நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Cabin in the Woods (2011)

folder


இன்னிக்கும் ஹாரர் படம் தான் … மூணு பசங்க, ரெண்டு பொண்ணு … இந்த ஐந்து பேரும் வீக்எண்ட் தனியா குடி, போதை, செக்ஸ்னு ஜாலியா இருக்க ப்ளான் பண்ணி காட்டுக்குள்ள ஒரு காட்டேஜ்ஜுக்கு பிரயாணமாகிறாங்க. ஆனால் அந்த காட்டேஜ் சாதாரணப்பட்டது இல்ல. பின்னணில பல பெரிய சக்திகள் அங்கே விளையாடிட்டு இருக்கு. அவற்றால் அவங்க அங்கு சந்திக்கும் பயங்கரங்கள் தான் படத்தின் ஒன்லைன். 

அய்யோ!!! ஹாலிவுட் சினிமா கண்டுபிடிச்ச காலத்திலேந்து ஹாரர் படம்னு வர்ற முக்கால்வாசி படம் இந்தக் கதையைத் வச்சுத் தானே காசுப் பார்த்திட்டு வந்திருக்கு? இதுக்கு மேலயும் இதப் பார்க்கணுமான்னு ஒரு கேள்விய நீங்க கேட்பீங்க.. நிச்சயமா பார்க்கணும்!

ஏன்னா …

படம் பார்க்கிற நம்ம கூட விளையாடிப் பார்க்கணும்னு நினைச்சிட்டாங்க போலருக்கு இயக்குனர் ட்ரூ கொடார்ட்டும் தயாரிப்பாளர் வெஸ் வீடனும் (அவெஞ்சர்ஸ் இயக்கிய அதே ஆளு தான்). படத்துல எங்கயுமே க்ளிஷேங்கிற வார்த்தைக்கே இடமில்லை. ஆரம்பத்திலேயே வழக்கமான ஹாரர் படங்கள்ல நாம் பார்க்கிற பல காட்சிகளை வரிசையாக நமக்கு காட்டி, வழக்கமான படமோன்னு யோசிக்க வச்சு….சரி, கதை இப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறப்போ, அப்படியே கதையை யூ-டர்ன் அடிச்சு வேற திசைல திருப்பி ‘ஆஆஆஆ’ன்னு சொல்ல வைக்கிறாங்க.

thumb1

Shaun of the Dead, Zombieland மாதிரி குறிப்பிட்ட சில படங்கள் காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இது அந்த மாதிரியான ஹாரர் படமுமல்ல. ஆனால், அங்கங்கே கொஞ்சம் காமெடியையும் தெளித்துவிட்டு திரைக்கதையை சலிப்பில்லாமல் இயக்குனர் பின்னியிருக்கிறார். Serbian Film, Cannibal Holocaust போன்ற படங்களையே லஞ்ச் டைம்மில் அசால்ட்டாக பார்க்கும் சில இறுகிய வயிற்றுக்காரங்களுக்கு படத்தின் ஹாரர் கொஞ்சம் கம்மியாகவே தெரியலாம். ஆனால் திரும்பவும் சொல்றேன்….ஹாரர் கேடகரியில் இதுவொரு பரீட்சார்த்த முயற்சியே. உங்கள் வயிற்றைச் சுத்தப்படுத்தும் பேதிமருந்தல்ல!!

படத்துல ஆங்காங்கே நிறைய புகழ்பெற்ற ஹாரர் படங்களுக்கு ரெஃபரன்ஸ் வருது. அதெல்லாம் டைஹார்ட் ஹாரர் பேன்ஸுக்கு ஆட்டோமேடிக்கா மைண்ட்ல க்ளிக் ஆகும்…நமக்கு அந்தளவுக்கு ஹாரர் படங்கள் பற்றி மண்டைல இல்ல. ஏதோ ஒண்ணு ரெண்டு படம் ஞாபகம் வந்திச்சு. என்னோட ஃபேவரைட் சீன்னு சொல்லணும்னா,, முக்கால்வாசிப் படம் ஓடின பின் ஒரு சீக்வன்ஸ்ல இதுவரைக்கும் ஹாரர் படங்கள்ல தலையைக் காட்டின அத்தனை ஜீவராசிகளும், உருவங்களும் (ஃபேரி டேல்ஸ்ல அழகிய சாதுவான பிராணியா நினைச்சிட்டிருந்த யுனிகோர்ன் உட்பட) என்ட்ரியாகும் இடம் அதகளம்! அதன் பின் கொஞ்ச நேரம் தொடர்ந்து ஸ்க்ரீன் பூராவும் ரத்தமயம்! வழியில அகப்பட்டவனெல்லாம் க்ரைண்டர்ல மாட்டிக்கிட்ட மாதிரி சட்னி தான்!

2010லேயே வந்திருக்கவேண்டிய படம்… கைவசம் உரிமையை வைத்திருந்த எம்.ஜி.எம் ஸ்டுடியோ பட்ஜெட்ல நொந்து நூடில்ஸாகிட்டோம்னு அறிக்கை விட்டதால, அப்படியே ரீல் பொட்டிய தூக்கி ஒரு ஓரமா வச்சுட்டாங்க. அப்புறம் 2011ல விநியோக உரிமையை லயன்ஸ்கேட் நிறுவனம் வாங்கி . ரிலீஸ் பண்ணினா வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எங்கேயும் சோடை போகல. போட்ட காசுக்கு இரண்டு மடங்காகவே காசு பார்த்துட்டாங்க லயன்ஸ்கேட். ( வட போச்சே!! – எம்.ஜி.எம் )

thumb9

இதுக்குமேல படத்தோட முக்கியமான ட்விஸ்ட்டுகளைச் சொல்லாமல் எதுவுமே எழுத முடியாது … அப்படியே நான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் வேலை மெனக்கெட்டு நீங்க படிக்கப்போறதும் கிடையாது. போதாக்குறைக்கு சொன்னா படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் கெட்டுப்போய் விடும். அதுனால பேசாம நீங்க படத்தையே பார்த்துக்கோங்களேன்?! இதுவரைக்கும் எந்த ஹாரர் படமும் கொடுக்காத ஒரு புது ஃப்ரெஷ் எக்ஸ்பீரியன்ஸை இந்தப் படம் உங்களுக்குக் கொடுக்கும். கியாரண்டீட்!!!ஒரு தமிழ்ப்படம் பற்றி எழுதி வச்சிருக்கேன். நிறையப் பேரு எழுதிட்டாங்க. நானும் அதையே தான் எழுதியிருக்கேன். போடுறதா வேணாமா???

யப்பாடி இந்த மாசத்திற்கு மூணு பதிவு போட்டாச்சு!!! Target achieved…. ரெஸ்ட் எடுத்துக்கலாமா? Smile

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

18 comments:

 1. வடிவேலன்October 15, 2012 at 9:56 AM

  தல போடுங்க தல தமிழ் விமர்சனம் உங்ககிட்ட இருந்து வரணும் அது விமர்சனம் அதோட நீங்க எல்லாம் ரெஸ்ட் எடுத்தா திரை உலகம் என்னவுறது

  ReplyDelete
 2. இந்த படமும் டவுன்லோட் பண்ணி இருக்கேன் தல...இன்னும் பார்க்கல, ப்ளாட் ரொம்ப சுவாரிசியம்மா இருக்கு. கண்டிப்பா பார்கிறேன்.


  கொஞ்சம் நாளா இணையம் பக்கம் வர முடியல.. :( பணி சுமை காரணமாக தான்..


  ////ஒரு தமிழ்ப்படம் பற்றி எழுதி வச்சிருக்கேன். நிறையப் பேரு எழுதிட்டாங்க. நானும் அதையே தான் எழுதியிருக்கேன். போடுறதா வேணாமா??? ///


  இது என்ன கேள்வி தல... எழுதி வச்சுக்கிட்டு இப்படி எல்லாம் கேட்கபடாது....நீங்க பப்ளிஷ் பண்ணுங்க...படிக்க நாங்க இருக்கோம்... :)


  அப்புறம் புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு....

  ReplyDelete
 3. கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி தல ... அப்ப போட்டுற வேண்டியது தான்.

  //நீங்க எல்லாம் ரெஸ்ட் எடுத்தா திரை உலகம்//
  ஏய் ... என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே??? :)

  ReplyDelete
 4. நீங்களும் Mullholland Drive பற்றி எழுதுறேன்னு சொல்லி மாசக்கணக்காச்சி. நானும் பார்த்து வச்சிட்டு உட்கார்ந்திருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் போனா படமும் மறந்திடும் போலருக்கு. :P சீக்கிரம் எழுதிப் போடுங்க..

  ReplyDelete
 5. எப்போ இந்த disqusக்கு மாறினீங்க இது ரொம்ப நல்லா இருக்கும் என்ன நமக்கு தெரிந்தவர்களை தவிர மற்றவர்கள் கமெண்ட் போட்டால் தெரியாது யார்ன்னு

  ReplyDelete
 6. போன வாரம் ஏதோ தேடும் போது இந்த படத்தை பார்த்தேன் இமேஜ் பார்த்தவுடன் டவுன்லோட் செய்யலாம்ன்னு நினைச்சேன் இதே போல இமேஜ் பார்த்து ஏமாந்து போய் மொக்க படத்தை எல்லாம் டவுன்லோட் பண்ணினேன் அது போல இதுவும் இருந்து விடுன்னு டவுன்லோட் பண்ணலை

  ReplyDelete
 7. நமக்கு உங்களை போல் பெரிய அறிவு எல்லாம் ஹாலிவுட்டில் கிடையாது பிடித்தால் புரிந்தால் பார்ப்பேன் அவ்வளவே

  ReplyDelete
 8. ///Target achieved…. ரெஸ்ட் எடுத்துக்கலாமா? //// பிச்சு புடுவேன் பிச்சு பதிவு எழுதுறீங்க தமிழ்நாட்டில் இருந்து இருந்தீங்கன்னா நேரில் வந்தே பிச்சு புடலாம்

  ReplyDelete
 9. இல்லையே? யார் வேணும்னாலும் கமெண்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன். பெயர், ஈமெயில் அட்ரெஸ் கொடுக்கணும்.

  ப்ளாக்கர் மூலம் மட்டும் கமெண்ட் பண்ண முடியாது.

  ReplyDelete
 10. சரிங்க .. சீக்கிரம் பப்ஷிஷ் பண்ணிடறேன். ஹாரி கையால் அடிவாங்கிய அவமானம் எனக்கு வேணாம். :) :)

  ReplyDelete
 11. நான் பாத்துட்டேன் தல..படம் evil dead போல ஆரம்பித்து மற்ற படங்கள் போல் இல்லாமல் நல்ல ட்விஸ்டோடு கொண்டு சென்றார்கள். ஆனாலும் நம்ம தோர் இப்படி எலெக்ட்ரிக் பேட் வச்சு அடிச்ச கொசு போல செத்திருக்க கூடாது

  ReplyDelete
 12. ஹி ... படம் எடுக்கப்பட்ட டைம் 2009 ... அப்போ க்றிஸ் வெறும் டிவி நாடகங்களில் தலையக் காட்டிட்டு இருந்தவர் தான். 2011ல் தோருக்கு பிறகு தான் மாஸ் ஹீரோவா மாறினார். அதுனால தான் யோசிக்காம கொன்னுட்டாங்க.

  ReplyDelete
 13. நான் அப்படி சொல்லலை பிளாக்கர் கமெண்ட் பாக்ஸ் என்றால் அவங்க நேம் கிளிக் செய்தால் யார் கமெண்ட் போட்டார்கள் அவங்க வெப்சைட் கண்டுபிடிக்கலாம் இதுல முடியாது அல்லவா அதை சொன்னேன் அவர்களா லிங்க் கொடுத்தால் மட்டுமே

  ReplyDelete
 14. Krishna Raja kumaran V VOctober 17, 2012 at 5:26 AM

  I donot why I could not able to see this comment section in my office.I think its blocked out there.thats why this delayed comment.The movie is in my wish list will see soon.

  ReplyDelete
 15. என் கையால் அடி வாங்கினால் மகாராஜன் ஆகிடுவான் - விஜயகாந்த் பேட்டியில்

  ReplyDelete
 16. //அப்படியே நான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் வேலை மெனக்கெட்டு நீங்க படிக்கப்போறதும் கிடையாது.//

  அப்படி எல்லாம் நீங்க சொல்ல கூடாது ஹாலிவுட் ரசிகரே.. பிடிக்காட்டியும்
  உங்க ஸ்டைல உள்ள பதிவை வாசிப்பது வழக்கம் மச்சி.. ஆனா இப்போ கொலைவெறி
  ஹொரர்ல இறங்கிட்டிங்க.. பார்க்க மாட்டேன் என்றாலும் மேட்டர் என்னான்னு
  தெரிஞ்சுக்கணும்ல.. அதுக்காக வாசிப்பேன்..

  ReplyDelete
 17. it's okay boss ... thanks for the comment. watch it soon and let know :)

  ReplyDelete
 18. பிஞ்சு மனசுப்பா உனக்கு.. அதான் ஹாரர் படம்லாம் பார்க்கமாட்டேங்கிறீங்க. சரி ... சீக்கிரம் வேற டைப்ல ஒரு படம் இறக்கிடலாம்.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...