நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Black Dynamite (2009)

folder

1970 காலப்பகுதிகளில் உருவான ஒரு திரைப்பட வகை ப்ளாக்ஸ்பொய்ட்டேஷன் (பிரித்தால் ப்ளாக்-எக்ஸ்ப்ளொய்ட்டேஷன்). அதாவது இந்த வகைப்படங்கள் எல்லாம் சிட்டிக்கு வெளியே வசிக்கும் அமெரிக்க-சிறுபான்மையின மக்களை குறி வைத்தே எடுக்கப்படும் படங்கள். இந்தப் படங்களில் முக்கியமான விடயம், படத்தின் கதைபாத்திரங்கள் அனைத்தும் சட்டம், அதிகாரம் என்பவற்றை எதிர்க்கும் ஆண்டிஹீரோக்களாக (ஆண்டி-ஹீரொ தமிழ்நாட்ல இருக்கிறார்…அது இப்போ நமக்கு தேவையில்லாத சப்ஜெக்ட்)இருப்பது தான். அதிலும் இவர்கள் எதிர்ப்பது பெரும்பாலும் அமெரிக்க (வெள்ளை) இனத்தை...

thumb2சில (பல) நேரங்களில் பெரிய பட்ஜெட்டில் பெரிய ஹைப்புடன் இறங்கும் படங்கள் ஏமாற்றமளிப்பது வழக்கம். மொக்கைப் படங்கள் மொக்கையாகவே போய்விடுவதும் சாதாரணம். ஆனால் மரண மொக்கையாகத் தான் அமையவேண்டும் என நினைத்து சின்ன பட்ஜெட்டில் எடுக்கும் சில படங்கள் ஏதோ ஒரு வகையில் அருமையாக, ரசிக்கும்படி அமைந்துவிடுவது??? அபூர்வம்….ப்ளாக் டைனமைட்!!! அவனுக்கு குங்-ஃபூ தெரியும். அவன் ஓடுவது 5000 டாலர் கார். அணிவது 100 டாலர் சூட். ஆனால் பெண்கள் விஷயத்திற்கு வரும் போது ……

இது தான் இந்தப் படத்தின் ட்ரெயிலரில் ஹீரோவிற்கான இன்ட்ரோ வரிகள். இதைப் படித்ததும் ஏதோ கறுப்பு ஜேம்ஸ் பாண்ட் படமோ என்று யோசிக்காதீங்க. இது முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி, அந்த ப்ளாக்ஸ்பொய்ட்டேஷன் வகையை நக்கலடித்து  எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன், ஸ்பூஃப் வகையறாப் படம்.thumb1வியட்நாமில் சேவை புரிந்து பின்னர், சி.ஐ.ஏ உளவாளியாக இருக்கும் ப்ளாக் டைனமைட் 1970களின் ஆக்சன் சூப்பர்ஸ்டார். சி.ஐ.ஏ யின் ரகசிய உளவாளியான அவனது சகோதரன், அநாதைச் சிறுவர் நிலையங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் ஒரு கும்பலைக் கண்டுபிடிக்க மாறுவேடத்தில் செல்லும் நேரத்தில் மாட்டிக்கொண்டு கொலைசெய்யப்பட, லோக்கல் தாதாக்களை எல்லாம் துவம்சம் செய்து தன் தம்பியைக் கொன்ற “த மேன்” என்பவனைத் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்க ப்ளாக் புறப்படுகிறான். அவ்வாறு ரௌடிகளை அழித்து போதைப்பொருள் சப்ளையை நிறுத்துவதால் க்ளோரியா என்ற பெண்ணுடன் லவ்வும் ஸ்டார்ட் ஆகிறது.

ஆனால் கறுப்பின மக்களுக்கு போதைப்பொருள் விநியோகிப்பதில் அமெரிக்க அரசாங்கத்திற்கும் பங்கு இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளும் டைனமைட், அதை மேலும் ஆராய்ச்சி செய்யும் போது,  பிரபலமாகி வரும் “அனகொண்டா மோல்ட்” எனும் உற்சாகப் பானத்திற்கு இதில் சம்பந்தம் இருப்பதும் தெரிய வருகிறது. இடையில் வழியில் சந்திக்கும் வெள்ளைக்கார “கறுப்புப் போலீஸ்”, மாஃபியா கும்பல் தலைவன் என எல்லாரையும் தனது நன்-சக் மூலமும், குங்-ஃபூ உதைகள் மூலமும் ஒரு வழி பார்க்கிறான். இந்த அடி-உதை-குத்து பஞ்ச் வசனங்களுக்கு எல்லாம் பிறகு விசாரணை இறுதியில் வந்து நிற்கும் இடம் “வெள்ளை மாளிகை”.

வெள்ளை மாளிகை “அனகொண்டா மோல்ட்” மூலம் சாதிக்க நினைப்பது என்ன? த மேன் என்பவன் யார்? ப்ளாக் டைனமைட்டின் காதல்-கதை என்னவானது? டவுன்லோட் பண்ணி சிரிச்சுக் கொண்டே தெரிந்துக் கொள்ளுங்க.thumb3


நான் பார்த்ததில் சிறந்த ஒரு ஸ்பூஃப் வகைப்படம் என்று இதைக் கூறலாம். Scary Movie போன்ற குப்பைகளுக்கு பிறகு ஸ்பூஃப் படம் பார்ப்பது என்றாலே கொஞ்சம் யோசிக்க வேண்டியதாயிருக்கு. ஆனால் இந்தப் படத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்த இடங்கள் ஏராளம். படம் ஓடுவதும் வெறும் 1மணி 25 நிமிடங்களே. . அதனால் திரைக்கதை எந்த இடத்திலும் தொய்ந்து போய் நிற்காது. ஆரம்பித்தது முதல் முடியும் வரை மொக்கை மேல் மொக்கை தான்.

மைக்கேல் ஜே வைட்  - முழுப்படத்தையும் கையில் தாங்கி நிற்பது இவர் தான்.  உண்மையிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்தவர் என்பதால் ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் தூள் (கறுப்பு ப்ரூஸ்-லீன்னு வச்சுக்கலாமா? … சே சே … தல எப்பவும் டாப் தான்). சீரியஸா வசனம் பேசும் போதும் சிரிப்பு வருவது இந்தப் படத்தைப் பொறுத்தவரை பலம் தான்.

படம் நடப்பது 1970 காலப்பகுதி. படத்தைப் பார்க்கும்போதும் உங்களுக்கு ஒரு 30 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்த்த ஃபீலிங்கே வரும். அவ்வளவு நேர்த்தியாக கார்களில் இருந்து ஹேர்ஸ்டைல் வரை எல்லா டீடெயில்களையும் கவனத்திற் கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். லைட்டிங்கும் இந்தப் படத்தின் கலர்டோனும் 1970காலப்பகதி ஃபீலிங்கிற்கு மேலும் கைகொடுத்திருக்கின்றன.

மேலே முதல் பாராவில் சொன்னது போல இந்தப் படம் டார்கெட் பண்ணியது சிறுபான்மை இனத்தவர்களைத் தான். அவர்களுக்கான படத்தை அவர்களே நடித்து, இயக்கி அவர்களுக்குள்ளேயே பார்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இதனாலோ என்னவோ படமும் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி. கிட்டத்தட்ட 3 மில்லியன் பட்ஜெட்டில் எடுத்தாலும் கலெக்சன் அதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை!


ஸ்கோர் – 86/100


படத்தின் ட்ரெயிலர்

 

ஆனாலும் ஒன்-லைனர், ஸ்பூஃப் வகை காமெடி படங்களை விரும்புபவர்கள் நிச்சயம் எடுத்துப் பார்க்கலாம்!!!
பிடிக்காதவர்கள் திட்டுவதற்கு கீழே கமெண்ட் பெட்டி தரப்பட்டுள்ளது. Smile

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

34 comments:

 1. நல்ல விமர்சனம்....

  தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)


  அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

  ReplyDelete
 2. இந்தப் படம் ரொம்ப வித்தியாசமா படுதே? பிளாக்ஸ்ப்ளொய்ட்டேஷன் சீரியஸான சமாச்சாரம். இதுல காமடி பண்ணா எப்படி மிக்சாகும்னு டவுட்டா இருக்கு.. ஆனாலும் உங்க விமர்சனம் வாசிக்கும்போது ஒரு நம்பிக்க வருது!

  இந்த ஹீரோ முகத்தை பார்த்தா படம் பார்க்கணுமான்னு பயமாருக்கு... இருந்தாலும் ஸ்பூஃப் படம் பார்க்குற மூடு வந்தா ரிஸ்க் எடுத்து பார்க்குறேன்..

  ReplyDelete
 3. நல்ல படத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி.
  மென்மேலும் தொடருங்கள்

  ReplyDelete
 4. அதிகம் கேள்வி படாத படங்கள் பத்தி எழுதுறிங்க .., Thats Gud :)

  ReplyDelete
 5. Nice post and thanks .. download panni pathuduvom.
  Visit my page also
  http://varikudhirai.blogspot.com/2012/08/the-wound-healer.html

  ReplyDelete
 6. @JZ

  ஆமா...ரொம்ப சீரியஸான மேட்டர் தான். கொஞ்சம் பிசகினாலும் சொதப்பிடும். ஆனா எனக்கு செம ஜாலியா இருந்துச்சு படம். பயப்படாம ட்ரை பண்ணுங்க பாஸ்.

  ReplyDelete
 7. @Kathir Rath

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா.

  ReplyDelete
 8. @...αηαη∂....

  விமர்சனம் எழுதப்பட்ட படத்தையே ஏன் திருப்பி எழுதி உங்க டைம வேஸ்ட் பண்ணனும்னு ஒரு நல்ல எண்ணம் தான். சில படங்கள் ரொம்ப பிடிச்சிருந்தா திருப்பி எழுதப்படும். :-)

  ReplyDelete
 9. "ப்ளாக்-எக்ஸ்ப்ளொய்ட்டேஷன்" ஆஃப்ரோ- அமெரிக்கர்களை மைய படுத்தி எடுக்க பட்ட படம் போல் இருக்கு.
  நம்ம ஊர்ல ஏழைகளின் கண்ணீரை துடைக்க நம்ம அங்கிள் விஜயகாந்த் இருக்காரே.
  தல, கீழ உள்ள வரிகள் புரியல. தம்பியை கொன்றவனை பழி வாங்க போறாருன்னு நினைக்கிறன், ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி இருக்கு.
  // தன் தம்பியைக் “த மேன்” என்பவனை தேழிக் கண்டுபிடித்து பழிவாங்க ப்ளாக் புறப்படுகிறான்//
  அப்புறம் எனக்கு இந்த மாதிரி காமெடி ஆக்சன் படம் ரொம்ப பிடிக்கும், கண்டிப்பா பார்கிறேன்...

  ReplyDelete
 10. 86 மார்க்ஸா கிடைத்தா பார்கிறன்..

  ReplyDelete
 11. @ராஜ்

  ப்ரூஃப் பார்த்தும் என் கண்ணில் அகப்படலயே? நல்ல கூர்மையான பார்வை தான் பாஸ் உங்களுக்கு. :)

  ReplyDelete
 12. @ஹாரி பாட்டர்

  இலங்கையில் டிவிடி எல்லாம் கிடைக்குமா தெரியாது. ஆனா இணைத்தில் நல்ல க்வாலிட்டி ப்ரிண்ட் சின்ன சைஸில் கிடைக்கிறது. தேடி எடுத்துப் பார் ஹாரி.

  ReplyDelete
 13. நான் ப்ரீமியர் ஷோ பார்த்த ஒரே படம் (தியேட்டரில் ரிலீஸ் ஆகலை). அல்டிமேட்டா இருக்கும். ட்ராஃப்டில் வச்சிருந்தேன்னு நினைக்கிறேன். அப்புறம் எழுதற ஐடியாவே போய்டுச்சி.

  ReplyDelete
 14. அய்யய்யோ.. இன்னும் ப்ரொஃபைல பேரை மாத்தாம இருக்கேன்.

  ReplyDelete
 15. ரைட் இப்ப பேர் மாத்தியாச்சி

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. ராஜ், அவருக்கு ரெண்டு மூணு மெய்ல் அனுப்பி பார்த்தேன். ரிப்ளை பண்ணலை. கருந்தேளும் ட்ரை பண்ணியிருக்கார். அவருக்கும் ரிப்ளை பண்ணலையாம்.

  இது அவரோட ஃபேஸ்புக் ப்ரொஃபைல் : https://www.facebook.com/jaymoviereviews ஆனா அதில் ஆக்டிவ்வா இருக்காரான்னு தெரியலை.

  ReplyDelete
 18. ரொம்ப ரொம்ப நன்றி தல..நீங்கள் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று தான் profile மறைத்து இருக்கேங்க..என்னோட முன்னாடி கமெண்ட் டெலீட் செய்து விடுகிறேன்....

  ReplyDelete
 19. ஆவலைத் தூண்டும் விமர்சனம். பாத்துட்டா போச்சு...
  ஸ்பூஃப் திரைப் படங்களில் Hot Shots முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை அடித்துக் கொள்ளவே முடியாது.
  என்ன சொல்றீங்க!?

  ReplyDelete
 20. @கொழந்த

  வாங்க வாங்க ... இன்னிக்கு இந்தப் ப்ளாக் தனது பிறவிப் பயனை அடைந்துவிட்டது. :-)

  ReplyDelete
 21. @மலரின் நினைவுகள்

  Hotshot இன்னும் பார்க்கல. ஆனால் ஸ்புஃப் படங்கள் மேல் இப்போ ஒரு பிடிப்பு வந்திருக்கு. சீக்கிரம் பார்த்துட்டு சொல்றேன். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 22. அடியாத்தி 86 ஸ்கோரா கட்டாயம் பர்ர்க்கனும் போல தோனுது... பார்த்துடுவோம்....:)

  ReplyDelete
 23. விமர்சனம் அருமை...
  கண்டிப்பா பார்க்கவேண்டிய படம் போல இருக்கே..
  டவுன்லோட் போட வேண்டியது தான்

  ReplyDelete
 24. வணக்கம் ! அப்போ எல்லோரும் சுகமா இருக்கீங்களா? வீட்ல ஆடு மாடு கோழி எல்லாம் சுகமா? அப்புறம் வீட்ல என்ன குழம்பு வச்சீங்க? தொட்டுக்க ஊறுகா இருக்கா? ஆங்.... என்னமோ சொல்ல வந்தேனே விமர்சனம் அருமை, கண்டிப்பாக டவுன்லோட் செய்து பார்க்கிறேன். ( இதையே எவளோ நாள் தான் சொல்லுறது, அது தான் ஒரு சேஞ்சுக்கு)

  ReplyDelete
 25. @சிட்டுக்குருவி

  காமெடி ஸ்பூஃப் படங்கள் பிடிக்கும்னா மட்டும் பாருங்க. இல்லாட்டி நான் கியாரண்டி கொடுக்க முடியாது. :-)

  ReplyDelete
 26. @Doha Talkies

  பார்த்துட்டு சொல்லுங்க. :)

  ReplyDelete
 27. @கிஷோகர்

  உனக்கு மட்டும் எப்படிய்யா இப்படியெல்லாம் தோணுது?

  ReplyDelete

 28. தரவிறக்கச் சுட்டி கிடைக்கவில்லை நண்பா.. DVD தேடிக் கொண்டிருக்கிறேன்.
  இங்கே வந்து பார்த்து கருத்து சொல்லுங்கள் தோழா....
  " தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்...
  http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html

  ReplyDelete
 29. @ஹாலிவுட்ரசிகன்

  வேற என்னாண்ணே சொல்ல, ஏதாவது பின்னூட்டம் போடணும், ஆனா எனக்கு முன்ன போட்டவய்ங்க எல்லாம் "விமர்சனம் அருமை, கண்டிப்பாக டவுன்லோடு செய்துபார்க்கிறேன்" அப்டீனு போட்டு போயிடுறங்க. பாவம் நான் என்ன பண்றது?

  ReplyDelete
 30. படம் பார்த்தேன் நண்பரே.
  மிக அருமை..நல்ல பொழுதுப்போக்கு படம்.
  http://dohatalkies.blogspot.com/2012/08/a-beautiful-mind.html

  ReplyDelete
 31. படங்கள் பற்றிய குறிப்புக்கள் அருமை! படங்களைப் பார்க்கத் தோன்றுகிறது உன் எழுத்துநடை! சிறப்பான பதிவு மச்சி!

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...