நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Chronicle [2012]

folder

நிச்சயமாக என்னிக்காவது நீங்க ஒரு சூப்பர்ஹீரோ படம் பார்த்திருந்தா, நமக்கும் ஏதாச்சு ஒரு சூப்பர்பவர் இருந்தா எப்படி இருந்திருக்கும்ன்னு கட்டாயம் யோசிச்சுப் பார்த்திருப்பீங்க (நான் வேண்டுவதெல்லாம் இன்விஸிப்ளிட்டி பவர் மட்டுமே). ஆனால் சூப்பர்மேன் படத்தில் சொல்வது போல “With Great Power comes Great Responsibility”. பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ படம்னா, ஏதோ ஒரு வகையில் சக்தி கிடைத்ததும் அதை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தி வரும் வில்லனை எப்படி ஹீரோ தோற்கடிப்பார்ங்கறதே ஹாலிவுட்டின் இவ்வளவு நாள் பார்முலா. அதே குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் என்னாகும்ன்னு வேறு ஒரு ஆங்கிள்ல ஒரு இயக்குனர் யோசித்துப் பார்த்ததன் விளைவே Chronicle.

thumb5


thumb4கதை … அப்படின்னு எடுத்துப் பார்த்தோம்னா ரொம்ப சிம்பிள்.  சியாட்டில் நகரில் வசிக்கும் மூன்று ஹைஸ்கூல் நண்பர்கள் ஆன்ட்ரூ, மேட், ஸ்டீவ். ஆன்ட்ரூ தன் வாழ்க்கையைப் படம் பிடிக்க ஒரு கேமரா வாங்குவதுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒருநாள் ஒரு பார்ட்டிற்கு செல்லும்போது கேமராவையும் எடுத்துச் செல்லும் ஆன்ட்ரூவும், மற்ற இருவரும் ஒரு சிறிய குகை போன்ற குழியைக் கண்டு அதற்குள் இருப்பதைக் பார்க்கப் போகிறார்கள். அங்கு அக்குகையில் இருக்கும் ஒரு வித்தியாசமான ஒரு வேற்றுக்கிரகப் பொருள் ஒன்றைக் சந்திக்கும்  அவர்கள், நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்குள் புதிய சக்திகள் உருவாவதைக் கண்டுபிடிக்கிறார்கள். மேலும் அவர்களின் மூக்கில் இருந்தும் ரத்தம் வடியத் தொடங்குகிறது.

முதலில் சிறிய பில்டிங் ப்ளாக்ஸை அசைத்துப் பார்க்கும் அவர்கள் சீக்கிரமே பெரிய கார்களை அசைப்பதிலிருந்து பறப்பது வரை முன்னேறுகிறார்கள். என்ன இருந்தாலும் ஸ்கூல் பசங்க தானே. பவர்ஸ் கிடைத்ததும் மற்றவர்களைப் பயமுறுத்துவது, கடைகளில் கலாட்டா செய்வது என செல்லும் கதை ஒரு கட்டத்தில் ஆன்ட்ரூ பவரை அடக்கமுடியாமல் ஒரு வாகனத்தில் பாவித்துவிட ஒரு மனிதன் காயப்படுகிறான். அப்பொழுது “இன்னொரு மனிதன் பாதிக்கப்படும் படி சக்தியைப் பயன்படுத்துவதில்லை” என மூவரும் தீர்மானம் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனாலும் வீட்டில், பாடசாலையில் சந்திக்கும் பிரச்சினைகளால் உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படும் ஆன்ட்ரூவால் கண்ட்ரோலாக இருக்க முடியாமல் போக ஏற்படும் மீதிப் பிரச்சினைகளே விறுவிறுப்பான மீதிப் படம்.


thumb7நான் இன்னும் அவெஞ்சர்ஸ் படம் பார்க்கவில்லை. ஆனால் இந்த வருடம் (அண்மையில்) பார்த்த சூப்பரான சூப்பர்ஹீரோ படம்னா இதைச் சொல்லலாம். அதுவும் கடைசியாகப் பார்த்த Green Lantern படத்தோடு ஒப்பிடும்போது இது எவ்வளவோ பரவாயில்லைன்னே தோணுது.

வேற கோணத்தில் யோசித்தவரு (இயக்குனர்) பேரு ஜோஷ் ட்ராங்க். இது தான் இவரோட முதல் ஹாலிவுட் படமாம். நம்ப முடியவில்லை. ரொம்ப கதையை இழுக்காமல் வெறும் 83 நிமிடங்களுக்குள் டைட்டாக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். அது இன்னுமொரு ப்ளஸ் பாயிண்ட்.thumb6படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்பைடர்-மேன், பேட்மேன் போல பெரிய லெவல்ல யோசிக்காமல் பாடசாலை செல்லும் டீனேஜர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், கிண்டல்கள், பெண்கள், பாப்புலராக முயற்சிப்பது என நம்பக்கூடியவாறு படத்தை இயக்கியிருக்கிறார். அதனால் படத்தோடு இன்னும் ஒன்றமுடிகிறது.

ஆனால் முக்கிய பாத்திரங்களான மூவரும் இதுவரை திரையில் கண்டிராத புதுமுகங்கள். ஆனால் தங்களுக்கு கொடுக்கப்ட்ட பாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்கள். அதுவும் ஆன்ட்ரூவாக நடிக்கும் டேன் டேஹானின் நடிப்பு கச்சிதம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினைகளின் போதும், தன் சக்திகளை கட்டுப்படுத்தமுடியாமல் திணறும் மனநிலை கொண்டவானாக மாறும் போதும் காட்டும் நடிப்பு சூப்பர்.

விஷுவல் எஃபெக்ட்ஸும் படத்தின் இன்னொரு பலம். பல இடங்களில் படத்தின் ஹீரோக்கள் சக்திகளைப் பாவிக்கும்போது சி.ஜி பாவிக்கப்படுகின்றது என்பதே தெரியாத அளவிற்கு அப்படி ஒரு நேர்த்தி. க்ளைமேக்ஸ் காட்சிகள் எல்லாம் சி.ஜியின் உச்சம்.  வெறும் 15மில்லியன் செலவில் தயாரிக்கபட்ட இப்படம் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 120மில்லியனுக்கு மேல் வசூல் பண்ணிவிட்டது.

அடுத்ததாக ஒரு நல்ல என்டர்டெயினர் ஒன்று பார்க்கவேண்டுமானால், என் ரெகமெண்டேஷன் இதற்குத் தான். எடுத்துப் பாருங்கள். கட்டாயம் பிடிக்கும்.

ப்ரீத்திக்கு நான் கேரண்டி. Smile


மார்க்கு84/100


படத்தின் ட்ரெயிலர்

ட்ரெயிலரை பார்த்துட்டு முடிவெடுக்காதீங்க. படம் அட்டகாசம் !!!

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

33 comments:

 1. அட..இது பாருடா ஆச்சரியத்தை..நேற்றொரு விமர்சனம்..இன்னிக்கு ஒன்னு..டைம் நிறையா இருக்கு போலயே..இருங்க படிச்சுட்டு வந்துருறேன்..

  ReplyDelete
 2. இது சூப்பர்ஹீரோ படமா பாஸ் ? நான் ஸ்பைடெர் மென். சூப்பர்மென் படத்தை தவிர வேறெதுவும் சூப்பர்ஹீரோ சப்ஜெக்ட்டுல வந்ததை கண்டதில்லையே..விமர்சனம் படிச்சுகிட்டே கீழயும் படிச்சேன்.ட்ரூமன் ஷோ பார்த்திங்க போல..சூப்பரான படம்..சரி ET விமர்சனம் எப்ப நண்பா ?

  ReplyDelete
 3. @@ நான் வேண்டுவதெல்லாம் இன்விஸிப்ளிட்டி பவர் மட்டுமே @@
  எனக்கும் அந்த பவர் மேல ரொம்ப நாளா ஒரு கண்ணு இருக்கு..ஆனா, கிடைக்குனுமே.

  நீங்களும் நிறைய படங்களை எழுதிகிட்டே இருக்கிங்க..நானும் பார்க்கறேன் என்றே சொல்லிட்டு வாரேன்..ஆனால், டைம் கிடைக்க மாட்டேங்குது நண்பரே..படங்கள பல டவுன்லோடு பண்ணி படுத்து தூங்குது.இந்த படத்தையும் டவுன்லோடு போட்டு தூங்க வைக்கிறேன்..அப்புறமா பார்க்கிறேன்.

  விமர்சனம் நல்லாருக்குங்க..அழகா சுருக்கமா எழுதியிருக்கீங்க.ரொம்ப நன்றி.

  ReplyDelete
 4. @Kumaran

  இங்கே சிங்கள பண்டிகை ஒன்றிற்காக 3 நாள் லீவு. நான் அதை 5 ஆக எடுத்திட்டேன். இந்த 5 நாளில் நிறையப் படம் பார்த்தாச்சு.

  E.T படம் ஏற்கனவே நிறையப் பேரு பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் யோசித்திட்டிருக்கேன். சீக்கிரமே எழுதிடுறேன்.

  ReplyDelete
 5. படத்தோட கதை தெரியாமலே போன வாரம் "YIFY-Torrents"-ல இருந்து டவுன்லோட் பண்ணி இருந்தேன்
  கதை ரொம்ப சுவாரிசியமாக இருக்கு. கண்டிப்பா பார்க்கிறேன்...
  அப்புறம் Fistfull of Dollars படம் எப்படி..பாஸ் ???

  ReplyDelete
 6. இந்தப் படத்தை பத்தி முதல்லயே கேள்விப்பட்டு இருக்கேங்க.. ஆனாலும் படம் பார்க்கனும்ங்கற அளவுக்கு இம்ப்ரெஸ் ஆவலை..
  இப்போ உங்க விமர்சனம் இருக்கே.. சூப்பர்!

  ஒரு மூணு மணிநேரம் தாங்க.. ஆன்லைன்ல பார்த்துட்டு வந்து கமெண்ட் போடுறேன்!

  ReplyDelete
 7. பார்த்துட்டேன் பாஸ்..
  சூப்பர் படம் தான்.. முதல் கொஞ்ச சீன் பார்க்கும்போது, "மாறி வேற படத்துக்க வந்துட்டோமா?"ங்கற ஃபீலிங். சூப்பர் பவர் கிடைச்சதுக்கப்புறம் கதை சூடுபிடிக்கிறது..
  சூப்பர் மார்க்கெட், மேஜிக் ஷோ, க்ளைமேக்ஸ் சீன்களெல்லாம் கலக்கல்!
  ஸ்டெடியாக நிற்காத காமிராவில் காட்டுவதாலோ என்னவோ ஸிஜி சீன்களெல்லாம் நீங்கள் சொன்னமாதிரி கண்முன்னே நடப்பது போலவே இருக்கிறது!! குறிப்பாக flying scene..

  படத்துல வர்ற 'எங்க வீசினாலும் டார்கெட்டில் போய் படும்' அந்த சூப்பர் பவர் நமக்கு கிடைக்கலையேன்னு பொறாமையா இருக்கு!

  இருந்தாலும் இடை நடுவில் போரடிக்கிறது.. டிம்-லைட்டிங் காரணமாவும் இருக்கலாம்.

  இன்றைய பொழுதை ஓட்டியமைக்கு நன்றி! எல்லாத்துக்கும் காரணம் சிறப்பான உங்கள் விமர்சனம்தான்!!

  ReplyDelete
 8. போஸ்டர் ,டிரைலர் லாம் பாத்து எதோ லோ பட்ஜெட்மொக்க படமோன்னு நினைச்சுட்டு இருந்தேன்.., நல்ல படம் போல பாத்துட்டு சொல்றேன்..,

  ReplyDelete
 9. தொடர்ந்து பதிவுகள் அடிச்சு தள்ளிட்டு இருக்கீங்க. அதுவும் உங்க ஸ்டைலில் இருந்து மாறாமல். கலக்குங்க........

  //////(நான் வேண்டுவதெல்லாம் இன்விஸிப்ளிட்டி பவர் மட்டுமே).//////
  இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு, எதை மனசுல வெச்சுகிட்டு நீங்க இதை சொல்லி இருக்கீங்க என்னக்கு புரியுது.

  ReplyDelete
 10. இதுவரை கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 11. @ராஜ்

  கதை நல்லாத் தான் இருந்துச்சு பாஸ். பிடிச்சிருந்துது. அடுத்ததும் சீக்கிரம் பார்க்கப் போறேன்.

  ஆனாப் பாருங்க ... படம் முழுவதும் க்ளிண்ட் ஈஸ்வுட பார்க்கும்போது ஏதோ Jack Hughmanன பார்க்கிற மாதிரியே ஃபீல் ஆனது. இல்ல?

  ReplyDelete
 12. @JZ

  படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹேண்டிகேம் ஊடாகவும், மற்ற கேமராக்கள் ஊடாகவும் ரெகார்ட் செய்தது போல காட்டப்பட்டதால், கொஞ்சம் நேசுரல் ஃபீலிங்கா இருக்கட்டுமேண்ணு அப்படி விட்டிருக்காங்க போல. படம் பிடித்திருந்தது மகிழ்ச்சி.

  ReplyDelete
 13. @...αηαη∂....

  கட்டாயம் பார்த்துட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 14. @MuratuSingam

  ஐயையோ ... அப்படியெல்லாம் ஏதும் உள்ளர்த்தம் இல்லிங்க. ;) :)

  தொந்தரவான இந்த உலகில் கொஞ்சமாவது தனிமை அப்படி இருந்தால் கிடைக்குமேன்னு சொன்னேன். :)

  ReplyDelete
 15. @பாலா

  வருகைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 16. படம் ஓகே ரகம் தான் நண்பரே...

  84/100 ரொம்ப அதிகம். Avengers பாருங்க.. கலக்கல இருக்கு அனால் கருந்தேள் ப்ளாக் Avenger's Series படிச்சுட்டு பாருங்க. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 17. @VELAN

  கருத்திற்கு மிகவும் நன்றி நண்பரே. எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது.

  கருந்தேளின் தொடரை வாசித்துவிட்டேன். படம் தான் இன்னும் பார்க்கல.

  ReplyDelete
 18. Inception பத்தி எழுத முடியுமா நன்பா? ஒன்னுமே புரியமாட்டேங்குது.

  ReplyDelete
 19. @பனங்கொட்டை (Panangkoddai)

  Inception பற்றி ஏற்கனவே நிறைய பேரு எழுதி தள்ளிட்டாங்க. இந்த ரெண்டு லிங்கையும் வாசித்துப் பாருங்க.

  http://worldmoviesintamil.blogspot.com/2010/07/inception-2010.html

  http://cinemajz.blogspot.com/2010/08/inception-2010-1.html

  ReplyDelete
 20. படத்தை மட்டும் விமர்சிக்காமல், சமூக விசயங்களோடு சேர்த்து எழுதுங்கள். இன்னும் விமர்சனம் நன்றாக வரும்.

  ReplyDelete
 21. Good review.. might be a good film

  ReplyDelete
 22. @நொந்தகுமாரன்

  முயற்சிக்கிறேன். கருத்துக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 23. சூப்பர் நண்பா படம் ஏற்கனவே பார்த்து விட்டேன் படம் அருமை

  ReplyDelete
 24. உங்கள் பதிவுகள் அருமை

  வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 25. படத்தை முதல் அரைமணிநேரம் பார்த்தேன் கடுப்பாய் இருந்தது ஏதோ ஹண்டி கேமராவில் பிடித்ததை போல் இருந்தது அதன் பின்னர் படம் சூப்பர் நான் இன்று தான் உங்களுக்கு முதல் முறையாய் கமெண்ட் போடறேன் இதற்கு முன்னர் படிப்பதொடு சரி...

  ReplyDelete
 26. (நான் வேண்டுவதெல்லாம் இன்விஸிப்ளிட்டி பவர் மட்டுமே) இது மட்டும் போதுமா நண்பா இதெல்லாம் நமக்கு பற்றாது இன்னும் வேணும்...

  ReplyDelete
 27. @chinna malai

  வருகைக்கு ரொம்ப நன்றி பாஸ். தொடர்ந்தும் வாங்க.

  பவர்ஸ் கிடைக்கும்வரை கதை கொஞ்சம் மெதுவாத்தான் மூவ் ஆகும். :)

  ReplyDelete
 28. @chinna malai

  பவர்ஸ் இருந்தா நல்லாத் தான் இருக்கும். ஆனால் விஷ் லிஸ்டில் இதுக்கு தான் முதலிடம்.

  ReplyDelete
 29. வேற கோணத்தில் யோசித்தவரு (இயக்குனர்) பேரு ஜோஷ் ட்ராங்க். இது தான் இவரோட முதல் ஹாலிவுட் படமாம். நம்ப முடியவில்லை.:////////

  அட நம்மளைப் பின்பற்றி அவரும் மாத்தியோசிக்கிறாரா? நல்லது இருக்கட்டும் :-))

  ReplyDelete
 30. நான் வேண்டுவதெல்லாம் இன்விஸிப்ளிட்டி பவர் மட்டுமே

  பக்கத்துவீட்டில இருக்கிறவங்க பாவம்...
  படத்தை பார்த்திட்டு வந்து சொல்லுறன்

  ReplyDelete
 31. சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
  தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
  சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

  தள முகவரி: http://www.saaral.in

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...