நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Liebster Blog Award - இது விமர்சனம் இல்லைங்க


எழுதத் தொடங்கி இரண்டு மாசம் ஆகுது. இன்னும் 20 விமர்சனம் முழுசா தாண்டல (வெட்டிப்பய) . அதுக்குள்ள விருதெல்லாம் கொடுத்து அசத்துறாங்கப்பா ... அதுவும் இன்டர்நேஷனல் லெவல்ல. (ஒருவேளை நான் இன்டர்நேஷனல் லெவல்ல விமர்சனம் பண்ணுறனாலயோ. ஹி ஹி) .
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நண்பர் K.S.S.Rajh அவர்கள் தனது தளத்தில் தான் பெற்ற லீப்ச்டர் விரு(ந்)தினை எனக்கும் பகிர்ந்திருக்கிறார். நான் அப்படி என்னத்த கிழிச்சேன்னு கொடுக்கிறார்னு தெரியல. ஆனாலும் கொடுத்ததை இன்முகத்துடன் வாங்கிக் கொள்கிறேன். நம்மளையும் இந்த வலையுலகம் கொஞ்சம் கவனிக்கிறது அப்படீங்கறது இப்பத் தான் தெரியுது. (ஐஸ்ஸு ஃபுல்லா டியரு) வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்/விருது. மிகவும் நன்றி நண்பா.

விருது கிடைத்த மேடை - http://www.nanparkal.com/2012/02/blog-post_04.html

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இந்த விருதைப் பற்றிய தகவல்கள்

'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

Rules :


•Thank your Liebster Blog Award presenter on your blog.
•Link back to the blogger who presented the award to you.
•Copy and paste the blog award on your blog.
•Present the Liebster Blog Award to 5 blogs of 200 followers or less who you feel deserve
to be noticed. (Some say just 3 or more blogs of less than 200 followers each).
•Let them know they have been chosen by leaving a comment at their blog.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

அவர் கூறியபடியே நானும் சங்கிலியை தொடர்கிறேன். நான் பிறமொழி சினிமா விமர்சனங்களை பெரும்பாலும் விரும்பி வாசிப்பதால் எனக்கு கிடைத்த 5 விருதுகளில் 4 விருதுகளை என் ஏரியா சம்பந்தப்பட்டவர்களுக்கே பகிர்கிறேன். 

என்னிடம் விருது பெறும் அந்த 5 அதிர்ஷ்டசாலிகள் யார்? (இப்போ தான் லிஸ்ட்ல தேடிக் கொண்டு இருக்கிறேன்) தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். 

..............................
..............................
..............................
..............................
..............................
..............................
..............................
..............................
.............................. 
..............................
..............................


ஹி ஹி சும்மா சொன்னேன். (கடுப்பேத்றார் மைலார்ட்ன்னு சொல்லுவது கேட்கிறது). சரி சரி ... இவங்க தான் அந்த ஐந்து பாக்கியசாலிகள் (ஹி ஹி) .

1. குமரன் @ kumaran-filmthoughts.blogspot.com/

உண்மையில் நான் எழுதத் தொடங்க நான்கு மாதங்களுக்கு முன்பே இவரு ஆரம்பிச்சிட்டாரு. நான் வெறும் மொக்கை ஆங்கிலப் படங்களா அறிமுகப்படுத்தும்போது மிக அருமையான உலகப்படங்கள், ஹிட்ச்காக்கின் படங்கள் பற்றி நல்ல அழகாக விமர்சித்திருக்கிறார்.

2.ராஜ் @ hollywoodraj.blogspot.com/

என் முதல் போஸ்டில் முதல் பின்னூட்டம் இட்டு இன்று வரை ஆதரவளிப்பவர். இவரும் நம்ம கேஸ் தான். உலகப்படம் எல்லாம் இல்ல (பொறுமை இல்ல) மிக நல்ல ஹாலிவுட் படங்கள் பற்றி எழுதியிருக்கார் (The Dollars Trilogy).


3. பேபி ஆனந்தன் @ babyanandan.blogspot.com/
மிகவும் அற்புதமான விரிவான திரைப்பட விமர்சனங்கள். உண்மையில் வளர்ந்து வரும் பதிவாளர்களுக்கானது என்றாலும் இவர் ரொம்ப வளர்ந்தவரு. 2009ல் இருந்து எழுதுகிறார். மிக அழகான எழுத்துநடைக்கு உரியவர்.

4. JZ @ cinemajz.blogspot.com/
இவரும் நம்மள மாதிரி ஹாலிவுட் சரக்க வச்சு தான் கடைய ஓட்டுறாரு. நல்ல ஹாலிவுட் படங்கள் பற்றி எழுதியிருக்கார். ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கிறேன். ஏன்னா Tree of Life படம் பார்க்க பொறுமை ரொம்ப முக்கியமாம் (பொறுமைசாலி நண்பன் சொன்னான்)

5. Chilled Beerschilledbeers.blogspot.com/
இவர் வேற டிபார்ட்மெண்ட்டு ஆளு. எல்லா ஏரியாவுலயும் கலந்து கட்டுறார். இவரின் எழுத்தைப் பார்த்தா இளம் எழுத்தாளர் போல எனக்கு தோணல. ரொம்ப எழுத்தில் ஊறியவர்னு மட்டும் தெரியுது. இவருடைய “நாட்டுப்புற பாலியல் கதைகள் பதிவுகள்” என் பேவரிட் லிஸ்டில் உண்டு. இவரின் எல்லாப் பதிவுகளிலும் நக்கல் இழைந்தோடும். என்னைவிட விருதிற்கு மிகவும் தகுதியான ஆளுன்னா அது இவருதான்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸபப்பா .... ஒரு மாதிரி ஐந்து பேரை தெரிவு செய்தாச்சு. உண்மையில் வளர்ந்து வரும் புதிய பதிவர்கள் பற்றிய விருது என்பதாலும் 5 தான் லிமிட் என்பதாலும் பலரைப் பற்றி நான் எழுதவில்லை. அப்படி விடுபட்டவங்களில் சிலர்

 1. புன்னகையே வாழ்க்கைன்னு கிடக்கும் Mohammed Faaique
 2. நாற்று நட்டுக்கொண்டே இருக்கும் நிரூபன் மற்றும்  
 3. அவரின் அல்லக்கை ஐடியாமணி
 4. காணாமல் போன கனவுகளை இன்னும் தேடும் சகோதரி ராஜி
 5. வேலி இல்லாமல் படலையை மட்டும் வைத்திருக்கும் ஜே.கே
 6. நம்ம முரட்டு சிங்கம்
 7. அட்ராசக்க ன்னு பதிவு போட்டு நம்மை சக்கையை எடுக்கும் சி.பி

மற்ற பதிவர்களுக்கு விருது கொடுக்கும் அளவிற்கு நான் அப்பாடக்கர் இல்லை என்பதாலும் அவங்களுக்கு அடியேனின் விருதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்குமோ தெரியாது என்பதாலும் இத்தோடு என் ரீல் ஸ்டாப்.

என் விருதையும் ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிடித்த 5 இளம் பதிவர்களுக்கு பகிருங்கள்.

என்னுடைய மற்ற பிரபல பேவரிட் பதிவர்களை வலதுப்பக்கத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அப்பாடா ஒருமாதிரி 20 பதிவு தேத்தியாச்சு. நிம்மதியா தூங்கலாம். ஹி ஹி.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

12 comments:

 1. நன்றி! ஹாலிவுட்...அடடா...இவ்வளவு சீக்கிரம் அவார்டா! என்ன சொல்றதுன்னு தெரியலை. thank you very much

  ReplyDelete
 2. சும்மா இருக்கோமே..நமக்கு தெரிந்த நாலு வார்த்தைய எழுதுவோனு நெனைச்சு ஆரம்பிச்ச பிளாக் இது..அதுக்கெல்லாம் அவார்டா ??
  ரொம்ப நன்றி..நண்பரே.இந்த விருதை மனதார மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.தங்களுக்கும் எனது நன்றிகள் கலந்த பாராட்டுக்கள்.தொடர்வோம் இனி..

  ReplyDelete
 3. Chilled Beer, Kumaran : உங்களுக்கு விருதுகள் பிடித்திருப்பது மகிழ்ச்சி. நீங்களும் உங்களுக்கு பிடித்த பதிவர்களுக்கு இந்த விருதை பகிரலாமே?

  ReplyDelete
 4. ரொம்ப நன்றி தல! அப்படியே புல்லரிக்க வச்சிடீங்க... 2009ல் இருந்து எழுதுறேன்னு தான் பேரு... இது தான் முதல் அங்கீகாரம்... நன்றி அகெயின்...

  ReplyDelete
 5. அவார்டை எனக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா! (இந்த விருது பெறும் அளவுக்கு நான் என்னத்த கிழிச்சேன்னு தெரியலையே...)

  ReplyDelete
 6. வணக்கம் நண்பா,
  முதலில் விருதினைப் பெற்றுக் கொண்ட உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

  அப்புறமா, உங்களிடமிருந்து இவ் விருதினைப் பெற்றுக் கொண்ட அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  உங்களுள் ஒருவனாக என்னையும் நட்புப் பாராட்டியிருப்பதற்கு அடியேனின் நன்றிகள் தல.

  ReplyDelete
 7. விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் தலைவரே! ஆறுதல் விருது கொடுத்து அசத்தியமைக்கும் நன்றி!!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சகா.......

  ///////// நம்ம முரட்டு சிங்கம் /////////
  ''நம்ம'' இந்த வார்த்தைய பார்த்து உண்மையில் ரொம்ப சந்தோஷப்பட்டேன். நன்றி.

  ReplyDelete
 10. நன்றி ஹாலிவுட்ரசிகன்,
  முன்று நாட்களாய் நான் ஊரில் இல்லை.ஒரு திருமனதுக்காக வெளி ஊர் சென்று இருந்தேன் ...இணைய இணைப்பு வேறு இல்லை. அதனால் தன் இந்த தாமதமான பின்னுடோம் ....
  இபொழுது தான் நீங்கள் எனக்கு வழங்கிய விருதினை பார்த்தேன்.. மிக்க நன்றி நண்பரே.....உங்கள் விருதினை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்....
  அதே போல் நானும் இவ் விருதினை (தொடர் சங்கிலியை ) உடைக்காமல் வேறு புதிய பதிவர்களுக்கு குடுத்து இதை தொடர செய்வேன்..
  மிண்டும் மிக்க நன்றி...

  ReplyDelete
 11. வணக்கம் பாஸ் திறைமையான பதிவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது என் எண்ணம்.அந்த வகையில் நான் படித்த உங்கள் பதிவுகள் அருமையானவை.உங்கள் தளத்தில் நான் அதிகமாக கருத்துரைகள் போடாவிட்டாலும் உங்கள் பதிவுகளை வாசித்து வருபவன்தான்.
  இந்த விருது பெற நீங்கள் தகுதியானவர்தான்.தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...