நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

American Pie Reunion (2012) - 18+

folder


“அடடே … பசங்கள கடைசியா ஜிம்மின் கல்யாணத்தப்போ பார்த்தது. தாடி, ஹேர்ஸ்டைல்…எம்புட்டு வளந்துட்டானுங்க பயபுள்ளங்க?”...இந்த வசனம் எதுவும் கல்யாண ஃபங்க்ஷன்ல பேசப்பட்டதல்ல. இந்தப் படம் ஆரம்பிக்கும்போது என் மனதில் ஓடிய ஓர் வரி.

அமெரிக்கன் பை” … இந்த சொல்…ஏதாச்சு வெஸ்டர்ன் சாப்பாடுன்னு நெனச்சீங்கன்னா… சுத்த வேஸ்ட்டு சார் நீங்க!!! … நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க. ஆனா உங்க பாடசாலைக் காலத்தில் அல்லது காலேஜ் பீரியடில் உங்களுக்கு இந்த சொல்ல பரிச்சயமானது என்றால் உங்கள் டீனேஜ் காலம் படு குஜாலா இருந்திருக்கும். அந்த “பை” சீன், “வெப்கேம் டெலிகாஸ்ட்” எல்லாம் மறக்க முடியுமா? அது ஏன், சும்மா இருந்த MILF (அம்பி எல்லாம் ஒதுங்கிக்கோங்கோ) என்ற ஒரு சொல்லை வயசுப்பசங்க மனசில் புதைத்து பட்டிதொட்டியெல்லாம் பரவவிட்ட புகழும் இந்தப் படத்திற்கே.

thumb3

ஃப்ளேஷ்பேக் - ஒருமுறை நண்பன் ஒருவன் வீட்டில நண்பர்களோட சேர்ந்து படத்தை ரூமுக்குள் ஓடவிட்டு சத்தமாக சிரித்து சிரித்து பார்த்துக்கொண்டிருக்க, திடீரென அவனின் அம்மா காபியுடன் என்ட்ரியைக் கொடுக்க அவனவன் திடீரென வீடியோவை நிறுத்த முடியாமல், சிரிப்பையும் அடக்க முடியாமல் தடுமாற, அம்மா கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்து டென்ஷனாக … பேட் மெமரீஸ், பட் ஸ்வீட் மெமரீஸ் Smile


முதல்ல ஒரு சின்ன ஹிஸ்ட்ரி லெக்சர்

1999ம் ஆண்டு ஜுலை மாதம், 11 மில்லியன் டாலர் பட்ஜெட்டில், ஜிம் “இன்பகரமாக” டீவியில் போர்ன் பார்ப்பதை, அவன் பெற்றோர் கண்டுபிடிப்பது போல ஆரம்பித்த அமெரிக்கன் பை திரைப்படத்தின், கிட்டத்தட்ட 230 மில்லியனுக்கும் மேற்பட்ட வசூல் மழையால் பிக்-அப் ஆகி … ஜிம்மும் அவனின் நண்பர்களும் காலேஜ் போகும் இரண்டாம் பாகம், ஜிம்மின் திருமணம் நடந்த மூன்றாம் பாகம் என அடுத்தடுத்து படங்களை வெளியிட்டார்கள். அவையும் போட்ட காசை மடங்குகளில் திருப்பித்தர … ஆசை யாரை விட்டது?

2005-2009 காலப்பகுதி … பூனை குட்டி போட்டது போல வரிசையாக வருடத்திற்கு ஒன்று என்ற ரேட்டில் நான்கு படங்கள், ஒரிஜினல் கதையில் இருந்து விலகி டிவிடி ரிலீஸாக வெறும் அடல்ட் ஹியுமரையும் பிக்கினி போட்டுக் கொண்டும் இல்லாமலும் வரும் ஃபிகருங்களையும் நம்பி களமிறங்கின. விமர்சனங்கள் கழுவி கழுவி ஊத்தினாலும் வசூலை மட்டும் ஒன்றும் பண்ணமுடியவில்லை.

thumb1

எனக்கும் மூன்றாவது பாகம் வரை “வாவ்” என்று இருந்த நான் நான்காம் பாகம் பார்த்துவிட்டு “புதுசா ஒன்னும் இல்லியே” என்று மாறி மற்ற பாகங்களைப் பார்த்துவிட்டு சிரித்தாலும், கடைசியில் “அடச்சீ. இந்தப் படமும் புளிக்கும்” ரேஞ்சுக்கு போய்ட்டேன். இந்தக் கொடுமையில 8ம் பாகம் வேற வரப்போகுதாம் என்று கேள்விப்பட்டவுடன் அடுத்த விஜய் படம் ரிலீஸ் ஆகுதாம் என்ற அளவுக்கு அப்செட் ஆகிட்டேன்.

ஆனால் 8வதும் கடைசியும் என்ற சொல்லால் கவரப்பட்டு கடைசியா என்னத் தான் சொல்ல வர்றாங்க பார்ப்போம்னு படத்தைப் பார்க்க எடுத்தேன் (ஏதாச்சு புது வயசு ஃபிகரைப் பார்க்கலாம் என்பதெல்லாம் மறைமுகப் ப்ளான்)…


கதைன்னு பெரிசா ஒன்னும் கஷ்டப்படவில்லை. நண்பர்கள் எல்லாரும் காலேஜ் முடித்து வாழ்க்கையில் செட்டிலாக ஆளுக்கொரு திசையில் பறந்துவிடுகிறார்கள். பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிடுகின்றன … இந்த நேரத்தில் “Class of 1999” என்ற பெயரில் ரீயுனியன் ஒன்று ப்ளான் செய்யப்பட மீண்டும் எல்லாரும் ரியுனியனுக்கு சில நாட்களுக்கு முன்பே சந்தித்துக் கொள்கிறார்கள். பழைய கில்லாடி நண்பர்கள் சேர்ந்தால் என்ன நடக்கும்? படத்தைப் பார்த்துக் கொள்ளுங்க (என்ன செய்ய ப்ளான் பண்ணியிருப்பாங்கன்னு சாம்பிள் ஒன்று பார்க்க வேண்டுமென்றால் கீழே ஹைலைட் பண்ணவும்).

“BROS! Wouldn’t it be TOTES AMAZEBALLS if we went back to our high-school reunion, and all the 18-year-old sluts in town wanted to do us and we couldn’t do them because we were married and stuff so we just beat up their boyfriends and let them blow us while we high-fived each other and listened to Chumbawumba?? SO AWESOME, BRO! Sack tap! Last one to the jetskis sucks dicks!”

thumb3

காலேஜ் டைமில் செக்ஸ் பைத்தியமாக திரிந்த ஜிம், திருமணத்திற்கு பின் குழந்தை பிறந்ததும் ஒரு “மூட்” இல்லாமல் இருப்பது, இன்னும் சின்னப்புள்ளத்தனமாக இருக்கும் ஸ்டிஃப்ளர், ரியுனியனில் தன் முதல் காதலைக் கண்டு மனம் தடுமாறும் கெவின் என திருமணத்தின் பின்னான சிக்கல்களுடன், வழக்கம் போல அடல்ட் காமெடியையும் கலந்து இறுதியில் வாழ்க்கைக்கான புத்திமதிகளுடன் படம் நிறைவுறுகிறது.


பசங்க ஹைஸ்கூல் சீனியர் ப்ரொம்க்கு ஆள்தேடுவதில் இருந்து, காலேஜ் சென்று திருமணம் முடிக்கும்வரை அவர்களின் வாழ்க்கையோடு பயணித்த பலருக்கு இந்தப் படம் கட்டாயம் ஒரு ஸ்வீட் நாஸ்டால்ஜியா ட்ரிப்பாக அமையும்.  மற்றவர்களுக்கு படம் பிடிக்குமோ தெரியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை முதல் மூன்று படங்களிலும் நடந்த பல விடயங்களை தொட்டுப் பார்த்துக் கொண்டே படம் நகர்கிறது. அதுமட்டுமில்லாமல் மூன்று படங்களிலும் மூலையில் நடித்தவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்து இந்தப் படத்தில் நடிக்கவிட்டிருக்காங்க.

thumb2

ஆரம்பத்தில் நண்பர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி, பின் அவர்கள் சந்தித்துக் கொண்டதும் அவர்களின் கொட்டம் ஆரம்பிக்கிறது. ஆனால் எதுவும் ஃப்ரெஷ் ஜோக்ஸ் என்று இல்லை. எல்லா ஜோக்கையும் ஏற்கனவே ஏதோ ஒரு அமெரிக்கன் பை படத்தில் பார்த்துவிட்டது போன்ற ஒரு ஃபீலிங். 30 வயதாகும் இவனுங்க மீண்டும் ஹைஸ்கூல் வாழ்க்கையை சில நாட்களுக்கு வாழ முயற்சிப்பதே பெரும்பாலான படம். (ஏற்கனவே Grown Ups என்ற ஒரு படமும் இந்த கதையுடன் வந்திருக்கிறது). என் ஹியுமர்-சென்ஸில் பிரச்சினையா என்று தெரியவில்லை … படத்தில் சில அருவருப்பான காட்சிகளுக்கும் சிரித்துக் கொண்டிருந்தேன். அதே போல நீண்ட நாளாக இருந்து வந்த ஃபின்-ஸ்டிஃப்ளரின் பிரச்சினையையும் இந்தப் படத்தில் தீர்த்து வைத்துட்டாங்க. Smile


ஆனா ஒன்னு … சத்தியமா இதுக்கு மேல இந்த சீரீஸ இழுக்கணும்னு நினைச்சாங்கன்னா, பார்ப்பது கொஞ்சம் சந்தேகம் தான். பாடசாலை, காலேஜ், திருமணம் என்று எடுக்கக்கூடிய முக்கிய பருவம் எல்லாத்தையும் படமாக்கிட்டாங்க. இனி படம் எடுக்கிறதென்றால், யாராவது ஒருத்தரைக் கொன்று போட்டு அவரின் ஃபியுனரல்ல காமெடி பண்ண முயற்சித்தாத் தான் உண்டு. இந்தப் படத்துக்கே போதும்டா சாமி…ஆளை விடுங்கப்பான்னு வந்துருச்சு. ஆனாலும் இந்தப்படமும் வழக்கம் போல தயாரிப்பாளர் போட்ட 50மில்லியனை திருப்பி 200 மில்லியனாக தந்துவிட்டது. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க மக்காஸ் …. இந்தநேரம் அடுத்த ஸ்கிரிப்ட் எவனாச்சு ஹாலிவுட்ல ரெடி பண்ணிட்டு இருப்பான்.

ட்ரெயிலர்

The Big Lebowski (1998)

folder

நண்பர் ராஜின் ரெகமண்டேஷனில் அண்மையில் ரசித்துப் பார்த்த ஒரு படம் No Country for Old Men. இயக்குனர்கள் பற்றி நீங்கள் ஏற்கனவே நன்கு அறிந்திருப்பீர்கள் (எனக்குத் தான் தெரிந்திருக்கவில்லை) Ethan and Joel Coen, சுருக்கமாக கோயம்புத்தூர் ப்ரதர்ஸ்  … இல்லை இல்லை …. “கோயன் ப்ரதர்ஸ்”. ராஜ் சொல்லியிருந்தது போல ஒரு திரைக்கதையில் சாதாரணமாக பாவிக்கும் அனைத்து ஃபார்முலாக்களையும் உடைத்தெறிந்த ஒரு படம் அது. (இன்னும் எனக்கு அந்த க்ளைமேக்ஸ் விளங்கவில்லை என்பது வேறு விஷயம்). இவர்களுடைய இயக்கத்தில் ஏறக்குறைய அனைத்து படங்களுமே விமர்சன ரீதியில் பெறும் வெற்றி பெற்றவை … உ.ம் Fargo, No Country for Old Men, O Brother, Where Art Thou?.

இன்று நான் இந்தப் பதிவின் மூலம் அறிமுகப்படுத்தும் படமும் காமெடிப் படமாக வெளிவந்து பெரிய ஒரு புரட்சியை உண்டுபண்ணிய ஒரு படம் தான். அது என்ன புரட்சின்னு கீழே சொல்றேன் (இப்பவே சொன்னா டென்ஷன் பில்டப் பண்ணமுடியாதில்லையா? வாசிச்சிட்டு ஓடிட்டீங்கன்னா?). வாங்க இப்ப பதிவுக்குள்ள போகலாம்.thumb14எல்லாத்துக்கும் முதல்ல நம்ம படத்தோட ஹீரோ ஜெஃப்ரி லெபௌஸ்கி பற்றி சொல்லியே ஆகணும். ரஷ்யப் பேரு மாதிரி இருந்தாலும் இவரு எப்பவும் தன்னை த டூட் (தாதா???) அப்படீன்னு தான் சொல்லிக் கொள்வாரு. ஆனால் இவரின் தோற்றத்தைப் பார்த்தால் …. தாடி, விரிந்த பரட்டைத் தலை, செருப்பு, ஷார்ட்ஸ், ரோப் (robe) அப்படி ஃபாரீன் பிச்சைக்காரன் ரேஞ்சுல தெரிவாரு. தெரியிறது என்ன … கிட்டத்தட்ட பிச்சைக்காரன் தான். பின்ன … ஒரு எழுபது சத பால் பேக்குக்கு கையில காசில்லாம செக் எழுதுறவன் பில் கேட்ஸாவா இருப்பான்? போதாக்குறைக்கு பகலில் வீட்டுல நேரத்தை வெட்டியா ஓட்டிக் கொண்டு வைட் ரஷ்யன் (இது செய்வது எப்படின்னு என் ஃபேஸ்புக்ல ஒரு லிங்க் போட்டிருந்தேன்) குடிச்சிட்டு நைட்டுல அப்பப்போ பௌலிங் விளையாடச் செல்லும் கேஸ். த டூட்டைப் பொறுத்தவரை சமூகம் என்பது பௌலிங் அலிக்கு அவனுடன் விளையாட வரும் அவனது இரு நண்பர்கள் வோல்டர் மற்றும் டானி.

thumb12ஒரு நாள் வீட்டிற்கு வரும் டூட் வீட்டைத் திறந்ததும் இரு ரவுடிகளால் தாக்கப்படுகிறான். அவனின் முன்னாள்-போர்ன்-ஸ்டார் மனைவி பன்னி (panni இல்ல bunny) ஊர் முழுவதும் கடன் வாங்கியிருப்பதாகவும், கட்டாவிட்டால் கதை வேறுமாதிரி இருக்கும் எனவும் மிரட்டுகிறார்கள். வெயிட் வெயிட் … இப்படி ஒரு வெட்டி வெங்காயத்திற்கு முதல்ல பொண்டாட்டின்னு ஒன்னு இருக்குமா? அப்போ சம்திங் ராங். இதை டூட்டும் ரவுடிகளுக்கு சொல்ல, அவர்களுக்கும் அவர்கள் தேடி வந்த பணக்காரன் இவன் இல்லைன்னு தெரியவருது. இந்த மிஸ் அன்டர்ஸ்டேன்டிங் ஏன் வந்தது? காரணம் அந்த இருவருக்கும் பொதுவான லெபௌஸ்கி என்ற பெயர் தான். ஆனாலும் ஒரு ரவுடி ஜெஃப்ரியின் ரூமின் சென்டர் ஒவ் அட்ராக்ஷனான கார்பெட்டில் உச்சா போய்விட, இதற்கு காரணம் பணக்கார லெபௌஸ்கி தான் என கோபத்துடன் நஷ்டஈடு கேட்டுச் செல்கிறான் டூட்.

அதன் பின் நடக்கும் சம்பவங்களும் முடிவுகளும் உங்கள் கையில் ஒப்படைத்துவிடுகிறேன். கட்டாயம் படத்தை எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.thumb15மூன்று முறை பார்த்துவிட்டேன் இந்தப் படத்தை, கடந்த இரண்டு வாரங்களுக்குள்.  இந்தப் படம் பற்றிச் சொல்வதானால், திருடு போன பணத்தைச் சுற்றி நடக்கும் மெயின் கதை, அதனடியில் இருந்து வரும் ஏகப்பட்ட குழப்பங்கள், கிளைக் கதைகள் என்று கிட்டத்தட்ட ஒரு கோழி கிண்டிய குப்பை போன்ற கதை. அதனால் தான் இன்ட்ரோவுடன் கதையை நிறுத்திவிட்டேன்.ஆனால் எல்லாம் படம் செல்லச் செல்ல வெளிச்சத்திற்கு வரும். இந்த காரணத்தினாலோ என்னவோ படம் வெளிவந்த நேரத்தில் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி, படம் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆனால் காலத்தில் ஓட்டத்தில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இந்தப் படத்திற்கென்றே பல ரசிகர் மன்றங்கள் தோன்றும் அளவிற்கு பிரபல்யமடைந்து ஒரு கல்ட் க்ளாசிக்காக மாறிவிட்டது. வருஷாவருஷம் பல்வேறு இடங்களில் The Lebowski Fest என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாடுவது வழக்கம்.

இது எல்லாவற்றிற்கும் மேல் ஒருபடி மேலே போய் Dudeism என்ற பெயரில் ஒரு புதிய மதத்தையே டூட்டின் கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு வெப்சைட்டும் ஆரம்பித்து அதில் 150,000க்கும் மேல் ஃபாதர்ஸும் சேர்த்துவிட்டார்கள். விருப்பம்னா நீங்க கூட சேரலாம். கீழே இருக்கும் படம் கூட அவர்களின் கூத்தின் ஒரு சாம்பிள் தான். (சினிமாவில் இது ஒரு புரட்சி தானே?)ஒரு த்ரில்லரையும் காமெடியையும் கலந்துகட்டி ஒரு அற்புதமான திரைக்கதையை பின்னும் திறமை எப்படித் தான் கோயன் ப்ரதர்ஸின் மண்டைக்குள் உதித்ததோ தெரியவில்லை. இவங்க ரெண்டு பேரையும் ஹாலிவுட்டின் புரட்சி மன்னர்கள் என்று சொல்லலாம்.  இது வரைக்கும் இவங்க ஒரே மாதிரி அடுத்தடுத்து இரண்டு படங்களை எடுத்ததில்லை. மனசுல என்ன தோணுதோ, அதை அவங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு வித்தியாசமான ட்ராக்கில் கதையைப் பின்னி வெற்றியடைய வைப்பதில் விற்பன்னர்கள்.

thumb6த டூட் ஆக வரும் ஜெஃப் ப்ரிட்ஜஸ், திறமையான நடிகர். அவரோட கேரியரில் பெஸ்ட் இந்தப் படம் தான் என்று அவரும், பலரும் சொன்னாலும் நடிக்க வந்து நாற்பது வருடங்களில் ஆறு முறை நாமினேட் செய்யப்பட்டு … கடைசியில் 2009ல் தான் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.

ஆக்சன், த்ரில்லர் ரசிகர்கள் நிறையப் பேருக்கு இந்த மாதிரி படங்கள் பிடிப்பதற்கான சான்ஸ் குறைவு. ஆனாலும் ஒரு முறை படத்தை எடுத்துப் ஒரு ட்ரை ஒன்னு கொடுத்துப் பாருங்களேன்.


என் ஸ்கோர் – 92
/100படத்தின் ட்ரெயிலர்


The Dude Abides !!!

21 Jump Street [2012]

folder

ப்ளாக் ஆரம்பிச்ச டிசம்பர் மாசம் 9 பதிவு. ஜனவரில 8. அப்புறம் 7, 5ன்னு படிப்படியா குறைந்து இப்ப ஜுன் மாசத்திற்கு 1 பதிவு. என்ன நடக்குது இங்க? ஆறு மாசத்துக்குள்ளாவா டயர்ட் ஆகிட்டோம்? (கைவசம் சரக்கில்லைங்கிறத இப்படித் தான் சமாளிக்கணும்) எடுத்துப் பார்க்கிற நல்ல  படம் எல்லாம் அனேகமா எங்காவது விமர்சனம் செஞ்சிருப்பதால், நாம எதுக்கு தேவையில்லாம வியர்வை சிந்தனும்னு icheckmoviesல செக் பண்ணிட்டு கீழே அண்மையில் பார்த்த படங்கள் டேபில் அந்த விமர்சனத்திற்கு லிங்க் கொடுத்துவிட்டு ஒதுங்கிடுவது வழக்கமாயிடுச்சு. இந்த ரேஞ்சுல போனா வௌங்கிடும். சரி 40வது பதிவுக்குள்ள போவோம்.


thumb11987 - 1991 இதே பெயரில் ஓடிய ஒரு பாப்புலர் தொலைக்காட்சி நாடகமாம். சின்னப்புள்ள மாதிரி இருக்கிற ஒரு போலீஸ் பாடசாலை, காலேஜ்களில்  சட்டவிரோதச் செயல்களைச் செய்யும் கும்பல்களை பாடசாலை மாணவர் போல சேர்ந்து கண்டுபிடிக்கும் கதை. இந்த நாடகத்திற்கு இப்போது அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பங்கு இருக்கிறது. அது வேறு யாரும் அல்ல … நம்ம ஜானி டெப் தான். இந்த நாடகத்தில் நடித்து அவருக்கு கிடைத்த Teen Idol பட்டம் தான் பின்னர், நிறையப் பேரி்ன் கண்கள் அவர் மேல் திரும்ப காரணமாக அமைந்தது. Edward Scissorhands படத்தின் ஸ்கிரிப்ட் இந்த நாடகம் நடித்திருந்த போது தான் கிடைத்ததாம். (ஜானி கண்கலங்கின மேட்டர் எல்லாம் டிம்மும் டெப்பும் தொடரில் படித்துக் கொள்ளவும்)

இந்தப் படமும் ரீமேக் என்று தெரிந்ததும் … சரி ஹாலிவுட்காரனுங்க காசை வீணாக்க ஐடியா பண்ணிட்டாங்கன்னு நினைச்சு பெரிசா எதுவும் எதிர்ப்பார்க்கவும் இல்லை. போதாக்குறைக்கு ட்ரெயிலர் வேறு “சீ” ரகத்திற்கு இருக்க ரைட்டு … படம் அம்பேல் தான்னு கம்ஃபர்ம் பண்ணியாச்சு. ஆனாலும் சில நேரங்களில் படு மொக்கையான ஒரு ட்ரெயிலரைப் பார்த்துவிட்டும், ஏதோ டவுன்லோட் பண்ணிய பாவத்துக்காக பார்த்து தொலைக்கிற படங்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்துவிடும் இல்லையா? 21 Jump Street அந்த வகையைச் சேர்ந்தது.


thumb2ஷ்மிட்டும் ஜென்கோவும் இரு துருவங்கள். ஷ்மிட் கொஞ்சம் மூளையைப் பாவிப்பவன், ஆனால் ஃபிஸிகல் என்று வரும்போது கொஞ்சம் தடுமாறும் ஒரு குண்டுப் பையன். ஜென்கோ இதற்கு நேர்மாறான கேஸ். பலசாலி … ஆனால் புத்திசாலித்தன்மை குறைவு. சுருக்கமா சொன்னா ஷ்மிட் ஒரு நெர்ட் (Nerd), ஜென்கோ ஒரு ஜொக்கி (Jockey). சாதாரணமா எல்லாப் ஹாலிவுட் படங்களிலும் வருவது போல இதிலும் ஹைஸ்கூல் காலத்தில் பிரச்சனைப்படுகிறார்கள்.

மீண்டும் சந்திக்கிறார்கள் … போலீஸ் அகெடமியில். ஆனால் இங்கு இருவருக்கும் ஒரு விஷயத்தில் நன்றாக ஒத்துப்போகிறது …. சொதப்புவது!! ஜென்கோ பரீட்சைகளிலும், ஷ்மிட் உடற்பயிற்சிகளிலும் சொதப்ப, இந்த சொதப்பல் இவர்கள் இருவருக்கிடையில் ஒரு நட்புப் பாலத்தை உருவாக்குகிறது. ஒரு வழியாக ஒருவருக்கொருவர் உதவி போலீஸும் ஆகிடறாங்க. சரி … இனி நம்ம ஆக்சன் கிங் அர்ஜுன் மாதிரி அவரைத் தவிர படத்துல இருக்கிற மற்ற எல்லாரையும் சுட்டுக் கொல்லப் போறாங்கண்ணு பார்த்தா …….

thumb5ரெண்டு பேரும் சைக்கிள்ஸ்ல ஒரு பார்க்ல ரவுண்ட்ஸ் போறாங்க. அவங்க டியுட்டி … மக்கள் அங்கிருக்கும் குளம் போன்ற பப்ளிக் ப்ளேஸ்ல ஒதுங்கி நாறடிக்காமல் பார்த்துக் கொள்வது. தற்செயலாக ஒரு போதைப் பொருள் விற்கும் ஒரு ரௌடிக் கும்பலைக் காணும் இவங்க ரெண்டு பேரும் அவர்களை கைது செய்யப் போக, அதுவும் சொதப்ப, எல்லாரும் தப்பிக்க, ஜென்கோ ஒருத்தனை மட்டும் எப்படியோ பிடித்துவிடுகிறான். சந்தோஷத்துடன் ஸ்டேசன் வரும் இவங்களுக்கு இன்ஸ்பெக்டர் டோஸ் மேல டோஸ். ஏன்னா கைது செய்யும் போது இங்கிலீஸ் படங்கள்ல எல்லாம் ஒரு வசனம் சொல்லுவாங்க தெரியும் தானே? பொதுவா ஒரு போலீஸ் கைது செய்யும் போது You have the right to remain silent …. blah blah blah ன்னு சில வசனங்களை சொல்லணும். இவங்க அதை சொல்ல மறந்துட்டாங்க.

உடனே தண்டனை … அனுப்பப்படும் டிவிஷனின் பெயர் 21 Jump Street. இவங்களுக்கு கேப்டன் டிக்சன் (இது பெயர் தான். ஒரே வசனம் தான்). அவர் கொடுக்கும் ப்ராஜெக்ட் … ஒரு ஹைஸ்கூலில் நடக்கும் ஒரு மாணவனின் மரணத்திற்கு காரணமான போதை வியாபாரத்தின் பின் இருக்கும் தலைகளைக் கண்டுபிடிப்பது. அதைக் கண்டுபிடிக்க ஸ்கூல் பசங்க போலிருக்கும் ( ???? ) இந்த இருவரையும் அங்கு அனுப்புகிறார்.

கதை வழக்கம் போலத் தானே போகுது அப்படின்னு நினைக்கிறப்போ … ஜென்கோ தவறுதலாக தமது விபரங்கள் அடங்கிய ஃபைலை மாற்றி வைத்துவிட அதன் பின் நடக்கும் கூத்துக்கள் சிரிப்பு மழை. இடையில் வரும் சின்னக் காதல், பிரிவு என சில மசாலா கலந்து இறுதியில் எப்படி அந்த போதைப் பொருள் கும்பலைக் கண்டுபிடித்தார்கள் என்பது மீதிப்படம்.thumb4எனக்கு படத்தின் மிகப் பெரிய ஆச்சரியம் ஜென்கோவாக வரும் சானிங் டேட்டம் தான். Step Upவில் பார்த்த துள்ளலாட்ட டைலரா, G.I.Joeவில் பார்த்த ஆக்சன் ஹீரோவா, The Vowவில் பார்த்த charm பையனா இந்த காமெடிப்பீஸ் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு காமெடியில் விளையாடி விட்டார். அடுத்த படமும் காமெடியில் வந்தால் நல்லாயிருக்குமே எனத் தோன்ற வைத்துவிட்டார். ஜோனா ஹில்லுக்கு ஏற்கனவே அரைச்ச மாவையே மீண்டும் அரைக்கும் வேடம், அதாவது ஹைஸ்கூல் சூழலில் பழகிக் கொள்ள முயற்சிக்கும் வேடம். Superbad படத்தில் பார்த்தது போன்ற அதே விளையாட்டுத்தனமான பையனாக, டைமிங் வசனங்களால் காமெடி பண்ணும் வேலை. படத்தின் மற்ற கரெக்டர்கள் பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. ஏதோ … நடிச்சிருக்காங்க.

ஆஆஆ … சொல்ல மறந்துட்டேன். படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் ஒரு பிரபலம் வருகிறார். (யாருன்னு இப்பவே கெஸ் பண்ணியிருப்பீங்க) ஆனா படத்துல அவரு எப்ப வருவார், எதுக்கு வருவார்னு உங்களால கண்டுபிடிக்க முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவார்.

படத்தின் முக்கிய சக்ஸஸ், நாம ஒன்றை எதிர்பார்க்க அதற்கு மறுபக்கம் ப்ளேட்டை மாற்றிவிடுவது தான். அதனால் இன்னும் சுவாரஸ்யமாக படத்துடன் ஒன்ற முடிகிறது. படத்தில் சில க்ளீஷே காட்சிகள், மரண மொக்கைகள் இருந்தாலும், ஒன்றே முக்கால் மணி நேரம் படத்தை பார்த்து முடித்தபின் தெரியும் குறைகள் ஒன்றும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இருக்காது. பார்க்கும் நேரம் முழுவதும் காமெடி, கார் சேஸிங், துப்பாக்கிச்சூடு என வேகமாக நகர்வதால் ஹாஹாவ்வ்வ்வ் என கொட்டாவியும் எல்லாம் போகாது.

படம் பார்க்கப் போறீங்கன்னா கடைசியா ஒண்ணு சொல்றேன். காலேஜ் தீம் கதைகள்,  Dick Jokes, நல்ல காமெடிப் படங்கள், ஜோனா ஹில்லின் நடிப்பு இது எல்லாம் பிடிக்கும்னா பாருங்க. இல்லண்ணா இங்கேயே அப்பீட்டாகிக்கோங்க. அடுத்த பதிவில் சந்திக்கலாம்.


என் ஸ்கோர் – 68/100படத்தின் ட்ரெயிலர்

ட்ரெயிலர் மொக்கையா இருக்கா ???