நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Friends With Benefits [2011]


 நிறைய வயசுப் பசங்களுக்கு (நமக்கு இல்லப்பா) இருக்கிற ஒரு கனவு வந்து  இந்த கல்யாணம், காதல், கத்திரிக்கா எதுவுமே இல்லாம ஒரு பொண்ணு கூட ரிலேஷன்ஷிப் (அந்த விஷயத்துல மட்டும், அதுவும் ஃப்ரீயா) வச்சுக்க முடிஞ்சா எப்படி இருக்கும்??? அதுவும் நமக்கு தெரிஞ்ச, நம்ம ஃப்ரெண்டா இருக்கிற ஒரு பொண்ணா இருந்தா? இந்த மாதிரி சப்ஜெக்ல்ட படம் எடுக்கிறது நம்ம தமிழ் சினிமால சாத்தியமோ தெரியல. எப்பயாவது ஒரு நாளைக்கு நம்ம கௌதம் சார் இத கொஞ்சம் டீசண்டா உல்டா பண்ணுவாருன்னு எதிர்ப் பார்ப்போம்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


சரி .... இன்னக்கி நாம பாக்கப் போற படமும் இந்த வகையில் தான் அடங்கும். ஒரு பையன் டிலன் (Dylan), ஒரு பொண்ணு ஜேமி (Jamie). டிலனாக ஜஸ்டின் டிம்பலேக்கும் (Justin Timberlake), ஜேமியாக மிலா குனிஸ் (Mila Kunis).ஹீரோவையும், ஹீரோயினையும் அவங்க லவ்வர்ஸ் கழற்றி விடுறதுல இருந்து படம் ஆரம்பிக்குது. டிலன், அதாங்க நம்ம ஹீரோ ஒரு வெப்சைட் ஆர்ட் டைரக்டர் (சிவாஜி விவேக் மாதிரி தமிழ்ல சொல்ல தெரியாதுங்க) . ஜேமிக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேடிக் கொடுக்கும் வேலை. இதுல ஒரு வேலையா லொஸ் ஏஞ்சல்ஸ்ல இருக்கும் டிலனை நியு யோர்க்கில் உள்ள ஒரு சஞ்சிகைக்கு இன்டர்வியூக்காக ஜேமி வரவைக்கிறா. ஆனா இன்டர்வியூ முடிஞ்சு டிலன் இந்த வேல வேணாம், திரும்பவும் எல்.ஏ க்கே திரும்பி போய்ருவோம்ன்னு யோசிச்சுட்டு அதப்பத்தி ஜேமிகிட்ட சொல்றான். எங்க இவன் திரும்பி போய்ட்டா நமக்கு வேலையில ஆப்பாகி கமிஷனை வெட்டிடுவாங்களோன்னு ஜேமி டிலனை கூட்டிகிட்டு நியூயோர்க்கின் ஃபன் பத்தி சுத்திக் காட்றா. ஜாலியா ஊர் சுத்திட்டு ஊர் புடிச்சுபோய் (எந்த யூத்துக்கு தான் நியூயோர்க் புடிக்காது???) டிலனும் வேலைக்கு சேர அக்ரீமண்ட்ல கையெழுத்து போட்டுர்றான். பின் இருவருக்கும் தொடர்ந்து பழக்கம் ஏற்பட்டு நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிடறாங்க.


ஒரு முறை ரொமாண்டிக் படம் ஒன்னு பாக்கும்போது கதை செக்ஸ் லைஃப் பத்தி திரும்புது. அப்போ ஜேமி, தானும் உறவு வைத்துக்கொண்டு ரொம்ப நாளாச்சு அப்படி இப்படின்னு பேச, டிலனுக்கு டக்குணு மண்டைல லைட் எரிஞ்சு ஒரு ஐடியா!!! இரண்டு பேரும், தேவையானப்போ செக்ஸ் வச்சிப்போம். ஆனா நோ ஃபீலிங்ஸ் அன்ட் கொமிட்மெண்ட். ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸாவே இருப்போம். ஜேமிக்கும் இந்த ஐடியா பிடிச்சுப் போக ... அப்புறம் என்ன ... படம் சூடு புடிச்சு பறக்கத் தொடங்குது (கொஞ்சம் டீசண்டான சீன்களோட தான்).

இந்த நோ ஃபீலிங், நோ கமிட்மெண்ட் ப்ளான் சக்ஸஸ் ஆகியதா? ஃபீலிங்ஸே இல்லாமல் ஒரு ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ண முடியுமா? ஜேமியும் டிலனும் என்ன ஆனாங்க ... அப்படிங்கறத டி.வி.டி அல்லது ப்ளூரே ப்ரிண்ட்ல பாத்து தெரிஞ்சுக்கங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


திரைக்கதை அப்படின்னு பாக்கப் போனா வருஷா வருஷம் நமக்கு ஹாலிவுட்ல ரொமாண்டிக் வகை படங்கள்ள பாத்து பாத்து புளிச்சுப் போன கதை தான். ஆனா ஜஸ்டின் டிம்பலேக், மிலா குனிஸ் ஜோடியால படம் ஒரு சலிப்புத் தன்மை இல்லாம போகுது. ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி வெர்க் ஆகிறது. படத்தை தூக்கி நிறுத்தும் மிக முக்கியமானர் மிலா குனிஸ். படம் முழுக்க சும்மா துறுதுறுன்னு ஜாலியா பேசியும் தன் எனர்ஜெடிக் நடிப்பாலும் கவர்கிறார். அதனால படம் பாக்கும்போதும் நமக்கு ஒரு படம் பாக்கும் பீலிங் வராமல் ஏதோ தினசரி சந்திக்கும் ஒரு லவ் ஜோடி ஒன்றை பார்க்கும் உணர்வு ஒன்று ஏற்படுகிறது.இவர்கள் இருவர் தவிர, பத்திரிகையின் ஸ்போர்ட்ஸ் எடிட்டராக வரும் வுடி ஹார்ல்ஸன் (Woody Harrelson), டிலனின் அப்பாவாக வருபவர் அனைவரும் தம்  பங்குக்கு சிரிக்க வைக்கின்றனர்.

என்ன தான் செக்ஸ் பத்தின கதையா இருந்தாலும் நான் எதிர்பார்த்த அளவு மிலா குனிஸை பார்க்க முடியாமல் போனது ரொம்ப வருத்தமே. படம் முழுவதும் சின்ன லஞ்சரே டிரஸ்களிலும் குட்டை பாவாடைகளையுமே போடவைத்து முடிச்சுடறாய்ங்கய்யா... இதுவே படத்தின் ஒரு முக்கிய குறையாக நான் கருதுகிறேன், எதிர்க்கிறேன்.

வார இறுதியில, தனியா, கொஞ்சம் சிரிக்க, கொஞ்சம் சூடாக, மனம் ரிலாக்ஸாகனும்னு நினைச்சிங்கன்னா படத்த ஒருமுறை டீவில பாருங்க. தப்பித் தவறி கூட காமெடி ப்லிம் ஆச்சேன்னு குடும்பத்தோட உக்காந்துராதீங்க. அப்பறம் ஒங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்.


படத்தின் ட்ரெயிலர் இங்கே :Friends with Benefits : 7/10


எக்ஸ்ட்ரா பிட் - 
இந்தப் படத்துல இரண்டு இடங்கள்ள ஃப்ளாஷ் மொப் இடம்பெறுது. இந்த ப்ளாஷ் மொப் கல்சர் இந்தியாவுலயும் வந்துருச்சு போல. டில்லி ரெயில்வே ஸ்டேசனில் இடம்பெற்ற ப்ளாஷ் மொப் வீடியோ இதோ.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

5 comments:

 1. விமர்சனம் நன்று.

  ///''இந்த கல்யாணம், காதல், கத்திரிக்கா எதுவுமே இல்லாம ஒரு பொண்ணு கூட ரிலேஷன்ஷிப் (அந்த விஷயத்துல மட்டும், அதுவும் ஃப்ரீயா) வச்சுக்க முடிஞ்சா எப்படி இருக்கும்??? அதுவும் நமக்கு தெரிஞ்ச, நம்ம ஃப்ரெண்டா இருக்கிற ஒரு பொண்ணா இருந்தா? இந்த மாதிரி சப்ஜெக்ல்ட படம் எடுக்கிறது நம்ம தமிழ் சினிமால சாத்தியமோ தெரியல''.//////
  தமிழ் சினிமால சத்தியம் இல்லாம இருக்கலாம்....... ஆன நம்ம ஊருல காதல் இன்ற பேருல இதுதானே நடக்குது.

  ReplyDelete
 2. @arunambur0

  ஆமா பாஸ் ... தினமும் பேப்பர்லயும், வலைத்தளங்களிலும் இந்த மாதிரி நியுஸ் தானே உலா வருது. :(

  ReplyDelete
 3. விரிவான விமர்சனம் நண்பரே ,என்னை விட நீங்கள்தான் தெளிவாக கதையை புரிய வைத்து இருக்கிறீர்கள் .தொடரட்டும் உங்கள் பணி .நன்றி

  ReplyDelete
 4. எனக்கு இந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. முதல் பதினைந்து நிமிஷத்தில் கதையை சொல்லிவிட்டு அப்புறம் என்ன பண்ணுவது என்று டைரெக்டர் திரு திரு என்று முழிப்பது வெளிப்படை. தலைவலியோடு வெளியே வந்தேன்!

  ReplyDelete
 5. @bandhu

  கதை என்னவோ அடுத்து நடக்கப்போவது ஊகிக்கக்கூடியவாறு தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை படம் ஓகே ரகம்.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...