நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

English Vinglish (2012)

English Vinglish Movie Tamil Version Posters Mycineworld Com
தியேட்டர்ல படத்தப் போட்டு மாசக்கணக்காச்சு… எல்லா முக்கிய விமர்சகர்களும் ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர்னு இந்தப் படத்தைப் பற்றி எழுதித் தள்ளிட்டாங்க. எதுக்கு ஆறிப் போன டீய எடுத்து சூடு பாக்குறன்னு பழகின பாவத்திற்காக என்னோட ப்ளாக்கை எட்டிப்பார்த்துவிட்டு போகும் வழக்கமான ரசிகர்கள் (5-6 பேர்) கேட்கலாம். அதுவுமில்லாம இந்த தமிழ் சினிமால்லாம் நம்ம ஏரியா சப்ஜெக்டே இல்ல.

சும்மா ஒரு ட்ரையல் முயற்சி தான்…பிடிச்சிருந்தா படிங்க. இல்லாட்டி அடுத்த ஹாலிவுட் பதிவில் சந்திக்கலாம்.


English-Vinglish-08

கதைன்னு சொல்லப்போனா ரொம்ம்ம்ப சிம்பிள்... ஆங்கிலம் பேசத் தெரியாததால் கிண்டலடித்துக் கொண்டும், பாடசாலைக்கு அழைத்துச் செல்லவும் தயங்கும் பிள்ளைகள், ருசியான சமையலுக்காகவும் இரவு நேர நெருக்கங்களுக்கும் மட்டும் நெருங்கும் பிஸியான கணவன். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், ஒரு உப்புசப்பற்ற வாழ்க்கையில் தனக்கென்று ஒரு சிறு அங்கீகாரத்தையும், அன்பையும் எதிர்ப்பார்க்கும் ஆங்கிலம் பேசத் தெரியாத, லட்டு செய்வதில் எக்ஸ்பர்ட்டான ஹவுஸ் வைஃப் ஷஷி.

திடீரென்று அக்காப் பொண்ணு கல்யாணத்திற்காக உதவிக்கு அமெரிக்கா வரச் சொல்லி ஃபோன் கால் வர, தனியாக நியு-யார்க் செல்லவேண்டிய நிலையில் ஷஷி. ஆங்கிலம் தெரியாமல் எப்படிச் சமாளிக்கப்போறோமோ என்று பயந்து கொண்டு செல்லும் ஷஷி, அங்கு சந்திக்கும் சில அவமானங்களுக்குப் பிறகு தானும் ஆங்கிலம் பேசிக் காட்டுவேன் என்று முடிவு கட்டிக் கொண்டு 4 வார ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ் ஒன்றில் சேருகிறார். பின் என்ன நடந்தது என்பது யூகிக்கக்கூடியது தான் என்றாலும் படத்தை சொன்ன விதத்தில் பாராட்டைப் பெறுகிறார் இயக்குனர்.


EV

படத்தின் வெற்றிக்கு யார் காரணமென்று கேட்டால் யோசிக்காமல் பட்டென்று விரலை ஸ்ரீதேவியின் பக்கம் சுட்டலாம். முழுப் படத்தையும் தாங்குபவர் இவர் தான். எனக்குப் மிகவும் பிடித்த பழைய…சீ சீ தப்பு தப்பு… எவர்க்ரீன் நடிகைகளில் ஒருவர் (மற்றது ராதா, நதியா, ஷாலினி). என்ன…முகம் கொஞ்சம் காஸ்மெடிக்ஸ் செய்து கொண்டது போலத் தெரிந்தாலும், வயது அரைச்சதத்திற்கு நெருங்குகிறது என்று கூற முடியாத அளவிற்கு மெயிண்டெய்ன் பண்ணிட்டு வர்றாங்க மேடம். பாடி மெயின்டெயினென்ஸ்ல ஹாலிவுட்டுக்கு டாம் க்ரூஸ்னா, தமிழ் சினிமாவுக்கு ஸ்ரீதேவியும், நதியாவும் தான் போலயிருக்கு! (ஆம்பளைங்களே வேஸ்ட்டு)

சினிமாவில் ரிட்டர்னாவதற்கு ஸ்ரீதேவிக்கு இதை விடச் சிறந்த ரோல் கிடைக்காது. ஷஷி கதாபாத்திரம் முழுக்க முழுக்க இவரையே மனதில் வைத்துக் கொண்டு செதுக்கியது போலத் தெரிகிறது. வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவு படம் மனதுக்கு ஒட்டியிருக்குமோ தெரியாது… பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். பாடி லேங்குவேஜிலும் சரி, ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸிலும் சரி … இவருக்கு நடிப்பின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கிறது. அதிலும் “என் பொண்டாட்டி லட்டு பிடிப்பதற்காகவே பொறந்தவ”ன்னு கணவன் சொல்லும்போது விரக்தியாக சிரிக்கும் இடமாகட்டும், ஆங்கிலம் தெரியாமல் காபி ஷாப்பில் தடுமாறும் இடமாகட்டும், மகளிடம் திட்டு வாங்கும்போது கண் கலங்கும் இடமாகட்டும், ஃப்ரெஞ்ச்காரனுடன் நெருக்கமாகும் ஒரு காட்சியில் தடுமாறுவது என்று பல இடங்களில் அம்மணியின் நடிப்பு அட்டகாசம். இதைப் போல வயதிற்கேற்ற யதார்த்தமான கதாபாத்திரங்களை செலக்ட் செய்தால் இன்னொரு ரவுண்ட் வருவார் என்பது நிச்சயம்!!

ஆங் … நம்ம தல ஒரு ஐந்து நிமிட சீனுக்கு என்ட்ரிய கொடுத்துவிட்டு போகிறார். அந்த சீன் அல்டிமேட்!!! முழு சீனுக்கும் தியேட்டர் ஃபுல்லா விசில், அப்ளாஸ் தான். அதில் “உங்கள் அமெரிக்க வருகையின் காரணம் என்ன?” என்று immigration அதிகாரி கேட்கும்போது “உங்க நாட்டின் பொருளாதாரத்தை டெவலப் செய்ய” என்று டயலாக் இடம் எல்லாம் அட்டகாசம்! அலட்டிக் கொள்ளாமல் அழகாக கெஸ்ட் ரோலை செய்துவிட்டு போய்விடுகிறார்.

19mp_Sridevi3_jpg_1182023g

மற்றபடி படத்தில் வரும் எல்லாரும் அவரவர் பங்குக்கு கலக்குகிறார்கள் முக்கியமா அந்த இங்கிலிஷ் க்ளாஸ் ஸ்டூடன்ட்ஸ். கொஞ்சம் போரடிக்கப்போகுது என்பது போல் இருக்கும் படம், ஷஷி நியு-யோர்க் வந்து அந்த ஆங்கில கோர்ஸில் சேர்ந்ததும் தான் மீண்டும் காமெடியோடு சுவாரஸ்யம் பிடிக்கிறது. மற்றபடி ஸ்ரீதேவியின் அக்காவின் இரண்டாவது மகளாக வரும் பொண்ணு (வேறு ஏதோ தமிழ்ப்படத்தில் பார்த்த ஞாபகம்) செம க்யுட்…அவளுக்கு ஏற்ற மாதிரியே அழகான ட்ரெஸிங்ஸும் கிடைக்க, ஸ்ரீதேவிக்கு அடுத்து இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்பது (இதற்காக நான் ஆண்டிஹீரோன்னு நினைச்சிக்க வேண்டாங்க…நாங்களும் யூத்து தான்) இவ தான்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தங்களுக்கான பணியை  நிறைவாகவும் அளவாகவும்  நிறைவேற்றியுள்ளன என்று தான் கூறவேண்டும். குறை கூறுமளவிற்கு இல்லை. கிட்டத்தட்ட 2மணி 15நிமிடம் ஓடும் படம்…எங்கும் போரடிக்கவில்லை, (மாற்றான் ஸ்கிப் பண்ண இன்னொரு காரணம் 3 மணி ரன்டைம்…யப்பா! பேக் வெந்துடும்) கதை இப்படித் தான் போகும் என்று தெரிந்தாலும். அதிலும் க்ளைமேக்ஸ் காட்சியில் திடீரென்று சத்யராஜ், ரஜினிகாந்த் மாதிரி டப்பு டுப்பு இங்கிலிஷ் பேசாமல், அழகாக, நிதானமாக, தட்டுத் தடுமாறி சாதாரணமாக ஆங்கிலம் பேசி பாராட்டுவது படத்தை பலருக்கு இன்னும் ரசிக்க வைத்தது.

மாற்றானுக்கு போகலாம்னு நினைத்துவிட்டு, வீக்எண்ட் வேறு… எப்படியும் சினிசிட்டியில் கூட்டம் மோதும். போதாக்குறைக்கு பெரிய பில்டப்புடன் வந்த தாண்டவம் வேறு ருத்ரத்தாண்டவம் (நன்றி ராஜ் Smile) ஆடிக்காட்டியிருந்ததால், நேற்று (சனிக்கிழமை) தெஹிவளை கொன்கோர்ட்டில் இந்தப் படத்தைப் பார்த்தேன். படத்திற்கு வந்திருந்த முன் சீட் யூத் ஒருத்தன் “ஏண்டா கிழவி படத்திற்கெல்லாம் இழுத்துட்டு வர்ற? மாற்றானுக்கு போயிருந்தா காஜலையாவது சைட் அடிச்சிட்டு படம் பார்த்திருக்கலாம்”னு புராணம் பாடிட்டு இருந்தான். ஆனால் க்ளைமேக்ஸ் முடிந்ததும் தியேட்டர் முழுவதும் கைதட்ட, எழுந்து நின்று கைதட்டியவர்கள் அந்த இரண்டு ப்ரெண்ட்ஸும் தான்!!! இதே போதாதா படத்தின் வெற்றிக்கு காரணம் சொல்ல??!!

நிச்சயம் பாருங்க!!!! பிடிக்கும் … உங்களுக்கு ஆன்டிஸ் பிடிக்காதென்றாலும்.. Winking smile

ட்ரெயிலர்

விமர்சனம் பிடிச்சிருந்தா, கீழே ஓட்டுப்பட்டைகளில் என்னை நினைச்சு “இனிமே விமர்சனம் எழுதுவியா”ன்னு நல்லா ரெண்டு குத்து குத்திட்டு போகலாமே? Open-mouthed smile

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

46 comments:

 1. நல்ல தமிழ் விமர்சனமும் எழுதுறீங்க பாஸ்.. நான் போன வியாழன் சேம் பிளேஸ் படம் பார்த்தேன்.. படம் சூப்பர்.. தியேட்டர் ஈயாடுவது கவலையளித்தாலும், பார்த்த எல்லாருக்கும் படம் பிடிச்சிருக்கே.. இத விட வேற என்ன வேண்டும்?

  * பெரிய ஹீரோக்களின் படங்களை முந்திக்கிட்டு போடாமல், இந்த மாதிரி நல்ல படங்களை அப்பப்போ எடுத்து வெளியிடும் கொள்கையை இன்னும் சில தியேட்டர்கள் கடைப்பிடிக்கனும்..

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் பாஸ் ... ஆனாலும் இந்த மாதிரி படங்கள் ஈயாடினா, எதிர்காலத்தில் இது போல படங்கள் வருவது குறைந்துவிடுமே? அப்புறம் வெறும் கமர்ஷியல் மசாலாப் படங்களா தான் வந்திட்டு இருக்கும்.

   Delete
 2. நல்ல எழுதி இருக்கீங்க தல... இனிக்கு தன நான் முத்த தடவையா இந்தப் படத்தோட விமர்சனம் படிக்கிறேன், காரணம் நீங்க எழுதினதால, இன்னு படம் பார்கலா, முடிஞ்சா கண்டிப்பா பார்கிறேன்...

  ஹாலிவூடையே கலகுறீங்க கோலிவூட் உங்களுக்கு அசால்ட்டு

  ReplyDelete
  Replies
  1. ம்ம்க்கும் ... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிறாதீங்க தல. ;)

   Delete
 3. தல வரும் சீன் செம்ம......மாற்றான் தாண்டவம் அளவிற்கு எல்லாம் கிடையாது..பருவா இல்லை ....இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய விமர்சனத்தை எதிர்பார்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இப்போதைய நிலைமைக்கு மாற்றான் டிவிடி தான் என்று முடிவு கட்டியிருக்கேன். பார்க்கலாம்...சில வேளை மூட் மாறி தியேட்டர் பக்கம் போனாலும் போகலாம்!

   Delete
 4. உங்கள் ரசனையும் (விமர்சனம்) வித்தியாசமாக இருந்தது...

  tm4 (குத்தியாச்சி...)

  ReplyDelete
 5. நீங்க கெளப்புங்க தல ..
  உங்களுக்கு இதெல்லாம் சும்மா தூசு தூசி ..

  ReplyDelete
  Replies
  1. ஆத்தி ... பஞ்செல்லாம் பலமா இருக்கே?

   Delete
 6. எப்படியும் என்க்குப் பிடிச்ச எவர்க்ரீன் ஹீரோயினுக்காகப் பாத்திடணும்னு இருந்தேன். உங்க விமர்சனம் படிச்சது அந்த வேகத்தைத் தூண்டிருச்சு. மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. உங்க வயசுல எனக்கு பாதி கூட இருக்காது. ஐயா எல்லாம் எதுக்கு சார்?? நம்ம எழுத்தையும் வந்து படிச்சுப் பார்த்து கருத்து சொன்னதே போதும். தொடர்ந்து வருக!

   Delete
 7. All the Multiplex are playing only the Hindi Version in Chennai.I am waiting to go for the tamil version.Let me Hope to go for it.

  Nice Review.Whether Its Hollywood or Kollywood You Can give nice review.
  Please continue the same.

  ReplyDelete
  Replies
  1. There should definetly a place in Chennai where the tamil version is screened. Just do some searching in Google, and you'll find a place.

   Delete
 8. //விமர்சனம் பிடிச்சிருந்தா, கீழே ஓட்டுப்பட்டைகளில் என்னை நினைச்சு “இனிமே விமர்சனம் எழுதுவியா”ன்னு நல்லா ரெண்டு குத்து குத்திட்டு போகலாமே?//

  Done!

  ReplyDelete
 9. இந்த்தளத்திற்கு நான் இப்போதுதான் முதல்முறை வருகிறேன். திரைப்படங்களை பற்றிய அருமையான பதிவுகளுக்கு நன்றி, எனக்கு மிகப்பிடித்த ஆங்கிலப்படம் troy. பிராட்பிட் நடித்தது. நெப்போலியன் பற்றிய படம் ஏதாவது இருக்கிறதா. ஹிஸ்டாரிகல் படங்களை பற்றியும் எழுதுங்களேன்.
  எனதுவலைப்பூ
  http://thamizhthenee.blogspot.com/
  நேரமிருந்தால் இங்கேயும் வாருங்கள் நண்பா.
  என்றும் அன்புடன்
  தமிழ்நேசன்

  ReplyDelete
  Replies
  1. உங்க தளத்திற்கு தவறாம வருகிறேனே நண்பா? எல்லாப் புதிய புத்தகங்களும் உடனே டவுன்லோட் தான். நம்ம வலைப்பூ பக்கம் வந்தமைக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து உங்கள் சேவையைத் தொடருங்கள்!

   Delete
 10. குத்திட்டேங்கோ...நல்லா இருக்கு சூடான காபி இல்லை ...எனவே இந்த விமர்சனம் கோல்ட் காபி விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க. ஆமா ... கோல்ட்னா? Cold or Gold? :P

   Delete
 11. நிஜமாவே நல்லாருக்கு பாஸ். நீங்க இனிமேல் தமிழ்படங்களுக்கும் விமர்சனம் எழுதலாம்.. படம் ரிலீஸ் ஆன நாள் காலங்காத்தலையே படத்த பார்த்துட்டு 12 மணிக்குள்ள மொக்க விமர்சனம் எழுதும் பல பேர விட உங்கள் விமர்சனம் நல்லாவே இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி மாம்ஸ்...தமிழ் படம் பார்ப்பது குறைவு. பிடிச்சவைகளை மட்டும் எழுதுறேன். ஆனாலும் பட விமர்சனங்கள் லேட்டாத் தான் வரும். :)

   Delete
 12. நல்லா இருங்குங்க, உங்க விமர்சனம்... :-)

  ReplyDelete
 13. நல்லாச் சொல்லியிருக்கிறீங்க நண்பா.....
  என் நண்பனுகள் கூட இதையே ஒவ்வொரு நாளும் கதைக்கிறானுகள் அவனுகள் பார்த்திட்டனுகளில்ல.....
  நான் இன்னும் பார்க்கல்ல....பார்த்திடுறேன்
  பகிர்வுக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிட்டுக்குருவி...நிச்சயம் பாருங்க. பிடிக்கும். :)

   Delete
 14. நல்லாயிருக்குன்னு சொல்லிடீங்களா...அப்ப பாக்க வேண்டியது தான்..ஆனா படத்துல வர்ற ஸ்ரீதேவி இங்கிலீஸில் பேசுற காட்சிகளுக்கு எனக்கு சப்டைட்டில் தேடனுமே.....! ஹி..ஹி நம்மளுக்கும் இங்கிலீஷ்...தங்கிலிஷ் தான்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீதேவி பேசும் காட்சிகளுக்கு அவ்வளவா சப்டைட்டில்ஸ் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன். அவங்களே கத்துக்கிட்டுத் தான் இருக்காங்க. அப்புறம் அவங்க வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கா பேசுவாங்க? தமிழ்ல பாருங்க. புரியும். :)

   உங்க அடுத்த பதிவு எப்போ?

   Delete
 15. என்னத்த சொல்ல .... நானும் பாத்துட்டேன். ரொம்ப நாளுக்கப்புறம், நல்ல விதமா ஒரு மெசேஜ் சொல்லும் படம். படம் முடிவில் சந்தோஷமாக வெளியில் வந்தேன்.

  ReplyDelete
 16. ஆன்டிகளை பிடிக்காவிட்டாலும் இந்த ஆன்டியை ஏதோ பிடிக்கிறது, அந்த பக்குவப்பட்ட நடிப்புக்காகவாவது.

  ReplyDelete
 17. இனிமேல் தமிழ் விமர்சனங்களும் எழுதுங்கள் ஐயா... ஏதும் படம் போவதாக இருந்தால் எனக்கும் சொல்லுங்கள். நாம மூணு பேரும் ஒண்ணாவே படத்துக்கு போயிருக்கலாம். ஆமா ஜே.\ஸட் போனது எப்புடி உங்களுக்கு தெரியும்?

  ReplyDelete
  Replies
  1. அந்த ரெண்டு பயபுள்ளைங்களும் முகத்த காட்டிட்டாலும்.. அட போப்பா கிசோர்..

   Delete
  2. @கிஷோகர் : பிடிச்சிருந்தா மட்டும் தான் எழுதுறது...JZ படம் பார்த்த மேட்டர் தோ, மேல கமெண்ட்ல அவரே சொல்லியிருக்காரு.

   Delete
  3. @ஹாரி : இப்பவே ஈமெயில், ஃபேஸ்புக்ல பல பொண்ணுங்க...முகத்த பார்க்க ஆவலாயிருக்குன்னு ஜொள்ளு விடுறாளுக. ஒரிஜினல் ப்ரொபைல்ல ஆன்லைன் போகவே பயமாயிருக்கு..இதுல முகத்தைக் காட்டிட்டா அப்புறம் நிம்மதியா ரோட்ல போகவே முடியாதே? ரஜினி, மாதிரி ப்ளாக் கேட்ஸ் வச்சிகிட்டு தான் வெளியே கிளம்பணும். :)

   Delete
 18. விமர்சனம் ஓகே நண்பா.. நேரம் கிடைக்கும் போது பார்த்திடலாம்..

  //சத்யராஜ், ரஜினிகாந்த் மாதிரி டப்பு டுப்பு இங்கிலிஷ் பேசாமல், அழகாக, நிதானமாக,//

  சி.பி டச் தெரியுது..

  ReplyDelete
  Replies
  1. வெறும் ஓகே மட்டும் தானா ??? :P

   :(

   Delete
 19. //இனிமே விமர்சனம் எழுதுவியா”ன்னு நல்லா ரெண்டு குத்து குத்திட்டு//

  குத்தியாச்சு குத்தியாச்சு

  ReplyDelete
 20. //நெப்போலியன் பற்றிய படம் ஏதாவது இருக்கிறதா. ஹிஸ்டாரிகல் படங்களை பற்றியும் எழுதுங்களேன்.//

  ஆம் நண்பா.. ஆங்கில விமர்சனங்கள் ரொம்ப (சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்வது போல - என் அனுபவம் ஹாலிவுட் ரசிகனிடம்) இலகுவான நடையில் எழுதி கலக்கிறிங்க.. அப்படியான படங்கள் (MEL GIBSON'S "BRAVEHEART" KIND FILMS)எழுதுங்க.. எல்லாருக்கும் பார்க்க கூடிய .. THank yoU

  ReplyDelete
  Replies
  1. ஹார்ட் டிஸ்குல இந்த மாதிரிப் படம் இருக்காண்ணு தேடிப் பார்க்கணும். பார்த்தா சீக்கிரம் எழுதிடலாம். :)

   Delete

 21. நானும் படம் பார்த்தேன். ஸ்ரீதேவி நடிப்பு நன்று. கிளீன் பேமிலி என்டர்டெயினர்.

  //நிச்சயம் பாருங்க!!!! பிடிக்கும் … உங்களுக்கு ஆன்டிஸ் பிடிக்காதென்றாலும்//

  கிளாச்சிக் க்ளைமாக்ஸ் வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தல ... ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம ப்ளாக் பக்கம் வாறீக.. :)

   Delete
 22. தரமான படத்திற்கு ஏற்ற அருமையான விமர்சனம். நன்றி சார்.

  ReplyDelete
 23. தரமான படத்திற்கு ஏற்ற அருமையான விமர்சனம். நன்றி சார்.

  ReplyDelete
 24. தரமான படத்திற்கு ஏற்ற அருமையான விமர்சனம். நன்றி சார்.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...