நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

FIFA 12– வீடியோ கேம்

FIFA-12 cover


ஏண்டா ஒரே ஒரு கேம் பதிவு மட்டும் தான் போட்டே? மேலே மெனுவில் Game Reviews க்ளிக் பண்ணினா ஒரு பதிவு மட்டும் தான் வருது. கொஞ்சம் அது பத்தியும் எழுதுப்பான்னு தினமும் ரசிகர்கள் ஃபேஸ்புக்கிலும் ஈமெயிலிலும் கேட்டுக் கேட்டு ஒரே தொல்லை …. அப்படின்னா நம்பவாப் போறீங்க? நாமளே ஒரு ஓரமா ஆர்வத்துல கடையை ஆரம்பிச்சுட்டு இப்ப ஆரம்பிச்ச பாவத்துக்காக உட்கார்ந்து ஈயோட்டிக்கிட்டிருக்கோம். யாரு வந்து இதையெல்லாம் விசாரிக்கப் போறது? எனக்கு மீண்டும் நம்ம ப்ளாக்குல ஒரு சேன்ஞ்சுக்கு ஒரு பதிவு போடுவோமேன்னு தோணிச்சு. ரிசல்ட் இந்தப் பதிவு. என்னை அப்படியெல்லாம் கேக்காத பயபுள்ளங்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

FIFA-12 fanart

நம்ம ஊர்ல அனேகமான பையன்களைக் உனக்குப் பிடிச்ச விளையாட்டு என்னான்னு கேட்டா கிரிக்கெட்ன்னு யோசிக்காம சொல்லிட்டு பேட்டோட போயிடுவானுங்க. ஆனா நம்மளுக்கு எப்பவுமே ஃபுட்பால் தான் … என் வரலாற்றில் ஒரு காலத்தில் எக்ஸாம் முடித்த காலக்கட்டத்தில் டீவி முன்பு முழுநாளும் Ten Action+ , ESPN இல் மாறி மாறி ஃபுட்பால் பார்ப்பதையே தொழிலாக வைத்திருந்தேன். நம்ம வீட்டில இருக்கிறவங்களும் வெறுத்துப் போய் “ஏண்டா … ஒரு பால் பின்னாடி 11பேர் ஓடுறதை எப்படிடா முழு நாளும் பார்த்துட்டுருக்கே? பேசாம கேடிவிக்கு மாத்திவிட்டு ரூம்ல போய் கிட” ன்னு அடிக்கடி செல்லமாகச் சொல்லியது அந்த பைத்தியத்திற்கு ட்ரீட்மெண்டாக அமைந்தது. அந்தப் பைத்தியம் தெளிந்த பின்னர் தான் ஹாலிவுட்ங்கிற ஒரு பெரிய பைத்தியத்திடம் மாட்டிக்கிட்டேன் (நம்ம வாழ்க்கையும் ஒரு வரலாறு தான். அதில் ஒரு எபிசோட் இது) .

டீவில பார்க்கிறது குறைஞ்சாலும் நாம தான் என்றும் பதினாறு கூட்டமாச்சே. ஏழு கழுதை வயசாகியும் வீடியோ கேம் விளையாடும் ஜீனியஸ் போன்ற அடல்ட் சிறுவர்களில் நானும் ஒருவன். முந்தியெல்லாம் சனி, ஞாயிறு எங்காவது ஃப்ரெண்ட்ஸ் ஒரு எட்டு பேர் நம்ம வீட்டுல கூடிடுவோம். ரெண்டு ரெண்டு பேரா நான்கு டீம் படி அன்னிக்கு முழு நாளும் Virtual FIFA 09 Tournament ஒன்னு நம்ம வீட்டுல நடக்கும். எல்லாரும் மேல்படிப்பு, வேலைன்னு பிரிஞ்சுட்டாலும் இன்றும் தனியாக ரூமில் ஃபீபா விளையாடுவது ஒரு சுகம்.

நான் வீடியோ கேம்ஸ் ரொம்பத் தீவிரமா விளையாடினாலும், First Person Shooters, Strategy, Adventure டைப் கேம்களை மட்டும் தான் எப்போதும் செலக்ட் பண்ணி விளையாடுவது. ஸ்போர்ட்ஸ் கேம்களில் பெரிதாக இன்ட்ரஸ்ட் இல்லை. என்னமோ தெரியலைங்க … இந்த ஃபுட்பால் கருமாந்திரம் மட்டும் மனதோடு ஒட்டிக்கிச்சு.

3

அந்த வகையில் Electronics Arts ரிலீஸ் பண்ணிய ஃபுட்பாலின் கடைசி வர்ஷன் பற்றித் தான் இன்று பார்க்கப் போறோம். PLAY ON !!!

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இந்த கேமைப் பற்றி சொல்ல இன்ட்ரோ எல்லாம் இல்லை. கேம் ஆரம்பிச்சதும் ரெஃப்ரீ விசில் ஊதுவார். அவர் மறுபடியும் இரண்டு முறை ஊதினால் ஹாவ் டைம். மீண்டும் தொடங்கி மூன்று முறை ஊதினால் ஃபுல் டைம். அதுவரைக்கும் யார் அதிகம் கோல் போடுவாங்களோ அந்த டீம் வெற்றி. இது தான் FIFA 12 … இல்லை மொத்த ஃபுட்பாலின் சாராம்சம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

உண்மையில பி.ஸி கேமர்ஸ் பாவம் செய்தவங்க. அனேகமான கேம்ஸ் கான்ஸோல்ல விளையாட சூப்பரா செய்வானுங்க. பி.ஸிக்கு மட்டும் ஒழுங்கா டெவலப் பண்ணாம விட்றுவானுங்க. சில கேம்ஸ் தனியா கான்ஸோல் மட்டும் தான். அதே போல கான்ஸோல் வாங்கினா கேம் டிவிடிக்கு மட்டும் தான் செலவு. பிஸி கேம் விளையாடுறவனுக்கு வருஷம் ஒழுங்கா கம்ப்யுட்டர க்ராபிக்ஸ் கார்ட், RAM, ப்ரொசசர் அப்டேட் பண்ணாம விட்டா அடுத்த வருஷம் வர்ற கேமை ஒழுங்கா விளையாட முடியாது? என்னக் கொடுமை சரவணன்?

2

இங்கும் FIFA 09 வரைக்கும் இந்த மாதிரித் தான். பி.ஸி வர்ஷன் எல்லாம் பழைய PS2 க்ராபிக்ஸ், எஞ்சின் பேஸ் பண்ணி டெவலப் செய்திருக்க, கான்சோல் வர்ஷன் எல்லாம் இப்போதைய FIFA போல செம அட்வான்ஸ். அப்புறம் FIFA 10ல கேம் எஞ்சினை மாற்றி, இப்போ கடைசியாக வந்த வர்ஷனில் பி.ஸி கேமர்ஸ் ஒரு கன்சோலில் கிடைக்கும் என்டர்டெயினிங் அனுபவத்தை கிட்டத்தட்ட கணனியில் முழுதாகப் பெறலாம். தாங்க் காட் ….

இதுவரை வந்துள்ள எல்லா ஃபுட்பால் கேம்களையும் விட ஒரு உண்மையான ஃபுட்பால் கேமிற்கு ரியாலிட்டியில் மிகவும் கிட்டிய சிமுலேஷனாகக் கருதப்படுவது இதுதான். இம்முறை 12ம் பதிப்பில் வெளியிட்டுள்ள பல சுவாரஸ்யமான அம்சங்கள் கேம்ப்ளேயை இன்னும் இன்ட்ரஸ்டிங்காக்கும்.

மிக முக்கியமான அம்சனம் இம்முறை அறிமுகப்படுத்தப்படும் Player Impact Engine. ப்ளேயர்கள் சட்டையை இழுக்கும்போது, ஸ்லைட் அடிக்கும்போது, ஃபிஸிக்ஸைப் பாவித்து வீரர்கள் இடிபடும் போது அடிபடும் இடம், மோதும் ஆட்களின் பலம், பாரம் போன்றவற்றின் மூலம் கணக்கிடப்பட்டு அதற்கேற்றாப் போல ரிசல்ட் படுகிறது. இது இன்னும் 100% மிகச் சரியாக வேலை செய்யாவிட்டாலும், இதுவரை எங்கும் பிரச்சினை வருவது போல இறுகியதில்லை. 

4

மேலும் புதிய அறிமுகங்களான Tactical Defending, Precision Dribbling போன்றவை கேம் விளையாடுவதை ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்படுத்தினாலும் பழகிய பின்னர் விரல்கள் ஆட்டோவாக உங்கள் கீபோர்ட்டில் சரியாக நிற்கும். நான் கீபோர்ட் பெரிதாக பாவிப்பதில்லை. கேம்பாட் ஒன்றில் விளையாடுவது இன்னும் செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். மேலும் Skill Moves எல்லாம் போடுவதற்கு கேம்பாட் தான் சரி.

FIFAவில் எனக்குப் பிடித்த இன்னொரு விடயம் இம்முறையும் கேமில் வீரர்களின் முகத்தை கிட்டத்தட்ட அதே போல செய்து எடுத்திருக்கிறாங்க. கீழே அட்டாச் பண்ணியுள்ள வீடியோவில் எப்படி முகங்களை டிசைன் பண்ணினாங்கன்னு இருக்கு. பாத்துக்கங்க. அதுமட்டுமில்லாம 500க்கும் மேற்பட்ட க்ளப்களை லைசென்ஸ் செய்தது மூலம் நாம் அதிலுள்ள நிறைய டீம்களில் ஒன்றை எடுத்து விளையாடலாம். PES 2012 என்றும் இன்னொரு ஃபுட்பால் கேம் இருக்கு. ஆனா எனக்கு அதில் உள்ளவர்களின் முகம் ஏதோ பேயடித்தது போல தெரிகிறது. மேலும் அவங்க நிறைய டீம்கள் லைசன்ஸ் பண்ணாததால் டீம் பெயர்கள், வீரர்களின் பெயர்கள் எல்லாம் வேறு மாதிரி இருக்கும். ஆனால் கேம்ப்ளே கொஞ்சம் ஃபீபாவை விட வேகம் கொஞ்சம் அதிகம். இன்ட்ரஸ்டிங். இரண்டில் உங்க டேஸ்டுக்கு ஒத்துவரும் கேமை செலக்ட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க.

1 
இது மட்டும் இல்லை.  இதில் மற்ற வீரர்களுடன் ஆன்லைன்ல விளையாடவும் முடியுமாம். ஆனா நம்ம காப்பி டவுன்லோட் பண்ணியது என்பதால ஸ்ரிக்ட்லி நோ என்ட்ரி. ஆனால் Assassins Creed, Mass Effect போன்ற நீண்ட கதைகளுடன் இருக்கும் கேமை மாதக்கணக்காக விளையாடாமல், கேமை கம்ப்ளீட் பண்ண முடியவில்லையே என ஆதங்கப்படும், ஒரு பத்து நிமிடம் மனதை ரிலாக்ஸ் பண்ண கேம் விளையாட நினைக்கும் நண்பர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.

காரணமில்லாமலா 2011ம் ஆண்டின் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் வீடியோ கேம்னு சொன்னாங்க?

சில யுகங்களுக்கு முன்னாடி ஒரே ஒரு கேம் பதிவு போட்டேன்னு சொன்னேனே தெரியுமா? அனேகமா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.  Elder Scrolls V : Skyrim பதிவையும் நேரமிருந்தா படிச்சுட்டு முடிஞ்சா விளையாடுங்க. கட்டாயம் மிஸ் செய்யக்கூடாத கேம் அது.

இந்த கேம் உருவான விதம் பற்றி, National Geographicல போகும் Megafactories எனும் ப்ரோகிராமில் ஒரு  எபிசோட் போட்டிருந்தாங்க. முழு எபிசோடிற்கான யுடியுப் விடியோ.கம்ப்யுட்டர் வீடியோ கேம்ஸ் பற்றி எழுதுவது உண்மையில் தேவை தானா என யோசிக்கிறேன். எத்தனை பேர் விளையாடுறாங்க ஒன்னும் தெரியாது. இத எழுதுற டைம்ல இரண்டு படத்தப் பற்றி எழுதிவிடலாம் போல இருக்கு. ப்ளீஸ் கருத்தைச் சொல்லுங்க.

Friends [1994–2004]–காமெடி நாடகத் தொடர்

poster

இன்னிக்கி நாம பார்க்கப்போறதும்  ஒரு சிட்கொம் தான். சிட்கொம்னா என்னன்னு தெரிந்துகொள்ள The Big Bang Theory நாடக விமர்சனத்தின் இரண்டாவது பாராவை வாசிச்சுக்கோங்க.

நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் , செய்யும் நக்கல்கள் போன்றவற்றை திரையில் பார்க்கும்போது நமக்கும் பல பழைய ஞாபகங்கள் நினைவில் வந்து மனதிற்குள் சிரிப்பதில்லையா? அல்லது ஏதாவது ஒரு ரெஸ்டாரன்டிலோ, தியேட்டரிலோ நண்பர்களுடன் சேரும் போது நாம் செய்யும் அநியாயகங்கள் எத்தனை? Friends நாடகத்தின் வெற்றிக்கான காரணம் இது தான். நான் பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து என்ன வேலை இருந்தாலும் ஒவ்வொரு நாளும் படுப்பதற்கு முன் அட்லீஸ்ட் ஒரு எபிசோடாவது பார்க்காமல் விட்டது இல்லை. யார் இந்த 6 நண்பர்கள்? அவங்க எப்படிப்பட்டவங்க? பார்க்கலாம் வாங்க …

Friends-fanart

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

FRIENDS -- NBC Series -- Season 10: மோனிக்கா கெல்லர். சுத்தம் … சுத்தம் … சுத்தம். தானும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும், எப்பொழுதும் தான் சொல்வதை கேட்கவேண்டும். அவள் வாழும் இடமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் குறியாக உள்ளவள். யாராவது மீறினால் ஹை பிட்சில் இவள் கத்துவதில் காது கிழியும்.  மோனிக்காவின் அண்ணன் ரொஸ் கெல்லர். தொல்பொருள் துறையில் வேலை செய்பவன்.  கொஞ்சம் வித்தியாசமான கீக்கி டைப். அங்கீகாரத்தை மிகவும் எதிர்ப்பார்ப்பவன். அவனின் மனைவி ஒரு லெஸ்பியன் எனத் தெரியவந்ததும் டிவோர்ஸ் பண்ணிவிட்டு தனியாக வாழ்பவன். அடிக்கடி லவ், திருமணப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வான். அடுத்தவன் பேரு சான்ட்லர் பிங். பேரைப் பார்த்துவிட்டு சைனாக்காரன்னு நினைக்காதீங்க. ஒரு பெரிய கம்பெனியில் வேலை (என்ன வேலைன்னு சரியா தெரியல) செய்யும் இவன் வாயிலிருந்து நக்கலுடன் கூடிய கிண்டல்கள் நாடகம் முழுவதும் வரும். ஆண்மை அதாவது பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்கான கேஸ்.

சான்ட்லரின் கரெக்டருக்கு எதிரானவன் ஜோயி ட்ரிபியானி. ஒரு நடிகனாவதற்காக முயற்சி செய்துகொண்டிருப்பவன். பெண்கள் விஷயத்தில் எக்ஸ்பர்ட். ஆனால் எல்லாம் வன்-நைட்-ஸ்டான்ட் தான். மூளையை வேஸ்ட் செய்யாமல் கிட்னியால் யோசிப்பவன். அடுத்தது ரேச்சல் க்ரீன். மோனிக்காவின் ஸ்கூல்மேட். சிறுவயதில் பணக்கார குடும்பத்தில் வளர்ந்ததால், பெரும்பாலான பணக்காரப் பிள்ளைகள் போல ஃபேஷன், ஷாப்பிங் என சில ஆசைகளாலும் பழக்கங்களாலும் குட்டிச்சுவராப் போனவள். தனக்கு வேண்டியதை சிரித்துப் பேசி நைஸாக செய்து கொள்வதில் கில்லாடி. கூட்டத்தில் சரியாக ஒரு நிலையில் சரியாக இருக்காதவள் தான் ஃபீபி புஃபே. விளக்கமற்ற லூசு போல இருந்தாலும் காமென் சென்ஸ் அதிகம் இருக்கிறவள்.

fanart 
இந்த ஆறு நண்பர்களுக்கு இடையில் இடம்பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், அவர்கள் வாழ்க்கையில் இடம்பெறும் மாற்றங்கள், மலரும் காதல், திருமணங்கள் போன்றவை தான் ஃப்ரெண்ட்ஸ் நாடகத்தின் திரைச்சுருக்கம். கிட்டத்தட்ட 22 x 236 = 5192 நிமிடங்கள் = கிட்டத்தட்ட 86.5 மணி நேர காமெடி, சென்டிமெண்ட் பயணம். இதை சரக்கடிப்பது போல தினமும் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக ரசித்து ரசித்து பார்ப்பது ஒரு வித போதை.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

அதாவது வந்துங்க 1994ம் வருஷம் செப்டம்பர் மாதம் 22ம் திகதி … NBC சானல்ல ஐந்து நண்பர்கள் ஜாலியா அரட்டையடிச்சுட்டு இருக்காங்க. திடீர்னு தடதடதடன்னு திருமண உடையுடன் ஒரு பொண்ணு உள்ள நுழைகிறாள். “நான் கல்யாணம் கட்டிக்க இருந்தவன் என் நெருங்கின நண்பியோட கள்ளத்தொடர்பு வச்சிருந்திருக்கான். அது தான் திருமணத்தில் இருந்து இடையில் ஓடி வந்துட்டேன்” சொல்பவள் தான் ரேச்சல். இவ்வாறு வரும் ரேச்சல் மெதுவாக இந்த நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்கிறாள். இவர்களின் உதவியுடன் காபி ஷாப் ஒன்றில் வெயிட்டர் வேலையும் கிடைக்கிறது. இங்கிருந்து மெதுவாக ரொஸ் பாடசாலை நாட்களில் ரேச்சல் மீது கொண்டிருந்த ஒருதலைக் காதல், இது தெரியவந்து ஏற்படும் ரேச்சல்-ரொஸ் காதல், பின்னர் சான்ட்லர் மோனிக்கா காதல், ப்ரோபோசல்கள், திருமணங்கள், பிரிவுகள், வேலைகள், பிள்ளைகள் குட்டிகள் என மேற்குலக இளமைப் பருவ வாழ்க்கையை காமெடியுடனும், டபுள் மீனிங் வசனங்களுடனும், சென்டிமெண்டுடனும் ஒரு டூர் எடுத்துச் செல்லும் பயணமே ப்ரெண்ட்ஸ் நாடகம்.

tumblr_lhvann04GZ1qg42pfo1_500

டேவிட் க்ரேனும் மார்த்தா கோஃப்மென்னும் Friends நாடகத்தை தொடங்க மீடிங் போடும்போது கனவில் கூட நினைத்திருக்க மாட்டாங்க ….. எங்கோ நியு யோர்க் நகரின் மான்ஹாட்டன் பகுதியில், பக்கத்து பக்கத்து அபார்ட்மெண்ட்களில் வாழும் மூன்று ஆண்கள், மூன்று பெண்களின் ஜாலியான வாழ்க்கைக்கு 20 மில்லியன் அமெரிக்கர்களின் வாழ்க்கையைக் கட்டிப் போடக்கூடிய சக்தி இருக்கின்றது என்று. 1994ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பித்த இந்த தொலைக்காட்சியின் ஓட்டம், “வெற்றிகரமாக” பத்து ஆண்டுகள் சென்று நிறைவு பெறும் வரை  ரேடிங்கிலும் சரி, பார்வையாளர்களிலும் சரி … சற்றும் குறையவில்லை. வெற்றிக்கு இதன் இறுதி எபிசோடைப் பார்த்த 5 கோடி அமெரிக்கர்களும் சாட்சி.

Fanart 
ஒளிபரப்பு செய்யப்பட்ட காலத்திலிருந்து இதுவரை ஏகப்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறது (விக்கிபீடியா பார்த்துக் கொள்க). ஃப்ரெண்ட்ஸாக வந்து 6 பேருக்குமே அவர்களின் கேரியரில் ஒரு மிக முக்கிய மைல்கல் என இந்த நாடகத்தைச் சொல்லலாம். முக்கியமாக 40 வயதிலும் கவர்ச்சியாக செக்ஸியாக இருக்கும் ஜெனிஃபர் அனிஸ்டன் மற்றும் கோர்ட்னி கொக்ஸ். இது முடிந்த கையோடு ஜோயின் வாழ்க்கையை பற்றி Joey எனத் தனியாக ஒரு தொடர் இரண்டு சீசன்கள் வந்தது. (Star World இல் சீக்கிரம் ஒளிபரப்பாகவுள்ளது) ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை. ஊத்திக்கிச்சு. இதைத் தவிர சீரீஸின் இடையிலும் பல முக்கிய நடிகர்கள் இடையில் தரிசனம் தந்துவிட்டு போவார்கள் ப்ரூஸ் வில்லிஸ் உட்பட. ஆனாலும் காமெடி ஒருபக்கம் இருந்தாலும் கதையை கொண்டு போவதற்காக மீண்டும் மீண்டும் ரொஸ்-ரேச்சல் லவ்வை ஸ்பைடர்மேன் கல்யாணம் போல ஆரம்பித்து ஆரம்பித்து முடிப்பது எரிச்சலைத் தான் தரும். ஆனா நமக்கு காமெடி தானே முக்கியம். ஸோ யு ஆர் எக்ஸ்கியுஸ்ட் க்ரேன், கோஃப்மென்.

11

தொடர்ந்து நாடகத்துடன் ஒன்றிப் பார்க்கும்போது நாமும் அவர்களுடன் ஏழாவது நண்பனாக வாழ்வது போன்ற ஒரு ஃபீலிங் வரும். பார்க்க விரும்பினால் இந்தியன் Warner Bros இல் காலை 7.45க்கும் ஸ்டார் வேர்ல்ட் (Star World) சேனலில் பகல் 1.30க்கும் ஒளிபரப்பாகிறது. பார்க்க விரும்புபவர்கள் ஒரு மூணு எபிசோடை ட்ரை ஒன்று கொடுத்துப் பாருங்க. அப்புறம் டவுன்லோட் பண்ணியோ ஆன்லைனிலோ மிச்சத்தை பார்ப்பீங்க. நாடகம் பிடிக்கலைன்னா உங்க ஹாஸ்ய ரசனையில் ஏதோ கோளாறு இருக்குன்னு அர்த்தம். நல்ல டாக்டராப் பாருங்க.

ஃப்ரெண்ட்ஸ் பார்த்து முடியப்போகுது. முடிந்த கையோடு Two and a Half Men சீரிஸ், சீசன் 7 வரை ரெடியா கிடக்கு. அதை தொடங்க வேண்டியது தான். அதுக்குள்ள Game of Thrones இரண்டாவது சீசனும் தொடங்கிவிடும். நேரம் கிடைப்பது புளியங்கொம்பாகத் தான் இருக்கப் போகிறது.

Fanart

இந்த நாடகத்தின், எனக்குப் மிகவும் பிடித்த அழகான தீம் சாங் -


பதிவு பிடித்திருந்தா ஒட்டுக்கள் ப்ளீஸ்


அடுத்த பதிவில் சந்திக்கும்வரை,

ஹாலிவுட்ரசிகன்

Fracture [2007]

folder

 

கிட்டத்தட்ட மூணு நாளா பிரிச்சு பாத்துட்டுருக்கேன் இந்தப் படத்த.  அட … அதுக்காக படம் 3 ரொம்ம்ம்ப லெங்த்ன்னு நினைக்காதீங்க. படம் கொஞ்சம் ஸ்லோ டைப். அவ்வளவு தான். ஹாவ்வ்வ்

முதல்ல படத்தின் போஸ்டரைப் பார்த்ததும் எதுவுமே யோசிக்கல … படத்தை டவுன்லோட்ல போட்டுட்டேன். காரணம் மேல பாத்தா உங்களுக்கே தெரியும். ஹாலிவுட்டின் வளர்ந்த மற்றும் வளரும் நட்சத்திரங்கள். வெறும் அன்தோனி ஹொப்கின் படம்னாலே விசேஷம் தான். ரையன் கோஸ்லிங்கும் இவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம்னா அப்புறம் யோசிக்க என்ன இருக்கு?

thumb2

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டெட் ஒரு திறமையான கட்டுமானர் … ச்ச்ச் எஞ்சினியருங்க. அவரு ஒரு நாள் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு தன் இளவயது மனைவி தங்கியிருக்கிறாள் என நினைக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு செல்லும் செல்ல, அங்கு அவள் ஒரு நனெலி எனும் போலீஸுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதைப் பார்த்து  அறிந்துகொள்கிறான். மற்றவர்கள் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் மெதுவாக வீடு வரும் டெட், மனைவி வீட்டிற்கு வந்தவுடன் அதைப் பற்றிப் பேசிவிட்டு துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான்.

சத்தம் கேட்டு அங்கிருப்பவர்கள் தகவல் தெரிவித்ததும் போலிஸ் படை விரைகிறது. அவர்களுடன் வருவது மேலே பார்த்த அதே நனெலி. அவன் வந்ததும் சுடப்பட்டது அவனின் காதலி என அறிந்ததும் டெட் மேலே கோபமாகப் பாய்ந்து தாக்குகிறான். ஆனால் டெட் சமாதானமாக துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு தான் அவளைச் சுட்டதாக வாக்குமூலமும் கொடுத்துவிடுகிறான். ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் செல்லப்படும் டெட்டின் மனைவி புல்லட் தலைக்குள் இருப்பதால் கோமா நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

நகரின் இன்னொரு மூலையில் உள்ள ஆபிஸில் வக்கீல் வில்லி பீச்சம் தனது பெட்டிகளை அடுக்கிவைத்து விட்டு இன்னொரு நல்ல சம்பளத்துடன் கூடிய ப்ரைவேட் கம்பெனிக்கு செல்ல ஆயத்தமாகிறான். வில்லி வெற்றி பெறக்கூடிய கேஸ்களை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தன் நண்பர்களிடம் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்ல வேலை கிடைக்கக் காரணம். புறப்படப்போகும் வில்லிக்கு  கடைசியாக அட்டெண்ட் பண்ணவேண்டி வருவது டெட்டின் மர்டர் வழக்கு.

thumb3

குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலமும், போதிய சாட்சியங்களும் இருப்பதால், அன்றே டக்கென்று வழக்கை முடித்துக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி, நம் “லெக்டரை” சாதாரணமாக எடைபோட்டுச் செல்லும் வில்லி டெட் கோர்ட்டில் தனக்கு வக்கீல் தேவையில்லை. தானே வாதாடிக்கொள்கிறேன் என்றதும் சிரித்தாலும், ஒத்திவைக்கப்படும் கேஸ் மீண்டும் கோர்ட்டில் ஆரம்பிக்கும்போது டெட் ஒரே வசனத்தில் கேஸை திசை மாற்றிவிட டெட்டின் சாமர்த்தியம் வில்லிக்கு தெரியவருகிறது. மேலும் அவன் டெட்டை கைது செய்யும்போது பறிக்கப்பட்ட துப்பாக்கி ஒருமுறைகூட பாவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தெரியவர, அப்பொழுது தான் வில்லிக்கு அவன் எவ்வளவு பெரிய க்ரிமினல் மாஸ்டர் மைன்ட் ஒருவனுடன் மோதிக் கொண்டிக்கிறான் என்பது தெரியவருகிறது.

அப்படி டெட் என்ன தான் சொன்னான்? துப்பாக்கியால் டெட் சுட்டானே? அப்புறம் எப்படி துப்பாக்கி ஒருமுறை கூட சுடப்பட்டிருக்கவில்லை எனக் கூறினார்கள்? தெரிஞ்சுக்க வேண்டியவங்க படத்தைப் பார்த்துக் கொள்ளுங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

Fracture-thumb-560xauto-24063

படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு (ஒரே??) விஷயம்,  நடிப்பு. மனுஷனுக்கு ஹானிபல் லெக்டரில் வந்தா மாதிரி “சிரிப்பிலேயே பயமுறுத்தும் புத்திசாலி” கரெக்டர். லெக்டர் அனுபவமும் கைகொடுக்க சும்மா அல்வா சாப்பிடுவது போல பிச்சு உதறிட்டாரு. சுற்றி இருப்பவங்களை வசனங்கள் மூலம் தன்வழிப்படுத்தும் இடங்கள் எல்லாம் சூப்பர். ரையனும் (Drive) நீ சீனியரா இருந்தாலும், எனக்குள்ளும் திறமையிருக்கு என அந்தோனிக்கு ஈடு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் படம் பற்றி சொல்லணும்னா, அதப் பற்றி அழகா படத்திலேயே ஹொப்கின்ஸ் சொல்லியிருப்பாரு. “எதையும் கவனமாக உற்றுப் பார்த்தால், எல்லாப் பொருட்களுக்கும் அவற்றை உடைக்கக்கூடிய ஒரு வீக் பாயிண்ட் உண்டு.” இப்படமும் அப்படித் தான். பலமான நடிப்பு துணையாக இருந்தாலும் வீக்கான திரைக்கதை கொஞ்சம் சலிப்படைய வைத்துவிடுகிறது.(இப்ப புரிஞ்சுதா ஏன் மூணு நாளுன்னு?)

DF-01993
Fracture
,  
March 15, 2005
Photo by Sam Emerson/newline.wireimage.com

To license this image (7793174), contact NewLine:
U.S. +1-212-686-8900 / U.K. +44-207-868-8940 / Australia +61-2-8262-9222 / Japan: +81-3-5464-7020
+1 212-686-8901 (fax)
info@wireimage.com (e-mail)
NewLine.wireimage.com (web site)

கதையைப் பற்றி சொல்லணும்னா, ஒன்னும் தேடத்தேவையில்ல. கடைசியா சொன்ன Girl with the Dragon Tattoo போலத் தான். மெதுவான திரைக்கதை. ஒரு சீனைத் தவிர இடையில லவ் சீன்கள் போடாமல் விட்டது வரவேற்கத்தக்கது. ஹீராயினும் தன் பங்குக்கு கொஞ்சம் பேசினாங்க, கட்டில்ல இருந்து எழும்பினாங்க. அப்படியே எஸ்ஸாயிட்டாங்க. மற்றபடி பொண்டாட்டியா வர்றவங்களுக்கும் The Descendants படத்தின் அம்மா மாதிரி பெரிசா வேலையில்லை. படம் முழுவதும் அப்படியே கோமா ஸ்டேஜில் இருக்கவேண்டிய நிலைமை.  பெரும்பாலும் ஹீரோவும் வில்லனும் மாத்தி மாத்தி பேசிக்கிணேயிருக்காங்க. ஆனா ஹொப்கின்ஸின் புத்திசாலித்தனமான டயலாக் எல்லாம் ரசிக்கக் கூடியவை. இடைவேளை வரை கொஞ்சம் நொண்டியடிக்கும் கதை, அதன் பின் எழுந்து நிற்கிறது. இறுதியில் க்ளைமேக்ஸிற்கு கொஞ்சம் முன்னிலிருந்து ஓடுகிறது.

எனிவே … அந்தோனி ஹொப்கின் ரசிகர்கள் ரசித்துப் பார்க்கலாம். த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் … ஹ்ஹ்ஹ்ம்ம்ம் பார்க்கலாம்.

படத்தின் ட்ரெயிலர் :

 

**********************************************************

முழுப்படத்தையும் ஆன்லைனில் பார்க்க இங்கே

**********************************************************

டிஸ்கி ட்ரெயிலர் -

ரிட்லி ஸ்கொட்டின் இயக்கத்தில் வரவுள்ள Prometheus திரைப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெயலர். ட்ரெயிலரின் அடிப்படையில் செமயான என்டர்டெயினராக இருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

 

 

அடுத்த பதிவில் சந்திக்கும்வரை,

ஹாலிவுட்ரசிகன்

The Girl With The Dragon Tattoo [2011]

poster_(mid)_(url=t$s$p$s$w500$s$5HAFwNpkZtlxNeNp382yioGAWiu.jpg)

 

ஷ்வீடிஷ் மொழியில் 2005ல் வெளிவந்து, 2008ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் சக்கைப்போடு போட்ட புத்தகத்தை, 2009ம் ஆண்டு ஸ்வீடனில் The Girl with the Dragon Tattoo என்ற பெயரில் 13மில்லியன் பட்ஜெட்டில் திரைப்படமாக்கப்பட்டு உலகமெங்கும் 100மில்லியனுக்கும் மேல் வசூல் செய்த திரைப்படத்தை மீண்டும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்போகிறேன் என்று வேறு யாராவது சொல்லியிருந்தால் லூசுப்பயல் என்று சொல்லிவிட்டு அவனவன் வேலையைப் பார்க்கப் போயிருப்பான். ஆனால் அறிக்கை விட்டது ஹாலிவுட்டின் சிறந்த டைரக்டர்களில் ஒருவர் எனச் ரசிகர்களால் கொண்டாடப்படும் டேவிட் ஃபின்சர்.

இதனால் தான் நானும் போனவருடம் த மில்லேனியம் ட்ரைலாஜியை பார்ப்பதற்கு டவுன்லோட் செய்திருந்தாலும், ஏன் வீணாக தெரியாத மொழியில் சப்டைட்டிலையும் வாசித்துக் கொண்டு கஷ்டப்படவேண்டும் என வைத்துவிட்டேன். அதனால் அது எப்படிப்பட்ட படம் எனத் தெரியவில்லை. ஆனால் இரண்டிற்கும் பெரிதாக ஒரு வித்தியாசம் இருக்காது என நினைக்கிறேன். பார்த்தவர்கள் சொல்லவும்.

thumb2

தொடர்ந்து கீழே வாசிக்கும் முன்னர் கொஞ்சம் பொறுங்க …. உங்களுக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா? ஏனென்றால் புத்தகங்கள் நிச்சயமாக ஒரு படத்தைப் பார்ப்பதைவிட உங்களை அக்கதையுடனும் பாத்திரங்களுடனும் ஒன்றவைக்கும் என்பது என் கருத்து, அனுபவம். மேலும் படத்தில் சொல்லப்படாத பல விடயங்கள் உங்களுக்குத் படிக்கும்போது தெரியவரும். இப்போ யோக்கியன் போல பேசும் நானும் இன்னும் புத்தகத்தைப் படிக்கவில்லை. பொறுங்க … ஏசாதீங்க. The Game of Thrones தொடர் இப்பொழுது வெகு தீவிரமாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், இது வெயிட்டிங். சீக்கிரம் வாசிப்பேன். வாசிக்க விரும்புபவர்கள் இன்டர்நெட்டில் தேடினால் டவுன்லோட் பண்ணிக் கொள்ளலாம்.

நாவலைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ளவேண்டுமானால், கனவுகளின் காதலரின் இந்தப் பதிவையும் சன்னாசியின் இந்தப் பதிவையும் வாசித்துவிடுங்கள்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மிகேல் ப்ளொம்க்விஸ்ட் ஒரு பெரிய கோடிஸ்வரனுக்கு ( தமிழ்ல ஏன் கோடிக்கு அப்புறம் ட்ரில்லியன், ஸில்லியன் போல சொற்கள் இல்லை? )எதிராக ஒரு வழக்கில் தோற்றுப் போய் இருக்கும் வேளையில் ஹென்றிக் வேன்கர் எனப்படும் ஒரு பணக்காரன் தொலைந்து 40 வருடங்களாகும் ஹாரியட் என அழைக்கப்படும் அவளின் பேத்தியின் மறைவின் மர்மத்தைக் கண்டுபிடிக்க அழைக்கிறான். கண்டுபிடித்தால், மிக்கேலின் வழக்கை அவன் பக்கம் சாதகமாக்கக் கூடிய சாட்சியங்களைக் கையளிப்பதாகவும் வாக்களிக்கிறான். முக்கிய மர்மங்களை அவிழ்க்க முயற்சிக்கும் மிக்கேலின் உதவிக்கு லிஸ்பெத் எனும் இளம்பெண் சிபாரிசு செய்யப்படுகிறாள். இவள் ஏற்கனவே மிக்கேலைப் பற்றி பல விடயங்களை ஹென்றிக்கிற்கு விசாரித்துக் கொடுத்தவள். இவர்களுக்கு மெல்ல ஹென்றிக்கின் பெரிய குடும்பம் அறிமுகமாகின்றது.

thumb1
இவ்வேளையில் லிஸ்பெத்தின் கார்டியன் பாரலைஸ் ஆக, அவளின் புது கார்டியனாக வரும் குடும்ப லாயர் அவளின் பேங்க் அக்கவுண்டின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். முதலில் பணம் வேண்டுமெனில் லாலிபாப் சாப்பிட வேண்டும் எனச் சொல்லும் அவன் பின்னர் அவள் மீண்டும் பணம் கேட்டுச் செல்லும்போது அவளை கட்டிவைத்து பலவந்தமாக செக்ஸ் டார்ச்சர் செய்கிறான். ரகசியமாக கமெராவில் அதைப் பதிவு செய்யும் லிஸ்பெத் மீண்டும் பணம் கேட்பது போல சென்று அவனைப் அவன் வழியிலேயே பழி வாங்குகிறாள். மேலும் அவளின் பேங்க் அக்கவுண்ட்டில் அவனின் பொறுப்பை விட்டுவிடுமாறும், மேலும் அவளின் நடத்தை நன்று என்பது போலவும் ரிப்போர்ட் பண்ணச்சொல்லும் அவள், தவறினால் வீடியோவை இன்டர்நெட்டில் போட்டுவிடுவேன் எனவும் மிரட்டுகிறாள்.

விசாரணை தொடரும்போது மிக்கேலின் மீது துப்பாக்கிச் சூடும், அவன் தங்கியுள்ள வீட்டின் முன்பு அவனது பூனை வெட்டப்பட்டு கிடப்பது எனப் பலவிதமான தடங்கல்கள் ஏற்படுகின்றன. இதை சமாளித்து ஓல்ட் ஸ்கூல் மிக்கேலும், ஹேக்கிங், இன்டர்நெட் போன்ற புதிய முறைகளைக் கையாளும் லிஸ்பெத் ஜோடியும் ஹாரியட்டின் மறைவின் பின் உள்ள மர்மத்தை எவ்வாறு கண்டுபிடித்தார்கள் … மிக்கேலுக்கு அவன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுக்க சாட்சியங்கள் கிடைத்ததா என்பதெல்லாம் திரையில் அல்லது டிவிடியில்.

படத்தின் முடிவில் ஸ்விஸ் படத்தை விட ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கென்று கேள்விப்பட்டேன். உண்மையோ தெரியவில்லை. சீக்கிரம் சொல்கிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

கதை என்று பார்த்தால், மெயின் மேட்டருக்கு வருவதற்கு ரொம்பவே நேரத்தை எடுத்துக் கொள்றாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த இருவரின் வாழ்க்கைப் பின்னணியைப் பற்றி மாறி மாறி காட்டுறாங்க. அப்புறம் தான் இந்த ரெண்டு பேரும் மீட் பண்ணி மிஸ்ஸிங் லேடியின் மர்மத்தை கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறாங்க. திரைக்கதையை மிக அழகாக அவரது பாணியில் ஃபின்ச்சர் வேகமாக கொண்டு செல்கிறார். படம் முதலில் க்ளுக்களை தேடுவதாகத் தொடங்கி கடைசிக்கட்டத்தில் திடீர் திருப்பத்தை கொடுக்கிறது. வெகு சிலரே வில்லன் யார் எனத் தெரிந்து ஷாக் ஆகுவார்கள். நானும் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட சிலரை லாக் செய்து வைத்திருந்தேன் (எல்லா த்ரில்லர்களிலும் இது என் வழக்கம். நினைப்பவன் வில்லன் என்றால் ஒரு சிறு சந்தோஷம்)

girl with dragon tattoo 2011
படத்தின் முக்கிய கேரக்டராக டானியல் க்ரெய்க்கை (மிக்கேல்) கூறினாலும் அவர் டம்மிப் பீஸு. இந்தப் படத்தின் மிக இன்ட்ரஸ்டிங் விடயம், அனேகமாக படம் பார்க்கும் எல்லாருடைய மனதிலும் இடம்பிடிக்கப்போவது கட்டாயம் கேர்ள் வித் ட்ராகன் டாட்டூ ரூனி மாராவாகத் தான் இருக்கும். சிறுவயதில் மனநிலை பாதிக்கப்பட்ட, வக்கிரமான, வித்தியாசமான ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரத்தை மிக அழகாக திரையில் உயிர்ப்பித்திருக்கிறார். கட்டாயம் நம்மூரு சின்னத்திரை அழுமூஞ்சிகளுக்கும், சில நடிகைகளுக்கும் போட்டுக் காட்டணும். இம்முறை ஆஸ்காரில் சிறந்த நடிகைக்காக பரிந்துரை செய்யப்பட்டும் இருந்தார்.

போட்ட காசை திருப்பி எடுத்துவிட்டாலும், லாபம் மடங்கில் இல்லை. போட்டது 90மில்லியன் … இதுவரை பொறுக்கியது 102மில்லியன். ஏற்கனவே அரைச்சுவிட்ட மாவை ஏன் மீண்டும் அரைப்பானேன் என நிறையப் பேர் படத்தை ஸ்கிப் பண்ணியிருப்பாங்க போல. ஆனால் த்ரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்து.

 

My Rating – 70/100

 

படத்தின் ட்ரெயிலர்

 

 

அடுத்த பதிவில் சந்திக்கும்வரை,

ஹாலிவுட்ரசிகன்

The Three Musketeers [2011]

folder

வெயிட் … இதுக்கு முன்னாடி நீங்க அலெக்ஸாண்டர் டுமாஸின் The Three Musketeers நாவலைப் படித்திருக்கீங்களா? …. என்னது இல்லையா? உங்களுக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் இருந்தால் அல்லது படத்தின் உண்மையான கதையைத் தெரிந்து கொள்வதில் இன்ட்ரஸ்ட் இருந்தால் கீழேயுள்ள லிங்கில் சென்று ஆன்லைனிலோ, அல்லது டவுன்லோட் பண்ணி உங்கள் ஈபுக் ரீடரில் அல்லது மொபைலில் வாசித்துக் கொள்ளுங்கள். அட்லீஸ்ட் படத்தைப் பார்க்கும் முன்பு நம் கதாநாயகர்களைத் தெரிந்து கொள்வது இன்னும் பெட்டர்.

புத்தகத்தை இங்கே க்ளிக்கிப் பெற்றுக் கொள்ளுங்கள்

இல்லை … நான் ரொம்ப பிஸி. நான் படத்தைப் பார்த்து ஆங்கில லிட்டரேச்சர் படித்துக் கொள்கிறேன் என்பவர்கள் கீழே படிங்க. ஆனா சொல்லிட்டேன் … ஒரிஜினல் கதைக்கு மசாலா தூவி(கொட்டி) உல்டா பண்ணி சமைக்கப்பட்டதே இந்தப் படம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
டார்டக்னன் (தமிழ்ல பெயர் சரியா?) மஸ்கட்டியராக வேண்டும் என்ற கனவுடன் கிராமத்திலிருந்து நகரிற்கு வருகிறான். வந்த இடத்தில் முன்பு ஒரிஜினல் மஸ்கட்டியர்களான, தற்போது ப்ளாட்பாரங்களான ஆர்தோஸ், போர்த்தோஸ், அராமிஸ் போன்றவர்களுடன் வம்பை வளர்த்துக் கொள்கிறான். அப்போது வரும் அரசக் காவல்ப்படைக்கு எதிராக இவன் மஸ்கட்டியர்களுடன் சேர்ந்து சண்டையிடப் போக, மஸ்கட்டியர்ஸ் வெற்றி பெற, டார்டக்னன் அங்கு இருக்கும் கொன்ஸ்டன்ஸ் என்ற ராணியின் நண்பிக்கு ரூட்டு விட … எல்லாரும் ஒன்னுக்குல ஒன்னாகிறாங்க.

thumb3

இது ஒருபக்கம் இருக்க, ஃப்ரான்ஸ் நாட்டின் கார்டினலுக்கு நாட்டை ஆள ஆசை. அதனால் ஃப்ரான்ஸ் ராணிக்கும் பக்கிங்ஹாம் ராஜாவுக்கும் ஒரு க்சிக் க்சிக் கனெக்சன் இருப்பதைப் போல் காட்ட போலி லவ்லெட்டர் ஒன்றை தயார்பண்ணி ராணியின் அறையில் வைக்கிறான். (உண்மையில் அப்படி ஒரு கனெக்சன் இருக்கும்)  ராணி அவர்களின் (தூ)ய காதலின் நினைவாக பக்கிங்ஹாம் ராஜாவுக்கு வைர நெக்லஸை கொடுத்தது போல காட்டுவதற்காக ராணியின் நெக்லஸையும் திருடி மிலேடி என்ற உளவாளிப்பெண் மூலம் இங்கிலாந்திற்கு அனுப்புகிறான். பின்னர் கார்டினல் (கிட்டத்தட்ட மந்திரி போன்றவர்) ராஜாவுக்கு நடந்ததை எடுத்துக்கூறி, ஒரு வாரத்தில் நடைபெறவுள்ள ரோயல் விருந்திற்கு ராணியை அந்த வைர நெக்லஸை அணிந்துவரச் சொல்லச் சொல்லி ஐடியா கொடுக்கிறான். கள்ளக்காதல் நிரூபிக்கப்பட்டால் ஃபிரான்ஸுக்கும் இங்கிலாந்திற்கும் யுத்தம் மூளும், பின்னர் வென்றுவிட்டால் ஃபிரான்ஸை ஆளலாம் என்பது இவனின் திட்டம். இத்திட்டத்தை அறிந்துகொள்ளும் ராணி, கொன்ஸ்டன்ஸ் மூலம் மஸ்கட்டியர்களின் உதவியை நாட, அவர்களும் இங்கிலாந்திற்கு பயணமாகிறார்கள்.

இதற்கிடையில் ஆர்தோஸிற்கும் மிலேடிக்கும் தொடர்பு இருந்ததும், பறக்கும் விமானங்களிற்கான வரைபடங்களை திருடியபின் மிலேடி பக்கிங்ஹாம் ராஜாவுடன் சேர்ந்து மஸ்கட்டியர்களுக்கு துரோகமிழைத்ததும் தெரியவருகிறது.

மீதி என்னவாயிற்று என்பதை பறக்கும் விமானச் சண்டைகள், கத்திச்சண்டைகள், என பரபர ஆக்சன் காட்சிகளுடன் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
thumb5

ஏற்கனவே மேலே சொன்னதுபோல நான் சிறுவயதில் படித்த த்ரீ மஸ்கட்டியர்ஸ் கதைக்கும், திரையில் பார்த்த மஸ்கட்டியர்ஸிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். ஒரிஜினல் கதையில் கொஞ்சத்தை வைத்துக் கொண்டு மற்றதையெல்லாம் திரைக்கதை எழுதுபவர் அவர் இஷ்டத்திற்கு சேர்த்திருக்கிறார்.

இங்கிலாந்தில் ராஜா காலத்தில் பறக்கும் விமானங்கள்? அதுவும் சாதாரண விமானமல்ல … விமானக் கப்பல் …  அடஅதுவும் விமானக்கப்பல் என்றால், த ப்ளாக் பெர்லை (The Pirates of the Caribbean) பறக்க வைத்தால் எப்படி இருக்குமோ, அது போன்ற விமானக்கப்பல். படக்குழுவினர் பைரேட்ஸ் படரசிகர்கள் போல.
சரி … விமானக்கப்பலாவது பரவாயில்லைன்னு பார்த்தா … பாத்திரங்களையும் அப்படியே மொடர்ன் பண்ணிட்டாங்க. மஸ்கட்டியர்களுக்கு கத்தி மட்டும் போதாது என்று புதுப் புது திறமைகளை கொடுத்துவிட்டாங்க. ஒருத்தன் என்னடான்னா படம் ஸ்டார்ட் பண்ணும்போது பேட்மேன் கணக்கா பாய்ந்து பறந்து அடிக்கிறார். அதுல பின்னாடி கேப் வேற. இன்னொருத்தர் ஜேம்ஸ்பாண்ட் கணக்கா சாகசமெல்லாம் காட்டுறாரு. ஹய்யோ ஹய்யோ … 
 
மில்லா ஜொவொய்க் இன்னும் ரெசிடென்ட் ஈவில், அல்ட்ராவயலட் படங்களின் தாக்கத்திலிருந்து வெளியே வரவில்லை போல. அவங்க பாட்டுக்கு கேப்டன் மாதிரி சுத்தி சுத்தி அடிக்கிறாங்க. மிஷன் இம்பாஸிபிள் டாம் க்ரூஸ் மாதிரி தொங்குறாங்க. ஓசியன்ஸ் படத்துல மாதிரி டான்ஸ் லேசர்ல வளைஞ்சு வளைஞ்சு போறாங்க. நிறைய இங்கிலிஸ் படங்களை காப்பி அடித்து எடுத்திருக்காங்க. ஓர்லாண்டோ ப்ளுமின் நடிப்பு ஓகே ரகம். மத்தவங்க யாருடைய நடிப்பும் பெரிதாக பேசும் அளவிற்கு இல்லை.
thumb9

மொக்கை வசனங்கள், உல்டா கதை என இருந்தாலும் படம் செம்ம ஸ்பீடு. நமக்கு ரெஸ்டு கொடுக்காமல் பரபரவென நகரும் காட்சிகள். அதிலும் ஆர்ட் டைரக்டருக்கு தனி சல்யுட். பிரமாண்டம் என்றால் சும்மா இல்ல … நம்மூரு ஷங்கரைப் போல பிரபிரபிரபிரமாண்டம். அதனால் மொக்கைப்படங்களையும் பார்த்துவிட்டு இன்பம் காணும் நம் ஃபிலாசபி பிரபா மாதிரி நானும் மூளையைக் கழற்றி வைத்துவிட்டு ரசித்தேன் (எங்க மாமியார் நாகம்மா மேல சத்தியமா எனக்கு மூளை இருக்குப்பா … நம்புங்க).
அடுத்த படத்திற்கும் இப்பவே எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க போல. அடுத்த வருடம் அனேகமாக இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்க்கலாம்.

நீங்களும் லாஜிக் பார்க்காமல், நோண்டாமல், எதையும் எதிர்ப்பார்க்காமல் ரசியுங்கள். படம் பிடிக்கும். டைம் வேஸ்ட் பண்ணாமல் ப்ரீ டயம் கிடைத்தால் மட்டும் பார்க்கவும். நல்ல படம் பார்க்க கடைசியாக எழுதிய The Help பட விமர்சனத்தை கொஞ்சம் பாருங்க.

My Rating – 57/100 


படத்தின் ட்ரெயிலர்
அடுத்த பதிவில் சந்திக்கும்வரை,
ஹாலிவுட்ரசிகன்

The Help [2011]

folder
இருக்கிற வேலையில ஒரு நல்ல ஆக்சன் படம் பார்க்கவே நேரமில்லை … இவன் என்னாடான்னா கண்ண கசக்கற பொம்மனாட்டிக படமா பார்த்து கொல்றானேன்னு நீங்க திட்டிகிட்டே வர்றது புரியுது பாஸ். போஸ்டரையும் கதையையும் பாத்துட்டு எஸ் ஆகிடுவோம்ன்னு நினைச்சுட்டு போனீங்கன்னா 2011ம் வருடத்தின் ஒரு நல்ல படத்தை தவறவிடுறீங்க. பீ கேர்ஃபுல் …
 
thumb5

இப்போ உள்ள பொருளாதாரத்திற்கு புருஷன் பொண்டாட்டி இருவரும் வேலைக்குப் போகாவிட்டால் கட்டுப்படி ஆகாது … உண்மை. ஆனால் பெரிய பெரிய போஸ்ட்டுகளில், உள்ள பணக்காரர்களின் பொண்டாட்டிங்க பண்ற அலப்பற இருக்கே … ஊர்ல சந்து பொந்துல இருக்கிற மாதர் சங்கங்கள் அனைத்திலும் மெம்பர் ஆகிக்கொள்வது. பின்னாடி ஒவ்வொரு நாளும் மீட்டிங், கெட் டுகெதர், சாரிடி ஃபங்க்சன் அப்படின்னு சொல்லிக் கொண்டு போய் ஊர்வம்பை அளந்துக் கொண்டு இருப்பது. இதுல இன்னொரு வகை கோஷ்டியும் இருக்கு. ஆன்மீகம் … அங்கங்கே புதுசு புதுசா முளைக்கும் சாமியார்களை எல்லாருக்கும் வணக்கம் வைத்தே நாட்களை ஓட்டுவது. பகவானை நம்புங்கள் … உங்களுக்கு என்ன வேண்டுமோ பகவானைக் கேளுங்கள். அவர் கைவிடமாட்டார் அப்படின்னு மனுஷி பெரிய உபதேசம் பண்ணிக் கொண்டு இருக்கும் வேளையில் புருஷன் வீட்டில் டீக்கு வழியில்லாமல் சரவண பவனில் டீ க்ளாஸை நக்கிக் கொண்டிருப்பார்.
 
இப்படி இரண்டு பேரும் ஊர் மேயும் வீடுகளில் புள்ள குட்டிகளை குளிப்பாட்டி சாப்பாடு கொடுப்பது? ஹவுஸ் மெயிட் …. மேலே சொன்னது போன்ற வீடுகளில் பொதுவான ஒரு சொல் இது … குறிப்பா நகர்ப்புறங்களில். கனவுத்தேசம் எனப்படும் The United States of Americaவின் 1960களின் காலப்பகுதியில் இருந்த ஹவுஸ்மெயிட்களின் அனுபவங்களையும், அமெரிக்கர்களின் நிறப்பிரிவினையின் முகத்தைக் காட்டும் படமே The Help.
 
thumb9

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிகிரியை முடித்துவிட்டு, ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்று எண்ணியபடி வீட்டிற்குத் திரும்பும் ஸ்கீட்டரிற்கு ஒரு அதிர்ச்சி. அவளை சிறுவயதில் இருந்து வளர்த்த கொன்ஸ்டான்டின் எனப்படும் ஹவுஸ்மெயிட் தற்பொழுது வீட்டில் இல்லை. அவள் வேலையை விட்டு அவளின் மகளோடு வாழச் சென்றுவிட்டாள் என அவளின் அம்மா சமாதானப்படுத்தினாலும், ஸ்கீட்டரின் மனது அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் திருமணமான தன் சகதோழிகளோடு நேரத்தைக் கழிக்கும் ஸ்கீட்டர், அவர்களது வீட்டில் வேலை செய்யும் கறுப்பின பெண்கள் மேல் அவளின் நண்பிகள் கொண்டுள்ள அபிப்ராயங்கள் பற்றியும், அவர்கள் காட்டும் நிறப்பிரிவினை பற்றியும் அவர்களை நடத்தும் விதம் பற்றியும் தெரிந்து கொள்கிறாள். சிறுவயதில் ஒரு கறுப்பினப் பெண்ணால் வளர்க்கப்பட்ட ஸ்கீட்டருக்கு, இப்பிரிவினை கோபத்தை வரவழைக்கிறது.
 
ஏபிலின் மற்றும் மின்னி ஸ்கீட்டரின் நண்பர்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள். ஸ்கீட்டருக்கு அந்நகரின் லோக்கல் பத்திரிகையில் வீட்டு நிர்வாகம், சமையல் போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வேலை கிடைக்க, அதற்கு ஏபிலின்னின் உதவியை நாடுகிறாள். ஹில்லி எனப்படும் ஸ்கீட்டரின் நண்பிகளில் ஒருத்தி, கறுப்பினப் பெண்களும் வெள்ளையர்களும் ஒரு டாய்லெட்டைப் பயன்படுத்தும்போது தொற்றுநோய்கள் பரவும் எனக் கூறி வெள்ளையர்களின் வீட்டு டாய்லெட்டை கறுப்பர்கள் உபயோகிக்க அனுமதி தரக்கூடாதென்றும், அவர்களுக்கு தனியாக வீட்டுக்கு வெளியே டாய்லெட் கொடுக்கவேண்டும் எனவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறாள். ஒருமுறை ஹில்லியின் வீட்டில் வேலை செய்யும் மின்னி கடும் மழையால் வெளியே செல்ல முடியாமல், ஹில்லியின் வீட்டு டாய்லெட்டைப் பயன்படுத்தும்போது அகப்பட்டு வேலையை விட்டு நீக்கப்படுகிறாள்.
 
thumb2 
இது போன்ற கொடுமைகளைக் கேள்விப்படும் ஸ்கீட்டர், நியு-யோர்க்கில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்றிற்கு இப்பணிப்பெண்களின் அனுபவங்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் எழுதி அனுப்ப கேட்கிறாள். உண்மை அனுபவங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம் என பதில் கிடைக்க, அவளின் நண்பிகளின் வீட்டில் வேலை செய்யும் பெண்களை நாடுகிறாள். இதற்கு முதலில் உதவ முன்வருவது ஏபிலின்னும் மின்னியும். வெளியே தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால், ஏபிலின்னின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பெயர்களையும், ஊரின் பெயரையும் மாற்றி எழுதுகிறார்கள்.

சமஉரிமை பற்றிப் பேசினாலே குற்றம் எனப்படும் காலக்கட்டத்தில் இவர்கள் எழுதுவது வெளியே  தெரிய ஏற்படும் விளைவுகள் தான் மீதிக்கதை.
 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

ஒரு அழகான சமூகப்பிரச்சினை பற்றிய படம் காமெடியோடு வருவது மிகவும் அபூர்வம். அப்படியே படத்தை எடுத்தாலும் காமெடி அதிகமாகி சொல்லவந்த சீரியஸான விஷயத்தை சொதப்பிவிடுவார்கள். த ஹெல்ப் கையில் எடுத்திருக்கும் விடயம் 1960களில் நடந்தது எனச் சொல்லப்படுகிறது என்றாலும் இன்றும் இப்படத்தில் வருவது போன்ற நிறைய சம்பவங்களை நாம் நேரில் பார்த்துக் கொண்டுத் தான் இருக்கிறோம். அமெரிக்காக்காரன் தோலின் நிறத்தைப் பார்க்கிறான் …. இங்கு நாம் அனைவரும் நிறத்தில் ஒன்றாக இருந்தாலும், ஜாதியையும் மதத்தையும் பார்த்து வீணாப் போகிறோம்.

த ஹெல்ப்பின் மெயின் கதை பல கிளைக்கதைகளுடன் தொடர்புடையது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்க்கைக்கான கதையும் ஃப்ளாஷ்பேக்கிலும், இடையில் வரும் டயலாக்குகளில் விவரிக்கும்போதும் எமக்கு தெரியவருகின்றன. திரைக்கதையை எழுதி, படத்தை இயக்கிவர் டேட் டெயிலர். நிறைய கிளைக்கதைகள் இருந்தாலும் நல்ல அழகான வசனங்களுடன் குழப்பமில்லாமல் தர மிகவும் பாடுபட்டிருக்கிறார் …. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
 
thumb1 
படம் மிக மெதுவாக ஆரம்பிக்கிறது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் …. வெயிட் வெயிட். இந்தப் படத்தில் வேகம் என்ற வார்த்தையே கிடையாது … இன்ட்ரஸ்டிங்கா ஆனால் (கடைசிவரை) மெதுவாக படம் நகர்கிறது. ஆங்காங்கே காமெடி தூவப்பட்டிருந்தாலும், சென்டிமெண்ட் தான் இங்கே மெயின் அப்போ இது கண்டிப்பா பெண்களுக்கான படம்தான் இல்ல?. சுருக்கமாக சொன்னால் த ஹெல்ப் காமெடி சென்டிமெண்ட் கலந்த ஒரு அழகிய திரை அனுபவம்.

படத்தில் டெக்னிக்கல் விடயங்கள், ஸ்டைலிஷ் மேக்கிங் என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை. ஆனால் இரண்டரை மணி நேரம் ஸ்ஸ்ஸ்ஸ் … யப்பா படத்தை எங்கும் தொய்வில்லாமல் கொண்டு செல்வது பிரமாதமான நடிப்பு தான். நடிப்பிற்கு நான் மார்க் போடுவதானால் 99/100. (நூறு மார்க் பவர்ஸ்டார் ஒருவருக்கு மட்டுமே தரவேண்டும் என பவர்ஸ்டார் தொண்டர் சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது). ஒருவரையும் நடிப்பு கம்மி எனக் குறை சொல்லமுடியாது. மின்னியின் கதாபாத்திரத்தில் நடித்த ஒக்டேவியா ஸ்பென்ஸர், மற்றும் சீலியா ஃபுட் ஆக வரும் ஜெஸிக்காவின் அந்த இன்னெசன்ட் கலந்த நடிப்பும் மிகவும் பிடித்திருந்தது. படத்தில் காமெடி முழுவதையும் ஒக்டேவியா பாரமெடுத்திருக்கிறார். அவரின் ஏற்றஇறக்கமுள்ள அக்சென்ட் இதற்கு மிகப் பெரிய பலம். அதிலும் ஹில்லி வேலையை விட்டு நீக்கியதும் மன்னிப்புக் கேட்டு சாக்லேட் பை ஒன்று செய்து கொடுத்துவிட்டு Eat-My-**பீப் (censored)** எனச் சொல்லும் இடம் அமர்க்களம். ஒக்டேவியாவின் நடிப்பின் திறமைக்கு, இவருக்கு ஆஸ்காரில் கிடைத்த சிறந்த துணைநடிகை விருதும் அத்தருணத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக ஏகோபித்த மனதுடன் கொடுத்த Standing Ovationஉம் மட்டும் போதும்.
 
thumb11 
ஆரம்பத்திலிருந்தே சென்டிமெண்ட் படம் எனக் கேள்விப்பட்டிருந்ததால் அழுதுவிடுவேனோ எனப் பயந்து பயந்தே படத்தைப் பார்த்தேன். நல்லவேளை …. ஒன்னும் ஆகல. ஆனால் படத்தின் கடைசித்தருணங்கள் … வெரி இமோஷனல். நான் கொஞ்சம் சென்ஸிடிவ்வான ஆளு. படத்துடன் சீக்கிரம் ஒன்றிவிடுவேன். எனக்கும் கொஞ்சம் ஓரிரு துளிகள் எட்டிப்பார்த்தது. எதற்கும் ஒரு ஹேங்கர்சீஃபை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு படத்தில் எதிர்ப்பார்க்கக்கூடிய அனைத்து விடயங்களும் இப்படத்தில் இருக்கின்றது. இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் இன்றே டவுன்லோட் பண்ணியோ, அல்லது ஆன்லைனிலோ பார்த்துவிடுங்கள். மிஸ் பண்ணாதீங்க. பண்ணினால் …. உங்களுக்கு கும்பீபாகம் நிச்சயம்.My Rating – 92/100


படத்தின் ட்ரெயிலர்


 
 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


மை கார்னர் - 

இப்பதிவு (என் மற்ற விமர்சனங்களும் சேர்த்துத் தான்) மிக நீளமாக இருப்பது போன்றோ, அல்லது கொஞ்சம் (அடப்பாவி … கொஞ்சமா??? )அறுவை/மொக்கையாக இருந்தாலோ தயவு பின்னூட்டத்தில் சொல்லுங்க. அட்லீஸ்ட் அனானியாக சரி. என் எழுத்துநடை இன்னும் செப்பமாக்க, விமர்சன நடையை சரியாக மாற்ற இது போன்ற கருத்துக்கள் மிகவும் முக்கியம்.

அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்
ஹாலிவுட்ரசிகன்.

Midnight In Paris [2011]

folder

நிறையப் பேர் வாழ்க்கையில் என்றைக்காவது கட்டாயம் இடம்பெறும் ஒரு விடயம், தன் வாழ்க்கையில் ஒரு கடந்தகாலத்தில், அல்லது அதற்கு முற்பட்ட ஒரு காலப்பகுதியில் வாழ ஆசைப்படுவது. இதற்குப் பெயர் தானுங்க நாஸ்டால்ஜியா (இப்படி ஒரு சொல் எனக்கு கருந்தேள் சொல்லித் தான் தெரியும்). எனக்கும் நாஸ்டால்ஜியா உண்டு. ஆல்பிரட் ஹிட்ச்காக், எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் சென்று அவர்களின் படங்களை புதிதாக மலைப்புடன் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும் எனப் பலமுறை நான் எண்ணியதுண்டு. கடந்து வந்த பள்ளிக்கூட நாட்களிற்கு மீண்டும் சென்று வாழ முடிந்தால்?

ஒவ்வொரு காலக்கட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு விதமான டைம் பீரியட் சுகமான ஒரு காலமாக இருந்திருக்கும்.  இதே போல ஆங்கில இலக்கியம் செழித்தது எனக் கூறப்படும் 1920ம் ஆண்டுகளின் பாரீஸ் நகரில் சென்று வாழ நினைக்கும் ஒரு எழுத்தாளனின் அனுபவங்கள் பற்றிய படமே மிட்நைட் மசாலா … சே … மிட்நைட் இன் பாரீஸ்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

கில் பென்டர் ஒரு திரைஎழுத்தாளன். நாவல் ஒன்றை எழுத எண்ணி, தனக்கு நிச்சயமாகி உள்ள இனெஸ் எனும் பெண்ணுடனும் அவளின் பெற்றோருடனும் பாரீஸிற்கு விடுமுறையில் வருகிறான். படம் தொடங்கி சற்று நேரத்தில் கில்லிற்கும், இனெஸிற்கும் அவளின் கல்லூரி நண்பனான போல் என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. போல் ஒரு நடமாடும் விக்கிபீடியா போல பாரீஸின் வரலாறு, புத்தகங்கள் என அவன் காணும் எல்லா விடயங்களையும் நன்கு அறிந்தவன் போல வளவளவென்று பேசினாலும், அவன் கூறும் விடயங்களின் நம்பகத்தன்மை பற்றி கில்லிற்கு திருப்தி இல்லை. அவன் அவர்களிடம் இருந்து ஒதுங்க நினைத்தாலும், இனெஸ் போலை அறிவாளியென்று நம்பி அவனின் காலைச் சுற்றி வந்துகொண்டிருப்பதால் கில் அவளை போல் உடன் விட்டுவிட்டு தனியாக பேய் வாக்கிங் போகும் டைமில் பாரீஸின் வீதிகளில் வாக்கிங் போகிறான்.

thumb2
நடு இரவு … 12 மணி … கில்லிற்கு அருகில் ஒரு கார் வந்து நிற்கிறது. காரிற்குள் இருக்கும் 1900 காலப்பகுதி உடையணிந்த சிலர் கில்லை தம்முடன் ஏற்றிச் செல்கின்றனர். கார் நிற்கும் இடம் ஒரு ரெட்ரோ ஸ்டைல் பார். கில் காரிலிருந்து இறங்கிப் பார்த்தால், அவன் இருப்பது அவன் வாழ ஏங்கிக்கொண்டிருக்கும் 1920ம் ஆண்டில்.

பாரிற்குள் செல்லும் இவனிற்கு ஸ்கொட் ஃபிட்ஸ்கரால்ட், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைக்கிறது. தொடர்ந்து நடக்கும் பேச்சுவார்த்தையில் ஹெமிங்வே கில் எழுதிக் கொண்டிருக்கும் நாவலை சரிபார்ப்பதற்காக கர்ட்ரூட் ஸ்டெய்ன் எனும் விமர்சகர் / கவிதையாசிரியரிடம் கூட்டிச் செல்வதாக கூறுகிறான். கில் தன் புத்தகத்தை எடுக்க பாரில் இருந்து வெளியே காலடி வைத்ததும், மீண்டும் அவன் இருப்பது நிகழ்கால 2000ம் ஆண்டுகளில்.

மறுநாள் கில் தன் அனுபவங்கள் பற்றி இனெஸிடம் பகிர்கிறான்.  ஆனால் இனெஸ் கில் ஊர் மேய்ந்துவிட்டு பொய் சொல்வதாக எண்ணி நம்ப மறுக்கிறாள். இதனால் நிரூபிக்க அவளை போல் அழைத்துச் செல்கிறான். ஆனால் நேரம் சென்றும் கார் வராததால், இனெஸ் சலித்துக் கொண்டு சென்றுவிடுகிறாள். அவள் சென்று சற்று நேரத்தில் கார் வர, மீண்டும் கில் 1920ம் ஆண்டிற்கு டைம் ட்ராவல். இம்முறை எழுதிய நாவலையும் கூடவே எடுத்துச் செல்வதால், ஸ்டெய்ன் கில்லின் புத்தகங்களை வாசித்து மேம்படுத்த ஒப்புக் கொள்கிறாள்.

இதற்கிடையில் அங்கு இருக்கும் அட்ரியானா என்ற பெண்ணினதும், கில்லினதும் கண்ணும் கண்ணும் நோக்கியா பண்ண, அவர்களுக்குள் ஒரு சிக்னல் கனெக்சன் உருவாகிறது. அட்ரியானா பிகாசோவின் (ஒலகமகா ஓவியர் ஒருத்தராம் ) காதலி. இந்தப் புதிய உறவால் மனங் குழம்பும் கில்லிற்கு தன் நிகழ்கால காதலியின் மேல் உள்ள காதல் உண்மையானதா என சந்தேகம் வருகிறது.

thumb1

ஒருமுறை நிகழ்காலத்தில் கில்லிற்கு அட்ரியானாவின் டைரி ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைக்கிறது. அதில் அட்ரியானா, தான் ஒரு அமெரிக்க எழுத்தாளனை சந்தித்தது பற்றியும் அவனிடம் காதல் வசப்பட்டது பற்றியும் எழுதியிருக்க, கில் உடனே ஆசையோடு அன்றிரவு 1920க்கு திரும்புகிறான்.

பின்னர் அங்கு சென்றபின் நடக்கும் சம்பவங்களையும், கில்லின் வாழ்க்கை எவ்வாறு திசைதிரும்பியது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் படத்தை எடுத்துப் பாருங்கள்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

கதை ரொம்ப சிம்பிளான கான்செப்ட் தான். நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கு (இதுபற்றி சி.பி தனி பதிவு போட்டு வுடி அலனிடம் அது ஏன் அப்படி, இவரு ஏன் இப்படின்னு நிறையக் கேள்வி கேப்பாருன்னு இதனால் அறியத்தருகிறேன்). இது ஃபிக்சன் இல்லை. பேண்டசி. அதனால … லாஜிக் பார்த்து பெரிய அப்பாடக்கர் ஆகும் ஐடியா எல்லாத்தையும் மூட்டை கட்டிவிடுங்க. கார்ல ஏறி இறங்கினா 1920. போற ரூமை விட்டு வெளியே வந்தா பழையபடி நிகழ்காலம். அம்புட்டுதேன்.

ஆனா டைரக்ஷன் ஸ்டைலிலும், மேக்கிங்கிலும், பின்னணி இசையாலும் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறார்கள். நான் இதுவரை வுடி அலனின் படங்கள் எதுவும் பார்த்ததில்லை. அவரோட பெஸ்ட்டு எல்லாம் ரொம்பப் பழையப் படங்களாமே? அதனால் அவர் பற்றியும், அவரின் இதற்கு முன்பான படங்கள் பற்றியும் இந்தப் பதிவில் நோ ஸ்பீக்கிங்!!! மே பீ பிறகு ஃப்ரீயா ரூம்போட்டு பேசலாம்.

thumb5 

ஆங்கில இலக்கியம் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு படத்தைப் பார்ப்பது உங்களைப் இன்னும் படத்துடன் ஒன்றவைக்கும். இல்லாவிட்டால் விடிய விடிய ராமாயணம் பார்த்துவிட்டு, அதிகாலையில் ராமனுக்கு சீதை என்ன முறை வேணுமாம் எனக் கேட்டது போலத் தான் நிலைமை இருக்கும். கடைசியில் படத்தை பேபேன்னு பாத்துவிட்டு விக்கிபீடியாவை நோண்டவேண்டியது தான் (நம்ம அனுபவம் இல்லைங்க. நாங்க எல்லாம் எச்சக்கல ஃபேமிலியாக்கும்.)

முதல் 10 நிமிடங்களுக்கு காட்டப்படும் அந்த மழை நேரத்தில் பாரீஸின் காட்சிகளும், பின்னணியில் இசைக்கும் ஜாஸ் இசையும் மனதை கட்டிப்போடும் என்பது நிச்சயம். கிட்டத்தட்ட பாரீஸ் டூர் போய்விட்டு வந்தது போன்ற ஒரு ஃபீலிங். அடக்கமான அளவான நடிப்பு ஓவன் வில்சனிடம் இருந்து …  கடைசியாக எப்போதோ சன் டீவியில் The Shanghai Knights படத்தை தமிழில் போட்டபோது பார்த்த முகம். இன்னும் அப்படியே தான் மனுஷன் இருக்கார். அட்ரியானாவாக வரும் அந்தப் பெண்ணும், இனெஸாக வரும் ஃபிகரும் (எங்கேயோ பார்த்த முகம்) நல்ல அழகு. இந்த முறை ஆஸ்காரிலும் சிறந்த படம், திரைக்கதை, டைரக்ஷன் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போட்டியிட்டது. ஆனால் விருது ஒரிஜினல் திரைக்கதைக்காக, வுடி அலனுக்கு மட்டுமே கிடைத்தது ( Congratulations Woody !!! ).

எந்த விதமான பரபரப்போ, அதிரடி காட்சிகளோ, நகம் Nail-biting சீன்களே இல்லாமல் நகரும் ஒரு காவியம். ஒன்றரை மணி நேரம் போரடிக்காமல் நிச்சயம் ஒரு ப்ளெஸன்டான திரைப்பட அனுபவத்தை கொடுக்கும் …. நீங்கள் ஆக்சன் டமாக்கா பைத்தியமாக இல்லாமல் இருந்தால்.

 

My Rating – 81/100


படத்தின் ட்ரெயிலர்

ட்ரெயிலரே பாரீஸின் அழகை சொல்கிறதே !!!

 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

முழுப்படத்தையும் ஆன்லைனில் பார்க்க இங்கே க்ளிக்குங்க

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிஸ்கி ட்ரெயிலர்

ஆக்சன் பைத்தியம் என்ற வகையில் மிக மிக மிக எதிர்ப்பார்ப்புள்ள, எதிர்வரும் மே மாதம் வரவுள்ள அவெஞ்சர்ஸ் படத்தின் இரண்டாவது புதிய ட்ரெயிலர் (பழசு கீழே Upcoming Movie Trailers பகுதியில் இருக்கு). ட்ரெயிலரே ஒரு மினி-ஆக்ஷன் படம் பார்த்தது போன்ற ஒரு ஃபீலிங்கைத் தருகிறது. எப்படியாவது ஒரு நம் நாட்டு தியேட்டர்ல போட்டாங்கண்ணா போய் பார்த்துவிட வேண்டும். இந்த வருட ஃபுல்-ஆக்சன் படம்னு சொல்லக்கூடிய படம் இது தான். இவங்க சண்டை போடுவது யார்கூட என்பது தான் தெரியவில்லை. கடைசியில் வரும் அந்த, அந்த, அந்த ( அது என்னன்னே சொல்லத் தெரியல. ரோபோவா, ஏலியனா? ) அது மட்டும் தான் எனக்குத் தெரிந்த இப்போதைய க்ளு. தெரிஞ்சா சொல்லுங்க.
 

We are not a team. We are a timebomb !!!!

 

தொந்தரவு இல்லாவிட்டால் ஒரு கீழே க்ளிக்கி ஒரு ஓட்டு போட்டுவிட்டு போகலாமே?