நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

God Bless America (2012)

folder


“இன்னிக்கு ஆபிஸுக்கு லீவு போட்டுட்டு நிம்மதியாக கொஞ்ச நேரம் டீவி பாக்கணும்.”

க்ளிக்….

“ஏண்டி….போனாப் போகுது, அத்தைப் பொண்ணாச்சேன்னு என் மகன ஒனக்கு கட்டிவச்சா… நீ எனக்கே சவால் விடுறியா? இருடி…என் மகன் வரட்டும். உன்னைய வீட்ட விட்டு துரத்தல, என் பேரு…”

க்ளிக்…

”ஏங்க…நான் உங்களுக்கு எந்த விதத்துலங்க குறை வச்சேன்? நான் அழகாயில்லையா? உங்கள சந்தோஷமா வச்சுக்கலயா? கட்டின பொண்டாட்டி நான் குத்துக்கல்லு மாதிரி இருக்க, அப்புறம் ஏன் அந்த தேவகி வீடே கதின்னு அங்க போய் இருக்கீங்க?”

க்ளிக்…

“டாடி மம்மி வீட்டில் இல்ல. தடை போட யாரும் இல்ல…விளையாடுவோமா உள்ள வில்லாளா?”

க்ளிக்…

க்ளிக்…

சே…(உருப்படியா நல்ல விஷயம்னு ஏதாச்சு டீவில போகுதா? இந்த டிவி ப்ரோகிராம் எடுக்குறவனுங்கள நடுரோட்ல சுட்டுத் தள்ளணும். அப்பத் தான் வீடும் நாடும் உருப்படும். ஐயய்யோ … டிவி பார்த்து தலவலி இன்னும் அதிகமாயிருச்சே? கொஞ்ச நேரம் மாத்திரைய போட்டுட்டு தூங்குவோம்).

….

(“அடடடடா, புள்ள பெத்து வச்சிருக்கானா…இல்ல லௌட்ஸ்பீக்கர பெத்திருக்கானா? மனுஷன் நிம்மதியா வீட்டுல தூங்க முடியுதா? குத்தம் சொல்லப் போனா வாடகைய தரல…அடுத்த மாசம் வீட்ட காலி பண்ணுன்னுகிட்டு சண்டைக்கு வருவான். சுட்டுக் கொல்லணும் அவன”)


thumb1
இந்த சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டுல மட்டும் தான். கொஞ்சம் மேற்குப் பக்கம் டிவிய போட்டு பார்த்தா, அந்த நாட்டு அக்கப்போர்களைப் பார்த்திட்டிருந்தா நம்ம நாடு எவ்வளவோ தேவலாம்னு தோணும். ரியாலிட்டி ஷோ பண்றோம்னு அமெரிக்காக்காரன் அடிக்கும் கூத்துகளுக்கு தென்றல் கொஞ்சம் இதமா இருக்குமோ? உதாரணமா இந்தப் படத்தில வரும் Jersey Shore, Keeping Up with the Kardishians எல்லாம் அமெரிக்காவில் சக்கைபோடு போடும் ஷோஸ். இவை மெதுவாக அமெரிக்கர்களின் தினசரி வாழ்க்கைக்குள் மெதுவாக தமக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. (இந்தியாவில் VH1 சேனலில் இந்த குப்பைகளை அடிக்கடி பார்க்கலாம்).

ரியாலிட்டி ஷோக்கள் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் டாக்-ஷோ ஒன்று சொல்லிக்கொண்டு தமது கருத்துக்களையும், அரசியலையும் மக்களுக்கு பரப்பும் ஒரு கூட்டம். இதையெல்லாம் பார்க்கும் போது மனதில் தோன்றுவது …

“God … Bless America”


thumb2
ஃப்ராங்க்
…வாழ்க்கையில் சோதனைக் கட்டத்தையும் மேலே சொன்னது போன்ற சோதனைகளையும் கடந்து கொண்டிருக்கும் ஒரு சாமான்ய அமெரிக்கன். விவாகரத்து பெற்று தனியே வசிக்கும் அவனுக்கு வேலையும் பறிபோகிறது. வந்த சனி போதாதென்று அவனுக்கு மூளையில் டியுமர் என்று வேறு டாக்டர் செய்தி சொல்லி நாள் குறித்துவிடுகிறார். சோகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான் ப்ராங்க். துப்பாக்கியை அழுத்தும்போது டிவியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடிக்கும் கெட்டு குட்டிச்சுவரான ஒரு பதினாறு வயது பெண்ணைப் பார்க்கிறான். சரி … போறது தான் போறோம். போவதற்கு முன், இந்த மாதிரி சமுதாயக் குப்பைகளை கொஞ்சம் களைந்துவிட்டு போவோம் என்று முடிவெடுக்கிறான்.

முதல் பலி … க்ளோயி எனும் அந்த பதினாறு வயது டிவி ஸ்டார். அவளைக் கொன்று விட்டு வீட்டிற்கு வந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது அவனைப் போலவே புதிய அமெரிக்க தலைமுறையின் மேல் எரிச்சல் கொண்ட ரொக்ஸி என்றொரு துறுதுறு டீனேஜ் பெண் அவனைத் தடுக்கிறாள். இதே போல் இன்னும் சமுதாயத்தில் பலர் இறக்கவேண்டியவர்கள் என எடுத்துக்கூற ப்ராங்கும் அவளும் கூட்டுசேர்ந்து அமெரிக்காவில் உள்ள வீணாப்போனவர்களை களையெடுப்பதே மீதிப் படம்.   

god-bless-america-joel-henry

இயக்குனர் பாப்கேட். இவர் ஒரு முன்னாள் ஸ்டான்டப்-காமெடியனாம். இந்தப் படம் மூலமா இவரும், வளர்ந்து வரும் அமெரிக்காவின் pop-culture மீதுள்ள வெறுப்பை வெளிக்காட்டியிருக்கிறார். அவருக்கு எந்த ப்ரோகிராம் மீதெல்லாம் கோபம் இருக்கோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ படம் அதன் மீது பாய்கிறது. அதே போல இந்த பொப்-கலாச்சாரம் எவ்வாறு வீட்டுப் பிள்ளைகளைப் பாதிக்கின்றது என்பதற்கு ஃப்ராங்கின் மகளின் அடாவடிப் பேச்சுக்கு பின்னணியில் டிவி ப்ரோகிராமில் க்ளோயியின் வாய் அசைவை காட்டுவது போன்ற ஒரு சீன் போதும்.

ஃப்ராங்காக வருபவர் ஜோயல் முரே. ஓகே ரகமான நடிப்பு. ரொக்ஸியாக வரும் அந்தப் பெண்ணும் நல்ல சாய்ஸ். அந்தப் பாத்திரமும் இல்லாமல் போயிருந்தால் படம் கொஞ்சமாவது சுவாரஸ்யமாக இருந்திக்குமோ தெரியாது. இருவருக்குள்ளும் ஒரு கெமிஸ்ட்ரி வளர்வதை அழகாக படத்தில் வசனம் மூலம் காட்டியிருப்பார்கள்.

முதலில் படு-ஸ்லோவாக ஆரம்பிக்கும் படம், கொஞ்ச நேரத்தில் ரத்தக் களறியாக மாறிவிடுகிறது. அயலவர்களை கொல்வதாக நினைக்கும் ஃபராங்க், குழந்தையை கவசமாக வைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் தாயை, கத்தும் குழந்தையை ஷாட்-கன்னில் (சுடுவதை காட்டமாட்டார்கள்) சுட்டு ரத்தத்தில் நனைக்கும் காட்சி போதும் படம் எப்படிப்பட்டது என்று சொல்ல. ஆனால் படம் கொஞ்ச நேரம் செல்ல, வெறும் துப்பாக்கிச் சூடாக நடந்து கொண்டிருப்பது எரிச்சலைத் தான் வரவைக்கிறது. சூப்பரான கரு இருந்தும் திரைக்கதையில் சொதப்பிட்டாரு இயக்குனர். கடைசி சீன்ல அட்வைஸ் பொழியும்போது எரிச்சல்ல நமக்கே ஜோயல் முரேயை சுடத் தோணுது. (பாப்கெட்ட கருந்தேள்கிட்ட திரைக்கதை எழுதுவது எப்படின்னு தெரிஞ்சுக்க க்ளாஸ் அனுப்பனும்).

god-bless-america-movie-image-03-600x302
படம் நல்லது கெட்டது என்பதெல்லாம் அப்புறம். முதலில் இந்தப் படம் முக்கியமானது. படம் சொல்லவரும் மெசேஜ் அப்படி. நம் எல்லாருக்குள்ளும் ஒரு ஃப்ராங்க் ஒளிந்திருக்கிறான். தியேட்டரில் படம் பார்க்கும்போது பக்கத்து சீட்டில் இருப்பவன் பண்ணும் அநியாயத்திற்கு ஏதும் செய்ய முடியாமல் மனதிற்குள் திட்டுவது, பக்கத்து வீட்டில் அதிக சத்தமாக பாட்டு, டிவி பார்த்தால் எதுவும் கம்ப்ளெயிண்ட் பண்ண முடியாத நிலை, அரைகுறையாகத் திரியும் பெண்களைப் பார்த்து கோபம் வருவது போன்ற இடத்தில் எல்லாம் ஒரு ஃப்ராங்க் இருக்கிறான். அதனாலேயே அவன் நினைப்பதெல்லாம் சரியென்றும், அவன் கொலை செய்யும்போது அது தப்பில்லையென்றும் எம் மனதில் தோன்றுகிறது.


இதே கதைக் களத்தில் Falling Down என்று ஒரு படமும் வந்திருக்கிறது. தம்பி குமரன் அதற்கு ஹாலிவுட் இந்தியன் தாத்தான்னு விமர்சனம் எழுதியிருக்காரு. அதையும் படிச்சுப் பாருங்க. அதுவும் இதே கதைக்கரு தான்.ட்ரெயிலர்பிடிச்சிருந்தா கீழே ஒரு ஓட்டு … Smile

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

25 comments:

 1. கேள்விப் பட்ட மாதிரி இருக்கு.. ஆனா பார்க்கலை. திருப்பவும் எதையாவது கண்டு எனக்குள்ள இருக்கற "பிராங்" வரும்போது அவசியம் படத்தை பார்க்குறேன்!

  * கீழே அண்மையில் பார்த்த, விமர்சித்த டேபுகளிலெல்லாம் எதையும் காணோமே??

  ReplyDelete
 2. @JZ

  இந்த படங்களெல்லாம் அப்டேட் பண்றது பத்தி ரொம்ப சோம்பேறித்தனமா ஃபீல் பண்ணினேன். அதான் தூக்கியாச்சு. எப்பவாச்சு தோணினா மீண்டும் போடுவோம். :)

  ReplyDelete
 3. செம படம் தல...
  போன மாசம் பார்த்தேன்...என்னை ரொம்பவே பாதிச்ச படம் இது. இதை பத்தி எழுதலாம் என்று நினைச்சேன், அதுக்கு வேலையே வைக்காம நீங்களே ரொம்ப அற்புதமா படத்தை பத்தி எழுதிட்டேங்க.
  படத்துல வன்முறையை ரொம்ப ராவா காமிச்சு இருப்பாங்க, அது தான் கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தது.
  படத்தோட தீம்மை என்னால முழு மனசா ஏத்துக்க முடியல.. :)
  தமிழ் MA, அந்நியன் கூட சேம் தீம் தான்..

  ReplyDelete
 4. பார்க்க வேண்டும் என்று நினைக்கிறன், கதை நல்ல தான் இருக்கு. உங்கள் விமர்சனம் எப்போது போல அருமை.

  ReplyDelete
 5. பார்கள்ளம் என்றே தோனுகிறது.. நன்றி..

  ReplyDelete
 6. வழமை போல கலக்கல் விமர்சனம்

  ReplyDelete
 7. அண்ணே அந்த ஃபிராங்கை கொஞ்சம் கூப்பிடுங்களேன், இங்க 'சொல்வதெல்லாம் உண்மை " நிர்மலா பெரியசாமியை போட்டு தள்ளணும் மொதல்ல!

  ReplyDelete
 8. அந்த வாடைகைய கொஞ்சம் குடுத்திருங்க அண்ணே! அப்புறம் வீட்டுக்காரன் ஷொட் கன்னோடு வந்து நின்னிட போறான்!

  ReplyDelete
 9. நம் எல்லாருக்குள்ளும் ஒரு ஃப்ராங்க் ஒளிந்திருக்கிறான்////////////

  கடைசில ஒரு அந்நியன்.......வேலாயுதம் மாதிரி.....நம்மளுக்குள்ளையும் ஒருத்தன் இருக்கிறான் என்னு சொல்லிப்புட்டீங்களே பாஸூ

  ReplyDelete
 10. @ராஜ்

  பார்த்தாச்சா? படம் பிடித்திருந்தது மகிழ்ச்சி. வன்முறையை ராவா காட்டினது மட்டுமில்லாமல், தொடர்ந்து ஒரே வன்முறையாக படம் போவது தான் கொஞ்சம் எரிச்சல் தருகிறது.

  ReplyDelete
 11. @MuratuSingam

  அப்புறமா இதைப் பார்த்துக்கலாம். முதல்ல ஒரு நல்ல படமா பார்த்து விமர்சனம் ஒன்று எழுதுங்க பாஸ்.

  ReplyDelete
 12. @கிஷோகர்

  பதிவுல நல்லாப் பொங்குறீங்களே? நீங்களே போட்டுத் தள்ளிடலாமே? யார் கண்டா? எதிர்காலத்தில் ஒரு பில்லா உங்களுக்குள் ஒளிந்திருக்கலாம்.

  ReplyDelete
 13. @கிஷோகர்

  நாங்கள்லாம் தூக்குல தொங்கினாலும் ஓசிக் கயித்துல தான் தொங்குவோம்...தெரியும்ல? வாடகையாம் வாடக.

  ReplyDelete
 14. நல்ல விமர்சனம்...
  பார்க்கவில்லை நண்பரே... இனிமேல் தான்...
  நன்றி…(T.M.4)


  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 15. // தியேட்டரில் படம் பார்க்கும்போது பக்கத்து சீட்டில் இருப்பவன் பண்ணும் அநியாயத்திற்கு ஏதும் செய்ய முடியாமல் மனதிற்குள் திட்டுவது //

  இந்த ஒரே விஷயத்துக்காக நான் "ஃப்ராங்க்" ஆகும் நாள் வந்துரும் போல :-) நல்ல படத்திற்கு அருமையான விமர்சனம்!

  ReplyDelete
 16. @ஹாலிவுட்ரசிகன்

  நல்லா வருதுய்யா வாயில நல்லா!

  ReplyDelete
 17. @ஹாலிவுட்ரசிகன்
  ஆ! இதுவல்லவா உயர்ந்த லட்சியம்! யூ கொன்டினியூ அண்ணே!

  ReplyDelete
 18. முதல்ல உங்கள சுட்டுத் தள்ளனும். ஏன்னெல்லாம் கேக்கப் படாது. பேசாம டிவி பாக்குறத விட்டுட்டு என் ப்ளோக்குக்கு வந்து எல்லாப் பதிவையும் படிச்சு ஒன்னு விடாம கமெண்ட்ஸ் போடுங்க. பொழுது அழகப் போகும் ஓகேவா?
  இது நம்ம தளம்: http://newsigaram.blogspot.com/2012/08/ulagaalivu-02.html#.UCEwevYgeKK

  ReplyDelete
 19. @Baby ஆனந்தன்

  அண்மையில் உங்கள் அனுபவத்தையும் ஒரு பதிவில் படித்தேன் நண்பா. அப்போ சீக்கிரம் எங்கோ ஒரு பிணம் விழப்போகுது போல.

  ReplyDelete
 20. @sigaram bharathi

  என்னங்க மிரட்டுறீங்க??? வராட்டி வீடு தேடி வந்து சுடுவீங்க போலியிருக்கே? இருந்தாலும் இந்த ஸ்டைலும் பிடிச்சிருக்கு. :-)

  சீக்கிரம் உங்க கடையாண்ட வர்றேன்.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...