நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Raid: Redemption (2011)

folder

கொஞ்ச நாளாகவே நம்ம நட்பு வட்டாரத்தின் பேச்சுக்களில் மிகவும் அடிபட்ட படம் இது. பார்த்தவங்களும் ஆளாளுக்கு பில்டப்பை கொடுத்து ஹைப்பை ஏற்றிவிட்டு இருந்தாங்க. பொதுவா நமக்கு இந்த “கிழக்காசிய திரைப்படங்கள்” அலர்ஜிக் என்பதால் டச் பண்ணாமலே வைத்திருந்தேன். கடைசில “இன்னுமாடா பார்க்கல”ன்னு கேவலமா திட்டு வாங்கி, சே..இவன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்கவேண்டியதாப் போச்சேன்னு ஒரு ரோஷத்துல படத்தை எடுத்துப் பார்த்தா…

thumb4

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி பரபர படம் ஒன்று பார்த்து… எங்கேயும் யோசிக்க விடல. அட…கண்ணிமைக்கக் கூட நேரமில்லை. அவ்வளவு வேகம், பரபரப்பு!! அவனவன் கொடுத்த பில்டப்புக்கு ஒரு குறையும் இல்லாத அளவுக்கு ஆக்ஷன், ஆக்ஷன், ஆக்ஷன் மட்டும் தான்! இந்த வருஷத்தில் நான் பார்த்த பெஸ்ட் ஆக்ஷன்-வயலன்ஸ் மூவி இதுன்னு கண்ணை மூடிட்டு சொல்லலாம்.. கடைசியா எழுதின Expendables 2 நெருங்கிக் கூட வரமுடியாது போங்க..!

மிக மிக சிம்பிளான கதை. அதாவது படத்தோட டைட்டில் தான் கதையே. ரெய்ட்!! ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு ஊரில் உள்ள ஏதோ ஒரு அபார்ட்மெண்டை அந்த ஊரிலுள்ள எல்லா முக்கிய ரவுடிஸும், அவர்களின் தலைவனும் ஹெட் குவார்ட்டர்ஸா பயன்படுத்துறாங்க. அவங்க கட்டுப்பாட்டில் சில குடும்பங்களும் குடியிருக்கு. இந்தக் கும்பலை கைது பண்ணுவதற்காக ஒரு போலீஸ் யுனிட் அந்தக் கோட்டைக்குள் சத்தமில்லாமல் ரெயிட் போகுது. அவர்களின் என்ட்ரி அந்த கேங்குக்கு தெரியவர என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.

எளிமையான கதையை கொண்ட கதைக் களம், கரெக்டர் டெவலப்மென்ட்டுக்கெல்லாம் மிகவும் மெனக்கெட வைக்காமல், அதிக நேரத்தை ஆக்ஷன் சீக்வன்ஸுக்கு செலவளிக்க வைத்திருக்கிறது. இதுவொரு முக்கிய ப்ளஸ் பாயிண்ட். முதலில் மெதுவாக நகர ஆரம்பிக்கும் படம், ஒரு 15 நிமிடங்களின் பின் ரவுடிக் கும்பலுக்கு இவர்கள் வந்திருக்கும் தகவல் தெரியவந்த பின் தான் சூடு பிடிக்கிறது…அதன் பின் படம் முடியும் வரை நான்-ஸ்டாப் ஆக்ஷன் தான்.

ஆரம்பத்தில் ஏதோ Call of Dutyய படமாக பார்க்கிற மாதிரி வெறும் துப்பாக்கி மழை. துப்பாக்கில புல்லட் தீர்ந்துபோன பிறகு தான் படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பக்கம் திரும்புகிறது. இதில் புதுசா பென்காக் சிலாட் என்றொரு இந்தோனேஷியன் ஃபைடிங் ஸ்டைல் தான் பாவிச்சிருக்காங்கலாம். ஆக்ஷன் விரும்பிகள் தவறவிடக்கூடாத.., படத்தின் அழகாக கொரியோக்ராஃபி செய்யப்பட்ட மொமெண்ட்ஸ் இதன் பின் தான் இருக்கின்றது. மிஸ் பண்ணிடாதீங்க!

thumb5

அதிலும் கடைசி ஃபைட்டிங் Super Awesome!! எனக்கு படத்தில் பிடித்த கரெக்டர்ஸ் ஒன்று ஹீரோ..மற்றது அந்த Mad Dog கரெக்டர். அதிலும் இந்த Mad Dog தன்னோட சின்ன உருவத்தை வைத்துக் கொண்டு க்ளைமேக்ஸ்ல போடுற ஆட்டம் இருக்கே?? யப்பா! தமிழ்ல கடுகு சிறிசானாலும்னு (மீதி மறந்துபோச்சு) ஏதோ பழமொழி இருக்கே?..உண்மை தான்! சாம்பிள் பார்க்கவேண்டிவங்க இந்த வீடியோவ பார்த்துக்கோங்க..

படத்தோட காமெரா பற்றியும் சொல்லியேத் தீரணும். வழக்கம்போல ஒரே இடத்தில் இல்லாமல், ஷுடிங் காட்சிகளிலும் சரி, ஃபைடிங் காட்சிகளிலும் சரி … காமெரா சுற்றி சுற்றி படமெடுக்குது. சில இடங்களில் ஃபைட்டிங் கொரியோக்ராபிக்கு ஏற்றாற்போல காமெராவும் அசைவது, துப்பாக்கிச் சூடுகளின் போது shaking-mode, நடிகர்களுடன் சேர்ந்து காமெராவும் நகர்வது எல்லாம் அருமை!

இதுவொரு இந்தோனேஷியத் தயாரிப்புங்கறதால வழக்கம்போல யாருக்கும் தெரியாமல், சத்தமின்றி டொரன்டோ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு, பின் பார்த்தவங்க எல்லாரும் “ஆகா ஓகோ”ன்னு புகழ் பாட, உடனே நம்ம சோனி பிக்சர்ஸ் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கி வச்சிட்டாங்க. அப்புறம் வைட் ரிலீஸ் பண்ணியதும், 4 மில்லியன் Smile வசூலில் எடுத்ததும் பாக்ஸ் ஆபிஸ் வரலாறு! நமக்கு அது தேவையில்லாத சப்ஜெக்ட்..

நான் சொல்ல வர்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்.. ஆக்ஷன் விரும்பிகள் மிஸ் பண்ணாம பார்க்கவேண்டிய படம்! ஆனா, எல்லாருக்கும் படம் பிடிக்குமோ தெரியாது. கதை, கதாபாத்திரங்கள்னு ஆராய்ச்சி பண்ணாம ஒரு பரபரன்னு ஒரு என்டர்டெயினர் வேணும்னா கண்ணை மூடிட்டு (படம் பார்க்கும்போது மறக்காம தொறந்துடுங்க…மொக்கை…மொக்கை) எடுத்துப் பாருங்க. (வழக்கமா எல்லாப் படத்துக்கும் சொல்றது தான்.. இது கொஞ்சம் ஸ்பெஷல் ரெகமெண்டேஷன் Smile)

The Raid: Redemption (2011) on IMDb

ட்ரெயிலர்

எக்ஸ்ட்ரா பிட்டு

போன சனிக்கிழமை தான் தியேட்டர்ல (சவோய்) Dredd 3D ரிலீஸ் பண்ணியிருந்தாங்க.. கதை, வில்லன்னு இரண்டு படத்துக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள்! ஆனா என்ன.. Dreddல் வெறும் துப்பாக்கி, கிரனேட் மட்டுமே.. அதனாலோ என்னமோ எனக்கு அதை விட The Raid கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருந்தா மாதிரி ஒரு ஃபீலிங்.. படத்தில் Mad Dog சொல்வது போல “pulling the trigger is like ordering takeout. The real satisfaction in killing someone for him is found in a duel to the death with only the human body for a weapon.”  ஆனாலும் 3Dயில் Dreddஐ பார்ப்பது நிச்சயம் ஒரு சூப்பர்ப் அனுபவமாக இருக்கும்! அந்த ஸ்லோ மோஷன் காட்சிகள் எல்லாம் 3Dயில் பார்க்கும்போது.. வாவ்!!! முடிஞ்சா தியேட்டர்ல பார்த்துக்கோங்க.. Smile

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

42 comments:

 1. படம் படமா சொல்லிக்கொண்டே போறீங்க....
  பார்க்கத்தான் நேரம் கிடைக்கமாட்டேங்குது.

  ReplyDelete
  Replies
  1. எல்லாரும் என்னை மாதிரி வெட்டியாவா இருப்பாங்க?? :)

   Delete
  2. வெட்டியா இருக்குறேன்னு சொல்லிட்டு போஸ்ட் போட்டா என்னவா

   Delete
 2. இப்ப தான் இந்த படத்தை பார்த்தீங்களா நம்ப முடியலை ஒ ஹாலிவுட் ரசிகன் என்பதால் இதையெல்லாம் பார்க்கலையோ....

  ReplyDelete
  Replies
  1. "துப்பாக்கில புல்லட் தீர்ந்துபோன பிறகு தான் படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பக்கம் திரும்புகிறது."

   :-)) சூப்பர்

   நான் இந்தப்படம் ரொம்ப நாள் முன்னாடியே பார்த்துட்டேன்.. செம படம். சண்டை கலக்கல். இன்னொரு முறை பார்க்கலாம்.. பொழுது போகவில்லை என்றால்.

   Delete
  2. இல்ல பாஸு ... படம் பார்த்து கிட்டத்தட்ட 15-20 நாளாகுது. எப்பவும் ப்ளுரே ப்ரிண்டுக்கு வெயிட் பண்ணிப் பார்ப்பதால் லேட்டாத் தான் பார்க்க கிடைக்கும். :)

   Delete
 3. Replies
  1. சீக்கிரம் பார்த்துட்டு சொல்லுங்க..

   Delete
  2. Pathachu.Padam Super.Arimuka paduthiyatharkku nandri.Ithapaakum bothu innor padam gnayapakam vanthathu.BX13 something athula oruthan semaya odi thappipaan.neenga paathurukeengala.

   Delete
  3. பாத்திருக்கேன் தல.. நீங்க சொல்றது Banlieue 13 (B-13)னு நினைக்கிறேன். அதில 2 பார்ட் வந்ததா ஞாபகம்.. ரெண்டும் அட்டகாசம்!

   Delete
 4. //கடுகு சிறிசானாலும்னு// காரம் பெருசு

  அட நேற்று தான் இந்த படத்தோட DVD.YA எடுத்து வந்தேன் பார்த்துடலாம் நண்பா..

  ReplyDelete
  Replies
  1. இந்த டக்கால்டி வேலை தான் வேணாம்கிறது

   Delete
  2. ஹாரி இப்போ வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேனே?

   Delete
  3. /இந்த டக்கால்டி வேலை தான் வேணாம்கிறது//

   யோவ் இப்படியே பயபுள்ளைங்க சம்மந்தமே இல்லாம கமென்ட் பண்ணி பண்ணி நான் உண்மையா பேசுற கமென்ட் கூட வேலைக்காக மாட்டேங்குது..

   Delete
  4. //ஹாரி இப்போ வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேனே?/

   கடந்த ரெண்டு வாரமே அந்த சுற்று பயணத்தை முடித்து விட்டு தாயகம் திரும்பி விட்டேன்.. கொழும்பு வரும் போது நேருக்கு நேர் பேச்சு வார்த்தை நடத்தலாம். CINEMAX DVD மூலம் இந்த படத்தோட தமிழ் பதிவும் போட்டு இருக்காப்ல.. மச்சி மறந்து கூட தமிழ் டப் எடுத்துடாதிங்க.. ஆங்கிலமே சிறந்தது.. இப்போ ஜாஸ்தியா கொல்றாங்க..

   இப்போ பூ விக்கிறவன் புண்ணாக்கு விக்றவன் எல்லாம் டப் பண்றான் என்ன பண்ற

   Delete
  5. நாம என்னிக்கும் டப்பிங் பக்கம் போறதில்ல.. அப்பப்போ சன் டிவில ஜாலிக்காக பார்த்தால் உண்டு.. :-)

   Delete
 5. சுருக்கமான 'நச்' விமர்சனம்... நேரம் கிடைக்கும் போது பார்க்க வேண்டும்...

  நன்றி...
  tm4

  ReplyDelete
 6. பார்க்கலாமா வேணாமான்னு யோசிக்சிக்கிட்டு இருந்தன் பாத்துட வேண்டியதான்

  ReplyDelete
  Replies
  1. மிஸ் பண்ணாம பாருங்க ஸ்ரீ .. பிடிக்கும்னு நம்புறேன்.

   Delete
 7. ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சுக்கிட்டிருக்க படம்தான்.. பார்த்துருவோம்!
  Dredd 3Dக்கும் தனி விமர்சனம் உண்டா??

  ReplyDelete
  Replies
  1. ரெண்டும் ஒரே மாதிரி கதை தானே? அப்புறம் எதுக்கு தல தேவையில்லாம? சுருக்கமா கீழ எழுதினதே போதும். டைமிருந்தா சவோய்ல பாருங்க. :)

   Delete
 8. தல இந்தப் படத்த நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே தியேட்டர்ல பாத்தேன். தியேட்டர் சரியில்லையா அல்லது இது தியேட்டர்ல பார்க்கக் கூடிய படமில்லையானு தெரியல. படம் அப்போ "ஓக்கே"னு சொல்ற மாதிரி தான் இருந்தது :-(

  ஆனா அதுக்குப் பிறகு டவுண்லோட் பண்ணிப் பாக்குறப்போ வித்தியாச உணர்வா இருந்தது. என்னடா இதுனு ஒரு குழப்ப பீலிங்...

  ReplyDelete
  Replies
  1. சிலநேரங்களில் எனக்கும் அந்த நிலைமை வந்திருக்கு தல... முதல் தடவை சே..ன்னு தோன்றும் படங்கள் மறுபடி பார்க்கும்போது ஏன் முதல்ல அப்படித் தோணிச்சுங்கற மாதிரி..

   2ம் தடவை உங்களுக்கு பிடிச்சிருந்துதா?

   Delete
 9. பாத்தாச்சுங்கோவ்...!!
  சிறிது காலம் காணாமல் போயிருந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களுக்கு மீள்பதிவு போல் இருந்தது...

  ReplyDelete
 10. பார்த்தாச்சு தல... ஓகே ரொம்ப எதிர்பாத்துட்டனோ

  ReplyDelete
  Replies
  1. ஏன் பாஸ்? படம் அவ்வளவு மொக்கையாவா இருந்திச்சு?

   Delete
 11. நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் நான் பார்த்த அசல் ஸ்டன்ட் படம். சண்டைன்னா இது!!

  ReplyDelete
  Replies
  1. தியேட்டர்ல பார்க்கும் போது இன்னும் சவுண்ட் எஃபெக்டோட செமயா இருந்திருக்குமே?

   Delete
 12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

   Delete
 13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மதுரைத்தமிழரே! :-)

   Delete
 14. ரொம்ப லேட்டா வருறதுல என்னை விட்டா ஆளே இல்லையாம்..இங்கேயும் என்னை கம்பிளேன் பண்றாய்ங்க ரசிகா..
  ரொம்ப நல்லாருக்கு நண்பா..நீங்க படமா பார்த்து வாரம் போஸ்டு போட்டு பட்டைய கிளப்பி விடுறீங்க..வாழ்த்துக்கள்..
  நமக்கெல்லாம் தீபாவளி முடில நண்பா..அதனால் லேட்டா சொல்லுறேன்..தீபாவளி வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. ரொம்பநாளுக்கு அப்புறம் நானும் வந்திட்டு போறேன் அண்ணே!

  ReplyDelete
 16. i watched this movie.. Classis Action Movie

  ReplyDelete
 17. எனக்கும் ஆக்க்ஷன் மூவீஸ் ரொம்ப பிடிக்கும். இந்த படம் என்கிட்ட இருந்தும் பார்க்க தோனல. விமர்சனம் படிச்ச பிறகு பார்கலாமேனு தோணுது. பார்த்திட வேண்டியது தான். விமர்சனம் அருமை நண்பா

  ReplyDelete
 18. Long time no see... வேர் ஆர் யூ நண்பா??

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...