நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Three Musketeers [2011]

folder

வெயிட் … இதுக்கு முன்னாடி நீங்க அலெக்ஸாண்டர் டுமாஸின் The Three Musketeers நாவலைப் படித்திருக்கீங்களா? …. என்னது இல்லையா? உங்களுக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் இருந்தால் அல்லது படத்தின் உண்மையான கதையைத் தெரிந்து கொள்வதில் இன்ட்ரஸ்ட் இருந்தால் கீழேயுள்ள லிங்கில் சென்று ஆன்லைனிலோ, அல்லது டவுன்லோட் பண்ணி உங்கள் ஈபுக் ரீடரில் அல்லது மொபைலில் வாசித்துக் கொள்ளுங்கள். அட்லீஸ்ட் படத்தைப் பார்க்கும் முன்பு நம் கதாநாயகர்களைத் தெரிந்து கொள்வது இன்னும் பெட்டர்.

புத்தகத்தை இங்கே க்ளிக்கிப் பெற்றுக் கொள்ளுங்கள்

இல்லை … நான் ரொம்ப பிஸி. நான் படத்தைப் பார்த்து ஆங்கில லிட்டரேச்சர் படித்துக் கொள்கிறேன் என்பவர்கள் கீழே படிங்க. ஆனா சொல்லிட்டேன் … ஒரிஜினல் கதைக்கு மசாலா தூவி(கொட்டி) உல்டா பண்ணி சமைக்கப்பட்டதே இந்தப் படம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
டார்டக்னன் (தமிழ்ல பெயர் சரியா?) மஸ்கட்டியராக வேண்டும் என்ற கனவுடன் கிராமத்திலிருந்து நகரிற்கு வருகிறான். வந்த இடத்தில் முன்பு ஒரிஜினல் மஸ்கட்டியர்களான, தற்போது ப்ளாட்பாரங்களான ஆர்தோஸ், போர்த்தோஸ், அராமிஸ் போன்றவர்களுடன் வம்பை வளர்த்துக் கொள்கிறான். அப்போது வரும் அரசக் காவல்ப்படைக்கு எதிராக இவன் மஸ்கட்டியர்களுடன் சேர்ந்து சண்டையிடப் போக, மஸ்கட்டியர்ஸ் வெற்றி பெற, டார்டக்னன் அங்கு இருக்கும் கொன்ஸ்டன்ஸ் என்ற ராணியின் நண்பிக்கு ரூட்டு விட … எல்லாரும் ஒன்னுக்குல ஒன்னாகிறாங்க.

thumb3

இது ஒருபக்கம் இருக்க, ஃப்ரான்ஸ் நாட்டின் கார்டினலுக்கு நாட்டை ஆள ஆசை. அதனால் ஃப்ரான்ஸ் ராணிக்கும் பக்கிங்ஹாம் ராஜாவுக்கும் ஒரு க்சிக் க்சிக் கனெக்சன் இருப்பதைப் போல் காட்ட போலி லவ்லெட்டர் ஒன்றை தயார்பண்ணி ராணியின் அறையில் வைக்கிறான். (உண்மையில் அப்படி ஒரு கனெக்சன் இருக்கும்)  ராணி அவர்களின் (தூ)ய காதலின் நினைவாக பக்கிங்ஹாம் ராஜாவுக்கு வைர நெக்லஸை கொடுத்தது போல காட்டுவதற்காக ராணியின் நெக்லஸையும் திருடி மிலேடி என்ற உளவாளிப்பெண் மூலம் இங்கிலாந்திற்கு அனுப்புகிறான். பின்னர் கார்டினல் (கிட்டத்தட்ட மந்திரி போன்றவர்) ராஜாவுக்கு நடந்ததை எடுத்துக்கூறி, ஒரு வாரத்தில் நடைபெறவுள்ள ரோயல் விருந்திற்கு ராணியை அந்த வைர நெக்லஸை அணிந்துவரச் சொல்லச் சொல்லி ஐடியா கொடுக்கிறான். கள்ளக்காதல் நிரூபிக்கப்பட்டால் ஃபிரான்ஸுக்கும் இங்கிலாந்திற்கும் யுத்தம் மூளும், பின்னர் வென்றுவிட்டால் ஃபிரான்ஸை ஆளலாம் என்பது இவனின் திட்டம். இத்திட்டத்தை அறிந்துகொள்ளும் ராணி, கொன்ஸ்டன்ஸ் மூலம் மஸ்கட்டியர்களின் உதவியை நாட, அவர்களும் இங்கிலாந்திற்கு பயணமாகிறார்கள்.

இதற்கிடையில் ஆர்தோஸிற்கும் மிலேடிக்கும் தொடர்பு இருந்ததும், பறக்கும் விமானங்களிற்கான வரைபடங்களை திருடியபின் மிலேடி பக்கிங்ஹாம் ராஜாவுடன் சேர்ந்து மஸ்கட்டியர்களுக்கு துரோகமிழைத்ததும் தெரியவருகிறது.

மீதி என்னவாயிற்று என்பதை பறக்கும் விமானச் சண்டைகள், கத்திச்சண்டைகள், என பரபர ஆக்சன் காட்சிகளுடன் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
thumb5

ஏற்கனவே மேலே சொன்னதுபோல நான் சிறுவயதில் படித்த த்ரீ மஸ்கட்டியர்ஸ் கதைக்கும், திரையில் பார்த்த மஸ்கட்டியர்ஸிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். ஒரிஜினல் கதையில் கொஞ்சத்தை வைத்துக் கொண்டு மற்றதையெல்லாம் திரைக்கதை எழுதுபவர் அவர் இஷ்டத்திற்கு சேர்த்திருக்கிறார்.

இங்கிலாந்தில் ராஜா காலத்தில் பறக்கும் விமானங்கள்? அதுவும் சாதாரண விமானமல்ல … விமானக் கப்பல் …  அடஅதுவும் விமானக்கப்பல் என்றால், த ப்ளாக் பெர்லை (The Pirates of the Caribbean) பறக்க வைத்தால் எப்படி இருக்குமோ, அது போன்ற விமானக்கப்பல். படக்குழுவினர் பைரேட்ஸ் படரசிகர்கள் போல.
சரி … விமானக்கப்பலாவது பரவாயில்லைன்னு பார்த்தா … பாத்திரங்களையும் அப்படியே மொடர்ன் பண்ணிட்டாங்க. மஸ்கட்டியர்களுக்கு கத்தி மட்டும் போதாது என்று புதுப் புது திறமைகளை கொடுத்துவிட்டாங்க. ஒருத்தன் என்னடான்னா படம் ஸ்டார்ட் பண்ணும்போது பேட்மேன் கணக்கா பாய்ந்து பறந்து அடிக்கிறார். அதுல பின்னாடி கேப் வேற. இன்னொருத்தர் ஜேம்ஸ்பாண்ட் கணக்கா சாகசமெல்லாம் காட்டுறாரு. ஹய்யோ ஹய்யோ … 
 
மில்லா ஜொவொய்க் இன்னும் ரெசிடென்ட் ஈவில், அல்ட்ராவயலட் படங்களின் தாக்கத்திலிருந்து வெளியே வரவில்லை போல. அவங்க பாட்டுக்கு கேப்டன் மாதிரி சுத்தி சுத்தி அடிக்கிறாங்க. மிஷன் இம்பாஸிபிள் டாம் க்ரூஸ் மாதிரி தொங்குறாங்க. ஓசியன்ஸ் படத்துல மாதிரி டான்ஸ் லேசர்ல வளைஞ்சு வளைஞ்சு போறாங்க. நிறைய இங்கிலிஸ் படங்களை காப்பி அடித்து எடுத்திருக்காங்க. ஓர்லாண்டோ ப்ளுமின் நடிப்பு ஓகே ரகம். மத்தவங்க யாருடைய நடிப்பும் பெரிதாக பேசும் அளவிற்கு இல்லை.
thumb9

மொக்கை வசனங்கள், உல்டா கதை என இருந்தாலும் படம் செம்ம ஸ்பீடு. நமக்கு ரெஸ்டு கொடுக்காமல் பரபரவென நகரும் காட்சிகள். அதிலும் ஆர்ட் டைரக்டருக்கு தனி சல்யுட். பிரமாண்டம் என்றால் சும்மா இல்ல … நம்மூரு ஷங்கரைப் போல பிரபிரபிரபிரமாண்டம். அதனால் மொக்கைப்படங்களையும் பார்த்துவிட்டு இன்பம் காணும் நம் ஃபிலாசபி பிரபா மாதிரி நானும் மூளையைக் கழற்றி வைத்துவிட்டு ரசித்தேன் (எங்க மாமியார் நாகம்மா மேல சத்தியமா எனக்கு மூளை இருக்குப்பா … நம்புங்க).
அடுத்த படத்திற்கும் இப்பவே எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க போல. அடுத்த வருடம் அனேகமாக இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்க்கலாம்.

நீங்களும் லாஜிக் பார்க்காமல், நோண்டாமல், எதையும் எதிர்ப்பார்க்காமல் ரசியுங்கள். படம் பிடிக்கும். டைம் வேஸ்ட் பண்ணாமல் ப்ரீ டயம் கிடைத்தால் மட்டும் பார்க்கவும். நல்ல படம் பார்க்க கடைசியாக எழுதிய The Help பட விமர்சனத்தை கொஞ்சம் பாருங்க.

My Rating – 57/100 


படத்தின் ட்ரெயிலர்
அடுத்த பதிவில் சந்திக்கும்வரை,
ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

19 comments:

 1. @"என் ராஜபாட்டை"- ராஜா

  பதிவு போட்டு ஒரு நிமிடம் கூட ஆகவில்லையே? என்னா ஸ்பீடு சார் நீங்க... நன்றி

  ReplyDelete
 2. இந்த கதையை முன்பே வாசிச்சிருக்கேன். ரொம்ப புடிச்ச ஒண்ணுதான். ஆனாலும் இந்த படத்துக்கு எந்த எதிர்பார்ப்பையும் என் மனம் காட்டவில்லை. வந்தப்போ, "இது மொக்கையாகத்தான் இருக்கப் போகுதுன்னு நினைச்சேன்".. Rotten Tomatoesல் வேறு கிழித்துத் தொங்கப்போட்டிருந்தார்கள்.. இப்ப அது கன்ஃபார்மும் ஆயிடுச்சு!

  * இதுக்கு இன்னொரு பாகம் வேற வருதோ?

  * "அடுத்து வரும் விமர்சனங்கள்" காலியா இருந்திச்சு, திடீர்னு இன்னைக்கு இது வெளியாகுது.. அவசரப் பதிவா? இல்லைஅப்டேட் பண்ண மறந்துட்டீங்களா??

  ReplyDelete
 3. Three Musketeers.
  Slum Dog படத்துல இந்த வார்த்தைகளை கேட்டு இருக்கேன். படத்துல கடைசி கேள்வி இது தான். மத்த படி கதை புக் எல்லாம் நான் படிச்சது கிடையாது பாஸ். அதுவும் இங்கிலீஷ் புக்.
  நீங்க கதை சுமார்ன்னு சொல்லிடேங்க, அப்புறம் பார்த்துக்கலாம். இந்த படம் கூட நல்ல பிரிண்ட் கிடைக்குதுன்னு நினைக்குறேன்.

  ReplyDelete
 4. @JZ

  அவசரப் பதிவெல்லாம் இல்லை. ஏற்கனவே Midnight in Paris உடன் அடுத்து வரும் விமர்சனங்கள் பகுதியில் போஸ்டரையும் போட்டு பதிவை எழுதி ட்ராஃப்டில் வைத்திருந்தேன். பின்னர் ஏற்கனவே விமர்சனம் பண்ணிய படத்தை ஏன் வெளியிடனும்னு நினைத்து அடுத்து வரும் செக்சனில் இருந்து அழித்துவிட்டு ஓரமா ட்ராஃட்டில் போட்டேன். அது அப்படியே மறந்தும் போச்சு.

  நேத்து தான் பார்த்துவிட்டு ஞாபகம் வந்து கொஞ்சம் எடிட் பண்ணி இன்று போட்டுட்டேன்.

  ReplyDelete
 5. @ராஜ்

  ஆக்சன், ஃபைடிங் பிடிக்கும்னா கட்டாயம் என்ஜாய் பண்ணுவீங்க. மற்றபடி ஜஸ்ட் ஓகே ரகம் தான்...

  ReplyDelete
 6. நீங்கள் சொன்னது போல் சுத்தமாக லாஜிக் மறந்து விட்டு பார்த்தால் படத்தை ரசிக்கலாம். நடிப்பு என்பது சுத்தமாக கிடையாது. மற்றபடி பொழுது போக நிச்சயம் பார்க்கலாம்.

  என்ன நண்பரே அடுத்து வரும் விமர்சனங்கள் பகுதியில் ஒன்றையும் காணோம்

  ReplyDelete
 7. இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன். இரண்டாவது பாகம் வந்தால் தியேட்டர் கிடையாது.டவுன்லோட் தான்

  ReplyDelete
 8. @Lucky Limat லக்கி லிமட்

  பார்த்த படங்களுக்கு எழுதியாகிவிட்டது. இன்னும் ஒன்றும் யோசிக்கவில்லை. Girl with Dragon Tattoo பார்த்ததும் எழுதுகிறேன்.

  ReplyDelete
 9. ஹாலிவுட்டிலே இப்போது நல்ல படம் வருவது அபூர்வமாகி விட்டது.
  படத்தை மிக நாணயமாக விளாசி தள்ளியிருக்கிறீர்கள்.
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. ஒரு ஆங்கில படத்தை, ரொம்பவும் ஞாயமாக மனதுக்குள் நீங்கள் உணர்ந்த அம்சங்களை சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள்.விமர்சனம் மிகவும் நன்று.நன்றி..

  ReplyDelete
 11. கருத்திட்டமைக்கு நன்றி குமரன், உலகசினிமா ரசிகன்.

  ReplyDelete
 12. கூடிய விரைவில் பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன் . விமர்சனம் அருமை.

  ReplyDelete
 13. படம் ரொம்ப மோசம்-னு கேள்விபட்டேன் பாஸ்... ஆனா நீங்க சொல்ற மாதிரி இருந்தா பாக்கலாம்.

  இரண்டாவது பாகம் வேறயா??? :(

  ReplyDelete
 14. @kanagu
  படம் கொஞ்சம் மொக்கைதான். பார்க்க வேறு படம் இல்லாவிட்டால் பார்க்கலாம்.

  ReplyDelete
 15. படம் மொக்கைன்னு சொன்னாங்க நீங்களும் அதையே சொல்லுறிங்க இனிமே பாத்த மாதிரி தான் :)

  ReplyDelete
 16. பொழுது போக பார்க்கலாம்...விமர்சனம் அருமை நண்பரே...

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...