நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

யுத்தம் ஆரம்பம் 6 – சத்தமின்றி ஒரு யுத்தம்

இவ்வளவு நாள் ஏதோ ஒரு ஓரமா ஹாலிவுட் படங்களை விமர்சனம் பண்றேன்னு பல உயிர்களின் தூக்கத்தைக் கெடுத்துட்டு இருந்த என்னை  ஒரு சோதனை முயற்சியில் (நான் கேட்காமலேயே) மாட்டிவிட்டான் அருமை?? நண்பன் ஹாரி. பின்வாங்கினால் கோழை என்ற பட்டத்தைக் கொடுத்துவிடுவார்களே என்ற பயத்தில் கிறுக்கியதன் விளைவு,,, இன்றைய பதிவு.யுத்தம் ஆரம்பம் என்று ஒரு தொடர். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு பதிவர் ஏற்றுக் கொண்டு எழுதுறாங்க. அவரவர் விருப்பப்படி அந்த அத்தியாயம் நகரும் என்பதால் ஒவ்வொரு எபிசோடும் ஸ்டோரி என்படி ட்ர்ன் ஆகும் என யாராலும் ப்ரெடிக்ட் பண்ண முடியாது. ஒருவர் முடித்த இடத்திலிருந்து மற்றவர் தொடர்வது என்ற டீலிங்கில் இதுவரை ஓடிக் கொண்டிருக்கிறது. ஹாரியின் தளத்தில் அவனது ஐடியாவில் உருவான இந்தத் தொடர் ரஜினி முதல்வரானால் என்று பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கப்பட, [2] சீனு, [3] அப்துல் பாசித், [4] (Child) சின்னா மற்றும் [5] scenecreator அவரவர் தளங்களில் கதையை அழகாக நெய்ய, பதிவுகளால் கோர்க்கப்பட்ட இந்த மாலை இப்பொழுது இந்தக் குரங்கின் கையில்.

இதற்கு முன் இந்தத் தொடரை வாசிக்காதவர்கள் மேலே உள்ள லிங்குகளில் நண்பர்களின் தளங்களில் சென்று வாசித்துவிட்டு கீழே தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாசித்துவிட்டு “நீயெல்லாம் இனி கதை எழுதினீன்னா கைய வெட்டுவேன்” என்று மனதில் தோன்றுவதையோ, அல்லது குறைகள், மிஸ்ஸாகிவிட்டது என்று நினைப்பவற்றையோ தயங்காமல் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கொட்டிவிட்டு செல்லவும்.  சிலவேளைகளில் வாசித்து முடிந்ததும் எனக்குக் ரசிகர்களிடமிருந்து கொலைமிரட்டல்கள் கூட வரலாம் (காரணம் வாசிக்கும்போது தெரியும். பயப்படாதீங்க…நான் ஒன்னும் பண்ண மாட்டேன்)

ஆஆஆஆ….மறந்துட்டேன் பாத்திங்களா? அப்படி இப்படின்னு மனசுல வந்ததையெல்லாம் கிறுக்கிவிட்டதை, தம் நேரத்தை செலவளித்து ப்ரூஃப் பார்த்து அழகாக மாற்றியமைத்துக் கொடுத்த நண்பன் ஹாரி, சீனு மற்றும் பெயர்குறிப்பிடுவதை விரும்பாத அந்த நல்ல உள்ளத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!!!  (நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது … கீப் இட் அப்)

இனி ….

Untitled


WARNING : PROCEED WITH CARE !!! 8“நான் அழகாயிருக்கேனாடா?”

“ம்ம்ம்…”

தலையை தோளின் மேல் சாய்த்துக்கொண்டு ஒரு விதமான மோனப்புன்னகையுடன், மெதுவாக தனது விரல்களை சூர்யாவின் கரும் கேசத்தினூடாக செலுத்தி நெருக்கம் காட்டியபடியே ஜோதிகா கேட்டாள்.

“வாயத் திறந்து சொல்லு….நிஜமாலுமே என்னைப் பிடிச்சிருக்கா?”

கட்டிலின் மேலிருந்த நைட் லாம்ப் அந்த ரொமான்ஸ் கணத்தின் உணர்ச்சியை அதிகரிக்க, இருளோ தன்னாலான உதவியாக மெல்லிய நீல ஒளியை ஜோவின் மேல் பாய்ச்சிக்கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் எடுப்பாகத் தெரிந்த ஜோவின் லாவண்யங்களைக் கூட ரசிக்க விடாமல் நித்திரையும் அசதியும் சூர்யாவின் கண்களை ஆட்சி கொண்டிருந்தது.

“ச்ச்ச்…பிடிக்காமலா கட்டி மூணு வருஷமா குடும்பம் நடத்தறேன்? கோழி கூட இன்னும் கூவல. விடியக்கால மூணு மணிக்கு ஏண்டி சாவடிக்கிற? தூக்கம் கண்ண கட்டுது. நாளைக்கு ராத்திரி பேசிக்கலாம்.” என்றபடி திரும்பிப் படுத்தான் சூர்யா.

“நானில்லாமல் உன்னால் வாழ முடியுமாடா?”

“ம்ம்ம்? நீயில்லாமக் கூட முடியும். ஆனால் Nescafe Sunrise இல்லாம இருக்கவே முடியாது…பேசாம தூங்குடி...” சூர்யாவின் உதடுகளில் எட்டிப்பார்த்த சிரிப்பு ஜோவை என்னமோ செய்ததது.

“இந்தக் கிண்டல் தானே வேணாங்கிறது? போடா…” என்று செல்லமாய் ஜோதி தள்ளிய வேளை,


'ட்ரீங்ங்ங்ங்ங்'

அழகான ஜோடியின் நெருக்கத்தை விரும்பாத சாத்தான் டெலிபோன் வடிவில் உரக்கச் சத்தமிட்டு தன் இருப்பை அறிவித்தது. எரிச்சலில் அரைத்தூக்கத்தின் கிறக்கத்துடன் ரிசீவரை காதில் பொருத்தியபடி,

“எஸ். இன்ஸ்பெக்டர் சூர்யா ஸ்பீக்கிங்”

“……………”

டெலிபோன் வயர்களினூடாக வந்த செய்தியைக் கேட்டதும் சூர்யாவின் கண்களில் ஆட்சிகொண்டிருந்த நித்திரை ஓடி மறைந்து, கோபமும் துக்கமும் குடிகொண்டன.

“வாட்? மை காட்! எத்தன மணிக்கு நடந்தது?”

“……………”
“இதோ புறப்பட்டுட்டேன். இன்னும் ட்வென்டி மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.ஓகே..”

ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்த ஜோவும் கண் திறந்தும் திறக்காமல், பாதி மூடிய கண்களினூடாக கேட்டாள்.

“யார் சூர்யா?”

“வெரி வெரி பேட் நியுஸ் ஜோ. நம் முதல்வர் இப்பொழுது உயிரோடு இல்லை…”

“நிஜமாவா? டோன்ட் ப்ளே சிக் ஜோக்ஸ் வித் மீ சூர்யா..” ஜோதிகாவின் தூக்கம் முழுவதும் கலைந்திருந்தது.

“ஏய் … இதுல போய் யாராவது விளையாடுவாங்களா? இப்ப நான் ஸ்பாட்டுக்கு தான் போறேன். நைட் வந்ததும் பேசிக்கலாம்…”

ரெண்டு நிமிடங்களில் அவசர அவசரமாய் முகத்தைக் கழுவிக் கொண்டு ரெடியாகிக் கொண்டு, ஐந்தாவது நிமிடத்தில் ஜீப்பில் ஏற, சூர்யாவின் அவசரத்தைப் புரிந்துகொண்டது போல சுமோவும் இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறந்தது.
  floral 

அதிகாலை மணி 3.30.

பரபரப்பான நாளொன்றை சந்திக்கப்போகிறோம் என்பதை அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த சென்னை நகரின் அமைதியைக் குலைத்தபடி பியட் கார் ஒன்று கணேஷின் கட்டளைக்கமைய பறந்துகொண்டிருந்தது. இரண்டு மூன்று இடங்களில் செக்யூரிட்டி செக்பாயிண்ட்கள் அவர்களின் வேகத்தை குறைத்தாலும், கணேஷின் அடையாள அட்டை காட்டப்பட்டதும் மீண்டும் வேகம் அதிகரித்தது.

பத்து நிமிடங்கள் கரைந்தபின் கார் வேகத்தைக் குறைத்துக் கொண்டு ரஜினியின் வீடு அமைந்திருக்கும் ராகவா அவெனியூவிற்குள் நுழைந்தது. லட்சங்களைக் கொட்டி வாங்கப்பட்ட க்ரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்ட பல நூறு சதுரஅடி பங்களாக்களுக்குள் அதிகாலையில் தன் கடமையைக் காட்ட குரைத்துக் கொண்டிருக்கும் சில வெளிநாட்டு நாய்களின் சத்தத்தையும், கடமையை மறந்தது தூங்கும் வாட்ச்மேன்களின் குறட்டையையும், அதிகாலை குளிர்காற்றை சாக்காக வைத்துக்கொண்டு  ஒரு சபலத்தில் உரசிக்கொண்டிருந்த மரக்கிளைகளையும் தவிர, ஒரு விபத்திற்கான எந்த அடையாளங்களுமின்றி தெருவே கப்சிப்.

“வசந்த்….உண்மையிலேயே உனக்கு வந்த செய்தி உண்மையா? என்னால் இன்னும் அந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை…”

“என்னாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை தான் பாஸ். டி.ஜி.பி ராஜேந்திரனே போன் பண்ணி சொன்னாரு. அவரு சொன்னதுக்கப்பறம் சந்தேகப்பட என்ன இருக்கு?”

“என்ன பகை இருந்தாலும் ரஜினியின் உயிர் மேல் கை வைத்ததை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை வசந்த். எவ்வளவு எளிமையான மனிதர்? யாருக்கும் எந்த தீங்கும் இன்றி ஆன்மீகம், சினிமா, இமயம் என்றிருந்தவரை அரசியல் ஆசை காட்டி இந்த சாக்கடைக்குள் இழுத்துவிட்டு … சே..இட்ஸ் எ சிக் வேர்ல்ட்…”

ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் பாஸ், ஐ மீன் Every Action has an Equal and Opposite Reaction. அட…பார்த்தீங்களா? சிலப்பதிகாரத்தில கூட ஃபிஸிக்ஸ அப்ளை பண்ணியிருக்காங்க.”

“சும்மா இரு வசந்த். நேரங் கெட்ட நேரத்தில் சிலப்பதிகாரம் மகாபாரதம்னுட்டு” அலுத்துக் கொண்டான் கணேஷ்.

“இந்த செய்தி வெளியே கசியும் பொழுது என்ன ஆகும்னு தெரியும் தானே?”
“ம்ம்ம்….ரஜினி என்ற சொல் ஒரு தனிமனித பிம்பமா? அந்த சொல்லின் பவருக்கு இன்று இந்த செய்தி கசிந்ததும் தமிழ்நாட்டின் நிலை எப்படி மாறும் என்று நினைக்கவே நெஞ்சு படபடக்குது..”

கார் வேகத்தை குறைக்காமல், வளைவை எடுத்ததும் ப்ளட் லைட் வெளிச்சத்தில் திணறிக் கொண்டிருந்த ரஜினியின் மாளிகை சின்னாபின்னமாக சிதறி புகைமூட்டத்துடன் காட்சியளித்தது. இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் நீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தன. DO NOT CROSS என மஞ்சள் பின்னனியில் பொறிக்கப்பட்ட டேப்பின் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கிய கணேஷும் வசந்தும் ரைஃபிள் சகிதம் வந்த இரு காக்கியுடைகளால் வரவேற்கப்பட்டு டி.ஜி.பியிடம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

சில ஃபார்மாலிட்டிகளுக்கு பிறகு வசந்த் பதட்டக்குரலில் விசாரித்தான்.
“சார்…பாம் வெடிச்சிருக்குன்னு சொல்றீங்க. ஆனா ஏரியாவே அமைதி இருக்கே? க்ளியர் பண்ணீட்டீங்களா?”

“இல்ல மிஸ்டர் வசந்த். அது தான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு. வாட்ச்மேன் குண்டு வெடித்ததைப் பார்த்ததாகவும், ஆனால் எந்தச் சத்தமும் வரவில்லை என்றும் சொல்கிறான்…சோ அக்கம்பக்கத்துல யாருக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இட்ஸ் ஜஸ்ட் அன்பிலீவப்ள்”

இடையில் குறுக்கிட்ட கணேஷ்,


“சார்…ஐ திங்க் திஸ் இஸ் எ டெக்னாலஜி தட் இஸ் சம்திங் நியு டு அஸ். சைலன்ஸர் துப்பாக்கியில் சுடும்போது எப்படி சத்தம் வராதோ, அதே மாதிரி இதையும் டிசைன் பண்ணியிருக்காங்க…அநேகமாக இது ஏதாவது ஹைலி கான்ஃபிடென்ஷியல் ஃபாரின் மிலிட்டரி ரிசர்ச்சாக இருக்கவும் வாய்ப்பிருக்கு”
“மே பீ யு ஆர் கரெக்ட் மிஸ்டர் கணேஷ். பாம் ஸ்க்வாட் இப்பத் தான் மொத்த பில்டிங்கையும் சல்லடை போட்டு தேடிட்டு இருக்காங்க…சீக்கிரம் தெரிஞ்சுடும்”

டி.ஜி.பி சொல்லிக்கொண்டிருக்கும் அதே சமயம் நிலத்தைத் தேய்த்துக் கொண்டு ப்ரேக் அடித்த சுமோவில் இருந்து இறங்கிய சூர்யாவும் பதட்டத்துடன் ஓடி வந்தார்.

“வாங்க மிஸ்டர் சூர்யா…உங்க சின்சியாரிட்டி தெரிந்து தானே இந்தக் கேஸை உங்களிடம் ஹேன்ட் ஓவர் பண்ணினேன்…? இப்படி நடந்திடுச்சே..?”

“ஐ ஆம் ஹானஸ்ட்லி ஸாரி ஸார் … சி.எம் மறுத்தும் அவருக்கு நாங்க ஹையஸ்ட் பாஸிபிள் செக்யுரிட்டியான த்ரீ-லேயர் ப்ரொடெக்ஷன் கொடுத்திருந்தோம். டோடலி தர்ட்டி காப்ஸ் வாஸ் ஒன் டியுட்டி டே அன்ட் நைட். வீட்டிற்கு வெளியே இருபது போலிஸும், வீட்டிற்குள்ளே பத்து பேரும். விபத்தில் இறந்தவர்கள் இந்தப் பத்து பேராத் தான் இருக்கணும்”

“10 உயிர்களை பலி கொடுத்து விட்டீர்களே சூர்யா? நாளை இத்தனை போலீஸையும் தாண்டி ஒரு பாம் எப்படி வீட்டிற்குள் போனது என்று டிபார்ட்மெண்டில் இன்க்வயரி பண்ணும்போது என்ன பதில் சொல்லப்போறீங்க…? இட்ஸ் ஈஸி டு சே ஸாரி. இதுல அந்த வீணாப்போன மீடியாவுக்கு வேற பதில் சொல்லியாகணும். எல்லாம் என் தலையெழுத்து”

மீண்டும் குறுக்கிட்ட கணேஷ்,

“சார்…இதில் இரண்டே இரண்டு பாஸிபிலிட்டிஸ் தான். ஒன்று, தெயர் இஸ் எ ப்ளாக் ஷீப் இன் அவர் டிபார்ட்மெண்ட் … இல்ல, சூத்திரதாரி முதல்வருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருக்கணும். கான் வீ ஸீ த பாடிஸ் ப்ளீஸ்?”

“ஷ்யுர் கணேஷ். பட் … சி.எம் இன் உடல் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை”

“வாட்? ஆர் யு ஷுர் டி.ஜி.பி? வாட் அபௌட் த ஃபேமிலி…?”

“ஹ்ம் … அவருடைய உள்ளுணர்வு எச்சரித்ததோ என்னமோ, நேற்று சாயந்திரமே சி.எம் மனைவியையும், மகன் விஜயையும் ஃபேமிலி ஃப்ரெண்ட் கமல் குடும்பத்துடன் ஊருக்கு அனுப்பிட்டார்”

”தேங்க் காட் … முதல்வர் மீட்டிங்கில் குண்டுவெடிப்பு நடந்ததிலிருந்து என் சந்தேகம் இன்னும் எம்.எல்.ஏ விஜயகாந்த் மீதுள்ளது. சோ…எனது இன்வெஸ்டிகேஷனை நான் அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்..இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் கொலையாளி உங்களுக்குக் கிடைப்பான். ஐ பெர்சனலி காரண்டி இட் ஸார்” என்று குண்டுவெடிப்பன்று நடந்த சம்பவங்களை மனதில் மீட்டியவாறு கணேஷ் கூறினான்.

“மீ டு கீபிங் மை ஃபிங்கர்ஸ் க்ரொஸ்ட் மிஸ்டர் கணேஷ். கீப் மீ அப்டேடட்”

டி.ஜி.பி சென்றதும் கோபமும் அவமானமும் கொப்பளித்துக் கொண்ட முகத்துடன் இருந்த சூர்யா கணேஷை ஏறிட்டுப் பார்த்து,

“விஜயகாந்த் ஒரு பச்சோந்தி. அவனிடமிருந்து நீங்கள் உண்மையை எதிர்ப்பார்க்க முடியாது கணேஷ்”

“அரசியல்வாதியென்றாலே பச்சோந்தி தானே மிஸ்டர் சூர்யா. எந்த யுத்தத்திலும் முதலில் கொல்லப்படுவது உண்மை தான். ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து க்ளுக்களை பிடித்து முன்னேறுவோம்…ரிலாக்ஸ்” என்றான் வசந்த்.

“வாட் டூ யு மீன் பை ரிலாக்ஸ் வசந்த்? மீடியா நியுஸ் வெளியிட்டவுடன் என்ன ஆகும் என்பதை யோசித்து தான் பேசுறீங்களா..?”

“கூல் டவுன் மிஸ்டர் சூர்யா. இன்னும் முதல்வரின் உடல் கிடைக்கவில்லை. ஆகவே இன்னும் அவர் உயிருடன் இருப்பதற்கான பாஸிபிளிட்டிஸ் இருக்கு. ப்ரஸ் மீட்டிங்கிலும் இதையே சொல்லுங்க. கொஞ்ச நேரத்திற்கு அவங்க வாயைக் கட்டிப் போட இது உதவும்…”

“யெஸ். குட் திங்கிங் மிஸ்டர் கணேஷ். கன்டினியு வித் யுவர் இன்வெஸ்டிகேஷன். த ஹோல் போலீஸ் டிப்பார்ட்மெண்ட் இஸ் அட் யுவர் டிஸ்பொஸல்..டேக் கேர்”

floral மேலே அந்த சம்பாஷணை நடந்து கொண்டிருந்த சமயம், நம் பார்வையை சற்று சென்னையின் ஒதுக்குப்புறத்தில் மரங்களால் சூழ்ந்த ஒரு அழகிய காட்டேஜின் வாசலிற்கு எடுத்துச் செல்வோம்.

காட்டேஜை விட்டு வெளியே வந்த ஒரு உருவம் மின்மினி போல விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கின் அடியில் சென்று பாக்கெட்டில் இருந்த கைபேசியில் சில இலக்கங்களை அழுத்தியது. சில நொடிகளின் பின்னர் மறுமுனையில் ஒரு கரகரத்த குரல், “ம் … ”

“எல்லாம் உங்களோட ப்ளான் படி தான் போய்ட்டிருக்கு பாஸ். ஸ்பெஷல் இட்டாலியன் மேட் பாம். 20 கே.ஜி. இந்நேரம் சத்தமேயில்லாமல் போயஸ் கார்டனில் ஒரு சுடுகாடு உருவாகியிருக்கும்…”

“குடும்பம்…?”

“அவர்கள் நேற்று மாலையே ஊருக்கு கிளம்பிட்டாங்க. டார்கெட் தனியா இருப்பதை கன்ஃபர்ம் பண்ணிட்டு தான் வெடிக்க வச்சேன்…”

“ஐ டோன்ட் கெயார் எபௌட் எனி டெத். நாம வாழணும்னா யார வேணா எத்தன பேர வேணா கொல்லலாம். தப்பேயில்ல

“எஸ் பாஸ்…”

“அடுத்த ஹிட் எப்போ ப்ளான் பண்ணியிக்கே..?”

“எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். போலீஸ் ஹீட் குறையணும். இல்லாட்டி இந்த நிலைமைல கொஞ்சம் கேர்லஸ்ஸாக போனாலும் பெரிய சிக்கலாகிவிடும்..”

“ஐ நோ … பட் யுத்தத்திற்கு வந்தபிறகு கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கக்கூடாது சீயான் .  சீக்கிரமே அடுத்தடுத்து நம்ம ப்ளான செயற்படுத்து..”

“ஓகே .. கன்ஸிடர் இட் டன் பாஸ். இன்னும் இரண்டு நாட்களில் லிஸ்டில் அடுத்த புள்ளிகளுக்கு விமோசனம் கொடுத்துடுவோம்”

“……………”

எதிர்முனையில் வந்த ஸ்டாடிக் டோன் லைன் துண்டிக்கப்பட்டதை உறுதிபடுத்தியது.சூரியன் இரண்டு முறை தூங்கியெழும்பினான். இரண்டாம் நாள் அதிகாலை மீண்டும் சத்தமில்லாமல் சென்னையில் இரண்டு அரசியல் பிரமுகர்களின் வீடுகள் வெடித்துச் சிதறின.யுத்தம் தொடரும் ….


floral


டிஸ்கி – இது போல ஒரு முயற்சியை ஏற்கனவே பல பிரபல பதிவர்கள் செய்திருக்காங்கன்னு ஒரு மிகப் பிரபலமான பதிவர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டேன். அவர் அதுக்கு லிங்க் தராட்டியும் நம்ம கை சும்மா இருக்காதே? அதான் கூகிள் மச்சியின் உதவியுடன் தேடி எடுத்தேன். இதையும் நேரமிருந்தா படிச்சுப் பாருங்க. (யப்பா என்னா கான்செப்ட், ரைட்டிங் ஸ்டைல்?? நாங்க எழுதுறதெல்லாம் சும்மா தூசு .. தூசு)


பதிவுகளின் தொகுப்பு இங்கேவெயிட்.  இதுக்கு மேல சுயபுராணம் தான். வேணுங்கிறவங்க வாசிக்கலாம். இதுக்கு மேல தாங்காது சாமீன்னு சொல்றவங்க கீழே உங்க கருத்த சொல்லிட்டு திரும்பிப் பார்க்காம ஓடலாம். (டேய் டேய் … திருக்குறள் மாதிரி கதையெழுதுறது முணு பந்தி..அதுக்கு விளக்கம் நன்றியுரை லொட்டு லொசுக்கு பத்து பந்தியா?)

ஸ்ஸ்ஸ்ஸப்பா …. ஒருமாதிரி ஒரு பொறுப்பை இறக்கியாச்சு. இந்தப் பதிவையும் பொறுமையா இந்த சொல் வரைக்கும் வாசித்து வரும் உள்ளத்திற்கு மிக்க நன்றி. இந்த எபிசோட் கொஞ்ஞ்ஞ்சம் எதிர்ப்பார்த்ததை விட லென்த்தாப் போய்டிச்சு போலருக்கு. ஆனாலும் பரவாயில்லை. (எழுதுறது ஒருமுறை. இதுலயே மேக்ஸிமம் வறுக்கவேணாம்? இனி விமர்சனத்தில் கொல்றேன்) ஏதோ இந்தத் தொடருக்கு என்னாலான சிறு பங்களிப்பை செய்துட்டேன். இட் வோஸ் எ ஃபன் ரைட்!!!  இனிவரும் காலங்களிலாவது பாடசாலையோடு தலைமுழுகிய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும், முக்கியமாக சுஜாதா அவர்களின் புத்தகங்களை கொழும்பு போகும்போது எங்காவது தேடிப் பார்க்கவேண்டும். ஒன்று கூட இன்னும் வாசித்ததில்லை (ஏய் …. யாருப்பா அது கல்லடிக்கிறது?)

அப்படியே இனி ஒவ்வொரு தளங்களிலும் வெளிவரும் மற்ற பகுதிகளையும் ஃபாலோ பண்ணுங்க. Beleive me … it will be Awesome !!!


ஸ்டே ட்யூன்ட் !!!!

Black Dynamite (2009)

folder

1970 காலப்பகுதிகளில் உருவான ஒரு திரைப்பட வகை ப்ளாக்ஸ்பொய்ட்டேஷன் (பிரித்தால் ப்ளாக்-எக்ஸ்ப்ளொய்ட்டேஷன்). அதாவது இந்த வகைப்படங்கள் எல்லாம் சிட்டிக்கு வெளியே வசிக்கும் அமெரிக்க-சிறுபான்மையின மக்களை குறி வைத்தே எடுக்கப்படும் படங்கள். இந்தப் படங்களில் முக்கியமான விடயம், படத்தின் கதைபாத்திரங்கள் அனைத்தும் சட்டம், அதிகாரம் என்பவற்றை எதிர்க்கும் ஆண்டிஹீரோக்களாக (ஆண்டி-ஹீரொ தமிழ்நாட்ல இருக்கிறார்…அது இப்போ நமக்கு தேவையில்லாத சப்ஜெக்ட்)இருப்பது தான். அதிலும் இவர்கள் எதிர்ப்பது பெரும்பாலும் அமெரிக்க (வெள்ளை) இனத்தை...

thumb2சில (பல) நேரங்களில் பெரிய பட்ஜெட்டில் பெரிய ஹைப்புடன் இறங்கும் படங்கள் ஏமாற்றமளிப்பது வழக்கம். மொக்கைப் படங்கள் மொக்கையாகவே போய்விடுவதும் சாதாரணம். ஆனால் மரண மொக்கையாகத் தான் அமையவேண்டும் என நினைத்து சின்ன பட்ஜெட்டில் எடுக்கும் சில படங்கள் ஏதோ ஒரு வகையில் அருமையாக, ரசிக்கும்படி அமைந்துவிடுவது??? அபூர்வம்….ப்ளாக் டைனமைட்!!! அவனுக்கு குங்-ஃபூ தெரியும். அவன் ஓடுவது 5000 டாலர் கார். அணிவது 100 டாலர் சூட். ஆனால் பெண்கள் விஷயத்திற்கு வரும் போது ……

இது தான் இந்தப் படத்தின் ட்ரெயிலரில் ஹீரோவிற்கான இன்ட்ரோ வரிகள். இதைப் படித்ததும் ஏதோ கறுப்பு ஜேம்ஸ் பாண்ட் படமோ என்று யோசிக்காதீங்க. இது முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி, அந்த ப்ளாக்ஸ்பொய்ட்டேஷன் வகையை நக்கலடித்து  எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன், ஸ்பூஃப் வகையறாப் படம்.thumb1வியட்நாமில் சேவை புரிந்து பின்னர், சி.ஐ.ஏ உளவாளியாக இருக்கும் ப்ளாக் டைனமைட் 1970களின் ஆக்சன் சூப்பர்ஸ்டார். சி.ஐ.ஏ யின் ரகசிய உளவாளியான அவனது சகோதரன், அநாதைச் சிறுவர் நிலையங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் ஒரு கும்பலைக் கண்டுபிடிக்க மாறுவேடத்தில் செல்லும் நேரத்தில் மாட்டிக்கொண்டு கொலைசெய்யப்பட, லோக்கல் தாதாக்களை எல்லாம் துவம்சம் செய்து தன் தம்பியைக் கொன்ற “த மேன்” என்பவனைத் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்க ப்ளாக் புறப்படுகிறான். அவ்வாறு ரௌடிகளை அழித்து போதைப்பொருள் சப்ளையை நிறுத்துவதால் க்ளோரியா என்ற பெண்ணுடன் லவ்வும் ஸ்டார்ட் ஆகிறது.

ஆனால் கறுப்பின மக்களுக்கு போதைப்பொருள் விநியோகிப்பதில் அமெரிக்க அரசாங்கத்திற்கும் பங்கு இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளும் டைனமைட், அதை மேலும் ஆராய்ச்சி செய்யும் போது,  பிரபலமாகி வரும் “அனகொண்டா மோல்ட்” எனும் உற்சாகப் பானத்திற்கு இதில் சம்பந்தம் இருப்பதும் தெரிய வருகிறது. இடையில் வழியில் சந்திக்கும் வெள்ளைக்கார “கறுப்புப் போலீஸ்”, மாஃபியா கும்பல் தலைவன் என எல்லாரையும் தனது நன்-சக் மூலமும், குங்-ஃபூ உதைகள் மூலமும் ஒரு வழி பார்க்கிறான். இந்த அடி-உதை-குத்து பஞ்ச் வசனங்களுக்கு எல்லாம் பிறகு விசாரணை இறுதியில் வந்து நிற்கும் இடம் “வெள்ளை மாளிகை”.

வெள்ளை மாளிகை “அனகொண்டா மோல்ட்” மூலம் சாதிக்க நினைப்பது என்ன? த மேன் என்பவன் யார்? ப்ளாக் டைனமைட்டின் காதல்-கதை என்னவானது? டவுன்லோட் பண்ணி சிரிச்சுக் கொண்டே தெரிந்துக் கொள்ளுங்க.thumb3


நான் பார்த்ததில் சிறந்த ஒரு ஸ்பூஃப் வகைப்படம் என்று இதைக் கூறலாம். Scary Movie போன்ற குப்பைகளுக்கு பிறகு ஸ்பூஃப் படம் பார்ப்பது என்றாலே கொஞ்சம் யோசிக்க வேண்டியதாயிருக்கு. ஆனால் இந்தப் படத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்த இடங்கள் ஏராளம். படம் ஓடுவதும் வெறும் 1மணி 25 நிமிடங்களே. . அதனால் திரைக்கதை எந்த இடத்திலும் தொய்ந்து போய் நிற்காது. ஆரம்பித்தது முதல் முடியும் வரை மொக்கை மேல் மொக்கை தான்.

மைக்கேல் ஜே வைட்  - முழுப்படத்தையும் கையில் தாங்கி நிற்பது இவர் தான்.  உண்மையிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்தவர் என்பதால் ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் தூள் (கறுப்பு ப்ரூஸ்-லீன்னு வச்சுக்கலாமா? … சே சே … தல எப்பவும் டாப் தான்). சீரியஸா வசனம் பேசும் போதும் சிரிப்பு வருவது இந்தப் படத்தைப் பொறுத்தவரை பலம் தான்.

படம் நடப்பது 1970 காலப்பகுதி. படத்தைப் பார்க்கும்போதும் உங்களுக்கு ஒரு 30 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்த்த ஃபீலிங்கே வரும். அவ்வளவு நேர்த்தியாக கார்களில் இருந்து ஹேர்ஸ்டைல் வரை எல்லா டீடெயில்களையும் கவனத்திற் கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். லைட்டிங்கும் இந்தப் படத்தின் கலர்டோனும் 1970காலப்பகதி ஃபீலிங்கிற்கு மேலும் கைகொடுத்திருக்கின்றன.

மேலே முதல் பாராவில் சொன்னது போல இந்தப் படம் டார்கெட் பண்ணியது சிறுபான்மை இனத்தவர்களைத் தான். அவர்களுக்கான படத்தை அவர்களே நடித்து, இயக்கி அவர்களுக்குள்ளேயே பார்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இதனாலோ என்னவோ படமும் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி. கிட்டத்தட்ட 3 மில்லியன் பட்ஜெட்டில் எடுத்தாலும் கலெக்சன் அதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை!


ஸ்கோர் – 86/100


படத்தின் ட்ரெயிலர்

 

ஆனாலும் ஒன்-லைனர், ஸ்பூஃப் வகை காமெடி படங்களை விரும்புபவர்கள் நிச்சயம் எடுத்துப் பார்க்கலாம்!!!
பிடிக்காதவர்கள் திட்டுவதற்கு கீழே கமெண்ட் பெட்டி தரப்பட்டுள்ளது. Smile

God Bless America (2012)

folder


“இன்னிக்கு ஆபிஸுக்கு லீவு போட்டுட்டு நிம்மதியாக கொஞ்ச நேரம் டீவி பாக்கணும்.”

க்ளிக்….

“ஏண்டி….போனாப் போகுது, அத்தைப் பொண்ணாச்சேன்னு என் மகன ஒனக்கு கட்டிவச்சா… நீ எனக்கே சவால் விடுறியா? இருடி…என் மகன் வரட்டும். உன்னைய வீட்ட விட்டு துரத்தல, என் பேரு…”

க்ளிக்…

”ஏங்க…நான் உங்களுக்கு எந்த விதத்துலங்க குறை வச்சேன்? நான் அழகாயில்லையா? உங்கள சந்தோஷமா வச்சுக்கலயா? கட்டின பொண்டாட்டி நான் குத்துக்கல்லு மாதிரி இருக்க, அப்புறம் ஏன் அந்த தேவகி வீடே கதின்னு அங்க போய் இருக்கீங்க?”

க்ளிக்…

“டாடி மம்மி வீட்டில் இல்ல. தடை போட யாரும் இல்ல…விளையாடுவோமா உள்ள வில்லாளா?”

க்ளிக்…

க்ளிக்…

சே…(உருப்படியா நல்ல விஷயம்னு ஏதாச்சு டீவில போகுதா? இந்த டிவி ப்ரோகிராம் எடுக்குறவனுங்கள நடுரோட்ல சுட்டுத் தள்ளணும். அப்பத் தான் வீடும் நாடும் உருப்படும். ஐயய்யோ … டிவி பார்த்து தலவலி இன்னும் அதிகமாயிருச்சே? கொஞ்ச நேரம் மாத்திரைய போட்டுட்டு தூங்குவோம்).

….

(“அடடடடா, புள்ள பெத்து வச்சிருக்கானா…இல்ல லௌட்ஸ்பீக்கர பெத்திருக்கானா? மனுஷன் நிம்மதியா வீட்டுல தூங்க முடியுதா? குத்தம் சொல்லப் போனா வாடகைய தரல…அடுத்த மாசம் வீட்ட காலி பண்ணுன்னுகிட்டு சண்டைக்கு வருவான். சுட்டுக் கொல்லணும் அவன”)


thumb1
இந்த சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டுல மட்டும் தான். கொஞ்சம் மேற்குப் பக்கம் டிவிய போட்டு பார்த்தா, அந்த நாட்டு அக்கப்போர்களைப் பார்த்திட்டிருந்தா நம்ம நாடு எவ்வளவோ தேவலாம்னு தோணும். ரியாலிட்டி ஷோ பண்றோம்னு அமெரிக்காக்காரன் அடிக்கும் கூத்துகளுக்கு தென்றல் கொஞ்சம் இதமா இருக்குமோ? உதாரணமா இந்தப் படத்தில வரும் Jersey Shore, Keeping Up with the Kardishians எல்லாம் அமெரிக்காவில் சக்கைபோடு போடும் ஷோஸ். இவை மெதுவாக அமெரிக்கர்களின் தினசரி வாழ்க்கைக்குள் மெதுவாக தமக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. (இந்தியாவில் VH1 சேனலில் இந்த குப்பைகளை அடிக்கடி பார்க்கலாம்).

ரியாலிட்டி ஷோக்கள் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் டாக்-ஷோ ஒன்று சொல்லிக்கொண்டு தமது கருத்துக்களையும், அரசியலையும் மக்களுக்கு பரப்பும் ஒரு கூட்டம். இதையெல்லாம் பார்க்கும் போது மனதில் தோன்றுவது …

“God … Bless America”


thumb2
ஃப்ராங்க்
…வாழ்க்கையில் சோதனைக் கட்டத்தையும் மேலே சொன்னது போன்ற சோதனைகளையும் கடந்து கொண்டிருக்கும் ஒரு சாமான்ய அமெரிக்கன். விவாகரத்து பெற்று தனியே வசிக்கும் அவனுக்கு வேலையும் பறிபோகிறது. வந்த சனி போதாதென்று அவனுக்கு மூளையில் டியுமர் என்று வேறு டாக்டர் செய்தி சொல்லி நாள் குறித்துவிடுகிறார். சோகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான் ப்ராங்க். துப்பாக்கியை அழுத்தும்போது டிவியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடிக்கும் கெட்டு குட்டிச்சுவரான ஒரு பதினாறு வயது பெண்ணைப் பார்க்கிறான். சரி … போறது தான் போறோம். போவதற்கு முன், இந்த மாதிரி சமுதாயக் குப்பைகளை கொஞ்சம் களைந்துவிட்டு போவோம் என்று முடிவெடுக்கிறான்.

முதல் பலி … க்ளோயி எனும் அந்த பதினாறு வயது டிவி ஸ்டார். அவளைக் கொன்று விட்டு வீட்டிற்கு வந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது அவனைப் போலவே புதிய அமெரிக்க தலைமுறையின் மேல் எரிச்சல் கொண்ட ரொக்ஸி என்றொரு துறுதுறு டீனேஜ் பெண் அவனைத் தடுக்கிறாள். இதே போல் இன்னும் சமுதாயத்தில் பலர் இறக்கவேண்டியவர்கள் என எடுத்துக்கூற ப்ராங்கும் அவளும் கூட்டுசேர்ந்து அமெரிக்காவில் உள்ள வீணாப்போனவர்களை களையெடுப்பதே மீதிப் படம்.   

god-bless-america-joel-henry

இயக்குனர் பாப்கேட். இவர் ஒரு முன்னாள் ஸ்டான்டப்-காமெடியனாம். இந்தப் படம் மூலமா இவரும், வளர்ந்து வரும் அமெரிக்காவின் pop-culture மீதுள்ள வெறுப்பை வெளிக்காட்டியிருக்கிறார். அவருக்கு எந்த ப்ரோகிராம் மீதெல்லாம் கோபம் இருக்கோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ படம் அதன் மீது பாய்கிறது. அதே போல இந்த பொப்-கலாச்சாரம் எவ்வாறு வீட்டுப் பிள்ளைகளைப் பாதிக்கின்றது என்பதற்கு ஃப்ராங்கின் மகளின் அடாவடிப் பேச்சுக்கு பின்னணியில் டிவி ப்ரோகிராமில் க்ளோயியின் வாய் அசைவை காட்டுவது போன்ற ஒரு சீன் போதும்.

ஃப்ராங்காக வருபவர் ஜோயல் முரே. ஓகே ரகமான நடிப்பு. ரொக்ஸியாக வரும் அந்தப் பெண்ணும் நல்ல சாய்ஸ். அந்தப் பாத்திரமும் இல்லாமல் போயிருந்தால் படம் கொஞ்சமாவது சுவாரஸ்யமாக இருந்திக்குமோ தெரியாது. இருவருக்குள்ளும் ஒரு கெமிஸ்ட்ரி வளர்வதை அழகாக படத்தில் வசனம் மூலம் காட்டியிருப்பார்கள்.

முதலில் படு-ஸ்லோவாக ஆரம்பிக்கும் படம், கொஞ்ச நேரத்தில் ரத்தக் களறியாக மாறிவிடுகிறது. அயலவர்களை கொல்வதாக நினைக்கும் ஃபராங்க், குழந்தையை கவசமாக வைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் தாயை, கத்தும் குழந்தையை ஷாட்-கன்னில் (சுடுவதை காட்டமாட்டார்கள்) சுட்டு ரத்தத்தில் நனைக்கும் காட்சி போதும் படம் எப்படிப்பட்டது என்று சொல்ல. ஆனால் படம் கொஞ்ச நேரம் செல்ல, வெறும் துப்பாக்கிச் சூடாக நடந்து கொண்டிருப்பது எரிச்சலைத் தான் வரவைக்கிறது. சூப்பரான கரு இருந்தும் திரைக்கதையில் சொதப்பிட்டாரு இயக்குனர். கடைசி சீன்ல அட்வைஸ் பொழியும்போது எரிச்சல்ல நமக்கே ஜோயல் முரேயை சுடத் தோணுது. (பாப்கெட்ட கருந்தேள்கிட்ட திரைக்கதை எழுதுவது எப்படின்னு தெரிஞ்சுக்க க்ளாஸ் அனுப்பனும்).

god-bless-america-movie-image-03-600x302
படம் நல்லது கெட்டது என்பதெல்லாம் அப்புறம். முதலில் இந்தப் படம் முக்கியமானது. படம் சொல்லவரும் மெசேஜ் அப்படி. நம் எல்லாருக்குள்ளும் ஒரு ஃப்ராங்க் ஒளிந்திருக்கிறான். தியேட்டரில் படம் பார்க்கும்போது பக்கத்து சீட்டில் இருப்பவன் பண்ணும் அநியாயத்திற்கு ஏதும் செய்ய முடியாமல் மனதிற்குள் திட்டுவது, பக்கத்து வீட்டில் அதிக சத்தமாக பாட்டு, டிவி பார்த்தால் எதுவும் கம்ப்ளெயிண்ட் பண்ண முடியாத நிலை, அரைகுறையாகத் திரியும் பெண்களைப் பார்த்து கோபம் வருவது போன்ற இடத்தில் எல்லாம் ஒரு ஃப்ராங்க் இருக்கிறான். அதனாலேயே அவன் நினைப்பதெல்லாம் சரியென்றும், அவன் கொலை செய்யும்போது அது தப்பில்லையென்றும் எம் மனதில் தோன்றுகிறது.


இதே கதைக் களத்தில் Falling Down என்று ஒரு படமும் வந்திருக்கிறது. தம்பி குமரன் அதற்கு ஹாலிவுட் இந்தியன் தாத்தான்னு விமர்சனம் எழுதியிருக்காரு. அதையும் படிச்சுப் பாருங்க. அதுவும் இதே கதைக்கரு தான்.ட்ரெயிலர்பிடிச்சிருந்தா கீழே ஒரு ஓட்டு … Smile

Kiss Kiss Bang Bang (2005)

folder

சில “பெண்”களும் சில “கன்”களும் (தமிழ்நாட்டை மட்டும் பொறுத்தவரை சிலநேரங்களில் அருவா) இருந்தால் மிக இலகுவாக ஒரு ஆக்சன் படம் தயாரித்துவிடலாம் என்று ஒரு கருத்திருக்கிறது. ஹாலிவுட்டோ, கோலிவுட்டோ…பெரும்பாலான ஆக்சன் படங்கள், மிக முக்கியமாக இந்த இரண்டை நம்பியே களமிறங்குகின்றன. மிகச் சிறந்த சமீபத்திய உதாரணமாக பில்லா-2 ஐக் குறிப்பிடலாம். ஆனாலும் விதிவிலக்காக சில படங்கள் இந்த ஃபார்முலாவை நக்கலடிக்கும் அல்லது தகர்த்தெறியும் நோக்குடன் களமிறங்குவது வழக்கம். அப்படிப் பட்ட ஒரு முயற்சி தான் Kiss Kiss Bang Bang.


kisskissbangbang3
ஹாரி லாக்ஹார்ட்
….ஒரு திருட்டில் அதிகம் திறமையில்லாத ஒரு திருடன். ஒரு முறை திருடப்போகும் போது அதில் மிஸ்டேக்காகி, போலிஸிடம் இருந்து தப்பித்து ஓடும்போது….துப்பாக்கி சூடுபட்டு கூடவந்த நண்பன் இறந்துவிட…, ஏதேச்சையாக ஒரு துப்பறியும் படத்திற்கு நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் இன்டர்வியுவிக்குள் நுழைய, அங்கு சிட்டுவேஷன் சரியாக இவனுடையது போல அமைய “உண்மையாக” பர்ஃபோமன்ஸ் கொடுத்து அசத்துகிறான் ஹாரி. உடனே இவனை படத்திற்கு தேர்ந்தெடுத்து, அதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் பார்ட்டிக்கு இவன் அழைக்கப்பட…அங்கு போன இடத்தில் ஒரு உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை ரேப் பண்ண முயற்சிக்கும் ஒருவனை தடுக்கப் போக, அவன் ஹாரியை கீழே போட்டு மிதித்து உதைத்துவிட்டுப் போக, வந்து கைகொடுக்கிறான் கேய்-பெரி. (பெயரில் Gay என்று இருப்பதாலோ என்னமோ, இவர் உண்மைக்குமே ஆம்பிளைங்கள டேட் பண்ணுறார்)

ப்ரைவேட்-டிடெக்டிவ்வான கேய்-பெரியுடன் சேர்ந்து படத்தின் ரோலுக்காக ஒரு கேஸிற்கு கூடவே ட்ரெயினிங் போகிறான். போகும் இடத்தில் தவறுதலாக ஒரு கடத்தல்-கொலை சம்பவத்துடன் மூக்கை நுழைத்துக் கொள்ள முதலாவது பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதே நேரத்தில் மேலே ஹாரி காப்பாற்றிய பெண் அவனின் சிறுவயது தோழி ஹார்மணி எனத் தெரியவருகிறது. சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற கனவுடன் வந்து, இன்னும் ஒரு பியர் விளம்பரம் தவிர்த்து ஒன்றும் சாதிக்காத ஒரு அழகிய பெண். இந்த நேரம் பார்த்து ஏற்கனவே உள்ள பிரச்சினை போதாதென்று ஹார்மனியின் தங்கையும் தற்கொலை செய்து கொள்ள இரண்டு பிரச்சினைகளுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக ஹாரியின் மண்டையில் சின்னதாக க்ளிக் ஆக, அதன் மூலம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை அவிழ்ப்பது மீதிக் கதை.kiss-kiss-bang-bang-2005
Lethal Weapon, Last Boy Scout என்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி 80-90களில் டாப்பில் இருந்தவர் ஷேன் ப்ளாக். திடீரென்று காணாமல் போய்விட்டு மீண்டும் கிட்டத்தட்ட 10வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் தான் ரீ-என்ட்ரீ. அத்துடன் இவர் இயக்கும் முதலாவது படமும் இது தான். பஞ்ச் வரிகள், செம ஆக்சன், கொஞ்சம் பிட்டு, காமெடி என ஆக்சன் படத்திற்கு என்னென்ன தேவையோ…எல்லாம் இந்தப் படத்தில் சரியான அளவில் பாவித்து உள்ளார். படமும் கொஞ்சம் கூட போரடிக்காமல் செம ஸ்பீடுல மூவ் ஆகுது. ஷேன்-டௌனி கூட்டணி மீண்டும் 2013ல் Iron-Man 3 இல் ஜோடி சேருகிறதாம் (நம்பிப் போகலாம்னு தோணுது).

படத்தின் முக்கிய பலமே நடிகர் கூட்டணி தான். ஹாரியாக அயர்ன்-மேன் புகழ் ராபர்ட் டௌனி. லொக்ஹார்ட் கரெக்டருக்கு மிகவும் பொருத்தமான தெரிவு. அயர்ன்-மேனில் டோனி ஸ்டார்க்கை எமக்குப் பிடிக்க வைத்த அதே நக்கல், டைமிங் காமெடி சேர்ந்த கதாபாத்திரம். மனுஷன் பிச்சு வாங்குறார். கேய் பெரியாக Batman Foreverல் பேட்மேனாக வந்த வால் கில்மர். (பேட்மேன் அயர்ன்மேனுக்கு லிப்-டு-லிப் கொடுக்கும் காட்சி கூட இந்தப் படத்தில் உண்டு) ரெண்டு பேருக்கும் செம கெமிஸ்ட்ரி…அட நடிப்புல சொன்னேங்க. கேய்-பெரி கரெக்டர் முதலில் ஹாரிசன் ஃபோர்ட்டுக்கு அளிக்கப்பட்டதாம்

kiss-kiss-bang-bang-michelle-monaghan
ஆனாலும் மேலே சொன்னது போல ஒரு பெண்ணைப் போடாவிட்டால் ஆக்சன் படம் பூர்த்தியாகாது தானே? அதனால்  ஹார்மணியாக மிஷேல் மொனாகன். நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இல்லாவிட்டாலும் அமெரிக்கால ரோட்டு சாதாரணமா போற பொண்ணு மாதிரி இருக்கிறதால கரெக்டருக்கும் சரியா பொருந்திப் போறாங்க. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது…அவங்களுக்கான வேலையை செம கச்சிதமா நிறைவேற்றிவிட்டாங்க. படத்திலும் இவங்கள சும்மா வந்து “காட்டிட்டு” போகவிடாமல் சரியா ஷேன் பயன்படுத்தியிருக்கார்.

ஆக்சன், காமெடி கலந்த படங்கள் பிடித்தவர்கள் எடுத்துப் பாருங்க.

ட்ரெயிலர்

“This isn’t Good Cop, Bad Cop. This is Fag and New Yorker. You’re in a lot of trouble.”