நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

12 Monkeys (1995)

folder

இந்த வாரம் லூபர் (Looper) என்று ப்ரூஸ் வில்லிஸ் நடிப்பில் டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட ஒரு படம் வெளியாகியிருக்கு…. பார்த்தவங்க எல்லாம் ஆகா…ஓகோன்னு புகழ்றானுங்க. இப்ப IMDB ரேட்டிங் நேத்து 8.5, இப்ப 8.4ல நிக்குது (இன்னும் வோட் விழ 8க்கு கிட்ட வந்திடும்னு நினைக்கிறேன்), ரோட்டன் டொமாட்டோஸ் 93% காட்டுது. அட…பார்க்கலாம்னா, நம்ம நாட்டுல ரிலீஸ் பண்றது பற்றி பேச்சையேக் காணோம். அப்படியே இன்னும் ஒரு வாரத்துல வர்ற காமெரா ப்ரிண்ட சரி பார்த்துட்டு ஏதாச்சு சுடச்சுட எழுதலாம்னா, ஒரிஜினல் ப்ரிண்டா இல்லாட்டி படம் பார்க்கவும் மூட் வருதில்ல. நாம இன்னும் 3-4 மாசம் கழிச்சு படத்த பார்த்து, எழுத ஆரம்பிக்கிறப்போ … நம்மளப் பத்தி நினைச்சுப் பார்க்காம பயபுள்ளங்க நம்மள விட நல்லா விமர்சனமும் எழுதிடுறாங்க.

படத்தைப் பார்த்த சில பேர், லூபர் படத்தை இந்தப் படத்திற்கு கம்பேர் பண்ணியிருந்தாங்க. சரி … நம்மளால எது முடியுமோ, அதைத் தானனே பண்ண முடியும்? அதான் நானும் நல்லபுள்ள மாதிரி ப்ரூஸ் வில்லிஸ், ப்ராட் பிட் நடிப்பில் வந்த இந்தப் படத்தைப் பார்த்துட்டு எழுதலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.thumb14 வருஷம் 2035 … 1997ல மாதிரி நடந்த ஒரு வைரஸ் பரவலினால் ஒட்டுமொத்த மனிதஇனமும் அழிந்து கிட்டத்தட்ட 1 வீதம் மட்டுமே எஞ்சுறாங்க. அந்த எஞ்சின கூட்டமும், தரைப்பகுதி வைரஸால் மாசடைந்ததால் நிலத்தின் கீழ் ஒரு சமூகத்தை அமைத்து வாழ்த்து வர்றாங்க. தரைப்பகுதியெல்லாம் இப்பொழுது காட்டுவிலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டது.

கோல் இந்த நிலக்கீழ் சமூகத்தில் இருக்கும் ஒரு கைதி. இந்த வைரஸ் பரவலிற்கான காரணமான ஆர்மி ஒவ் தி 12 மங்கிஸ் (Army of the 12 Monkeys) பற்றி ஆராயவும், மாற்றுமருந்து பற்றி ஏதாவது விஷயம் தேடிக்கொள்ளவும் அவனை ஒரு சயிண்டிஸ்ட் கும்பல் ஏதோ ரப்பர் ஷீட்ல சுத்தி காலத்தில் பின்னோக்கி 1995க்கு அனுப்புகிறது. யார் செய்த கோளாறோ? கோல் 1990ம் ஆண்டில் வந்து சேர்கிறான். வந்து சேர்ந்ததும் இவன் பேசுவது சுத்தப் பைத்தியக்காரத்தனமாக தெரிய … உடனே மென்டல் ஹாஸ்பிட்டல்ல கேத்ரின் ரெய்லி எனும் டாக்டரின் கண்காணிப்பின் கீழ் அட்மிட் பண்றாங்க.

ஹாஸ்பிட்டலில் கோலுக்கு ஜெஃப்ரி கொய்ன்ஸ் என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. ஜெப்ரியின் அப்பா வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற சயிண்டிஸ்ட். கொய்ன்ஸுக்கு அவனின் அப்பா ஆராய்ச்சிக்காக விலங்குகளை துன்புறுத்துவது பிடிப்பதில்லை. ஸுவில் அடைபட்டிருக்கும் விலங்குகளை எல்லாம் விடுவிக்கணும்னு நினைக்கிறான். கோல் ஹாஸ்பிட்டல்ல இருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது பிடிபட்டு அடைக்கப்படும்போது காணாமல் போய் மீண்டும் நிகழ்காலத்திற்கு அதாவது 2035க்கு வந்து சேர்கிறான்.

thumb1 இது போதாதென்று நடுநடுவில கோலுக்கு ஒரு கனவு திரும்பத் திரும்ப வருகிறது…ஏர்போட்டில் ஒரு சிறுவன்…கண் முன்னே போலீஸ் துப்பாக்கிச் சூடு பட்டு இறக்கும் ஒரு மனிதன்…அவனருகே மண்டியிட்டு அழும் ஒரு பெண்…இந்தக் கனவு படம் முழுவதும் மீண்டும் மீண்டும் கோலுக்கு வருகிறது…

இப்போ நிகழ்காலத்தில் அவனுக்கு ஒரு தெளிவற்ற ஆடியோ க்ளிப் போட்டு காட்டப்படுகிறது…அதில் ஆர்மி ஒவ் 12 மங்கிஸின் இருப்பிடம் பற்றி சொல்லப்படுகிறது. மேலும் சயிண்டிஸ்மார் கோலுக்கு ஆர்மி ஒவ் 12 மங்கிஸ் குழுவின் போட்டோவையும் காட்ட, அதில் ஜெஃப்ரியின் புகைப்படம்! மீண்டும் 1996ம் ஆண்டிற்கு பயணப்படுகிறான் கோல்.

ஓகே … நான் சொன்னது படத்தின் அரைவாசி தான். இவ்வளவு சொன்னதே போதும்! வைரஸின் பரவலுக்கு உண்மையிலேயே ஆர்மி ஒவ் தி 12 மங்கீஸ் குழு தான் காரணமா? 1996க்கு மீண்டும் போகும் கோலால் வைரஸின் பரவலைத் தடுக்க முடிந்ததா? அவன் காணும் கனவின் அர்த்தம் என்ன? இதையெல்லாம் நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.


thumb111962ம் வருஷத்துல வந்த La jetéeன்னு ஒரு ஃப்ரெஞ்ச் குறும்படம். (இதை விட அது நல்லாயிருக்கும்ன்னு சொன்னாங்க. நமக்கு தான் சப்டைட்டில் இல்லாம திக்குற கேஸாச்சே. அதான் இன்னும் சேர்ச்சிங்) அதை ரீமேக் பண்ற உரிமையை யுனிவர்ஸல் பிக்சர்ஸ் வாங்கி, டைரக்ட் பண்ற பொறுப்பை இயக்குனர் டெர்ரி கில்லியம்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க. இப்ப பிரச்சினை என்னான்னா…30 நிமிஷ குறும்படத்தை கிட்டத்தட்ட 1.30 மணிநேரத்திற்கு இழுக்கணும். ஓகே…என்ன செய்யலாம்? மெயின் கதையை அப்படியே வச்சிட்டு, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் பின்னணியை வச்சி கதையை லைட்டா இழுக்கலாம்னு இயக்குனர் நினைச்சிட்டாரு…, நமக்கும் அப்பப்போ வாய் மேல இழுக்குது (ஹாவ்வ்வ்)

படத்தைப் பார்க்கும்போது ரொம்ப க்ளோஸா வாட்ச் பண்ணுங்க.ஏன்னா பாவம்... ப்ரூஸ் வில்லிஸே இடையில அவர் இருக்கிறது நிஜ வாழ்க்கையிலயா இல்ல மாய வாழ்க்கையான்னு கன்பியுஸாகிடுவாரு…, என்னையும் சேர்த்து தான்! ஆனா அதுலயும் ஒரு நன்மை இருக்கு. என்னான்னா…, ப்ரூஸ் வில்லிஸ் மாதிரி நாங்களும் கொஞ்சம் கன்பியுஸாகியே இருக்கிறதால அடுத்து என்ன என்னன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்தோட கொஞ்சம் த்ரில்லிங்கா படம் மூவ் ஆகுது.

இத்தனைக்கும் எனக்கு நடிப்புல பிராட் பிட் தவிர வேறு யாரும் தேறின மாதிரி தோணல… யப்பா! சில இடங்களில் ஓவராத் தெரிஞ்சாலும் நட்டு கழன்ற கேஸ் மாதிரி நடிக்கிறது அவ்வளவு சுலபமில்ல (ஹி ஹி .. நாங்கல்லாம் இயல்பாவே அப்படித்தான்). அதிலயும் வாய் பேசிட்டே, பத்து விரல்லயும் மூவ்மெண்ட் கொடுத்துக்கொண்டு...உடம்பே நடிக்குது…கஷ்டம் தான். சிறந்த துணைநடிகருக்கு ஆஸ்கார் நொமினேட் செய்யப்பட்டாலும், The Usual Suspects கெவின் ஸ்பேசி விருதை ஈஸியா தட்டிட்டு போய்ட்டார். ப்ரூஸ் வில்லிஸின் நடிப்பு என்னிக்குமே இம்ப்ரெஸ் செய்ததில்லை…, இந்தப் படத்தையும் சேர்த்து. ஆனால் ஓகே.

க்ளைமேக்ஸ் – இது தான் படத்தின் உச்சக்கட்ட சுவாரஸ்யமே. படத்தின் ஆரம்பத்திலிருந்தே திரும்பத் திரும்ப க்ளேமேக்ஸ்தான் காட்டப்படும். ஆனால் கடைசியில் தான் நமக்கும், இது தான் விஷயம்னு புரியும்.

சில இடங்களில் குழப்பமாகவும், சில இடங்களில் மெயின் கதையை விட்டு வேறு எங்கயோ சுத்தினாலும் படம் நிச்சயம் பார்க்கவேண்டிய ரகம் தான். சயின்ஸ் ஃபிக்ஷன், டைம் ட்ராவல் படம் தேடிப் பார்க்கிறவங்க கட்டாயம் ரெண்டு முறை பார்க்கலாம்!


ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

26 comments:

 1. Its a nice movie and Brad Pitt was awesome in it .. This along with Deja Vu and for extent Momento got similar screen play style.

  Cheers.

  ReplyDelete
 2. @ஜே கே

  yup ... loved Brad Pitt in this flick. thanks for commenting. :)

  ReplyDelete
 3. பாஸ்,
  இங்க எங்க ஊருலையும் "Looper" ரிலீஸ் ஆகல. Resident Evil: Retribution மட்டும் தான் ரிலீஸ் ஆகி இருக்கு..
  //ஒரிஜினல் ப்ரிண்டா இல்லாட்டி படம் பார்க்கவும் மூட் வருதில்ல. நாம இன்னும் 3-4 மாசம் கழிச்சு படத்த பார்த்து, எழுத ஆரம்பிக்கிறப்போ///
  சேம் ப்ளட்... :):)
  தல,
  subtitles மட்டும் வேண்டும் என்றால் http://www.mysubtitles.com/subtitles/search/La-Jet%C3%A9e/en
  மேலே உள்ள லிங்கில் முயற்சி பண்ணுங்க..எல்லா படத்தோட subtitles கிடைக்கும்.
  அப்புறம் 12 monkeys இன்னும் பார்க்கல...கண்டிப்பா பார்க்கிறேன்... :):)

  ReplyDelete
 4. //டைம் ட்ராவல்// ப்ருஸ் வில்ஸ்// பிரட் பிட்//
  விமர்சனம் ok பார்க்கிறேன்

  //சயிண்டிஸ்மார் /

  சூப்பர் ஸ்ரீலங்கன் டச்

  ReplyDelete
 5. விமர்சனதுலையே தலைய சுத்த வச்சுடீங்க.
  ஹ்ம்ம் சரி பார்க்கறேன்,
  நீங்க போன பதிவுல சொன்ன man from earth பாத்தேங்க.
  நல்ல இருந்துச்சு.Logical questions and answers.

  ReplyDelete
 6. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் சின்ன சின்ன விஷ்யங்கள் கூட நல்லா பண்ணி இருப்பாங்க உங்களுக்கு அந்த அளவு பிடிக்கலன்னு நினைக்கிறேன் :):) .., பிராட் பிட் கேரக்டர் ஃபைட் கிள்ப்ல வரும் கேரக்டரை நியாபக படுத்துராப்ல இருந்தது (அட்லீஸ்ட் எனக்கு) இது வந்தது ஃபட்கிளப்க்கு முன்னால..,

  ReplyDelete
 7. @ராஜ்

  உங்க ஏரியாவுல சரி அப்பப்போ புதுப்படங்களை ரிலீஸ் பண்ணிடுவாங்க. ஸ்ரீலங்கால எல்லாம் புதுப்படங்களை அப்பப்போ பார்த்துக்கிறது ரொம்பக் கஷ்டம். :(

  ReplyDelete
 8. @ஹாரி பாட்டர்

  பி.பதிவர் நம்ம விமர்சனத்திற்கு ஓகே கொடுத்ததே பெரிய விஷயம். ரொம்ப நன்றி :)

  ReplyDelete
 9. @கிருஷ்ணா வ வெ

  Man from Earth பிடிச்சிருந்தது மகிழ்ச்சி. நம்மளையும் மதிச்சு பார்த்தீங்களே? :)

  முடிஞ்சா இதையும் பார்த்துட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 10. @...αηαη∂....

  பிடிக்கலைன்னு சொல்ல முடியாது..சில இடங்கள்ல குழம்பிட்டேன். மறுபடியும் ஒரு தடவை பார்க்கணும்னு யோசிச்சு வச்சிருக்கேன்.

  Fight Club எப்பயோ அரைவாசி பார்த்ததோட நிக்குது. :) :)

  ReplyDelete
 11. ரொம்ப வித்தியாசமான கதை கொண்ட படமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க......
  காத்திருக்கிறேன் பார்ப்பதற்கு
  பகிர்வுக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 12. Very good movie for the movie lovers who like mystrey thriller,time travel, surprise ending, all packed in slow thriller... My favorite, i have seen many times..
  Important thing about this movie, no where they have used CGI, that's why this movie differ from other movies & looks real.. This movie is also in top 250 movies

  ReplyDelete
 13. @ஹாலிவுட்ரசிகன்
  அட.. சேம் பின்ச். நானும் fight club எப்பயோ அரைவாசி வரைக்கும் பார்த்துட்டு அதைப் பத்தி மறந்தே போய்ட்டடேன்.. இப்பதான் ஞாபகமே வருது!

  ReplyDelete
 14. @ஹாலிவுட்ரசிகன்
  அட.. சேம் பின்ச். நானும் fight club எப்பயோ அரைவாசி வரைக்கும் பார்த்துட்டு அதைப் பத்தி மறந்தே போய்ட்டடேன்.. இப்பதான் ஞாபகமே வருது!

  ReplyDelete
 15. படம் சூப்பர் போல.. என்ன படத்தோட கலர்தான் போரடிக்குமோன்னு தோணுது!

  * உங்க புண்ணியத்துல இப்ப ஒரு வாரமாத்தான் XBMC டவுண்லோடிட்டு யுஸ் பண்ணிட்ருககேன்.. செம ஃபன்!

  ReplyDelete
 16. @JZ

  படம் சூப்பர் தான் பாஸ்....உங்களுக்குப் பிடிக்கும், என்ன விட நல்லாப் புரியும். :)

  ReplyDelete
 17. @JZ

  ஹா ... XBMCல AEON MQ3 ஸ்கின் போட்டு யூஸ் பண்ணுங்க. அட்டகாசமா இருக்கும்!

  ReplyDelete
 18. தலைவா வணக்கம்! சயின்ஸ் பிக்சன்ங்கிறீங்கோ, புரியாதுங்கிறீங்கோ , அது போக என் குருநாதர் ஜே.ஸட் வேற குழம்பி போனேங்கிறாரு.... ஆனாலும் புறூசுக்காகவாவது பாக்க ரெடி... இப்பதான் டொங்கிள் டேட்டா அப்டேட் ஆச்சு! ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 19. குட்டிபிசாசுOctober 17, 2012 at 5:26 AM

  10 அண்டுகளுக்கு முன் பார்த்த படம். முதலில் புரியவில்லை. பிறகு வேற வழியில்லாமல். கதையை படித்துவிட்டுதான் பார்த்தேன்.

  ReplyDelete
 20. எனக்கும் அதே கதி தான் பாஸ் ... படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அப்புறம் பதிவு எழுதுவதற்காக இன்டர்நெட்டில் நோண்டியபின் ஓகேயாகிட்டு என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 21. டேய் பரதேசி நாயே நீ அறவானி அஜித் ரசிகனாஇருந்தா இருந்துட்டுப்போ அதுக்காக சம்மந்தமேயில்லாம விஜய்யை கிண்டல் செய்யும் பொட்டைத்தனத்தை விட்டுரு. விமர்சனம் பன்னா நீ பெரியா மயிராண்டின்னு நினைப்பு. பன்ற வேலய ஒழுங்காபன்ரா 60 படம் நடிச்சு பலகோடி சம்பாதிச்சிட்டுருக்குர மனுசன வீட்ல தெண்டமா உக்காந்துகிட்டு பிளாக் எழுதிக்கிட்டு டாக்டரு டோக்டருன்னு கிண்டல் பன்ரியே உன் நிலமைய நிணைச்சுப்பாத்துக. த்தூ பரதேசி

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...