நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Forgetting Sarah Marshall [2008] (18+)

folder

இந்தா … இப்பவே சொல்லிட்டேன். இது காமெடி சப்ஜெக்ட் படம் தான். ஆனால் அடல்ட் ஜோக்ஸ், செக்ஸ், ஷேம் ஷேம் பப்பி ஷேம் காட்சிகளைப் பார்ப்பதில் ஒரு விதமான பிரச்சினையோ சங்கடமோ உங்களுக்கு இல்லைன்னா (நம்ம சி.பி மாதிரி) மட்டும் இப்படத்தைப் பாருங்க. இல்ல நான் ரொம்ப டீசண்டான ரோயல் ஃபாமிலி அப்படின்னா இப்பவே எஸ்ஸாகிடுங்க. (நான் பொல்லாதவன்) நல்ல ஒரு படம் பற்றி எழுதினதும் சொல்லி அனுப்புறேன்.

ஓ.கே. வார்னிங் கொடுத்தாச்சு. இனி யாரும் என்னை ஒன்னும் சொல்ல முடியாது. லெட்ஸ் பிகின் …..


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


படத்தின் கதை

நம்ம படத்தின் ஹீரோ பீட்டர் ஒரு கம்போஸர். மொத ஷாட்டுலயே காட்டும் குப்பையான அறை, இறைந்து கிடக்கும் ட்ரஸ்ஸில் இவரு நம்ம மாதிரி ஒரு ஆளுங்கறது  தெரியவருகிறது. ஆனாப் பாருங்க, இப்படி ஒரு சொங்கி மாதிரி அபார்ட்மென்டில் இருக்கிறவரு 90மார்க் ஃபிகரான டி.வி நடிகை சாரா மார்ஷல ஓட்டுறாரு (ஹ்ம் நாமளும் இவரு மாதிரி தான் ரூம வச்சிருக்கோம். சாரா வேணாம், அட்லீஸ்ட் ஒரு செல்லம்மா சரி கிடைக்குதில்லையே).

thumb1


ஒரு நாள் நம்ம ஹீரோ குளிச்சுட்டு வெளியே வாராரு. பார்த்தா வீட்டு ஹாலில் சாரா. ஹீரோ டவல கட்டியிருக்காரு. சரி தான் மேட்டர் ஸ்டார்ட்டுன்னு பார்த்தா அதுக்கேத்த மாதிரியே அவரும் டவல கழற்றி அத ஆட்டிக்கொண்டே “ I’ve got a surprise for you ”ன்னு சொல்ல அதுக்கு அந்தப் புள்ள டப்புன்னு “நாம நம்ம காதல்ல ஒரு ப்ரேக் எடுத்துக் கொள்வோம்”ன்னு சொல்லிடுது. ஷாக்ல விழுந்த டவலக் கூட எடுத்து கட்டிக்காம அப்சட் ஆகிடறாரு பீட்டர்.

அப்பறம் இவரு “அஞ்சல அஞ்சல”ன்னு சாராவை நினைத்து சிந்தி சிந்தி அழுறாரு. இவரின் அழுகைக்கு நம்ம இந்தியன் ட்ராமா ஆண்டிங்க தோத்துருவாங்க போல. அப்புறம் ஒரு சேன்ஜுக்காக மனசை ரிலாக்ஸ் பண்ண ஹவாய்க்கு ஒரு ஹாலிடேல போறாரு.  ஆனா அங்க இவர் தங்கப்போகும் ஹோட்டலில் சாராவும் அவளின் புது பாய்பிரண்ட் அல்டஸும் நிக்கறாங்க. பீட்டர் அப்படியே ஷாக் ஆயிட்டாரு. அங்கு ஹோட்டல் ரிஷப்ஷனிஸ்ட் ரேச்சல் இவரின் கதையைக் கேட்டு பரிதாபப்பட்டு அங்கு இருக்கும் 6000 டாலர் மதிப்புள்ள சுயிட்டை தங்கக் கொடுக்கிறாள் ஃப்ரீயாக.

 

2011630345445628806

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ரேச்சலும் பீட்டரும் பீட்டர் விட்டு செட்டாகிடறாங்க. ஆனாப் பாருங்க அந்த டைம்ல அல்டஸ்க்கும் சாராவுக்கும் சண்டை வந்து ரெண்டு பேரும் பிரிஞ்சுடுறாங்க. இந்த நேரத்தில் பீட்டர் கவலையாக இருக்கும் சாரா மேல் ஃபீல் ஆகி ஆறுதல் சொல்லப் போய் பின் பிரபுதேவா-நயன்தாரா மாதிரி ஆறுதல் செக்ஸ் வரைக்கும் போகுது. என்ன பாவமோ தெரியல இவரு மேட்டர் செய்யப் போகும் போது இவரின் மேட்டர் வேல செய்யாம போகுது. அப்புறம் இவரு லூசு மாதிரி போய் ரேச்சலிடம் நடந்ததை சொல்ல அவளும் பீட்டரை துரத்திவிடுகிறாள். கடைசியில் ரெண்டும் கெட்டானாக இருக்கும் பீட்டர் கடைசியில் யாருடன் சேர்ந்தார் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்க.

 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

 

படத்தின் முக்கியமான கரெக்டர் பீட்டர் (ஜேசன் சீகல்). படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதினவரும் இவருதான். இவர சுத்தித் தான் கதை நகருது. ஆனா எனக்கென்னவோ, படத்திலேயே ஒன்னுக்கும் உருப்படாத நடிகர் இவர்தான்னு தோணுது. காமெடிங்கறது நடிப்புல சுத்தமா ஒட்டல. நல்லா அழுறாரு. இவர விட படத்தில் வரும் மைனர் கரெக்டர்கள் மனசுல நல்லா பதியுறாங்க குறிப்பா அந்த புதுத் தம்பதியினர்.

நம்ம டாக்குடர் விஜய் “நான் காட்டு காட்டுன்னு காட்டுவேன்னு” வாய்ல மட்டும் தான் சொல்றார். ஆனா ஒன்னையும் காணோம். ஆனால் சீகல் டயலாக் ஒன்னும் விடாமல் உண்மையாகவே காட்டு காட்டுன்னு காட்டுறார். படத்தின் பல இடங்களில் தேவையில்லாமல் இவரின் ப்ரைவேட் இடத்தை பப்ளிக் ஸ்பாட் மாதிரி காட்டுறானுங்க. சரி … ஒரு சீன் ரெண்டு சீன்னா பரவால்ல. படம் முழுவதும் பார்க்கும்போது காமெடி என்பது போய் வெறும் அருவருப்பு தான் வருது.

 

18forgetting01-600

படத்தின் முக்கிய ஹைலைட்டே படத்தின் ஹீரோயின்ஸ் தான். ஆர்டிஸ்ட் செலக்ஷன் பண்ணினவன கோயில் கட்டி கும்பிடனும். ரெண்டு பேருமே A-க்ளாஸ் ஃபிகருங்க. ஒவ்வொரு விதத்தில் இருவரும் யுனிக். சத்தியமா Kristen Bell (சாரா மார்ஷல்), Mila Kunis (ரேச்சல்) இருந்தனால தான் சீன் இப்போ வரும், அப்போ வரும்னு முழுக்க பார்த்தேன். (எவ்வளவு நேரம் தான் நாங்களும் வெறும் சீகலின் ப்ரைவேட் ஏரியாவை  பாத்துகிட்டு இருக்கிறது?) இல்லாட்டி நிப்பாட்டிட்டு வேற ஏதாவது பாத்திருப்பேன். அதுவும் Friends With Benefits விமர்சனத்துல சொன்னது போல ஒரு சின்ன கவலை இருந்தது. இந்தப் படத்தில் அந்த குறை தீர்ந்துவிட்டது. ஹி ஹி

திரைக்கதை பற்றி ஒரு வசனம் பேசுவதற்கில்லை. “குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா நிறையொன்னும் இல்லை கண்ணா” தான். எல்லாம் தெரிந்த கதை தான். படுமொக்கை ஸ்க்ரிப்ட். ஆனால் படத்தில் உள்ள காமெடிகளுக்காக நிச்சயம் பார்க்கலாம். வாய் விட்டு சிரிக்கக்கூடிய இடங்கள் பல இடங்களில் இருக்கின்றன. ஃப்ரீயா டைம்பாஸுக்காக மட்டும் பார்க்கக்கூடிய படம். சீரியஸா எதையும் எதிர்ப்பார்த்து பார்க்காதீங்க. அப்புறம் நான் பொறுப்பு கிடையாது.

படம் பாக்குறதா யோசித்தா, எங்கயாவது தேடி Unrated/Extended edition இருந்தா எடுத்துப் பாருங்க. நிச்சயம் பெட்டரா இருக்கும்.

 

Forgetting Sarah Marshall – Just for Laughs – 64 (59+10) / 100

(10 போனஸ் மார்க்ஸ் என் மிலா குனிஸ் குறையை நீக்கியதற்கு. 10/2 for each ஹி ஹி)

படத்தின் ட்ரெயிலர் :

டிஸ்கி – யாராவது கீழே Upcoming Movie Trailers பதிலாக பாவிக்க ஏதாவது யோசனை இருந்தா கூறுங்களேன். ப்ளீஸ். அத்தோட ப்ளாக் ஹோம்பேஜ்ல ஒரு போஸ்ட் மட்டும் இருக்கிற மாதிரி செட் பண்ணியிருக்கேன். அது நல்லாயிருக்கா இல்லாட்டி பழையபடி 5 போஸ்ட்களை Read More option உடன் போடவா?

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

17 comments:

 1. நண்பரே,
  இந்த படத்தின் சில காட்சிகளில் புன்னகை மாறி சிரிப்பு தோன்றியது உண்மையே.

  Upcoming Movie Trailers பதிலாக எதுவும் தோன்றவில்லை. இப்படியே மெயின்டெயின் செய்யவும்.

  Home Page'ல் ஒரு பதிவு இருத்தலே நல்லது.

  தமிழ் சினிமா உலகம்


  மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

  ReplyDelete
 2. paturuken....time pass padam than...nalla action padam onnu eluthunga ....

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம்..நன்றி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வணக்கம் நண்பா,
  தங்கள் பேஸ்புக்கிற்கு மெசேஜ் அனுப்பி நான்கு நாள் ஆகிறது,
  பதிலைக் காணமே?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 5. (ஹ்ம் நாமளும் இவரு மாதிரி தான் ரூம வச்சிருக்கோம். சாரா வேணாம், அட்லீஸ்ட் ஒரு செல்லம்மா சரி கிடைக்குதில்லையே).
  //

  கொய்யாலே...ஆசையைப் பாரு ஆளுக்கு!

  மவனே! நெனைப்புத் தான் பொழைப்பை கெடுக்கும்!
  இப்பவே உங்க அப்பா அம்மாகிட்ட பேசி ஒரு பொண்ணை ரெடி பண்ணவா?

  ReplyDelete
 6. சூப்பர் விமர்சனம் கண்ணா.

  அதுவும் கலாய்ப்பு காமெடி வசனங்களை உட்புகுத்தி நகைச்சுவை விமர்சனமாக தந்திருப்பது சூப்பர் மச்சி.

  தொடர்ந்தும் எழுதுங்க.
  ஹோம் பேஜ்ஜில் மூன்று பதிவு இருப்பதும் நல்லது. ஒரு பதிவு இருப்பதும் நன்மைக்கே
  அது உங்கள் விருப்பம்.


  நடிகைகளுக்காக படத்தை பார்க்கனும் போல இருக்கே..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 7. நல்ல விமர்சனம் ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 8. @ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன்

  இல்ல ... கொஞ்சம் பிஸியா இருக்கேன். ஃபியுச்சர் ப்ளானிங்.

  ReplyDelete
 9. கருத்துகளுக்கு மிகவும் நன்றி நண்பர்களே.

  ReplyDelete
 10. விமர்சனம் கலக்கல்.

  ////////படத்தின் முக்கிய ஹைலைட்டே படத்தின் ஹீரோயின்ஸ் தான். ஆர்டிஸ்ட் செலக்ஷன் பண்ணினவன கோயில் கட்டி கும்பிடனும். ரெண்டு பேருமே A-க்ளாஸ் ஃபிகருங்க. ஒவ்வொரு விதத்தில் இருவரும் யுனிக். சத்தியமா Kristen Bell (சாரா மார்ஷல்), Mila Kunis (ரேச்சல்)இருந்தனால தான் சீன் இப்போ வரும், அப்போ வரும்னு முழுக்க பார்த்தேன்.////////
  இந்த மாதிரி படத்தை சீன் இல்லாம எப்படி பார்க்கறது, என்ன தான் A-க்ளாஸ் பிகரு ரெண்டு இருந்தாலும்!!!!!!!

  ReplyDelete
 11. முதல் முறையாக உங்கள் பதிவைப்படிக்கிறேன்.மிகச்சிறப்பாக இருக்கிறது உங்கள் நடை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. @உலக சினிமா ரசிகன்
  வருகைக்கு நன்றி உலக-சினிமா-ரசிகரே. தொடர்ந்து வாங்க.

  ReplyDelete
 13. //ஷேம் ஷேம் பப்பி ஷேம் காட்சிகளைப் பார்ப்பதில் ஒரு விதமான பிரச்சினையோ சங்கடமோ உங்களுக்கு இல்லைன்னா (நம்ம சி.பி மாதிரி) //

  சிபி ஒரு பச்சை மண்ணுங்க. அவரைப்போயி...மனசு வலிக்குது.

  ReplyDelete
 14. போன வாரம்தான் படத்தை பார்த்தேன் நண்பா !! நானும் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் விமர்சனத்தை என் பதிவில் வெளியிட்டேன். சில இடங்கள் என்ன ரொம்பவே கவர்ந்தது. அதே போல மிலா குனிஸ் படத்தை ரசிக்க பெரிய காரணம்.

  ReplyDelete
 15. @தடம் மாறிய யாத்திரீகன்

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யாத்ரீகரே.

  ReplyDelete
 16. நல்ல விமர்சனம் இடையில் நம் தமிழ்சினிமாவையும் கிண்டல் பண்ணி.உண்மையில் இந்தப்படத்தை பிரெஞ்சுமொழியில் தான் நான் பார்த்தது அதுவும் அவர்கள் ஹாவய்த்தீவில் செய்யும் ரகளை மனம்சிட்டுச் சிரிக்கலாம் . 

  ReplyDelete
 17. hii.. Nice Post

  Thanks for sharing

  Best Regarding.

  More Entertainment

  For latest stills videos visit ..

  www.chicha.in

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...