நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Body of Lies [2008]

folderThe Blade Runner, Gladiator, Hannibal, Black Hawk Down எனப் பல வெற்றிப் படங்களை இயக்கிய ரிட்லி ஸ்கொட் இன் இன்னொரு படைப்பு Body of Lies. Titanicஇல் அப்பாவிப் பையனாக வந்தது முதல் Inception, Shutter Island வரை நடிப்பில் கலக்கிய லியனார்டோ டிகாப்ரியோ, A Beautiful Mind, Gladiator, 3:10 to Yuma என்பவற்றில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய ரசல் க்ரோவ் மற்றும் மார்க் ஸ்ட்ரோங் என சிறந்த நடிகர்கள் கூட்டணி. போதாக்குறைக்கு உளவாளிகள் பற்றிய படம் என்பதாலும்,ட்ரெயிலர் வேறு அட்டகாசமாக இருந்ததாலும் ரொம்ப சுவாரஸ்யத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.எதிர்பார்ப்பில் கிட்டத்தட்ட 75வீதத்தை இந்தக் கூட்டணி நிறைவேற்றியுள்ளனர் ஆனால் நான் நினைத்தது போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக.



= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை
“I and the public know
What all schoolchildren learn,
Those to whom evil is done
Do evil in return."
 
படம் இந்த கவிதை வரிகளுடன் தொடங்குகிறது. உண்மையில் இந்த வரிகள் உலகப்போரின் போது ஜேர்மனியை மையப்படுத்தி எழுதப்பட்டது. (இலங்கைக்கு நன்றாகவே ஒத்துப்போகும் வரிகள்) ஆனால் சி.ஐ.ஏ உளவாளிகளை சுற்றி இடம்பெறும் படத்திற்கு ஏன் இந்த வரிகளை போட்டாங்கன்னு இன்னும் புரியல. ஒருவேளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த வரிகள் ஒத்துவருமோ தெரியாது. (நமக்கு அரசியல் அறிவு சுத்தமா இல்லைங்க. ஏன்னு தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க).
 
Body of Lies-fanart
 
ரோஜர் ஃபெரிஸ் ஒரு சி.ஐ.ஏ உளவாளி. (அவனுக்கு கல்யாணமாகி டிவோர்ஸ் ஆகிவிட்டது என்பது மட்டும் ஒரு வசனத்தின் மூலம் தெரியவரும்) அவனுடைய சூப்பர்வைஸர் இன் சார்ஜ் எட் ஹொஃப்மான். யூரோப் முழுவதும் குண்டுகள் வைக்க திட்டமிடும் ஒரு தீவிரவாதக் கும்பலைப் பற்றி ஆராய்ந்து அல்-ஸலீம் எனும் அதன் தலைவனைக் கைது செய்ய ஈராக்கில் தங்கியிருக்கிறான். ஆனால் எந்தத் தகவலையும் சேகரிக்க வழி இல்லை. ஏனென்றால் அந்தக் கும்பல் தொடர்புகளுக்கு மின்னஞ்சல், தொலைபேசி, இணையம் என எந்த முறையையும் பயன்படுத்துவதில்லை. ஓன்லி மௌத் அன்ட் டைரக் டீலிங். அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு துப்பு கொடுப்பதற்காக வரும் நிஸார் எனும் மனிதனும் எட்டின் அவசரத்தன்மையால் தீவிரவாதிகளிடம் மாட்டி கடத்தப் படும்போது ரோஜர் சித்திரவதைகளிடம் இருந்து காப்பாற்ற நிஸாரை சுட்டுக் கொல்கிறான். கிடைத்ததையும் தான் சொல்லிக் கேட்காமல் சொதப்பியதற்காக ரோஜர் எட்டிடம் கோபம் கொள்கிறான்.
 
அங்குத் தேடி இங்குத் தேடி கிடைத்த தகவல்கள் மூலம் கடைசியாக ரோஜர் ஜோர்டானுக்கு வந்து சேர்கிறான். அங்கு உதவிக்காக ஹானி சலாம் எனும் ஜோர்டானிய உளவுத்துறையின் தலைமை அதிகாரியை சந்திக்கிறான்.உதவி செய்ய சம்மதிக்கும் ஹானி கூறும் ஒரே வசனம் “என்னிடம் பொய் கூறக்கூடாது. இந்த விடயம் தொடர்பாக எதையும் எனக்குத் தெரியாமல் செய்யக்கூடாது”. ஒரு பக்கம் தனக்குத் அறிவிக்காமல், அவசரக்குடுக்கைப் போல செயல்படும் அதிகாரி எட், “எதையும் மறைக்காதே. அது உடம்புக்கு நல்லதல்ல” என்று எச்சரிக்கும் ஹானி என மற்றப்பக்கம் என இருவருக்கும் நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் ரோஜர் தீவிரவாதிக் கும்பல் பற்றிய பிரச்சினைகள், அமெரிக்க-ஜோர்டானிய உளவுச் சூழ்ச்சிகளை, படத்தின் இடையில் வரும் ஒரு நர்ஸுடனான காதல் என்பவற்றை எப்படி சமாளித்தான் என்பது திரையில்.
 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
 

அட … ரொம்ப நல்ல டீமா இருக்கே. ஸ்பை மூவி வேறு. இந்தப் படமும் நம்ம ஜேம்ஸ்பாண்ட் வகைல ஒன்னு தான் நினைச்சுப் பார்த்தா … இட்ஸ் எ டோடலி டிஃபரண்ட் எக்ஸ்பீரியன்ஸ். வழக்கமான உளவாளிப் படங்களில் வருவது போல அதிரடி சண்டைக்காட்சிகள், துப்பாக்கி வச்ச கார்கள், படத்துல வர்ற எல்லா பெண்களுடனும் படுக்கும் உளவாளி (நான் சொல்ற உதாரணம் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு செட் ஆகுதே) என்றும் இல்லாமல் உட்கார்ந்த இடத்தில் 20 x 20 அறைக்குள் இருந்து தீவிரவாதிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை முறியடிக்கும் படமாகவும் அல்லாமல் உண்மையான ஒரு உளவாளியின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்காங்க. 



thumb6

அதுக்காக படம் கொலகொலான்னு வெறும் சப்பையாப் போகும்ணு கணக்கு போடாதீங்க. ஆக்சன் காட்சிகள், கொஞ்சம் காதல் காட்சிகள், சில வன்முறை அப்படின்னு ஒரு ஸ்பை மூவியில் எதிர்ப்பார்க்கும் அத்தனை விடயமும் இதில் உண்டு.  ஆனால் இந்தப் படத்திற்கு காதல் கத்திரிக்கா இல்லாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அது வலுக்கட்டாயமா திணிக்கப் பட்டதாகவே தெரிகிறது.

படத்தில் வரும் முக்கிய நடிகர்கள் அனைவரின் நடிப்பு பற்றி குறை எதுவும் சொல்ல இல்லீங்க. ரோஜராக வரும் லியனார்டோ டிகாப்ரியோ, எட் ஆக வரும் ரசல் க்ரோவ், ஹானி ஆக நடித்திருக்கும் மார்க் ஸ்ட்ரோங் இலிருந்து அந்த நர்ஸாக வரும் பெண் வரை எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. லியனார்டோ பற்றி சொல்வதற்கில்லை. நல்லா நடிச்சிருக்கார். ஆனா என்ன தான் ஒட்டுத் தாடி வைத்தாலும் டைட்டானிக்கில் வந்த அந்த அப்பாவி ஜாக்கின் முகம் தெரிகிறது. ரசல் இப்படத்திற்காக கொஞ்சம் உடம்பு போட்டிருக்காரு. பின்விளைவுகளை யோசிக்காத அவசரக்குடுக்கையாக, சிலசமயங்களில் நமக்கு அந்த கேரக்டர் மேல் கோபம் வரும் அளவிற்கு நடிச்சிருக்கார். ஆனாலும் எனக்கு மார்க் ஸ்ட்ரோங்கின் நடிப்பு மிகவும் பிடித்தது. அந்த ஹான்ட்ஸம் லுக், அமைதியாக பேச்சு, காதுல பூ சுத்திட்டாங்க என தெரிந்ததும் கோபப்படும் இடம் என வரும் இடங்களில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். “You Americans, you are incapable of secrecy because you are a Democracy” எனக் கூறும் இடம் நச்.

படத்தின் இன்னொரு பலம் கமெரா. ஒரு இடத்தில் கார் RPG அடிபட்டு தரையில் உருண்டு செல்லும்போது அதற்குள் இருந்து எடுத்த விதம், மற்றும் அந்த உளவறியும் ஆளில்லா விமானத்திலிருந்து பார்ப்பது போன்ற ஏரியல் ஷாட்கள் என பல இடங்களில் கமெரா புகுந்து விளையாடி இருக்கிறது.



thumb5

படத்தின் கதை அமெரிக்கா-தீவிரவாதம்-மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய மிகவும் சூடான டாபிக்கை கொண்டு எடுத்ததால் டுபாயில் படத்தை எடுக்க தடை விதித்து விட்டார்களாம். பிறகு அமெரிக்காவுலயே செட் போட்டு எடுத்தாங்களாம். ரிட்லி உண்மையில் துப்பறியும் ஒரு உளவாளியின் பார்வையில் உலகம் எப்படி இருக்கும் என எடுத்துக் காட்டியிருக்கிறார். தத்ரூபமான திரைக்கதை, நல்ல நடிப்பு, நிறைய ட்விஸ்ட், சஸ்பென்ஸ் உங்களை படத்திற்குள் ஈர்த்தாலும் தேவையில்லாத காதல் காட்சிகள் வந்து ஒரு ஒட்டுதலை இல்லாமல் பண்ணிடுது.

ஆனால் கொஞ்சம் வன்முறையுள்ள, செக்ஸ் சீன்கள் இல்லாத, ட்விஸ்டுகளுடனான செயற்கைத்தனம் இல்லாத ஒரு உளவறியும் படம் ஒன்று பார்க்கணும்னு நினைச்சீங்கண்ணா திஸ் இஸ் எ வெரி குட் சாய்ஸ். அட்லீஸ்ட் நடிப்புக்காக சரி பார்க்கலாம்.



Body of Lies : 82/100

படத்தின் ட்ரெயிலர்




டிஸ்கி – அண்மையில் பார்த்த 5 படங்கள் Widget மற்றும் சில விடயங்களை கீழே உள்ள புதுப் பகுதியில் போட்டுள்ளேன். அதனால் இனி அடிக்கடி அந்த பகுதி பதிவுகளை விட அந்தப் பகுதி அதிகமாக அப்டேட் ஆகும். நான்காவது டேப்பில் தற்போதைக்கு, இனி வரவுள்ள புதிய ஹாலிவுட் திரைப்படங்களின் ட்ரெயிலர்கள் பற்றி போட யோசிக்கிறேன். யாராவது இன்னும் அதைப் பிரயோசனமாக்க இன்னும் நல்ல ஐடியாவக் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும் சாமி.

In Time [2011]

folderIn Time கிட்டிய எதிர்காலத்தில் நடக்கும் ஒரு ஃபிக்ஷன்-த்ரில்லர் வகையை சேர்ந்த படம். Andrew Niccol இன் இயக்கத்தில் Justin Timberlake, Amanda Seyfried மற்றும் பல இளவயது நட்சத்திரப் பட்டாளத்துடன், “காலம் பொன்னானது”, என்ற ஒரு வித்தியாசமான கான்செப்டை வைத்துக் கொண்டு களமிறங்கியிருக்கும் படம்.

மிகவும் நல்ல ஒரு ஸ்கோப் உள்ள இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட். நல்ல நடிகர் கூட்டணி.  திரைக்கதையின் நன்றாக படத்தில் பயன்படுத்தியுள்ளனரா? படத்தை சுவாரஸ்யமாக பார்வையாளனுக்கு தருவதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளனர் என்பதைப் பார்க்கலாம் வாங்க.





= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை

அனேகமாக பூமியில் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வருடத்தில் (ஒன்னுமே சொல்றாய்ங்க இல்ல) பொறக்குற மனுஷங்க எல்லாருக்கும் வாழ்க்கை 25 வருஷம் தான். அப்படி மரபணு முறையில் மாற்றங்கள் செய்துவிடுகிறார்கள். 25 வயது ஆனதும், கையில் ஒரு Count-Down கடிகாரம் தொடங்கும். யார் வேண்டுமானாலும் நேரத்தை டொப்-அப் செய்து கொள்ளலாம். (கிட்டத்தட்ட மொபைல் பக்கேஜ் ஒன்னைப் போல இல்லை?) அப்படி செய்வதன் மூலம் தொடர்ந்து இளமையாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தற்பொழுது நம் உலகில் நாம் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறோமோ, அதே போல அங்கு நேரம் கூலியாக, பரிசாக கொடுக்கப்படும். அட … அதான் ஒரு வருஷம் இருக்கே. அதுக்குள்ள வேலை செய்து நிறைய நாட்கள் சம்பாதித்துக் கொள்ளலாமேன்னு நீங்க நினைக்கலாம். ஆனால் அங்க இருக்கு ஒரு பிரச்சினை. உங்கள் வாழ்க்கைத் தேவைகளை நேரத்தை செலவளித்தே வாங்கவோ பெறவோ முடியும். உதாரணமாக கூலி வீடானால் அதன் மாதக்கூலி இரண்டு வாரங்கள், காப்பி ஒரு கோப்பை வாங்குவதானால் 5நிமிடங்கள் கொடுக்கவேண்டும். மனிதர்கள் தமக்கிடையே நேரத்தை கைகளை மேலாக இறுக்கிப் பிடிப்பதன் மூலம் நேரத்தைப் பெற முடியும். யாரிடம் அதிக நேரம் உள்ளதோ, அவனே பணக்காரன்.
thumb4

படத்தில் உலகம் 12 நேர வலயங்கள் எனப்படும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது செல்வந்தர்கள் வாழும் இடம் ஒரு வலயம், ஏழைகள் வாழ்வது ஒரு தனி வலயம் என வசதிக்கேற்றாப் போல பிரிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் வலயத்தில் மற்றவர்களிடம் இருந்து நேரத்தைப் பறிக்க கொள்ளை, கொலை என்பன நடப்பது வழக்கம்.  நம் ஹீரோ வில் சலஸ் (Will Salas) ஏழைகளின் நேர வலயத்தில் ஒரு அன்றாடங் காய்ச்சி.  வில் இன் தாயின் ஆசை செல்வந்தர்களின் வலயமான Time Zone 1 Greenwich இற்கு செல்வது. அன்று விலையுயர்வு காரணமாக  அவளிடம் இருக்கும் நேரத்தைவிட பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஓடி வந்து வில்லை சந்திக்கும் போது தாய் இறந்துவிடுகிறாள். ஒரு நாள் வில் பாருக்கு வரும் 100வருடங்கள் வாழ்நாள் கொண்ட மனிதனின் நேரத்தைக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் ஒரு கூட்டத்திடமிருந்து அவனைக் காப்பாற்றுகிறான். மறுநாள் காலை, அம்மனிதன் தான் ஏற்கனவே பல வருடங்கள் வாழ்ந்துவிட்டதாகவும் வாழ்க்கை அலுப்படித்து விட்டதாகவும் கூறி விட்டு Willக்கு அவனின் நூறு வருடங்களையும் கொடுத்துவிட்டு 5நிமிடங்கள் வைத்துக்கொண்டு இறந்துவிடுகிறான். ஆனால் மரணத்தை விசாரிக்கும் Time Keepers எனும் நேரத்தை கட்டுப்படுத்தும் போலிஸார், வில் 100வருடங்களுக்காக அம்மனிதனை கொலை செய்ததாக எண்ணி வில்லை துரத்துகிறது. வில் தன்வசம் அதிக நேரம் இருப்பதால் பணக்காரர்களின் Greenwich வலயத்திற்கு பயணமாகிறான்.

அங்குள்ள வீஸ் எனப்படும் ஒரு பெரிய செல்வந்தனினதும் அவனின் மகளான சில்வியாவின் அறிமுகமும் அவனுக்கு கிடைக்கிறது.போலிஸ் வில்ஐ கொலைக்குற்றத்தில் கைது செய்ய முயற்சிக்கும்போது வில் துப்பாக்கி முனையில் சில்வியாவை பணயக்கைதியாக வைத்து தப்பிக்கிறான். இதன் பினனர் போலிஸ்காரர்கள் மூலம் நேரத்தை பராமரிப்பதில் நடக்கும் குளறுபடிகள், மோசடிகள், பாதிப்புகள் என்பவற்றை தெரிந்து கொண்டு சில்வியாவின் உதவியுடன் நேரத்தை பாங்க் போன்றவற்றிலிருந்து கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறான். இதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் எப்படி அனைத்து மக்களும் பாரபட்சமின்றி சமத்துவமாக வாழுமாறு வில் செய்கிறான் என்பதே கதை.

thumb5
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மேலே குறிப்பிட்டது போல மிகவும் சுவாரஸ்யமான, புதிய வித்தியாசமான கதைக்களம். அவரவர் வாழ்க்கை அவர் கையில் என்பது போல நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையை வாழ உழைக்கவேண்டும் என்பது எனக்கு பட்ட மெசேஜ். படம் பார்க்கும் போது யோசித்தேன். இப்படியான சிஸ்டம் நமக்கு இருந்திருந்தால்??? படம் பார்த்து முடித்ததும் என் மனதில் தோன்றியது “நாம் தினமும் எத்தனை மணித்தியாலங்களை பதிவுகளுக்காக செலவு செய்கிறோம்.  செலவளியும் ஒவ்வொரு செக்கனும் வீணாகுவது உன் வாழ்க்கையல்லவா. இனியாவது கொஞ்சம் பிரயோசனம் எடுக்கப் பார்”. படத்தில் வரும் ஏழைகள் அடிக்கடி நம் நேரம் வந்துவிட்டதா எனப் கையைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய கொடுமை. நல்ல பல மெசேஜ்களை இயக்குனர் சொல்லியிருக்கலாம். அடித்து விளையாட நல்ல ஆடுகளம் இருந்தும் நம் இந்திய, இலங்கை அணிகள் தடுமாறுவது போல இயக்குனரும் மெதுவான திரைக்கதை, போரடிக்கும் இரண்டாம் பாகம் என அடிக்கடி நாம் எம் கடிகாரத்தைப் பார்க்க வைக்கிறார்.  2011ம் வருடம் X-Men : First Class, Rise of the Planet of the Apes (விமர்சனம் இங்கே) என வெற்றிப் படங்களை சுவைத்த 20th Century Fox நிறுவனத்திற்கு இந்தப் படம் ஒரு சிறு சறுக்கல். ஆனாலும் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. கான்செப்டை கேட்டவுடன் நல்லாயிருக்கேன்னு காசப் போட்டிருப்பாங்க.

படத்தில் அனைவருமே 25 வயதுடன் வயதாவதை நிறுத்திவிடுவதால் படத்தில் வரும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும், பின்னணியில் வரும் மனிதர்களும் கிட்டத்தட்ட அந்த வயதினர் போல காட்ட முயற்சித்து இருப்பது பாராட்டத்தக்கது. இதில் எனக்கு ஹீரோவான Justin Timberlake,  Amanda Seyfried இருவர் மட்டுமே 25வயதினர் போல் தோற்றமளித்தனர். Justin Timberlakeக்கு 2011இல் சுக்கிரன் உச்சத்தில் இருந்தான் போலயிருக்கு. ஏகப்பட்ட படங்கள் கைவசம். இப்படத்தில் Friends With Benefits (விமர்சனம் இங்கே) இல் காட்டிய நடிப்பை விட ஒருபடி மேலேயே நடித்திருக்கிறார். ஆனால் சென்டிமெண்ட் சீன்களில் கொஞ்சம் நடிப்பில் செயற்கைத் தனம் தெரிகிறது. கில்மா காட்சிகள் பெரிதாக இல்லாததால் நடிப்பை இதற்கு மேல் ஒப்பிடமுடியவில்லை. ஹி … ஹி.  படத்தில் இவரின் கரெக்டர் பணக்காரனான வீஸிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது கொஞ்சம் Robin-Hood பாத்திரத்தை எனக்கு ஞாபமூட்டியது.

thumb3

படம் எதிர்காலத்தில் நடப்பது போல் காட்டப்பட்டிருந்தாலும், Real Steel படம் போல அனேகமாக இப்படத்தில் வரும் இடங்களாகட்டும், கார்களாகட்டும் தற்போதுள்ளவை மாதிரியே தான் இருக்கின்றன. மனுஷனுக்கு இதுக்கு மேல முன்னேற்றம் தேவையில்ல என டைரக்டர் நினைச்சுட்டாரு போலருக்கு.

படம் கான்செப்ட் விளங்கியதும் எனக்கு மனதில் தோன்றிய முதல் கேள்வியே “நீ எவ்வளவு நேரத்த சும்மா கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வீணடிச்சுகிட்டிருக்க? அங்க பார் எத்தனப் பேரு நேரமில்லாம சாகிறாங்கண்ணு … நீ மட்டும் அங்க பொறந்து இருந்த … செத்தடா”. நேற்று சனிக்கிழமை படத்தைப் பார்த்து முடித்ததும் ஒரு பதிவு எழுதத் தொடங்க முதலில் ஒரு செக்கன் யோசித்தேன். எழுத எப்படியும் 2-3மணித்தியாலங்கள் போகும். எதுக்கு சும்மா ப்ளாக், ஃபேஸ்புக்குன்னு சும்மா டைம் வேஸ்ட் பண்ணி? போய் உருப்படியா ஒரு வேல வெட்டிய பார்ப்போமேன்னு. ஆனாலும் பொழுதுபோக்க (அடப்பாவி திருந்தமாட்ட போலருக்கே) வேறு எதுவும் கிடைக்காததால் இந்தப் பதிவு எழுதப்படுகிறது. அனேகமாக படம் பார்க்கும் அனைவருக்கும் இந்தக் கேள்வி எழுவது டைரக்டரினதும், கதாசிரியரினதும் வெற்றி.

நீங்கள் ஆக்சன், ஃபிக்சன் கதைகளை விரும்பிப் பார்ப்பவரானால் படத்தைப் பார்க்க தவறிடாதீங்க. இந்த விமர்சனம் என் பார்வை மட்டுமே என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். சிலவேளை உங்களுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கலாம்.

In Time : 56/100

Title: In Time
Cast: Amanda Seyfried, Justin Timberlake, Cillian Murphy, Olivia Wilde
Language: English
Release Date: October 28, 2011
Directed By: Andrew Niccol
Runtime: 109 minutes
Distributed by : 20th Century Fox
Budget: $40 million
Box Office: $143,827,637




UPDATE – பதிவை ஞாயிறு பகலிலிருந்து ட்ராஃப்டில் போட்டு வைத்திருந்தேன். நேற்று Real Steel படவிமர்சனத்தை போட்டதால் இன்னும் இரண்டு நாட்களில் இதைப் போடுவோம் என்று. இடையில் நண்பர் JZ அவர்கள் அவரின் விமர்சனத்தையும் எழுதியுள்ளார். முடிந்தால் அதையும் வாசித்து விடுங்கள். (அவரின் விமர்சனத்திற்கு இங்கே க்ளிக்கவும்)

டிஸ்கி –  நான் கைய வச்சிகிட்டு சும்மா இருக்க முடியாம என்னுடைய பழைய Feedburner லிங்க் மாத்திவிட்டதால், முன்பு Subscribe செய்து இருந்தவர்கள், http://feeds.feedburner.com/hollywoodrasigan என்ற புதிய முகவரியினை தங்கள் Readerஇல் போட்டுக்கங்க. Sorry for the Disturbance.

Real Steel [2011]

folderWWE, Smackdown, ECW, TNA,  எனப் பலதரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். தினமும் மனிதர்கள் வலிகளை பொறுத்துக் கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்க தமக்குள் அடித்துக் கொள்வது என்பது இவற்றில் சர்வ சாதாரணம். (இவற்றில் இவர்கள் உண்மையாக  அடித்துக்கொள்வது இல்லை என்பது வேறு விடயம்).  ஆனாலும் ரத்தம் வரும்வரை கொலைவெறித்தனமாக மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது, அதிலும் முக்கியமாக சாகும்வரை சண்டையிடுவது என்றால் கட்டாயம் அதை ரசிக்கும் இந்த நல்ல எண்ணம் படைத்த??? மனிதக்கூட்டம்.  எதிர்காலத்தில் இம்மனிதர்களின் கொலைவெறிக்கு ஈடுகொடுக்க முடியாமல், ரோபோக்களின் மூலம் சண்டையிட்டால்?? ரத்தம், காயம், உயிர்ப்பலி என ஒரு பிரச்சினையும் இல்லை.  வீணாகப் போவது வெறும் இரும்பு தானே?


அப்படி முன்னர் புகழ்பெற்ற பாக்ஸிங் வீரனாக இருந்து தற்பொழுது சோத்துக்கு சிங்கியடிக்க ரோபோ பாக்ஸிங் செய்யும் தந்தையையும், ரோபோக்களில் ஆர்வம் கொண்ட மகனையும் மையப்படுத்திய கதை தான் இந்த Real Steel.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை 

மேலே இரண்டாவது பாராவில் நான் சொன்ன இரண்டு வரிகளே போதும். அதைவைத்து நீங்கள் ஹாலிவுட் படங்களை அடிக்கடி பார்ப்பவர், ரசிப்பவர் என்றால் இந்நேரம் கதையை ஊகித்திருப்பீர்கள். எதுக்கு சும்மா. கதையை “டக்”என்று சொல்லிடுறேனே. (பதிவ கொஞ்சம் பெரிசாக்க இப்படி சிலசமயங்களில் பிட்டு போடணும். தொழில் ரகசியம்)


thumb3


சார்லி கென்டன் – புகழ் பெற்ற பாக்ஸிங் வீரர். ஏதோ செவ்வாய் தோஷமோ, ஜாதகத்துல கிரகமோ தெரியல. சர்ர்ன்னு சரிக்கி விழுந்துட்டார் (வாழ்க்கையிலப்பா) ஊரெல்லாம் கடன். என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது, ரெண்டு பேர் அவர பார்க்க வாராங்க. “உங்க மனைவி இறந்துட்டாங்க. 11 வருஷத்துக்கு முன்னாடி இல்லற வாழ்க்கையில் கிழிச்சதன் ரிசல்ட் மேக்ஸ் என்ற பேர்ல இருக்கு. கோர்ட்டுல வந்து பாரம் எடுத்துக் கொள்ளுங்க”ன்னு சொல்லிடறாங்க. சார்லியின் மனைவிக்கு பணக்கார அக்கா. அவ மகனான மேக்ஸை தத்தெடுக்க விரும்புகிறாள். அதனால மகனை தத்தெடுக்க சார்லியிடம் அக்காவின் கணவன் கேட்க ரேட் ஒன்னு பிக்ஸ் பண்ண கேட்க, “கரும்பு தின்ன கூலியா” என்பது போல வந்த தொல்லையை காசையும் வாங்கிட்டு கொடுத்துவிடுவோம் என சார்லி அட்வான்ஸும் வாங்கிடறான்.

ஆனால் மகன் மேக்ஸ் தன் தந்தை தன்னை காசுக்காக தத்துக் கொடுத்துவிட்டாரே என சார்லி மீது கோபமாக இருக்கிறான். இப்படியே கதை கொஞ்சம் கொஞ்சமா நகருது. ஒரு நாள் ரோபோ ஒன்று செய்ய சாமான் தேடப் போகும் போது, எதிர்பாராத விதமாக மேக்ஸ் ஒரு பழைய ஜெனரேஷன் ரோபோ ஒன்றை கண்டெடுக்கிறான். அது ஃபைடர் ரோபோக்கள் ப்ராக்டிஸ் செய்ய யூஸ் ஆகும் ரோபோ ஒன்று. அதற்கு உள்ள ஒரு வித்தியாசமான திறமை என்னவென்றால், அது தன்னெதிரில் உள்ளவர்களைப் பார்த்து அப்படியே இமிடேட் செய்யக்கூடியது. மேக்ஸ் அந்த ரோபோவின் திறமையை கண்டறிந்து சார்லி மூலம் குத்துச்சண்டை நுட்பங்களை அப்லோட் செய்கிறான். மேலும் அதனை இயக்க ரிமோட்-கன்ட்ரோல், Voice-Recognition என அதை மெருகேற்றுகிறான். பின்னர் WRC எனும் ரோபோச் சண்டை லீக் வர, இருவரும் அதில் எப்படி கலந்து ஜெயிக்கிறார்கள் என்பது தான் கதை (தெரிந்த கதையை மீதியை திரையில் காண்கன்னு சொல்லி போரடிக்க வைக்க விரும்பல).

thumb7


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


முதலாவதாக கதையைப் பற்றிப் பார்ப்போம். திரைக்கதை என்னவோ நாம ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என பலதரப்பட்ட மொழிகளில் பார்த்து சலித்து போன கதை தான். நோஞ்சான் போல இருக்கும் ஹீரோ (இங்கு ரோபோ). ஃபைட் பண்ணி ஜெயித்துக் கொண்டு போகும். கடைசியில் பெரிய வில்லனிடம் அடி வாங்கி அடி வாங்கி (பத்ரி,  M. குமரன்) கடைசில எப்படியாவது ஜெயிச்சுருவாரு. ஆனால் அதை சுவாரஸ்யமாக அலட்டாமல் மக்களுக்கு (முக்கியமாக குழந்தைகளுக்கு) கொண்டு சேர்த்த பணியை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர்.

சார்லியாக வருபவர் XMen சீரிஸில் Wolverine ஆக நடித்த John Hughman. வழக்கம் போல கலக்குகிறார். முதலில் அவருக்கேற்ற முரட்டு அலட்சியத்தன்மையுடனான கரெக்டராகட்டும், பின்னர் தவறை உணர்ந்து ரோபோவுடன் போட்டிகளில் கலக்குவதாகட்டும், தனக்கு இடப்பட்ட பணியை நன்றாகவே செய்கிறார். அதே சமயத்தில் முதலில் மேக்ஸ் மேலே கோபமாக இருந்தாலும் பின்னர் ஒரு தந்தை-மகன் உறவு வளரும்போது நல்ல கரெக்டராக மாறிவிடுகிறார்.  (நேக்கு என்னமோ இவர் Wolverineஇல் வரும் காட்சிகள் போன்றவற்றிக்கே சரிப்பட்டு வருவார் போல தோணுது) மேக்ஸாக வரும் சிறுவனும், Atomஎனும் ரோபோவும் செய்யும் போட்டிகளுக்கு முன்பான டான்ஸ் போன்றவை என் போன்ற??? சிறு பிள்ளைகளை ரசிக்கவைக்கும்.  கடைசியில் வழக்கமான நம் தமிழ்ப்படங்கள் போல ரோபோ விழுந்து விழுந்து அடிவாங்கும்போது இதோ இன்னும் கொஞ்சம் நேரத்தில் …….. ஒரே குத்து … ஜெயித்து விடுவார். படம் முடிந்துவிடும் என தெரிந்தாலும் ஃபைட் சீன்கள் கொஞ்சம் ரசிக்கவே வைக்கிறது. இல்லையென்றால் கடைசி ஃபைட் முடிந்தபின் Atomஇன் வெற்றிக்காக என் மனம் சந்தோஷப்பட்டது ஏன்???

thumb10

கிராபிக்ஸ் நல்லாவே பண்ணியிருக்காங்க. ஆனால் படத்தின் அந்த Futuristic லுக் ரோபோக்களில் மட்டுமே தெரிகிறது. மற்றபடி படத்தில் வரும் இடங்கள், கார், போன்களுக்கும் தற்போதுள்ள நிலைமைக்கும் பெரிதாக வித்தியாசப்படவில்லை.

பெரியவர்களுக்கு இந்தப் படம் எந்தளவு பிடிக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் சுட்டிகள் நல்லா ரசிப்பாங்க. குடும்பத்துடன் ஒரு விடுமுறையில் படம் பார்க்கவேண்டும் என்றால் ஒருமுறை பார்த்துவிடுங்களேன்.

Title: Real Steel Cast: Hugh Jackman, Dakota Goyo, Evangeline Lilly
Language: English
Release Date: October 7, 2011
Directed By: Shawn Levy
Runtime: 127 min
Distributed by : Touchstone Pictures (USA)
Budget: $110 million
Box Office: $292,493,410



Real Steel : 64/100


டிஸ்கி - இந்தப் படம் போல நான் விமர்சனம் எழுதிய சில படங்களும் ஏற்கனவே விமர்சிக்கப்பட்டிருப்பதால் புதிதாக “அண்மையில் பார்த்தவை” என்ற Gadgetஇனை ப்ளாக்கின் இடது பக்கம் போட்டுள்ளேன். அதிலுள்ள படங்களுக்கு நான் ஏற்கனவே தமிழ் விமர்சனங்கள் வாசித்திருந்தால் அதில் லிங்க் கொடுத்துவிடுகிறேன். (நமக்கும் கொஞ்சம் டைம் மிச்சம் ஆகும் பாருங்க) … இல்ல வேணாம் நீ பேசாம எழுதிரு அப்படின்னு நினைச்சீங்கண்ணா தயவு செய்து உங்கள் கருத்தை கீழே போட்டுவிட்டு போங்க.

50/50 [2011]

I am sorry ... உங்களுக்கு கான்சர்.
.................................
.................................
.................................
டாக்டர் - சார் ... சார் ... நான் பேசுறது கேக்குதா? (எப்படிய்யா கேக்கும்? எப்படி கேக்கும்? அதான் எல்லாம் போச்சே.)
இப்படி டாக்டர் உங்களிடம் சொல்லிவிட்டால் எப்படி இருக்கும்? சொன்னால் அனேகமானவர்களின் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும். முந்தி எல்லாம் தமிழ் சினிமால இப்படி ஒரு சீன் வந்தா போதும். ஹீரோ அவர் இஷ்டத்திற்கு உலகமே இருண்டு போய் சுற்றி இருக்கும் எல்லாமே Out-of-Focus ஆகின மாதிரி எல்லாம் ஆக்சன் பண்ணி சோகப்பாட்டு பாடி நம்ம கண்ணுல தண்ணி வந்து கடைசில இம்சை தாங்கமுடியாம நாமளே “பேசாம சீக்கிரம் செத்து தொலைப்பா” என்று சொல்லிவிடுற ரேஞ்சுக்கு இருக்கும் அவரின் நடிப்பு.
இங்கும் அப்படித்தான். ஹீரோக்கு முள்ளந்தண்டில் ஷ்வனோமா நியூரோ#%*&^#%^#( ன்னு வாய்ல நுழையாத ஒரு அரிய வகை ட்யூமர். ( பேசாம கான்சர்னு சொல்லேன்யா? நாம இத வச்சி எக்ஸாமா எழுதப்போறோம்? ) ஹீரோக்கு குணமாகக்கூடிய வாய்ப்புத் தான் படத்தின் டைட்டில்.

50/50
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
படத்தின் கதை :
 
நம் படத்தோட ஹீரோ அடம் (Adam). ரேடியோ ஒன்றில் ப்ரொடியுசர். அழகான கேர்ள்பிரண்ட் ரேசல் (Rachel). கேன்சர் பற்றிய நியூஸ் கேள்விப்பட்டதும் அப்படியே ஷாக் ஆகிடுறாரு. ஆனாலும் அவனுடைய கேர்ள்பிரண்ட் அடமுக்கு துணையாக இருப்பேன் எனக் கூறி ஆறுதல் அளிக்கிறாள். கூடவே ஒரு நாயும் வாங்கிக் கொடுக்கிறாள். ஆனால் ஹாஸ்பிட்டலுக்கு வராமல் “எனக்கு அங்குள்ள நெகடிவ் எனர்ஜி ஒத்துவரவில்லை என அதற்கு காரணமும் கூறுகிறாள். (சம்திங் ராங்)


அடமின் க்ளோஸ் பிரண்ட் கைல் (Kyle) நோய் பற்றிக் கேள்விப்பட்டதும் இதுவும் சூதாட்டம் போலத் தான். பிழைக்க நிச்சயம் வாய்ப்புண்டு என தேற்றுகிறான். அத்தோடு முக்கியமான நேரங்களிலும் (மொட்டை அடிப்பது, கான்சர் பேஷன்ட்களுடன் நேரம் செலவளிப்பது) அவனுடன் கூட இருந்து கவனிக்கிறான். இடையில் அடமின் தெரபிஸ்ட்டாக வரும் காதரீன் (Katherine) மீது அடமிற்கு ஒரு சின்ன இது. கைல் அடமின் நோயை வைத்து பார் போன்றவற்றில் பெண்களை அனுதாபம் மூலம் மடக்க முயற்சிக்கிறான்.

சில நாட்களில் அடமிற்கு அவனுடைய கேர்ள்பிரண்ட் அவளுடன் வேலை செய்யும் இன்னொரு ஆர்டிஸ்டுடன் தொடர்பு வைத்திருப்பது கைல் மூலமாக தெரியவருகிறது. (நான் சொன்னேன்ல ... சம்திங் ராங்) உடனே வீட்டை விட்டு துரத்தி விடுகிறான். பின் நண்பனும் தன் நோயை வைத்து தன்னை அவனின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறான் என அவனையும் விட்டு விலகுகிறான். ஆனால் அன்றிரவே கைல் புல்லா குடிச்சிட்டு மட்டையாகிவிடுவதால் அவனை வீட்டிற்கு விடச் செல்லும்போது, அங்கு கைல் Facing Cancer Together என்ற ஒரு புத்தகத்தை படிப்பது தெரியவருகிறது.


அவனுடைய சின்ன லவ் என்ன ஆயிற்று? அடம் பிழைத்தானா? போன்றவை படத்தில். இறுதியில் வாழ்க்கைக்கு முக்கியமானவை என்ன, முக்கியமானவர்கள் யார் என்பதை தெரிந்துகொள்கிறான் அடம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நான் கான்சரை வைத்து வெளிவந்த ஒரு சில படங்கள் பார்த்திருந்தாலும் (A Walk to Remember ...) சற்று சிரிக்கவைத்த காமெடியான படம் என்றால் அது இதுதான். (ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு) செயற்கைத்தனமான செய்கைகள் இல்லாத காரணத்தினாலோ, அல்லது மிகவும் யதார்த்தமான காட்சிகளாலோ சில இடங்களில் நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

thumb6

இந்தப் படம் திரைக்கதை எழுதிய Will Reiser என்பவரின் வாழ்க்கையை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது. அவரும் நம் ஹீரோ போல முதுகெலும்பில் ஏற்பட்ட கேன்சரை எதிர்கொண்ட போது ஏற்பட்ட அனுபவங்களை வைத்தே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அப்போது அவருக்கு உதவியாக இருந்தவரும் படத்தில் நடிக்கும் செத் ரோகன்.

அடம் ஆக நடிப்பவர் 500 Days of Summer, Inception இல் நடித்த கோர்டன்-லெவிட் (Gordon-Levitt). நம் தனுஷ் மாதிரி பக்கத்து வீட்டுப் பையன் போல மிகவும் சாதாரணமான நடிப்பின் மூலம் கவர்கிறார். ஆனாலும் முந்தைய படம் போல இல்லாமல் இதில் சற்று உணர்ச்சிகள் கூடிய ஒரு பாத்திரம். ஆனாலும் அசால்டாக நடித்திருக்கிறார். கான்சர் பற்றிக் கேள்விப்பட்டதும் டாக்டரிடம் சாதாரண ஒரு இளைஞன் போல “ஆனாலும் நான் குணமாகிவிடுவேன். இல்லையா” எனக் கேட்கும் இடமும், ஆபரேஷனுக்கு முன் அட்ஸ்ஹைமர்ஸ் நோயுடைய தந்தையிடம் பேசும் இடமும் அருமை.

அடுத்த முக்கிய கதாபாத்திரம் என்றால் அது கைல் கதாபாத்திரத்தில் நடித்த செத் ரோகன் (Seth Rogen). நிஜ வாழ்க்கையில் செய்ததையே மீண்டும் நடிப்பதாலோ என்னவோ அடமுடன் சேர்ந்து வரும் சீன்களில் பட்டைய கிளப்புறார். அந்த சீன்கள் அவருடைய நடிப்பிற்கு நன்றாகவே சூட் ஆகிறது. மற்றும் தெரபிஸ்டாக நடித்த Anna Kendrick, அடமின் பெற்றோராக வருபவர்கள், கான்சர் பேஷன்டாக வருபவர்கள் என அனைவரின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.

24 வயதான தெரபிஸ்ட்டுடன் நேரம் செலவளிக்கும் போது அவள் ஆறுதலுக்காக தொடுவது போன்றவற்றை முதலில் சங்கடத்துடன், கோபத்துடன் ஒதுக்கும் அடம், பின்னர் சற்று சற்றாக அவளுடன் ஒரு கெமிஸ்ட்ரியை வளர்த்துக் கொள்ளும் விதத்தை காட்டியது அழகு.

thumb2



Title: 50/50
Cast: Joseph Gordon-Levitt, Seth Rogen, Anna Kendrick
Language: English
Release Date: September 30, 2011
Directed By: Jonathan Levine
Runtime: 100 min
Distributed by : Summit Entertainment (USA)
Budget: $8 million
Box Office: $39,187,783 






50/50 : 100/100

Dexter - (2006 - Present) தொலைக்காட்சி சீரீஸ்

முந்தானை முடிச்சு, தென்றல், நாதஸ்வரம், அனுபல்லவின்னு ஒரே கதையை கொஞ்சம் வித்தியாசமான டெக்னிக்கையும், பின்னணி இசையும் மிக்ஸ் பண்ணி மாவாட்டி முழுநாளும் ஒரே இம்சை. தொலைக்காட்சி சீரீஸ்ன்னாலே ரெண்டு சீனுக்கொரு முறை மூக்கை சிந்தவச்சு தொலைக்காட்சி நாடகம்னா இப்படித்தான் இருக்கும்னு ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணிட்டாங்க இந்தியாவுல. அதுதான் எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் மேற்கு பக்க தொலைக்காட்சிகளை எட்டிப் பார்ப்போம். விதவிதமான வகைகளில் க்ரைம், த்ரில்லர், சஸ்பென்ஸ், காமெடி என கலந்துகட்டி வெளுத்து வாங்குறாங்க.

சரி நாம இன்றைய டாபிக்குக்கு வருவோம்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான அடிக்ஷன். (அடக்க முடியாத ஆசை ) ஒருவிதமான போதை போல. உதாரணமாக தற்பொழுது பெரும்பாலானவர்களுக்கு தினமும் முகநூலை (Facebook) (நமக்கு இல்லப்பா. ஆனால் இணையத்தில் சிறிது பைத்தியம் உண்டு) அல்லது பதிவுலகத்தை தினம் தரிசிக்காவிட்டால் என்னமோ செய்து முழுநாளுமே ஓடாதது போல தோன்றி என்னன்னமோ செய்யும். இதைப் போல் வித்தியாசமான அடிக்ஷன் உடைய ஒருவனின் கதையைத் தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.

உலகமே இப்பொழுது தனுஷின் "கொலைவெறியுடன்" சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையாகவே ஒருவனுக்கு கொலையில் வெறி இருந்தால் (அதாவது கொலை செய்வதில் ஒரு அடக்கமுடியா வெறி)? அது போதாதென்று பாசம், துயரம் போன்ற சமூக உணர்வுகள் வேறு மிஸிங்கா இருந்தால்? அதை எவ்வாறு சமாளித்து சமூகத்தில் வாழ்வது? Welcome to the world of Dexter Morgan.



டெக்ஸ்டர் மோகன். ஹான்ட்ஸம் சார்மிங் ஃபெல்லோ. அனைவருக்கும் தினமும் doughnut வாங்கி வரும் ப்ரெண்ட்லியானவர். மையாமி மெட்ரோ குற்றப்பிரிவு துறையில் ரத்தப் பரிசீலனை துறை (Blood Splatter) எக்ஸ்பர்ட். அதாங்க ... ஒருத்தரை அடிச்சு கொன்றால் ரத்தம் தெறிக்கும்ல? அந்த ரத்தம் சிதறியிருக்கும் விதம், வழிந்துள்ள விதத்தை வைத்து அந்த கொலை எப்படி நடந்தது என கண்டுபிடிப்பது. ஆனால் இதெல்லாம் டெக்ஸ்டரின் ஆபிஷ்யல் டியூடி. வேலை இல்லாத ஃப்ரீ டைம்ல அவருக்கு இன்னொரு மறுபக்கம் இருக்கு. அது என்னன்னு தான் நான் மேலே சொல்லியிருக்கேன்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

சிறுவயதில் டெக்ஸ்டரின் கண் முன்னே அவனது தாய் ஒரு போதைப்பொருள் விற்பவனுக்கு எதிராக பொலிஸுக்கு சாட்சி கூறினாள் என துண்டம் துண்டமாக வெட்டப்படுகிறாள். ரத்த வெள்ளத்தில் இருந்த குழந்தையை அங்கு வரும் ஹாரி எனும் பொலிஸ்காரர் எடுத்துச் சென்று வளர்க்கிறார். (ஏனென்று ஏதோ ஒரு சீசனில் ரீசன் வரும். மறந்துபோச்சு) ரெண்டு நாட்கள் ரத்தத்தில் இருந்ததால் அவனது மனது ஆழமாக பாதிக்கப்பட்டு ரத்தத்தின் மேலும் கொலை செய்வதிலும் ஒரு ஆர்வம் வருது.

இதை ஹாரி கண்டுகொண்டு அவனின் வெறியை கெட்டவர்கள் மீது டைவர்ட் பண்ணுறாரு. அதாவது கொலை செய்துவிட்டு (கொலை மட்டுமே. களவு, ரேபிங் காய்ஸ் ஓகே) சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருப்பவர்களை தேடிப் பிடித்து கொல்வது. அதற்காக அவனுக்கு டார்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது, கொன்றபின் எவ்வாறு தடயங்களை அழிப்பது, மற்றும் சமூகத்தில் எவ்வாறு சாதாரண மனிதன் போல நடிப்பது என ட்ரெயின்ங் கொடுக்கிறார். ஹாரிக்கு டெப்ரா என ஒரு மகளும் உண்டு. என்னடா நம்ம அப்பா தத்தெடுத்த புள்ள கூட டைம் செலவளிக்கிறாரு ... நம்மள கணக்குல எடுக்குறாரு இல்லயே என ஒரு சின்ன வருத்தம். சில நாட்களில் ஹாரி இறந்துவிட டெக்ஸ்டர், டெப்ரா இருவரும் மையாமி மெட்ரோவில் வேலைக்கு போறாங்க. டெப்ரா தன் தந்தைக்கு தன்னை நிரூபிக்க ஹோமிசைட் பிரிவில் டிடக்டிவ்வாக ஆசைப்படுகிறாள்.

மையாமி மெட்ரோவில் டெக்ஸ்டர், டெப்ராவுடன் வேலை செய்யும் படிஸ்டா (டெக்ஸ்டரின் ப்ரண்ட்), வின்சன்ட் மசூகா (செக்ஸ் எக்ஸ்பர்ட், காமெடியன்), மரியா (ஹோமிசைட் Lieutenant) போன்றவர்களுக்கும் கதையில் பங்குண்டு.

மையாமி நகரில் சில “விலைமாதுக்கள்” கொலை செய்யப்படுகிறார்கள். சீரியல் கில்லிங்ஸ். கொலைன்னா சும்மா கொலை இல்ல ... உடம்பு துண்டுகளாக வெட்டப்பட்டு அந்த பாகங்களில் சற்றுகூட இரத்தம் இல்லாதவாறு நகரின் ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படுகிறது. ஆனால் வைக்கப்படும் அந்த இடங்கள் டெக்ஸ்டரின் இறந்தகால வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்க டெக்ஸ்டர் கொலையாளி தனக்கு க்ழூ கொடுக்கிறான் என நினைக்கிறான். பின்னர் நடக்கும் சந்தர்ப்பங்களும் அதை உறுதி செய்ய, கொலையாளி யார்,  கொலையாளிக்கும் டெக்ஸ்டருக்கும் என்ன நடந்தது என்பதை டீவிடியிலோ தரவிறக்கியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இது முதல் சீசனின் கதை.

ட்ராமா ஆரம்பிச்சதும் டெக்ஸ்டர் தனக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருக்கிறதாக சொல்றாரு (Narration) (ஆ சொல்ல மறந்துட்டேன் ... சீரீஸ் முழுவதும் இவ்வாறு டெக்ஸ்டர் அடிக்கடி மைன்ட்வாய்ஸ்ல பேசுவாரு). பெயர் ரீட்டா ... வித் டூ சில்ட்ரன். எக்ஸ் புருஷன் ஜெயிலில். முதலாவது சீசனில் அவன் திரும்பி வந்துவிட அவனை எப்படி டெக்ஸ்டர் சமாளித்தான் என்பது திரையில். பின்னர் இருவருக்கும் லவ் மேலும் டெவலப் ஆகி கல்யாணம், முதலிரவு குட்டி வாரதெல்லாம் அடுத்தடுத்த சீசன்களில்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் வந்துள்ளன. முதல்ல ஆறாவது சீசன்ல முடிக்கிறதா சொன்னாலும் இப்ப இன்னும் இரண்டு சீசன்களுக்கு கதையை இழுத்திருக்காங்க. (6வது சீசன்ல ரெண்டு ட்விஸ்ட்கள் உண்டு. 7வது சீசன்ல தான் என்ன நடக்கப்போவுதுன்னு தெரியும்). ஒவ்வொரு சீசனிலும் சராசரியாக 50நிமிடங்கள் ஓடும் 12 எபிசோட்கள். ஒவ்வொரு சீசனும் டெக்ஸ்டரின் வாழ்வில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், மையாமி நகரில் புதுசு புதுசா முளைக்கும் சீரியல் கில்லர்ஸையும் டீல் பண்ணும் விதம் பற்றி விளக்கியிருப்பாங்க. முதலாவது இரண்டாவது சீசன்கள் செம இன்ட்ரஸ்டிங். மூன்றாவது சீசனின் பின் சற்று (சற்று தான்)  ஸ்பீட் குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங். ஆனா நீங்க இந்தியன் சீரியல்கள் பார்த்தவராக இருந்தால் இப்படி எல்லாம் ஃபீல் ஆகாது. மீண்டும் 4, 6 ஆம் சீசன்கள் பழையபடி பக் டூ பேஸ்.

இந்த சீரீஸ் Jeff Lindsay என்பவரால் எழுதப்பட்ட கதைகளை தழுவி எடுக்கப்பட்டவை. வித்தியாசமான கதைக்களத்தால் நிறைய ஆடியன்ஸை சம்பாதித்தது. இதுவரை Dexterக்கு கிடைத்த அல்லது Nominate செய்யப்பட்ட விருதுகள்.

Dexter has been nominated for 19 Primetime Emmy Awards, awarded in the category of both Outstanding Drama Series and Outstanding Lead Actor in a Drama Series (for Michael C. Hall), 3 times in a row, from 2008 through to 2010. Dexter has also received over a dozen Creative Arts Emmy Awards. It has also been nominated for 7 Golden Globes (winning 2), 14 Satellite Awards (winning 7), 18 Saturn Awards (winning 5), 8 Screen Actors Guild Awards (winning 1), and 5 Writers Guild of America Awards.
நன்றி - விக்கிபீடியா

WARNING :  Matured Audienceஐ மட்டுமே குறிவைத்து எடுத்த நாடகமாதலால் கெட்ட வார்த்தைகளுக்கும், சில செக்ஸ் சீன்களும் இடைக்கிடையே சில எபிசோட்களில் இடம்பெறும்.

நீங்கள் த்ரில்லர் வகையான நாடகங்களை ரசிப்பவர் என்றால் கட்டாயம் Dexter உங்களுக்கு பிடிக்கும்.

டிஸ்கி (டிஸ்கின்னா என்னங்க) - முதலில் The Game of Thrones பற்றித் தான் எழுத யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாருங்க (நானே முந்தநாள் தான் பார்த்தேன்) ... ஏற்கனவே நம் கருந்தேளார் அந்த சீரீஸைப் பற்றி என்னைவிட நன்றாக எழுதியிருக்கார். (இங்கே க்ளிக்கவும்) திரும்ப நான் ஏன் அதை ரிப்பீட் பண்ண அப்படின்னு தான் இதை எழுதினேன். அடுத்ததாக தொலைக்காட்சி நாடகங்கள் வரிசையில் The Big Bang Theoryன்னு ஒரு அட்டகாசமான காமெடி நாடகம் பற்றி எழுதுவேன். (அத எப்ப பதிவேனோ தெரியாது. சீக்கிரம் எழுதுகிறேன்)


அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன்
ஹாலிவுட்ரசிகன்.

The Green Mile [1999]


வணக்கம் நண்பர்களே,

எல்லாரும் வந்தாச்சா? சரி. இன்னக்கி நாம பார்க்கப்போறது The Green Mile அப்படீங்கற கொஞ்சம் வித்தியாசமான தரமான சரக்கு. வெளியிடப்பட்ட வருடம் 1999. சரக்க எப்படி மெதுவா அடிக்க அடிக்க கிங்ண்ணு ஏறுமோ, அதே போல இந்த படமும் கொஞ்சம் நேரம் போகப் போக படுசுவாரஸ்யமாக மாறும். பொறுமையாக கொஞ்சம் நேரம் படத்த கொன்டின்யு பண்ணினா, முடியும் வரை எழுந்திருக்க மாட்டீங்க. ஆனா இப்பவே சொல்லிட்டேன். படம் கிட்டத்தட்ட 3மணி நேரம். (அடப்போங்க பாஸ் அவதார், LOTR series, Shawshank Redemption, சிவாஜி எல்லாங்கூடத்தான் 3மணி நேரம். நாங்க என்சாய் பண்ணல??? )

முதல்ல நாம தலைப்புல இருந்து ஆரம்பிப்போம். Last Mile என்பது மரணதண்டனையை எதிர்நோக்கும் ஒரு கைதி சிறைக்குள் நடக்கும் கடைசிப் பாதை.The Green Mile எனப் பெயரிட காரணம் (உண்மையில் அது ஒரு மைல் தூரம் இல்லை) அந்தப் பாதையை படத்தில் பச்சையாக காட்டியிருப்பாங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை :ஒரு முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு கிழவர் அங்கு காட்டப்படும் ஒரு திரைப்படத்தினால் சில ஞாபகங்கள் மீட்டப்பட்டு, தன் வாழ்வில் சில காலம் ஜெயில் மரணதண்டனை அதிகாரியாக பணியாற்றியபோது ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களை தன்னுடன் இருக்கும் இன்னொரு பாட்டிக்கு பகிர்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. போல் எட்ஜ்கோம்ப் (Paul Edgecomb) என்பது தான் கிழவரின் பெயர்.



போல் பணியாற்றும் சிறையில் மொத்தமாக நான்கு பேர். புதிதாக பேர்சி என்பவன் என்ட்ரி. அவனுக்கு ஏற்கனவே ஒரு மென்டல் ஹாஸ்பிட்டலில் பதவி உயர்வு இருந்தாலும் ஒரு மரணதண்டனையை பார்க்கவேண்டும் என்பதற்காக இங்கு வருகிறான். இயல்பில் மிகவும் கொடூரமான இயல்புகளைக் கொண்ட பேர்சி அங்கிருக்கும் கைதிகளை துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறான்.

இதற்கிடையில் மரணதண்டனைக்காக ஜோன் கொஃபி (John Coffey) எனும் ஒரு ராட்சத மனிதனை அழைத்துவருகிறார்கள். காரணம் இரண்டு சிறுமிகளை கற்பழித்த குற்றம். WWEஇல் வரும் Mark Henry போன்ற உருவத்தைப் பார்த்து அனைவரும் ஆரம்பத்தில் பயப்பட்டாலும் போகப்போக அவன் ஒரு அமைதியான, இருட்டிற்கு பயப்படும் அப்பாவியான ரொம்ப நல்லவனான கேரக்டர் என தெரியவருகிறது.



தொடர்ந்து சற்ற மெதுவாக நகரும் கதையில் கொஃபிக்கு இருக்கும் அமானுஷ்யமான சில சக்திகள் சிறையில் இருப்பவர்களுக்கு தெரியவருகிறது. அவனுடைய பவர்களை சிறையில் இருப்பவர்கள் நல்ல வகையில் பயன்படுத்தினார்களா? ஜோன் மின்சாரக் கதிரையில் இருத்தப்பட்டானா? கொடூரமான பேர்சிக்கு என்ன நடந்தது என்பவற்றுக்கு விடையையும் இன்னும் இங்கு கேட்கப்படாத ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையையும் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நான் இப்பொழுது சொன்னது, மூன்று மணி நேரத்தின் ஆரம்ப 30-45நிமிடங்களே. படத்தில் நான் சொல்லாத விடயங்கள், திருப்பங்கள், சுவாரஸ்யங்கள் என இன்னும் ரசிக்க நிறைய விடயங்கள் இருக்கின்றன. மிஸ் பண்ணாம பாருங்க. ( சுருக்கமாக சொல்ல நினைத்ததால் கதையை ட்ரிம் பண்ணி விட்டேன். நல்லாயிருக்கா அல்லது இன்னும் சற்று விரிவாக சொன்னால் நல்லாயிருக்குமா???? )

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தை இயக்கியிருப்பவர் The Shawshank Redemption இயக்கிய ப்ரான்க் டரபொன்ட். அதை இயக்கிய பின் இந்தப் படத்தை இயக்கிதாலோ என்னவோ, அதன் சாயல், வாடை இதிலும் வீசுகிறது. இரண்டு படங்களுமே சிறை வாழ்க்கையை சம்பந்தப்படுத்திய திரைப்படங்களாக இருந்தாலும் Green Mile அமானுஷ்ய சக்திகள் பற்றிய சப்ஜெக்டை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் மனிதர் மூன்று மணித்தியாலங்களும் எம்மை கதிரையில் பிணைத்து வைப்பதில் சக்ஸஸ் ஆகியுள்ளார் என்றே சொல்லவேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் படத்தின் நீளத்தை சற்று குறைத்து 2.30மணித்தியாலங்களாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்தப் படமும் The Shawshank Redemption எழுதிய Stephen Kingஇன் 6நாவல்கள் கொண்ட ஒரு சீரீஸில் இருந்து தயாரானது தான். 6 நாவல்களை 1.30மணித்தியாலங்களுக்குள் கம்ப்ரெஸ் பண்ணுவது கடினம் என்பதால் 3 மணிநேர நீளத்திற்கு ஒரு எக்ஸ்க்யூஸ்.


படத்தில் நடிக்கும் யாருடைய நடிப்பையும் குறை சொல்ல முடியாது. அனைவரும் தம் பாத்திரத்தை உணர்ந்து அதை நன்றாக பிரதிபலித்திருக்கிறார்கள். மனதில் நிற்பவர்கள் என்று குறிப்பிட்டு கூறக்கூடியவர்கள் போல், ப்ரூடஸ் ஆக நடித்திருக்கும் டாம் ஹேங்க்ஸ் (Tom Hanks) மற்றும் அவரின் நண்பராக வரும் டேவிட் மோஸ் (David Morse). டாம் ஹேங்கின் கதாபாத்திரத்திரம் அவரால் முடியக்கூடிய காரியம். மனிதன் சும்மா ஜுஜுபி சாப்பிடுவது போல செய்திருக்கிறார். ஆனாலும் Forrest Gumpஉடன் ஒப்பிடும் போது அது கொஞ்சம் ஒஸ்தி தான். மேலும் எனக்கு பேர்ஸியாக நடித்தவரின் நடிப்பும் பிடித்திருந்தது. எம் மனதில் ஒரு வெறுப்பை உண்டாக்கும் வகையில் அவரின் நடிப்பு அமைந்திருப்பது அவரின் நடிப்பின் திறமையை காட்டும்.

படத்தில் பேர்ஸி ஒரு கைதிக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் போது அவனை வேண்டுமென்றே துடிக்கவைத்து ரசித்து கொலை செய்யும் விதம் அனைத்து விதமான கொடுமைகளின் உச்சம். இன்னும் உலகத்தில் மனிதாபிமானம் எவ்வளவு கீழ்த்தரமான நிலையில் உள்ளது என்பதை காட்டும் அந்தக் காட்சி. மின்சார நாற்காலி என்பது தூக்குமேடையை விட எவ்வளவு விபரீதமானது என்பதை படத்தைப் பார்க்கும் அனைவரும் உணர்வர்.



படத்தின் இறுதிக் காட்சிகள் அருமை. மரணத்தை எதிர்நோக்கியுள்ள வயதான போல் "We each owe a death - there are no exceptions - but, oh God, sometimes the Green Mile seems so long" எனக் கூறும் வரிகள் அற்புதம்.

நாம் அனைவருமே மரணத்தை நோக்கி க்ரீன் மைலை நடந்து கொண்டிருக்கிறோம். விதியைப் பொறுத்து நடக்கும் நேரம் மாறுபடும்.


மூன்று மணிநேரம் முடிந்தபின் The Shawshank Redemption போன்ற அளவிற்கு உணர்வு வராவிட்டாலும் ஒரு சின்ன எஃபெக்ட்டும் ஒரு நல்ல ஃபீல் குட் படம் பார்த்த உணர்வும் வருவது நிச்சயம். பார்த்துட்டு சொல்லுங்க.

படத்தின் ட்ரெயிலர் இங்கே :



என் ரேடிங் -

The Green Mile : 8.8 / 10

-------------------------------------------------------------------------------------------

Download Links :

டைரக்ட் லிங்கில் பதிவிறக்க இங்கே க்ளிக்குங்கள்

டொரண்டில் பதிவிறக்க இங்கே க்ளிக்குங்கள்

------------------------------------------------------------------------------------------- 

அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன்

ஹாலிவுட்ரசிகன்.

Stardust [2007]



போன வாரம் நம்ம தோஸ்த் ஒருத்தன் "மச்சி ... ஒரு சூப்பர் படத்தின் ப்ளூரே பிரிண்ட் டவுன்லோட் பண்ணியிருக்கேன். வா ... நம்ம வீட்டு 40'' HDTVல பாப்போம்ன்னு கூப்பிட்டான். ஓசில படமும் கூல்ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் கொடுத்தா நாங்க தான் எங்க வேணா ஆஜர் ஆகிடுவோம்ல . இதுல  ப்ளூரே பிரிண்ட் வேற. உடனே கிளம்பிப் போனேன். அப்போ தான் இந்தப் படத்தை காட்டினான். ”நல்ல படம்னு போட்டிருந்துச்சு மச்சி. அதான்டா" அப்டீன்னான். நான் இந்த படத்தை ஏற்கனவே ரெண்டு முறை பார்த்துட்டேண்டா. நீ பாரு. பிறகு வாரேன்டான்னு சொல்லி ஏன் ஃப்ரீயா கிடைக்கிற சாப்பாட்டு ஐடங்களை வேஸ்ட் பண்ணனும்? அதனால சரிடா ... வா பாப்போம் ஒன் செலக்ஷனன்னு பாக்க உட்கார்ந்தோம். ஆனாலும் மூன்றாம் முறை பார்க்கிறோமே என்ற அலுப்பே இல்லாமல் சுவாரஸ்யமாக நான் இதைப் பார்த்தேன் (சாப்பிட்டேன்) என்பதிலிருந்து எனக்கு இந்தப் படம் எந்தளவு பிடித்திருந்தது என உங்களுக்கு தெரிந்திருக்கும் (சிலவேளை High Definitionல பாத்த ஃபீலிங்கோ என்னவோ).

ஒரு ஃபாண்டஸி படத்தில் இருக்கவேண்டிய அனைத்து விடயங்களும் இதில் இருப்பதால் நீங்கள் ... "ஐய்யய்யோ மாஜிக் படமா? என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு? நான் Adults படம் மட்டுமே பார்ப்பேன்னு" சொல்ற ஆளா நீங்க இருந்தாலும் உங்களுக்கு இந்தத் திரைப்படம் பிடிக்க வாய்ப்பு உண்டு.


Title: Stardust
Cast: Charlie Cox, Claire Danes, Sienna Miller, Robert De Niro
Country: UK | USA | Iceland
Language: English
Release Date: 10 August 2007
Directed By: Matthew Vaughn
Runtime: 127 min
Distributed by : Paramount Pictures
Budget: $70 million
Box Office: $135,560,026
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

ஒரு ஆறடி சுவர். நடுவுல ஒரு இடைவெளி. இந்தப்பக்கம் இங்கிலாந்து. அந்தப்பக்கம் ஸ்டோம்ஹோல்ட் (Stormhold) அப்படிங்கற மாஜிக் நாடு. இங்கிட்டு இருந்து யாரும் அங்கிட்டு போகக்கூடாதுன்னு தன் வாழ்நாளையே காவலுக்காக வீணாக்கிய ஒரு வயசான பெரியவர். இதுவரை யாருமே அந்த ஆறடி சுவரை தாண்டி மாஜிக் நாட்டிற்குள் பிரவேசிக்கவில்லையாம் (இதே இங்கேயா இருந்தா சும்மா தாண்டு தாண்டுன்னு தாண்டியிருப்போம்ல). கடைசில எப்படியோ டன்ஸ்டன் (Dunstan) எனும் ஒருவன் சுவரை தாண்டி அட்வென்சருக்காக ஸ்டோம்ஹோல்ட் நாட்டிற்குள் பிரவேசிக்கிறான். செல்லும் வழியில் ஒரு நகரத்தின் மார்க்கெட்டில் இருக்கும் ஒரு கடையில் ஒரு மந்திரக்காரியால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான ராஜகுமாரியை சந்திக்கிறான்.  அந்தப் பாப்பாவும் நீ ஒரு கிஸ் கொடு. நான் உனக்கு கண்ணாடிப் பூ ஒன்று தாரேன்னு சொல்ல பையனும் இந்த டீலிங் நல்லாயிருக்கேன்னு போறான். பக்கத்தில் உள்ள மந்திரக்காரியின் வண்டிக்குள் கிஸ் கேட்ட பாப்பா கசமுசாவை கமுக்கமாக முடித்துவிடுது. பையனும் திரும்பி ஊருக்கு வந்துவிடுகிறான். 9 மாதங்களின் பின் நம் காவலாளி தாத்தா ஒரு ஆண் குழந்தையை அந்த பையன் வீட்டு முன்னாடி வச்சு இவன் உன் மகன். பெயர் ட்ரிஸ்டன் என சொல்லிட்டு போறார்.


ங்கொய்ங்ங்ங் ... 18 வருஷங்கள் உருண்டு ஓடிவிடுகின்றன. வீட்டு முன்னாடி வச்ச பாப்பா ட்ரிஸ்டன் வளர்ந்தபெரியவனாக இருக்கிறான்.(ஆமா 18 வருஷமா பாப்பாவாகவேவா இருப்பான்?). வழக்கம்போல அந்த ஊரின் அழகுராணியான விக்டோரியா மேல ஒன்சைட் லவ். லவ்வுனா லவ்வு லவ்வோ லவ்வு ... ஆனா அந்த ஃபிகருக்கு ஏற்கனவே வாள் வீசக்கூடிய பணக்கார பாய்பிரண்ட் இருக்கிறான். நம்ம ஹீரோ சாதாரண கடையில் வேலை செய்யும் சோப்ளாங்கி. ஒரு சில சந்தர்ப்பத்தால் அந்த ஃபிகருக்கு இவன் மேல் ஒரு இது வந்து ட்ரிஸ்டனிடம் "என் பாய்பிரண்ட் ஒரு வாரத்தில் என்னை கல்யாணத்திற்கு ப்ரபோஸ் பண்ணப் போறான்" அப்படின்னு சொல்ற நேரத்தில் அவர்களுக்கு மேலே ஒரு வால்வெள்ளி ஒன்று செல்கிறது.

வெயிட் ... அந்த வால்வெள்ளி போனதற்கும் ஒரு கதை இருக்கிறது. ஸ்டோம்ஹோல்ட் நாட்டின் ராஜா வயசாகி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிட்டு இருக்கார். அவருக்கு மகன்மார் மூன்று. யார் அடுத்த ராஜான்னு மூவரும் யோசித்துக் கொண்டிருக்க பழைய ராஜா அவரின் சிவப்பு மாணிக்க நெக்லஸை தூக்கி போட்டுட்டு "இந்த மாணிக்கத்தை யார் கொண்டு வாரீங்களோ அவன் தான் அடுத்த ராஜா". அந்த நெக்லஸ் பறந்து போய் ஒரு நட்சத்திரத்துடன் மோதுகிறது. பூம்ம்ம்ம்ம்ம் ... பெரிய எக்ஷ்ப்லோஷன். பின் அந்த நட்சத்திரம் வால்வெள்ளியாக ஸ்டோம்ஹோல்ட் நாட்டின் மேல் பறந்து சென்று நிலத்தில் விழுகிறது. இப்போ இளவரசர்கள் மூவரும் மாணிக்கத்திற்கு ஹண்டிங்.


இப்போ திரும்ப நம் ட்ரிஸ்டன்-விக்டோரியா லவ் சீனுக்கு ரிடர்ன். ட்ரிஸ்டன் சொல்றான், நான் உன்னை கல்யாணம் செய்ய அந்த வால்வெள்ளியை உனக்கு கொண்டு வந்து தருவேன்னு சொல்ல விக்டோரியாவும் சரி ... இன்னும் ஒரு வாரத்தில் அவன் ப்ரபோஸ் பண்ணிடுவான். அவ்வளவுதான் உன் டைம்ன்னு சொல்லுது. ட்ரிஸ்டன் சுவரைத் தாண்டி ஸ்டோம்ஹோல்ட் செல்லப் பார்க்கும்போது நம் காவலாளி தாத்தா சிலம்பாட்டம் மூவ்ஸ் கொஞ்சம் போட்டு ட்ரிஸ்டனை துரத்திவிடுகிறார். ட்ரிஸ்டன் தன் தந்தை மூலம் கிடைக்கும் மந்திர மெழுகுவர்த்தி மூலம் வால்வெள்ளி விழுந்த இடத்திற்கு பிரயாணம் செய்கிறான். சென்று பார்த்தால் வால்வெள்ளி விழுந்த இடத்தில் ஒரு அழகிய இளம்பெண் வித் சிவப்பு மாணிக்கம் இன் த கழுத்து. ஆனாலும் ட்ரிஸ்டன் அவளை கட்டி விக்டோரியாவிடம் அளிக்க கூட்டி செல்கிறான்.
இதற்கிடையில் வால்வெள்ளியை கண்ட மூன்று மந்திரவாதி கிழவிகளில் ஒருத்தி சங்கூதுற வயசில சங்கீதாவாக ஆசைப்பட்டு அந்த பெண்ணாக மாறிய நட்சத்திரத்தின் இதயத்தை சாப்பிடவேண்டி அவளைத் தேடி பிரயாணமாகிறாள்.

இந்த மூவரின் நிலை என்னவாயிற்று? ட்ரிஸ்டன் இறுதியில் நட்சத்திரப் பெண்ணுடன் இணைந்தானா? அல்லது விக்டோரியாவிடம் அவளைக் காட்டி அவளுடன் இணைந்தானா? கிழவி சங்கீதாவாக மாறினாளா? மந்திரவாதிக் கிழவி ஒருத்தியிடம் அடிமையாக இருந்த ட்ரிஸ்டனின் தாய்க்கு என்ன நடந்தது? இறுதியில் யார் ஸ்டோம்ஹோல்டின் ராஜாவானது? என பல கேள்விகளுக்கு பதிலை சுவாரஸ்யமான அழகான இந்த திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் ஆரம்பத்தில் என் மண்டையை குடைந்த ஒரு கேள்வி, ஒரு ஆறடிச் சுவரை தாண்ட முடியாதவங்களா அந்த ஊரில இருக்காய்ங்க? யாரும் தாண்டிப் போகவோ வரவோ கூடாது என்றால் எதற்காக ஒரு இடைவெளி? ஒரு மூட்டை சீமெந்து எடுத்தமா இடைவெளிய அடைச்சமா வேலய பாத்துட்டு போவமான்னு இல்லாம பாவம் ஒரு மனிதனின் (காவலாளி தாத்தா) வாழ்க்கையை வீணாக்கிவிட்டாய்ங்கய்யா.

படத்தில் எனக்கு தெரிந்த நடிகர்ன்னு சொல்லப்போனா அது ரொபர்ட் டீ நிரோ தான். இவரை இந்தப் படத்தில் பார்த்து இவரின் நடிப்புத் திறமையை முடிவெடுக்கும் முன் இவரின் முன்னைய படங்களை பார்த்துவிட்டு இதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் பைரேட்டாக வரும் இவரின் நடிப்பு திறன் நொட் டாப் ஒவ் தி பெஃபோமன்ஸ். ஆனால் நடிப்பு மோசமில்லாவிட்டாலும் ரசிக்கக்கூடியதாகவே இருக்கிறது. (வயசாயிருச்சுல்ல)

படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து இறுதி வரை சுவாரஸ்யமாக மாஜிக், சில ட்விஸ்டுகள் என சலிப்படைய வைக்காமல் செல்கிறது. இடையில் உள்ள கதை ஊகிக்கக்கூடியதும் பொதுவான ஹாலிவுட் படங்களில் உள்ள க்ளிஷே காட்சிகளைக் கொண்டிருந்தாலும் படத்தின் ஆரம்பமும் க்ளைமாக்ஸும் மற்றவற்றை மறக்க செய்து ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் படத்தைப் பார்த்த திருப்தியை கொடுக்கின்றன. படத்திற்கு அழகான விஷுவல் எஃபெக்ட் காட்சிகளும் ஒரு நல்ல பலம்.

ஒரு சூப்பரான படம். கட்டாயம் தவறவிடக்கூடாத படம் அப்படீன்னு எல்லாம் நான் சொல்லமாட்டேன். ஒரு அழகான டைம் பாஸுக்காக ஜாலியா ஒரு படம் பாக்கணும்னு நினைச்சா எடுத்துப் பாருங்க. புடிச்சா திரும்பி வந்து சொல்லிட்டுப் போங்க. புடிக்கலைன்னா ... வந்து திட்டிட்டு எல்லாம் போகாதீங்க. புடிக்கும் பாஸ். நம்பிப் பாருங்க.

படத்தின் ட்ரெயிலர் இங்கே :


Stardust : 8.2 / 10

எக்ஸ்ட்ரா பிட் -
இந்தப் படம் நீல் கீமன் என்பவரால் 1999ல் வெளியிடப்பட்ட Stardust எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. கதையை வாசிப்பது எப்போதும் படத்தை பார்ப்பதை விட நன்றாக இருக்கும். முடிந்தால் வாசிக்கப் பாருங்கள்.

-------------------------------------------------------------------------------------------
Download Links :


டைரக்ட் லிங்க்ஸ் :

Part I | Part II | Part III | Part IV | Part V

டொரண்டில் பதிவிறக்க

-------------------------------------------------------------------------------------------


அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன்

ஹாலிவுட்ரசிகன்.