நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Man from Earth (2007)

the.man.from.earth.2007.poster


இதுவரைக்கும் எத்தனையோ சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் பார்த்திருக்கேன். ஏகப்பட்ட படங்கள் ஆக்சன், பிரமாண்டம், தொழில்நுட்பம் என்று வாயடைக்க வைத்திருக்கின்றன. ஆனாலும் இதுவரைக்கும் எந்தப் படமும் முடிந்த கையோடு தனியாக கொஞ்ச நேரம் உட்கார்ந்து யோசிக்க வைத்ததில்லை. எல்லாப் படங்களிலும் தனித்து நிற்கும் ஒரு படம் … சரி சரி … பில்டப் போதும். வாங்க போகலாம்.

சயின்ஸ் ஃபிக்ஷன்னு ஆரம்பத்துல சொல்லித் தொலச்சிட்டேன். உடனே டமால் டுமீல்ன்னு பிரகாசமான வெளிச்சத்துடன் சுடும் துப்பாக்கிகள், மணிக்கு பல நூறு கி.மி வேகத்தில் ரோட்டின் மேல் மிதந்து பறக்கும் கார்கள், எதிர்கால நகரங்கள் என்று எதிர்ப்பார்ப்புடன் வரும் ஐயாமார்களே … கொஞ்சம் வெயிட் … இந்தப் படத்துல அப்படி ஒன்னுமே இல்ல. ஒரே ஒரு இடத்துல ஒரு பிஸ்டல் வருது. அதுல குண்டு இல்ல. ஒரு பிக்கப் (cab) இருக்கு. ஆனா கடைசி சீன் வரைக்கும் ஒரே இடத்துல தான் நிக்கும். அப்போ என்ன ம** இந்தப் படத்துல இருக்குன்னு கேட்பீங்களே? டயலாக் மற்றும் கொஞ்சமும் சலிக்கவைக்காத திரைக்கதை ஓன்லி.

இப்போ வேணுங்கிறவங்க உள்ளே வரலாம்.



கதை??? அ…. படத்துல கதைன்னு ஒன்னு இல்லங் (யோவ்…இன்னாப்பா? வெளாடுறியா?). படமே ஒரு விடயம் பற்றி சில மனிதர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் தான். எப்படி சொல்றது?? ஓகே…இப்படித் தாங்க படம் ஆரம்பிக்குது.

The Man from Earth-fanart

John Oldman(Smile) ங்கற ஒரு ப்ரொஃபெசர் வேலையிருந்து விலகுகிறார். வீட்டைக் காலி பண்ணிவிட்டு போறதுக்கு முன்னாடி, ஒரு வரலாற்று நிபுணர், ஒரு உயிரியலாளர், ஒரு மானிடவியலாளர் மற்றும் இன்னும் இரு “லாளர்கள்” என தனது நெருங்கிய சில நண்பர்களை ஒரு ஃபெயார்வெல் பார்ட்டிக்கு அழைக்கிறார்.  ஜானி வாக்கர் பெக்குடன் ஆரம்பிக்கும் சாவகாசமான உரையாடல் மெது மெதுவாக தடம் மாறி, ஜானின் வாழ்க்கையைப் பற்றி மாறுகிறது. அப்போது கதையோடு கதையாக ஜானும் தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை வெளியிட, அதை நம்புவதா இல்லையா என்று பைத்தியம் பிடிக்காத குறையாக ரூமில் உள்ள மற்றவர்கள். உண்மையைக் கண்டுபிடிக்க ஒவ்வொருவரும் அவங்கவங்க துறையில் ஜானிடம் கேள்விகளைத் தொடுக்க, எல்லாக் கேள்விகளுக்கும் ஃபிங்கர் டிப்ஸில் ஜானிடம் விடை இருக்கிறது. அது போதாதென்று ஜான் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய மேட்டரை போட்டு உடைக்க…மீண்டும் மற்றவர்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ள…சூடான விவாதங்களுடன் இப்படியே கதை நகர்கிறது.


திரும்பவும் சொல்றேன் … நீங்க ஒரு ஜாலியான என்டர்டெயினர் எதிர்பார்த்திங்கன்னா இந்தப் படம் பக்கம் திரும்பிக் கூட பார்க்காதீங்க. கொஞ்சம் மண்டைய யூஸ் பண்ணி தலைமுடியை பிச்சுக் கொண்டு   பார்க்க பிடிக்கும்னா இப்பவே டவுன்லோட் போடுங்க. படம் முழுவதும் ஒரு ஐடியாவைச் சுற்றி வட்டமடிக்கும் டயலாக் டயலாக் டயலாக் தான். பேசும் விஷயமும் நிச்சயமா நம்ப முடியாத மேட்டர். ஆனாப் “பேசியே கொல்றாங்களே……”ன்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு வசனமும் ஒரு சூடான விவாதம்.

நடிப்பு எல்லாம் தேறுகிற ரகமில்லை. ஆகவே படத்தைத் நூறு வீதம் தாங்கி நிற்பதும் இந்த வசனங்கள் தான். படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் ரெண்டு லட்சம் டாலர். தயாரிப்பு செலவுன்னுட்டு பல கோடிகளைக் விழுங்கி கடைசியில் ஐந்து பைசாக்கு பெறாத வெறும் குப்பைகளை மெகாஹிட் படங்களென்று கூறிக்கொண்டு வெளியேற்றும் இயக்குனர்களுக்கு வெறும் ஐந்து லட்சம் செலவில் ஒரு சுவாரஸ்யமான படத்தை எவ்வாறு தயாரிப்பது இப்படித் தான் என்று போட்டுக் காட்ட வேண்டும்.

ஜெரோமி பிக்ஸ்பி – படத்தின் கதையை எழுதியவர். இவரது கடைசி படைப்பு, மாஸ்டர்பீஸ் எல்லாம் இந்தப் படம் தான். 1960களிலேயே கதைக்கான ஐடியாவை உருவாக்கிவிட்டு, கடைசிக் காலத்தில், அதாவது 1998ம் ஆண்டு இறக்கும் தறுவாயில் தான் கதையை முடித்தாராம்.

முந்தி ஒருநாள் பார்க்க ஆரம்பித்துவிட்டு, படம் புரியாமல் சுத்த லோ-பட்ஜெட் பைத்தியக்கார படமாயிருக்கும் என்று நிப்பாட்டி வைத்துவிட்டு, மீண்டும் நேற்றுத் தான் ஒரு மூட் வந்து பார்த்தேன். பார்த்தபின் தான் எவ்வளவு அருமையான படத்தை மிஸ் பண்ணியிருக்கோம்னு தெரிஞ்சுது.

திரும்பவும் …. எல்லாருக்குமான படமல்ல இது. சயின்ஸ், மனித வாழ்க்கை, வரலாறு, சமயம் போன்றவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்துச்சுன்னா, வித்தியாசமான அட்டெம்ட்களில் ஆர்வம் இருந்துச்சுன்னா நிச்சயம் எடுத்துப் பாருங்க. அட்லீஸ் ஒரு ரெண்டு நாளைக்கு யோசிச்சிட்டு இருப்பீங்க…..என்னை மாதிரியே.

ஆங் … நான் கடைசி வரைக்கும் அந்த சீக்ரெட் என்னன்னு சொல்லவே இல்லயே … கதை செக்ஷன்ல க்ளூ இருக்கு. கண்டுபிடிச்சிக்கோங்க. ஹேப்பி Hunt for Hint Smile


ட்ரெயிலர்




வர்ர்ட்டா … Smile

Due Date (2010)

folder

நீங்க அனேகமா அன்பே சிவம் படம் பார்த்திருப்பீங்க. கொஞ்சம் ஹாலிவுட் ஞானம் அதிகமுள்ளவங்க அப்படியே காலத்தில் கொஞ்சம் பின்னாடி போய் Planes, Trains and Automobiles படத்தையும் எடுத்துப் பார்த்திருப்பீங்க. அந்த இரண்டு படமும், அதன் காமெடியும் பிடித்திருந்தவங்க மட்டும் கீழுள்ள கோட்டைத் தாண்டி போகுமாறு கேட்டுக் கொள்கிறேன் (பர்சனல் பிட்டு – எனக்கு அசலை விட நகல் பிடித்திருந்தது). இந்த வகைப் படங்களில் இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னவங்க டு ஸ்டெப் பேக் போய் பதிவை ஸ்கிப் பண்ணிடுங்க. ஏன்னா, இந்தப் படமும் ஏறக்குறைய … அட ஏறக்குறைய என்ன, முழுசா அதே தீம் தான்.

ஓகே…மூவிங் ஓன்.


Due Date-fanart

பீடர், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள மனைவியைப் பார்க்க லாஸ் ஏஞ்சல்ஸ் செல்வதற்காக ஏர்போட்டிற்கு வரும் பிஸினஸ்மேன். வந்த இடத்தில் ஈதன் பீடரின் டாக்ஸி கதவை இடித்துக் கொண்டு சென்று காரைப் பார்க் செய்ய…ஏதேச்சையாக இருவரினதும் பேக்ஸும் கைமாற…ஏர்போட் செக்கப்பில் பீடரின் கைப்பையில் போதைப்பொருள் இருப்பதாக பிரச்சினை வர…அது அவனுடையது இல்லை என்று வாதாடி ப்ளேனுக்குள் வந்து சேர, ப்ளேனுக்குள் பீடரின் எதிரே ஈதன் இருக்க…ஈதன் பாம்ப், குண்டுவெடிப்பு என்று பேச்சுவாக்கில் உளற இருவரும் நோ-ப்ளைட் லிஸ்டில் போடப்பட்டு ப்ளேனிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

சட்ட நடவடிக்கை, தண்டனைகள் இல்லாமல் விசாரணைக்குப் பிறகு இருவரும் விடுவிக்கப்பட, பீடருக்கு அப்போது தான் அவனது பை, வாலட் எல்லாம் ப்ளைட்டில் வைத்துவிட்டு வந்தது தெரியவருகிறது. கையில் ஒத்தப்பைசா இல்லாமல் பீடர் நின்றுகொண்டிருக்கும்போது, ஈதன் கார் ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு வர, பீடர் வேண்டாவெறுப்பாக வேறு வழியின்றி ஏறிக் கொள்கிறான்.

இங்கிருந்து, இருவரும் வழியில் சந்திக்கும் காமெடி அனுபவங்கள் தான் படம்.


thumb4

ரொம்ம்ம்ம்ப நாளாக் ஹார்ட்டில் தூங்கிட்டு கிடந்தது இந்தப் படம். ரொபர்ட் டௌனி, மற்றும் ஹேங்-ஓவர் புகழ் கலிஃபியநாகிஸ் இரண்டு பேரு மேல இருந்த நம்பிக்கையில படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். இவங்க ரெண்டு பேரையும் சொல்லியும் குத்தமில்ல. அவங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் தான். ஆனால் இரண்டு திறமையான நடிகர்களைக் ஒரே காருக்குள் வைத்தால் படம் சக்ஸஸாகிவிடுமா? (உ.ம் பையா??? அடப் போய்யா)

கதை??? பல வருஷமா ஹாலிவுட்டில் தோசைமாவு மாதிரி அரைச்சு அரைச்சு புளிச்சு போன மேட்டர். கதை ஆரம்பித்து 15 நிமிடங்களுக்குள்ளேயே படத்தின் முடிவு வரைக்கும் மைண்ட்ல சைலண்டா என்னோட வர்ஷன் ஓடி முடிஞ்சுது. ஆனா முதல் 15 நிமிஷத்தையும் கடத்திட்டீங்கண்ணா தாராளமாக சிரிக்க வைக்கச் சில இடங்கள் இருக்கு. டௌனிக்கு படம் முழுவதும் முகத்தை உர்ர்ர் என்று வைத்துக் கொள்ளும் பாத்திரம். கலிஃபியநாகிஸ் வழக்கம் போல (ஹேங்ஓவர் போல) சின்னப்புள்ளத் தனமா காமெடி பண்ணும் கரெக்டர். இந்த இருவரும் சேரும் ஓரிரு இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். ஆனால் பல இடங்களில் காமெடி எடுபடாமல் எரிச்சல் தான் மிஞ்சுகிறது. கிஸ் கிஸ் பேங் பேங் படத்தில் வந்த அதே டௌனி-மொனகன் ஜோடி தான் இந்தப் படத்திலும். ஆனால் மொனகனுக்கு இதில் பெரிதாக ரோல் ஒன்றுமில்லை.

ரோட்டில் போற ரெண்டு பேர் மீட் பண்ணுவது, பேசுவது, ட்ரிப் போவது, லூசுக் காமெடி பண்ணி மத்தவன் எரிச்சலை சம்பாதித்துக் கொள்வது, இப்படி ஏற்கனவே பார்த்த விஷயங்கள் தான் படம் முழுக்க. அதனால் தான் பாதிப் படம் போகும்போது அனேகமாக அடுத்து வரும் சீன் இப்படி இருக்கும் என்று உங்களால் சொல்லக்கூடியதாக இருக்கும்.

சுருக்கமா சொன்னா, இதுவொரு ஆவரேஜ் காமெடி மூவி. காமெடிப் படம் பிடிச்சவங்க, Planes, Trains and Automobiles மாதிரி படம் பார்க்காதவங்க எடுத்துப் பார்க்கலாம். இதுவரைக்கும் சுவாரஸ்யமாக படிச்சுட்டு வந்தவங்களுக்கு, கதை தெரிஞ்சிருக்கும். தேவைன்னா டவுன்லோட் பண்ணிப் பாருங்க. தேவையில்லைன்னா அப்படியே படிச்சுட்டு ஓடிடுங்க.

ட்ரெயிலர்

Food Inc. (2008)

folder


எல்லாருக்கும் ஒவ்வொரு நாளும் அவசரம். காலைல லேட்டாகி எழும்புவதில் இருந்து நைட்டு வீடு வந்து கட்டில்ல படுக்கிற மட்டும் தலைக்கு மேல வேலை. போதாக்குறைக்கு இப்பல்லாம்  அநேகமான வீடுகளில் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. கேட்டா ஏதோ பொருளாதாரச் சிக்கல்னு பட்ஜெட் மினிஸ்டர் ரேஞ்சுக்கு லெக்சர். அப்போ சமைக்குறதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு? ஏதோ பன்னோ, பர்கரோ வாங்கித் வைத்துவிட்டு போறவழியிலயே வயித்துக்குள்ள தள்ளிக்க வேண்டியது தானே? டைம் மிச்சமாகும் பாருங்க?

காலையில ப்ரெட்டுக்கு பூசுற பட்டர், சீஸில் இருந்து சாயந்திரமானா ரெஸ்டாரன்டுல போய் குடிக்கிற கோக் வரைக்கும் எங்கிருந்து வருது? யார் உற்பத்தி பண்றாங்க? எப்படி உற்பத்தி பண்றாங்க? பின்னணி என்ன? இப்படி எதையாவது அலசியிருக்கீங்களா? அட்லீஸ்ட் அதுல ஒட்டியிருக்கிற லேபிளையாச்சு வாசிச்சிருக்கீங்களா? (நம்ம டியுட்டி எல்லாம் காலாவதி திகதி வாசிப்பதோடு முடிஞ்சிருதே. அதையும் எத்தன பேர் வாசிக்கிறீங்களோ?)

“ஈஈஈ”ன்னு சிரித்தபடி கட்-அவுட்டில் போஸ் கொடுக்கும் விவசாயிகள், நல்ல புஷ்டியாக வளர்ந்து சந்தோஷமாகத் தெரியும் மாடுகள், ஆடுகள், கோழிகள் … இந்த சந்தோஷம் எனும் போலியான தோற்றம் மூலம் அந்த நிறுவனத்தால் மறைக்கப்படும் உண்மைகளை என்றைக்காவது தெரிந்துகொள்ள முயற்சித்துப் பார்த்தீர்களா?

இப்படி இந்தப் பொருட்களின் அந்தத்திலிருந்து ஆதி வரைத் தேடிப் பயணித்த இயக்குனர் ரொபர்ட் கென்னர் தான் கண்டுபிடித்த பல மறைக்கப்படும் உண்மைகளை இந்த ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த டாக்குமென்டரி மூலம் நமக்குத் தெரியவைக்கிறார்.


“நம் உணவுப் பழக்கவழக்கம் கடந்த 10,000 ஆண்டுகளில் மாறியதை விட, கடந்த 50 ஆண்டுகளில் விரைவாக மாற்றமடைந்துவிட்டது”

இப்படி ஆரம்பிக்கும் படம், மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது … இறைச்சி, தானியவகை உற்பத்தி மற்றும் பெரிய கார்பரேட் கம்பனிகள் எவ்வாறு அமெரிக்க சந்தையையும் விவசாயிகளையும் சட்டம் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன.

இதில் சந்தேகமில்லாமல் ரொம்ப டச்சிங்கான ஏரியா முதல் பாகம் தான். நீட்டா பேக் பண்ணி, ஏ.ஸியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள, மிகவும் சுத்தமாக தயாரிக்கப்பட்டது என்று சுப்பர்மார்கெட்டுகளில் விற்கப்படும் இறைச்சி தயாராகும் பண்ணைகளுக்கும், இறைச்சி வெட்டப்படும் இடங்களிற்குமான பிரயாணம். பிறந்ததில் இருந்து வெட்டப்படும் வரை 24 மணிநேரமும் தமது சாணிகளுக்குள்ளேயே நிற்கும் மாடுகள், நிற்கக்கூட முடியாமல் கெமிக்கல்ஸால் பெருத்துக்கிடக்கும் கோழிகள் என்று வார்த்தைகளில் சொல்லமுடியாது.

foodinc2-jpg



மேலேயுள்ள படத்தைப் பார்த்தால், கெமிக்கல்ஸின் விளையாட்டு தெரியும். ஒரு ஷாட்டில் ஒரு கோழியைக் காட்டுவாங்க. வளர்ச்சி அதிகரித்து, பாரத்தினால் நடக்கமுடியாமல், குப்புறப் படுத்துக்கொண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும். காரணம்? போடும் இரசாயனங்கள் நெஞ்சுப்பகுதியில் இறைச்சியை அதிகரிப்பதற்காக போடப்படுபவை. இறைச்சி அதிகரித்ததும் உள்ளுறுப்புக்கள் நெரிக்கப்பட்டு மூச்சு கூட விடமுடியாமல் பண்ணிவிடும். தினமும் இப்படி இறக்கும் கோழிகளை அள்ளிக் கொண்டு போய் கொட்டும் காட்சி அதைவிடக் கொடுமை!!!

இப்படி பல கொடுமைகளுக்குப் பிறகு, இரண்டாம் பாகம் தானிய உற்பத்தியை அலசுகிறது. அமெரிக்காவின் மொத்த பயிரிடப்படும் நிலத்தில் 30வீதம் சோளத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதேபோல அமெரிக்காவில் இரண்டு பெயர்ஸ் பழங்கள் வாங்கிச் சாப்பிடும் காசைவிடக் குறைவான காசுக்கு ஒரு பர்கர் வாங்கிச் சாப்பிட்டுவிடலாமாம். அவ்வளவு ச்சீப்பா எப்படி கொடுக்கமுடிகிறது?

விடை…சோளம். இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பலமடங்கு அதிகரித்துக் கொள்ள உதவும் இன்க்ரீடியன்ட். ஆடு, மாடு, பன்னி, கோழியிலிருந்து மனுஷன் வரைக்கும் எல்லாருக்கும் சோளம் என்கிற பெயரில் நாமம் பூசிக் கொண்டிருக்கிறார்கள். மாஜரீன், கோக், சிப்ஸ் என்று எல்லா ஐட்டங்களிலும் ஏதோ ஒரு வகையில் சோளத்தைச் சேர்த்து அடிமாட்டு விலையில் நம் உடலுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு? 2000ன் பின் அமெரிக்காவில் பிறக்கும் 3ல் 1 குடிமகனுக்கு டையபிடிஸ் நிச்சயம். ஆனாலும் நல்ல காய்கறி, பழங்கள் வாங்கி சாப்பிட காசில்லாத 80வீத அமெரிக்கர்களுக்கு பீஸா, பர்கர், கோக், சிப்ஸ் தான் தேசிய உணவாம். தீமை என்று தெரிந்தும் சாப்பிட்டாக வேண்டும். வேறு வழியில்லை, காசில்லை.

thumb1


இவ்வளவு அநியாயம் பண்றாங்களே? இதை தட்டிக் கேட்க நாதியில்லையான்னு நீங்க நினைக்கலாம். ஆனா யாராலும் தட்டிக் கேட்க முடியாது. அவர்கள் வைத்தது தான் சட்டம். உதாரணமா ஒரு கோழிப் பண்ணையை எடுத்துக் கொண்டால், ஆரம்பத்தில் அவர்களே எல்லா வசதிகளும் வைத்து பண்ணையை செய்து தருவார்கள். விவசாயிக்கு கொஞ்சம் லாபம் வரும்போது, “அதை புதுப்பி, இந்த டெக்னாலஜி கொண்டு வா”ன்னு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு, அதெல்லாம் செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்கப்படும். இல்லையென்றால் கண்ட்ராக்ட் கட்!!! அதனால் காலம் முழுவதும் விவசாயி, வாங்கும் பணத்திற்காக அவர்கள் காலடியில் கிடக்கவேண்டியது தான். அது மட்டுமல்ல. அமெரிக்க உணவுக் கண்காணிப்பு துறையின் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாருமே பன்னாட்டு நிறுவனங்களின் முன்னாள் தொண்டர்களும் இன்னாள் விசுவாசிகளும் தான். ஆகவே தட்டிக் கேட்பவை சட்டத்தின் காதில் ஏறாது.

“ஒரு சாதாரண அமெரிக்க சுப்பர்மார்க்கெட்டுக்குள் பொதுவாக 47,000 வகையான பொருட்கள் இருக்கின்றனவாம். ஆனால் இவ்வளவு பொருட்களின் உற்பத்தியும், விநியோகமும் 10க்குள் அடங்கக்கூடிய மல்டி-நேஷனல் கம்பெனிகளின் கைகளில் தான் இருக்கின்றன. தெரியுமா?”

“கொலராடோ மாநிலத்தில் நீங்கள் ஒரு உணவுப் பொருளை கேலி செய்து விமர்சிக்க முடியாது. செய்தால் ஜெயில் தான்”

இதைப் போல இன்னும் பல பல விடயங்கள் படத்தில் இருக்கின்றன. நிச்சயம் எடுத்துப் பாருங்கள். அட்லீஸ்ட் ரெண்டு நாளைக்காவது உங்க சாப்பாட்டை நீங்க வேறு ஆங்கிள்ல பாப்பீங்க. முக்கியமாக ஸ்டேடஸ் பார்த்துக் கொண்டு மெக்டோனால்ட்ஸின் கோக்கையும் ஃப்ரெஞ்ச் ப்ரைஸும் தின்றுக் கொண்டு திரியிறவங்க நிச்சயம் படத்தைப் பாருங்க. அட்லீஸ்ட் உங்க எதிர்காலம் இன்னும் கொஞ்சம் ப்ரைட்டாகும். திரும்பவும் சொல்றேன், அவிங்க வேணாம்னு ஒதுக்கித் தள்ளினதைத் தான் இங்க ஏ.ஸி ரூம்ல ப்ரஸ்டீஜ்னு நினைச்சு சாப்பிட்டுட்டு இருக்கீங்க. ஹ்ம்ம் … அப்புறம் உங்க இஷ்டம்.

படம் இறுதியில் சொல்வது இது தான். “முடிந்தவரை உள்ளூர் உற்பத்திகளாக வாங்கப் பாருங்கள், கொஞ்சம் உழவர் சந்தைப் பக்கம் எட்டிப் பாருங்கள். உங்கள் உணவின் பிரயாணப் பாதையை தெரிந்து கொள்ளுங்கள், Organic உணவுகள் பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்

சத்தியமா சொல்றேன். இனிமே இந்த மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.ஸி பக்கமெல்லாம் தலைவச்சிக்கூட படுக்கமாட்டேன்!!!

 

eXistenZ (1999)

220px-EXISTENZ

 

ரோட்ல ஏதாவது நடந்தா ஏன் எல்லாரும் ஓரமா நின்னு வேடிக்கைப் பாக்கிறாங்கண்ணு இப்பத்தாண்டா தெரியுதுன்னு வடிவேலு சொன்னப்போ ஹீ ஹீ…ன்னு சிரிச்சுட்டுப் சேனலை மாத்திட்டு போய்ட்டேன். ஆனா சம்பந்தமேயில்லாத ஒரு விஷயத்தில் தேவையில்லாம சி.ஐ.டி மாதிரி மூக்கை நுழைச்சு “நோஸ்கட்” ஆனதுக்கப்புறம் தான் அந்தாளோட ஃபீலிங் தெரியவந்துச்சு. ஹ்ம்…ஏண்டா இப்படின்னு பேசாம ப்ளாக்க அழிச்சிட்டு திரும்பி ஓடிடலாம்னு பார்த்தா, நம்ம கடை டீயையும் குடிச்சுப் பாக்கிறதுக்காக சில அப்பாவி ஜீவன்கள் நம்ம கடைப்பக்கம் வருது. சொல்லாம கொல்லாம ஓடிட்டா, அப்புறம் நாளைக்கு வரலாறு நம்மளப் பத்தி தப்பா பேசும்ல? அட …. வர்ற கஸ்டமரையும் இப்படி ஔறி வச்சி துரத்துறனே? சரி …. நான் டீயூத்தப் போறேன்.


இந்த வீடியோ கேம் கேடகரி இருக்குங்களே? லேசுல யாரும் கைவைக்காத ரொம்ப டேஞ்சரான ஒரு சப்ஜெக்ட். கதையிலோ, சிஜியிலோ கொஞ்சம் பிசகினாலும் டார்கெட் பண்ணின “சிறு” கூட்டமும் தியேட்டர் பக்கம் திரும்பிப் பார்க்காது. எனக்குத் தெரிந்து வீடியோ-கேம் பேஸ் பண்ணி வந்த படங்கள் (ட்ரொன் தவிர்த்து) பெரிசா சக்ஸஸ் ஆனதா ஞாபகம் இல்ல. ஆனாலும் பாருங்க…டேவிட் க்ரோனன்பெர்க்குன்னு ஒரு ஆளு. வன்முறையாக மட்டுமே படமெடுக்கத் தெரிந்த மகான். அவரோட ஸ்பெஷாலிட்டி ‘உவ்வ்வே’ வரும்படியான காட்சியமைப்பு. இவரோட படங்களில் ஹாரர், வன்முறை என்பன உச்சக்கட்டத்திற்கு சென்று தாண்டவமாடும். 1996ல் வந்த Crashங்கற படத்தைப் பார்த்திருக்கீங்களா? பார்த்தா தெரியும் நான் சொன்னதன் மீனிங். இந்த வீடியோ கேம் சப்ஜெக்ட்டிலும் இந்த ஹாரர் கேடகரியை மிக்ஸ் பண்ணி வ்வே வரவைக்க அவர் எடுத்த பரீட்சார்த்த முயற்சி தான் இந்தப் படம்.


thumb5


கதையா? ஹ்ஹ்ம். (ஹாவ்வ் தூக்கம் வருது. நாளைக்கு மீதியை டைப் பண்றேன்.)

(சில மணி நேரங்களுக்குப் பிறகு … ) எங்க விட்டேன்…? ஆங் … கதை … எதிர்காலத்தில் படமெடுத்திருக்காங்க. எதிர்காலமில்லையா? டெக்னாலஜி ரொம்ப முன்னேறிடுச்சி. விருப்பப்படுற மனுஷங்க அவங்க உடம்பில பயோ-போர்ட் (USB மாதிரி) எனப்படும் ஒரு எலக்ரானிக் ஸ்லாட்டைப் பூட்டிக்கலாம். வீடியோ கேம் விளையாடுறதுன்னா கான்ஸோல்ல இருந்து வரும் கேபிளை அந்த ஸ்லாட்டில் சொருக வேண்டியது தான். வர்ச்சுவல் உலகமான ஒரு கேம் நெட்வெர்க்கிற்குள் கனெக்ட் ஆகிடுவாங்க. இதுல அந்த கிட்னி ஷேப்பான கேம் கன்ஸோல் எல்லாம் செய்யப்பட்டிருப்பது ரத்தத்திலும் சதையிலும். (இயக்குனரின் கற்பனாசக்தி)

இப்படிப்பட்ட காலக்கட்டத்தி்ல் வீடியோ கேம் உலகின் விடிவெள்ளி, அலீக்ரான்னு ஒரு அம்மணி, புதுசா ஒரு வீடியோ கேம் கண்டுபிடிக்கிறாங்க. அதுக்குப் பேரு தான் eXistenZ. இவங்க ஒரு க்ரூப்புடன் சேர்ந்து டெஸ்ட் கேமிங் பண்ணும்போது அங்கிருக்கும் ஒருவன் பல், எலும்பால்??? செய்யப்பட்ட ஒரு பிஸ்டலால் அம்மணியை சுட்டுவிடுகின்றான். ஆனா சரியா சுடாம விட்டதால படமும் முடியாம கன்டினியு ஆகுது. இப்போ செக்யுரிட்டியாக அங்கிருக்கும் ஹீரோவான டெட்  அலீக்ராவையும் இழுத்துக்கொண்டு தப்பித்து ஓடுறான்.

ஆனாப் பாருங்க. அவங்க ராசில கோளாறாகி பிழையான துப்பாக்கி சூட்டால் இவங்களின் கன்ஸோல் உடைந்துவிடுகிறது. பல மில்லியன் செலவில் உருவாக்கிய அந்த கேமின் ஒரே ஒரு காப்பி இருப்பதும் அந்த கன்ஸோலில் தான். இப்போ இதை சரிப்பார்க்க ரெண்டு பேரும் விளையாடப் போறாங்க. விளையாடுவதற்காக அந்த மாய உலகிற்குள் சென்றவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களால் திரும்பி வர முடிந்ததா? அலீக்ராவை கொலை செய்ய முயன்றவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? இதெல்லாம் தெரிஞ்சிக்க விருப்பப்படுறவங்க டவுன்லோட் பண்ணி பார்த்துக்கோங்க.


thumb6

படத்தோட ஹைலைட்டே நம்ம டைரக்டர் க்ரோனன்பெர்க் தான். அவரோட டச் இதில் இல்லாமல் போயிருந்தா பத்தோடு பதினொன்னாத் தான் இந்தப் படம் போயிருக்கும். செக்ஸுவல் உணர்ச்சியை தரக்கூடிய ஒரு பயோ-போர்ட், சதை ரத்தத்தால் செய்யப்பட்ட கேம் கன்ஸோல், இரண்டு தலை ட்ராகன், எலும்புப் பிஸ்டல்னு அவரோட ஸ்பெஷாலிட்டியை வச்சி கலக்கியிருக்கார். அதிலும் கேம் உலகில் ஹீரோவும் ஹீரோயினும்  ஒரு ஹோட்டல்ல சாப்பிடப் போவாங்க. அங்க சர்வர் ஹீரோவின் பர்த்டேக்காக “டுடே ஸ்பெஷல்” கொண்டு வந்து வைப்பான் மேசைல. எனக்கு அரைவாசியோடு அன்னிக்கு லஞ்ச் கட்!!!

படத்தில் நடித்தவங்களில் எனக்குத் தெரிந்தது ஒரே முகம் தான். ஜுட் லோ. ஆர்ட்டிஃபிஷல் இன்டெலிஜன்ஸ் படத்தில் ரோபோவாக வருவாரே? ச்ச்ச் … அத விடுங்க. ஷெர்லாக் ஹோம்ஸில் டாக்டர் வாட்சனாக வருபவாரே, இவரே அவர். ஆனாலும் இதில் நடிப்பெல்லாம் சொல்லிக் கொல்ற அளவுக்கும் இல்லை, கொள்ற அளவுக்கும் இல்லை. ஹீரோயினும் செம பீஸு. ஆனா வேறப்படத்தில் பார்த்ததா ஞாபகம் இல்லை.

விளையாடுபவர்கள் தம்மை ஒரு நெட்வெர்க்கிற்குள் இணைத்துக் கொண்டு ஒரு வர்ச்சுவல் உலகத்திற்கு போவதெல்லாம் மேட்ரிக்ஸ் படத்தை நினைவுபடுத்துகிறது. அதே போல கேமிற்குள்ளும் பல ஆழ்ந்த லெவல்கள் இருப்பது போல காட்டிவிட்டு கடைசியில் இன்செப்ஷன் பார்த்தவங்க மாதிரி நம்மை ஆக்கிவிடுகிறார் க்ரோனன்பெர்க். நோட் பண்ணிக்கோங்க …. இந்தப்படம் மேட்ரிக்ஸ், இன்செப்ஷன் வெளிவர முன்னமே ரிலீஸ் ஆகிடுச்சு. (ஆனால் இரண்டு படத்தின் பேஸிக் ஐடியா இந்தப் படத்தில் இருந்தாலும் நிச்சயமா மேட்ரிக்ஸ், இன்செப்ஷன் இதை விட பல மடங்கு என்டர்டெயினிங்கா இருக்கும்)

படத்தோட போஸ்டரைப் பார்த்தால் ஏதோ B-grade மொக்கைப் படம் போலயிருக்கும். படம் செமப் படம். ஆனா பாக்ஸ் ஆபிஸில் தான் படுதோல்வி. சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர், உவ்வே பட விரும்பிகள் எடுத்துப் பார்க்கலாம்.


ட்ரெயிலர்