நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Going Postal (2010)

Folder

டெரி ப்ரெட்சட் (Terry Prachett) யார்னு தெரியுமா? அட …. எனக்கும் யார்னு தெரியாமத் தான் இருந்துச்சு. ஊர் சுத்தினா வீட்டுல திட்டுறாங்களேன்னு அப்படியே கொஞ்சம் பதிவுலகத்தை சுத்தும்போது நம்ம “வேலிகள் தொலைத்த படலை” ஓனர் ஜே.கே ஒரு பதிவில் இவரின் மோர்ட் எனும் புத்தகம் பற்றிச் சொல்லியிருந்தார். அத அப்படியே விடாம கொஞ்சம் ஆராய்ந்து பார்த்ததன் விளைவு தான் இன்றைய பதிவு. அவரு சொன்னதென்னமோ வேறொரு புத்தகம் பற்றித் தான். நமக்கும் புக்ஸ் வாசிக்க இன்ட்ரெஸ்ட் இருந்தாலும் டைம் இல்லியே. அதான் பேசாம படத்தப் பார்த்திருவோம்னு எடுத்துப் பார்த்திட்டேன். திட்டுறவுங்க அவரு சைட்டுல போய் என்ன வேணா பண்ணிக்குங்க.



முதல்ல ப்ரெட்சட்டைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். டிஸ்க்வேர்ல்ட் (Discworld) என்றொரு தொடர். மொத்தம் 39 நாவல்கள். இக்கதைகள் எல்லாம் இடம்பெறுவது ஒரு ராட்சச ஆமையின் மேல் நிற்கும் நான்கு யானைகளின் முதுகில் பேலண்ஸ் பண்ணி இருக்கும் ஒரு உலகில்.  டோல்கின், ஷேக்ஸ்பியர் என்று பல பிரபலங்களின் எழுத்துக்களை காமெடிக்காகவும், இன்ஸ்பிரேஷனாகவும் எடுத்து எழுதிய இந்த சீரீஸ் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 55மில்லியன் பிரதிகளை விற்றுவிட்டதாம்.

thumb1

                     
இதுவரைக்கும் இந்த நாவல்களில் மூன்று கதைகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. Colors of Magic, Hogfather(ரெண்டும் இருக்கு. இன்னும் பார்க்கல) அப்பறம் இந்தப்படம். டெக்னிகலி ஸ்பீக்கிங் … இது ஒரு படமே அல்ல (அடப் போய்யா … நாம கிளம்புறோம்). இருங்க … இது யு.கே.வின் Sky1 தொலைக்காட்சியில் இரு பாகமாக வெளியிடப்பட்ட ஒரு … ஒரு … மினித்தொடர். ஐயய்யே … படத்தப் பற்றி பார்க்கனும்னு வந்துட்டு வேற எங்கேயோ கதை டைவர்ட் ஆகுதே. சரி … நாம விமர்சனத்துக்குள்ள போவோம்.



Going Postal-fanartகொஞ்சம் ஷு பொலிஷையும், ஒரு வயதான சொறிப்பிடித்த குதிரையையும் விட்டுவிட்டுச் இறந்து போகும் பெற்றோர்கள். ஒரு ரூபாவுடன் சிவாஜி படத்தில் ரஜினி ஆரம்பிப்பது போல பொலிஷையும் மனத்தைரியத்தையும் வைத்துக்கொண்டு சிறு ஏமாற்று வேலைகளை செய்ய ஆரம்பிப்பவன் தான் இந்தப் பதிவின் ஹீரோ மொயிஸ்ட் வொன் லட்விக். முதலில் சொறிக் குதிரைக்கு கறுப்பு பொலிஷ் பூசி, ஒரு தரமான குதிரையாக காட்டி விற்று பிழைப்பை நடத்தும் லட்விக் பின்னர் கொஞ்ச கொஞ்சமாக புத்தகத்தில் இருக்கும் அனைத்துவிதமான மோசடிகளையும் செய்ய ஆரம்பிக்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான். ஆனாப் பாருங்க … ஒரு நாள் வசமா காவலாளிகளிடம் மாட்டிக் கொண்டான். நிரூபிக்கக்கூடிய குற்றங்கள் எக்கச்சக்கமாக இருக்க, யு ஆர் டு பி எக்ஸிக்யுட்டட் எனக் கோர்ட் உத்தரவிடுகிறது. தூக்கிலும் போட்டுவிடுகிறார்கள்.

சவப்பெட்டிக்குள் திடீரென முழித்துப் பார்க்கும் வொன், தான் ஒரு அறையில் இன்னொரு மனிதருடன் இருப்பதை உணர்கிறான். அவர் லோர்ட் வெட்டினாரி (கெட்ட வார்த்தை இல்லைங்க). அவர் வொன்னுக்கு இரண்டு சாய்ஸ் அளிக்கிறார். ஒன்று மூடியிருக்கும் நகரத்தின் போஸ்ட் ஆபிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துவது, இல்லை நீண்ட கொடிய மரணம். உயிர் வாழ விரும்புபவனுக்கு தான் இதில் சாய்ஸே இல்லையே. வேண்டாவெறுப்பாக போஸ்ட் ஆபிஸ் வேலையை ஏற்றுக் கொள்கிறான் ... பின்னர் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில். அவனுக்கு பரோல் ஆபிசராக ஒரு களியால் செய்த ஒரு உருவம் (Golem). இந்த புதிய போஸ்ட்மாஸ்டர் பதவி பிடிக்காத ஒரே ஜென்மம் வொன் மட்டும் அல்ல. க்ளாக்ஸ் எனப்படும் ஒரு புதிய தகவல் தொடர்பு வலையமைப்பு ஒன்றை நடத்திவரும் ரீச்சர் கில்ட்டும் தான்.

going-postalதபாலகத்திற்கு சென்று பார்க்கும் வொன்னை வரவேற்பது, அவனின் இரண்டு உதவியாளர்கள் மற்றும் கட்டிடம் முழுவதும் வருடக்கணக்கில் அனுப்பப்படாமல் நிறைந்திருக்கும் கோடிக்கணக்கான தபால்கள். காரணம், இதற்கு முன் இருந்த போஸ்ட்மாஸ்டர்கள் மர்மமாக கொலை செய்யப்படுவது தான்.


அங்கிருந்து தப்பித்துச் செல்லும் வொன்னை விடாமல் துரத்தி வந்து மீண்டும் தபால் நிலைய வேலையில் தக்கவைத்துக் கொள்வதே கொலம்மின் வேலை. ஆகவே அதனிடம் இருந்து தப்பிக்கும் முறையைக் கேட்க கொலம்களைத் தயாரிக்கும் இடத்திற்குச் செல்கிறான் வொன். அங்கு அவனுக்கு அடோரா பெல் எனப்படும் பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. அவளுடன் மெல்லக் காதலில் விழுகிறான் வொன்.

இரவு வேளைகளில் தனியாக இருக்கும் வொன்னிற்கு அங்கு குவிந்திருக்கும் தபால்கள் அவன் முன்பு மோசடிகளில் ஏமாற்றியபின் ஏமாற்றப்பட்டவர்களினதும், அவர்களது குடும்பத்தினர் சந்தித்த சிக்கல்களையும் எடுத்துக் காட்டுகின்றன. அதில் அடோராவின் குடும்பமும் அடங்கும். உண்மையில் அடோராவின் தந்தைக்கு சொந்தமானதே க்ளாக்ஸ் சிஸ்டம். வொன்னின் மோசடியில் சிக்கி பண நெருக்கடி காரணமாக மரணத்தைச் சந்திக்கும் அவருக்கு பின்னர் ரீச்சர் கில்ட் தலைமைப் பொறுப்பை ஏற்கிறான். இது தெரியவந்து அடோராவிடம் வொன் உண்மையைச் சொல்லும் கட்டத்தில் தபால் நிலையத்திற்கு யாரோ தீ வைத்துவிட, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், உள்ளே சிக்கியிருக்கும் உதவியாளனைக் காப்பாற்ற உள்ளே செல்கிறான் வொன். உள்ளே பான்ஷீ எனப்படும் ஒரு வௌவால் மனிதனை சந்திக்கும் போது, அவனுக்கு ரீச்சர் கில்ட் பற்றிய உண்மைகள் தெரியவருகிறது. அதாவது போட்டி அதிகமாகிவிடும் என்பதால் பான்ஷீயை விட்டு பழைய போஸ்ட் மாஸ்டர்களைக் கொல்வது ரீச்சர் தான்.

going_postal_movie_sky1_2தபால் நிலையம் எரிந்துவிட, மக்கள் அனைவரும் க்ளாக்ஸ் சிஸ்டத்தை நாடுகிறார்கள். ஆனால் வொன் தான் மோசடிகளில் சம்பாதித்து ஒழித்து வைத்த பணத்தை கடவுள் கனவில் காட்டியது போல எடுத்து மீண்டும் போஸ்ட் ஆபிஸை கட்டியெழுப்புகிறான். அத்தோடு ஸ்டாம்ப்ஸ் சிஸ்டத்தையும் கண்டுபிடித்து அவற்றின் மூலம் தபால்மூல வருமானத்தையும் அதிகரிக்கிறான். அதே சமயம் அடோராவுக்கு பழைய போஸ்ட் மாஸ்டர்கள் , மற்றும் அவளின் அண்ணனின் மரணத்திற்கு காரணம் ரீச்சர் என்ற ஆதாரங்கள் கிடைக்க அவள் க்ளாக்ஸ் நெட்வொர்க்கை உடைக்க ஹேக்கர்ஸ் க்ரூப் ஒன்றுடன் முயற்சிக்கிறாள்.

அது பலனளிக்காத கட்டத்தில் இப்பொழுது யாருடைய சேவை சிறந்தது என்று மக்களுக்கு எடுத்துக் காட்ட கில்ட்டுக்கு போட்டி ஒன்றிற்கு சவால் விடுகிறான் வொன். அதன் பின் என்ன நடந்தது என்பதை இந்த படு சுவாரஸ்யமான இரண்டு பாக தொடரை டவுன்லோட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். (ரொம்ப குழப்பிட்டேனா?)



டெரி ப்ரெட்சட்டின் கதைகள் பற்றி ஒன்றுமே தெரியாத காரணத்தினால் இதைப் பற்றி பெரிதாக ஆராயத் தேவை இல்லை. இந்தப்படம் பார்க்க புத்தகங்களை வாசித்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் ஒரு புத்தகத்தில் இருப்பதை இரண்டு எபிசோடுகளுக்குள் ரொம்ப மெதுவாகவும் இல்லாமல், வேகமாகவும் நகர்த்தாமல் திரைக்கதை அமைந்திருப்பது ஒரு ப்ளஸ். என்னைப் போல முதல் முறை பார்ப்பவர்களுக்கும் கதை சுவாரஸ்யமாகவே இருக்கும்.

ஒன்றரை மணித்தியாலப்படி இரண்டு எபிசோட். மேத்ஸ்ல வீக்கானவங்களுக்கு சொல்றதுன்னா மூணு மணி நேரம் (டேய் டேய்). பெரிய திரைப்பட ரேஞ்சுக்கு எல்லாம் பிரமாண்டம் இல்லாவிட்டாலும் ஒரு தொலைக்காட்சி சீரீஸிற்கு என்ன தேவையோ, அந்த அளவிற்கு காட்டியிருக்காங்க. நகரத்திற்கான செட் எல்லாம் பிரமாதம். ஆனால் படத்தின் பெரும்பகுதி கொஞ்சம் இருட்டில் நடப்பது போல டிம் லைட்டிங்கில் எடுத்தது போல தெரிந்தது. அவுட்-டோர் ஷாட்ஸில் இயற்கை வெளிச்சத்தின் பங்களிப்பு இதில் நன்றாக தெரியும்.

ஆனால் செட், சினிமேட்டோகிராபி என்பதை விட படத்தை தூக்கி நிறுத்துவது நடிப்புத் தான். நடிக்கிறவங்க எல்லாருமே ப்ரிட்டன் தொலைக்காட்சியில் வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் என்பதால் மட்டமான நடிப்பு என்று சொல்வதற்கில்லை. நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தெரிவு தான்.

புத்தகம், கதை என்று ஆராயாமல் ஒரு சாதாரண என்டர்டெயினர் ஒன்றைப் பார்ப்பது போல எடுத்துக்கொள்ளுங்கள்.


மார்க்கு – 78/100


ட்ரெயிலர்

Chronicle [2012]

folder

நிச்சயமாக என்னிக்காவது நீங்க ஒரு சூப்பர்ஹீரோ படம் பார்த்திருந்தா, நமக்கும் ஏதாச்சு ஒரு சூப்பர்பவர் இருந்தா எப்படி இருந்திருக்கும்ன்னு கட்டாயம் யோசிச்சுப் பார்த்திருப்பீங்க (நான் வேண்டுவதெல்லாம் இன்விஸிப்ளிட்டி பவர் மட்டுமே). ஆனால் சூப்பர்மேன் படத்தில் சொல்வது போல “With Great Power comes Great Responsibility”. பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ படம்னா, ஏதோ ஒரு வகையில் சக்தி கிடைத்ததும் அதை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தி வரும் வில்லனை எப்படி ஹீரோ தோற்கடிப்பார்ங்கறதே ஹாலிவுட்டின் இவ்வளவு நாள் பார்முலா. அதே குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் என்னாகும்ன்னு வேறு ஒரு ஆங்கிள்ல ஒரு இயக்குனர் யோசித்துப் பார்த்ததன் விளைவே Chronicle.

thumb5


thumb4கதை … அப்படின்னு எடுத்துப் பார்த்தோம்னா ரொம்ப சிம்பிள்.  சியாட்டில் நகரில் வசிக்கும் மூன்று ஹைஸ்கூல் நண்பர்கள் ஆன்ட்ரூ, மேட், ஸ்டீவ். ஆன்ட்ரூ தன் வாழ்க்கையைப் படம் பிடிக்க ஒரு கேமரா வாங்குவதுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒருநாள் ஒரு பார்ட்டிற்கு செல்லும்போது கேமராவையும் எடுத்துச் செல்லும் ஆன்ட்ரூவும், மற்ற இருவரும் ஒரு சிறிய குகை போன்ற குழியைக் கண்டு அதற்குள் இருப்பதைக் பார்க்கப் போகிறார்கள். அங்கு அக்குகையில் இருக்கும் ஒரு வித்தியாசமான ஒரு வேற்றுக்கிரகப் பொருள் ஒன்றைக் சந்திக்கும்  அவர்கள், நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்குள் புதிய சக்திகள் உருவாவதைக் கண்டுபிடிக்கிறார்கள். மேலும் அவர்களின் மூக்கில் இருந்தும் ரத்தம் வடியத் தொடங்குகிறது.

முதலில் சிறிய பில்டிங் ப்ளாக்ஸை அசைத்துப் பார்க்கும் அவர்கள் சீக்கிரமே பெரிய கார்களை அசைப்பதிலிருந்து பறப்பது வரை முன்னேறுகிறார்கள். என்ன இருந்தாலும் ஸ்கூல் பசங்க தானே. பவர்ஸ் கிடைத்ததும் மற்றவர்களைப் பயமுறுத்துவது, கடைகளில் கலாட்டா செய்வது என செல்லும் கதை ஒரு கட்டத்தில் ஆன்ட்ரூ பவரை அடக்கமுடியாமல் ஒரு வாகனத்தில் பாவித்துவிட ஒரு மனிதன் காயப்படுகிறான். அப்பொழுது “இன்னொரு மனிதன் பாதிக்கப்படும் படி சக்தியைப் பயன்படுத்துவதில்லை” என மூவரும் தீர்மானம் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனாலும் வீட்டில், பாடசாலையில் சந்திக்கும் பிரச்சினைகளால் உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படும் ஆன்ட்ரூவால் கண்ட்ரோலாக இருக்க முடியாமல் போக ஏற்படும் மீதிப் பிரச்சினைகளே விறுவிறுப்பான மீதிப் படம்.


thumb7நான் இன்னும் அவெஞ்சர்ஸ் படம் பார்க்கவில்லை. ஆனால் இந்த வருடம் (அண்மையில்) பார்த்த சூப்பரான சூப்பர்ஹீரோ படம்னா இதைச் சொல்லலாம். அதுவும் கடைசியாகப் பார்த்த Green Lantern படத்தோடு ஒப்பிடும்போது இது எவ்வளவோ பரவாயில்லைன்னே தோணுது.

வேற கோணத்தில் யோசித்தவரு (இயக்குனர்) பேரு ஜோஷ் ட்ராங்க். இது தான் இவரோட முதல் ஹாலிவுட் படமாம். நம்ப முடியவில்லை. ரொம்ப கதையை இழுக்காமல் வெறும் 83 நிமிடங்களுக்குள் டைட்டாக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். அது இன்னுமொரு ப்ளஸ் பாயிண்ட்.



thumb6படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்பைடர்-மேன், பேட்மேன் போல பெரிய லெவல்ல யோசிக்காமல் பாடசாலை செல்லும் டீனேஜர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், கிண்டல்கள், பெண்கள், பாப்புலராக முயற்சிப்பது என நம்பக்கூடியவாறு படத்தை இயக்கியிருக்கிறார். அதனால் படத்தோடு இன்னும் ஒன்றமுடிகிறது.

ஆனால் முக்கிய பாத்திரங்களான மூவரும் இதுவரை திரையில் கண்டிராத புதுமுகங்கள். ஆனால் தங்களுக்கு கொடுக்கப்ட்ட பாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்கள். அதுவும் ஆன்ட்ரூவாக நடிக்கும் டேன் டேஹானின் நடிப்பு கச்சிதம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினைகளின் போதும், தன் சக்திகளை கட்டுப்படுத்தமுடியாமல் திணறும் மனநிலை கொண்டவானாக மாறும் போதும் காட்டும் நடிப்பு சூப்பர்.

விஷுவல் எஃபெக்ட்ஸும் படத்தின் இன்னொரு பலம். பல இடங்களில் படத்தின் ஹீரோக்கள் சக்திகளைப் பாவிக்கும்போது சி.ஜி பாவிக்கப்படுகின்றது என்பதே தெரியாத அளவிற்கு அப்படி ஒரு நேர்த்தி. க்ளைமேக்ஸ் காட்சிகள் எல்லாம் சி.ஜியின் உச்சம்.  வெறும் 15மில்லியன் செலவில் தயாரிக்கபட்ட இப்படம் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 120மில்லியனுக்கு மேல் வசூல் பண்ணிவிட்டது.

அடுத்ததாக ஒரு நல்ல என்டர்டெயினர் ஒன்று பார்க்கவேண்டுமானால், என் ரெகமெண்டேஷன் இதற்குத் தான். எடுத்துப் பாருங்கள். கட்டாயம் பிடிக்கும்.

ப்ரீத்திக்கு நான் கேரண்டி. Smile


மார்க்கு84/100


படத்தின் ட்ரெயிலர்

ட்ரெயிலரை பார்த்துட்டு முடிவெடுக்காதீங்க. படம் அட்டகாசம் !!!

Enemy of the State [1998]

folder

இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. கல்யாணம் கட்டி எத்தன நாளாச்சி? என்னைக்காவது ஆசையா ஷாப்பிங் மாலுக்கு, தியேட்டருக்கு கூட்டிட்டு போயிருக்கியா? கல்யாணம் கட்டினா போதுமா? பொண்டாட்டிய சந்தோஷமா வச்சுக்க தெரியவேணாம்? ஒன்னுக்கும் துப்பில்ல … தொரக்கி லீவு நாளதுவுமா எந்திரிச்சதும் படம் கேக்குதா? இன்னிக்கு எங்காவது கூட்டிட்டு போகல … அப்புறம் நான் மோசமானவனு சொல்லாதீங்க. (யாவும் கற்பனையே)

இப்படி காலையில தர்மபத்தினியிடம் வார்த்தைகளைக் கேட்டுட்டே “இன்னாடா இது வம்பாப் போச்சின்னு” … குடும்பத்தோட ஷாப்பிங் மாலுக்கு போகலாம்னு கிளம்புறீங்க. ட்ராஃபிக் லைட்ஸ் தாண்டி போகும் போது ஏதாச்சு வாங்க காசு வேணுமே. போற வழியில் ஒரு ATM சென்டரில் காசு எடுத்துண்டு ஷாப்பிங் மாலுக்குல போறீங்க. ஒரு நாலைஞ்சு கடை ஏறி இறங்கியாச்சு. அப்புறம் … வீட்டுல தான் படம் பார்க்க முடியல, தியேட்டர்ல சரி படம் ஒன்னு பார்ப்போம்னு படம் பார்த்துட்டு வீடு வந்து சேர்றீங்க.

இவ்வளவு சுத்திட்டு வரும்போது நீங்க எத்தனை முறை நோட் பண்ணப்பட்டிருக்கீங்கன்னு யோசித்துப் பார்த்திருக்கீங்களா? மேல boldல சொல்லப்பட்ட இடங்கள் அனைத்திலும் உள்ள CCTV கேமராக்கள் உங்கள ரெகார்ட் பண்ணிக்கொண்டு தான் இருக்கு. இலங்கை, இந்தியாவுல எல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் (சரியா விவரம் தெரியலங்க) அமெரிக்காவுல எல்லாம் நிலைமை ரொம்ப மோசம். ஒவ்வொரு செகண்டும் மொபைல், இன்டர்நெட், கேமரான்னு ஏதோ ஒரு வகையில் எல்லாரும் ஒரு கண்காணிப்பின் கீழ் தான் இருக்காங்க.  (இதுபற்றி ஒரு டாகுமெண்டரி 2008,9ல பார்த்தா ஞாபகம். பெயர் ஞாபகமில்லை).

ஆமா … நீ இப்ப படத்தைப் பற்றி எழுதுறியா, இல்ல நம்ம குடும்ப ரகசியத்தை எல்லாம் பப்ளிகுட்டி பண்ணிட்டிருக்கியான்னு யாரோ திட்டுறது கேக்குது. எல்லாம் காரணமாத்தான் எழுதினேன் … நாம கதைக்குள்ள போவோம்.


enemy_of_the_state_1998_500x336_966862ரொபர்ட் டீன் க்ளேடன், வாஷிங்டனில் தன் மகன், மனைவியோடு சந்தோஷமாக வசிக்கும் ஒரு லாயர். கிறிஸ்மஸிற்கு மனைவிக்காக ஷாப்பிங் செய்யப்போகும் டீனை அவனது அவசரமாக ஓடிவரும் அவனது பழைய நண்பன் ஒருவன் சந்திக்கிறான். பேச்சுவார்த்தையில் நைஸாக டீனுக்கு தெரியாமல் அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்ஸி (NSA) ரொம்ப தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு டேப்பை டீனின் பைக்குள் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான். அவன் ஏன் ஓடுகிறான் என்று பின்னால் சென்றுப் பார்க்கும் டீன் அவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதைப் பார்க்கிறான்.

சரி …  எதுக்காக அந்த டேப்பை என்.எஸ்.ஏ தேடுது? படத்தில் கொஞ்சம் பின்னாடி போவோம். ஒரு அமெரிக்க செனட்டர் தேசிய (அமெரிக்க) பாதுகாப்பிற்காக சட்டத்துறையின் கண்காணிப்பை அதிகரிப்பதற்கான ஒரு பில் தாக்கல் செய்கிறார். அதை எதிர்க்கும் ஒரு கான்க்ரெஸ்காரர் NSAயின் முக்கியப்புள்ளிகளில் ஒருவரான தோமஸின் கட்டளைப்படி கொல்லப்பட்டு அவரின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தபடி காட்டப்படுகிறது. ஆனால் அதை பறவைகளைக் கண்காணிக்க வைத்திருந்த கேமரா ரெகார்ட் செய்துவிட, அதனால் துரத்தப்பட்ட கேமராவின் சொந்தக்காரன் தான் டீன் கடையில் சந்தித்த அந்தப் பழைய நண்பன் சவிட்ஸ்.

enemy-of-the-state-02-1திரும்ப கொஞ்சம் படத்தில் முன்னாடி வருவோம் ….. அந்த டேப் பற்றி எதுவும் தெரியாமல் வீட்டுக்குத் திரும்பிவரும் டீனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவனின் வழக்குகளிற்கு தகவல்கள் கொடுத்து உதவி செய்யும் டீனின் முன்னாள் காதலியுடன் டீன் பேசுவது போன்ற போட்டோ டீனின் மனைவிக்கு கிடைக்கப்பட்டிருக்க அவள் அவனை வீட்டை விட்டு துரத்துகிறாள். வேலையிலிருந்தும் அவனை டெம்பரரியாக நிப்பாட்டி விடுகிறார்கள். ஹோட்டலிற்கு தங்கலாம் என்று சென்றால் அவனது பேங்க் அக்கவுண்ட் எல்லாம் மூடப்பட்டு க்ரெடிட் கார்ட்களும் வேலை செய்யவில்லை.

காரணம்? என்.எஸ்.ஏ தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. டீனின் ஜட்டி, பெனியன் தவிர மற்ற அனைத்துப் பொருட்களிலும் ட்ரேஸர்ஸ். வீடு முழுவதும் கேமரா, மைக்ஸ். செல்போன் வயர்டெப் செய்யப்படுகிறது. வெளியே சென்றால் உளவுபார்க்கும் சேட்டலைட் மூலம் எங்கிருந்தாலும் வேவு பார்க்கிறது. பற்றாக்குறைக்கு மேலே சொன்னது போல எல்லா இடங்களிலும் இருக்கும் கேமராக்கள். மேலும் டீனைத் துரத்தும் NSA ஏஜெண்ட்ஸ், ஹெலிகாப்டர்ஸ்.

enemyofthestateடீனுக்கு கிடைக்கும் ஒரே உதவிக்கரம் ப்ரில் என்று அழைக்கப்படும் ஒரு பழைய புத்திசாலி என்.எஸ்.ஏ ஏஜெண்ட். இரண்டு பேரும் சேர்ந்து என்.எஸ்.ஏ டெக்னாலஜியை வைத்தே அவங்களுக்கு தண்ணி காட்ட ட்ரை பண்றாங்க. காட்டினாங்களா? படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க. (ரொம்ம்ம்ப கதையை இழுத்துட்டேனோ)

நோட் பண்ணிக்கோங்க. நான் கதையை சொன்ன விதம் படத்தில் வரும் வரிசையில் அல்ல (க்வான்டின் டாரண்டினோன்னு நினைப்போ?).


கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்கும் படம் கிட்டத்தட்ட 15 நிமிடம் வரை கொஞ்சம் மெதுவாகவே மூவ் ஆகிறது. டேப்பை சவிட்ஸ் பார்த்தது என்.எஸ்.ஏ தெரிந்துகொண்ட பின் ஆரம்பிக்கும் சேஸிங் காட்சிகள் படத்தின் க்ளைமேக்ஸ் வரை தொடர்கிறது. கிட்டத்தட்ட Die-Hard படம் பார்க்கிற மாதிரி அப்படி ஒரு விறுவிறுப்பு.  கார், ஹெலிகாப்டர், சேட்டிலைட் என்று கைவசம் என்னென்ன இருக்கோ (இல்லையோ) … அத்தனையையும் பாவித்து NSA துரத்துது. இரண்டு மணி நேரத்தில் ஒன்றரை மணித்தியாலம் நான் ஸ்டாப் ஆக்ஷன். ஸப் ப்ளாட்டா படத்தின் ஆரம்பக்கட்டத்தில் வில் ஸ்மித் ஒரு மெக்ஸிகன் தாதாவின் கேஸை டீல் செய்வது போல காட்டுறாங்க. காட்டினதோட மறந்துந்துட்டாங்களோன்னு பார்த்தா, கடைசியில் அதை அழகா கொண்டு வந்து முடிச்சு போட்டுட்டாங்க. 

thumb2
ஆனாலும் என்னதான் டெக்னாலஜின்னு காட்டினாலும் 1998ம் ஆண்டில் வி.சி.ஆர், டேப், கேசட் யூஸ் பண்ணுற காலத்தில் இவ்வளவு டெக்னாலஜி இருந்திருக்குமாங்கறது ரொம்பவுமே டவுட்டு தான். இன்னாமா காதுல  பூ சுத்துறாங்கய்யா.

அமெரிக்கா இன்றும் The Patriot Actங்கற சட்டத்தின் மூலம் படத்தில் வரும் நிறைய விடயங்களை செய்யக்கூடிய அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறது. ஆனால் “நாங்க தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட ஆட்களை மட்டுமே கண்காணிப்போம்னு” நியாயம் பேசினாலும் அவர்கள் யாரை சந்தேகப்படுவாங்க, கண்காணிப்பாங்கன்னு யாருக்குத் தெரியும்?


படத்தை இயக்கியிருப்பவர் ரிட்லி ஸ்கொட்டின் சின்னத்தம்பி டோனி ஸ்கொட். ரிட்லி அளவுக்கு பெரிய லெவல்ல இல்லன்னாலும், Top Gun, Taking of Pelham 123, Unstoppable, நான் கடைசியா எழுதிய Deja Vu ன்னு கொஞ்சம் நல்ல படங்களை இயக்கியிருக்காரு.

thumb5நடிக்கிறவங்கள்ள எனக்கு தெரிந்த முகங்கள் வில் ஸ்மித் (டீன்), ஜீன் ஹேக்மான் (ப்ரில்), மற்றும் ஜோன் வொயிட் (தோமஸ்). வில் ஸ்மித் சரியான தேரிவு தான். என்னதான் சீரியஸா காட்சி போய்க் கொண்டு இருந்தாலும் காமெடி பண்றதுல கில்லாடி. உதாரணமா வில்லன்கிட்ட மாட்டிகிட்டு அடிவாங்கின பிறகும் “அது என் வீட்டுல இருந்த ப்ளெண்டராச்சே”ன்னு சொல்றது செம காமெடி. மற்றவங்களுக்கு பெரிதாக வேலை இல்லை.

நமக்கு லாஜிக் எல்லாம் தேவையில்ல. எனக்கு 2மணித்தியாலம் டைம் பாஸ் பண்ணிக் கொண்டா போதும்ன்னு நினைக்கிறவங்க, இப்பவே படத்தை டவுன்லோட் போடுங்க, இல்ல டீவிடி கடைக்கு புறப்படுங்க !!!


மார்க் – 76/100

படத்தின் ட்ரெயிலர்


அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்
ஹாலிவுட்ரசிகன்

Deja Vu [2006]

deja_vu

ஏதாச்சு ஒரு விஷயத்தை பார்க்கும்போது அல்லது ஒரு சம்பவம் நம்மைச் சுற்றி நடக்கும்போது, அது ஏற்கனவே நமக்கு நடந்தது/பார்த்தது போன்று ஒரு அனுபவம் உங்களுக்கு எப்பயாச்சு நடந்திருக்கலாம். ஆனால் சரியா அந்த  டைம்ல அது மைண்ட்ல க்ளியரா இருக்காது. நம்மள மாதிரி உலகசினிமா பார்ப்பவங்களுக்கு இந்தியத் திரைப்படங்கள் பார்க்கும் போது இது மாதிரி அடிக்கடி தோணும். ( இந்தியசினிமாவுக்கு உள்ள ஒரு ஷ்பெசாலிட்டி ) இந்த கான்செப்டை வச்சுகிட்டு 2006ல் வெளிவந்த ஆக்ஷன் படம் தான் Deja Vu.



184725__dejavu_lநியு ஓர்லியன்ஸ் படகுத்துறையில் இருந்து கிட்டத்தட்ட 300 நேவி ஆபிசர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொண்டாட்டத்திற்காக ஒரு சிறு கப்பலில் கிளம்புவதுடன் படம் தொடங்குகின்றது. படகு கிளம்பி சிறிது நேரத்தில் அதில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கார் தீப்பிடிக்க, படகு வெடித்து சிதறுகிறது.

கொஞ்ச நேரத்தில் இதற்குக் காரணமான தீவிரவாதக் கும்பலை கண்டுபிடிக்க என்ட்ரியாகிறார் கேப்டன் விஜயகாந்த் … ஹையோ ஹையோ … ஏஜெண்ட் டக் கார்லின். வந்து சுற்றிமுற்றி பார்க்கிறவருக்கு இறந்து கரையொதுங்கிய க்ளெயார் என்ற ஒரு பெண்ணின் உடலையும் பார்த்து அவளைப் பற்றி விசாரிக்கச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது. அந்தப் பெண்ணின் உடல் குண்டுவெடிப்பிற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்பே கரையொதுங்கிவிட்டதால் அவளின் இறப்பிற்கும், குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தம் இருக்கிறது என டக் நினைக்கிறான். அவளைக் கொன்றவனைக் கண்டுபிடித்தால் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களைப் பிடிக்கலாம் என்பது டக்கின் எண்ணம்.

11தொடர்ந்து விசாரணை செய்யும் டக்கிற்கு இன்னும் குழப்பமான க்ளுக்கள் கிடைக்க, ஒரு கட்டத்தில் FBIயில் பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் ஒரு இளம் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்கிறான். “ஸ்நோ வைட்” என்ற ஒரு ப்ராஜெக்டில் ஈடுபட்டிருக்கும் அவர்கள், நேரம் என்ற பரிமாணத்தை வளைத்து நெளித்து என்னேன்னவோ பண்ணி இறந்தகாலத்தில் கடந்த மூன்று நாட்களுக்குள் நடந்த எந்த விடயத்தையும் திரையில் லைவா பார்க்க முடியும் என்று சொல்றாங்க. இந்த ப்ராஜெக்ட் மூலமாக எப்படி அவர்கள் க்ளெயாரை ட்ராக் பண்ணி கொலையாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதெல்லாம் நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க.



deja_vu_5சிறு வயதில் இருந்தே க்ரீக் மித்தாலஜி போல எனக்கு பிடித்த இன்னொரு சப்ஜெக்ட் டைம் ட்ராவல். படங்களில் அதிகம் ரசித்துப் பார்ப்பது அனிமேஷன் … பின்னர் நல்ல கதையுடன் கூடிய ஆக்ஷன் படங்கள். டேஜா வு இந்த ரெண்டு ஏரியாவையும் மிக்ஸ் பண்ணி கலக்கியிருக்கு. ஹீரோயினைக் காப்பாற்றும் ஹீரோ என்ற சிம்பிள் கான்செப்டை வைத்துக் கொண்டு அழகான ஒரு ஃபிக்ஷனைப் பின்னியிருக்காங்க.

என்னதான் அப்படி புதுசா இருக்கு? வழக்கமான கொலை இன்வெஸ்டிகேசன் படம் தான் பாத்துட்டு இருக்கோமான்னு நினைக்கிறப்போவே படம் டைம் ட்ராவல், சடன் ட்விஸ்ட்ன்னு ட்ராக் மாறிவிடுவதால், எனக்கு ஒரு டேஜா வு எக்ஸ்பீரியன்ஸும் வரல. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வழக்கமான ஹாலிவுட் மசாலா தான். ஆனால் இன்ட்ரெஸ்டிங்.

கதையில் எல்லாம் சயின்ஸ் ஃபிக்ஷனா இருந்தும், ஓரளவு நம்பக்கூடிய வகையில் டைம் ட்ராவலை கையாண்டு இருக்காங்க. அது ஏன் நடக்குது, இதுல அப்படி என்ன செய்ய முடியும்ன்னு எல்லாம் கொஞ்சம் டீடெயிலா சொல்றதால படம் சுவாரஸ்யமாக போகுது. ஆனால் படத்தில் கொஞ்சம் ஸ்லோவான ஏரியா இந்த விளக்கமளிக்கும் இடம் தான்.

dejavupic5டக் கார்லினாக டென்சல் வாஷிங்டன். பலமுறை சிறந்த நடிகருக்காக பரிந்துரை செய்யப்பட்டும், போயும் போயும் 2001ல் A Beautiful Mind படத்திற்காக ரசல் க்ரோவிற்கு கிடைக்கவேண்டிய விருதைத் தட்டிப் பறித்த புண்ணியவான். பெரிதாக டெக்னாலஜி தெரியாத, ஆனால் கொஞ்சம் மூளையுள்ள புத்திசாலி ஆபிசர். படத்தில் எங்கும் சொதப்பாமல் நல்ல ஒரு நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். க்ளெயாராக வரும் போலா பேட்டனுடைய அந்த அழகான இன்னெசன்ட் லுக்கே அவர் மீது நமக்கு ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணுகிறது. கடைசி 30 நிமிடம் வரை இருவரும் சந்திக்காவிட்டாலும், டக்கிற்கு திரையில் பார்த்தே க்ளெயார் மீது வரும் காதல் சொல்லப்பட்ட விதம் நன்றாக இருந்தது.

நல்ல கூலான ஐடியா. நல்ல ஆக்ஷன் என்டர்டெயினர். ஆக்சன் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.


ரேடிங் – 74/100


படத்தின் ட்ரெயிலர்

 

 

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்
ஹாலிவுட்ரசிகன்