நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Raid: Redemption (2011)

folder

கொஞ்ச நாளாகவே நம்ம நட்பு வட்டாரத்தின் பேச்சுக்களில் மிகவும் அடிபட்ட படம் இது. பார்த்தவங்களும் ஆளாளுக்கு பில்டப்பை கொடுத்து ஹைப்பை ஏற்றிவிட்டு இருந்தாங்க. பொதுவா நமக்கு இந்த “கிழக்காசிய திரைப்படங்கள்” அலர்ஜிக் என்பதால் டச் பண்ணாமலே வைத்திருந்தேன். கடைசில “இன்னுமாடா பார்க்கல”ன்னு கேவலமா திட்டு வாங்கி, சே..இவன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்கவேண்டியதாப் போச்சேன்னு ஒரு ரோஷத்துல படத்தை எடுத்துப் பார்த்தா…

thumb4

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி பரபர படம் ஒன்று பார்த்து… எங்கேயும் யோசிக்க விடல. அட…கண்ணிமைக்கக் கூட நேரமில்லை. அவ்வளவு வேகம், பரபரப்பு!! அவனவன் கொடுத்த பில்டப்புக்கு ஒரு குறையும் இல்லாத அளவுக்கு ஆக்ஷன், ஆக்ஷன், ஆக்ஷன் மட்டும் தான்! இந்த வருஷத்தில் நான் பார்த்த பெஸ்ட் ஆக்ஷன்-வயலன்ஸ் மூவி இதுன்னு கண்ணை மூடிட்டு சொல்லலாம்.. கடைசியா எழுதின Expendables 2 நெருங்கிக் கூட வரமுடியாது போங்க..!

மிக மிக சிம்பிளான கதை. அதாவது படத்தோட டைட்டில் தான் கதையே. ரெய்ட்!! ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு ஊரில் உள்ள ஏதோ ஒரு அபார்ட்மெண்டை அந்த ஊரிலுள்ள எல்லா முக்கிய ரவுடிஸும், அவர்களின் தலைவனும் ஹெட் குவார்ட்டர்ஸா பயன்படுத்துறாங்க. அவங்க கட்டுப்பாட்டில் சில குடும்பங்களும் குடியிருக்கு. இந்தக் கும்பலை கைது பண்ணுவதற்காக ஒரு போலீஸ் யுனிட் அந்தக் கோட்டைக்குள் சத்தமில்லாமல் ரெயிட் போகுது. அவர்களின் என்ட்ரி அந்த கேங்குக்கு தெரியவர என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.

எளிமையான கதையை கொண்ட கதைக் களம், கரெக்டர் டெவலப்மென்ட்டுக்கெல்லாம் மிகவும் மெனக்கெட வைக்காமல், அதிக நேரத்தை ஆக்ஷன் சீக்வன்ஸுக்கு செலவளிக்க வைத்திருக்கிறது. இதுவொரு முக்கிய ப்ளஸ் பாயிண்ட். முதலில் மெதுவாக நகர ஆரம்பிக்கும் படம், ஒரு 15 நிமிடங்களின் பின் ரவுடிக் கும்பலுக்கு இவர்கள் வந்திருக்கும் தகவல் தெரியவந்த பின் தான் சூடு பிடிக்கிறது…அதன் பின் படம் முடியும் வரை நான்-ஸ்டாப் ஆக்ஷன் தான்.

ஆரம்பத்தில் ஏதோ Call of Dutyய படமாக பார்க்கிற மாதிரி வெறும் துப்பாக்கி மழை. துப்பாக்கில புல்லட் தீர்ந்துபோன பிறகு தான் படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பக்கம் திரும்புகிறது. இதில் புதுசா பென்காக் சிலாட் என்றொரு இந்தோனேஷியன் ஃபைடிங் ஸ்டைல் தான் பாவிச்சிருக்காங்கலாம். ஆக்ஷன் விரும்பிகள் தவறவிடக்கூடாத.., படத்தின் அழகாக கொரியோக்ராஃபி செய்யப்பட்ட மொமெண்ட்ஸ் இதன் பின் தான் இருக்கின்றது. மிஸ் பண்ணிடாதீங்க!

thumb5

அதிலும் கடைசி ஃபைட்டிங் Super Awesome!! எனக்கு படத்தில் பிடித்த கரெக்டர்ஸ் ஒன்று ஹீரோ..மற்றது அந்த Mad Dog கரெக்டர். அதிலும் இந்த Mad Dog தன்னோட சின்ன உருவத்தை வைத்துக் கொண்டு க்ளைமேக்ஸ்ல போடுற ஆட்டம் இருக்கே?? யப்பா! தமிழ்ல கடுகு சிறிசானாலும்னு (மீதி மறந்துபோச்சு) ஏதோ பழமொழி இருக்கே?..உண்மை தான்! சாம்பிள் பார்க்கவேண்டிவங்க இந்த வீடியோவ பார்த்துக்கோங்க..

படத்தோட காமெரா பற்றியும் சொல்லியேத் தீரணும். வழக்கம்போல ஒரே இடத்தில் இல்லாமல், ஷுடிங் காட்சிகளிலும் சரி, ஃபைடிங் காட்சிகளிலும் சரி … காமெரா சுற்றி சுற்றி படமெடுக்குது. சில இடங்களில் ஃபைட்டிங் கொரியோக்ராபிக்கு ஏற்றாற்போல காமெராவும் அசைவது, துப்பாக்கிச் சூடுகளின் போது shaking-mode, நடிகர்களுடன் சேர்ந்து காமெராவும் நகர்வது எல்லாம் அருமை!

இதுவொரு இந்தோனேஷியத் தயாரிப்புங்கறதால வழக்கம்போல யாருக்கும் தெரியாமல், சத்தமின்றி டொரன்டோ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு, பின் பார்த்தவங்க எல்லாரும் “ஆகா ஓகோ”ன்னு புகழ் பாட, உடனே நம்ம சோனி பிக்சர்ஸ் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கி வச்சிட்டாங்க. அப்புறம் வைட் ரிலீஸ் பண்ணியதும், 4 மில்லியன் Smile வசூலில் எடுத்ததும் பாக்ஸ் ஆபிஸ் வரலாறு! நமக்கு அது தேவையில்லாத சப்ஜெக்ட்..

நான் சொல்ல வர்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்.. ஆக்ஷன் விரும்பிகள் மிஸ் பண்ணாம பார்க்கவேண்டிய படம்! ஆனா, எல்லாருக்கும் படம் பிடிக்குமோ தெரியாது. கதை, கதாபாத்திரங்கள்னு ஆராய்ச்சி பண்ணாம ஒரு பரபரன்னு ஒரு என்டர்டெயினர் வேணும்னா கண்ணை மூடிட்டு (படம் பார்க்கும்போது மறக்காம தொறந்துடுங்க…மொக்கை…மொக்கை) எடுத்துப் பாருங்க. (வழக்கமா எல்லாப் படத்துக்கும் சொல்றது தான்.. இது கொஞ்சம் ஸ்பெஷல் ரெகமெண்டேஷன் Smile)

The Raid: Redemption (2011) on IMDb

ட்ரெயிலர்

எக்ஸ்ட்ரா பிட்டு

போன சனிக்கிழமை தான் தியேட்டர்ல (சவோய்) Dredd 3D ரிலீஸ் பண்ணியிருந்தாங்க.. கதை, வில்லன்னு இரண்டு படத்துக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள்! ஆனா என்ன.. Dreddல் வெறும் துப்பாக்கி, கிரனேட் மட்டுமே.. அதனாலோ என்னமோ எனக்கு அதை விட The Raid கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருந்தா மாதிரி ஒரு ஃபீலிங்.. படத்தில் Mad Dog சொல்வது போல “pulling the trigger is like ordering takeout. The real satisfaction in killing someone for him is found in a duel to the death with only the human body for a weapon.”  ஆனாலும் 3Dயில் Dreddஐ பார்ப்பது நிச்சயம் ஒரு சூப்பர்ப் அனுபவமாக இருக்கும்! அந்த ஸ்லோ மோஷன் காட்சிகள் எல்லாம் 3Dயில் பார்க்கும்போது.. வாவ்!!! முடிஞ்சா தியேட்டர்ல பார்த்துக்கோங்க.. Smile

Poltergeist (1982)

folder

நடுராத்திரி….அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஓடிக் கொண்டிருந்த டிவி திடீரென்று ஸ்டாடிக்காக மாறுகிறது.. மேல்மாடியில் உறங்கிக் கொண்டிருந்த 5 வயதான கரோல் ஆன் திடீரென்று உறக்கத்திலிருந்து எழுந்து கீழே வருகிறாள். டிவியின் முன் அமர்ந்து டிவியை நோக்கி பேசத் தொடங்குகிறாள்..

ஹலோ…யார் நீ?? சத்தமாக பேசு.. நீ பேசுவது சரியாக கேட்கவில்லை

இவளது சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் எழுந்து வந்து இவளைச் சுற்றி நின்று பார்க்கின்றனர். இவள் தனது கைகளை டிவியின் மேல் பதிக்கிறாள். (நீ என்னதான் தலைகீழா நின்னாலும் நாங்க படம் பார்க்கப் போறதில்லைங்கிறவங்க மேலே படத்தின் போஸ்டரைப் பார்த்துக் கொள்ளவும்)

இது தான் போல்டகெயிஸ்ட் படத்தின் ஆரம்பக் காட்சி!!


thumb4

படம் வந்த 1980களின் காலக்கட்டத்தில் இருந்த அமெரிக்காவின் சாதாரண குடும்பங்களில் ஒன்று.. ரியல் எஸ்டேட் பிஸினஸில் இருக்கும் தந்தை ஸ்டீவ், ஹவுஸ்வைப் டயான், டேனா, ரொபி, கரோல் என மூன்று குழந்தைகள் என்று வாழ்க்கை ஸ்மூத்தாக நகர்கிறது.

மீண்டும் மேலே சொன்ன கூறிய சம்பவம் போல ஒன்று கரோலுக்கு நிகழ, இச்சமயம் டிவியில் இருந்து ஒரு உருவம் போல ஒன்று கிளம்பி சுவருக்குள் மறைகிறது. இதே நேரம் வீடும் ஒரு சின்ன பூமியதிர்ச்சிக்குள்ளானது போல அதிர்கிறது. திடுக்கிட்டு எழும் குடும்பத்தினரிடம் கரோல் கூறுவது “They are here”.. (மீண்டும் போஸ்டர்)

வீட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் வைக்கும் தளபாடங்கள் தானாக நகர்வது,  போன்ற சில அமானுஷ்ய நிகழ்வுகள் அதன்பின் நடக்கத் தொடங்குகின்றன. வீட்டுக்காரர்களும் விபரீதமாக ஒன்றும் நடக்காததால் அதை ஏதோ ஜாலியான விளையாட்டு போல எடுத்துக் கொள்கின்றார்கள்.

திடீரென்று ஒருநாள் இரவு ரொபி வீட்டின் அருகிலிருக்கும் மரத்தால் தாக்கப்படுகிறான். இதே நேரம் பெற்றோர்கள் ரொபியைக் காப்பாற்ற முயலும்போது கரோல் ஆன் அவளின் ரூமிலிருக்கும் ஒரு போர்ட்டல் வழியாக கடத்தப்படுகிறாள். அதன் பின் வீட்டில் அமானுஷ்ய சக்திகளின் அட்டகாசம் இன்னும் விபரீதமாகிறது.

கரோல் ஏன் கடத்தப்பட்டாள்? அதன் பின் எவ்வாறு அவளை மீட்டார்கள் என்பதை படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.


thumb2

பொதுவாக ஹாரர் படங்களில் இரண்டு வகையான படங்கள் உண்டு.. முதலாவது வகை, zombies, பேய்கள், ஹாக் அன்ட் ஸ்லாஷ் வகையறா (Cabin in the Woods,The Thing , Saw Series) என்று ரத்தம் தெறிக்கும் காட்சிகளுடன் பார்வையாளர்களை மிரட்டும் படங்கள். இரண்டாவது வகை.. பேய், ரத்தம் என்று எதையும் காட்டாமல் சவுண்ட் எஃபெக்ட், காட்சியமைப்பு என்று பார்வையாளர்களை மிரட்டுவது. (Paranormal Activity) போன்ற படங்கள் இந்த வகை.. இந்தப் படமும் இரண்டாவது வகை போலத் தான் எனக்குத் தெரியுது.

இயக்குனர் டாப் ஹுப்பர். இயக்கம் இவர் தான் என்றாலும், முழுக்க முழுக்க மேற்பார்வை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான். அதிலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்ததும், முழு கன்ட்ரோலும் ஸ்பீல்பெர்க் பொறுப்பெடுத்துக் கொண்டார். படத்தோட விஷுவல் மற்றும் மியுசிக் பற்றிச் சொல்லியே ஆகணும். மாறி மாறி இந்தப் படத்துடன் E.T படத்தின் வேலைகளையும் பார்த்துக்கொண்ட ஸ்பீல்பெர்க் புண்ணியத்துல சில இடங்களில் ஃபுல்-எஃபெக்ட்டுடன் பார்த்தால் ஹார்ட் பீட் எகிறும்! இப்போ பயங்கர எஃபெக்ட்டுகளுடன் படம் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு சாதாரணமா தெரிந்தாலும், அந்தக் காலத்து ஆட்களுக்கு இது நிச்சயம் ஒரு பயங்கர அனுபவமா இருந்திருக்கணும். 1982 ஆஸ்கரில் Best Sound Editing Effects, Best Original Score, and Best Visual Effects போன்ற பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. கடைசில ஸ்பீல்பெர்க்கின் E.Tயிடமே தோற்றுப் போனது பரிதாபமே!

நிறைய ஹாரர் படங்களை குடும்பத்துடன் பார்க்கமுடியாது…MPAA புண்ணியத்துல நம்ம படத்துக்கு எப்படியும் R ரேடிங் தான் என்ற எண்ணத்துல, டைரக்டர்களும் ஆளாளுக்கு பிட்டு பிட்டா போட்டுவிடுவாங்க.. படம் ரிலீஸான நேரத்தில் இந்தப் படத்திற்கும் R ரேடிங் தான் கிடைத்தது. ஆனா இந்த நியூஸ் கேட்டதும் ஸ்பீல்பெர்க் கடுப்பாகி அவரோட பவரை MPAA டீமுக்கு காட்ட, அவங்களும் பம்மிக் கொண்டே போனாப் போகுதுன்னு PG ரேடிங்கை கொடுத்துவிட்டாங்க. எனக்குத் தெரிந்து PG ரேடிங் கிடைத்த பேய்ப்படம் இதுவாத் தான் இருக்கும்.. ஆனா சில இடங்களைப் பார்க்கும்போது R ரேடிங் கொடுத்ததில் தப்பில்லை என்று தான் தோணுது. குறிப்பா ஒரு சீனில் பேய் நடவடிக்கைகளை கண்கானிக்க வரும் ஒருவன், சதை எல்லாம் உருகி சிங்க்கில் கொட்டுவது போன்ற காட்சிகளெல்லாம் PG ரேடிங்கிற்கு நிச்சயம் ஒத்து வராது! (தொடைநடுங்கி MPAA வாழ்க! வளர்க!)

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கென்னடான்னா.. Insidious படம் ஞாபகத்திற்கு வந்தது. அந்த கதையில் கொஞ்சம் Astral Walking அது இதுன்னு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் போட்டு வைத்தாலும், இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கதை போலத் தான்! யாராவது?

போன மாசமே போட்டிருக்கணும்.. வழக்கம் போல சோம்பேறித்தனமும், ஹாலோவீன் கேன்டி சாப்பிட்டு டயர்டாகிட்டதாலும், முக்கியமா.. அப்போ போட்டா, இந்த மாசத்துக்கு போஸ்ட் இல்லாமல் போய்விடுமோங்கற ஒரு எண்ணத்தினாலயும் இன்னிக்கு வருது!

Poltergeist (1982) on IMDb


ட்ரெயிலர்