நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Zodiac [2007]

folder

சத்தியமா படத்தைப் பார்த்த பிறகு என்னத்த எழுதுறதுன்னு ஒரு மண்ணும் மண்டைல வரல. (அப்புறம் ஏண்டா எழுதி உசுர வாங்குற) ஜஸ்ட் அன் எம்டி மைண்ட். “பார்த்தேன் மறந்தேன்”. அப்படித் தான் படத்தைப் பார்த்ததும் ஃபீலிங் வருது. சரி …  பார்த்தாச்சு. தோணுற என்னத்தையோ எழுதுறேன். வந்த கடமைக்காக வாசிச்சுட்டு போங்க. என் கடன் பணி செய்துக் கிடப்பதே.

இன்று வரை சான் ஃப்ரான்ஸிஸ்கோ ஏரியாவில் மிகவும் பிரபலமான, இன்னும் மூடப்படாத கொலைக் கேஸ்களில் முக்கியமானதொன்று The Zodiac Killer. 1960ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் San Francisco Chronicle பத்திரிகைக்கு தான் செய்யப்போகும் கொலைகளைப் பற்றி ஏற்கனவே துப்புக் கொடுத்தும் கடைசிவரை அகப்படாமல் தண்ணி காட்டிய ஒரு சீரியல் கில்லர். அவரைப் பற்றி Se7en, Fight Club, Girl with the Dragon Tattoo [2011] படங்களை இயக்கிய டேவிட் ஃபிஞ்சர் கிளறி இருக்கார்னா அதுல ஏதோ ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்னு நினைத்துக் கொண்டே படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். நினைத்தது நடந்ததா? பார்க்கலாம் வாங்க.thumb1ஜுலை மாதம் 4ம் திகதி. அமெரிக்கா தனக்கு சுதந்திரம் கிடைத்ததை வாணவேடிக்கைகளுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இரு கள்ளக் காதலர்கள் தம் காரை எடுத்துக் கொண்டு சிறு கொண்டாட்டம் ஒன்றைப் போட புறப்படுகிறார்கள். ஒரு அவெனியுவில் ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கும்போது திடீரென பின்னால் ஹெட்லைட்டை ஹையில் வைத்துக்கொண்டு வந்து நிற்கிறது ஒரு கார். அந்தப் பெண்ணின் கணவனாக இருக்குமோ என அந்தப் பையன் எண்ணும்போது காரில் இருந்து இறங்கி வருகிறது ஒரு உருவம். டும், டும் …பையனின் ரத்தம் பெண்ணின் முகத்தில் தெறிக்கிறது. சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணிற்கும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.

இது தான் சோடியாக் கில்லரின் இரண்டாவது கொலை. 


போல் அவெரி மற்றும் ரொபர்ட் க்ரேஸ்மித் சான் ப்ரான்ஸிஸ்கோ க்ரோனிக்ள் பத்திரிகையில் ரிப்போட்டராகவும், ஒரு கார்டீனிஸ்டாகவும் வேலை செய்பவர்கள். மேலே சொன்ன கொலை நடந்து ஒரு மாதத்தின் பின்பு பத்திரிகைக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் சோடியாக் எழுதியது போல ஒரு கடிதமும், சில குறியீடுகள் கொண்ட ஒரு கடிதாசியும் இருக்கின்றது. அந்தக் குறியீடுகளை பத்திரிகையில் வெளியிடவேண்டும் என்றும் தவறினால், கொலைகள் தொடரும் எனவும் மிரட்டலிடப்பட்டிருக்கிறது. ரொபர்ட்டிற்கு இந்தக் கொலைகள் மேல் ஆர்வம் இருந்தாலும், கார்ட்டூனிஸ்ட் என்பதால் அவனுடன் விபரங்களை பகிர மற்ற நிருபர்கள் மறுக்கிறார்கள். ஆனால் அந்தக் குறியீடுகளை குறித்துக் கொள்ளும் ரொபர்ட் அவற்றின் மீனிங்கை ஓரளவு கண்டுபிடித்துச் சொல்ல, அவெரி அவனுடன் மற்றத் தகவல்களையும் பகிர ஆரம்பிக்கிறான்.

Zodiac-fanartமேலும் தொடரும் சோடியாக் கில்லரின் கொலைகளைக் கண்டுபிடிக்க நியமிக்கப்படுபவர்கள் டேவ் டோஷி, மற்றும் பில் ஆம்ஸ்ரோங். இவர்கள் முக்கிய சந்தேக நபராக ஆர்தர் லீ என்பவரை குறி வைக்கிறார்கள். ஆனாலும் கையெழுத்து நிபுணர், ஆர்தர் சோடியாக்கின் லெட்டர்களை எழுதவில்லை என உறுதியாக சொல்கிறார். எனவே போதிய ஆதாரங்களில்லாமல் கேஸ் கைவிடப்பட்டாலும், டேவ், அவெரி, ரொபர்ட்டிற்கு அந்தக் கேஸ் மீது உள்ள ஆர்வம் ஒரு அடிக்ஷனாக மாறுவதால், டேவின் பொய் ஆதாரங்கள் சமர்ப்பித்தலால் டிபார்ட்மெண்டில் குறைந்த மதிப்பு, அவெரியின் போதைப் பொருள் பாவனை, ரொபர்ட்டின் கேஸ் மீதான ஆராய்ச்சி என அந்த மூவரின் வாழ்க்கை எவ்வாறு திசை மாறியது என்பது மீதிப் படம்.

கடைசியில் கொலையாளி ஆர்தர் லீயா, அல்லது வேறு யாராவது ஒருவனா? குற்றவாளிக்கு தண்டனை கிடைத்ததா என்பதெல்லாம் படத்தில் சொல்லப்படாது. சில விடயங்கள் உங்கள் கற்பனைக்கு.  (விக்கிபீடியா துணை)zodiac-screenshot-2007-movieடேவிட் ஃபினசர் மீண்டும் கையிலெடுத்த சீரியல் கில்லர் மேட்டர். Se7en ரத்தம், வன்முறை என்றால், Zodiac அவ்வளவாக கொலைகளைப் பற்றி நோண்டாமல், கொலைகளுக்கு பின்னான சம்பவங்களை கையிலெடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட முதல் 45 நிமிடங்களுக்குள் நடக்கும் கொலைகள் எல்லாம் நடந்து முடிந்துவிட, மீதி 2 மணித்தியாலங்களும் இன்க்வயரிஸ், கேஸ் ஃபைல்ஸ், என விசாரணைகளும், சம்பந்தப்பட்ட மூன்று பேரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் எனவும் கழிகிறது …. நமக்கு கிழிகிறது. சோடியாக் கில்லர் பற்றி பார்வையாளனுக்கு நிறைய விடயங்களைக் காட்டுவதாக எண்ணி ரொம்ம்ம்ம்ம்ப பொறுமைய சோதிக்கிறாரு ஃபின்சர். இரண்டொரு இடங்களில் “அடப்போப்பா … எனக்கு ஒரு மண்ணும் வேணாம். போய் புள்ளக் குட்டிய படிக்க வைப்போம்னு” எழும்பத் தோணும். ஆனாலும் கொஞ்சம் பொறுமையாக படத்தைப் பார்த்தால் ஒரு நல்ல த்ரில்லர் உங்களுக்கு. பொறுமை மிகவும் முக்கியம் அமைச்சரே.

படத்தை மிகவும் இன்ட்ரஸ்டாக் கொண்டு போவது மேலே சொன்ன மூன்று பேரும் தான், முக்கியமா ரொபர்ட்டா வரும் கிலன்ஹால். இரண்டரை மணித்தியாலங்கள் தன் தோளில் ஏற்றப்பட்டிருப்பதை உணர்ந்து நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றபடி டௌனியும் வழக்கமானபடி ரசிக்க வைக்கிறார்.

சுருக்கமா சொல்லுவதானால் இப்படம் சோடியாக் கில்லர் பற்றிய ஒரு டாகுமெண்ட்ரியை பார்த்தால் எப்படி இருக்குமோ, அந்த ஃபீலைத் தரக்கூடியது. நேரமிருந்தா ஒதுக்கிப் பாருங்க.


ரேடிங் – 81/100  (நேரத்தைக் குறைத்திருந்தால் கொஞ்சம் கூட்டியிருக்கலாம்)


படத்தின் ட்ரெயிலர்டிஸ்கி  - இதே போல ஜாக் த ரிப்பர்ன்னு ஒரு சீரியல் கில்லரை பேஸ் பண்ணி வந்த படம் From Hell. அதைப் பற்றி நம்ம தல கருந்தேள் அவருடைய ஒரு பதிவில அலசியிருக்காரு. கண்டிப்பா படிச்சிருங்க. படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

 

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்
ஹாலிவுட்ரசிகன்

She's Out of My League [2010]

folder

எப்பவுமே ஒரு நாலைஞ்சு பசங்க ஒன்னு சேர்ந்துவிட்டால், வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு வீதியோரம் உள்ள சின்ன சுவரின் மேலோ,  உட்கார்ந்து கொண்டு வரும் போகும் பெண்களை சைட் அடிப்பது வழக்கமான ஒன்று தானே? அந்த நேரத்தில் க்ராஸ் ஆகிப் போகும் ஃபிகருங்களுக்கு மார்க் போடாத பசங்களே இல்லன்னு சொல்லலாம். (நமக்கு எல்லாம் சந்தானம் சொல்வது போல ரெண்டே டைப் தான். ஒன்னு சூப்பர் ஃபிகரு. இன்னொன்னு … உங்களுக்கே தெரியும்). இந்த ஒரு காரணத்தை வச்சே நிறையப் பசங்க ஹை மார்க் பொண்ணுங்க கூட பேச தயங்குவாங்க (லோ மார்க் நல்லப் பொண்ணுங்கள கணக்கெடுக்காதது வேறு விஷயம்). அப்படியே சூப்பர் ஃபிகரு ஒன்னு ஒருவனுக்கு செட் ஆகிட்டா, நட்பு வட்டத்தில் அவன் தான் ஹீரோ. ஆனாலும் அடிமனதில் அந்தப் பையனுக்கு நம்மள இந்தப் பொண்ணு யுஸ் பண்ணுதான்னு ஒரு சந்தேகம் இருந்துட்டே தான் இருக்கும். கிட்டத்தட்ட இது போன்ற ஒரு கதைக் களத்துடன் இறங்கிய படம் தான் இன்று நாம் பார்க்கப் போகும் She’s Out of My League.


thumb2கெர்க் ஏர்போட்டில் வேலை செய்யும், எதிர்காலம் பற்றிக் கவலைப்படாத, ஒரு சொங்கிக் கூட்டத்தை நண்பர்களாக வைத்திருக்கும் என்னைப் போல ஒரு வீணாப் போனவன். ஏற்கனவே ஒரு பெண்ணால் கழற்றிவிடப்பட்டும், இவன் மூஞ்சிக்கு வேறு ஏதும் மாட்டாதுங்கறதால மீண்டும் அவளை எப்படியாவது கேர்ள் ஃபிரண்டாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இவனுக்கு நண்பர்கள் கொடுக்கும் மார்க் 5.

இந்த நேரத்தில் ஏர்போட்டிற்கு வரும் அழகான பெண்ணான (எத்தன மார்க் போடலாம்னு சி.பி கிட்ட கேட்டுக்கங்க. ஏன்னா அவரு லுக்கே தனி) மொலிக்கு சில உதவிகளைச் செய்யப் போக, ஏற்கனவே கெர்க்குக்கு முழுவதும் நேர்மாறான பொறுக்கியிடமிருந்து பிரிந்து இருக்கும் மொலி இவன் போல ஒரு நல்லவன் தான் நமக்குத் தேவை என டிஸைட் பண்ணுகிறாள். அவளுக்கு 10 மார்க் ரேடிங் போடும் நண்பர்கள் அவனவன் ரேடிங்க்கு 2பாயிண்ட்டுக்கு மேல் உள்ளப் பொண்ண லவ் பண்ணக்கூடாதுன்னும் சொல்றாங்க. ஆனாலும் ரெண்டு பேரும் லவ்வு லவ்வுன்னு லவ்வுறாங்க. இப்ப இதுல இவனின் நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை, எப்படி ஒரு சூப்பர் ஃபிகரு இப்படி ஒரு அட்டுப் பையனுக்கு மடிஞ்சுச்சுன்னு.

thumb4அப்புறம் ஒரு மாதிரி தேடிப் பார்த்து, முன்னாள் காதலன் செய்த ஈகோ டார்ச்சரினால் தான் அவனிடமிருந்து விலகி ஒரு ஆறுதலுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தான் கெர்க்குடன் பழகுவதாக அவனுக்கு அவனின் நண்பர்கள் சொல்ல, “நான் என்ன இளிச்சவாயன்னு நினைச்சு என் தலையில மிளகாய் அரைக்கப் பாக்கிறியா”ன்னு இங்கிலிஷ்ல கெர்க் மொலியிடம் கேட்க, சண்டை மூண்டு இருவரும்  பிரிய நம்மாளு ஹீரோ ”வேணாம் மச்சான் வேணாம் … இந்த மொலியின் காதலு.”ன்னு சொல்லிகிட்டு மீண்டும் பழைய ஃபிகரு கூட செட் ஆகப் பார்க்கிறார்.  
 
கடைசியில் திடீர்னு எப்படி ஃபெரண்ஸுக்கு ஞானம் பிறந்து, மறுபடி கெர்க்-மோலி ஜோடியை சேர்த்து வைக்கிறாங்கங்கறது மீதிக்கதை. 


thumb1பேஸிக்கா இப்படித் தான் கதை இருக்கப்போகுதுன்னு தெரியும் … படம் எப்படி முடியப்போகுதுன்னும் தெரியும். அப்புறம் ஏன் படத்தைப் பார்க்கணும்? ஆன்ஸ்வர் இஸ் வெரி சிம்பிள் – காமெடி. ரொமான்டிக் காமெடிகளை ரசிக்கவென என்னைப் போல ஒரு கூட்டம் இருப்பதால் ஏற்கனவே American Pie போன்ற  சில படங்களில் பார்த்த காமெடியையும், புதுசா கொஞ்சத்தையும் போட்டு கலந்து பிசைந்து கதையை ரெடி பண்ணியிருக்காங்க. (OKOKயும் இந்த டெக்னிக்கோடு தான் களமிறங்கியிருக்கு போல) இதுவே படத்தின் சுவாரஸ்யத்திற்கும், வெற்றிக்கும் காரணம். ஹீரோவின் பர்ஃபோமன்ஸ் போலவே படமும் சில இடங்களில் தடுமாறுது. போகப் போக கடைசியில் வழக்கமான ரொம்கொம்களில் வரும் க்ளிஷேக்களுக்குள் படம் அகப்படுவது கொஞ்சம் போரடிக்க வைக்கிறது.

இந்தப் படத்தில் எனக்குப் பிடிக்காம போன இன்னொரு விஷயம் ஹீரோயினுக்கான மார்க்ஸ். 10 மார்க் ஃபிகருன்னு அந்தப் புள்ளயப் பார்த்து சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர். வேணும்னா அதிகப்பட்சமா ஒரு 7-8 கொடுக்கலாம். அதுக்கு மேல முடியாது. 
 
என்னத் தான் சொன்னாலும் படத்தை ஒருமுறை நிச்சயம் ரசித்துப் பார்க்கலாம். காமெடியுடன் இந்தக் காலத்துப் யூத்துக்கு (முக்கியமா எனக்கு) சொல்லவேண்டிய ஒரு முக்கியமான மெசேஜையும் இந்தப் படம் சொல்லுது. அது என்ன மெசேஜ்னா “யாருமே உன் ரேஞ்சுக்கு ஓவரானவங்க கிடையாது. அவன் ஆண் என்றால், அவள் ஒரு பெண். அவ்வளவு தான்.”

வார இறுதியில் ஃப்ரெண்ட்ஸுடன் அமர்ந்து ஒரு ஜாலியான படத்தை பார்க்கணும்னா இதை லிஸ்டில் நோட் பண்ணி வைங்க.

அம்பானிக்கே கூட நீ மருமகனாகலாம். அதுக்கு தேவை அவருக்கு ஒரு பொண்ணு. உனக்கு கொஞ்சம் டாலண்டு.

ரேடிங் – 65/100


படத்தின் ட்ரெயிலர் -அடுத்தப் பதிவில் சந்திப்போம்

ஹாலிவுட்ரசிகன்.

The Oxford Murders [2008]

The-Oxford-Murders-Movie-Poster

 

இன்று நாம் பார்க்கப் போவது ஒரு அமெரிக்காவில் எடுக்கப்படாத ஒரு ஸ்பெயின் நாட்டுத் திரைப்படம். நடிப்பது ஜோன் ஹர்ட் மற்றும் லோர்ட் ஒவ் த ரிங்ஸ் புகழ் எலிஜா வுட்ஸ்.  இருங்க இருங்க … ஸ்பெயின் நாட்டு படம்னு சொன்னதும் நேக்கு லாங்குவேஜ் ப்ராப்ளம்னு சொல்லிட்டு ஓடிடாதீங்க. படம் ஃபுல்லா இங்கிலிஷ் தான்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


மார்ட்டின் ஆக்போடிற்கு புதிதாக மாற்றமாகி வரும் அமெரிக்க பட்டதாரி. அங்கு படிப்பதற்கு விருப்பம் இருந்தாலும், வர முக்கியமான காரணம் அங்கு பணிபுரியும் தத்துவவியல் லெக்சரரான ஆர்தர் செல்டமை சந்தித்து அவருடன் பணி புரிவதே. தங்கிப் படிப்பதற்கு தன் வயதான தாயாருடன் வாழும் கொக்ஸ் எனப்படும் ஒரு பெண்ணின் வீட்டினைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு லெக்சரில் ஆர்தரை சந்திக்கும் மார்ட்டின் அவரை அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து வருகிறான். ஆனால் வீட்டிற்கு வரும் இருவரையும் வரவேற்பது கொலை செய்யப்பட்ட கொக்ஸின் தாயின் பிணம்!!!

thumb4

சாதாரண கொலை தானேன்னு நாம நினைக்கும்போது ஆர்தர், விசாரணைக்கு வரும் போலிஸிடம் தனக்கு இந்த இடத்தில், இத்தனை மணிக்கு கொலை நடக்கப்போகிறது என்று ஒரு நோட் ஒன்று கிடைத்தது என்று கூற, படம் திசை மாறுகிறது. வரும் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு மண்ணும் புரியாமல் இருக்க, ஆர்தரும் மார்ட்டினும் ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். கொலையாளி கொலைகளைச் செய்வது அவனின் அறிவுத் திறமையைச் சோதிக்கவே என்று ஆர்தர் வாதாடுகிறார். போகப் போக மேலும் கொலைகள் நடப்பது அதிகரிக்க, கொலையாளி ஒரு சீரியல் கில்லராக ப்ரமோஷன் பெறுகிறான். மார்ட்டினுக்கும் அவன் மேல் ஒரு விதமான ஈர்ப்பு, ஆர்வம் வருகிறது.

உண்மையான கொலையாளி யார்? தன் தாயுடன் ஈடுகட்டி வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத கொக்ஸா? அல்லது தாயாரை கவனித்து பின் மார்ட்டினைக் காதலிக்கும் நர்ஸா? அல்லது மார்ட்டின் யுனிவர்சிட்டியில் சந்திக்கும் ஆர்தரால் கைவிடப்பட்ட மாணவனா? அல்லது ஆர்தரா?

thumb1
கொலையாளி இந்தக் கொலைகளைச் செய்வதற்கான காரணம் என்ன? அவனைக் கண்டுபிடிக்க முன் இன்னும் எத்தனைக் கொலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்? ஏதாச்சு சொன்னா படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதுனால நீங்க பேசாம படத்தைப் பாத்துருங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

          
படத்தில் முக்கிய இரண்டு கேரக்டர்களும் அனுபவப்பட்டவர்கள் என்பதால் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை.  எலிஜா வுட்ஸுக்கு லோர்ட் ஒவ் த ரிங்ஸ் படத்தில் போன்ற ஒரு கரெக்டர். மெதுவாக, அமைதியான ஒரு கரெக்டராக ஆரம்பித்து, ஒரு ஒப்ஸெஸிவ் கதாபாத்திரமாக மாறுவது வரை அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஜோன் ஹர்ட்டும் எல்லாம் தெரிந்த ஒரு இன்டலெக்சுவல் ப்ரொபெசராக கலக்கியிருக்கிறார்.

படம் எனக்குப் பிடித்திருந்தது. அதிலும் அந்தக் கடைசி ட்விஸ்ட் நான் எதிர்ப்பார்க்காதது. ஆனாலும் படத்தில் ஏகப்பட்ட கோட்பாடுகள், கணித விஞ்ஞானத் தத்துவ விடயங்களைப் பற்றிப் பேசித் தள்ளுறாங்க. சத்தியமா எனக்கு எல்லாம் புரியல. ஆனாலும் கேட்டுக் கொண்டிருக்க எரிச்சல் வராததால் ஓகே.  படம் முயல் வேகத்தில் பாயாவிட்டாலும், ஆமை வேகத்தில் நகர்ந்து வாயில் கொட்டாவி வரவிடவில்லை.

thumb5
நோட் பண்ணிக்கோங்க … The Butterfly Effect இற்கு படத்தில் முக்கியப் பங்குண்டு. எனக்குத் தெரிந்து பட்டர்ப்ளை எஃபெக்ட் பற்றி நல்லா சொன்ன படங்களில் இதுவும் ஒன்று. 

படத்தை காசு கொடுத்து சொந்தமா டீவிடி வாங்கி எல்லாம் பார்க்கப் போகாதீங்க. எங்காவது HBO, Star Movies மாதிரி டீவி சேனல்ல போட்டாப் பாருங்க. இல்ல இன்டர்நெட்ல டவுன்லோட் பண்ணிப் பாருங்க. ட்விஸ்ட்டுக்காகேவே ஒருமுறை ரசித்துப் பார்க்கலாம். ஒருமுறையிலேயே படம் புரிந்துவிடும். அதனால் முதல்முறை பார்க்கும்போதே ரசித்துப் பார்க்க ட்ரை பண்ணுங்க. இரண்டு மூணு முறை பார்க்கிற அளவுக்கு எல்லாம் இது வெர்த் பீஸ் இல்லைங்க.

My Rating – 61/100விமர்சனம் பிடித்திருந்தால் கீழே திரட்டிகளில் ஒரு ஓட்டுப் போட்டுவிடுங்க. ப்ளீஸ்.அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்,
ஹாலிவுட்ரசிகன்.

Children of Men [2006]

poster_children-of-men-poster

“வணக்கம். இன்று உலகின் மிகவும் இளமையான வயது குறைந்த மனிதனாகிய 18 வயது நிரம்பிய பேபி டியாகோ, ரசிகர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குத்திக் கொல்லப்பட்டார்”. ஒரு காபி ஷாப்பில் இந்த செய்தியை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை சுற்றி கூட்டம் சோகமாக பார்த்துக் கொண்டிருக்க, அமைதியாக வந்து முகத்தில் எந்த சலனமுமில்லாமல் காபி வாங்கிக்கொண்டு வெளியே செல்கிறான் தியோ. அவன் வெளியேறி பத்தடி தூரம் தான் நடந்திருப்பான் ……. டூம். எங்கும் புகை மண்டலம். புகைக்குள்ளால் இருந்து ஒரு பெண் தன் பிய்ந்து கிடக்கும் கையை மறுகையில் ஏந்தியவாறு வெளியே வருகிறாள்.

children_of_men_explosion

Children of Men திரைப்படத்தின் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

வருடம் 2027. வானுயர்ந்த கட்டிடங்கள், பறக்கும் கார்கள், வித்தியாசமான உடையணிந்த விகாரமடைந்த மனிதர்கள் என்று எந்தவிதமான ஹாலிவுட் ஃபியுச்சரிஸ்டிக் படமொன்றின் சம்பிரதாயங்களையும் கடைபிடிக்காமல், நாம் இன்று வாழும் உலகத்தைவிட கொஞ்சம் முன்னேறிய ஒரு உலகில் இடம்பெறுகிறது இந்தப் படம். அணுகுண்டு வெடிப்பு ஒன்றின் கதிரியக்கத் தாக்கத்தின் மூலமாக ஒட்டுமொத்த பெண்களுக்கும் இனவிருத்தி செய்யக்கூடிய திறன் இல்லாது போகிறது. கடைசியாக 18 வருடங்களுக்கு முன் பிறந்த பேபி டியாகோவும் இறந்துவிட்டான். கொஞ்சம் கொஞ்சமாக மனித இனம் நம்பிக்கையற்றுப் போகிறது. நேரம் மட்டு மட்டாகிறது. எதிர்காலச் சந்ததி என்ற ஒரு விடயம் இல்லாதவிடத்து முன்னேற்றத்தில் என்ன பயன் கைவிட்டுவிட்டு எல்லோரும் தம் வாழ்க்கையை சிவனே எனக் கழிக்கிறார்கள். உலகநாடுகள் எல்லாம் போரினாலும், கலகத்தினாலும் உடைந்து நொறுங்குகின்றன.

லண்டன் நகரம் …. நீதியை நிலைநாட்ட தீவிரமாக முயற்சிக்கிறது. தீவிரவாதிகள், சட்டத்தை மீறி குடியேறியவர்கள், வதிவிடம் கேட்டு அகதிகளாக வருபர்களினதும் எண்ணிக்கை அதிகமாகி தவிக்கிறது. வீதிகள் எங்கும் குப்பை. சட்டத்தை மீறி நகரினுள் குடியேறப் பார்க்கும் அகதிகள் கூடுகளில் அடைக்கப்பட்டு கிடக்கின்றனர். அடைக்கலம் என்ற பெயரில் அவர்களுக்கு பசியும், கொஞ்சம் அளவு மீறினால் துப்பாக்கிச் சூடுமே அவர்களுக்கு மிஞ்சுகிறது.

thumb1

இது ஒருபுறம் இருக்க நம் ஹீரோ தியோவை அவனது முன்னாள் மனைவி ஜுலியன் தொடர்பு கொள்கிறாள். ஜுலியன் ஃபிஷஸ் எனப்படும் குடியேற்றவாசிகளின் உரிமைக்காக போராடும் ஒரு தீவிரவாதக் கும்பலின் ஒரு முக்கிய உறுப்பினர் என்றும், கீகீ எனப்படும் ஒரு கறுப்பின சட்டவிரோத குடியேற்றப் பெண்ணை The Human Project எனப்படும் ஒரு குழுவிடம் சேர்த்துவிட அவனின் உதவியை நாடுகிறாள். இவர்கள் பயணிக்கும் கார் திடீரென தாக்குதலுக்கு உண்டாக  ஒரு திடீர் மரணம். தப்பித்து வரும் மீதி பிஷஸ் கூட்டத்தின் ஒரு வீட்டில் தங்குகிறார்கள். அப்படி கீகீல என்ன விசேஷம்னா அவங்க பர்மனன்ட் ஆகியிருக்காங்க. இல்ல இல்ல ப்ரெக்னன்ட் ஆகியிருக்காங்க. (ஐயோ என்னதான் சீரியஸா எழுத ட்ரை பண்ணினாலும் தானாவே மொக்கை போட வருதே). இதை தெரிந்து கொள்ளும் தியோ இவளுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறான்.

இப்ப ஒரு சிக்கல். இப்பொழுது கீகீ அரசாங்கம், ஃபிஷஸ் இருவருக்கும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிக முக்கியமான ஒரு சாதனம். அரசாங்கத்தின் கையில் கீகியின் பிள்ளை கிடைத்தால் சிலவேளை அவளின் கர்ப்பம் மறைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கான ஒரு பொருளாகிவிடுவாள். ஃபிஷஸ் கையில் கிடைத்தால், அவளின் குழந்தை அவர்களின் போராட்டத்திற்கு ஆட்களை சேர்க்க மிகவும் உதவும். அதுமட்டுமில்லாமல் கீகீயும் ஒரு சட்டவிரோத குடியேற்றவாசி என்பது அவர்களுக்கு கூடுதல் பலம். இதை அறிந்துகொள்ளும் தியோ, கீகீயுடன் அவ்வீட்டிலிருந்து தப்பித்துச் செல்கிறான்.

children-of-men-arizona

போராட்டம் உச்சக்கட்டத்தில் நடக்கும் ஒரு பகுதி, அகதி முகாம், இடையில் கீகீயின் பிரசவம் எனப் பல சிக்கல்களைத் தாண்டி இருவரும் எவ்வாறு The Human Project கூட்டத்தை அடைந்தனர் என்பதை மீதிக் கதை சொல்கிறது.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் எனக்குப் பிடித்த, ஆனால் கொஞ்சம் டிஸ்டர்பான விஷயம் என்னான்னா, நம்ம உலகம் எதிர்காலத்தில் எவ்வாறு மாறக்கூடியது என்று கொஞ்சம் அதிகமாக நம்பக்கூடிய விதத்தில் காட்டியது தான். ஒரு பக்கம் 2012ல உலகம் அழியுங்கிறாணுங்க. அணு ஆயுதம் டெஸ்டிங்னு மற்றப்பக்கம். போகிற போக்கைப் பார்த்தால் படத்தில் உள்ளது போல் உலகம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (சிலவேளை உலகம் இப்படித் தான் அழியுமோ?)

கதையும் திரைக்கதையும் பக்கா. படம் முடிந்தபின்னும் படத்தின் சில காட்சிகள் உங்கள் மனதில் நிற்கும். அது படத்தின் வெற்றி. நான் அகதி முகாம்களில் நடக்கும் அக்கிரமங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எப்படியிருக்கும் என்பது ஓரளவு இந்தப் படத்தைப் பார்த்த பின்பு தான் தெரிகிறது. இதுவே அப்படியென்றால் இலங்கையில், ஈராக்கில் நடந்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தால் ஈரக்குலையெல்லாம் நடுங்குகிறது. (டௌப்ட்டு படத்தில் 1மணி 23 நிமிடத்தில் ஒரு சிங்களப் பெண் இறந்த தன் மகனை மடியில் கிடத்தி சிங்களத்தில் ஒப்பாரி வைப்பது போன்ற ஒரு சீன் வருது. இதற்கு என்ன அர்த்தம்?)

children-of-menபடம் முழுவதும் சினிமேட்டோகிராஃபி புகுந்து விளையாடுகிறது. எம்மானுவேலின் ஹேன்டிகெம்மும், டைரக்டர் குவாரோனின் லாங்ஷாட்கள், செட்கள், ஷ்பெசல் எஃபெக்ட்கள் படத்திற்கு பெரும் பலம். நடிப்பு பற்றியெல்லாம் பேசி இந்த பதிவை இழுக்க விரும்பவில்லை. ஆனால் மெயின் கேரக்டர் எல்லாரையும் விட எனக்கு ஜேஸ்பராக வரும் மைக்கேல் கெயினின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுவதும் இல்லாவிட்டாலும் வரும் இடங்களில் இவரின் ஆட்சி தான்.

சுருக்கமா படத்தைப் பற்றிச் சொல்லணும்னா, நீங்க கட்டாயம் பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று. ஏன்னா மனிதாபிமானத்தின் நிறைய பக்கங்களை சுரண்டிப் பார்க்கும் வகையில் அழகாக செதுக்கபட்ட திரைக்கதை நிச்சயம் ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.


படத்தின் ட்ரெயிலர் -My Rating – 84/100எக்ஸ்ட்ரா பிட்டு

கைய வச்சிகிட்டு சும்மா இருக்கமுடியாத ஒரு பயபுள்ள ஹிட்ச்காக்கின் Rear Window படத்தை வெட்டிக் கொத்தி ஒட்டி கிட்டத்தட் அனேகமான படத்தை 3 நிமிடங்களுக்குள் செதுக்கியிருக்கு. படத்தைப் பார்த்தவர்கள் இதையும் பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லுங்க. மேலதிக டீடெயில்களுக்கு இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க. (மூக்கு பொடப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கத் தோணும்)


 

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை,

ஹாலிவுட்ரசிகன்

கணனியில் இருக்கும் திரைப்படங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி? Part III

top15movies

முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சு …. சிலபேரு என்ன திடீர்னு Part IIIயப் போடுறான். மொத ரெண்டு பாகங்களும் எங்கன்னு நினைக்கலாம். என்ன சரக்கை அடிச்சுட்டு இருந்தேனோ தெரியல. ஏற்கனவே போட்ட Part III பதிவ ஒழுங்கா டைப் செய்து வச்சுட்டு ஏதோ நினைப்புல மீண்டும் Part Iல இருந்ததையே காப்பி செய்து பேஸ்ட் பண்ணித் தொலைச்சிருக்கேன். நல்லவேளை … தளம் அப்போது ஆரம்பக்கட்டத்தில் இருந்ததால் (இப்ப மட்டும் பிரபல பதிவர் ஆகிட்டதா நினைப்போன்னு நீங்க கேட்பது புரியுது) வந்தவங்களும் பெரிசா நோட் பண்ணல. பண்ணினாலும் குறை சொல்லி டிஸ்கரேஜ் பண்ண விரும்பலன்னு நினைக்கிறேன். எப்படியோ தப்பிச்சுட்டேன். ஆனா பாருங்க … பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்னு நம்ம பாட்டி அடிக்கடி சொல்லுவாங்கங்க. அது மாதிரி நண்பர் மூவேந்தன் வாசித்துவிட்டு தவறை சுட்டிக்காட்டியிருந்தார். அதுனால அரைகுறைல விட்டுவிடக்கூடாதுன்னு இப்ப முடிச்சிங் … அவருக்கு March 3ம் தேதி ஒரு வாரத்தில் எழுதுறேன்னு சொல்லி இப்ப ஒரு மாசத்தின் பின் எழுதிக் கொண்டு இருக்கேன். இப்பவே சோம்பேறித் தனம் கூடுது.

முதல்ல இதுவரைக்கும் இதற்கு முந்திய பாகங்களைப் படிக்காதவங்க, கீழே க்ளிக் பண்ணிப் படித்துக் கொள்ளவும்.

முதல் பாகம்   |   இரண்டாம் பாகம்

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


ஓகே … அட்டென்ஷன் ஸ்டுடன்ஸ். லெட்ஸ் பிகின் தி லெசன். கடைசியா எங்க விட்டேன்?  ஆங் … இன்னிக்கு XBMCஐ எவ்வாறு நிறுவி படங்களை சேர்ப்பது என்பது பற்றிப் பார்க்கலாம்.

பொறுத்தார் பூமி ஆள்வார் அப்படின்னு எங்க பாட்டி சொல்லல … யாரோ சொல்லி வச்சுட்டு போயிட்டான். இப்ப ஏன் சம்பந்தமில்லாம இந்தப் பழமொழின்னா முந்தாநாள் தான் XBMCயின் புதிய உறுதி பதிப்பான XBMC 11.0 Eden வெளியிடப்பட்டது. சோ இதோ உங்களுக்கு அப்டேடட் டுடோரியல். புதிய பதிப்பில் நிறைய விடயங்களைச் சேர்த்ததாக சொல்றாங்க.  டவுன்லோட் செய்து யூஸ் பண்ண விரும்புறவங்க இங்கு க்ளிக் செய்து உங்களுக்கு மேட்ச் ஆகும் ஒபரேடிங் சிஸ்டத்தை செலக்டி இன்ஸ்டால் பண்ணிக்கவும். இப்பதிவை வாசிப்பவங்க எல்லாம் கம்ப்யூட்டர் ஜீனியஸ் என்ற எண்ணத்தில் இன்ஸ்டால் பண்ணுவது எப்படின்னு சொல்லவில்லை.

ஏதாச்சு பிரச்சினை வந்துச்சுன்னா உதவிக்கு இங்கே க்ளிக்கவும் இல்ல என்னைக் கேட்கவும்.


இன்ஸ்டால் பண்ணிவிட்டு ஓபன் பண்ணினால் இப்படித் தான் அனேகமாக ஹோம் ஸ்கிரீன் வரவேண்டும்.

screenshot000

இப்போ மேலத் தெரியுறது தான் XBMCயுடன் வரும் confluence எனப்படும் default ஸ்கின். உங்களுக்கு வேண்டியது போல ஸ்கின்ஸை இன்டர்நெட்டிலோ, XBMC Forumஇல் அல்லது Addons இலோ சென்று பிடித்த வேறு ஸ்கின்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். நான் பாவித்துக் கொண்டிருக்கும் ஸ்கின்னான AEON MQ3ஐ XBMC Forum இல் சென்று டவுன்லோட் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

பின்னர் ஹோம் ஸ்க்ரீனில் அம்புக்குறி மூலம் Files என்ற டேப்பிற்கு சென்று, அங்கு Add Videos என்ற ஆப்சனை செலக்ட் செய்தால் வரும் பாக்ஸில் Browse என்பதை க்ளிக் செய்து உங்கள் திரைப்படங்கள் உள்ள ஃபோல்டரை தெரிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் sourceற்கு ஒரு பெயர் கொடுத்துவிட்டு ஓகே செய்தால் படங்கள் உங்கள் லைப்ரரியில் சேர்க்கப்படும். ஏற்கனவே படங்களை பாகம் இரண்டில் சொன்னபடி Ember Media Managerவில் போட்டு டிங்கரிங் செய்து வைத்திருந்தால் படங்கள் நேராக அழகாக ஒழுங்குபடுத்தப்படும்.

screenshot001 

இல்லாவிட்டால் XBMCஇல் இருக்கும் ஸ்க்ரேப்பர் ஆட்டோமேடிக்காக அந்தப் படம் பற்றித் தேடி விடயங்களை காட்டும். ஆனால் அந்தந்த ஃபைல்கள் அந்தந்த ஃபோல்டர்களுக்குள் வருமோ தெரியாது (நான் ஆரம்பத்தில் இருந்து Ember Media Manager முறையைத் தான் பாவிக்கிறேன்). இந்தமுறையில் சிலநேரங்களில் இருக்கும் படம் ஒன்றாகவும் காட்டும் படம் வேறாக மாறிவிடவும் வாய்ப்புக்கள் உண்டு. இல்லாவிட்டால் என்றைக்காவது format செய்தால், மீண்டும் படங்களைப் பற்றிய தகவல்களை இன்டர்நெட்டில் டவுன்லோடி சேர்க்க வேண்டி வரும். பீ கேர்ஃபுல்.

screenshot004 
இது வெறும் திரைப்படங்களை மட்டும் ஒழுங்குபடுத்தாமல், தொலைக்காட்சி நாடகங்கள், வீடீயோ கேம்களை ஓபன் செய்வதற்கான Launchers, காமிக்ஸை படிக்க add-on எனப் பலவும் கொட்டிக்கிடக்கின்றன். ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக என்னவோ போல இருக்கும். பழகியவுடன் Interface எவ்வளவு ஈஸியாக இருக்கிறது என்பது புரியும். சரியாக தேடிப் பார்த்து தேவையானவையையும் இதற்குள்  இணைத்துவிட்டால் நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கட்டாயம் கிடைக்கும்.

இவ்வளவு நேரம் படங்களை சேர்ப்பது பற்றிப் பேசினோம் தானே? இனி தொலைக்காட்சி நாடகங்களை சேர்ப்பது பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

இந்த ஸ்டெப் நீங்க டவுன்லோட் செய்த எபிசோட்களை அழகாக பெயரிட்டுக் கொள்ள மட்டுமே. தேவையில்லையென்றால் ஸ்கிப் பண்ணவும். (நாங்க பதிவையே ஸ்கிப் பண்ணப் போறோம். நீ ஸ்டெப் பத்திப் பேசிக்கிணு கீற) முதலில் TVRenamer எனும் சாஃப்ட்வேரை இந்தத் தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்க. பிறகு டவுன்லோட் செய்த ஃபைல்களை அதற்குள் இழுத்து ட்ராப் பண்ணிட்டு, பிறகு சரியான தொலைக்காட்சி நாடகத்தை தெரிவு செய்து விட்டு Look up titles online க்ளிக் பண்ணினா, எபிசோட்கள் சரியாக ரீநேம் செய்யப்படும். முக்கியமான விடயம், எல்லா ஃபைல் பெயர் ஆரம்பமும் நாடகத்தின் பெயருடன் தொடங்கவேண்டும். (கீழே லிஸ்டில் முதல் என்ட்ரியைப் பார்க்க)

screenshot005


அடுத்ததாக Ember Media Managerஇல் சென்று இரண்டாம் பாகத்தில் கூறியது போல நாடகங்களை சேர்த்துக் கொள்ளவும். இல்லை ஏற்கனவே நாடகங்கள் சேவ் செய்து இருக்கும் இடத்தை தெரிவு செய்து வைத்திருந்தால் Update Library எனும் பட்டனை க்ளிக் செய்யவும்.

screenshot006
அப்பேட் ஆகியவுடன் அந்த நாடகத்தை க்ளிக்கி ரைட் க்ளிக் செய்து Rescrape Show என்ற ஆப்சனை செலக்டவும்.

screenshot007


வரும் பாக்ஸில் சரியான நாடகத்தை தெரிவு செய்து கொள்ளவும். (நான் ஏற்கனவே இதை செய்து விட்டதால் ஸ்க்ரீன்ஷாட் ஸ்கிப்). அப்புறம் சில படங்கள் டவுன்லோட் ஆகும். முடிந்ததும் உங்களுக்கு பிடித்த நாடகத்திற்கான போஸ்டர், பேக்ரவுண்ட் இமேஜ், மற்றும் ஒவ்வொரு சீசனிற்கான போஸ்டர், பேக்ரவுண்ட் இமேஜ் போன்றவற்றை தெரிவு செய்து விட்டு ஓகே பண்ணுங்க.

screenshot014
அடுத்தா நாடகத்தின் டீடெய்ல்ஸ் உடன் ஒரு பாக்ஸ் தோன்றும். உங்களுக்கு ஏதாவது information சேர்க்க வேண்டியிருந்தால் அதை போட்டுவிட்டு ஓகே செய்யவும். இப்பொழுது நாடகம் தயார்.

screenshot015ஸ்ஸ்ஸ்ஸ் … பெரிய வேலை முடிந்தது. உங்களிடம் ஸ்டாக் இருக்கும் நாடகங்கள், மற்றும் உங்க நெட் ஸ்பீடு பொறுத்து நாடகத்தை சரிக்கட்டும் நேரம் மாறுபடும்.

ரைட்டு … இனி மீண்டும் XBMCக்குள் நுழைங்க. ஹோம் ஸ்க்ரீனில் Videos மெனுவிற்கு கீழே Files என்று ஒரு லிங்க் இருக்கும். அதை க்ளிக்கி அதில் Add Videos என்ற ஆப்சனை தெரிவு செய்ங்க. (மேலே படங்களுக்கு செய்தது போல) அதில் நாடகங்கள் இருக்கும் ஃபோல்டரை ப்ரௌஸ் செய்து செலக்ட் பண்ணி Add செய்துவிட்டு அடுத்த ஸ்டெப்பில் கீழே உள்ளவாறு Directory Contains என்ற இடத்தில் TV Shows என்று மாற்றிக் கொள்ளுங்க.

screenshot008


இப்பொழுது உங்க மீடியா லைப்ரரியை Refresh செய்யவா என XBMC கேட்கும். யெஸ் என்று கட்டளையிட்டு விட்டு வெயிட் பண்ணுங்க.

தாட் இஸ் ஆல் ... அம்புட்டுத் தேன்.ஆல் இஸ் வெல். இப்பொழுது மெயின் மெனுவிற்கு சென்று அதில் TV Shows செக்சனிற்குள் என்டர் ஆகினா உங்க நாடகங்கள் அழகாக காட்சியளிக்கும். முதல் பதிவில் சொன்னபடி வேண்டிய Viewஐ தெரிவு செய்து என்ஜாய்.

screenshot009

என் டிவி சீரீஸ் கலெக்சன்XBMCயில் கொஞ்சம் பிடித்துக் கொண்டால் என்னென்னமோ செய்யலாம். அதெல்லாம் இங்க சொல்லமுடியாது. ஆரம்பிச்சு வச்சுட்டேன். இனி நீங்க அப்படியே Touchக்கு வந்து எக்ஸ்பர்ட் ஆகவேண்டியது தான்.

இனி யாரும் வார்த்தை தவறிவிட்டாய் ஹாலிவுட்ரசிகான்னு யாரும் சொல்லமுடியாது. ஓகே … ஆரம்பித்ததை முடிச்சாச்சு.


பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இந்தப் பதிவும் தொடரும் பிரயோசனமானதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தா திரட்டிகளில் ஓட்டுப் போட்டுவிடுங்க. இல்ல கீழே பிடிக்காத விடயத்தை கூறி திட்டிவிட்டு சரிப் போங்க.


டிஸ்கி – குமரன் குமரன்னு ஒராள் இருந்தாரு. திடீர்னு சொல்லாம கொல்லாம காணாம போயிட்டாரு. எந்தப் பதிவுலும் காணோம். யாருக்காச்சு என்ன விஷயம்னு தெரியுமா? தெரிஞ்சா கமெண்ட் ஒன்னு போட்டுவிடுங்க.அடுத்து ஒரு விமர்சனத்தில் சந்திக்கும் வரை,

ஹாலிவுட்ரசிகன்