நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Enemy of the State [1998]

folder

இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. கல்யாணம் கட்டி எத்தன நாளாச்சி? என்னைக்காவது ஆசையா ஷாப்பிங் மாலுக்கு, தியேட்டருக்கு கூட்டிட்டு போயிருக்கியா? கல்யாணம் கட்டினா போதுமா? பொண்டாட்டிய சந்தோஷமா வச்சுக்க தெரியவேணாம்? ஒன்னுக்கும் துப்பில்ல … தொரக்கி லீவு நாளதுவுமா எந்திரிச்சதும் படம் கேக்குதா? இன்னிக்கு எங்காவது கூட்டிட்டு போகல … அப்புறம் நான் மோசமானவனு சொல்லாதீங்க. (யாவும் கற்பனையே)

இப்படி காலையில தர்மபத்தினியிடம் வார்த்தைகளைக் கேட்டுட்டே “இன்னாடா இது வம்பாப் போச்சின்னு” … குடும்பத்தோட ஷாப்பிங் மாலுக்கு போகலாம்னு கிளம்புறீங்க. ட்ராஃபிக் லைட்ஸ் தாண்டி போகும் போது ஏதாச்சு வாங்க காசு வேணுமே. போற வழியில் ஒரு ATM சென்டரில் காசு எடுத்துண்டு ஷாப்பிங் மாலுக்குல போறீங்க. ஒரு நாலைஞ்சு கடை ஏறி இறங்கியாச்சு. அப்புறம் … வீட்டுல தான் படம் பார்க்க முடியல, தியேட்டர்ல சரி படம் ஒன்னு பார்ப்போம்னு படம் பார்த்துட்டு வீடு வந்து சேர்றீங்க.

இவ்வளவு சுத்திட்டு வரும்போது நீங்க எத்தனை முறை நோட் பண்ணப்பட்டிருக்கீங்கன்னு யோசித்துப் பார்த்திருக்கீங்களா? மேல boldல சொல்லப்பட்ட இடங்கள் அனைத்திலும் உள்ள CCTV கேமராக்கள் உங்கள ரெகார்ட் பண்ணிக்கொண்டு தான் இருக்கு. இலங்கை, இந்தியாவுல எல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் (சரியா விவரம் தெரியலங்க) அமெரிக்காவுல எல்லாம் நிலைமை ரொம்ப மோசம். ஒவ்வொரு செகண்டும் மொபைல், இன்டர்நெட், கேமரான்னு ஏதோ ஒரு வகையில் எல்லாரும் ஒரு கண்காணிப்பின் கீழ் தான் இருக்காங்க.  (இதுபற்றி ஒரு டாகுமெண்டரி 2008,9ல பார்த்தா ஞாபகம். பெயர் ஞாபகமில்லை).

ஆமா … நீ இப்ப படத்தைப் பற்றி எழுதுறியா, இல்ல நம்ம குடும்ப ரகசியத்தை எல்லாம் பப்ளிகுட்டி பண்ணிட்டிருக்கியான்னு யாரோ திட்டுறது கேக்குது. எல்லாம் காரணமாத்தான் எழுதினேன் … நாம கதைக்குள்ள போவோம்.


enemy_of_the_state_1998_500x336_966862ரொபர்ட் டீன் க்ளேடன், வாஷிங்டனில் தன் மகன், மனைவியோடு சந்தோஷமாக வசிக்கும் ஒரு லாயர். கிறிஸ்மஸிற்கு மனைவிக்காக ஷாப்பிங் செய்யப்போகும் டீனை அவனது அவசரமாக ஓடிவரும் அவனது பழைய நண்பன் ஒருவன் சந்திக்கிறான். பேச்சுவார்த்தையில் நைஸாக டீனுக்கு தெரியாமல் அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்ஸி (NSA) ரொம்ப தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு டேப்பை டீனின் பைக்குள் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான். அவன் ஏன் ஓடுகிறான் என்று பின்னால் சென்றுப் பார்க்கும் டீன் அவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதைப் பார்க்கிறான்.

சரி …  எதுக்காக அந்த டேப்பை என்.எஸ்.ஏ தேடுது? படத்தில் கொஞ்சம் பின்னாடி போவோம். ஒரு அமெரிக்க செனட்டர் தேசிய (அமெரிக்க) பாதுகாப்பிற்காக சட்டத்துறையின் கண்காணிப்பை அதிகரிப்பதற்கான ஒரு பில் தாக்கல் செய்கிறார். அதை எதிர்க்கும் ஒரு கான்க்ரெஸ்காரர் NSAயின் முக்கியப்புள்ளிகளில் ஒருவரான தோமஸின் கட்டளைப்படி கொல்லப்பட்டு அவரின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தபடி காட்டப்படுகிறது. ஆனால் அதை பறவைகளைக் கண்காணிக்க வைத்திருந்த கேமரா ரெகார்ட் செய்துவிட, அதனால் துரத்தப்பட்ட கேமராவின் சொந்தக்காரன் தான் டீன் கடையில் சந்தித்த அந்தப் பழைய நண்பன் சவிட்ஸ்.

enemy-of-the-state-02-1திரும்ப கொஞ்சம் படத்தில் முன்னாடி வருவோம் ….. அந்த டேப் பற்றி எதுவும் தெரியாமல் வீட்டுக்குத் திரும்பிவரும் டீனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவனின் வழக்குகளிற்கு தகவல்கள் கொடுத்து உதவி செய்யும் டீனின் முன்னாள் காதலியுடன் டீன் பேசுவது போன்ற போட்டோ டீனின் மனைவிக்கு கிடைக்கப்பட்டிருக்க அவள் அவனை வீட்டை விட்டு துரத்துகிறாள். வேலையிலிருந்தும் அவனை டெம்பரரியாக நிப்பாட்டி விடுகிறார்கள். ஹோட்டலிற்கு தங்கலாம் என்று சென்றால் அவனது பேங்க் அக்கவுண்ட் எல்லாம் மூடப்பட்டு க்ரெடிட் கார்ட்களும் வேலை செய்யவில்லை.

காரணம்? என்.எஸ்.ஏ தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. டீனின் ஜட்டி, பெனியன் தவிர மற்ற அனைத்துப் பொருட்களிலும் ட்ரேஸர்ஸ். வீடு முழுவதும் கேமரா, மைக்ஸ். செல்போன் வயர்டெப் செய்யப்படுகிறது. வெளியே சென்றால் உளவுபார்க்கும் சேட்டலைட் மூலம் எங்கிருந்தாலும் வேவு பார்க்கிறது. பற்றாக்குறைக்கு மேலே சொன்னது போல எல்லா இடங்களிலும் இருக்கும் கேமராக்கள். மேலும் டீனைத் துரத்தும் NSA ஏஜெண்ட்ஸ், ஹெலிகாப்டர்ஸ்.

enemyofthestateடீனுக்கு கிடைக்கும் ஒரே உதவிக்கரம் ப்ரில் என்று அழைக்கப்படும் ஒரு பழைய புத்திசாலி என்.எஸ்.ஏ ஏஜெண்ட். இரண்டு பேரும் சேர்ந்து என்.எஸ்.ஏ டெக்னாலஜியை வைத்தே அவங்களுக்கு தண்ணி காட்ட ட்ரை பண்றாங்க. காட்டினாங்களா? படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க. (ரொம்ம்ம்ப கதையை இழுத்துட்டேனோ)

நோட் பண்ணிக்கோங்க. நான் கதையை சொன்ன விதம் படத்தில் வரும் வரிசையில் அல்ல (க்வான்டின் டாரண்டினோன்னு நினைப்போ?).


கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்கும் படம் கிட்டத்தட்ட 15 நிமிடம் வரை கொஞ்சம் மெதுவாகவே மூவ் ஆகிறது. டேப்பை சவிட்ஸ் பார்த்தது என்.எஸ்.ஏ தெரிந்துகொண்ட பின் ஆரம்பிக்கும் சேஸிங் காட்சிகள் படத்தின் க்ளைமேக்ஸ் வரை தொடர்கிறது. கிட்டத்தட்ட Die-Hard படம் பார்க்கிற மாதிரி அப்படி ஒரு விறுவிறுப்பு.  கார், ஹெலிகாப்டர், சேட்டிலைட் என்று கைவசம் என்னென்ன இருக்கோ (இல்லையோ) … அத்தனையையும் பாவித்து NSA துரத்துது. இரண்டு மணி நேரத்தில் ஒன்றரை மணித்தியாலம் நான் ஸ்டாப் ஆக்ஷன். ஸப் ப்ளாட்டா படத்தின் ஆரம்பக்கட்டத்தில் வில் ஸ்மித் ஒரு மெக்ஸிகன் தாதாவின் கேஸை டீல் செய்வது போல காட்டுறாங்க. காட்டினதோட மறந்துந்துட்டாங்களோன்னு பார்த்தா, கடைசியில் அதை அழகா கொண்டு வந்து முடிச்சு போட்டுட்டாங்க. 

thumb2
ஆனாலும் என்னதான் டெக்னாலஜின்னு காட்டினாலும் 1998ம் ஆண்டில் வி.சி.ஆர், டேப், கேசட் யூஸ் பண்ணுற காலத்தில் இவ்வளவு டெக்னாலஜி இருந்திருக்குமாங்கறது ரொம்பவுமே டவுட்டு தான். இன்னாமா காதுல  பூ சுத்துறாங்கய்யா.

அமெரிக்கா இன்றும் The Patriot Actங்கற சட்டத்தின் மூலம் படத்தில் வரும் நிறைய விடயங்களை செய்யக்கூடிய அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறது. ஆனால் “நாங்க தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட ஆட்களை மட்டுமே கண்காணிப்போம்னு” நியாயம் பேசினாலும் அவர்கள் யாரை சந்தேகப்படுவாங்க, கண்காணிப்பாங்கன்னு யாருக்குத் தெரியும்?


படத்தை இயக்கியிருப்பவர் ரிட்லி ஸ்கொட்டின் சின்னத்தம்பி டோனி ஸ்கொட். ரிட்லி அளவுக்கு பெரிய லெவல்ல இல்லன்னாலும், Top Gun, Taking of Pelham 123, Unstoppable, நான் கடைசியா எழுதிய Deja Vu ன்னு கொஞ்சம் நல்ல படங்களை இயக்கியிருக்காரு.

thumb5நடிக்கிறவங்கள்ள எனக்கு தெரிந்த முகங்கள் வில் ஸ்மித் (டீன்), ஜீன் ஹேக்மான் (ப்ரில்), மற்றும் ஜோன் வொயிட் (தோமஸ்). வில் ஸ்மித் சரியான தேரிவு தான். என்னதான் சீரியஸா காட்சி போய்க் கொண்டு இருந்தாலும் காமெடி பண்றதுல கில்லாடி. உதாரணமா வில்லன்கிட்ட மாட்டிகிட்டு அடிவாங்கின பிறகும் “அது என் வீட்டுல இருந்த ப்ளெண்டராச்சே”ன்னு சொல்றது செம காமெடி. மற்றவங்களுக்கு பெரிதாக வேலை இல்லை.

நமக்கு லாஜிக் எல்லாம் தேவையில்ல. எனக்கு 2மணித்தியாலம் டைம் பாஸ் பண்ணிக் கொண்டா போதும்ன்னு நினைக்கிறவங்க, இப்பவே படத்தை டவுன்லோட் போடுங்க, இல்ல டீவிடி கடைக்கு புறப்படுங்க !!!


மார்க் – 76/100

படத்தின் ட்ரெயிலர்


அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்
ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

29 comments:

 1. இந்தப் படம் நானும் பார்த்தேனே...
  அருமையாக வெிமர்சித்துள்ளீர்கள்... சகோ..

  ReplyDelete
 2. நீண்ட நாளாக பார்க்க துடிக்கும் ஆக்சன் படம் இது..தங்களது விமர்சனம் படிக்கவே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது..மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 3. இந்தப் படத்தோட பேரைக் கேள்விப்பட்டிருக்கேன். கதையோட அவுட்லைன் இப்ப படிச்சதும் பாக்கணும்கற எண்ணம் விழுந்துடுச்சு. படத்துல வர்ற வரிசையில நான் கதைய எழுதலைன்னு நீங்க சொன்னாலும், சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கீங்க. நான்லாம் டிவிடில வாங்கிப் பார்க்கற பார்ட்டிதான். பாத்துடறேன். நன்றி!

  ReplyDelete
 4. இது நமக்கு புடிச்ச மாதிரியான பர பர படமாச்சே ... கடைசி வரை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செல்லும். இந்த படத்தை சன் மற்றும் கே டிவியில் பல தடவை ஒளிபரப்பி உள்ளனர். போன மாதம் கூட போட்டார்கள்.

  இதே போல் கதையை கொண்ட Person of interest சீரியல் பார்த்து உள்ளீர்களா? அருமையான சீரிஸ் நேரம் கிடைத்தால் பார்க்கவும்.

  The Avengers[2001] அட்டகாசம்

  ReplyDelete
 5. நானும் இந்த படத்தை பார்த்து உள்ளேன்... ரொம்ப நல்ல படம்.... சன் டிவியில் கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்டு இருந்தார்கள்...
  இந்த விமர்சன ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு...

  ReplyDelete
 6. @Kumaran

  நன்றி குமரன். பார்த்துட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 7. @கணேஷ்

  நாங்கல்லாம் டவுன்லோடு பார்ட்டி. கமெண்டுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 8. @Lucky Limat லக்கி லிமட்

  இருக்கிற சீரியல்களை பார்த்துக்கிறதுக்குள்ளயே நாக்கு தள்ளுது. இது வேறயா? கிட்டத்தட்ட 1700 எபிசோடுக்கு மேல ஹார்ட்டுல வெயிட்டிங். ஆனாலும் நோட் பண்ணி வச்சிக்கிறேன்.

  ReplyDelete
 9. @ராஜ்

  சன் டீவிலயே போட்டுட்டாங்களா? சே ... தமிழ்ல பார்த்திருந்தா இன்னும் செம ஜாலியா இருந்திருக்குமே. வட போச்சே.

  ReplyDelete
 10. நானும் இப்படத்தை பார்த்து ரசித்திருக்கிறேன்.

  இங்கு இந்தியாவிலும் பெரு நகரங்களில் கண்காணிக்கப்படுகிறோம்.

  ReplyDelete
 11. அடுத்து வருவது "E.T விமர்சனம்"னு போட்டுட்டு சட்டுபுட்டுன்னு இன்னொரு விமர்சனம் எழுதி கலக்குறீங்க பாஸ்!
  சன் டி.வியில் Ad பார்த்த ஞாபகம்.. எனக்கு Bad Boys தவிர மற்றையதுகளில் வில் ஸ்மித் கவரவில்லை.. அதனால் அவரது படங்களை பார்ப்பது குறைவு!
  இருந்தாலும் இவ்வளவு ஆக்ஷன்-ஃபுல்லான கதையாக இருப்பதால் பார்க்கிறேன்!

  ReplyDelete
 12. @JZ

  E.T. பற்றி எழுதவே இன்னும் தொடங்கல. அது வர கொஞ்சம் டைம் ஆகும். இன்னிக்கு இன்னொரு படம் பற்றி எழுதிப் போடுறேன். :)

  ReplyDelete
 13. @உலக சினிமா ரசிகன்

  நான் தான் லேட்டா? நிறையப் பேர் ஏற்கனவே படம் பார்த்துட்டாங்க போலயிருக்கே. E.Tயை கொஞ்ச நாளைக்கு ஒத்திப் போட்டுற வேண்டியது தான்.

  ReplyDelete
 14. ரொம்ப வருடங்களுக்கு முன்னாள் பார்த்ததாக நினைவு. சுவாரசியமான படம்தான்

  ReplyDelete
 15. @ஹாலிவுட்ரசிகன்
  படம் படமா பார்த்து தள்ளுறீங்கா?.. வெரிகுட்!

  * ஒரு தடவை உங்கள் "அண்மையில் பார்த்த படங்கள்" டேபுல இருக்க Truman Show போஸ்டருக்கு நேராக மவுசை நீட்டி என்ன வருகிறது என அவதானிக்கவும்..

  ReplyDelete
 16. நல்ல விமர்சனம். நல்ல த்ரில்லிங்கான படமும் கூட,

  இந்த படத்தோட நிறைய / கிளைமாக்ஸ் கட்சிகள் எதோ ஒரு தமிழ் அல்லது தெலுங்கு படத்தில் பார்த்து இருக்கேன், சரியாய் ஞாபகம் இல்ல கவனத்துக்கு வந்த பிறகு சொல்கிறேன்.

  ReplyDelete
 17. @ஹாலிவுட்ரசிகன்

  இந்த வெசாக்குடன் ஒரு மாதிரி 5 நாள் தொடர்ந்து லீவு கிடைச்சுது. அதான், பார்க்க நினைத்திருந்த ஒரு 10-15 படங்களைப் பார்த்தாச்சு. சிலது ரிபீட்டு (ஹாரி பாட்டர்). இனி கொஞ்சம் கொஞ்சமா லிஸ்டில மத்ததுகள பாக்கணும்.

  ReplyDelete
 18. @JZ

  மாத்தியாச்சு. குறிப்பிட்டதற்கு நன்றி பாஸ்.

  பார்த்த எல்லாப் படமும் Icheckmovies விட்ஜெட்டில் வரும். கீழே லிஸ்டில் ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட படங்கள், தமிழ், ஹிந்திப்படங்களப் போடுறேன்.

  ReplyDelete
 19. @பாலா

  த்ரில்லர் பட ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அதிலும் வில் ஸ்மித்தின் நக்கல் காமெடி படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கும்.

  ReplyDelete
 20. @MuratuSingam

  கட்டாயம் ஏதாவது ஒரு படத்தில் காப்பியடித்திருக்க சான்ஸ் அதிகம் இருக்கு. ஞாபகம் வந்தா சொல்லுங்க.

  ஆமா ... கமெண்ட் போட்டுண்டு மட்டும் இருக்கீங்க. உங்க பதிவு எப்போ வருது?

  ReplyDelete
 21. நல்லா ஆங்கிலப்படம் பார்ப்பதும் இல்லாமல் பார்க்கவும் தூண்டும் விமர்சனம். இப்போதெல்லாம் படம் பார்க்க எங்கே பொறுமை.ரசிகனே!

  ReplyDelete
 22. @MuratuSingam
  வாமனன் பாருங்க. தமிழ் Enemy of the State பார்த்தமாதிரி இருக்கும்.

  ReplyDelete
 23. பல முறை பார்த்திருக்கிறேன். இப்பொழுது பார்த்தாலும் விறுவிறுப்பாக இருக்கும் படம். இதை தமிழில் வாமனன் என்ற பெயரில் எடுத்திருப்பார்கள். ஓரளவிற்கு நன்றாகவே இருக்கும்.

  ReplyDelete
 24. @ஹாலிவுட்ரசிகன்
  பாஸ் எப்புடி ஒன்லைன்ல டவுன்லோடு பண்றதுண்ணு சொன்னீங்கண்ணா, நாமளும் பண்ணிப்போம்ல. சாரி பாஸ் நான் இதுல எல்லாம் ரெம்ப வீக்கு.

  ReplyDelete
 25. good blog..keep going...first time I read your blog...otherwise, I saw this movie in 1999..I think so...good one...  by...
  Maakkaan

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...