நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Best of Hollywood - 2012

best-movies-2012

ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் தாண்டிடுச்சு. இன்னும் உருப்படியா, கழுத்தறுக்காம ஒரு போஸ்ட் எழுதியிருக்கிறேனான்னு தெரியல. அதிலும் இதுவரைக்கும் மொத்த பதிவுகளே 56 தான். நான் மாசம் 4 பதிவு தாண்டுவதற்குள்ள நாட்டுல விலைவாசி நாப்பது மடங்கு தாவுது. என்ன செய்ய??? சரி, தனித்தனியா பதிவெழுதி அறுக்கமுடியாட்டிலும், 2012ல் வெளியாகி நான் பார்த்த படங்களில் பெஸ்ட்டுன்னு நினைக்கிற படங்களையெல்லாம் இந்த போஸ்ட்டுல சொல்லிடுவமேண்ணு...

முதல்ல.. கண்டிப்பா, இது என்னோட சாய்ஸ் மட்டுமே. உங்களுக்கு பிடிக்கும்..பிடிக்கணும்னு எல்லாம் கட்டாயம், நிச்சயம் இல்லை. முதல்ல டாப்-10 கவுண்ட்டௌன் போடுவோம்னு தோணிச்சு. அப்புறம், ஏன் வம்புன்னு பிடிச்ச படங்களையே எழுதிடறேன். உங்களால முடிஞ்சா, உங்களுக்கு பிடிச்ச ஓடர்ல கமெண்ட் பண்ணிட்டுப் போங்க. மேலும், இவை எல்லாம் நான் பார்த்திருக்கும் படங்கள் மட்டுமே. அப்படியே நான் தவறவிட்ட படங்கள் எதாவது இருந்தா சொல்லிடுங்க. பார்த்துடறேன்.

(படத்தின் தலைப்புகளில் விரிவான விமர்சனத்திற்கு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது)


The Dark Knight Rises

folderடிம் பர்டன் காலத்தில், காமெடியன் ரேஞ்சுக்கு அவதிப்பட்ட பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோவை, தூசு தட்டி மீண்டும் உயிர்கொடுத்த கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன் சீரீஸில் மூன்றாவது படம். என்னைப் பொறுத்தவரையில் இந்த வருஷம் ரொம்ப எதிர்ப்பார்த்திருந்த படம்னா இதுதான்! இரண்டாவது படமான டார்க் நைட் வந்து சக்கைப் போடு போட்டுவிட்டு “ஓட”, அந்தப் படம் வைத்த பாரை தாண்டியாகணுமேன்னு நோலனுக்கு  பி.பீ எகிறிச்சோ என்னமோ, அதில் காட்டிய வித்தை இதில் நிச்சயமாக கொஞ்சம் மிஸ்ஸிங்! ஆனாலும் நிச்சயம் டாப் லிஸ்டில் வரவேண்டிய படம் தான்.

ஆனாலும் $250 மில்லியனைக் கொட்டி படமெடுத்தாலும், ஆனாலும் முதல் நாள் ஸ்க்ரீனிங்கில் நடந்த துப்பாக்கிச்சூடு தியேட்டர் பக்கம் வர்றவங்களை கொஞ்சம் பயமுறுத்தினாலும், த டார்க் நைட் கொடுத்த நம்பிக்கையில் ஆளாளுக்கு தியேட்டர்ல வந்து கொட்டின காசை வைத்து $1000 மில்லியனுக்கு மேல புரட்டிட்டாங்க! இந்த வருஷத்தோட இரண்டாவது அதிகம் வசூலை அள்ளிய படமும் இது தான்.


The Avengers

folderஒரு மாதிரி 2008ல் Iron Man தொடங்கி, 2011ல் Thor, Captain America வரைக்கும் பிட்டு பிட்டா போட்டு கடைசியில மே மாசம் ரிலீஸ் பண்ணிட்டாங்க. பீட்டர் ஜாக்ஸனின் WETA Digital உட்பட 14 கம்பெனிகளின் விஷுவல் எஃபெக்ட்ஸ் புண்ணியத்திலும், சூப்பர்ஹீரோக்களின் காமெடி கலந்த அட்டகாசமான திரைக்கதையும் எல்லாருக்கும் பிடித்துவிட, வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்-பஸ்டர் ஹிட் இதுதான்.

சும்மாவே மார்வல் தனி சூப்பர்ஹீரோ படம்னா கலெக்ஷன் அள்ளும்! அது போதாதுன்னு எல்லாரையும் ஒண்ணா கூட்டு சேர்த்து விட்டா சொல்லவா வேணும்?  இதுவரைக்கும் மொத்தம் $1500 மில்லியனுக்கு கல்லா கட்டிடுச்சு. இதுவரைக்கும் அதிகம் வசூல் பண்ணிய படங்களில் அவதார், டைட்டானிக்கிற்கு பிறகு இது தான். இனி அடுத்ததா, கூட்டணி 2015 படத்திற்கு கூட்டு சேருதாம். முதலாம் பாகத்தில் மார்வலால் கைவிடப்பட்ட ஸ்பைடர்மேனை கூட்டு சேர்த்துக்கலாம்னு பார்த்தா, தற்போது ஸ்பைடர்மேன் படமெடுக்கும் உரிமையை சோனி தன் கைவசம் வைத்திருப்பதால், சோனியும் மார்வலும் கைகுலுக்கி ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஸ்பைடர்மேன் அவெஞ்சர்ஸ் 2ல் வலையைப் பின்னுவார் என எதிர்ப்பார்க்கலாம்!


Chronicle

folderஇந்த வருஷத்தோட ஒரிஜினல் சூப்பர்ஹீரோ கதை என்றால் இது தான்! வழக்கமா சூப்பர் பவர்ஸ் கிடைச்சதும் ஊரைக் காப்பாத்துறேன். ஏரியா தாதாவை உதைக்கிறேன்னு வழக்கமான ஹாலிவுட் பார்முலாவை உடைத்தெறிந்து, “ஆஹா.. மறுபடியும் வழக்கமான சூப்பர்ஹீரோ படம் தானான்னு நாங்க யோசிச்சிட்டு இருக்கும்போதே, அட.. நீங்க பார்க்கிறது ஒரு சூப்பர்வில்லனோட ஆரம்பம்”னு புதுசா ஒரு கதையைக் கொண்டு வந்தது தான் படத்தின் வெற்றிக்கு காரணம்.

வழக்கம்போல ஒருபடம் வந்தா, முட்டையத் தூக்கி ஸ்க்ரீன்ல வீசுற வரைக்கும் சீக்வல்ஸ் தர்றது ஹாலிவுட் பழக்கமாச்சே? அதே போல இந்தப் படத்திற்கும் ஒண்ணு ரெடியாகுதாம். ஆனா படத்தோட ஸ்க்ரிப்ட் ஃபாக்ஸுக்கு இன்னும் பிடிக்காததால், இன்னும் அதைப்பற்றி பேச்சைக் காணோம்!

என் விமர்சனம்இங்கே க்ளிக்கிப் படிங்க!


Looper

folderவருஷத்தோட பெஸ்ட் சயின்ஸ் ஃபிக்ஷன் படம். 12 Monkeys படத்திற்குப் (முதலில் கொஞ்சம் விளங்காதது மாதிரி இருந்தாலும்) பிறகு ரசித்துப் சிறந்த டைம் ட்ராவல் படம்னா இது தான்! வழக்கமான ஒன்லைனர் தான். எதிர்காலத்தில் இருந்து தப்பித்து வரும் ஒருத்தன் நிகழ்காலத்தை சரிசெய்ய முயல்கிறான். அதாவது இங்கே திருத்தினால், அங்கே திருந்தும் என்ற வழமையான கதைக்கரு தான். (எனக்கு இவ்ளோ தான் புரிஞ்சுது. ஹாலிவுட்பாலா படத்தைவிட மோசமா லெக்சர் கொடுத்து தலையை சுத்த வச்சிருப்பார். மேலே தலைப்பில் க்ளிக்கிப் படிங்க) எதுக்கும் கொஞ்சம் முடியை வளர்த்துட்டே படத்தைப் பார்க்க தொடங்குங்க. பிச்சிக்க வசதியா இருக்கும்!

$30 மில்லியன் பட்ஜெட்டில் எடுத்த படம். மொத்த வசூல் இதுவரைக்கும் $160 மில்லியன்.

 


Moonrise Kingdom

folderஇந்த வருடம் இதுவரைக்கும் பார்த்த படங்களில் என்னோட பர்சனல் பேவரைட் இது தான்.. வெஸ் அன்டர்ஸனிடம் இருந்து இன்னுமொரு தனித்துவமான மாஸ்டர் பீஸ்! எட்வர்ட் நோர்டன், ப்ரூஸ் வில்லிஸ் போன்ற பெரிய தலைகளை வைத்திருந்தும் அனைவரையும் ஓரங்கட்டி விட்டு, படம் பார்ப்பவர்களை குழந்தையாக மாற்றி குழந்தைகளின் உலகை அவர்களின் மனப்போக்கிலேயே காட்டக்கூடிய திறமை இருக்குண்ணா, அது அன்டர்ஸனுக்கு மட்டுமே உண்டு. கட்டாயம் ஆஸ்கார் நாமினேஷன் இருக்கும். கிடைத்தால் மகிழ்ச்சி தான்!

 

 

 

 


Safety Not Guaranteed

folderஒவ்வொரு வருஷமும் ஹாலிவுட்டில் ரிலீஸிற்கு நல்ல ஸ்டூடியோ கிடைக்காமல், லிமிடட் இன்டிபெண்டன்ட் ரிலீஸாக வந்து, வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பெட்டிக்குள் அடங்கிவிடும் நல்ல படங்கள் அநேகம். அப்படி ஒரு படம் தான் இந்த Safety Not Guaranteed. டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட படம்போலத் தோன்றினாலும் படம் முக்கியமா ரொமான்ஸ் பக்கம் தான் அதிகம் சாய்ந்திருக்கு. சீக்கிரம் இதைப் பற்றி ஒரு மொக்கையை எழுதிப் போடுறேன்.

 

 

 

 


 

Cabin in the Woods

folder2010லயே வந்திருக்க வேண்டிய படம். முதல்ல... இயக்குனர் ஜொஸ் வீட்டன் எதிர்த்தும் 3Dல தான் வெளியிடணும்னும்.., அப்புறம் கையில துட்டு இல்லைன்னும் எம்.ஜி.எம் சிவப்புக் கொடி காட்டிக் கொண்டிடேயிருக்க.., பெட்டிக்குள்ளயே ரெண்டு வருஷம் அடங்கியிருந்து கடைசில இந்த வருஷம் தான் ரிலீஸாச்சு. ஒவ்வொரு முறையும் ஒரே கதையை தூசு தட்டி தட்டி, எக்ஸ்ட்ராவா “பாடியையும்” (எல்லா மீனிங்கும் உள்ளடங்க) ரத்தத்தையும் மட்டும் காட்டிய ஹாரர் படங்களில் வித்தியாசமான ஒரு முயற்சி. வழக்கமாக ஹாரர் படங்களின் ஒரே ட்ராக்கில் பயணம் செய்து பழகிய மனம், படம் போகும் போக்கைப் பார்த்துவிட்டு ரைட்டு.. அடுத்த காட்சி இப்படித் தான் இருக்கும் என்று யோசிச்சுக் கொண்டிருக்கும்போது அப்படியே கதை யூ டர்ன் அடிச்சு வேற ஒரு ட்விஸ்ட் இருக்கும். படம் முழுக்க இந்த மாதிரி நம்மகூட மைண்ட் கேம்ஸ் விளையாடிப் பார்த்திருப்பாங்க. இதே போல நல்ல கதை கிடைத்தால், பார்ட் 2ஐ எதிர்ப்பார்க்கலாம்னு இயக்குனர் அறிக்கை விட்டிருக்கார்.

 

என் விமர்சனம்இங்கே க்ளிக்கிப் படிங்க!


Skyfall

daniel-craig-new-skyfall-postersஉளவாளி என்ற வசனம் காதுக்குள் சென்றதுமே, மூளையில் “ஜேம்ஸ்பாண்ட்” என்ற வசனம் பளிச்சிடும் அளவிற்கு புகழ்பெற்ற கரெக்டர், ஹாலிவுட் திரைக்குள் வந்து 50 ஆண்டுகள் நிறைவுறுவதைக் கொண்டாடுவதுடன் வெளியான படம். அதான் அங்கிளுக்கு 50 வயசாச்சே? இன்னும் நாட்டைக் காப்பாற்ற உடம்புல தெம்பிருக்குமான்னு (ஃபிகருங்களை கரெக்ட் பண்றதையும் சேர்த்து தான்) எல்லாருக்கும் சந்தேகம் வரும் நேரத்தில் இன்னும் இருக்கு என்று சொல்லிக்கொண்டு களமிறங்கியிருக்கார் ஸாம் மெண்டஸ். இதுவரைக்கும் வந்த பாண்ட் படங்களில் காட்டப்பட்ட ஸ்டீரியோடைப் பாண்ட் கதாபாத்திரத்தை உடைத்து விட்டு மீண்டும் புதிதாக ஒரு ஆரம்பம். இதுவரைக்கும் வந்ததிலேயே இதுதான் பெஸ்ட்டுன்னும் பேசிக்கிறாங்க. மீ டூ ஸே.. நௌ தி இஸ் ஹௌ எ ரீபூட் ஷுட் பீ!

பிரிட்டனில் Avengers, Dark Knight Rises எல்லாத்தையும் பின்தள்ளிவிட்டு, 2012 ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது இதுதான். (அவனுங்க டேஸ்டே தனி!) பிரிட்டன் $158 மில்லியனும், இதில் அமெரிக்கா $224 மில்லியனைக் அள்ளிக் கொடுக்க, மொத்தம் 952 மில்லியன் வசூல் பண்ணிட்டாங்க. வாழ்க ஜேம்ஸ்பாண்ட்!


The Raid: Redemption

folderசத்தமில்லாமல் யூ.எஸ்க்குள் புகுந்து ஒரு கலக்கு கலக்கிய இந்தோனேஷியத் தயாரிப்பு. பார்த்த எல்லாரும் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்த படம். மேலே சொன்ன படங்களோடு ஒப்பிட்டா (Safety Not Guaranteed தவிர்த்து) ரொம்ப சுமாரான வசூல் தான். ஆனா மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்ஷன்னா இப்படித் தான் இருக்கணும்னு சொல்லிக் காட்டிட்டு போய்ட்டாங்க. ஆக்ஷன் படங்கள் பிடிக்கும்னா தவறாம எடுத்துப் பார்த்துவிடுங்க.

என் விமர்சனம்இங்கே க்ளிக்கிப் படிங்க!

 

 

 

 

 


Dredd 3D

DreddBurningFinalStancePosterfull4மேலே சொன்ன Raid Redemption போலவே சேம் கதை. அதில் வில்லன் ஆண்.. இதில் பெண், அது 30 மாடி, இது 200 மாடி.. அது மார்ஷியல் ஆர்ட்ஸ், இது ஹை-டெக் ஷுடிங். இப்படி கொஞ்சம் டிங்கரிங் செய்யப்பட்ட வித்தியாசங்கள் மட்டுமே. ஆனாலும் செம ஸ்டைலிஷ் மேக்கிங்! குறிப்பா அந்த 3D காட்சிகள், அதில் வரும் ஸ்லோ-மோ காட்சிகள் எல்லாம் தியேட்டரில் மட்டுமே அனுபவிக்க முடியும். வரவர மனுஷங்க அஹிம்சாவாதிகளா மாறிட்டு வர்றாங்களோ என்னமோ தெரியல.. படம் பாக்ஸ் ஆபிஸ்ல தோல்வி!

 

 

 

 

 


மற்றபடி ரசித்துப் பார்த்த படங்களில் ஞாபகமிருக்கும்.. குறிப்பிட்டு சொல்லும்படியான படங்கள்னா..

  1. The Hunger Games
  2. 21 Jump Street
  3. Brave
  4. Expendables 2
  5. Premium Rush
  6. American Pie – Reunion
  7. God Bless America
  8. Killer Joe
  9. Step Up Revolution
  10. ParaNorman
  11. The Amazing Spider-Man
  12. The Dictator

இன்னும் Argo, Life of Pie, Django Unchained என்று நிறைய நல்ல படங்கள் கேள்விப்பட்டும், ஹார்ட் டிஸ்கில் வைத்துக் கொண்டிருந்தாலும்... ப்ளாக் பக்கம் வரவே டைமில்லாத போது படம் பார்க்க டைம் லேது?? அவற்றை பார்த்தபின் நெக்ஸ்ட்டு இயர் எழுத ட்ரை பண்றேன்.

என்ன தான் இருந்தாலும் தமிழை மறக்கமுடியுமா? So.. எனக்குப் பிடிச்ச படங்கள் சில. (நோ ஓடர். பார்த்த மொத்தப் தமிழ்ப் படங்களில் 70 சதவீதம் இதுக்குள்ள அடங்கும்)

  1. பீட்ஸா
  2. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்
  3. சுந்தரபாண்டியன்
  4. இங்க்லிஷ் விங்க்லிஷ்
  5. ஒரு கல் ஒரு கண்ணாடி
  6. துப்பாக்கி
  7. நான்
  8. நான் ஈ
  9. அட்டக்கத்தி
  10. வழக்கு எண் 18/9
  11. ஆரோகணம்
  12. தடையறத் தாக்க

சில எக்ஸாம்ஸ், வேலை பிஸி என்று வாழ்க்கை ரொம்ப பரபரப்பா போய்ட்டிருக்கு. கொஞ்சம் டைம் கிடைக்கும்போது படம் பார்த்துக்கிறது மட்டும் தான். ப்ளாக்கர் பக்கம் வந்தா, திரும்ப ஜகா வாங்கிக்க மனசு வராதுங்கறதால எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் என்ட்ரியாகிக் கொள்ளுவமேன்னு இருக்கேன். எப்படியும் ஜனவரி கடைசி வரைக்கும் கொஞ்சம் கஷ்டம் தான்! அதுவரைக்கும் சந்தோஷமா இருங்கோ!!

 

ஆங்…. Happy New Year 2013!!!!

இந்த வருஷமும் நல்ல நல்ல படங்களா பாருங்க.. சந்தோஷமா இருங்க!

ஹாலிவுட்ரசிகன்

The Raid: Redemption (2011)

folder

கொஞ்ச நாளாகவே நம்ம நட்பு வட்டாரத்தின் பேச்சுக்களில் மிகவும் அடிபட்ட படம் இது. பார்த்தவங்களும் ஆளாளுக்கு பில்டப்பை கொடுத்து ஹைப்பை ஏற்றிவிட்டு இருந்தாங்க. பொதுவா நமக்கு இந்த “கிழக்காசிய திரைப்படங்கள்” அலர்ஜிக் என்பதால் டச் பண்ணாமலே வைத்திருந்தேன். கடைசில “இன்னுமாடா பார்க்கல”ன்னு கேவலமா திட்டு வாங்கி, சே..இவன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்கவேண்டியதாப் போச்சேன்னு ஒரு ரோஷத்துல படத்தை எடுத்துப் பார்த்தா…

thumb4

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி பரபர படம் ஒன்று பார்த்து… எங்கேயும் யோசிக்க விடல. அட…கண்ணிமைக்கக் கூட நேரமில்லை. அவ்வளவு வேகம், பரபரப்பு!! அவனவன் கொடுத்த பில்டப்புக்கு ஒரு குறையும் இல்லாத அளவுக்கு ஆக்ஷன், ஆக்ஷன், ஆக்ஷன் மட்டும் தான்! இந்த வருஷத்தில் நான் பார்த்த பெஸ்ட் ஆக்ஷன்-வயலன்ஸ் மூவி இதுன்னு கண்ணை மூடிட்டு சொல்லலாம்.. கடைசியா எழுதின Expendables 2 நெருங்கிக் கூட வரமுடியாது போங்க..!

மிக மிக சிம்பிளான கதை. அதாவது படத்தோட டைட்டில் தான் கதையே. ரெய்ட்!! ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு ஊரில் உள்ள ஏதோ ஒரு அபார்ட்மெண்டை அந்த ஊரிலுள்ள எல்லா முக்கிய ரவுடிஸும், அவர்களின் தலைவனும் ஹெட் குவார்ட்டர்ஸா பயன்படுத்துறாங்க. அவங்க கட்டுப்பாட்டில் சில குடும்பங்களும் குடியிருக்கு. இந்தக் கும்பலை கைது பண்ணுவதற்காக ஒரு போலீஸ் யுனிட் அந்தக் கோட்டைக்குள் சத்தமில்லாமல் ரெயிட் போகுது. அவர்களின் என்ட்ரி அந்த கேங்குக்கு தெரியவர என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.

எளிமையான கதையை கொண்ட கதைக் களம், கரெக்டர் டெவலப்மென்ட்டுக்கெல்லாம் மிகவும் மெனக்கெட வைக்காமல், அதிக நேரத்தை ஆக்ஷன் சீக்வன்ஸுக்கு செலவளிக்க வைத்திருக்கிறது. இதுவொரு முக்கிய ப்ளஸ் பாயிண்ட். முதலில் மெதுவாக நகர ஆரம்பிக்கும் படம், ஒரு 15 நிமிடங்களின் பின் ரவுடிக் கும்பலுக்கு இவர்கள் வந்திருக்கும் தகவல் தெரியவந்த பின் தான் சூடு பிடிக்கிறது…அதன் பின் படம் முடியும் வரை நான்-ஸ்டாப் ஆக்ஷன் தான்.

ஆரம்பத்தில் ஏதோ Call of Dutyய படமாக பார்க்கிற மாதிரி வெறும் துப்பாக்கி மழை. துப்பாக்கில புல்லட் தீர்ந்துபோன பிறகு தான் படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பக்கம் திரும்புகிறது. இதில் புதுசா பென்காக் சிலாட் என்றொரு இந்தோனேஷியன் ஃபைடிங் ஸ்டைல் தான் பாவிச்சிருக்காங்கலாம். ஆக்ஷன் விரும்பிகள் தவறவிடக்கூடாத.., படத்தின் அழகாக கொரியோக்ராஃபி செய்யப்பட்ட மொமெண்ட்ஸ் இதன் பின் தான் இருக்கின்றது. மிஸ் பண்ணிடாதீங்க!

thumb5

அதிலும் கடைசி ஃபைட்டிங் Super Awesome!! எனக்கு படத்தில் பிடித்த கரெக்டர்ஸ் ஒன்று ஹீரோ..மற்றது அந்த Mad Dog கரெக்டர். அதிலும் இந்த Mad Dog தன்னோட சின்ன உருவத்தை வைத்துக் கொண்டு க்ளைமேக்ஸ்ல போடுற ஆட்டம் இருக்கே?? யப்பா! தமிழ்ல கடுகு சிறிசானாலும்னு (மீதி மறந்துபோச்சு) ஏதோ பழமொழி இருக்கே?..உண்மை தான்! சாம்பிள் பார்க்கவேண்டிவங்க இந்த வீடியோவ பார்த்துக்கோங்க..

படத்தோட காமெரா பற்றியும் சொல்லியேத் தீரணும். வழக்கம்போல ஒரே இடத்தில் இல்லாமல், ஷுடிங் காட்சிகளிலும் சரி, ஃபைடிங் காட்சிகளிலும் சரி … காமெரா சுற்றி சுற்றி படமெடுக்குது. சில இடங்களில் ஃபைட்டிங் கொரியோக்ராபிக்கு ஏற்றாற்போல காமெராவும் அசைவது, துப்பாக்கிச் சூடுகளின் போது shaking-mode, நடிகர்களுடன் சேர்ந்து காமெராவும் நகர்வது எல்லாம் அருமை!

இதுவொரு இந்தோனேஷியத் தயாரிப்புங்கறதால வழக்கம்போல யாருக்கும் தெரியாமல், சத்தமின்றி டொரன்டோ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு, பின் பார்த்தவங்க எல்லாரும் “ஆகா ஓகோ”ன்னு புகழ் பாட, உடனே நம்ம சோனி பிக்சர்ஸ் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கி வச்சிட்டாங்க. அப்புறம் வைட் ரிலீஸ் பண்ணியதும், 4 மில்லியன் Smile வசூலில் எடுத்ததும் பாக்ஸ் ஆபிஸ் வரலாறு! நமக்கு அது தேவையில்லாத சப்ஜெக்ட்..

நான் சொல்ல வர்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்.. ஆக்ஷன் விரும்பிகள் மிஸ் பண்ணாம பார்க்கவேண்டிய படம்! ஆனா, எல்லாருக்கும் படம் பிடிக்குமோ தெரியாது. கதை, கதாபாத்திரங்கள்னு ஆராய்ச்சி பண்ணாம ஒரு பரபரன்னு ஒரு என்டர்டெயினர் வேணும்னா கண்ணை மூடிட்டு (படம் பார்க்கும்போது மறக்காம தொறந்துடுங்க…மொக்கை…மொக்கை) எடுத்துப் பாருங்க. (வழக்கமா எல்லாப் படத்துக்கும் சொல்றது தான்.. இது கொஞ்சம் ஸ்பெஷல் ரெகமெண்டேஷன் Smile)

The Raid: Redemption (2011) on IMDb

ட்ரெயிலர்

எக்ஸ்ட்ரா பிட்டு

போன சனிக்கிழமை தான் தியேட்டர்ல (சவோய்) Dredd 3D ரிலீஸ் பண்ணியிருந்தாங்க.. கதை, வில்லன்னு இரண்டு படத்துக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள்! ஆனா என்ன.. Dreddல் வெறும் துப்பாக்கி, கிரனேட் மட்டுமே.. அதனாலோ என்னமோ எனக்கு அதை விட The Raid கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருந்தா மாதிரி ஒரு ஃபீலிங்.. படத்தில் Mad Dog சொல்வது போல “pulling the trigger is like ordering takeout. The real satisfaction in killing someone for him is found in a duel to the death with only the human body for a weapon.”  ஆனாலும் 3Dயில் Dreddஐ பார்ப்பது நிச்சயம் ஒரு சூப்பர்ப் அனுபவமாக இருக்கும்! அந்த ஸ்லோ மோஷன் காட்சிகள் எல்லாம் 3Dயில் பார்க்கும்போது.. வாவ்!!! முடிஞ்சா தியேட்டர்ல பார்த்துக்கோங்க.. Smile

Poltergeist (1982)

folder

நடுராத்திரி….அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஓடிக் கொண்டிருந்த டிவி திடீரென்று ஸ்டாடிக்காக மாறுகிறது.. மேல்மாடியில் உறங்கிக் கொண்டிருந்த 5 வயதான கரோல் ஆன் திடீரென்று உறக்கத்திலிருந்து எழுந்து கீழே வருகிறாள். டிவியின் முன் அமர்ந்து டிவியை நோக்கி பேசத் தொடங்குகிறாள்..

ஹலோ…யார் நீ?? சத்தமாக பேசு.. நீ பேசுவது சரியாக கேட்கவில்லை

இவளது சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் எழுந்து வந்து இவளைச் சுற்றி நின்று பார்க்கின்றனர். இவள் தனது கைகளை டிவியின் மேல் பதிக்கிறாள். (நீ என்னதான் தலைகீழா நின்னாலும் நாங்க படம் பார்க்கப் போறதில்லைங்கிறவங்க மேலே படத்தின் போஸ்டரைப் பார்த்துக் கொள்ளவும்)

இது தான் போல்டகெயிஸ்ட் படத்தின் ஆரம்பக் காட்சி!!


thumb4

படம் வந்த 1980களின் காலக்கட்டத்தில் இருந்த அமெரிக்காவின் சாதாரண குடும்பங்களில் ஒன்று.. ரியல் எஸ்டேட் பிஸினஸில் இருக்கும் தந்தை ஸ்டீவ், ஹவுஸ்வைப் டயான், டேனா, ரொபி, கரோல் என மூன்று குழந்தைகள் என்று வாழ்க்கை ஸ்மூத்தாக நகர்கிறது.

மீண்டும் மேலே சொன்ன கூறிய சம்பவம் போல ஒன்று கரோலுக்கு நிகழ, இச்சமயம் டிவியில் இருந்து ஒரு உருவம் போல ஒன்று கிளம்பி சுவருக்குள் மறைகிறது. இதே நேரம் வீடும் ஒரு சின்ன பூமியதிர்ச்சிக்குள்ளானது போல அதிர்கிறது. திடுக்கிட்டு எழும் குடும்பத்தினரிடம் கரோல் கூறுவது “They are here”.. (மீண்டும் போஸ்டர்)

வீட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் வைக்கும் தளபாடங்கள் தானாக நகர்வது,  போன்ற சில அமானுஷ்ய நிகழ்வுகள் அதன்பின் நடக்கத் தொடங்குகின்றன. வீட்டுக்காரர்களும் விபரீதமாக ஒன்றும் நடக்காததால் அதை ஏதோ ஜாலியான விளையாட்டு போல எடுத்துக் கொள்கின்றார்கள்.

திடீரென்று ஒருநாள் இரவு ரொபி வீட்டின் அருகிலிருக்கும் மரத்தால் தாக்கப்படுகிறான். இதே நேரம் பெற்றோர்கள் ரொபியைக் காப்பாற்ற முயலும்போது கரோல் ஆன் அவளின் ரூமிலிருக்கும் ஒரு போர்ட்டல் வழியாக கடத்தப்படுகிறாள். அதன் பின் வீட்டில் அமானுஷ்ய சக்திகளின் அட்டகாசம் இன்னும் விபரீதமாகிறது.

கரோல் ஏன் கடத்தப்பட்டாள்? அதன் பின் எவ்வாறு அவளை மீட்டார்கள் என்பதை படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.


thumb2

பொதுவாக ஹாரர் படங்களில் இரண்டு வகையான படங்கள் உண்டு.. முதலாவது வகை, zombies, பேய்கள், ஹாக் அன்ட் ஸ்லாஷ் வகையறா (Cabin in the Woods,The Thing , Saw Series) என்று ரத்தம் தெறிக்கும் காட்சிகளுடன் பார்வையாளர்களை மிரட்டும் படங்கள். இரண்டாவது வகை.. பேய், ரத்தம் என்று எதையும் காட்டாமல் சவுண்ட் எஃபெக்ட், காட்சியமைப்பு என்று பார்வையாளர்களை மிரட்டுவது. (Paranormal Activity) போன்ற படங்கள் இந்த வகை.. இந்தப் படமும் இரண்டாவது வகை போலத் தான் எனக்குத் தெரியுது.

இயக்குனர் டாப் ஹுப்பர். இயக்கம் இவர் தான் என்றாலும், முழுக்க முழுக்க மேற்பார்வை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான். அதிலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்ததும், முழு கன்ட்ரோலும் ஸ்பீல்பெர்க் பொறுப்பெடுத்துக் கொண்டார். படத்தோட விஷுவல் மற்றும் மியுசிக் பற்றிச் சொல்லியே ஆகணும். மாறி மாறி இந்தப் படத்துடன் E.T படத்தின் வேலைகளையும் பார்த்துக்கொண்ட ஸ்பீல்பெர்க் புண்ணியத்துல சில இடங்களில் ஃபுல்-எஃபெக்ட்டுடன் பார்த்தால் ஹார்ட் பீட் எகிறும்! இப்போ பயங்கர எஃபெக்ட்டுகளுடன் படம் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு சாதாரணமா தெரிந்தாலும், அந்தக் காலத்து ஆட்களுக்கு இது நிச்சயம் ஒரு பயங்கர அனுபவமா இருந்திருக்கணும். 1982 ஆஸ்கரில் Best Sound Editing Effects, Best Original Score, and Best Visual Effects போன்ற பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. கடைசில ஸ்பீல்பெர்க்கின் E.Tயிடமே தோற்றுப் போனது பரிதாபமே!

நிறைய ஹாரர் படங்களை குடும்பத்துடன் பார்க்கமுடியாது…MPAA புண்ணியத்துல நம்ம படத்துக்கு எப்படியும் R ரேடிங் தான் என்ற எண்ணத்துல, டைரக்டர்களும் ஆளாளுக்கு பிட்டு பிட்டா போட்டுவிடுவாங்க.. படம் ரிலீஸான நேரத்தில் இந்தப் படத்திற்கும் R ரேடிங் தான் கிடைத்தது. ஆனா இந்த நியூஸ் கேட்டதும் ஸ்பீல்பெர்க் கடுப்பாகி அவரோட பவரை MPAA டீமுக்கு காட்ட, அவங்களும் பம்மிக் கொண்டே போனாப் போகுதுன்னு PG ரேடிங்கை கொடுத்துவிட்டாங்க. எனக்குத் தெரிந்து PG ரேடிங் கிடைத்த பேய்ப்படம் இதுவாத் தான் இருக்கும்.. ஆனா சில இடங்களைப் பார்க்கும்போது R ரேடிங் கொடுத்ததில் தப்பில்லை என்று தான் தோணுது. குறிப்பா ஒரு சீனில் பேய் நடவடிக்கைகளை கண்கானிக்க வரும் ஒருவன், சதை எல்லாம் உருகி சிங்க்கில் கொட்டுவது போன்ற காட்சிகளெல்லாம் PG ரேடிங்கிற்கு நிச்சயம் ஒத்து வராது! (தொடைநடுங்கி MPAA வாழ்க! வளர்க!)

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கென்னடான்னா.. Insidious படம் ஞாபகத்திற்கு வந்தது. அந்த கதையில் கொஞ்சம் Astral Walking அது இதுன்னு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் போட்டு வைத்தாலும், இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கதை போலத் தான்! யாராவது?

போன மாசமே போட்டிருக்கணும்.. வழக்கம் போல சோம்பேறித்தனமும், ஹாலோவீன் கேன்டி சாப்பிட்டு டயர்டாகிட்டதாலும், முக்கியமா.. அப்போ போட்டா, இந்த மாசத்துக்கு போஸ்ட் இல்லாமல் போய்விடுமோங்கற ஒரு எண்ணத்தினாலயும் இன்னிக்கு வருது!

Poltergeist (1982) on IMDb


ட்ரெயிலர்

The Expendables 2 (2012)

folder

ஸ்டாலோன் – தம்பிங்களா … நம் முதல் படம் கலெக்ஷன்ல பிச்சிக்கிச்சு.. திரும்பவும் கூட்டு சேர்றோம். பணத்த அள்ளுறோம்.

அண்ணனின் விழுதுகள்- அண்ணே … எல்லாம் சரி,, டைரக்ஷன் மட்டும் கையில எடுக்காதீங்கண்ணே. நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க.

ஸ்டாலோன் – சரிப்பா … இந்த முறை டைரக்ஷனை உண்மையான டைரக்டர் ஒருத்தர் பொறுப்புல விட்டுர்றேன். அப்படியே இந்தமுறை JCVDய கூட்டு சேர்க்கிறோம். டார்கெட் ஆடியன்ஸ் கொஞ்சம் அதிகமாவாங்கல்ல?

விழுதுகள் – அண்ணாச்சி…கதை என்னா?

ஸ்டாலோன் – கதையா? நம்மகிட்டயா? தம்பி பேசாம ஒரு அட்டைப் பெட்டி செட் அஞ்சு… எக்ஸ்ப்ளோசிவ்ஸ் கொஞ்சூண்டு மட்டும் எடுத்து வச்சிக்கோங்க. ஆங் … முக்கியமா நம்ம பழைய டப்பா ப்ளேன்! அசத்திடுவோம்!!

பார்ட் 2 எடுக்கலாம்னு முடிவு செஞ்சப்போ, இப்படித் தான் பேசி வச்சிருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். வழக்கமா இந்த மாதிரிப் படங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸை டார்கெட் பண்ணித் தான் எடுக்கப்படும். அதாகப்பட்டது,, படத்துல வர்ற ஹீரோ கரெக்டர் தவிர, மற்றைய living & non-living things அனைத்தும் வெடித்துச் சிதறணும்…காதுச் சவ்வு கிழியிஞ்சு ரத்தம் வர்ற மட்டும் ‘டமால் டுமீல்’ சத்தம் கேட்கணும்… சம்பந்தம் இருக்கோ இல்லையோ, அடிக்கடி ஏதாச்சு பஞ்ச் வசனம் அடிச்சுவிடணும்! சுருக்கமா சொல்றதுன்னா, நம்ம தெலுங்குப் ரசிகர்கள் போன்ற கூட்டம். கதையே இல்லண்ணாலும் பரவாயில்லை..மேலே சொன்ன அத்தனை மேட்டரும் இருந்தா அவங்களுக்கு வருஷத்தின் சூப்பர் டூப்பர் படம் இது தான்!!

thumb3


கதையா? ஹி ஹி … அதான் மேலயே சொன்னேன்ல? இருந்தாலும் பதிவின் நீளம் கருதி…Smile

பர்ஸ்ட்டு எபிசோட் - படத்தின் ஆரம்பமே சரவெடி போங்க….ஏதோ நேபாளத்துல இருக்கிற ஒரு சிறைக்குள்ள இருக்கிற ஆர்னல்ட காப்பாத்துறதுக்கு நம்ம 80s யூத்ஸ்,, 2000s அங்கிள்மாரெல்லாம் கிளம்புறாங்க. ஒரு செங்கல் … சாரி … ஒரு அட்டைப் பெட்டி விடாம அவ்வளத்தையும் பிரிச்சு மேஞ்சு அவரை காப்பாத்திடுறாங்க. அவரும் நெக்ஸ்ட்டு க்ளைமேக்ஸ்ல மீட் பண்றேன்னு சொல்லிட்டு எஸ்ஸாகிடுறாரு.

thumb5

நெக்ஸ்ட்டு எபிசோட் – அண்ணன் ப்ரூஸ் வில்லிஸ் வர்றாரு. முதல் பார்ட்ல பண்ணின சேதாரத்துக்கு எல்லாம் செய்கூலியா ஒரு மிஷனை செய்துத் தரணும்னு சொல்றாரு. அதாவது (வழக்கம்போலத் தான்) யூரோப்ல எங்கேயோ ஒரு மூலையில ஒளிச்சு வச்சிருக்கிற.., கெட்டவங்க கையில் சிக்கினால் “உலகையே அழிக்கக் கூடிய அளவு” ப்ளூட்டோனியத்தை எடுத்து வரணும். ஸ்டாலோன் வேணாம் வேணாம்னு (நாமளும் தான்) கதறியும் கேட்காம ஃப்ரீ ஆஃபரா ஒரு அட்டு சைனீஸ் பிகரையும் கூடவே அனுப்புறாரு.

எல்லாரும் யூரோப்க்கு பறக்கிராங்க. அங்க அந்த சைனீஸ் பொண்ணு ரெண்டு பட்டனை தட்டினதும், பெரிசா 2 நிமிஷத்துக்கொருமுறை ரீசேட் ஆகும் அதா இதான்னு பில்டப் கொடுத்த லாக்கர் திறந்துக்குது. எடுத்துட்டு வெளிய வர்றாங்க. அங்க என்ட்ரியாகுறாரு, நம்ம வில்லன் JCVD. வந்து நோகாம ‘கத்திமுனையில்’ நோம்பு கும்பிட்டு ப்ளூப்ரிண்ட வாங்கிட்டு பறந்திடுறாரு. போகும் போது கையரிக்குதேன்னு டீம்ல ஒருத்தன வேற போட்டுத் தள்ளிட்டு வேற போறாரு.

thumb1

அவ்வளவு தான் .. ஸ்டாலோன் செம்ம காண்டாகி….”டேய் வில்லன்!! (வில்லன் பேரே அது தான் Smile)..மவனே நீ செத்தடான்னு” கௌம்புறார். கூடவே அல்லக்கை நொல்லக்கை எல்லாம் போகுது. அப்புறம் க்ளைமேக்ஸ்ல ப்ரூஸ் வில்லிஸ், ஆரம்பத்தில் எஸ்ஸாகின அர்னால்ட், ப்ரூஸ், ஸ்பெஷல் கெஸ்ட் ச்சக் நொரிஸ் உதவியுடன் வழக்கம் போல வில்லனை அடிச்சு, புழிஞ்சு, காயப்போட்டு ப்ளூட்டோனியத்தையும், அதைத் எடுப்பதற்காக அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களையும் மீட்கிறார். எல்லாம் சுபம்!! (இந்த கடைசி மேட்டரை நம்ம டாகுட்டர் குருவி படத்துல வைரம், வைரம் தோண்டும் தொழிலாளர்கள் எனக் கையாண்டிருந்தார்னு நினைக்கிறேன். அரைகுறையா பார்த்தது. சரியா??)


கிட்டத்தட்ட The Avengersல எப்படி எல்லா சூப்பர்ஹீரோஸும் கூட்டு சேர்ந்தாங்களோ…அந்த மாதிரி தான் The Expendables முதல் பார்ட் வந்தப்போ, நம்ம எல்லா ஆக்ஷன்ஹீரோஸும் கூட்டு சேர்றாங்களேன்னு நம்பிக்கைல நானும் வாயப் பொளந்துட்டு எப்படா ஒரிஜினல் ப்ரிண்ட் வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் (கடைசில இப்புடி கவுத்திட்டிங்களேன்னு அதே வாயப் பொளந்ததும் வேற எபிசோட்) . அதுனாலயே இதை கொஞ்சம் ஆர்வமில்லாமல் தான் பார்த்தேன்.

thumb3

சுருக்கமா சொல்றதுன்னா…படத்துல கடைசிக் கட்டத்துல ஒரு டயலாக் வரும். ஸ்டாலோன் சொல்லுவாரு … “That plane belongs in a museum”. அதுக்கு ஆர்னால்ட் பஞ்ச் ரிப்ளை கொடுப்பாரு “We all do”ன்னு. உண்மை தான். இதை வாயப் பொளந்துட்டு பார்த்தா பல வருஷமா நீங்க ஆக்ஷன் படமே பார்த்ததில்லைன்னு அர்த்தம். 1980களிலிருந்து ஆக்ஷன் படத்திற்கென்னு என்ன பார்முலாவோ, அதை கொஞ்சமும் அச்சுப் பிசகாமல் ஃபாலோ பண்ணியிருக்காங்க.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது…புது டைரக்டர போட்டாலும் போட்டாங்க. சும்மா சீன் டூ சீன் பின்னிட்டாரு. ஏதோ வீடீயோ கேம் கணக்கா…மனுஷ உடம்பெல்லாம் மடங்குது..சிதறுது…ரத்தம் தெறிக்குது. ஆரம்பத்துல ஜெட்லியோட சூப்பர் ஃபைட் சீக்வன்ஸ் ஒண்ணும் இடையில் ஸ்டேடமின் ஃபைட் ஒண்ணும் இருக்கு. செம்ம கோரியோக்ராஃபி.!!

ஸ்டாலோனுக்கு இந்த முறை டைரக்டர் ப்ரெஷர் குறைஞ்சிட்டதால சும்மா கெத்தா கலக்கியிருக்கார். இந்த முறை எல்லா கேரக்டரும் கொஞ்சம் காமெடி பக்கம் சாய்ந்திருக்காங்க. ஆனாலும் எக்ஸ்ப்ரஷன்ஸ் = 0 .. புது வரவா லியம் ஹெம்ஸ்வெர்த் (Thor, Cabin in the Woodsல் வரும் க்றிஸ் ஹெம்வெர்த்தின் தம்பி). அவரோட ரோலும் இந்தப் படத்தோட ஓவர்.

thumb8

அப்புறம் நம்ம ஸ்பெஷல் கெஸ்ட் ச்சக் நொரிஸ் என்ட்ரி சூப்பர்!! தமிழ்ல எப்படி ரஜினிகாந்துக்கு ஜோக்ஸ் இருக்கோ, இங்கிலிஷ்ல அண்ணனுக்கு அதே அதே (ஹாலிவுட் பவர்ஸ்டார்??)… அதிலும் அவருக்கு அட்டகாசமா Dollars Trilogy பேக்ரவுண்ட் மியுசிக் எல்லாம் போட்டு பின்னிட்டாங்க.

நீதி, நேர்மை, நியாயம் … ஏதாச்சு கருத்தாழமுள்ள மெசேஜ் சொல்றது, இதெல்லாம் எதுவுமேயில்லை. 100% என்டர்டெயினர் தான். பெரிய பாப்கோர்ன் பாக்கெட் ஒண்ணு வாங்கி வச்சிட்டு அத மெதுவா ரசித்து மென்னுகிட்டே படம் பார்த்திங்கண்ணா, படத்துல லாஜிக் எல்லாம் யோசிக்கத் தோணாது. சாப்பிட்டு முடிய, படமும் முடிய … பாப்கோர்ன் சூப்பர்ன்னு (மறந்துட்டேன் … படமும் தான்)சொல்லிட்டு எழுந்திரிக்கலாம்!! Winking smile

இதுல இந்தப் படமும் கலெக்ஷன்ல வஞ்சம் பண்ணாததால் … அண்ணன் The Expendables 3க்கும் ஸ்க்ரிப்ட் ரெடி பண்றாப்ல. இந்த முறை Clint Eastwood, Wesley Snipes, Harrison Ford, Nicholas Cage எல்லாரையும் கேட்டுட்டு இருக்காராம். ஹ்ம்…எந்தத் தாத்தா வந்து நம்ம தாலிய அறுக்கப் போறாரோ தெரியல…அதுக்குள்ள உலகம் அழிஞ்சிடணும்..ஆண்டவா!!!

The Expendables 2 (2012) on IMDb

ட்ரெயிலர்

English Vinglish (2012)

English Vinglish Movie Tamil Version Posters Mycineworld Com
தியேட்டர்ல படத்தப் போட்டு மாசக்கணக்காச்சு… எல்லா முக்கிய விமர்சகர்களும் ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர்னு இந்தப் படத்தைப் பற்றி எழுதித் தள்ளிட்டாங்க. எதுக்கு ஆறிப் போன டீய எடுத்து சூடு பாக்குறன்னு பழகின பாவத்திற்காக என்னோட ப்ளாக்கை எட்டிப்பார்த்துவிட்டு போகும் வழக்கமான ரசிகர்கள் (5-6 பேர்) கேட்கலாம். அதுவுமில்லாம இந்த தமிழ் சினிமால்லாம் நம்ம ஏரியா சப்ஜெக்டே இல்ல.

சும்மா ஒரு ட்ரையல் முயற்சி தான்…பிடிச்சிருந்தா படிங்க. இல்லாட்டி அடுத்த ஹாலிவுட் பதிவில் சந்திக்கலாம்.


English-Vinglish-08

கதைன்னு சொல்லப்போனா ரொம்ம்ம்ப சிம்பிள்... ஆங்கிலம் பேசத் தெரியாததால் கிண்டலடித்துக் கொண்டும், பாடசாலைக்கு அழைத்துச் செல்லவும் தயங்கும் பிள்ளைகள், ருசியான சமையலுக்காகவும் இரவு நேர நெருக்கங்களுக்கும் மட்டும் நெருங்கும் பிஸியான கணவன். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், ஒரு உப்புசப்பற்ற வாழ்க்கையில் தனக்கென்று ஒரு சிறு அங்கீகாரத்தையும், அன்பையும் எதிர்ப்பார்க்கும் ஆங்கிலம் பேசத் தெரியாத, லட்டு செய்வதில் எக்ஸ்பர்ட்டான ஹவுஸ் வைஃப் ஷஷி.

திடீரென்று அக்காப் பொண்ணு கல்யாணத்திற்காக உதவிக்கு அமெரிக்கா வரச் சொல்லி ஃபோன் கால் வர, தனியாக நியு-யார்க் செல்லவேண்டிய நிலையில் ஷஷி. ஆங்கிலம் தெரியாமல் எப்படிச் சமாளிக்கப்போறோமோ என்று பயந்து கொண்டு செல்லும் ஷஷி, அங்கு சந்திக்கும் சில அவமானங்களுக்குப் பிறகு தானும் ஆங்கிலம் பேசிக் காட்டுவேன் என்று முடிவு கட்டிக் கொண்டு 4 வார ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ் ஒன்றில் சேருகிறார். பின் என்ன நடந்தது என்பது யூகிக்கக்கூடியது தான் என்றாலும் படத்தை சொன்ன விதத்தில் பாராட்டைப் பெறுகிறார் இயக்குனர்.


EV

படத்தின் வெற்றிக்கு யார் காரணமென்று கேட்டால் யோசிக்காமல் பட்டென்று விரலை ஸ்ரீதேவியின் பக்கம் சுட்டலாம். முழுப் படத்தையும் தாங்குபவர் இவர் தான். எனக்குப் மிகவும் பிடித்த பழைய…சீ சீ தப்பு தப்பு… எவர்க்ரீன் நடிகைகளில் ஒருவர் (மற்றது ராதா, நதியா, ஷாலினி). என்ன…முகம் கொஞ்சம் காஸ்மெடிக்ஸ் செய்து கொண்டது போலத் தெரிந்தாலும், வயது அரைச்சதத்திற்கு நெருங்குகிறது என்று கூற முடியாத அளவிற்கு மெயிண்டெய்ன் பண்ணிட்டு வர்றாங்க மேடம். பாடி மெயின்டெயினென்ஸ்ல ஹாலிவுட்டுக்கு டாம் க்ரூஸ்னா, தமிழ் சினிமாவுக்கு ஸ்ரீதேவியும், நதியாவும் தான் போலயிருக்கு! (ஆம்பளைங்களே வேஸ்ட்டு)

சினிமாவில் ரிட்டர்னாவதற்கு ஸ்ரீதேவிக்கு இதை விடச் சிறந்த ரோல் கிடைக்காது. ஷஷி கதாபாத்திரம் முழுக்க முழுக்க இவரையே மனதில் வைத்துக் கொண்டு செதுக்கியது போலத் தெரிகிறது. வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவு படம் மனதுக்கு ஒட்டியிருக்குமோ தெரியாது… பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். பாடி லேங்குவேஜிலும் சரி, ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸிலும் சரி … இவருக்கு நடிப்பின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கிறது. அதிலும் “என் பொண்டாட்டி லட்டு பிடிப்பதற்காகவே பொறந்தவ”ன்னு கணவன் சொல்லும்போது விரக்தியாக சிரிக்கும் இடமாகட்டும், ஆங்கிலம் தெரியாமல் காபி ஷாப்பில் தடுமாறும் இடமாகட்டும், மகளிடம் திட்டு வாங்கும்போது கண் கலங்கும் இடமாகட்டும், ஃப்ரெஞ்ச்காரனுடன் நெருக்கமாகும் ஒரு காட்சியில் தடுமாறுவது என்று பல இடங்களில் அம்மணியின் நடிப்பு அட்டகாசம். இதைப் போல வயதிற்கேற்ற யதார்த்தமான கதாபாத்திரங்களை செலக்ட் செய்தால் இன்னொரு ரவுண்ட் வருவார் என்பது நிச்சயம்!!

ஆங் … நம்ம தல ஒரு ஐந்து நிமிட சீனுக்கு என்ட்ரிய கொடுத்துவிட்டு போகிறார். அந்த சீன் அல்டிமேட்!!! முழு சீனுக்கும் தியேட்டர் ஃபுல்லா விசில், அப்ளாஸ் தான். அதில் “உங்கள் அமெரிக்க வருகையின் காரணம் என்ன?” என்று immigration அதிகாரி கேட்கும்போது “உங்க நாட்டின் பொருளாதாரத்தை டெவலப் செய்ய” என்று டயலாக் இடம் எல்லாம் அட்டகாசம்! அலட்டிக் கொள்ளாமல் அழகாக கெஸ்ட் ரோலை செய்துவிட்டு போய்விடுகிறார்.

19mp_Sridevi3_jpg_1182023g

மற்றபடி படத்தில் வரும் எல்லாரும் அவரவர் பங்குக்கு கலக்குகிறார்கள் முக்கியமா அந்த இங்கிலிஷ் க்ளாஸ் ஸ்டூடன்ட்ஸ். கொஞ்சம் போரடிக்கப்போகுது என்பது போல் இருக்கும் படம், ஷஷி நியு-யோர்க் வந்து அந்த ஆங்கில கோர்ஸில் சேர்ந்ததும் தான் மீண்டும் காமெடியோடு சுவாரஸ்யம் பிடிக்கிறது. மற்றபடி ஸ்ரீதேவியின் அக்காவின் இரண்டாவது மகளாக வரும் பொண்ணு (வேறு ஏதோ தமிழ்ப்படத்தில் பார்த்த ஞாபகம்) செம க்யுட்…அவளுக்கு ஏற்ற மாதிரியே அழகான ட்ரெஸிங்ஸும் கிடைக்க, ஸ்ரீதேவிக்கு அடுத்து இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்பது (இதற்காக நான் ஆண்டிஹீரோன்னு நினைச்சிக்க வேண்டாங்க…நாங்களும் யூத்து தான்) இவ தான்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தங்களுக்கான பணியை  நிறைவாகவும் அளவாகவும்  நிறைவேற்றியுள்ளன என்று தான் கூறவேண்டும். குறை கூறுமளவிற்கு இல்லை. கிட்டத்தட்ட 2மணி 15நிமிடம் ஓடும் படம்…எங்கும் போரடிக்கவில்லை, (மாற்றான் ஸ்கிப் பண்ண இன்னொரு காரணம் 3 மணி ரன்டைம்…யப்பா! பேக் வெந்துடும்) கதை இப்படித் தான் போகும் என்று தெரிந்தாலும். அதிலும் க்ளைமேக்ஸ் காட்சியில் திடீரென்று சத்யராஜ், ரஜினிகாந்த் மாதிரி டப்பு டுப்பு இங்கிலிஷ் பேசாமல், அழகாக, நிதானமாக, தட்டுத் தடுமாறி சாதாரணமாக ஆங்கிலம் பேசி பாராட்டுவது படத்தை பலருக்கு இன்னும் ரசிக்க வைத்தது.

மாற்றானுக்கு போகலாம்னு நினைத்துவிட்டு, வீக்எண்ட் வேறு… எப்படியும் சினிசிட்டியில் கூட்டம் மோதும். போதாக்குறைக்கு பெரிய பில்டப்புடன் வந்த தாண்டவம் வேறு ருத்ரத்தாண்டவம் (நன்றி ராஜ் Smile) ஆடிக்காட்டியிருந்ததால், நேற்று (சனிக்கிழமை) தெஹிவளை கொன்கோர்ட்டில் இந்தப் படத்தைப் பார்த்தேன். படத்திற்கு வந்திருந்த முன் சீட் யூத் ஒருத்தன் “ஏண்டா கிழவி படத்திற்கெல்லாம் இழுத்துட்டு வர்ற? மாற்றானுக்கு போயிருந்தா காஜலையாவது சைட் அடிச்சிட்டு படம் பார்த்திருக்கலாம்”னு புராணம் பாடிட்டு இருந்தான். ஆனால் க்ளைமேக்ஸ் முடிந்ததும் தியேட்டர் முழுவதும் கைதட்ட, எழுந்து நின்று கைதட்டியவர்கள் அந்த இரண்டு ப்ரெண்ட்ஸும் தான்!!! இதே போதாதா படத்தின் வெற்றிக்கு காரணம் சொல்ல??!!

நிச்சயம் பாருங்க!!!! பிடிக்கும் … உங்களுக்கு ஆன்டிஸ் பிடிக்காதென்றாலும்.. Winking smile

ட்ரெயிலர்

விமர்சனம் பிடிச்சிருந்தா, கீழே ஓட்டுப்பட்டைகளில் என்னை நினைச்சு “இனிமே விமர்சனம் எழுதுவியா”ன்னு நல்லா ரெண்டு குத்து குத்திட்டு போகலாமே? Open-mouthed smile

The Cabin in the Woods (2011)

folder


இன்னிக்கும் ஹாரர் படம் தான் … மூணு பசங்க, ரெண்டு பொண்ணு … இந்த ஐந்து பேரும் வீக்எண்ட் தனியா குடி, போதை, செக்ஸ்னு ஜாலியா இருக்க ப்ளான் பண்ணி காட்டுக்குள்ள ஒரு காட்டேஜ்ஜுக்கு பிரயாணமாகிறாங்க. ஆனால் அந்த காட்டேஜ் சாதாரணப்பட்டது இல்ல. பின்னணில பல பெரிய சக்திகள் அங்கே விளையாடிட்டு இருக்கு. அவற்றால் அவங்க அங்கு சந்திக்கும் பயங்கரங்கள் தான் படத்தின் ஒன்லைன். 

அய்யோ!!! ஹாலிவுட் சினிமா கண்டுபிடிச்ச காலத்திலேந்து ஹாரர் படம்னு வர்ற முக்கால்வாசி படம் இந்தக் கதையைத் வச்சுத் தானே காசுப் பார்த்திட்டு வந்திருக்கு? இதுக்கு மேலயும் இதப் பார்க்கணுமான்னு ஒரு கேள்விய நீங்க கேட்பீங்க.. நிச்சயமா பார்க்கணும்!

ஏன்னா …

படம் பார்க்கிற நம்ம கூட விளையாடிப் பார்க்கணும்னு நினைச்சிட்டாங்க போலருக்கு இயக்குனர் ட்ரூ கொடார்ட்டும் தயாரிப்பாளர் வெஸ் வீடனும் (அவெஞ்சர்ஸ் இயக்கிய அதே ஆளு தான்). படத்துல எங்கயுமே க்ளிஷேங்கிற வார்த்தைக்கே இடமில்லை. ஆரம்பத்திலேயே வழக்கமான ஹாரர் படங்கள்ல நாம் பார்க்கிற பல காட்சிகளை வரிசையாக நமக்கு காட்டி, வழக்கமான படமோன்னு யோசிக்க வச்சு….சரி, கதை இப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறப்போ, அப்படியே கதையை யூ-டர்ன் அடிச்சு வேற திசைல திருப்பி ‘ஆஆஆஆ’ன்னு சொல்ல வைக்கிறாங்க.

thumb1

Shaun of the Dead, Zombieland மாதிரி குறிப்பிட்ட சில படங்கள் காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இது அந்த மாதிரியான ஹாரர் படமுமல்ல. ஆனால், அங்கங்கே கொஞ்சம் காமெடியையும் தெளித்துவிட்டு திரைக்கதையை சலிப்பில்லாமல் இயக்குனர் பின்னியிருக்கிறார். Serbian Film, Cannibal Holocaust போன்ற படங்களையே லஞ்ச் டைம்மில் அசால்ட்டாக பார்க்கும் சில இறுகிய வயிற்றுக்காரங்களுக்கு படத்தின் ஹாரர் கொஞ்சம் கம்மியாகவே தெரியலாம். ஆனால் திரும்பவும் சொல்றேன்….ஹாரர் கேடகரியில் இதுவொரு பரீட்சார்த்த முயற்சியே. உங்கள் வயிற்றைச் சுத்தப்படுத்தும் பேதிமருந்தல்ல!!

படத்துல ஆங்காங்கே நிறைய புகழ்பெற்ற ஹாரர் படங்களுக்கு ரெஃபரன்ஸ் வருது. அதெல்லாம் டைஹார்ட் ஹாரர் பேன்ஸுக்கு ஆட்டோமேடிக்கா மைண்ட்ல க்ளிக் ஆகும்…நமக்கு அந்தளவுக்கு ஹாரர் படங்கள் பற்றி மண்டைல இல்ல. ஏதோ ஒண்ணு ரெண்டு படம் ஞாபகம் வந்திச்சு. என்னோட ஃபேவரைட் சீன்னு சொல்லணும்னா,, முக்கால்வாசிப் படம் ஓடின பின் ஒரு சீக்வன்ஸ்ல இதுவரைக்கும் ஹாரர் படங்கள்ல தலையைக் காட்டின அத்தனை ஜீவராசிகளும், உருவங்களும் (ஃபேரி டேல்ஸ்ல அழகிய சாதுவான பிராணியா நினைச்சிட்டிருந்த யுனிகோர்ன் உட்பட) என்ட்ரியாகும் இடம் அதகளம்! அதன் பின் கொஞ்ச நேரம் தொடர்ந்து ஸ்க்ரீன் பூராவும் ரத்தமயம்! வழியில அகப்பட்டவனெல்லாம் க்ரைண்டர்ல மாட்டிக்கிட்ட மாதிரி சட்னி தான்!

2010லேயே வந்திருக்கவேண்டிய படம்… கைவசம் உரிமையை வைத்திருந்த எம்.ஜி.எம் ஸ்டுடியோ பட்ஜெட்ல நொந்து நூடில்ஸாகிட்டோம்னு அறிக்கை விட்டதால, அப்படியே ரீல் பொட்டிய தூக்கி ஒரு ஓரமா வச்சுட்டாங்க. அப்புறம் 2011ல விநியோக உரிமையை லயன்ஸ்கேட் நிறுவனம் வாங்கி . ரிலீஸ் பண்ணினா வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எங்கேயும் சோடை போகல. போட்ட காசுக்கு இரண்டு மடங்காகவே காசு பார்த்துட்டாங்க லயன்ஸ்கேட். ( வட போச்சே!! – எம்.ஜி.எம் )

thumb9

இதுக்குமேல படத்தோட முக்கியமான ட்விஸ்ட்டுகளைச் சொல்லாமல் எதுவுமே எழுத முடியாது … அப்படியே நான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் வேலை மெனக்கெட்டு நீங்க படிக்கப்போறதும் கிடையாது. போதாக்குறைக்கு சொன்னா படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் கெட்டுப்போய் விடும். அதுனால பேசாம நீங்க படத்தையே பார்த்துக்கோங்களேன்?! இதுவரைக்கும் எந்த ஹாரர் படமும் கொடுக்காத ஒரு புது ஃப்ரெஷ் எக்ஸ்பீரியன்ஸை இந்தப் படம் உங்களுக்குக் கொடுக்கும். கியாரண்டீட்!!!



ஒரு தமிழ்ப்படம் பற்றி எழுதி வச்சிருக்கேன். நிறையப் பேரு எழுதிட்டாங்க. நானும் அதையே தான் எழுதியிருக்கேன். போடுறதா வேணாமா???

யப்பாடி இந்த மாசத்திற்கு மூணு பதிவு போட்டாச்சு!!! Target achieved…. ரெஸ்ட் எடுத்துக்கலாமா? Smile

The Thing (1982)

folder

இப்போ அமெரிக்காவுல ஹாலோவீன் சீசனாமே? திரும்பின பக்கமெல்லாம் ஒரே பேய்ப்பட மயமா இருக்கு. நம்ம ப்ளாக் வேற அடிக்கடி ஹாலிவுட் ஹாலிவுட்னு உளறிட்டு இருக்கும் ஒரு மேற்கத்தேய வலைப்பூ!!?? என்பதால் சம்பிரதாயத்திற்காக ஒரு ஹாரர் படம். ஹாரர் படங்கள் பார்ப்பது மிக மிகக் குறைவு … முடிந்தால் இந்த மாதத்திற்குள் இன்னொரு ஹாரர் படத்தையும் எழுதப் பார்க்கிறேன்.

யாருப்பா அங்கப் போறது”ன்னு (Who Goes There) 1930ல கேம்ப்பெல்னு ஒருத்தர் இங்கிலிஷ்ல புத்தகம் எழுதினாராம். புத்தகமும் செம ஹாரரா இருந்துடிச்சு போல. இதே கதையை பேஸ் பண்ணி 4 படம் எடுத்துத் தள்ளிட்டாங்க ஹாலிவுட்காரங்க. (இந்த நாலு படத்தில் Alien படமும் அடங்கும்). இந்தப் படமும் புத்தகத்தின் “நமக்குள் ஒன்று“ என்ற தீமை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான். ஆனால் படம் மாட்டினது, 1970-80களில் ஹாரர் படங்களுக்குப் பெயர் போன ஒரு இயக்குனர் ஜான் காபெண்டர் கையில். அவர் இயக்கிய எல்லாப் படங்களிலும் தன்னோட பர்சனல் பேவரைட்ன்னு சொல்லிக் கொள்ளும் படம் இது.


thumb3

கதை என்னான்னா ….

பூமியில் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு ஸ்பேஷ்-ஷிப் வந்து விழுகிறது….
..
ஓபனிங் டைட்டில்
..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளை வெளேறென்று பனி படர்ந்த அன்டார்ட்டிக் பிரதேசம். அதில் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு ஹஸ்கி நாய். பின்னால் ஒரு ஹெலிகாப்டர் துரத்துகிறது. அதிலிருந்து ஹை-பவர் ரைபில் ஒன்றின் மூலம் குறிவைத்து சுட்டுக் கொண்டு வரும் ஒரு மனிதன். எப்படியோ அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டுவரும் அந்த நாய், ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை அடைகிறது. அதற்குள் குடித்துக் கொண்டும், பிலியட்ஸ் விளையாடிக் கொண்டும் ஆராய்ச்சி தவிர மற்ற எல்லா விஷயங்களும் செய்து கொண்டிருக்கும் சயின்டிஸ்ட் கூட்டம் ஹெலி சத்தம் கேட்டு வெளியே வருகிறது.

thumb1

ஹெலியை லேன்ட் பண்ணிவிட்டு வெளியே இறங்கும் அந்த மனிதன், புரியாத ஏதோ ஒரு பாஷையில் நாயைக் காட்டி ஏதோ கத்துகிறான். துப்பாக்கியால் நாயை சுடுகிறான். நாய்க்கு ஒரு கிரனேட் எடுத்து வீசப் போகும்போது தவறுதலாக அது ஹெலியில் விழ….ஹெலிகாப்டர் காலி. அந்தப் பைத்தியத்துடன்?? பேச்சுவார்த்தை சரியாக வராததால், சயின்டிஸ்ட் கூட்டத்தில் ஒருவன் அவனைக் சுட்டு கொன்றுவிடுகிறான். கேபின் ஃபீவர் வந்ததால் தான் அவனுக்கு அந்தக் கோளாறு என்று முடிவு கட்டிவிட்டு, அந்த நாயை மற்ற ஹஸ்கி நாய்களுடன் அடைக்கிறார்கள்.

ஆனால் இரவானதும் அடைக்கப்பட்ட நாய் ஒரு ஏலியனாக உருமாறி அங்கிருக்கும் நாய்களைத் தாக்குகிறது. அப்பொழுது தான் அவர்களுக்கு அந்த நாய் உருவத்தில் இருந்தது ஒரு ஏலியன் என்றும், அது தாக்குபவர்களை உட்கொண்டு அவர்களின் உருவத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு அவர்களை இமிடேட் செய்யக்கூடியது என்றும் தெரியவருகிறது. இப்பொழுது குழுவில் ஒவ்வொருவராக அந்த ஏலியனால் தாக்கப்பட, ஏற்கனவே ஒவ்வொருவருக்கும் மற்றவர் மேலுள்ள சந்தேகம், தனிமை என்பவையும் சேர்ந்து தன் பங்குக்கு சேர்த்து ஆட்டிப்படைக்க என்ன நடந்தது என்பது மீதிப்படம்.


thumb5


சந்தேகமேயில்லாமல் படத்தின் சிறப்பு இதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தான். பக்கெட் பக்கெட்டாக வியர்வையை … சாரி …. ரத்தத்தை சிந்தி அருமையான விஷுவல் எஃபெக்ட்ஸ். அதிலும் அந்த ஏலியன் உருமாறும் காட்சிகளில் அந்த டம்மிகளும், கொடுக்கி போன்ற உறுப்புக்கள்….பச்…மேக்கப் உச்சம். ‘சி.ஜி’யெல்லாம் திரைப்படங்களுக்கு எண்ட்ரீயாகுமுன்பே எஃபெக்ட்ஸ்ல புகுந்து விளையாடிட்டாங்க. அண்மையிலெல்லாம் “படத்திற்காக உயிரைக் கொடுத்து உழைச்சாருய்யா தலைவரு” என்ற வசனங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ரொப் பொட்டின் வாரத்தில் ஏழு நாள் வீதம், ஒரு வருஷத்தை செட்டிலேயே மேக்கப்பிற்காக கழித்ததால் வேலை முடிந்ததும் உடல்நிலை மிகவும் மோசமாகி ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டாராம்.

படம் முழுவதும் அன்டார்ட்டிக்காவில் நடப்பதாக காட்டப்படுகிறது. எனவே அந்த சயின்டிஸ்ட் குழு, ஏலியன் தவிர பல நூறு கிலோமீட்டருக்கு ஆள்நடமாட்டமே கிடையாது. உதவிக்கும் கூப்பிடமுடியாத வகையில் இடையில் ரேடியா, கொம்யுனிகேஷன் எல்லாம் நொறுங்கிவிடுது. படத்தின் த்ரில்லுக்கும் இந்தத் தனிமை ஒரு பெரிய பக்கபலம்.

படத்துல மருந்துக்கு கூட ஒரு பொண்ணக் கண்ணுல காட்டக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு இயக்குனர். நம்மள மாதிரி ஆளுங்க படத்துல ஃபிகருங்கள காட்டாம விட்டா பாதிக்கப்பட்டிருவாங்களேன்னு பாவம் பார்த்து ஒரு கம்ப்யுட்டர்க்கு பெண் வாய்ஸ் கொடுக்கவச்சிருக்காரு. அவ்வளவு தான். அவ்வ்வ். Crying face

TheThing82_01

ஆனா படத்தை ரிலீஸ் பண்றப்போ சின்ன ஒரு மிஸ்டேக் பண்ணிட்டாங்க. ஸ்பீல்பெர்க்கின் E.T. The Extra Terrestial வெளியிட்டு இரண்டு வாரங்களின் பின்னர் இவங்க படத்தை ஒரு அசட்டு தைரியத்துல வெளியிட்டாங்க. அந்த காலத்து மனுஷங்களுக்கு, காப்பெண்டரின் ஈவில் ஏலியனைவிட, ஸ்டீவனின் குறும்புக்கார அப்பாவி ஈ.டீ மிகவும் பிடித்துப் போக, கிட்டத்தட்ட 10 வருஷங்களுக்கு அதிக வசூல் செய்த படங்களில் ஈடீ இருந்தது எல்லாரும் அறிந்த விஷயமே. அதனால் காப்பெண்டரால் பெரிசா போட்டதை எடுத்துக்கொண்டதைத் தவிர வசூலில் பெரிசா ஒன்றும் சாதிக்கமுடியவில்லை. ஆனால்…டிவிடி வர்ஷன் ரிலீஸான பின்னர், இதற்கென்று ஒரு ஃபேன் பட்டாளம் உருவாகி … இன்றுவரை சிறந்த ஹாரர் படங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

The X-Files நாடகம் பார்த்திருந்தீங்கண்ணா, அதில் முதலாவது சீசனில் Ice என்று ஒரு எபிசோட் வரும். அதுவும் கிட்டத்தட்ட இதே கதை தான். இந்தப் படத்திற்கு ஒரு ட்ரிபியுட்டாக எடுக்கப்பட்ட எபிசோட்.

இதே பெயரில் 2011ல் ஒரு படம் வந்திருக்கு. அது இந்தப் படத்திற்கு முன் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கூறுகிறது. அதாவது அந்த ஏலியன் எப்படி மற்ற கேம்பில் இருந்து தப்பித்து நாய் வேடத்தில் இங்கு வந்து சேருகின்றது என்பது வரையான சம்பவங்கள். அதையும் எடுத்து வச்சிருக்கேன். பார்க்கணும். நல்லாயிருந்தா அதையும் எழுதுறேன். (NOOOOOooooooooooo) Smile

ஹாரர் விசிறிகள் நிச்சயம் எடுத்துப் பாருங்க…க்ளாஸிக் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் !!!


ட்ரெயிலர்