நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Conan The Barbarian [2011]


கோனன் தி பார்பேரியன் - இது ஆர்னல்ட் ஷ்வாஷ்னேக்கரின் நடிப்பு கேரியரில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த ஒரு திரைப்படம். இது அவருக்கு பல ரசிகர்கள் அமைய காரணமாக அமைந்தது. பொதுவாக ஹாலிவுட்காரர்களின் பழக்கம் என்னான்னா ஒரு படம் ஹிட் ஆகிட்டா, அது மக்களுக்கு போரடிச்சு போரமட்டும் புதுசு புதுசா கதை பின்னி (Sequels & Prequels) சீரீஸ் ஒன்னு செய்வானுங்க.

அதேபோல தான் கோனன் மறுபடி ரிலீஸ் ஆகி இருக்கு. இந்த ப்ஃரான்ச்சைஸை தொடரும் வாய்ப்பு கிடைத்தது The Texas Chainsaw Massacre மற்றும் The Pathfinder போன்றவற்றை இயக்கிய Marcus Nispelக்கு. சரி ... எந்தளவு சக்ஸஸ் ஆகி இருக்காங்கண்ணு பாப்போம்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இறந்தகாலம் I : முன்னொரு காலத்தில் அச்சரோன் எனும் இடத்தில் மந்திரவாதிக கொஞ்ச பேர் கூட்டு சேர்ந்து இறந்து போன மன்னர்களின் தலையோடுகளை வைத்து ஒரு முகமூடி செய்து, அதில்தூயவழி இரத்தமான அவர்களின் மகள்மாரை பலியிட்டு அந்த ரத்தத்தை தீயசக்திகளுக்கு படைக்கிறார்கள். அந்த முகமூடி அணிபவருக்கு உலகை ஆளும் சக்தி கிடைக்கும் என அவர்களுக்கு தெரிய வருகிறது. பிறகென்ன ... சண்டை, சண்டை, சண்டை. பின்னர் ஓரிடத்தில் ஓர் காட்டுமிராண்டி கூட்டத்திடம் தோற்கிறது மந்திரவாதிக்குழு. வென்றவர்கள் அந்த முகமூடிய அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு போட்டு உலகின் பல பாகங்களில் ஒழித்து வைக்கிறார்கள்.
இறந்தகாலம் II படத்தின் படி தூர வடக்கில் உள்ள சிமேரியா என்ற ஊரில் போர்க்களத்தில் ஒரு கொல்லனுக்கு மகனாக பிறக்கிறான். குழந்தை பிறந்தவுடன் தாய் இறந்து போகிறாள். சிறுவயதில் இருந்தே போர்க் கலைகளில் வல்லவனாக இருக்கிறான் கோனன். ஒரு முறை தன் திறமையை காட்டுவதற்காக காட்டிற்குள் செல்லும்போது ஒரு சிறு காட்டுமிராண்டி கும்பலுடன் சண்டை போடுகிறான். சில நாட்களின் பின் அந்த காட்டுமிராண்டி கும்பல் இறந்து போன தன் மந்திரவாதி மனைவியை உயிர்ப்பிக்க அந்த முகமூடியை ஒன்று சேர்க்க முயலும் காலார் ஸிம் என்ற வில்லனோடு வந்து அந்த கிராமத்தை அழிக்கிறது. அதில் கோனன் தப்பிக்க கோனனின் அப்பா இறக்கிறார்.

நிகழ்காலம் : தன் சமூகத்தை கொன்றவனை பழிவாங்க தேடும் கோனன், பணத்திற்காக ஒரு கடற்கொள்ளையனிடம் வேலை செய்கிறான். ஒரு நகரத்தில் தங்கும்போது தன் கிராமத்தை அழித்த காட்டுமிராண்டி ஒருவன் காவல் படையின் தலைவனாக இருப்பதைக் கண்டு ஒரு வேண்டுமென்று இலா-ஷா (Ela-Shah) என்ற ஒரு திருடனுக்கு உதவுவதன் மூலம் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறான். அங்கிருந்து தப்பித்து அந்த காட்டுமிராண்டி தலைவன் மூலம் காலர் ஸீம் அச்சரோன் வம்சாவழி ஒருவரை இரத்தபலி கொடுத்து முகமூடியை activate பண்ணப்போகும் விடயத்தை அறிந்து கொண்டு அவனை தேடி பயணமாகிறான். இதற்கிடையில் வில்லனும் வில்லனின் மந்திரவாதி பொண்ணும் அந்த வம்சாவழி மறைந்திருக்கும் வழிபாட்டுத்தலம் ஒன்றைத் தாக்குகிறார்கள். அங்கிருந்து அந்த வம்சாவழிப் பெண் டமாரா (Tamara) தப்பிக்கிறாள் அவளை துரத்திக் கொண்டு செல்லும் காட்டுமிராண்டியை தலைவனை பிடித்து டமாராவை காப்பாற்றுகிறான் கோனன். தலைவன் மூலம் டமாராவின் முக்கியத்துவத்தை அறிந்து, டமாராவை ஒரு பணயக்கைதியாக வைத்து காலார் ஸீமை வரச் செய்து கொல்ல திட்டமிடுகிறான். ஆனால் ஸீம் தன் மந்திரவாதி மகளின் உதவியுடன் டமாராவையும் கடத்திக் கொண்டு தப்பிக்கிறான். பின் வழக்கமான காப்பாற்றும் படலத்தை கத்திச் சண்டைகள் மற்றும் சில க்ளிஷே காட்சிகளுடன் என்சாய் பண்ணுங்க.= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

அக்மார்க் டிபிகல் ஹாலிவுட் அக்ஷன் படம். நல்ல காஸ்ட் செலக்ஷன், முக்கியமாக கோனன் கதாபாத்திரத்தில் நடிக்கும்  ஜேசன் மொமோ. The Game of Thrones (இந்த சீரீஸ் பற்றி சில நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்) சீரீஸில் Karl Drogoவாக நடித்திருப்பவர். ஒரு ஆக்சன் ஹீரோ ... குறிப்பாக கோனனுக்கு ஏற்ற உடலமைப்பு. படத்துக்காக நிறைய ஹோம்வொர்க் பண்ணியிருக்கார். மற்றபடி படத்துல நல்ல விஷயம் அப்படின்னு சொல்றதுக்கு இருக்கது சீ.ஜீ எஃபெக்ட்ஸ். சில ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம் ... அதிலும் குறிப்பாக விசாரிக்கும்போது கோனன் வெட்டப்பட்ட மூக்கிற்குள் விரலை விடும் காட்சி. ஆனால் அதே க்ராபிக்ஸ் க்ளைமாக்ஸில் எனக்கு அந்த எஃபெக்ட் தரல.
நல்ல நடிகர் செட், விஷூவல்ஸ் எல்லாம் இருந்தும் கதையில கோட்ட விட்டுட்டாரு டைரக்டர். திரைக்கதை வழக்கமான பார்மூலாவையே பாலோ பண்ணுவதால் படம் இப்படித்தான் அப்படி என்பது படம் ஆரம்பித்து கொஞ்ச டைம் போனதும் தெரிந்து விடுகிறது. இதனால் (எனக்கு) அவ்வளவு சுவாரஸ்யம் வரவில்லை. தேவையில்லாமல் பல பைட்டிங் சீன்கள போட்டுட்டாங்களோ அப்படின்னு வேற கொஞ்சம் ஃபீல் ஆச்சு. இதனாலயே இந்த படம் பத்தோட பதினொன்னா தான் மனசுல பதியுது.

விஷூவல் எஃபெக்ட்டுகளுக்காகவும், சில நல்ல சண்டைகளுக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். டைம் பாஸ் படம்.


படத்தின் ட்ரெயிலர் இங்கே :


Conan : The Barbarian - 6.5/10
-------------------------------------------------- * * * * *------------------------------------------------------------
Download Links :

டைரக்ட் லிங்ஸ் :


Link I


அல்லது


Link II


டொரண்ட் லிங்க்ஸ் :

Link I

அல்லது


Link II


-------------------------------------------------- * * * * *------------------------------------------------------------
எக்ஸ்ட்ரா பிட் - வார்னிங்!!! படத்தின் 01:16:00 இல் ஒரு சின்ன கில்பசக் கில்மாஸ் சீன் வருது.டிஸ்கி - நான் ஆர்னல்டின் 1982 படத்தை இன்னும் பார்க்கவில்லை. அது பார்த்தாலும் எந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கும் எனத் தெரியவில்லை. அதனால் தான் அதையும் இதையும் ஒப்பிடவில்லை. அதை பார்த்தால் ஒரு சின்ன கம்பரிஸன் ஒன்று பார்க்கலாம்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

1 comments:

  1. //The Game of Thrones (இந்த சீரீஸ் பற்றி சில நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்) //

    என்ன ஆச்சரியம். நானும் இந்த தொடரைப் பற்றி எழுதனும் கொஞ்ச நாளா நினைச்சுட்டு இருக்கேன். சோம்பேறித்தனத்தால அது நடக்கல. நீங்க எழுதுங்க. உங்க பார்வையில் எப்படி இருக்குனு பார்க்கலாம்.

    //ஆர்னல்டின் 1982 படத்தை இன்னும் பார்க்கவில்லை. அது பார்த்தாலும் எந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கும்//

    நான் இந்த படத்தை ஸ்டார் மூவீஸ்ல பார்த்தேன். அவ்வளவா நல்லா இல்லை.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...