நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Thing (1982)

folder

இப்போ அமெரிக்காவுல ஹாலோவீன் சீசனாமே? திரும்பின பக்கமெல்லாம் ஒரே பேய்ப்பட மயமா இருக்கு. நம்ம ப்ளாக் வேற அடிக்கடி ஹாலிவுட் ஹாலிவுட்னு உளறிட்டு இருக்கும் ஒரு மேற்கத்தேய வலைப்பூ!!?? என்பதால் சம்பிரதாயத்திற்காக ஒரு ஹாரர் படம். ஹாரர் படங்கள் பார்ப்பது மிக மிகக் குறைவு … முடிந்தால் இந்த மாதத்திற்குள் இன்னொரு ஹாரர் படத்தையும் எழுதப் பார்க்கிறேன்.

யாருப்பா அங்கப் போறது”ன்னு (Who Goes There) 1930ல கேம்ப்பெல்னு ஒருத்தர் இங்கிலிஷ்ல புத்தகம் எழுதினாராம். புத்தகமும் செம ஹாரரா இருந்துடிச்சு போல. இதே கதையை பேஸ் பண்ணி 4 படம் எடுத்துத் தள்ளிட்டாங்க ஹாலிவுட்காரங்க. (இந்த நாலு படத்தில் Alien படமும் அடங்கும்). இந்தப் படமும் புத்தகத்தின் “நமக்குள் ஒன்று“ என்ற தீமை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான். ஆனால் படம் மாட்டினது, 1970-80களில் ஹாரர் படங்களுக்குப் பெயர் போன ஒரு இயக்குனர் ஜான் காபெண்டர் கையில். அவர் இயக்கிய எல்லாப் படங்களிலும் தன்னோட பர்சனல் பேவரைட்ன்னு சொல்லிக் கொள்ளும் படம் இது.


thumb3

கதை என்னான்னா ….

பூமியில் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு ஸ்பேஷ்-ஷிப் வந்து விழுகிறது….
..
ஓபனிங் டைட்டில்
..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளை வெளேறென்று பனி படர்ந்த அன்டார்ட்டிக் பிரதேசம். அதில் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு ஹஸ்கி நாய். பின்னால் ஒரு ஹெலிகாப்டர் துரத்துகிறது. அதிலிருந்து ஹை-பவர் ரைபில் ஒன்றின் மூலம் குறிவைத்து சுட்டுக் கொண்டு வரும் ஒரு மனிதன். எப்படியோ அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டுவரும் அந்த நாய், ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை அடைகிறது. அதற்குள் குடித்துக் கொண்டும், பிலியட்ஸ் விளையாடிக் கொண்டும் ஆராய்ச்சி தவிர மற்ற எல்லா விஷயங்களும் செய்து கொண்டிருக்கும் சயின்டிஸ்ட் கூட்டம் ஹெலி சத்தம் கேட்டு வெளியே வருகிறது.

thumb1

ஹெலியை லேன்ட் பண்ணிவிட்டு வெளியே இறங்கும் அந்த மனிதன், புரியாத ஏதோ ஒரு பாஷையில் நாயைக் காட்டி ஏதோ கத்துகிறான். துப்பாக்கியால் நாயை சுடுகிறான். நாய்க்கு ஒரு கிரனேட் எடுத்து வீசப் போகும்போது தவறுதலாக அது ஹெலியில் விழ….ஹெலிகாப்டர் காலி. அந்தப் பைத்தியத்துடன்?? பேச்சுவார்த்தை சரியாக வராததால், சயின்டிஸ்ட் கூட்டத்தில் ஒருவன் அவனைக் சுட்டு கொன்றுவிடுகிறான். கேபின் ஃபீவர் வந்ததால் தான் அவனுக்கு அந்தக் கோளாறு என்று முடிவு கட்டிவிட்டு, அந்த நாயை மற்ற ஹஸ்கி நாய்களுடன் அடைக்கிறார்கள்.

ஆனால் இரவானதும் அடைக்கப்பட்ட நாய் ஒரு ஏலியனாக உருமாறி அங்கிருக்கும் நாய்களைத் தாக்குகிறது. அப்பொழுது தான் அவர்களுக்கு அந்த நாய் உருவத்தில் இருந்தது ஒரு ஏலியன் என்றும், அது தாக்குபவர்களை உட்கொண்டு அவர்களின் உருவத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு அவர்களை இமிடேட் செய்யக்கூடியது என்றும் தெரியவருகிறது. இப்பொழுது குழுவில் ஒவ்வொருவராக அந்த ஏலியனால் தாக்கப்பட, ஏற்கனவே ஒவ்வொருவருக்கும் மற்றவர் மேலுள்ள சந்தேகம், தனிமை என்பவையும் சேர்ந்து தன் பங்குக்கு சேர்த்து ஆட்டிப்படைக்க என்ன நடந்தது என்பது மீதிப்படம்.


thumb5


சந்தேகமேயில்லாமல் படத்தின் சிறப்பு இதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தான். பக்கெட் பக்கெட்டாக வியர்வையை … சாரி …. ரத்தத்தை சிந்தி அருமையான விஷுவல் எஃபெக்ட்ஸ். அதிலும் அந்த ஏலியன் உருமாறும் காட்சிகளில் அந்த டம்மிகளும், கொடுக்கி போன்ற உறுப்புக்கள்….பச்…மேக்கப் உச்சம். ‘சி.ஜி’யெல்லாம் திரைப்படங்களுக்கு எண்ட்ரீயாகுமுன்பே எஃபெக்ட்ஸ்ல புகுந்து விளையாடிட்டாங்க. அண்மையிலெல்லாம் “படத்திற்காக உயிரைக் கொடுத்து உழைச்சாருய்யா தலைவரு” என்ற வசனங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ரொப் பொட்டின் வாரத்தில் ஏழு நாள் வீதம், ஒரு வருஷத்தை செட்டிலேயே மேக்கப்பிற்காக கழித்ததால் வேலை முடிந்ததும் உடல்நிலை மிகவும் மோசமாகி ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டாராம்.

படம் முழுவதும் அன்டார்ட்டிக்காவில் நடப்பதாக காட்டப்படுகிறது. எனவே அந்த சயின்டிஸ்ட் குழு, ஏலியன் தவிர பல நூறு கிலோமீட்டருக்கு ஆள்நடமாட்டமே கிடையாது. உதவிக்கும் கூப்பிடமுடியாத வகையில் இடையில் ரேடியா, கொம்யுனிகேஷன் எல்லாம் நொறுங்கிவிடுது. படத்தின் த்ரில்லுக்கும் இந்தத் தனிமை ஒரு பெரிய பக்கபலம்.

படத்துல மருந்துக்கு கூட ஒரு பொண்ணக் கண்ணுல காட்டக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு இயக்குனர். நம்மள மாதிரி ஆளுங்க படத்துல ஃபிகருங்கள காட்டாம விட்டா பாதிக்கப்பட்டிருவாங்களேன்னு பாவம் பார்த்து ஒரு கம்ப்யுட்டர்க்கு பெண் வாய்ஸ் கொடுக்கவச்சிருக்காரு. அவ்வளவு தான். அவ்வ்வ். Crying face

TheThing82_01

ஆனா படத்தை ரிலீஸ் பண்றப்போ சின்ன ஒரு மிஸ்டேக் பண்ணிட்டாங்க. ஸ்பீல்பெர்க்கின் E.T. The Extra Terrestial வெளியிட்டு இரண்டு வாரங்களின் பின்னர் இவங்க படத்தை ஒரு அசட்டு தைரியத்துல வெளியிட்டாங்க. அந்த காலத்து மனுஷங்களுக்கு, காப்பெண்டரின் ஈவில் ஏலியனைவிட, ஸ்டீவனின் குறும்புக்கார அப்பாவி ஈ.டீ மிகவும் பிடித்துப் போக, கிட்டத்தட்ட 10 வருஷங்களுக்கு அதிக வசூல் செய்த படங்களில் ஈடீ இருந்தது எல்லாரும் அறிந்த விஷயமே. அதனால் காப்பெண்டரால் பெரிசா போட்டதை எடுத்துக்கொண்டதைத் தவிர வசூலில் பெரிசா ஒன்றும் சாதிக்கமுடியவில்லை. ஆனால்…டிவிடி வர்ஷன் ரிலீஸான பின்னர், இதற்கென்று ஒரு ஃபேன் பட்டாளம் உருவாகி … இன்றுவரை சிறந்த ஹாரர் படங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

The X-Files நாடகம் பார்த்திருந்தீங்கண்ணா, அதில் முதலாவது சீசனில் Ice என்று ஒரு எபிசோட் வரும். அதுவும் கிட்டத்தட்ட இதே கதை தான். இந்தப் படத்திற்கு ஒரு ட்ரிபியுட்டாக எடுக்கப்பட்ட எபிசோட்.

இதே பெயரில் 2011ல் ஒரு படம் வந்திருக்கு. அது இந்தப் படத்திற்கு முன் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கூறுகிறது. அதாவது அந்த ஏலியன் எப்படி மற்ற கேம்பில் இருந்து தப்பித்து நாய் வேடத்தில் இங்கு வந்து சேருகின்றது என்பது வரையான சம்பவங்கள். அதையும் எடுத்து வச்சிருக்கேன். பார்க்கணும். நல்லாயிருந்தா அதையும் எழுதுறேன். (NOOOOOooooooooooo) Smile

ஹாரர் விசிறிகள் நிச்சயம் எடுத்துப் பாருங்க…க்ளாஸிக் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் !!!


ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

24 comments:

  1. யோவ் வாரத்துக்கு ஒரு படம் பார்க்கவே முடியல, உன்னால மட்டும் எப்படி படமா பார்த்துத் தள்ள முடியுது...
    ஹாரர் படம் எனக்குப் பிடிக்கும் முடிஞ்சா பார்கிறேன்...


    விமர்சனம் அருமை...


    // படத்துல ஃபிகருங்கள காட்டாம விட்டா பாதிக்கப்பட்டிருவாங்களேன்னு// ஹை ஜாலி ஜாலி

    ReplyDelete
  2. சிட்டுக்குருவிOctober 10, 2012 at 10:34 AM

    ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருக்கே.........
    பார்த்திடுவோம்

    ReplyDelete
  3. சிட்டுக்குருவிOctober 10, 2012 at 10:35 AM

    என்னா பாஸ் டெம்ப்ளேட் எல்லாம் படு ஜூப்பரா ஈக்குது............

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன்October 10, 2012 at 11:53 AM

    பார்க்க வேண்டியது தான்... (விமர்சன எழுத்து நடை சூப்பர்...)

    ReplyDelete
  5. Great review. Very Informative and interesting, Keep up the good work.

    ReplyDelete
  6. சூப்பரான டெம்ப்ளேட்டாருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல சொந்த தளம்தான் போல!
    *ப்ளாக்கர் மூலமா கமென்ட் பண்ண முடியாதா?. G+ தான் வருது.

    The Thing என்கிட்ட டி.வி.டி இருக்கு.. ஆனா அதை பார்க்கனும்னே தோண்றியதில்லை!

    2010 -> 2007-> 1995-> 1982 ன்னு உங்க பட விமர்சனங்கள் பின்னோக்கிட்டே இருக்கு! அடுத்து என்ன ப்ளாக்-அன்ட்-வைட்டா??

    ReplyDelete
  7. ஹி ஹி ... ஆக்சுவலி நமக்கும் இப்ப வாரத்திற்கு ஒண்ணு பார்க்கிறதே ரொம்ப கஷ்டமாயிருக்கு. அவ்வ்வ் ... ஆனாலும் இந்த மாசமாவது ஹார்ட்டில் இருக்கும் ஹாரர் படங்கள பார்த்து முடிச்சிடணும்னு ட்ரை பண்றேன். :)

    ReplyDelete
  8. சும்மா ஒரு சேஞ்ச் தான் ... எனி சஜெஷன்ஸ்?

    ReplyDelete
  9. நன்றி JZ .. சரியா தெரியல. ஆனா ப்ளாக்கர் மூலம் முடியாதுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. ஹி ஹி ... டோன்ட் வொர்ரி ... அடுத்து 2011 தான். பதிவு எழுதியாச்சு. ரெண்டு நாள்ல போட்டுடலாம். :)

    ReplyDelete
  11. மொக்கராசு மாமாOctober 11, 2012 at 2:55 PM

    /////படத்துல மருந்துக்கு கூட ஒரு பொண்ணக் கண்ணுல காட்டக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு இயக்குனர்.//// இதெல்லாம் ஒரு படம்!! இத போயி பார்க்கணுமாம்.. அடப்போங்க சார்!

    ReplyDelete
  12. மச்சி இது எப்ப நடந்திச்சு.. முதல் பேஜ பாருங்க.. slide எ தூக்கிருங்க..
    மற்றபடி கமென்ட் பண்றது வித்தியாசமா கலக்கலா இருக்கு.. மொத்தபடி டெம்ப்ளட்
    கலக்கல் தான்.. வாழ்த்துக்கள்.. (அட.. பயபுள்ள விமர்சனம் ஒன்னு போட்ருக்கே
    அது மறந்து போச்சே)

    ReplyDelete
  13. ஆக ... யாருமே பதிவப் படிக்கல.

    ReplyDelete
  14. சங்கத்தின் பொருளாளர் சீனுவை நாடவும் :-)

    ReplyDelete
  15. ஓ .. அவர் தான் ஊருக்கே “சைட்“ அளப்பவரா?? மிஸ்டர் சீனுஊஊஊ :)

    ReplyDelete
  16. என்னமோ இந்த இடத்தில உங்க டேஸ்டும் என்னோட டேஸ்டும் ஒத்தே வருதில்ல பாஸ்... நீங்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்த அந்த கிராபிக்ஸ்சை மரண மொக்கை என்று என்னோடு கூட இருந்து படம் பார்த்த நண்பனுடன் சொல்லிக்கொண்டிருந்தேன். அதிலும் மனிதன் பாதி ஏலியன் பாதியாக இழுபட்டுகொண்டு அலையும் அந்த உருவத்தை பார்க்க ஏதோ கடற்கரையில் அலையிம் நண்டு+வண்டு ஞாபகம் தான் வருகிறது. அதை ஒரு நெருப்புக்கக்கும் கருவு துணையோடு கொல்ல வேறு அலைகிறார்கள். கெக்கபிக்கே என சிரித்துக்கொண்டேன்.


    படத்தில் சுவாரசியமாக இருந்தது அந்த ஹெலிஹொப்டர் விபத்தும், அப்புறம் யாரெல்லாம் ஏலியனால் தாக்கப்பட்டிருக்கிறர்கள் என்று அறிய ஒரு அறையில் சோதனை நடத்துவார்களே அந்த திக்..திக் நிமிடங்களும் தான். படம் பார்த்து முடித்ததும் ஏன்டா பார்த்தேன் என்று நினைத்த சில ஆங்கிலப்படங்களில் இதுவும் ஒன்று.


    * ஏன் பாஸ் இந்த படத்தில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் வருதே, ஆரம்பத்தில் வரும் வேலைக்காரி கதாபாத்திரம் ( அது தான் பாத்த் ரூமில் ரத்தம் கழுவிக்கொண்டு இருப்பாளே) அப்புறம் ஹீரோயின் என்று சொல்லப்படக்கூடிய ஒரு கதா பாத்திரம். # நான் இந்த படத்த தான் பாத்தன் எண்டு இன்னமும் நம்புறன்.

    பிளாக்கர் மூலமா கமண்டு போட முடியாதா? நான் தாங்க கிஷோகர்.

    ReplyDelete
  17. ஆக்சுவலி, நான் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்ததற்கு காரணம்..படத்துல பாவிச்சிருக்கிறது க்ராஃபிக்ஸே இல்ல. எல்லாம் ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் தான். படம் 1982 வந்தது என்பதை மனசுல நினைச்சுட்டு பார்த்தா கொஞ்சம் ரசிக்கலாம். புதுப்படங்கள்ல வர்ற க்ராபிக்ஸ்லாம் பார்த்துட்டு இதைப் பார்த்தா கொஞ்சம் கேவலமாத் தான் தெரியும்.

    நான் பார்த்த படத்துல பொண்ணே தெரியலயே? IMDBல கூட படத்தோட நடிகர் லிஸ்டுல ஒரு பொண்ணு பேர் இல்ல. நீர் வேறு ஏதாச்சு படத்தோடு இதை குழப்புறீரோ? :)

    ReplyDelete
  18. unfortunately, நோ ப்ளாக்கர் கமெண்ட்ஸ்...Facebook, Google+ இல்லாட்டி பெயர் யூஸ் பண்ணித் தான் கமெண்ட் பண்ண முடியும். பேசாம பழையபடி மாத்திடலாமான்னு யோசிக்கிறேன். :(

    ReplyDelete
  19. சரி தான்.. தப்பு என்மேல தான்! நான் பாத்தது 2011இல் வந்த "த திங்" படத்தை.. மன்னிச்சூ.


    * 2011 லயே இவ்ளோ கேவலமா இருக்கே அப்போ 1982 ??? ஆள விடுடா சாமீ.... எனக்கும் இந்த மாதிரி ஏலியன் கதைக்கும் சரிப்பட்டே வராது

    ReplyDelete
  20. தயவு செய்து புதியன கழிந்து பழைமைக்கு திரும்பவும்... என்னால முடியல...

    ReplyDelete
  21. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  22. 1982 வர்ஷன் 2011 விட எவ்வளவோ பெட்டர்னு சொன்னாங்க...சரி..பிடிக்கலைன்னா ஃப்ரீயா வுடுங்க பாஸ்..

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...