நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Safety Not Guaranteed (2012)

folder

வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஏக்கம் வரும்.. குறிப்பிட்டு சிலவற்றை சொன்னா, காலத்தில் பின்னோக்கி சென்று வாழ்வின் இனிமையான தருணங்களை மீண்டும் வாழ்வது, வாழ்க்கையில் விட்ட பிழைகளை மீண்டும் சரிசெய்து கொள்வது, தவறவிட்ட “வாழ்க்கையின் முக்கிய நபர்களை” மீண்டும் பெற்றுக் கொள்வது… என்று ஆளைப் பொறுத்து விருப்பங்கள் மாறும். இதில் பார்த்தீங்கண்ணா, முக்கியமா லிஸ்டில் இருக்கும் பெரும்பான்மை தவறவிட்ட அல்லது விட்ட பிழைகளை திருத்துவதாகவே இருக்கும். இதுவரைக்கும் இப்படியெல்லாம் உங்களுக்கு தோன்றியிருக்கோ இல்லையோ, எனக்கு பலமுறை தோணியிருக்கு. என் லைஃப் ட்ராஜடிஸ் அப்படி!

இதுவரைக்கும் இந்த ஹாலிவுட்ல சிறுகதை, நாவல், நாடகம், காமிக்ஸ் என்று எல்லாவற்றிலும் பக்கம் டூ பக்கம் உருவி நமக்கு படமாக் கொடுத்தவங்க, இப்ப அது போதாதென்று டெலிவிஷன் நாடகங்கள், வீடீயோ கேம்ஸ் வரைக்கும் எல்லாவற்றையும் திரைமயமாக்கிட்டாங்க. ஆனால் ஒரு துண்டு விளம்பரத்தைக் கொண்டு எந்தப் படமும் உருவாக்கப்படவில்லை.. இதுவரைக்கும்.

1997ல் Backwoods Home Magazineங்கற ஒரு பத்திரிகையில வேலை செய்து கொண்டிருந்த ஜான் சில்வெய்ராங்கறவர், பத்திரிகையின் விளம்பரங்களுக்கு நடுவில் இடம் வேஸ்டா போய்விடக்கூடாதேன்னு ஒரு காமெடியா இப்படி ஒரு filler போட்டாராம். (படத்தில் டெரியஸும், ஆர்னோவும் விளம்பரத்தை எழுதியவரின் போஸ்ட் பாக்ஸை பார்த்துக்கொண்டிருக்கும்போது, முதலாவதாக ஒரு வயசுபோன தாத்தா வருவார். சேம் பர்ஸன்..)

அவர் சும்மா தமாஷுக்கு போட்டது அந்தக் காலத்தில் ஒரு மினி சென்சேஷனாகி, கடைசியில அதை வைத்து.. தோ.. 2012ல் இந்தப் படமும் ரெடியாகிடிச்சு.


thumb4

டெரியஸ் தன் இருபதுகளில், சியாட்டில் பத்திரிகையில் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருக்கும் ஒரு இளம் பொண்ணு. ஒரு நாள் பத்திரிகை மீட்டிங் ஒன்றில் எடிட்டர் ஜெஃப் என்பவன் மேலே கூறப்பட்ட இந்த வித்தியாசமான விளம்பரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதப்போவதாக கூற, மேலும் பேக்ரவுண்ட் தகவல்கள் சேகரிப்பதற்காக மூன்று பேர் கொண்ட டீம் புறப்படுகிறது...  அப்ரசட்டியான டெரியஸ் உட்பட.

அங்கு சென்று தகவல்கள் சேகரிக்க ஆரம்பிக்கும்போது, அந்த விளம்பரத்தின் பின்னணியிலுள்ள மனிதனின் பெயர் கென்னத் கலோவேய் என்று தெரியவருகிறது. முதலாவதாக அவனுடன் தொடர்பு ஏற்படுத்த விரும்பும் ஜெஃப்பின் முயற்சிகள் தோல்வியுறுகிறது. அதுமட்டுமன்றி, இந்தக் கட்டுரையைக் காரணம் காட்டி ஜெஃப் தன்னுடைய பழைய காதலியுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் ஒரு சின்ன அஜால்-குஜால்  அனுபவத்திற்காகவே அங்கு வந்ததாகவும் தெரியவர, கட்டுரைக்கு தகவல் சேகரிக்கும் பொறுப்பு டெரியஸின் தலையில்... முதலில் சற்றுத் தயங்கிப் பழகும் கென்னத் டெரியஸின் குறும்புத்தனமான நக்கல் பேச்சு என்பன பிடித்துவிட அவளோடு இன்னும் ஒன்றிப் பழகுகிறான்.

டெரியஸ், கென்னத்தோடு பழகப் பழக அவனைப் பற்றி நிறைய அறிந்து கொள்கிறாள். அவன் ஒரு சாதாரண க்ளார்க் என்பதும், பெற்றோர்கள் இறந்தபிறகு காட்டிற்குள் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறான் என்பதும் அவளுக்கு தெரியவருகிறது. ஒருநாள் பேச்சுவாக்கில் இறந்துபோன அவனுடைய பழையக் காதலியை மீண்டும் பெறுவதற்காகவே அவன் டைம் ட்ராவல் செய்யப் போவதாகவும், அவனது பிரயாணத்தை தடுப்பதற்கான கவர்ன்மெண்ட் சீக்ரெட் ஏஜெண்டுகளால் எந்நேரமும் தொடரப்படுவதாகவும் சந்தேகப்பட்டுக்கொள்கிறான் கென்னத்.

கதை நகர நகர, டெரியஸிற்கு கென்னத்தை தொடரும் இருவரும் அரசாங்க சீக்ரெட் ஏஜேண்ட்ஸ் கிடையாது என்பதும், கென்னத்தின் காதலி இறக்கவில்லை என்பதும் தெரியவர.. அவனின் மனநிலை மீது சந்தேகம் ஏற்படுகிறது (கூடவே நமக்கும்). கென்னத் மனநிலை குழம்பியவனா? அவர்களின் டைம் ட்ராவல் சாத்தியமாகியதா? ஜெஃபின் பழைய காதல் என்னவாயிற்று? என்பதெல்லாம் படத்தில்..


thumb8

பொதுவாகவே சயின்ஸ் ஃபிக்ஷன் சம்பந்தப்பட்ட கதை என்றால், பெரிய பட்ஜெட், நல்ல நடிகர்கள், விஷுவல் எஃபெக்ட்ஸ் என்று ப்ரொடியுசரின் வியர்வை சிந்தித் சம்பாதிக்கப்பட்ட மில்லியன்களை விழுங்கவென ஒரு லிஸ்ட் இருக்கும். அதெல்லாம் தேவையில்லை… எனக்கு சுவாரஸ்யமா ஒரு கதை இருந்தா மட்டும் போதும்னு சொல்லியிருக்கார் இயக்குனர் கொலின் ட்ரெவோ. சயின்ஸ் ஃபிக்ஷன் கதை போல மேலோட்டமாக பூசி மெழுகப்பட்டிருந்தாலும், படம் மெயினாக மனிதர்களின் உணர்வுகளோடு தான் டீல் செய்கிறது. என்ன… எனக்கு கடைசி க்ளாமேக்ஸ் சீன் மட்டும் கொஞ்சம் மனதோடு ஒட்டாத மாதிரி இருந்தது. கொஞ்சம் வேற ஆங்கிள்ல ட்ரை பண்ணியிருந்தால், இன்னும் அருமையான படமாக வந்திருக்கும்.

நிச்சயம் படத்தோட மிகப்பெரிய பலமே மெயின் கதாபாத்திரங்களாக வரும் டெரியஸ் மற்றும் கென்னத்தின் நடிப்பு தான். டெரியஸாக Parks & Recreation புகழ் ஓப்ரே ப்ளாசா மற்றும் கென்னத்தாக மார்க் டுப்ளாஸ். இரண்டு பேருடைய நடிப்பும் அபாரம்! இருவருக்கிடையில் மெதுவாக காதல் மலர்கின்ற சின்ன சின்னத் தருணங்கள் எல்லாம் ரசிக்கணும்.

ஹாலிவுட்டில் ஒவ்வொரு வருஷமும் வெளியாகும்  நூற்றுக்கணக்கான படங்களில் முக்கால்வாசி இன்டிபென்டன்ட் ரிலீஸஸ் என்பதால் வைட் ரிலீஸாகி நல்ல ரீச் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இதுவும் அப்படி அதிகம் கவனிக்கப்படாமல் தவறவிடப்பட்ட அருமையான படம் ஒன்று.

டெரக் கொனலியின் 86 நிமிட திரைக்கதையும், நம்மை அப்படியே படத்தோடு கட்டிப்போட்டுவிடுகிறது. படம் முழுவதும் கென்னத் மனநிலை குழம்பியவனா இல்லையா என்று நம் மனதோடு மனுஷன் விளையாடிப் பார்க்கிறார். நாமும் டெரியஸின் அந்த குழம்பிய மனநிலையுடனேயே படத்தோடு பிரயாணிப்பது இன்னொரு பலம்.

டெக்னிக்கலி பெரிசா எதுவும் ஸ்கோர் செய்யாவிட்டாலும், சுவாரஸ்யமான கதைக்கருவும் அருமையான நடிப்பும், ஒன்றரை மணிநேரம் உங்களை சுவாரஸ்யமாக ஒன்றவைக்கும் என்பதற்கு மீ க்யாரண்டி! யாராவது ஒன்றிரண்டு பேர் இதைப்படிச்சிட்டு பார்த்தீங்கண்ணா எப்படி இருந்திச்சுண்ணு வந்து சொல்லுங்க.

Safety Not Guaranteed (2012) on IMDb

 

ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

10 comments:

 1. பாத்துர வேண்டியது தான்

  ReplyDelete
 2. அடுத்த மாசம் ஃப்ரீயா இருகக்கும் போது பார்த்துர்றேன்.. ஹீரோவோட குழப்பமான மனநிலையை எல்லாம் கடைசியில முடிச்சவிழ்த்து விட்டுருவாங்க தானே.. நீங்க க்ளைமேக்ஸ் திருப்தியில்லை என்று சொல்வதால் தயக்கமா இருக்கு.. ஓவரா குழப்பிவிட்டு சொல்யூஷன் கொடுக்காத படங்களை எனக்கு புடிக்காது. அதான்..

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா முடிவு இருக்கு பாஸ்... பார்த்துட்டு கட்டாயம் சொல்லுங்க.

   Delete
 3. உங்க விமர்சனம் திருப்தியா இருக்கு.
  கண்டிப்பா பாத்தறேன்.

  ReplyDelete
 4. நீங்கள் Best of hollywood பதிவில் இதை போட்டதில் இருந்தே இந்த பதிவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். கிளைமாக்ஸ் பார்த்தால் இரண்டாம் பாகம் வருவது போல் முடித்திருப்பார்கள் ...ஆனால் வராது இல்லையா?....timemachine என்பது இந்த படத்தில் சும்மா இல்லையா...?

  ReplyDelete
 5. !!spoiler!! எனக்கு இரண்டாம் பாகம் வருவது போல ஃபீல் ஆகல.. கடைசில டைம் மெஷின் இருக்கு பாஸ். அது தான் க்ளைமேக்ஸே.

  ReplyDelete
 6. பெஸ்ட் ஆஃப் ஹாலிவூட் பதிவு பாத்துட்டே டவுன்லோட் பண்ணிவைச்சேன்.., ஒரு வாரம் பொங்கலுக்கு ஊர்ல டேரா போட்டதால ஒரு படமும் பாக்கல .. இந்த வீக் எண்ட் பாக்கணும்...

  ReplyDelete
 7. டிவிடி கிடத்தால் பார்க்க முற்படுகிறேன். விமர்சனத்திற்கு நன்றி

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...