நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Fracture [2007]

folder

 

கிட்டத்தட்ட மூணு நாளா பிரிச்சு பாத்துட்டுருக்கேன் இந்தப் படத்த.  அட … அதுக்காக படம் 3 ரொம்ம்ம்ப லெங்த்ன்னு நினைக்காதீங்க. படம் கொஞ்சம் ஸ்லோ டைப். அவ்வளவு தான். ஹாவ்வ்வ்

முதல்ல படத்தின் போஸ்டரைப் பார்த்ததும் எதுவுமே யோசிக்கல … படத்தை டவுன்லோட்ல போட்டுட்டேன். காரணம் மேல பாத்தா உங்களுக்கே தெரியும். ஹாலிவுட்டின் வளர்ந்த மற்றும் வளரும் நட்சத்திரங்கள். வெறும் அன்தோனி ஹொப்கின் படம்னாலே விசேஷம் தான். ரையன் கோஸ்லிங்கும் இவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம்னா அப்புறம் யோசிக்க என்ன இருக்கு?

thumb2

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டெட் ஒரு திறமையான கட்டுமானர் … ச்ச்ச் எஞ்சினியருங்க. அவரு ஒரு நாள் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு தன் இளவயது மனைவி தங்கியிருக்கிறாள் என நினைக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு செல்லும் செல்ல, அங்கு அவள் ஒரு நனெலி எனும் போலீஸுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதைப் பார்த்து  அறிந்துகொள்கிறான். மற்றவர்கள் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் மெதுவாக வீடு வரும் டெட், மனைவி வீட்டிற்கு வந்தவுடன் அதைப் பற்றிப் பேசிவிட்டு துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான்.

சத்தம் கேட்டு அங்கிருப்பவர்கள் தகவல் தெரிவித்ததும் போலிஸ் படை விரைகிறது. அவர்களுடன் வருவது மேலே பார்த்த அதே நனெலி. அவன் வந்ததும் சுடப்பட்டது அவனின் காதலி என அறிந்ததும் டெட் மேலே கோபமாகப் பாய்ந்து தாக்குகிறான். ஆனால் டெட் சமாதானமாக துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு தான் அவளைச் சுட்டதாக வாக்குமூலமும் கொடுத்துவிடுகிறான். ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் செல்லப்படும் டெட்டின் மனைவி புல்லட் தலைக்குள் இருப்பதால் கோமா நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

நகரின் இன்னொரு மூலையில் உள்ள ஆபிஸில் வக்கீல் வில்லி பீச்சம் தனது பெட்டிகளை அடுக்கிவைத்து விட்டு இன்னொரு நல்ல சம்பளத்துடன் கூடிய ப்ரைவேட் கம்பெனிக்கு செல்ல ஆயத்தமாகிறான். வில்லி வெற்றி பெறக்கூடிய கேஸ்களை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தன் நண்பர்களிடம் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்ல வேலை கிடைக்கக் காரணம். புறப்படப்போகும் வில்லிக்கு  கடைசியாக அட்டெண்ட் பண்ணவேண்டி வருவது டெட்டின் மர்டர் வழக்கு.

thumb3

குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலமும், போதிய சாட்சியங்களும் இருப்பதால், அன்றே டக்கென்று வழக்கை முடித்துக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி, நம் “லெக்டரை” சாதாரணமாக எடைபோட்டுச் செல்லும் வில்லி டெட் கோர்ட்டில் தனக்கு வக்கீல் தேவையில்லை. தானே வாதாடிக்கொள்கிறேன் என்றதும் சிரித்தாலும், ஒத்திவைக்கப்படும் கேஸ் மீண்டும் கோர்ட்டில் ஆரம்பிக்கும்போது டெட் ஒரே வசனத்தில் கேஸை திசை மாற்றிவிட டெட்டின் சாமர்த்தியம் வில்லிக்கு தெரியவருகிறது. மேலும் அவன் டெட்டை கைது செய்யும்போது பறிக்கப்பட்ட துப்பாக்கி ஒருமுறைகூட பாவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தெரியவர, அப்பொழுது தான் வில்லிக்கு அவன் எவ்வளவு பெரிய க்ரிமினல் மாஸ்டர் மைன்ட் ஒருவனுடன் மோதிக் கொண்டிக்கிறான் என்பது தெரியவருகிறது.

அப்படி டெட் என்ன தான் சொன்னான்? துப்பாக்கியால் டெட் சுட்டானே? அப்புறம் எப்படி துப்பாக்கி ஒருமுறை கூட சுடப்பட்டிருக்கவில்லை எனக் கூறினார்கள்? தெரிஞ்சுக்க வேண்டியவங்க படத்தைப் பார்த்துக் கொள்ளுங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

Fracture-thumb-560xauto-24063

படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு (ஒரே??) விஷயம்,  நடிப்பு. மனுஷனுக்கு ஹானிபல் லெக்டரில் வந்தா மாதிரி “சிரிப்பிலேயே பயமுறுத்தும் புத்திசாலி” கரெக்டர். லெக்டர் அனுபவமும் கைகொடுக்க சும்மா அல்வா சாப்பிடுவது போல பிச்சு உதறிட்டாரு. சுற்றி இருப்பவங்களை வசனங்கள் மூலம் தன்வழிப்படுத்தும் இடங்கள் எல்லாம் சூப்பர். ரையனும் (Drive) நீ சீனியரா இருந்தாலும், எனக்குள்ளும் திறமையிருக்கு என அந்தோனிக்கு ஈடு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் படம் பற்றி சொல்லணும்னா, அதப் பற்றி அழகா படத்திலேயே ஹொப்கின்ஸ் சொல்லியிருப்பாரு. “எதையும் கவனமாக உற்றுப் பார்த்தால், எல்லாப் பொருட்களுக்கும் அவற்றை உடைக்கக்கூடிய ஒரு வீக் பாயிண்ட் உண்டு.” இப்படமும் அப்படித் தான். பலமான நடிப்பு துணையாக இருந்தாலும் வீக்கான திரைக்கதை கொஞ்சம் சலிப்படைய வைத்துவிடுகிறது.(இப்ப புரிஞ்சுதா ஏன் மூணு நாளுன்னு?)

DF-01993
Fracture
, 
March 15, 2005
Photo by Sam Emerson/newline.wireimage.com

To license this image (7793174), contact NewLine:
U.S. +1-212-686-8900 / U.K. +44-207-868-8940 / Australia +61-2-8262-9222 / Japan: +81-3-5464-7020
+1 212-686-8901 (fax)
info@wireimage.com (e-mail)
NewLine.wireimage.com (web site)

கதையைப் பற்றி சொல்லணும்னா, ஒன்னும் தேடத்தேவையில்ல. கடைசியா சொன்ன Girl with the Dragon Tattoo போலத் தான். மெதுவான திரைக்கதை. ஒரு சீனைத் தவிர இடையில லவ் சீன்கள் போடாமல் விட்டது வரவேற்கத்தக்கது. ஹீராயினும் தன் பங்குக்கு கொஞ்சம் பேசினாங்க, கட்டில்ல இருந்து எழும்பினாங்க. அப்படியே எஸ்ஸாயிட்டாங்க. மற்றபடி பொண்டாட்டியா வர்றவங்களுக்கும் The Descendants படத்தின் அம்மா மாதிரி பெரிசா வேலையில்லை. படம் முழுவதும் அப்படியே கோமா ஸ்டேஜில் இருக்கவேண்டிய நிலைமை.  பெரும்பாலும் ஹீரோவும் வில்லனும் மாத்தி மாத்தி பேசிக்கிணேயிருக்காங்க. ஆனா ஹொப்கின்ஸின் புத்திசாலித்தனமான டயலாக் எல்லாம் ரசிக்கக் கூடியவை. இடைவேளை வரை கொஞ்சம் நொண்டியடிக்கும் கதை, அதன் பின் எழுந்து நிற்கிறது. இறுதியில் க்ளைமேக்ஸிற்கு கொஞ்சம் முன்னிலிருந்து ஓடுகிறது.

எனிவே … அந்தோனி ஹொப்கின் ரசிகர்கள் ரசித்துப் பார்க்கலாம். த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் … ஹ்ஹ்ஹ்ம்ம்ம் பார்க்கலாம்.

படத்தின் ட்ரெயிலர் :

 

**********************************************************

முழுப்படத்தையும் ஆன்லைனில் பார்க்க இங்கே

**********************************************************

டிஸ்கி ட்ரெயிலர் -

ரிட்லி ஸ்கொட்டின் இயக்கத்தில் வரவுள்ள Prometheus திரைப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெயலர். ட்ரெயிலரின் அடிப்படையில் செமயான என்டர்டெயினராக இருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

 

 

அடுத்த பதிவில் சந்திக்கும்வரை,

ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

10 comments:

 1. சுமார் தானா .... லிஸ்ட்ல இருக்குற எல்லா படமும் பாத்துட்டு வேணும்னா ட்ரை பண்ணலாம்..

  ReplyDelete
 2. @...αηαη∂....

  எனக்கு சுமாராத் தான் தெரியுது. Try when youu have time to spare.

  ReplyDelete
 3. அவ்வளவு மெதுவான படமா..??? 3 நாளா பார்த்து இருக்கேங்க.. ப்ரீ டைம்ல ட்ரை பண்ணி பார்போம்.

  ReplyDelete
 4. கதை நல்லாத்தான் இருக்கு பாத்துட வேண்டியது தான்

  ReplyDelete
 5. கதை வாசிக்க நல்லா இருக்கு நண்பா.. ஆனா நீங்க திரைக்கதையை பத்தி சொன்னதுக்கப்புறம் பார்க்குறதா? வேணாமா?ங்கற கன்பியுஷன் வந்துகிட்டே இருக்கு!

  ReplyDelete
 6. உங்க ரேட்டிங் எங்கே காணோம்?

  ReplyDelete
 7. @JZ

  நல்ல நுணுக்கமான பார்வை JZ உங்களுக்கு. எப்படியும் நான் ரேட் பண்ணினா குத்துமதிப்பா ஒரு 65 கொடுக்கலாம். சிலவேளை உங்களுக்குப் பிடிக்கலாம்.

  ReplyDelete
 8. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுத முயற்சிக்கலாம். நீங்கள் எழுதியதை ரசிக்க வேண்டுமென்றால், ஏற்கனவே ஹாலிவுட் பட அறிவு கொஞ்சம் தேவைப்படும் என்பது என் தாழ்மையான கருத்து.

  ReplyDelete
 9. சில நாட்களாக சில கோளாருகள்..அதனால், இணையப்பக்கம் வர முடியவில்லை.ஸொ மன்னிப்புகள் பல.
  விமர்சனம் படிக்க ரசித்தேன்.ஹோப்கின்ஸ் எனக்கும் ரொம்ப பிடித்த நடிகர்..படம் பார்க்க டிரை பண்றேன்.வாழ்த்துக்கள்.நன்றி.

  ReplyDelete
 10. ஏற்கனவே படத்தை பார்த்த மாதிரி இருக்கு. விமர்சனம் நன்று.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...