நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Poltergeist (1982)

folder

நடுராத்திரி….அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஓடிக் கொண்டிருந்த டிவி திடீரென்று ஸ்டாடிக்காக மாறுகிறது.. மேல்மாடியில் உறங்கிக் கொண்டிருந்த 5 வயதான கரோல் ஆன் திடீரென்று உறக்கத்திலிருந்து எழுந்து கீழே வருகிறாள். டிவியின் முன் அமர்ந்து டிவியை நோக்கி பேசத் தொடங்குகிறாள்..

ஹலோ…யார் நீ?? சத்தமாக பேசு.. நீ பேசுவது சரியாக கேட்கவில்லை

இவளது சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் எழுந்து வந்து இவளைச் சுற்றி நின்று பார்க்கின்றனர். இவள் தனது கைகளை டிவியின் மேல் பதிக்கிறாள். (நீ என்னதான் தலைகீழா நின்னாலும் நாங்க படம் பார்க்கப் போறதில்லைங்கிறவங்க மேலே படத்தின் போஸ்டரைப் பார்த்துக் கொள்ளவும்)

இது தான் போல்டகெயிஸ்ட் படத்தின் ஆரம்பக் காட்சி!!


thumb4

படம் வந்த 1980களின் காலக்கட்டத்தில் இருந்த அமெரிக்காவின் சாதாரண குடும்பங்களில் ஒன்று.. ரியல் எஸ்டேட் பிஸினஸில் இருக்கும் தந்தை ஸ்டீவ், ஹவுஸ்வைப் டயான், டேனா, ரொபி, கரோல் என மூன்று குழந்தைகள் என்று வாழ்க்கை ஸ்மூத்தாக நகர்கிறது.

மீண்டும் மேலே சொன்ன கூறிய சம்பவம் போல ஒன்று கரோலுக்கு நிகழ, இச்சமயம் டிவியில் இருந்து ஒரு உருவம் போல ஒன்று கிளம்பி சுவருக்குள் மறைகிறது. இதே நேரம் வீடும் ஒரு சின்ன பூமியதிர்ச்சிக்குள்ளானது போல அதிர்கிறது. திடுக்கிட்டு எழும் குடும்பத்தினரிடம் கரோல் கூறுவது “They are here”.. (மீண்டும் போஸ்டர்)

வீட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் வைக்கும் தளபாடங்கள் தானாக நகர்வது,  போன்ற சில அமானுஷ்ய நிகழ்வுகள் அதன்பின் நடக்கத் தொடங்குகின்றன. வீட்டுக்காரர்களும் விபரீதமாக ஒன்றும் நடக்காததால் அதை ஏதோ ஜாலியான விளையாட்டு போல எடுத்துக் கொள்கின்றார்கள்.

திடீரென்று ஒருநாள் இரவு ரொபி வீட்டின் அருகிலிருக்கும் மரத்தால் தாக்கப்படுகிறான். இதே நேரம் பெற்றோர்கள் ரொபியைக் காப்பாற்ற முயலும்போது கரோல் ஆன் அவளின் ரூமிலிருக்கும் ஒரு போர்ட்டல் வழியாக கடத்தப்படுகிறாள். அதன் பின் வீட்டில் அமானுஷ்ய சக்திகளின் அட்டகாசம் இன்னும் விபரீதமாகிறது.

கரோல் ஏன் கடத்தப்பட்டாள்? அதன் பின் எவ்வாறு அவளை மீட்டார்கள் என்பதை படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.


thumb2

பொதுவாக ஹாரர் படங்களில் இரண்டு வகையான படங்கள் உண்டு.. முதலாவது வகை, zombies, பேய்கள், ஹாக் அன்ட் ஸ்லாஷ் வகையறா (Cabin in the Woods,The Thing , Saw Series) என்று ரத்தம் தெறிக்கும் காட்சிகளுடன் பார்வையாளர்களை மிரட்டும் படங்கள். இரண்டாவது வகை.. பேய், ரத்தம் என்று எதையும் காட்டாமல் சவுண்ட் எஃபெக்ட், காட்சியமைப்பு என்று பார்வையாளர்களை மிரட்டுவது. (Paranormal Activity) போன்ற படங்கள் இந்த வகை.. இந்தப் படமும் இரண்டாவது வகை போலத் தான் எனக்குத் தெரியுது.

இயக்குனர் டாப் ஹுப்பர். இயக்கம் இவர் தான் என்றாலும், முழுக்க முழுக்க மேற்பார்வை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான். அதிலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்ததும், முழு கன்ட்ரோலும் ஸ்பீல்பெர்க் பொறுப்பெடுத்துக் கொண்டார். படத்தோட விஷுவல் மற்றும் மியுசிக் பற்றிச் சொல்லியே ஆகணும். மாறி மாறி இந்தப் படத்துடன் E.T படத்தின் வேலைகளையும் பார்த்துக்கொண்ட ஸ்பீல்பெர்க் புண்ணியத்துல சில இடங்களில் ஃபுல்-எஃபெக்ட்டுடன் பார்த்தால் ஹார்ட் பீட் எகிறும்! இப்போ பயங்கர எஃபெக்ட்டுகளுடன் படம் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு சாதாரணமா தெரிந்தாலும், அந்தக் காலத்து ஆட்களுக்கு இது நிச்சயம் ஒரு பயங்கர அனுபவமா இருந்திருக்கணும். 1982 ஆஸ்கரில் Best Sound Editing Effects, Best Original Score, and Best Visual Effects போன்ற பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. கடைசில ஸ்பீல்பெர்க்கின் E.Tயிடமே தோற்றுப் போனது பரிதாபமே!

நிறைய ஹாரர் படங்களை குடும்பத்துடன் பார்க்கமுடியாது…MPAA புண்ணியத்துல நம்ம படத்துக்கு எப்படியும் R ரேடிங் தான் என்ற எண்ணத்துல, டைரக்டர்களும் ஆளாளுக்கு பிட்டு பிட்டா போட்டுவிடுவாங்க.. படம் ரிலீஸான நேரத்தில் இந்தப் படத்திற்கும் R ரேடிங் தான் கிடைத்தது. ஆனா இந்த நியூஸ் கேட்டதும் ஸ்பீல்பெர்க் கடுப்பாகி அவரோட பவரை MPAA டீமுக்கு காட்ட, அவங்களும் பம்மிக் கொண்டே போனாப் போகுதுன்னு PG ரேடிங்கை கொடுத்துவிட்டாங்க. எனக்குத் தெரிந்து PG ரேடிங் கிடைத்த பேய்ப்படம் இதுவாத் தான் இருக்கும்.. ஆனா சில இடங்களைப் பார்க்கும்போது R ரேடிங் கொடுத்ததில் தப்பில்லை என்று தான் தோணுது. குறிப்பா ஒரு சீனில் பேய் நடவடிக்கைகளை கண்கானிக்க வரும் ஒருவன், சதை எல்லாம் உருகி சிங்க்கில் கொட்டுவது போன்ற காட்சிகளெல்லாம் PG ரேடிங்கிற்கு நிச்சயம் ஒத்து வராது! (தொடைநடுங்கி MPAA வாழ்க! வளர்க!)

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கென்னடான்னா.. Insidious படம் ஞாபகத்திற்கு வந்தது. அந்த கதையில் கொஞ்சம் Astral Walking அது இதுன்னு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் போட்டு வைத்தாலும், இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கதை போலத் தான்! யாராவது?

போன மாசமே போட்டிருக்கணும்.. வழக்கம் போல சோம்பேறித்தனமும், ஹாலோவீன் கேன்டி சாப்பிட்டு டயர்டாகிட்டதாலும், முக்கியமா.. அப்போ போட்டா, இந்த மாசத்துக்கு போஸ்ட் இல்லாமல் போய்விடுமோங்கற ஒரு எண்ணத்தினாலயும் இன்னிக்கு வருது!

Poltergeist (1982) on IMDb


ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

14 comments:

 1. உங்க விமர்சனத்தை பாத்தா படம் worth இல்லைன்ற மாதிரி தெரியுது...

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் மிஸ் பண்ணாம பார்க்கவேண்டிய படமல்ல இது.. ஹாரர் படங்களில் ஆர்வம் இருந்தால் ஃப்ரீ டைம்ல ட்ரை பண்ணலாம்..

   Delete
 2. ஹாலிவுட் காரய்ங்க ஒரே மாதிரி கதைய வைச்சு எம்புட்டு படம் எடுத்துட்டாய்ங்க.. ஹாரர் படங்களில் ஆர்வமில்லை தான் என்றாலும் த ரிங் போன்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. விமர்சனம் நல்லா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. The Ring இன்னும் பார்க்கல.. ஹாரர் படங்களுக்கு கொஞ்சம் லீவு விட்டாச்சு. இனி மத்த டைப் பக்கம் எட்டிப் பார்க்கணும்.

   Delete
 3. yenga ippadi ore terror ayiteenga.konjam vera pakkam mum poitu vaanga boss.

  ReplyDelete
  Replies
  1. இது அக்டோபரே எழுதி வச்ச பதிவு.. இனி மாறிடுவோம். :)

   Delete
 4. தல, எனக்கு இந்த மாதிரி ஹாரர் படம் ஒத்து வரது... :(:(:(
  ஸ்பீல்பெர்க் மேற்பார்வையில் படம் வந்தது என்பது புது தகவல்..... :):):)

  ReplyDelete
  Replies
  1. ஃப்ரீயா விடுங்க தல ... அப்புறம் Mullholland Drive பற்றி எழுதுறேன்னு சொன்னீங்க.. படத்தப் பார்த்து வச்சேன்.. இப்போ மறந்தே போச்சு.

   Delete
 5. பழைய காலத்து பேய்ப்படங்கள் இப்ப பார்க்கும் போது போரடிக்கும்... (போஸ்டர் மட்டும் மாடர்ன் ட்ரெண்டு மாதிரி இருக்கு) ஸ்பீல்பேர்க் படத்தோட சம்பந்தப் பட்டிருக்காருன்னா ஏதாவது வித்தியாசம் இருக்கும்னு நம்புறேன்!
  *நெறைய அனிமேஷன் படங்களுக்கே PG-13 தானே கொடுக்கறாங்க? இதுக்கு எப்படி?!

  ReplyDelete
  Replies
  1. மேலே சொன்னது போலத் தான்.. முதல்ல R ரேடிங் தான் கிடைச்சுது. ஸ்பீல்பெர்க் ஆவேசப்பட்டதும் PG கொடுத்திட்டாங்க. (அப்போ PG-13 இருக்கல.)

   Delete
 6. DVD கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. நாம எப்பவுமே டவுன்லோட் மட்டும் தான்... டிவிடிக்கு பை பை சொல்லியாச்சு. :)

   Delete
 7. பாஸ் எனக்கு அந்த அம்மா நடிப்பு ரொம்ப புடிச்சிருந்தது.... குறிப்பா அந்த பாப்பா அவங்கள கடந்து போறத ஃபீல் பண்ணும் காட்சி வாய்ப்பே இல்லை...

  என்னா நடிப்பு...

  ரொம்ப புடிச்ச படம் ஆனா பாத்து முடிக்க மூணு நாள் ஆச்சு பிட்டு பிட்டா பார்த்தேன் அதனால எதோ கண்டிப்பா மிஸ்ஸிங்


  வருண் ப்ரகாஷ்

  ReplyDelete
 8. இந்த படம் பார்த்தாச்சு பாஸ்..ஸ்பீல்பெர்க் படமாச்சே..அப்படி இப்படி எப்படியாவது பார்த்துடுவேன்..
  ரொம்ப நல்ல படமென்று சொல்ல முடியாது.பட் பார்க்கலாம்.
  இந்த படத்தோட ரேட்டிங்க் விவகாரமெல்லாம் ஏற்கனவே படிச்சிருக்கேன்.நீங்களும் அருமையா சொல்லிருக்கீங்க.இந்த படத்தை தொடர்ந்து தொடர் பாகமெல்லாம் வந்ததா ஒரு சின்ன ஞாபகம்.நான் இன்னும் பார்க்கல.நீங்க ? நன்றி.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...