நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Ratatouille [2007]வாழ்க்கையில் எல்லாருக்கும் என்று ஒரு பெரிய கனவு அல்லது இலட்சியம் இருக்கும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் வாழ்க்கை தடம் மாறி எங்கயாவது ஒரு இடத்துல குப்பை கொட்டிகிட்டு இருப்போம். அப்ப தான் யோசிப்போம் .... நா எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல. நா மட்டும் அமெரிக்காவுல பொறந்து இருந்தேன், பில்கேட்ஸுக்கு முன்னாடியே விண்டோஸ கண்டு புடிச்சு அவருக்கு DVD Copy ஒன்னு அனுப்பி இருப்பேன்னு.


அப்படிப்பட்ட ஒரு கனவுடன் வாழும் Remyங்கற ஒரு எலியின் கதை தான் இந்த Ratatouille.= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = == = = = = = =

பிரான்ஸ் நாட்ல ஒரு வீடு இருந்துச்சாம். அந்த வீட்ல கண்ட குப்பைகளையும் தின்னும் ஒரு எலிக் கூட்டம் குடி இருந்துச்சாம். அந்த எலிக்கூட்ட தலைவரின் இளைய மகன் தான் மெயின் கதை நாயகன். சமைப்பதில் மிகவும் ஆர்வம் உடைய ஒரு எலி. ரெமி (Remy)க்கு எமில் (Emile)ணு ஒரு அண்ணன். அவனும் சாதாரண குப்பை கிளறும் ஒரு எலி தான். ஆனால் நம்ம ஹீரோக்கு குப்பைகள்னாலே ஆகாது. அதோட நல்ல மோப்ப சக்தியும் ருசி பார்க்கும் சக்தியும் உண்டு. ரெமிக்கு தன் கூட்டம் குப்பை கிளறுவது பிடிப்பதில்லை. சமைத்து தான் சாப்பிடணும்னு சொல்லுது. அத அவங்க அப்பா ஏத்துக்கல.

”யாரு வேணும்னாலும் சமைக்கலாம்ன்னு (Auguste Gusteau) குஸ்டோங்கற உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு Chef ஒரு டீ.வி நிகழ்ச்சில சொல்ற மாதிரி படம் தொடங்குது. அதிலிருந்து ரெமியும் அவரின் Cookbooks மற்றும் சமையல் நிகழ்ச்சிகளை அந்த வீட்டு டீவியில் பார்த்து சமைக்கப் பழகுது.

ஒரு நாள் ரெமியும் எமிலும் சமைக்க கொஞ்சம் சாமான் திருட சமையலறைக்குள் நுழைகிறார்கள். அப்போது தொலைக்காட்சியில் Egoங்கற ஒரு சமையல் விமர்சகன் (நாம) சாப்பாடு (நம்ம சராசரி தமிழ் சினிமா மாதிரி) சரியில்லன்னு எழுதிவிட குஸ்டோவின் ரெஸ்டாரன்டிற்கு ஒரு ஸ்டார் குறையுது. கவலையில் குஸ்டோ இறந்து போறார்.

அந்த டைம் பாத்து வீட்டு ஓனர் எழும்பி விட எலிக்கூட்டம் கலவரத்தில் சாக்கடைக்குள்ள கலைந்து ஓடுது. ரெமி அவனின் சமையல்புத்தகத்தை விட்டுட்டு போக மனசில்லாம அத படகு மாதிரி யூஸ் பண்ணி போறப்போ கூட்டத்த விட்டு பிரிஞ்சு போய்விடுது. அப்பறம் சாக்கடைல இருந்து வெளில வந்து பாத்தா குஸ்டோவின் ரெஸ்டாரன்ட்.
அங்கு நம் அடுத்த ஹீரோ லிங்குயினி (Linguini) எடுபிடி வேல செய்றார். ஒரு முறை லிங்குயினி சூப் தட்டு ஒன்றை கொட்டி விட்டு அதை சரி செய்ய தப்பு தப்பா சாமான்களை கொட்டுரதை பாத்துட்டு ரெமி அவருக்கு தெரியாம உதவி செய்யுது. சூப் ஒரு சமையல் விமர்சனம் எழுதுற ஒருவருக்கு பரிமாறப்பட, அவரும் அது நல்லா இருக்குன்னு சொல்லிடறார். அதுக்குள்ள தலைமை செப்ஃ ஸ்கின்னர் (Skinner) ரெமி சமைத்ததைக் கண்டு விட ரெமி தப்பித்து செல்லப் பார்க்கிறது. ஆனால் லிங்குயினி ரெமியை ஒரு போத்தல்ல பிடித்து ஆத்துல போட கொண்டு போறான். ஆனா தனக்கு உதவி பண்ணினது ரெமி தான்ங்கறத உணர்ந்து அதை வீட்டிற்கு எடுத்துப் போறான். அடுத்த நாள் காலைல ரெமியின் சமையல் திறனை கண்டு அதை தன்னோடு ரெஸ்டாரண்டிற்கு எடுத்து செல்றான். அங்கு லிங்குயினியின் தலைமுடியை ரிமோட் கன்ட்ரோல் போல் பாவித்து ரெமி லிங்குயினி மூலமாக சமைக்கிறது. குஸ்டோவின் ரெஸ்டாரண்ட் புகழ் பரவுகிறது. இடையில் லிங்குயினிக்கும் அங்கு வேலை செய்யும் கோலட் (Colette) என்னும் இன்னொரு செப்ஃக்கும் கொஞ்சம் ரொமான்ஸ்.

இதற்கிடையில் கதையில் ஒரு சின்ன ட்விஸ்ட். லிங்குயினி தான் கஸ்டோவின் மகன் என ரெமி லிங்குயினிக்கு தெரியப்படுத்துகிறது. பின் ஸ்கின்னரை துரத்தி விட்டு லிங்குயினி ரெஸ்டாரண்டை பொறுப்பெடுக்கிறான்.

குஸ்டோ ரெஸ்டாரண்டின் புகழை கேள்விப் பட்ட நம் வில்லன் Ego ரெஸ்டாரண்டின் சுவை பற்றி விமர்சனம் எழுத போவதாக லிங்குயினிக்கு அறிவிக்கிறான். ஆனால் லிங்குயினிக்கு கொஞ்சம் தலைக்கனம் பிடித்து ரெமி இல்லாமல் சமைக்க திட்டமிடுகிறான். ஆத்திரமடைந்த ரெமி, தன் எலிக்கூட்டத்தை விட்டு கிச்சனை நாசமாக்குகிறது. இதனால் எலிக்கூட்டத்தை லிங்குயினி வெளியே துரத்துகிறான். பின்னர் ரெமி ஸ்கின்னரின் பொறியில் மாட்டிக் கொள்கிறது.
பின்னர் என்ன நடந்தது? Ego என்ன சமைக்க சொன்னான்? ரெமி தப்பித்ததா? லிங்குயினிக்கு உதவியதா போன்றவற்றை மிகவும் பரபரப்பாக செல்லும் க்ளைமாக்ஸை பார்த்து தெரிந்து கொள்ளவும்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = == = = = = = =

மிகவும் சுவாரஸ்யமான ஒரு திரைப்படம். 5 ஆஸ்கார் விருந்துகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு Best Animated Feature Film விருதை தட்டிச் சென்றது.


படம் ஆரம்பித்ததில் இருந்தே ரெமியின் அப்பாவித்தனமான முகமும், சுபாவமும் நம்மை அதனுடன் பிணைத்து விடுகின்றன. வழக்கமாக எனக்கு எலியைக் கண்டாலே உடம்பு நடுங்கத் தொடங்கிவிடும். ஆனால் ஏனோ இப்படத்தில் அந்த சாப்ஃடான ரெமியின் நீல உடல் மிகவும் பிடித்து விட்டது. படத்தின் மிக முக்கிய ப்ளஸ் பாயிண்ட் - அனிமேஷன் ..... அட்டகாசம்!!! ஒவ்வொரு ப்ஃரேமிலும் மிக கவனமாக உடல், முடி, நீர் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி தனது வழக்கமான முத்திரையை இதிலும் பதித்து இருக்கிறார்கள் பிக்ஸார் நிறுவனத்தினர். இதற்காக பிக்ஸார் அனிமேட்டர்கள் ஒரு வருடமாக எலிகளின் அசைவுகளை Note பண்ணினார்களாம்! மற்றும் கதையில் வரும் ஏனைய கதாபாத்திர வடிவமைப்புகள் இன்னும் சுவாரஸ்யம்.

சிறு பிள்ளைகளுக்கான படம் என்றாலும் பெரியவர்களுக்கும் அலுப்படிக்காமல் இருக்கும் வகையில் திரைக் கதையை கையாண்டு இருப்பது கூடுதல் ப்ளஸ் பாயிண்ட். மொத்தத்தில் ஒரு நகைச்சுவையான, சென்டிமன்ட் அனிமேஷன். கண்டிப்பாக குடும்பத்துடன் வார இறுதியில் பார்க்க கூடிய திரைப்படம்.

படத்தின் டிரைலர் இங்கே :
Ratatouille - 9/10

எக்ஸ்ட்ரா பிட் -  ரட்டடூய்ல் என்பது பிரான்ஸின் ஒரு உணவு வகையாகும். படத்திலும் இந்த டிஷ் பெரும்பங்கு வகிக்கிறது.பைஃனல் கிக் - என்ன தான் இருந்தாலும் பிக்ஸார் நம்ம தமிழ் சினிமாவின் மையக்கரு பார்முலா ஒன்றை எடுத்து படமாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. நம்ம சினிமா ஹீ(ஸீ)ரோக்கள் கிராமத்துல இருந்து நகரத்துக்கு வந்து வில்லன தோக்கடிச்சு பெரிய ஆள் ஆகிடுவாங்க. இங்கயும் அதே கதை தான். என்ன சைஸ் தான் கொஞ்சம் சிறிசாப் போச்சு. தமிழண்டா ..... நாம ஹாலிவுட்டுக்கே கதை சொல்லிக் குடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கோம்ன்னு நினைக்கறப்போ சந்தோஷமா இருக்கு.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

4 comments:

 1. //ஒவ்வொரு ப்ஃரேமிலும் மிக கவனமாக உடல், முடி, நீர் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி தனது வழக்கமான முத்திரையை இதிலும் பதித்து இருக்கிறார்கள் பிக்ஸார் நிறுவனத்தினர்//
  பிக்ஸார் நிறுவனம், எல்லா படத்துக்கும் இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களில் ரொம்ப கவனம் செலுத்து வாங்க...
  ஹாலிவுட் பாலா http://hollywoodbalas.blogspot.com தன்னோட ப்ளாக்ல இவங்களை பத்தி ரொம்ப எழுதி இருக்கிறார்..

  ReplyDelete
 2. அறிவித்ததற்கு மிகவும் நன்றி ராஜ் சார். இப்பொழுது தான் பிக்ஸார் ஸ்டோரியை படிக்க தொடங்கியுள்ளேன். அட்டகாசமான புத்தகம். சான்ஸே இல்ல.

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 4. சூப்பர் படம்.. க்ராபிக்ஸ் செம.. கூரையின் உச்சிக்கு சென்று இரவு நேர பாரிஸை பார்க்கும் போது, அந்த வீயு சூப்பரா இருக்கும்...

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...