நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Expendables 2 (2012)

folder

ஸ்டாலோன் – தம்பிங்களா … நம் முதல் படம் கலெக்ஷன்ல பிச்சிக்கிச்சு.. திரும்பவும் கூட்டு சேர்றோம். பணத்த அள்ளுறோம்.

அண்ணனின் விழுதுகள்- அண்ணே … எல்லாம் சரி,, டைரக்ஷன் மட்டும் கையில எடுக்காதீங்கண்ணே. நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க.

ஸ்டாலோன் – சரிப்பா … இந்த முறை டைரக்ஷனை உண்மையான டைரக்டர் ஒருத்தர் பொறுப்புல விட்டுர்றேன். அப்படியே இந்தமுறை JCVDய கூட்டு சேர்க்கிறோம். டார்கெட் ஆடியன்ஸ் கொஞ்சம் அதிகமாவாங்கல்ல?

விழுதுகள் – அண்ணாச்சி…கதை என்னா?

ஸ்டாலோன் – கதையா? நம்மகிட்டயா? தம்பி பேசாம ஒரு அட்டைப் பெட்டி செட் அஞ்சு… எக்ஸ்ப்ளோசிவ்ஸ் கொஞ்சூண்டு மட்டும் எடுத்து வச்சிக்கோங்க. ஆங் … முக்கியமா நம்ம பழைய டப்பா ப்ளேன்! அசத்திடுவோம்!!

பார்ட் 2 எடுக்கலாம்னு முடிவு செஞ்சப்போ, இப்படித் தான் பேசி வச்சிருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். வழக்கமா இந்த மாதிரிப் படங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸை டார்கெட் பண்ணித் தான் எடுக்கப்படும். அதாகப்பட்டது,, படத்துல வர்ற ஹீரோ கரெக்டர் தவிர, மற்றைய living & non-living things அனைத்தும் வெடித்துச் சிதறணும்…காதுச் சவ்வு கிழியிஞ்சு ரத்தம் வர்ற மட்டும் ‘டமால் டுமீல்’ சத்தம் கேட்கணும்… சம்பந்தம் இருக்கோ இல்லையோ, அடிக்கடி ஏதாச்சு பஞ்ச் வசனம் அடிச்சுவிடணும்! சுருக்கமா சொல்றதுன்னா, நம்ம தெலுங்குப் ரசிகர்கள் போன்ற கூட்டம். கதையே இல்லண்ணாலும் பரவாயில்லை..மேலே சொன்ன அத்தனை மேட்டரும் இருந்தா அவங்களுக்கு வருஷத்தின் சூப்பர் டூப்பர் படம் இது தான்!!

thumb3


கதையா? ஹி ஹி … அதான் மேலயே சொன்னேன்ல? இருந்தாலும் பதிவின் நீளம் கருதி…Smile

பர்ஸ்ட்டு எபிசோட் - படத்தின் ஆரம்பமே சரவெடி போங்க….ஏதோ நேபாளத்துல இருக்கிற ஒரு சிறைக்குள்ள இருக்கிற ஆர்னல்ட காப்பாத்துறதுக்கு நம்ம 80s யூத்ஸ்,, 2000s அங்கிள்மாரெல்லாம் கிளம்புறாங்க. ஒரு செங்கல் … சாரி … ஒரு அட்டைப் பெட்டி விடாம அவ்வளத்தையும் பிரிச்சு மேஞ்சு அவரை காப்பாத்திடுறாங்க. அவரும் நெக்ஸ்ட்டு க்ளைமேக்ஸ்ல மீட் பண்றேன்னு சொல்லிட்டு எஸ்ஸாகிடுறாரு.

thumb5

நெக்ஸ்ட்டு எபிசோட் – அண்ணன் ப்ரூஸ் வில்லிஸ் வர்றாரு. முதல் பார்ட்ல பண்ணின சேதாரத்துக்கு எல்லாம் செய்கூலியா ஒரு மிஷனை செய்துத் தரணும்னு சொல்றாரு. அதாவது (வழக்கம்போலத் தான்) யூரோப்ல எங்கேயோ ஒரு மூலையில ஒளிச்சு வச்சிருக்கிற.., கெட்டவங்க கையில் சிக்கினால் “உலகையே அழிக்கக் கூடிய அளவு” ப்ளூட்டோனியத்தை எடுத்து வரணும். ஸ்டாலோன் வேணாம் வேணாம்னு (நாமளும் தான்) கதறியும் கேட்காம ஃப்ரீ ஆஃபரா ஒரு அட்டு சைனீஸ் பிகரையும் கூடவே அனுப்புறாரு.

எல்லாரும் யூரோப்க்கு பறக்கிராங்க. அங்க அந்த சைனீஸ் பொண்ணு ரெண்டு பட்டனை தட்டினதும், பெரிசா 2 நிமிஷத்துக்கொருமுறை ரீசேட் ஆகும் அதா இதான்னு பில்டப் கொடுத்த லாக்கர் திறந்துக்குது. எடுத்துட்டு வெளிய வர்றாங்க. அங்க என்ட்ரியாகுறாரு, நம்ம வில்லன் JCVD. வந்து நோகாம ‘கத்திமுனையில்’ நோம்பு கும்பிட்டு ப்ளூப்ரிண்ட வாங்கிட்டு பறந்திடுறாரு. போகும் போது கையரிக்குதேன்னு டீம்ல ஒருத்தன வேற போட்டுத் தள்ளிட்டு வேற போறாரு.

thumb1

அவ்வளவு தான் .. ஸ்டாலோன் செம்ம காண்டாகி….”டேய் வில்லன்!! (வில்லன் பேரே அது தான் Smile)..மவனே நீ செத்தடான்னு” கௌம்புறார். கூடவே அல்லக்கை நொல்லக்கை எல்லாம் போகுது. அப்புறம் க்ளைமேக்ஸ்ல ப்ரூஸ் வில்லிஸ், ஆரம்பத்தில் எஸ்ஸாகின அர்னால்ட், ப்ரூஸ், ஸ்பெஷல் கெஸ்ட் ச்சக் நொரிஸ் உதவியுடன் வழக்கம் போல வில்லனை அடிச்சு, புழிஞ்சு, காயப்போட்டு ப்ளூட்டோனியத்தையும், அதைத் எடுப்பதற்காக அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களையும் மீட்கிறார். எல்லாம் சுபம்!! (இந்த கடைசி மேட்டரை நம்ம டாகுட்டர் குருவி படத்துல வைரம், வைரம் தோண்டும் தொழிலாளர்கள் எனக் கையாண்டிருந்தார்னு நினைக்கிறேன். அரைகுறையா பார்த்தது. சரியா??)


கிட்டத்தட்ட The Avengersல எப்படி எல்லா சூப்பர்ஹீரோஸும் கூட்டு சேர்ந்தாங்களோ…அந்த மாதிரி தான் The Expendables முதல் பார்ட் வந்தப்போ, நம்ம எல்லா ஆக்ஷன்ஹீரோஸும் கூட்டு சேர்றாங்களேன்னு நம்பிக்கைல நானும் வாயப் பொளந்துட்டு எப்படா ஒரிஜினல் ப்ரிண்ட் வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் (கடைசில இப்புடி கவுத்திட்டிங்களேன்னு அதே வாயப் பொளந்ததும் வேற எபிசோட்) . அதுனாலயே இதை கொஞ்சம் ஆர்வமில்லாமல் தான் பார்த்தேன்.

thumb3

சுருக்கமா சொல்றதுன்னா…படத்துல கடைசிக் கட்டத்துல ஒரு டயலாக் வரும். ஸ்டாலோன் சொல்லுவாரு … “That plane belongs in a museum”. அதுக்கு ஆர்னால்ட் பஞ்ச் ரிப்ளை கொடுப்பாரு “We all do”ன்னு. உண்மை தான். இதை வாயப் பொளந்துட்டு பார்த்தா பல வருஷமா நீங்க ஆக்ஷன் படமே பார்த்ததில்லைன்னு அர்த்தம். 1980களிலிருந்து ஆக்ஷன் படத்திற்கென்னு என்ன பார்முலாவோ, அதை கொஞ்சமும் அச்சுப் பிசகாமல் ஃபாலோ பண்ணியிருக்காங்க.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது…புது டைரக்டர போட்டாலும் போட்டாங்க. சும்மா சீன் டூ சீன் பின்னிட்டாரு. ஏதோ வீடீயோ கேம் கணக்கா…மனுஷ உடம்பெல்லாம் மடங்குது..சிதறுது…ரத்தம் தெறிக்குது. ஆரம்பத்துல ஜெட்லியோட சூப்பர் ஃபைட் சீக்வன்ஸ் ஒண்ணும் இடையில் ஸ்டேடமின் ஃபைட் ஒண்ணும் இருக்கு. செம்ம கோரியோக்ராஃபி.!!

ஸ்டாலோனுக்கு இந்த முறை டைரக்டர் ப்ரெஷர் குறைஞ்சிட்டதால சும்மா கெத்தா கலக்கியிருக்கார். இந்த முறை எல்லா கேரக்டரும் கொஞ்சம் காமெடி பக்கம் சாய்ந்திருக்காங்க. ஆனாலும் எக்ஸ்ப்ரஷன்ஸ் = 0 .. புது வரவா லியம் ஹெம்ஸ்வெர்த் (Thor, Cabin in the Woodsல் வரும் க்றிஸ் ஹெம்வெர்த்தின் தம்பி). அவரோட ரோலும் இந்தப் படத்தோட ஓவர்.

thumb8

அப்புறம் நம்ம ஸ்பெஷல் கெஸ்ட் ச்சக் நொரிஸ் என்ட்ரி சூப்பர்!! தமிழ்ல எப்படி ரஜினிகாந்துக்கு ஜோக்ஸ் இருக்கோ, இங்கிலிஷ்ல அண்ணனுக்கு அதே அதே (ஹாலிவுட் பவர்ஸ்டார்??)… அதிலும் அவருக்கு அட்டகாசமா Dollars Trilogy பேக்ரவுண்ட் மியுசிக் எல்லாம் போட்டு பின்னிட்டாங்க.

நீதி, நேர்மை, நியாயம் … ஏதாச்சு கருத்தாழமுள்ள மெசேஜ் சொல்றது, இதெல்லாம் எதுவுமேயில்லை. 100% என்டர்டெயினர் தான். பெரிய பாப்கோர்ன் பாக்கெட் ஒண்ணு வாங்கி வச்சிட்டு அத மெதுவா ரசித்து மென்னுகிட்டே படம் பார்த்திங்கண்ணா, படத்துல லாஜிக் எல்லாம் யோசிக்கத் தோணாது. சாப்பிட்டு முடிய, படமும் முடிய … பாப்கோர்ன் சூப்பர்ன்னு (மறந்துட்டேன் … படமும் தான்)சொல்லிட்டு எழுந்திரிக்கலாம்!! Winking smile

இதுல இந்தப் படமும் கலெக்ஷன்ல வஞ்சம் பண்ணாததால் … அண்ணன் The Expendables 3க்கும் ஸ்க்ரிப்ட் ரெடி பண்றாப்ல. இந்த முறை Clint Eastwood, Wesley Snipes, Harrison Ford, Nicholas Cage எல்லாரையும் கேட்டுட்டு இருக்காராம். ஹ்ம்…எந்தத் தாத்தா வந்து நம்ம தாலிய அறுக்கப் போறாரோ தெரியல…அதுக்குள்ள உலகம் அழிஞ்சிடணும்..ஆண்டவா!!!

The Expendables 2 (2012) on IMDb

ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

22 comments:

  1. ஒன்னு நல்லா இருந்திச்சு.]அப்போ ரெண்டு ஊத்திக்கிச்சா..........

    ReplyDelete
    Replies
    1. மொக்கையெல்லாம் இல்ல...வழக்கமான அதே கதை தான். சின்னப்புள்ள கூட கதையை சொல்லிடும். ஆக்ஷன்ஸ் எல்லாம் நல்லாயிருக்கு. ஒருமுறை பார்க்கலாம்!

      Delete
  2. எதையுமே யோசிக்காம , எந்த லொஜிக்குமே பாக்காம படம் பார்த்தா இந்த படம் ஒரு அக்க்ஷன் ஜோதி தான். என் போன்ற ஆக்சன் பிரியர்களுக்கு ஏத்த படம். ஒன்று சொல்லட்டுமா.. இதோ இப்ப ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் படம் பாத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் மொதப் பாரா ரகமா? அப்போ உங்களுக்கு சூப்பராத் தான் இருந்திருக்கும். எனக்கு பரவாயில்லை ரகம் தான். :)

      Delete
  3. சூப்பர் review தல.
    படம் நானும் பாத்தாச்சு.ஒரு தடவை ஜாலியா பாக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதே அதே .. ஒருதடவை ஜாலியா பார்க்கலாம். எதுக்கும் கையில ஒரு பாப்கோர்ன் பாக்கெட் வச்சிக்கிறது சேஃப்டி :)

      Delete
  4. women expandaples க்கு ஆள் செலக்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க..அந்த படம் வந்தவுடன் எல்லாரும் சேர்ந்து men & women expandables வந்தாலும் ஆச்சிரியபடுறதுக்கு இல்ல...அப்படி வந்தாலும் நானும் அத பாக்காம விட மாட்டேன்...நமக்கு இது தான் உலக சினிமா

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் லிமட். என்ன தான் தாத்தா, பாட்டின்னு கிண்டல் பண்ணினாலும், படத்தைப் பார்க்கப்போவது நிச்சயம் தான். :)

      Delete
  5. நான் கூட பலத்த எதிர்பார்ப்புடன்தான் போனேன் அப்பவே சந்தேகப்பட்டேன் இவங்கள் எல்லாரும் சேர்ந்தா என்னாகுமோ எண்டு ஆக்கிட்டாங்க...ஒருதன் இருந்தாலே எதிரிகளில் ஒருவன் மிஞ்சமாட்டான் அனைவரையும் குருவி சுடுறமாதிரி சுடும்போது என் கண்ணில் தாரை தாரையாகக்கணீர்...ஒரே ஒரு சந்தோசம் தமக்குள் மற்றவர்ளை நையாண்டி செய்துகொண்டது... நான் அர்னோல்ட் ரசிகன் டேர்மினேட்டரை பல தடவைகள் பார்த்தவன்..அதற்காக இப்பொழுதும் ஐ ஆம் பக் எண்டால் கடுப்பாகும் தானேTrench: I'll be back.
    Church: You've been back enough. I'll be back. நல்ல அறுவை இத்துடன் நடைப்பை நிறுத்திக்கொண்டு ஜாக்கி மாதிரி கௌரவ வேடங்களில் நடித்தால் நல்லது...The Last Stand என்று ஒரு படம் வருகிறதாம் பார்ப்போம் எப்படி இருக்கின்றது என்று

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை நடிகர்கள் அவங்க வாழ்க்கைய சுத்தாம, கொஞ்சம் நகைச்சுவை பக்கம் சாய்ந்திட்டாங்க. அது தான் கொஞ்சம் படத்தை ரசிக்க வைக்குது. :)

      The Last Standக்கு நானும் வெயிட்டிங் :)

      Delete
  6. //இருந்தாலும் பதிவின் நீளம் கருதி// அருமை தோழர்

    //ஃப்ரீ ஆஃபரா ஒரு அட்டு சைனீஸ் பிகரையும் கூடவே அனுப்புறாரு.// யோவ் எங்க போனாலும் பிகரு தானா

    நாளுக்கு நாள் மெருகேறும் உங்கள் எழுத்துக்கள் படிபதற்கு அருமை

    ReplyDelete
    Replies
    1. // அருமை தோழர் //
      ஆஹா ... நீரும் தோழர் கும்பலா? நன்றி தோழா :)

      இந்த மாதிரி தமிழில் எழுதுவது நாளுக்கு நாள் மெருகேறுவதாத் தெரிகிறதா? ஹ்ம்ம். :)

      Delete
  7. செம படம் தல, டிவியில டவுன்லோட் பண்ணி தான் பார்த்தேன். கலக்கலா எழுதி இருக்கீங்க..அடுத்த பார்ட்ல " Clint Eastwood, Wesley Snipes, Harrison Ford, Nicholas Cage " எல்லாம் இருக்காங்களா..செம மாஸ் தான். அப்ப அப்ப இந்த மாதிரி படமும் வரணும் தல.. அப்ப தான் எல்லாம் கலந்து கலவையா ஹாலிவுட் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் இருக்கமாட்டாங்க தல... Wesley Snipes இன்னும் ஜெயில்ல இருக்காரே? பேச்சுவார்த்தை நடக்குது. யார் யார்னு இன்னும் முடிவாகல. :)

      Delete
  8. நான் ஸ்டாலோன் ரசிகன், ராக்கி படம் பார்த்ததிலிருந்து(விஜய் டிவியில்).

    ReplyDelete
    Replies
    1. ஸ்டலோன் பிடிக்காத ஆக்ஷன் ரசிகர்கள் யாராச்சு இருப்பாங்களா?? ராக்கி இன்னும் பார்க்கல பாஸ். :(

      Delete
  9. நண்பரே சவுக்கியமா..??
    ரொம்ப நாள் கழித்து இப்பதான் பதிவுலகம் வந்தேன்..அநியாயத்துக்கு எல்லாம் மாறிப்போய்ட்டாப்ல ஒரு ஃபீல்..
    எனக்கு இந்த மாதிரி படங்கள் பிடிக்கும் பாஸ்..கட்டாயம் பார்ப்பேன்..
    அடுத்த பார்ட்ல Steven Seagal-லாம் நடிக்கிறதா பேசிக்கிறாங்க..இந்த படமே எப்படினு தெரில.டவுன்லோடு போடுறேன் நண்பா..
    விமர்சனம் கலக்குறீங்க..நீங்கள் தொடர்ந்து எழுதி வருவதில் மகிழ்ச்சி (நம்மன்னால முடியாதத மத்தவா எழுதுனா வாழ்த்தனும் இல்லையா)
    உங்களோட மற்ற மிஸ் செய்த விமர்சனம் படிக்கனும்..பின்பு கமெண்டு போட டிரை பண்றேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா ... ரொம்ப பிஸியாகிட்டிங்க போல. மிஸ் செய்த விமர்சனங்கள் நிறைய இருக்காது. ஒரு மணித்தியாலத்துக்குள்ள படிச்சு முடிச்சிறலாம். :P

      அல்ப்ரெட் ஹிட்ச்காக் படஙகள் ட்ராப்ட்ல வச்சிருந்தீங்களே? எப்போ பப்ளிஷ் பண்ணப் போறீங்க?? :)

      Delete
  10. ஏம்ப்பா இன்னும் நீங்க அந்த பதிவ மறக்கலயா.அதுல கொஞ்சம் எடிட்டிங் வேலை இருக்கு நண்பா.சில நாட்களில் வரும்.என்னை மறக்காமல் இருப்பதற்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. கடனையும் நண்பர்களையும் நான் லேசில் மறப்பதில்லை குமரன் (இத ஆட்டோ பின்னாடியே எழுதி வைக்கலாமே?) :-)

      Delete
  11. You have no right to talk about Sly like this. he is one of the best directors. In terms of direction, The Expendables 1 was better. Watch Rambo 4 and Rocky Series. Sitting and writing blog like this is easy. Change your opinion.

    ReplyDelete
  12. Anonymous, I accept your comments. Sly is one of the best.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...