நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Dexter - (2006 - Present) தொலைக்காட்சி சீரீஸ்

முந்தானை முடிச்சு, தென்றல், நாதஸ்வரம், அனுபல்லவின்னு ஒரே கதையை கொஞ்சம் வித்தியாசமான டெக்னிக்கையும், பின்னணி இசையும் மிக்ஸ் பண்ணி மாவாட்டி முழுநாளும் ஒரே இம்சை. தொலைக்காட்சி சீரீஸ்ன்னாலே ரெண்டு சீனுக்கொரு முறை மூக்கை சிந்தவச்சு தொலைக்காட்சி நாடகம்னா இப்படித்தான் இருக்கும்னு ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணிட்டாங்க இந்தியாவுல. அதுதான் எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் மேற்கு பக்க தொலைக்காட்சிகளை எட்டிப் பார்ப்போம். விதவிதமான வகைகளில் க்ரைம், த்ரில்லர், சஸ்பென்ஸ், காமெடி என கலந்துகட்டி வெளுத்து வாங்குறாங்க.

சரி நாம இன்றைய டாபிக்குக்கு வருவோம்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான அடிக்ஷன். (அடக்க முடியாத ஆசை ) ஒருவிதமான போதை போல. உதாரணமாக தற்பொழுது பெரும்பாலானவர்களுக்கு தினமும் முகநூலை (Facebook) (நமக்கு இல்லப்பா. ஆனால் இணையத்தில் சிறிது பைத்தியம் உண்டு) அல்லது பதிவுலகத்தை தினம் தரிசிக்காவிட்டால் என்னமோ செய்து முழுநாளுமே ஓடாதது போல தோன்றி என்னன்னமோ செய்யும். இதைப் போல் வித்தியாசமான அடிக்ஷன் உடைய ஒருவனின் கதையைத் தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.

உலகமே இப்பொழுது தனுஷின் "கொலைவெறியுடன்" சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையாகவே ஒருவனுக்கு கொலையில் வெறி இருந்தால் (அதாவது கொலை செய்வதில் ஒரு அடக்கமுடியா வெறி)? அது போதாதென்று பாசம், துயரம் போன்ற சமூக உணர்வுகள் வேறு மிஸிங்கா இருந்தால்? அதை எவ்வாறு சமாளித்து சமூகத்தில் வாழ்வது? Welcome to the world of Dexter Morgan.டெக்ஸ்டர் மோகன். ஹான்ட்ஸம் சார்மிங் ஃபெல்லோ. அனைவருக்கும் தினமும் doughnut வாங்கி வரும் ப்ரெண்ட்லியானவர். மையாமி மெட்ரோ குற்றப்பிரிவு துறையில் ரத்தப் பரிசீலனை துறை (Blood Splatter) எக்ஸ்பர்ட். அதாங்க ... ஒருத்தரை அடிச்சு கொன்றால் ரத்தம் தெறிக்கும்ல? அந்த ரத்தம் சிதறியிருக்கும் விதம், வழிந்துள்ள விதத்தை வைத்து அந்த கொலை எப்படி நடந்தது என கண்டுபிடிப்பது. ஆனால் இதெல்லாம் டெக்ஸ்டரின் ஆபிஷ்யல் டியூடி. வேலை இல்லாத ஃப்ரீ டைம்ல அவருக்கு இன்னொரு மறுபக்கம் இருக்கு. அது என்னன்னு தான் நான் மேலே சொல்லியிருக்கேன்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

சிறுவயதில் டெக்ஸ்டரின் கண் முன்னே அவனது தாய் ஒரு போதைப்பொருள் விற்பவனுக்கு எதிராக பொலிஸுக்கு சாட்சி கூறினாள் என துண்டம் துண்டமாக வெட்டப்படுகிறாள். ரத்த வெள்ளத்தில் இருந்த குழந்தையை அங்கு வரும் ஹாரி எனும் பொலிஸ்காரர் எடுத்துச் சென்று வளர்க்கிறார். (ஏனென்று ஏதோ ஒரு சீசனில் ரீசன் வரும். மறந்துபோச்சு) ரெண்டு நாட்கள் ரத்தத்தில் இருந்ததால் அவனது மனது ஆழமாக பாதிக்கப்பட்டு ரத்தத்தின் மேலும் கொலை செய்வதிலும் ஒரு ஆர்வம் வருது.

இதை ஹாரி கண்டுகொண்டு அவனின் வெறியை கெட்டவர்கள் மீது டைவர்ட் பண்ணுறாரு. அதாவது கொலை செய்துவிட்டு (கொலை மட்டுமே. களவு, ரேபிங் காய்ஸ் ஓகே) சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருப்பவர்களை தேடிப் பிடித்து கொல்வது. அதற்காக அவனுக்கு டார்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது, கொன்றபின் எவ்வாறு தடயங்களை அழிப்பது, மற்றும் சமூகத்தில் எவ்வாறு சாதாரண மனிதன் போல நடிப்பது என ட்ரெயின்ங் கொடுக்கிறார். ஹாரிக்கு டெப்ரா என ஒரு மகளும் உண்டு. என்னடா நம்ம அப்பா தத்தெடுத்த புள்ள கூட டைம் செலவளிக்கிறாரு ... நம்மள கணக்குல எடுக்குறாரு இல்லயே என ஒரு சின்ன வருத்தம். சில நாட்களில் ஹாரி இறந்துவிட டெக்ஸ்டர், டெப்ரா இருவரும் மையாமி மெட்ரோவில் வேலைக்கு போறாங்க. டெப்ரா தன் தந்தைக்கு தன்னை நிரூபிக்க ஹோமிசைட் பிரிவில் டிடக்டிவ்வாக ஆசைப்படுகிறாள்.

மையாமி மெட்ரோவில் டெக்ஸ்டர், டெப்ராவுடன் வேலை செய்யும் படிஸ்டா (டெக்ஸ்டரின் ப்ரண்ட்), வின்சன்ட் மசூகா (செக்ஸ் எக்ஸ்பர்ட், காமெடியன்), மரியா (ஹோமிசைட் Lieutenant) போன்றவர்களுக்கும் கதையில் பங்குண்டு.

மையாமி நகரில் சில “விலைமாதுக்கள்” கொலை செய்யப்படுகிறார்கள். சீரியல் கில்லிங்ஸ். கொலைன்னா சும்மா கொலை இல்ல ... உடம்பு துண்டுகளாக வெட்டப்பட்டு அந்த பாகங்களில் சற்றுகூட இரத்தம் இல்லாதவாறு நகரின் ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படுகிறது. ஆனால் வைக்கப்படும் அந்த இடங்கள் டெக்ஸ்டரின் இறந்தகால வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்க டெக்ஸ்டர் கொலையாளி தனக்கு க்ழூ கொடுக்கிறான் என நினைக்கிறான். பின்னர் நடக்கும் சந்தர்ப்பங்களும் அதை உறுதி செய்ய, கொலையாளி யார்,  கொலையாளிக்கும் டெக்ஸ்டருக்கும் என்ன நடந்தது என்பதை டீவிடியிலோ தரவிறக்கியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இது முதல் சீசனின் கதை.

ட்ராமா ஆரம்பிச்சதும் டெக்ஸ்டர் தனக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருக்கிறதாக சொல்றாரு (Narration) (ஆ சொல்ல மறந்துட்டேன் ... சீரீஸ் முழுவதும் இவ்வாறு டெக்ஸ்டர் அடிக்கடி மைன்ட்வாய்ஸ்ல பேசுவாரு). பெயர் ரீட்டா ... வித் டூ சில்ட்ரன். எக்ஸ் புருஷன் ஜெயிலில். முதலாவது சீசனில் அவன் திரும்பி வந்துவிட அவனை எப்படி டெக்ஸ்டர் சமாளித்தான் என்பது திரையில். பின்னர் இருவருக்கும் லவ் மேலும் டெவலப் ஆகி கல்யாணம், முதலிரவு குட்டி வாரதெல்லாம் அடுத்தடுத்த சீசன்களில்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் வந்துள்ளன. முதல்ல ஆறாவது சீசன்ல முடிக்கிறதா சொன்னாலும் இப்ப இன்னும் இரண்டு சீசன்களுக்கு கதையை இழுத்திருக்காங்க. (6வது சீசன்ல ரெண்டு ட்விஸ்ட்கள் உண்டு. 7வது சீசன்ல தான் என்ன நடக்கப்போவுதுன்னு தெரியும்). ஒவ்வொரு சீசனிலும் சராசரியாக 50நிமிடங்கள் ஓடும் 12 எபிசோட்கள். ஒவ்வொரு சீசனும் டெக்ஸ்டரின் வாழ்வில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், மையாமி நகரில் புதுசு புதுசா முளைக்கும் சீரியல் கில்லர்ஸையும் டீல் பண்ணும் விதம் பற்றி விளக்கியிருப்பாங்க. முதலாவது இரண்டாவது சீசன்கள் செம இன்ட்ரஸ்டிங். மூன்றாவது சீசனின் பின் சற்று (சற்று தான்)  ஸ்பீட் குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங். ஆனா நீங்க இந்தியன் சீரியல்கள் பார்த்தவராக இருந்தால் இப்படி எல்லாம் ஃபீல் ஆகாது. மீண்டும் 4, 6 ஆம் சீசன்கள் பழையபடி பக் டூ பேஸ்.

இந்த சீரீஸ் Jeff Lindsay என்பவரால் எழுதப்பட்ட கதைகளை தழுவி எடுக்கப்பட்டவை. வித்தியாசமான கதைக்களத்தால் நிறைய ஆடியன்ஸை சம்பாதித்தது. இதுவரை Dexterக்கு கிடைத்த அல்லது Nominate செய்யப்பட்ட விருதுகள்.

Dexter has been nominated for 19 Primetime Emmy Awards, awarded in the category of both Outstanding Drama Series and Outstanding Lead Actor in a Drama Series (for Michael C. Hall), 3 times in a row, from 2008 through to 2010. Dexter has also received over a dozen Creative Arts Emmy Awards. It has also been nominated for 7 Golden Globes (winning 2), 14 Satellite Awards (winning 7), 18 Saturn Awards (winning 5), 8 Screen Actors Guild Awards (winning 1), and 5 Writers Guild of America Awards.
நன்றி - விக்கிபீடியா

WARNING :  Matured Audienceஐ மட்டுமே குறிவைத்து எடுத்த நாடகமாதலால் கெட்ட வார்த்தைகளுக்கும், சில செக்ஸ் சீன்களும் இடைக்கிடையே சில எபிசோட்களில் இடம்பெறும்.

நீங்கள் த்ரில்லர் வகையான நாடகங்களை ரசிப்பவர் என்றால் கட்டாயம் Dexter உங்களுக்கு பிடிக்கும்.

டிஸ்கி (டிஸ்கின்னா என்னங்க) - முதலில் The Game of Thrones பற்றித் தான் எழுத யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாருங்க (நானே முந்தநாள் தான் பார்த்தேன்) ... ஏற்கனவே நம் கருந்தேளார் அந்த சீரீஸைப் பற்றி என்னைவிட நன்றாக எழுதியிருக்கார். (இங்கே க்ளிக்கவும்) திரும்ப நான் ஏன் அதை ரிப்பீட் பண்ண அப்படின்னு தான் இதை எழுதினேன். அடுத்ததாக தொலைக்காட்சி நாடகங்கள் வரிசையில் The Big Bang Theoryன்னு ஒரு அட்டகாசமான காமெடி நாடகம் பற்றி எழுதுவேன். (அத எப்ப பதிவேனோ தெரியாது. சீக்கிரம் எழுதுகிறேன்)


அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன்
ஹாலிவுட்ரசிகன்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

19 comments:

 1. நல்ல பதிவு...இனிமேல் Dexterஐ பார்க்க ஆரம்பிக்கணும் நான். The Big Bang Theoryக்காக காத்திருக்கிறேன். Two and a half menனை பற்றியும் எழுதுங்கள். நான் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு நகைச்சுவைத் தொடர். உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. நல்ல ஒரு சீரீஸ் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.....

  ReplyDelete
 3. @Senthil

  Two and a Half Men பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். வெகு சீக்கிரமே அதைப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

  ReplyDelete
 4. நண்பரே இந்த சீரீஸ் பார்க்க வேண்டும் என்று வெகு நாள் நினைத்து கொண்டிருந்தேன். எப்படி இருக்குமோ என விட்டு விட்டேன். பார்க்க வேண்டும். இப்போது நான் விரும்பி பார்த்து கொண்டிருப்பது Fringe மற்றும் Burn notice.

  person of interest என புதியதாக ஒரு சீரீஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 5. @Lucky Limat லக்கி லிமட்

  Fringe நல்ல சீரீஸ் என ஒரு நண்பர் மூலம் நானும் கேள்விப்பட்டேன். அதையும் பார்க்கவேண்டும்.

  இன்னும் பார்க்கவேண்டிய நாடகங்கள் 34 ஹாட் டிஸ்கில் உள்ளன. :)

  ReplyDelete
 6. Dexter நீண்ட நாளாக பார்க்க வேண்டுமென நினைத்திருக்கும் ஒரு சீரிஸ். அருமையாக எழுதியுள்ளீர்கள்.

  இப்போது தான் big bang theory கிடைத்துள்ளது. அதை பார்த்த பிறகு தான் மற்ற எல்லாமே...

  ReplyDelete
 7. நல்லா சொல்லி இருக்கீங்க மாப்ள!

  ReplyDelete
 8. Hi boss, what's up? Could you please change you'r template intro the mobile format?

  ReplyDelete
 9. I dom't have enough time to visit my friends blog. So that's a why I missed u'r post my dear friend.

  ReplyDelete
 10. I also want to watch the daxter. Nice intro & awsome review. Thanks for shareing with us. Short and sweet always nice to watch.

  ReplyDelete
 11. பாஸ்,
  அமெரிக்கன் டிவி சீரீஸ் ஏனோ எனக்கு எப்பவுமே பிடிச்சசது இல்லை... மொக்கை ஜோக்குக்கு கூட பேக் கிரௌன்ட்ல சிரிப்பு மியூசிக் போட்டு நம்பள ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க...அது போக அவனுக நாடகம் எல்லாம் ரொம்ப "நாடக தன்மை" !!!! மாதிரி இருக்கும்....ஏனோ அவங்க டிவி சீரீஸ் பத்தி கூட நான் படிச்சது கிடையாது... இப்போ தான் ஒரு டிவி சீரீஸ் பத்தி ஒரு முன்னோட்டம் படிச்சிருக்கேன்.....சீரீஸ் ரொம்ப நல்லா இருக்கும் போல.....கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
  டவுன்லோட் பண்ணி பார்க்குறேன்....

  ReplyDelete
 12. @ராஜ்

  இதுவரை ஆங்கில நாடகங்கள் பார்த்தில்லை என்றால் முதலில் கட்டாயம் The Game of the Thrones பார்க்க தவறிவிடாதீர்கள். பார்த்தபின் சொல்லுங்கள் இங்கிலீஷ்காரனின் “நாடக தன்மை” எவ்வளவு ரொம்பவா இருக்குன்னு.

  ReplyDelete
 13. செம சீரியல் பாஸ். நான் ஒன்லைன்ல தான் பார்த்தேன். இத மாதிரியே The Walking Dead உம் நல்லா இருக்கும். நான் பார்க்கும் website www.cucira.com .

  ReplyDelete
 14. @பனங்கொட்டை (Panangkoddai)

  நாங்கல்லாம் டவுன்லோட் தான். நீங்க சொன்ன வெப்சைட் ஓபன் ஆகலயே.

  ReplyDelete
 15. ஸாரி பாஸ். ஒரு எழுத்து மிஸ் ஆயிடுத்து http://www.cucirca.com/.

  ReplyDelete
 16. இப்ப தான் டவுன்லோட் போட்டேன் முதல் இரண்டு எபிசொட் பார்த்தேன் ஒன்னும் விலங்களை சப்தைட்டில் இல்லாம பார்கிரதால் ஒன்னும் புரியலை பிக் பாங் தேரி அணைத்து எபிசொட்ம் காமெடி தானா

  ReplyDelete
  Replies
  1. ரெண்டுமே அட்டகாசமான ட்ராமா... ஆனா வேறு வேறு விதத்தில். பிங் பேங் காமெடி எல்லாருக்கும் புரியுமோ தெரியாது... புரிந்தால் பெஸ்ட்!!

   Delete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...