நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Beasts of the Southern Wild (2012)

folder

ஃபில்ம் ஸ்கூல்ல இருந்து அண்மையில்  வெளியேறிய ஒரு இயக்குனர், தொழில் ரீதியாக நடிகர்கள் இல்லாத.., அட.. இதுவரைக்கும் நாம் திரையில் கண்டிராத சாதாரண மக்களை நடிகர்களாகவும் Court 13ங்கற இன்டிபென்டன் ஃபில்ம் ஸ்டூடியோவின் உதவியோடும் எடுத்த முதலாவது படமே, 2013ம் ஆண்டு ஆஸ்கார் ரேஸில், சிறந்த திரைப்படங்களுக்கான செக்ஷனில் நாமினேஷன்ஸ்ல முன்னணி ஸ்டூடியோஸ், பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சம்பந்தப்பட்ட Argo, Les Miserables, Silver Linings Playbook போன்ற படங்களோடு போட்டி போடுதுண்ணா கட்டாயம் படத்துல ஏதோ சம்திங் சம்திங்  இருந்தாகணுமே என்கின்ற எண்ணத்தோடு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்..

Beasts of the Southern Wild-fanart

ஒரு கதையா இதை விவரமா சொல்றது கொஞ்சம் கஷ்டமாத் தெரியுது. சரி… எனக்குப் புரிந்தவரைக்கும் கதை அப்படின்னு பார்த்தா.. த பாத்டப் (Bathtub) என்கின்ற ஒரு இடம்.. ஒரு அணை/சுவர் மூலமாக சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கும்.. வெள்ளம் வந்தால் மொத்தமாக மூழ்கிவிடக்கூடிய ஏரியா. இங்கு தனது தந்தையுடனும், மற்றும் சில மக்களுடனும் ஒரு தனிப்பட்ட சமுதாயமாக வசித்துவரும் ஹஷ்பப்பி என்கின்ற ஒரு சிறுமியின் கண்ணோட்டத்திலேயே முழுப் படமும் நமக்கு நரேட் செய்யப்படுகிறது. அதிகமான குடிப்பழக்கமும், ஏதோ தீர்க்கமுடியாத நோய் (ப்ளட் கேன்சர்? எயிட்ஸ்?) இருந்தாலும் முடிந்தவரை அன்பாக கவனிக்க முற்படும் தந்தையான விங்க்.

இந்த நேரத்தில் ஒரு பெரிய புயலினாலும், ஆர்ட்டிக் பிரதேசம் உருகுவதாலும், நீர்மட்டம் உயர்ந்து பாத்டப் ஏரியா மிகவும் பாதிக்கப்படுகிறது. மேற்கொண்டு பல நூறு வருடங்களாக பனியில் உறைந்திருந்த இராட்சத பன்றி போன்ற மிருகங்கள் விடுபட்டு இவர்களின் ஏரியா பக்கம் ஓடிவர.. வெள்ளத்தில் மிச்சப்பட்ட சிலரும் ஹஷ்பப்பியும் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை மீட்டனர் என்பது தான் சுருக்கமான (எனக்கு புரிந்த) கதை. (சில நேரங்களில் கவித்துவமான பார்வையில் பார்ப்பவர்களுக்கு இன்னும் ஆழமாக கதை புரியலாம்)

thumb8

ஆனாலும் மேலே சொன்னது போல.. படம் ஆரம்பித்து கொஞ்ச நேரம் என்ன நடக்குது, என்ன சொல்ல வர்றாங்கண்ணே புரியாமல் தான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக படத்திற்குள் மூழ்கிவிட்டேன்.. இந்தப் படம் சரியாக சொல்லமுடியாத ஒரு எக்ஸ்பீரியன்ஸ்.படத்துல  லாஜிக். மீனிங் எல்லாம் தேடப் போகாதீங்க. ஏமாற்றம் தான் மிஞ்சும். சும்மா எஞ்ஜாய் பண்ணி பாருங்க. பார்த்து முடித்ததும் ஏதோ ஒரு மாயஉலகிற்குள் போய்விட்டு வந்த ஒரு ஃபீலிங் தான் இருக்கும். சில இடங்கள் எனக்குப் ஏன்னு புரியவில்லை. யோசிச்சுப் பார்த்துட்டு லூஸ்ல விட்டுட்டேன். (அந்தப் பன்றிகள் வரும் காட்சிகள்? ஏதாவது குறியீடாக இருக்கணும்)

ஆனாலும் தொடர்ந்து நான் படத்தைப் பொறுமையாக பார்த்தற்கு முக்கிய காரணம் ஹஷ்பப்பியாக வரும் க்வென்ஸேன் வாலிஸ் (Quvenzhane Wallis). வாட் எ பர்ஃபாமென்ஸ்!! சான்ஸே இல்லை. வசனங்களால் ஸ்கோர் செய்வதை விட சில இடங்களில் சைலண்டாக கொடுக்கும் நடிப்பிலும் எக்ஸ்ப்ரஷன்ஸிலும் தான் அதிகமாக ஸ்கோர் செய்கிறாள். குறிப்பா சொன்னா, கடைசி க்ளைமேக்ஸ் காட்சியருகில் ஒரு இராட்சதப் பன்றி அவள் முன் நிற்பது போன்ற ஒரு காட்சி. அந்தப் பன்றி (சி.ஜி) உண்மையில் அவ்விடத்தில் இல்லையென்றாலும், அவள் கொடுக்கும் முகபாவம் நம்மை அவ்விடத்தில் உண்மையிலேயே ஒரு பன்றி நிற்கின்றதோ என நம்ப வைக்கும். அதே போல ஒரு இடத்தில் விங்க் அவளை அறைய கோவத்தில் மீண்டும் அடிக்கும் காட்சி.. என்று சொல்லிக் கொண்டே போகலாம். நிச்சயம் ஆஸ்கரில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைக்கு சரியான தெரிவு தான்.

thumb3

அடுத்ததாக பாராட்டப்பட வேண்டியது படத்தின் இயக்குனர் பென் ஸெய்ட்லின் (Benh Zeitlin). அனுபவமற்ற நடிகர்கள், 1.8 மில்லியன் என்ற சின்ன பட்ஜெட், இயற்கையான செட்கள் என்று வேறு யாருடைய (பேரரசு?) கையிலாவது இப்படி ஒரு படம் மாட்டியிருந்தால், இந்தளவு படத்தை எடுத்திருப்பார்களோ தெரியாது. அப்படி எடுத்திருந்தால் கடைசியாக எழுதிய Safety Not Guaranteed போல ஒரு சன்டான்ஸ் ஃபில்ம் பெஸ்டிவல் இன்டிபெண்டன்ட் படமாக மட்டும் அடங்கியிருக்கும். ஆனாலும் கிடைத்ததை வைத்துக் கொண்டு இந்தளவு பவர்ஃபுல்லான, ஒரு “தனித்துவமான” படத்தைக் கொடுத்தமைக்கே கையில் ஒரு பொக்கே கொடுக்கணும்.

படத்துல ஒரு சின்னக் குறைன்னு சொல்லணும்னா.. அந்த காமெரா தான். லோ பட்ஜெட் என்பதால் 16mm ஃபில்ம்ல ஷுட் பண்ணின பென் ரிச்சார்ட்ஸன், அந்தக் குறையை நிவர்த்தி பண்ண ரியலிஸ்டிக்கா ட்ரை பண்ணுவோம்னு கொஞ்சம் ஓவராவே ஷேக் பண்ணிட்டார் போலயிருக்கு. நிறைய இடங்களில் Shaky.. ஆனாலும் அதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒளிப்பதிவு அருமையாகவே இருக்கிறது.

Cannes Film Festival தொடங்கி Sundance Film Festival வரை பலதரப்பட்ட விருதுகளை குவித்துவிட்டு இப்போது 2013 ஆஸ்கரில் சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகை மற்றும் திரைக்கதை பிரிவுகளில் போட்டியிடுகிறது. விருதுகள் கிடைத்தால், கடைசியில் ஹஷ்பப்பி சொல்வது போல, “…they gonna know: Once there was a Hushpuppy, and she lived with her daddy in The Bathtub.”

எனக்கு நல்லப் படமா தோணுது. எப்படியாவது ஆஸ்கருக்கு முன் பார்த்துவிடுங்க!!

It’s a unique experience. You’ll either love it or hate it!!

Beasts of the Southern Wild (2012) on IMDb

ட்ரெயிலர்

Safety Not Guaranteed (2012)

folder

வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஏக்கம் வரும்.. குறிப்பிட்டு சிலவற்றை சொன்னா, காலத்தில் பின்னோக்கி சென்று வாழ்வின் இனிமையான தருணங்களை மீண்டும் வாழ்வது, வாழ்க்கையில் விட்ட பிழைகளை மீண்டும் சரிசெய்து கொள்வது, தவறவிட்ட “வாழ்க்கையின் முக்கிய நபர்களை” மீண்டும் பெற்றுக் கொள்வது… என்று ஆளைப் பொறுத்து விருப்பங்கள் மாறும். இதில் பார்த்தீங்கண்ணா, முக்கியமா லிஸ்டில் இருக்கும் பெரும்பான்மை தவறவிட்ட அல்லது விட்ட பிழைகளை திருத்துவதாகவே இருக்கும். இதுவரைக்கும் இப்படியெல்லாம் உங்களுக்கு தோன்றியிருக்கோ இல்லையோ, எனக்கு பலமுறை தோணியிருக்கு. என் லைஃப் ட்ராஜடிஸ் அப்படி!

இதுவரைக்கும் இந்த ஹாலிவுட்ல சிறுகதை, நாவல், நாடகம், காமிக்ஸ் என்று எல்லாவற்றிலும் பக்கம் டூ பக்கம் உருவி நமக்கு படமாக் கொடுத்தவங்க, இப்ப அது போதாதென்று டெலிவிஷன் நாடகங்கள், வீடீயோ கேம்ஸ் வரைக்கும் எல்லாவற்றையும் திரைமயமாக்கிட்டாங்க. ஆனால் ஒரு துண்டு விளம்பரத்தைக் கொண்டு எந்தப் படமும் உருவாக்கப்படவில்லை.. இதுவரைக்கும்.

1997ல் Backwoods Home Magazineங்கற ஒரு பத்திரிகையில வேலை செய்து கொண்டிருந்த ஜான் சில்வெய்ராங்கறவர், பத்திரிகையின் விளம்பரங்களுக்கு நடுவில் இடம் வேஸ்டா போய்விடக்கூடாதேன்னு ஒரு காமெடியா இப்படி ஒரு filler போட்டாராம். (படத்தில் டெரியஸும், ஆர்னோவும் விளம்பரத்தை எழுதியவரின் போஸ்ட் பாக்ஸை பார்த்துக்கொண்டிருக்கும்போது, முதலாவதாக ஒரு வயசுபோன தாத்தா வருவார். சேம் பர்ஸன்..)

அவர் சும்மா தமாஷுக்கு போட்டது அந்தக் காலத்தில் ஒரு மினி சென்சேஷனாகி, கடைசியில அதை வைத்து.. தோ.. 2012ல் இந்தப் படமும் ரெடியாகிடிச்சு.


thumb4

டெரியஸ் தன் இருபதுகளில், சியாட்டில் பத்திரிகையில் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருக்கும் ஒரு இளம் பொண்ணு. ஒரு நாள் பத்திரிகை மீட்டிங் ஒன்றில் எடிட்டர் ஜெஃப் என்பவன் மேலே கூறப்பட்ட இந்த வித்தியாசமான விளம்பரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதப்போவதாக கூற, மேலும் பேக்ரவுண்ட் தகவல்கள் சேகரிப்பதற்காக மூன்று பேர் கொண்ட டீம் புறப்படுகிறது...  அப்ரசட்டியான டெரியஸ் உட்பட.

அங்கு சென்று தகவல்கள் சேகரிக்க ஆரம்பிக்கும்போது, அந்த விளம்பரத்தின் பின்னணியிலுள்ள மனிதனின் பெயர் கென்னத் கலோவேய் என்று தெரியவருகிறது. முதலாவதாக அவனுடன் தொடர்பு ஏற்படுத்த விரும்பும் ஜெஃப்பின் முயற்சிகள் தோல்வியுறுகிறது. அதுமட்டுமன்றி, இந்தக் கட்டுரையைக் காரணம் காட்டி ஜெஃப் தன்னுடைய பழைய காதலியுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் ஒரு சின்ன அஜால்-குஜால்  அனுபவத்திற்காகவே அங்கு வந்ததாகவும் தெரியவர, கட்டுரைக்கு தகவல் சேகரிக்கும் பொறுப்பு டெரியஸின் தலையில்... முதலில் சற்றுத் தயங்கிப் பழகும் கென்னத் டெரியஸின் குறும்புத்தனமான நக்கல் பேச்சு என்பன பிடித்துவிட அவளோடு இன்னும் ஒன்றிப் பழகுகிறான்.

டெரியஸ், கென்னத்தோடு பழகப் பழக அவனைப் பற்றி நிறைய அறிந்து கொள்கிறாள். அவன் ஒரு சாதாரண க்ளார்க் என்பதும், பெற்றோர்கள் இறந்தபிறகு காட்டிற்குள் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறான் என்பதும் அவளுக்கு தெரியவருகிறது. ஒருநாள் பேச்சுவாக்கில் இறந்துபோன அவனுடைய பழையக் காதலியை மீண்டும் பெறுவதற்காகவே அவன் டைம் ட்ராவல் செய்யப் போவதாகவும், அவனது பிரயாணத்தை தடுப்பதற்கான கவர்ன்மெண்ட் சீக்ரெட் ஏஜெண்டுகளால் எந்நேரமும் தொடரப்படுவதாகவும் சந்தேகப்பட்டுக்கொள்கிறான் கென்னத்.

கதை நகர நகர, டெரியஸிற்கு கென்னத்தை தொடரும் இருவரும் அரசாங்க சீக்ரெட் ஏஜேண்ட்ஸ் கிடையாது என்பதும், கென்னத்தின் காதலி இறக்கவில்லை என்பதும் தெரியவர.. அவனின் மனநிலை மீது சந்தேகம் ஏற்படுகிறது (கூடவே நமக்கும்). கென்னத் மனநிலை குழம்பியவனா? அவர்களின் டைம் ட்ராவல் சாத்தியமாகியதா? ஜெஃபின் பழைய காதல் என்னவாயிற்று? என்பதெல்லாம் படத்தில்..


thumb8

பொதுவாகவே சயின்ஸ் ஃபிக்ஷன் சம்பந்தப்பட்ட கதை என்றால், பெரிய பட்ஜெட், நல்ல நடிகர்கள், விஷுவல் எஃபெக்ட்ஸ் என்று ப்ரொடியுசரின் வியர்வை சிந்தித் சம்பாதிக்கப்பட்ட மில்லியன்களை விழுங்கவென ஒரு லிஸ்ட் இருக்கும். அதெல்லாம் தேவையில்லை… எனக்கு சுவாரஸ்யமா ஒரு கதை இருந்தா மட்டும் போதும்னு சொல்லியிருக்கார் இயக்குனர் கொலின் ட்ரெவோ. சயின்ஸ் ஃபிக்ஷன் கதை போல மேலோட்டமாக பூசி மெழுகப்பட்டிருந்தாலும், படம் மெயினாக மனிதர்களின் உணர்வுகளோடு தான் டீல் செய்கிறது. என்ன… எனக்கு கடைசி க்ளாமேக்ஸ் சீன் மட்டும் கொஞ்சம் மனதோடு ஒட்டாத மாதிரி இருந்தது. கொஞ்சம் வேற ஆங்கிள்ல ட்ரை பண்ணியிருந்தால், இன்னும் அருமையான படமாக வந்திருக்கும்.

நிச்சயம் படத்தோட மிகப்பெரிய பலமே மெயின் கதாபாத்திரங்களாக வரும் டெரியஸ் மற்றும் கென்னத்தின் நடிப்பு தான். டெரியஸாக Parks & Recreation புகழ் ஓப்ரே ப்ளாசா மற்றும் கென்னத்தாக மார்க் டுப்ளாஸ். இரண்டு பேருடைய நடிப்பும் அபாரம்! இருவருக்கிடையில் மெதுவாக காதல் மலர்கின்ற சின்ன சின்னத் தருணங்கள் எல்லாம் ரசிக்கணும்.

ஹாலிவுட்டில் ஒவ்வொரு வருஷமும் வெளியாகும்  நூற்றுக்கணக்கான படங்களில் முக்கால்வாசி இன்டிபென்டன்ட் ரிலீஸஸ் என்பதால் வைட் ரிலீஸாகி நல்ல ரீச் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இதுவும் அப்படி அதிகம் கவனிக்கப்படாமல் தவறவிடப்பட்ட அருமையான படம் ஒன்று.

டெரக் கொனலியின் 86 நிமிட திரைக்கதையும், நம்மை அப்படியே படத்தோடு கட்டிப்போட்டுவிடுகிறது. படம் முழுவதும் கென்னத் மனநிலை குழம்பியவனா இல்லையா என்று நம் மனதோடு மனுஷன் விளையாடிப் பார்க்கிறார். நாமும் டெரியஸின் அந்த குழம்பிய மனநிலையுடனேயே படத்தோடு பிரயாணிப்பது இன்னொரு பலம்.

டெக்னிக்கலி பெரிசா எதுவும் ஸ்கோர் செய்யாவிட்டாலும், சுவாரஸ்யமான கதைக்கருவும் அருமையான நடிப்பும், ஒன்றரை மணிநேரம் உங்களை சுவாரஸ்யமாக ஒன்றவைக்கும் என்பதற்கு மீ க்யாரண்டி! யாராவது ஒன்றிரண்டு பேர் இதைப்படிச்சிட்டு பார்த்தீங்கண்ணா எப்படி இருந்திச்சுண்ணு வந்து சொல்லுங்க.

Safety Not Guaranteed (2012) on IMDb

 

ட்ரெயிலர்