பி.கு – யாராவது முடிந்தால் இப்பதிவு சேர்க்கப்படாத திரட்டிகளி்ல் சேர்த்துவிடுங்கப்பா. God Bless You !!!

Forgetting Sarah Marshall [2008] (18+)

folder

இந்தா … இப்பவே சொல்லிட்டேன். இது காமெடி சப்ஜெக்ட் படம் தான். ஆனால் அடல்ட் ஜோக்ஸ், செக்ஸ், ஷேம் ஷேம் பப்பி ஷேம் காட்சிகளைப் பார்ப்பதில் ஒரு விதமான பிரச்சினையோ சங்கடமோ உங்களுக்கு இல்லைன்னா (நம்ம சி.பி மாதிரி) மட்டும் இப்படத்தைப் பாருங்க. இல்ல நான் ரொம்ப டீசண்டான ரோயல் ஃபாமிலி அப்படின்னா இப்பவே எஸ்ஸாகிடுங்க. (நான் பொல்லாதவன்) நல்ல ஒரு படம் பற்றி எழுதினதும் சொல்லி அனுப்புறேன்.

ஓ.கே. வார்னிங் கொடுத்தாச்சு. இனி யாரும் என்னை ஒன்னும் சொல்ல முடியாது. லெட்ஸ் பிகின் …..


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


படத்தின் கதை

நம்ம படத்தின் ஹீரோ பீட்டர் ஒரு கம்போஸர். மொத ஷாட்டுலயே காட்டும் குப்பையான அறை, இறைந்து கிடக்கும் ட்ரஸ்ஸில் இவரு நம்ம மாதிரி ஒரு ஆளுங்கறது  தெரியவருகிறது. ஆனாப் பாருங்க, இப்படி ஒரு சொங்கி மாதிரி அபார்ட்மென்டில் இருக்கிறவரு 90மார்க் ஃபிகரான டி.வி நடிகை சாரா மார்ஷல ஓட்டுறாரு (ஹ்ம் நாமளும் இவரு மாதிரி தான் ரூம வச்சிருக்கோம். சாரா வேணாம், அட்லீஸ்ட் ஒரு செல்லம்மா சரி கிடைக்குதில்லையே).

thumb1


ஒரு நாள் நம்ம ஹீரோ குளிச்சுட்டு வெளியே வாராரு. பார்த்தா வீட்டு ஹாலில் சாரா. ஹீரோ டவல கட்டியிருக்காரு. சரி தான் மேட்டர் ஸ்டார்ட்டுன்னு பார்த்தா அதுக்கேத்த மாதிரியே அவரும் டவல கழற்றி அத ஆட்டிக்கொண்டே “ I’ve got a surprise for you ”ன்னு சொல்ல அதுக்கு அந்தப் புள்ள டப்புன்னு “நாம நம்ம காதல்ல ஒரு ப்ரேக் எடுத்துக் கொள்வோம்”ன்னு சொல்லிடுது. ஷாக்ல விழுந்த டவலக் கூட எடுத்து கட்டிக்காம அப்சட் ஆகிடறாரு பீட்டர்.

அப்பறம் இவரு “அஞ்சல அஞ்சல”ன்னு சாராவை நினைத்து சிந்தி சிந்தி அழுறாரு. இவரின் அழுகைக்கு நம்ம இந்தியன் ட்ராமா ஆண்டிங்க தோத்துருவாங்க போல. அப்புறம் ஒரு சேன்ஜுக்காக மனசை ரிலாக்ஸ் பண்ண ஹவாய்க்கு ஒரு ஹாலிடேல போறாரு.  ஆனா அங்க இவர் தங்கப்போகும் ஹோட்டலில் சாராவும் அவளின் புது பாய்பிரண்ட் அல்டஸும் நிக்கறாங்க. பீட்டர் அப்படியே ஷாக் ஆயிட்டாரு. அங்கு ஹோட்டல் ரிஷப்ஷனிஸ்ட் ரேச்சல் இவரின் கதையைக் கேட்டு பரிதாபப்பட்டு அங்கு இருக்கும் 6000 டாலர் மதிப்புள்ள சுயிட்டை தங்கக் கொடுக்கிறாள் ஃப்ரீயாக.

 

2011630345445628806

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ரேச்சலும் பீட்டரும் பீட்டர் விட்டு செட்டாகிடறாங்க. ஆனாப் பாருங்க அந்த டைம்ல அல்டஸ்க்கும் சாராவுக்கும் சண்டை வந்து ரெண்டு பேரும் பிரிஞ்சுடுறாங்க. இந்த நேரத்தில் பீட்டர் கவலையாக இருக்கும் சாரா மேல் ஃபீல் ஆகி ஆறுதல் சொல்லப் போய் பின் பிரபுதேவா-நயன்தாரா மாதிரி ஆறுதல் செக்ஸ் வரைக்கும் போகுது. என்ன பாவமோ தெரியல இவரு மேட்டர் செய்யப் போகும் போது இவரின் மேட்டர் வேல செய்யாம போகுது. அப்புறம் இவரு லூசு மாதிரி போய் ரேச்சலிடம் நடந்ததை சொல்ல அவளும் பீட்டரை துரத்திவிடுகிறாள். கடைசியில் ரெண்டும் கெட்டானாக இருக்கும் பீட்டர் கடைசியில் யாருடன் சேர்ந்தார் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்க.

 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

 

படத்தின் முக்கியமான கரெக்டர் பீட்டர் (ஜேசன் சீகல்). படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதினவரும் இவருதான். இவர சுத்தித் தான் கதை நகருது. ஆனா எனக்கென்னவோ, படத்திலேயே ஒன்னுக்கும் உருப்படாத நடிகர் இவர்தான்னு தோணுது. காமெடிங்கறது நடிப்புல சுத்தமா ஒட்டல. நல்லா அழுறாரு. இவர விட படத்தில் வரும் மைனர் கரெக்டர்கள் மனசுல நல்லா பதியுறாங்க குறிப்பா அந்த புதுத் தம்பதியினர்.

நம்ம டாக்குடர் விஜய் “நான் காட்டு காட்டுன்னு காட்டுவேன்னு” வாய்ல மட்டும் தான் சொல்றார். ஆனா ஒன்னையும் காணோம். ஆனால் சீகல் டயலாக் ஒன்னும் விடாமல் உண்மையாகவே காட்டு காட்டுன்னு காட்டுறார். படத்தின் பல இடங்களில் தேவையில்லாமல் இவரின் ப்ரைவேட் இடத்தை பப்ளிக் ஸ்பாட் மாதிரி காட்டுறானுங்க. சரி … ஒரு சீன் ரெண்டு சீன்னா பரவால்ல. படம் முழுவதும் பார்க்கும்போது காமெடி என்பது போய் வெறும் அருவருப்பு தான் வருது.

 

18forgetting01-600

படத்தின் முக்கிய ஹைலைட்டே படத்தின் ஹீரோயின்ஸ் தான். ஆர்டிஸ்ட் செலக்ஷன் பண்ணினவன கோயில் கட்டி கும்பிடனும். ரெண்டு பேருமே A-க்ளாஸ் ஃபிகருங்க. ஒவ்வொரு விதத்தில் இருவரும் யுனிக். சத்தியமா Kristen Bell (சாரா மார்ஷல்), Mila Kunis (ரேச்சல்) இருந்தனால தான் சீன் இப்போ வரும், அப்போ வரும்னு முழுக்க பார்த்தேன். (எவ்வளவு நேரம் தான் நாங்களும் வெறும் சீகலின் ப்ரைவேட் ஏரியாவை  பாத்துகிட்டு இருக்கிறது?) இல்லாட்டி நிப்பாட்டிட்டு வேற ஏதாவது பாத்திருப்பேன். அதுவும் Friends With Benefits விமர்சனத்துல சொன்னது போல ஒரு சின்ன கவலை இருந்தது. இந்தப் படத்தில் அந்த குறை தீர்ந்துவிட்டது. ஹி ஹி

திரைக்கதை பற்றி ஒரு வசனம் பேசுவதற்கில்லை. “குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா நிறையொன்னும் இல்லை கண்ணா” தான். எல்லாம் தெரிந்த கதை தான். படுமொக்கை ஸ்க்ரிப்ட். ஆனால் படத்தில் உள்ள காமெடிகளுக்காக நிச்சயம் பார்க்கலாம். வாய் விட்டு சிரிக்கக்கூடிய இடங்கள் பல இடங்களில் இருக்கின்றன. ஃப்ரீயா டைம்பாஸுக்காக மட்டும் பார்க்கக்கூடிய படம். சீரியஸா எதையும் எதிர்ப்பார்த்து பார்க்காதீங்க. அப்புறம் நான் பொறுப்பு கிடையாது.

படம் பாக்குறதா யோசித்தா, எங்கயாவது தேடி Unrated/Extended edition இருந்தா எடுத்துப் பாருங்க. நிச்சயம் பெட்டரா இருக்கும்.

 

Forgetting Sarah Marshall – Just for Laughs – 64 (59+10) / 100

(10 போனஸ் மார்க்ஸ் என் மிலா குனிஸ் குறையை நீக்கியதற்கு. 10/2 for each ஹி ஹி)

படத்தின் ட்ரெயிலர் :

டிஸ்கி – யாராவது கீழே Upcoming Movie Trailers பதிலாக பாவிக்க ஏதாவது யோசனை இருந்தா கூறுங்களேன். ப்ளீஸ். அத்தோட ப்ளாக் ஹோம்பேஜ்ல ஒரு போஸ்ட் மட்டும் இருக்கிற மாதிரி செட் பண்ணியிருக்கேன். அது நல்லாயிருக்கா இல்லாட்டி பழையபடி 5 போஸ்ட்களை Read More option உடன் போடவா?

Liebster Blog Award - இது விமர்சனம் இல்லைங்க


எழுதத் தொடங்கி இரண்டு மாசம் ஆகுது. இன்னும் 20 விமர்சனம் முழுசா தாண்டல (வெட்டிப்பய) . அதுக்குள்ள விருதெல்லாம் கொடுத்து அசத்துறாங்கப்பா ... அதுவும் இன்டர்நேஷனல் லெவல்ல. (ஒருவேளை நான் இன்டர்நேஷனல் லெவல்ல விமர்சனம் பண்ணுறனாலயோ. ஹி ஹி) .
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நண்பர் K.S.S.Rajh அவர்கள் தனது தளத்தில் தான் பெற்ற லீப்ச்டர் விரு(ந்)தினை எனக்கும் பகிர்ந்திருக்கிறார். நான் அப்படி என்னத்த கிழிச்சேன்னு கொடுக்கிறார்னு தெரியல. ஆனாலும் கொடுத்ததை இன்முகத்துடன் வாங்கிக் கொள்கிறேன். நம்மளையும் இந்த வலையுலகம் கொஞ்சம் கவனிக்கிறது அப்படீங்கறது இப்பத் தான் தெரியுது. (ஐஸ்ஸு ஃபுல்லா டியரு) வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்/விருது. மிகவும் நன்றி நண்பா.

விருது கிடைத்த மேடை - http://www.nanparkal.com/2012/02/blog-post_04.html

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இந்த விருதைப் பற்றிய தகவல்கள்

'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

Rules :


•Thank your Liebster Blog Award presenter on your blog.
•Link back to the blogger who presented the award to you.
•Copy and paste the blog award on your blog.
•Present the Liebster Blog Award to 5 blogs of 200 followers or less who you feel deserve
to be noticed. (Some say just 3 or more blogs of less than 200 followers each).
•Let them know they have been chosen by leaving a comment at their blog.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

அவர் கூறியபடியே நானும் சங்கிலியை தொடர்கிறேன். நான் பிறமொழி சினிமா விமர்சனங்களை பெரும்பாலும் விரும்பி வாசிப்பதால் எனக்கு கிடைத்த 5 விருதுகளில் 4 விருதுகளை என் ஏரியா சம்பந்தப்பட்டவர்களுக்கே பகிர்கிறேன். 

என்னிடம் விருது பெறும் அந்த 5 அதிர்ஷ்டசாலிகள் யார்? (இப்போ தான் லிஸ்ட்ல தேடிக் கொண்டு இருக்கிறேன்) தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். 

..............................
..............................
..............................
..............................
..............................
..............................
..............................
..............................
.............................. 
..............................
..............................


ஹி ஹி சும்மா சொன்னேன். (கடுப்பேத்றார் மைலார்ட்ன்னு சொல்லுவது கேட்கிறது). சரி சரி ... இவங்க தான் அந்த ஐந்து பாக்கியசாலிகள் (ஹி ஹி) .

1. குமரன் @ kumaran-filmthoughts.blogspot.com/

உண்மையில் நான் எழுதத் தொடங்க நான்கு மாதங்களுக்கு முன்பே இவரு ஆரம்பிச்சிட்டாரு. நான் வெறும் மொக்கை ஆங்கிலப் படங்களா அறிமுகப்படுத்தும்போது மிக அருமையான உலகப்படங்கள், ஹிட்ச்காக்கின் படங்கள் பற்றி நல்ல அழகாக விமர்சித்திருக்கிறார்.

2.ராஜ் @ hollywoodraj.blogspot.com/

என் முதல் போஸ்டில் முதல் பின்னூட்டம் இட்டு இன்று வரை ஆதரவளிப்பவர். இவரும் நம்ம கேஸ் தான். உலகப்படம் எல்லாம் இல்ல (பொறுமை இல்ல) மிக நல்ல ஹாலிவுட் படங்கள் பற்றி எழுதியிருக்கார் (The Dollars Trilogy).


3. பேபி ஆனந்தன் @ babyanandan.blogspot.com/
மிகவும் அற்புதமான விரிவான திரைப்பட விமர்சனங்கள். உண்மையில் வளர்ந்து வரும் பதிவாளர்களுக்கானது என்றாலும் இவர் ரொம்ப வளர்ந்தவரு. 2009ல் இருந்து எழுதுகிறார். மிக அழகான எழுத்துநடைக்கு உரியவர்.

4. JZ @ cinemajz.blogspot.com/
இவரும் நம்மள மாதிரி ஹாலிவுட் சரக்க வச்சு தான் கடைய ஓட்டுறாரு. நல்ல ஹாலிவுட் படங்கள் பற்றி எழுதியிருக்கார். ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கிறேன். ஏன்னா Tree of Life படம் பார்க்க பொறுமை ரொம்ப முக்கியமாம் (பொறுமைசாலி நண்பன் சொன்னான்)

5. Chilled Beerschilledbeers.blogspot.com/
இவர் வேற டிபார்ட்மெண்ட்டு ஆளு. எல்லா ஏரியாவுலயும் கலந்து கட்டுறார். இவரின் எழுத்தைப் பார்த்தா இளம் எழுத்தாளர் போல எனக்கு தோணல. ரொம்ப எழுத்தில் ஊறியவர்னு மட்டும் தெரியுது. இவருடைய “நாட்டுப்புற பாலியல் கதைகள் பதிவுகள்” என் பேவரிட் லிஸ்டில் உண்டு. இவரின் எல்லாப் பதிவுகளிலும் நக்கல் இழைந்தோடும். என்னைவிட விருதிற்கு மிகவும் தகுதியான ஆளுன்னா அது இவருதான்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸபப்பா .... ஒரு மாதிரி ஐந்து பேரை தெரிவு செய்தாச்சு. உண்மையில் வளர்ந்து வரும் புதிய பதிவர்கள் பற்றிய விருது என்பதாலும் 5 தான் லிமிட் என்பதாலும் பலரைப் பற்றி நான் எழுதவில்லை. அப்படி விடுபட்டவங்களில் சிலர்

  1. புன்னகையே வாழ்க்கைன்னு கிடக்கும் Mohammed Faaique
  2. நாற்று நட்டுக்கொண்டே இருக்கும் நிரூபன் மற்றும்  
  3. அவரின் அல்லக்கை ஐடியாமணி
  4. காணாமல் போன கனவுகளை இன்னும் தேடும் சகோதரி ராஜி
  5. வேலி இல்லாமல் படலையை மட்டும் வைத்திருக்கும் ஜே.கே
  6. நம்ம முரட்டு சிங்கம்
  7. அட்ராசக்க ன்னு பதிவு போட்டு நம்மை சக்கையை எடுக்கும் சி.பி

மற்ற பதிவர்களுக்கு விருது கொடுக்கும் அளவிற்கு நான் அப்பாடக்கர் இல்லை என்பதாலும் அவங்களுக்கு அடியேனின் விருதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்குமோ தெரியாது என்பதாலும் இத்தோடு என் ரீல் ஸ்டாப்.

என் விருதையும் ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிடித்த 5 இளம் பதிவர்களுக்கு பகிருங்கள்.

என்னுடைய மற்ற பிரபல பேவரிட் பதிவர்களை வலதுப்பக்கத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அப்பாடா ஒருமாதிரி 20 பதிவு தேத்தியாச்சு. நிம்மதியா தூங்கலாம். ஹி ஹி.

The Big Bang Theory [2007-Present]– காமெடி தொலைக்காட்சி சீரீஸ்

folder

 

சென்ற தொலைக்காட்சித் தொடர் பதிவில் Dexter எனும் சீரியஸான சீரியல் கில்லர் நாடகம்  ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். அதான் இதோ இந்தமுறை கொஞ்சம் ரிலாக்ஸ்டாக சிரித்து வயிறு வலிக்க ஒரு சூப்பரான காமெடி நாடகம்.

Sitcom ன்னு நாடகங்களில் ஒரு வகை உண்டு.  ஆங்கில தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பவங்களுக்கு இந்த சொல் மிகவும் பரிச்சயமாக இருக்கும். விளக்கமா சொல்லனும்னா Situation Comedy. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை உருப்படவிடாமல் கட்டிவைத்திருக்கும் ஒரு விடயம். பிரமாண்டமான செட், அனிமேஷன், லொகேஷன்ஸ், ஸ்க்ரீன்ப்ளே, சினிமாட்டோகிராஃபி ன்னு நாம ஒரு திரையில் எதிர்ப்பார்க்கும் ஒரு விடயங்களும் இல்லாமல் ஒரு செட்டிற்குள் டைமிங்கான வார்த்தைகளை மட்டும் நம்பி பண்ணும் காமெடி. 

இன்னக்கி பார்க்கப்போறதும் இந்த மாதிரி ஒரு சிட்காம் தான். ஓகே …  ஃபாலோ மீ.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

fanart


ஏதோவொரு டாக்குடர் (அதாங்க விசர் … அடச்சீ விசயி) படம் ஒன்னுல ஒரு வசனம் வரும் (ஐயா தமிழ்ப்படங்களில் கொஞ்சம் வீக்கு). ஒரு பொண்ணு, 5 பையன் … ஒரு ரூம்ல விட்டா என்ன ஆகும்? அதே கதைதான் தான் இங்கும். பட் ஒரு சின்ன சேஞ்ச். 4 அம்மாஞ்சி பையன்களிடம் ஒரு ஃபிகரு மாட்டிக்கிட்டா என்ன பண்ணும்?

அமெரிக்காவில் கலிபோர்னியா மாவட்டத்தில் பசடீனா எனும் நகரிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கிறாங்க இரு சயின்டிஸ்ட்ஸ். டாக்டர் ஷெல்டன் கூப்பர் மற்றும் லெனர்ட் ஹொஃப்ஸ்டேடர். அவங்களுக்கு இரண்டு ஃப்ரெண்ட்ஸ் ஹௌவர்ட் வோலோவிட்ஸ் மற்றும் ராஜேஷ் கூத்ரபாலி. பொதுவாக படிப்பு கூடினவங்க பழக்கவழக்கம் போலத் தான் இவங்களின் பழக்கங்களும். கணக்கு போடுவது, கேம் விளையாடுவது, Star Trek படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது, காமிக் புத்தகங்களை தவறவிடாமல் வாசிப்பது என கீக்கி, நெர்டியான பழக்கங்கள். சுருக்கமாச் சொன்னா “கிணற்றுத் தவளைகள்”. சயின்ஸில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கக்கூடிய இவங்களின் சமூகத்திறனிற்கான மார்க் ஜீரோ.

இவங்களின் அபார்ட்மெண்ட்டுக்கு எதிர் ஃப்ளாட்டில் குடிவருகிறாள் பென்னி. இந்த நான்கு பேரின் மேதாவித்தனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பென்னி படும் பாடும், பென்னியின் சமூகத்திறனுக்கு முன் தடுமாறும் இந்த நால்வரின் அனுபவங்கள், அட்டகாசங்கள் தான் The Big Bang Theory.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


187 ஐ.க்யுவுடன் 16வயதில் Ph.D பட்டம் வென்று தான் மட்டுமே அறிவாளி மற்றவர்கள் அனைவருமே மடையர்கள் என நினைக்கும் ஷெல்டன், 23 வயதில் Ph.D பட்டம் பெற்ற lactose-Intolerant சிக்கலுள்ள லெனர்ட், எந்த நேரமும் தான் ஒரு “மன்மதக் குஞ்சு” என நினைத்துக் கொண்டிருக்கும் ராக்கெட் எஞ்சினியரான ஹேளவர்ட், மற்றும் மப்பில் இருக்கும் நேரம் தவிர பெண்களுடன் பேச இயலாத இந்தியன் Ph.D பிஸிஸிஸ்ட் ராஜேஷ். இந்த அறிவாளிகளுடன் நட்பு வைத்துக் கொள்ளவேண்டிய பென்னியின் பெரிய சாதனை அவள் வேலை செய்யும் சீஸ்கேக் ஃபாக்டரியின் மெனுவை பாடமாக்கியது (ஒரு எபிசோடில் ஷெல்டன் நக்கலடிக்க கூறும் வசனம்).

 

The Big Bang Theory-fanart

பெரும்பாலும் கதை இவர்கள் ஐவரைச் சுற்றியே நடந்தாலும் பின்னர் வந்த சீசன்களில் ஷெல்டனுக்கு ஜோடியாக எமி ஃபாரா ஃபௌலர் எனும் நியுராபயாலஜிஸ்டும் மற்றும் ஹௌவர்டுக்கு பெர்னடெட் எனும் மைக்ரோபயாலஜிஸ்டும் ஜோடியாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.  மற்றும் இடையில் அடிக்கடி வந்துப்போகும் ஷெல்டன், லெனார்ட்டின் அம்மாக்களும் கதாபாத்திரங்களில் அடக்கம்.

 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

 

அது என்ன ராசியோ தெரியல … CBS தொலைக்காட்சிக்கும் இந்த சிட்கொம் நாடகங்களுக்கும் ஏகப்பொருத்தம். எத்தனையோ நாடகங்கள் இந்தச் சேனலில் ஒளிபரப்பாகி மெகா ஹிட்டாகியுள்ளன. Two and a Half Men, Everybody Loves Raymond, How I met your Mother என்பன இதற்கு சிறந்த உதாரணங்கள்.

இதை இயக்கியவர் Two and a Half Menஐ இயக்கிய அதே Chuck Lorre. மனுஷனுக்கு கடவுள் கொடுத்த வரமோ என்னமோ, சென்ஸ் ஒப் ஹியுமர் அற்புதம். சும்மா பிச்சு பெடலெடுத்துட்டாரு. Two and a Half Men இல் டபுள் மீனிங் வசனங்கில் கவனம் செலுத்தியவருக்கு புதிய ஒரு பிரச்சினை. அது சயின்ஸ். பென்னி தவிர நடிக்கும் அனைத்து பேரும் சயின்டிபிக் பீபிள் என்பதால் காமெடிக்கு ஏற்றாப்போல ஃபிஸிக்ஸ் தியரிகள், காமிக் புத்தகங்கள், படங்கள் என ஏகப்பட்ட ஹோம்வொர்க் பண்ணியிருக்காங்க.

Fanart

உங்களுக்கு ஸ்டார்வோர்ஸ், ஸ்டார்ட்ரெக் போன்ற ஹாலிவுட் க்ளாஸிக்ஸ், காமிக்ஸ், ஆன்லைன் ரோல் ப்ளேயிங் கேம்ஸ் போன்றவற்றில் கொஞ்சம் ஞானம் கொஞ்சமிருந்தால் கட்டாயம் வயிறு வலி நிச்சயம் … அட சிரிச்சு தாங்க. இல்லாட்டி அட்லீஸ்ட் கொஞ்சம் சயின்ஸ் அறிவாவது வளரும்.


நிச்சயமா இந்தத் தொடரின் ஹீரோ ஷெல்டனாக நடிக்கும் ஜிம் பார்ஸன்ஸ் தான். சான்ஸே இல்ல இவரின் நடிப்பிற்கு. ஹீ ஜஸ்ட் ஸ்டீல்ஸ் தி ஷோ. அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பிற்கு இவரின் உருவமும், பேச்சும் நடிப்பும் அப்படியே ஒத்துப் போகிறது. கண்டிப்பாக இவரின் நடிப்பு கரியரில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும். வருடாந்தம் அமெரிக்காவில் நடக்கும் நிறைய தொலைக்காட்சி விருதுகளுக்கும் எனக்கு தெரிந்து காமெடி செக்சனில் இவரின் பெயர் கட்டாயம் நொமினேட் செய்யப்பட்டிருக்கும். மேலும் அமெரிக்காவின் மிக முக்கிய சின்னத்திரை விருதான எமி அவார்ட் இல் பெஸ்ட் லீட் அக்டர் இன் காமெடி சீரிஸ்  2010, 2011ம் ஆண்டுகளில் இவருக்குத் தான் சொந்தமாகின.


tumblr_lvylokIhx81qzl9k5o2_250


எனக்குப் பிடித்த மற்ற கரெக்டர் ராஜேஷ். இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவனாக வரும் இவன் சிலவேளைகளில் பேசும் போது இந்தியாவைப் குத்திக் காட்டுவது, நக்கலடிப்பது எரிச்சல் மூட்டினாலும் கட்டாயம் சிரிப்பு வரும்.   இவனுக்குள்ள சரக்கடிக்காமல் பெண்களிடம் பேசமுடியாத பிரச்சினை இதன் இன்னொரு இயக்குனரான Bill Pradyக்கும் இருந்ததாம். அதுவும் ஹேளவர்டுக்கும் இவனுக்கும் இடையில் ஒரு ஹோமோ கனெக்சன் உறவு இருப்பதுபோல சித்தரிக்கப்படும் இடங்கள் அட்டகாசம். ஆனால் ரொம்ப சீரியஸான மேட்டர் எதுவுமில்லை.

 

Raj Koothrappali: OK, Sheldon, I'm going to be leading you through a series of meditation exercises. These methods come from the ancient gurus of India and have helped me overcome my own fears.
Sheldon: And yet you can't speak to women.
Raj Koothrappali: True, but thanks to meditation I'm able to stay in the same room with them without urinating.

 

Raj Koothrappali: Do you know the Kama Sutra?
Missy: The sex book?
Raj Koothrappali: The Indian sex book. If you've ever wondered, wondered who wrote the book of love, it was us.

funny-celebrity-pictures-sheldons-got-a-point

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =இதுவரைக்கும் மொத்தம் ஐந்து சீசன்கள். (இன்னும் மூன்று வரும்னு சொல்றாங்க. நல்லது) முதல் சீசன் தவிர மற்றைய சீசன்கள் ஒவ்வொன்றும் 22நிமிட எபிசோட்கள் 23 அல்லது 24 கொண்டவை. Two and a Half Men இன் காமெடியை விட எனக்கு இதன் ஹியுமர் மிகவும் பிடித்திருந்தது. பார்க்கத் தொடங்கிய புதிதில் முதல் சீசனை ஒரே நாளில் பார்த்து முடித்தேன். இதுவரை ஒரே நாளில் முழு சீசனும் பார்க்கத் தூண்டிய இன்னொரு நாடகம் The Game of Thrones (காலை 5.30 மணிக்கு முன்னோட்டத்திற்காக வீடியோ க்வாலிட்டி பார்க்க ஆரம்பித்தது இரவு 8.30 மணிக்கு முழு சீசனும் பார்த்து முடித்தேன்). நீங்கள் காமெடிப் பிரியர் என்றால் நிச்சயம் தவறவிடக்கூடாத ஒரு நாடகம் இது. எதற்கும் சப்டைட்டிலுடன் பார்ப்பது நன்மை பயக்கும்.

டோன்ட் மிஸ் இட்!!!!


The Big Bang Theory – Comedy Bang !!!

 

எக்ஸ்ட்ரா பிட் I – இந்த நாடகம் இப்போது ஜீ-கஃபே சானலில் பகலில் ஒளிபரப்பாகிறது. வீட்டில் நேரம் கிடைத்தால் ஒரு மூன்று நான்கு எபிசோட்களைப் ட்ரையல் பாருங்கள்.

 

எக்ஸ்ட்ரா பிட் II – The Game of Thrones இன் இரண்டாவது சீசன் ஏப்ரலில் ப்ரீமியர் ஆகிறது. நானும் இப்பொழுது தான் முதல் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த சீசனில் ராணியின் தம்பியாக வரும் Tyrionஇன் பங்கு மிக அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை என்றால் கட்டாயம் ஏப்ரலிற்கு முன் பார்த்துவிடுங்கள்.  அதற்கான அட்டகாசமான டீசர் ட்ரெயிலர் கீழே.

 

A very small man can cast a very large shadow.

 

அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன்
ஹாலிவுட்ரசிகன்.