நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Man from Earth (2007)

the.man.from.earth.2007.poster


இதுவரைக்கும் எத்தனையோ சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் பார்த்திருக்கேன். ஏகப்பட்ட படங்கள் ஆக்சன், பிரமாண்டம், தொழில்நுட்பம் என்று வாயடைக்க வைத்திருக்கின்றன. ஆனாலும் இதுவரைக்கும் எந்தப் படமும் முடிந்த கையோடு தனியாக கொஞ்ச நேரம் உட்கார்ந்து யோசிக்க வைத்ததில்லை. எல்லாப் படங்களிலும் தனித்து நிற்கும் ஒரு படம் … சரி சரி … பில்டப் போதும். வாங்க போகலாம்.

சயின்ஸ் ஃபிக்ஷன்னு ஆரம்பத்துல சொல்லித் தொலச்சிட்டேன். உடனே டமால் டுமீல்ன்னு பிரகாசமான வெளிச்சத்துடன் சுடும் துப்பாக்கிகள், மணிக்கு பல நூறு கி.மி வேகத்தில் ரோட்டின் மேல் மிதந்து பறக்கும் கார்கள், எதிர்கால நகரங்கள் என்று எதிர்ப்பார்ப்புடன் வரும் ஐயாமார்களே … கொஞ்சம் வெயிட் … இந்தப் படத்துல அப்படி ஒன்னுமே இல்ல. ஒரே ஒரு இடத்துல ஒரு பிஸ்டல் வருது. அதுல குண்டு இல்ல. ஒரு பிக்கப் (cab) இருக்கு. ஆனா கடைசி சீன் வரைக்கும் ஒரே இடத்துல தான் நிக்கும். அப்போ என்ன ம** இந்தப் படத்துல இருக்குன்னு கேட்பீங்களே? டயலாக் மற்றும் கொஞ்சமும் சலிக்கவைக்காத திரைக்கதை ஓன்லி.

இப்போ வேணுங்கிறவங்க உள்ளே வரலாம்.



கதை??? அ…. படத்துல கதைன்னு ஒன்னு இல்லங் (யோவ்…இன்னாப்பா? வெளாடுறியா?). படமே ஒரு விடயம் பற்றி சில மனிதர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் தான். எப்படி சொல்றது?? ஓகே…இப்படித் தாங்க படம் ஆரம்பிக்குது.

The Man from Earth-fanart

John Oldman(Smile) ங்கற ஒரு ப்ரொஃபெசர் வேலையிருந்து விலகுகிறார். வீட்டைக் காலி பண்ணிவிட்டு போறதுக்கு முன்னாடி, ஒரு வரலாற்று நிபுணர், ஒரு உயிரியலாளர், ஒரு மானிடவியலாளர் மற்றும் இன்னும் இரு “லாளர்கள்” என தனது நெருங்கிய சில நண்பர்களை ஒரு ஃபெயார்வெல் பார்ட்டிக்கு அழைக்கிறார்.  ஜானி வாக்கர் பெக்குடன் ஆரம்பிக்கும் சாவகாசமான உரையாடல் மெது மெதுவாக தடம் மாறி, ஜானின் வாழ்க்கையைப் பற்றி மாறுகிறது. அப்போது கதையோடு கதையாக ஜானும் தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை வெளியிட, அதை நம்புவதா இல்லையா என்று பைத்தியம் பிடிக்காத குறையாக ரூமில் உள்ள மற்றவர்கள். உண்மையைக் கண்டுபிடிக்க ஒவ்வொருவரும் அவங்கவங்க துறையில் ஜானிடம் கேள்விகளைத் தொடுக்க, எல்லாக் கேள்விகளுக்கும் ஃபிங்கர் டிப்ஸில் ஜானிடம் விடை இருக்கிறது. அது போதாதென்று ஜான் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய மேட்டரை போட்டு உடைக்க…மீண்டும் மற்றவர்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ள…சூடான விவாதங்களுடன் இப்படியே கதை நகர்கிறது.


திரும்பவும் சொல்றேன் … நீங்க ஒரு ஜாலியான என்டர்டெயினர் எதிர்பார்த்திங்கன்னா இந்தப் படம் பக்கம் திரும்பிக் கூட பார்க்காதீங்க. கொஞ்சம் மண்டைய யூஸ் பண்ணி தலைமுடியை பிச்சுக் கொண்டு   பார்க்க பிடிக்கும்னா இப்பவே டவுன்லோட் போடுங்க. படம் முழுவதும் ஒரு ஐடியாவைச் சுற்றி வட்டமடிக்கும் டயலாக் டயலாக் டயலாக் தான். பேசும் விஷயமும் நிச்சயமா நம்ப முடியாத மேட்டர். ஆனாப் “பேசியே கொல்றாங்களே……”ன்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு வசனமும் ஒரு சூடான விவாதம்.

நடிப்பு எல்லாம் தேறுகிற ரகமில்லை. ஆகவே படத்தைத் நூறு வீதம் தாங்கி நிற்பதும் இந்த வசனங்கள் தான். படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் ரெண்டு லட்சம் டாலர். தயாரிப்பு செலவுன்னுட்டு பல கோடிகளைக் விழுங்கி கடைசியில் ஐந்து பைசாக்கு பெறாத வெறும் குப்பைகளை மெகாஹிட் படங்களென்று கூறிக்கொண்டு வெளியேற்றும் இயக்குனர்களுக்கு வெறும் ஐந்து லட்சம் செலவில் ஒரு சுவாரஸ்யமான படத்தை எவ்வாறு தயாரிப்பது இப்படித் தான் என்று போட்டுக் காட்ட வேண்டும்.

ஜெரோமி பிக்ஸ்பி – படத்தின் கதையை எழுதியவர். இவரது கடைசி படைப்பு, மாஸ்டர்பீஸ் எல்லாம் இந்தப் படம் தான். 1960களிலேயே கதைக்கான ஐடியாவை உருவாக்கிவிட்டு, கடைசிக் காலத்தில், அதாவது 1998ம் ஆண்டு இறக்கும் தறுவாயில் தான் கதையை முடித்தாராம்.

முந்தி ஒருநாள் பார்க்க ஆரம்பித்துவிட்டு, படம் புரியாமல் சுத்த லோ-பட்ஜெட் பைத்தியக்கார படமாயிருக்கும் என்று நிப்பாட்டி வைத்துவிட்டு, மீண்டும் நேற்றுத் தான் ஒரு மூட் வந்து பார்த்தேன். பார்த்தபின் தான் எவ்வளவு அருமையான படத்தை மிஸ் பண்ணியிருக்கோம்னு தெரிஞ்சுது.

திரும்பவும் …. எல்லாருக்குமான படமல்ல இது. சயின்ஸ், மனித வாழ்க்கை, வரலாறு, சமயம் போன்றவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்துச்சுன்னா, வித்தியாசமான அட்டெம்ட்களில் ஆர்வம் இருந்துச்சுன்னா நிச்சயம் எடுத்துப் பாருங்க. அட்லீஸ் ஒரு ரெண்டு நாளைக்கு யோசிச்சிட்டு இருப்பீங்க…..என்னை மாதிரியே.

ஆங் … நான் கடைசி வரைக்கும் அந்த சீக்ரெட் என்னன்னு சொல்லவே இல்லயே … கதை செக்ஷன்ல க்ளூ இருக்கு. கண்டுபிடிச்சிக்கோங்க. ஹேப்பி Hunt for Hint Smile


ட்ரெயிலர்




வர்ர்ட்டா … Smile

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

41 comments:

  1. இரண்டு நாட்களுக்கு யோசனையா...? அப்போ பார்க்க வேண்டியது தான்... (சீக்ரெட்...?) நன்றி...

    ReplyDelete
  2. Interesting Plot மாதிரி தெரியுது பாஸ்..உங்க Hunt for Hint க்ளூ என்னன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு :):).
    படம் பார்த்தா கன்பார்ம் ஆகிரும்...பார்த்திட்டு சொல்லறேன் பாஸ்.. :)

    ReplyDelete
  3. //படம் முழுவதும் ஒரு ஐடியாவைச் சுற்றி வட்டமடிக்கும் டயலாக் டயலாக் டயலாக் தான்.//

    ஒரே இங்கிலிபீசுல பேசினா நமக்கு பிரியாதே மாமு.. இன்னா பண்ணலாம் என்கிற? EXAM படம் கூட ஒப்பிட்டு சொல்லு.. பார்துகினலாம்..

    ReplyDelete
  4. @திண்டுக்கல் தனபாலன்

    இப்படி படமெல்லாம் பிடிக்கும்னா கண்டிப்பா பாருங்க.

    ReplyDelete
  5. @ராஜ்

    அப்படியா? புத்திசாலி பாஸ் நீங்க. :)

    பார்த்துட்டு சொல்லுங்க. :)

    ReplyDelete
  6. @ஹாரி பாட்டர்

    சப்டைட்டில்னு ஒரு விஷயம் இருக்கிறது தெரியுமா தம்பி? :)

    ReplyDelete
  7. @ஹாலிவுட்ரசிகன்யோவ் பேசுனாலே புரியாது என்கிரன்.. அப்புறம் வாசிக்க வேற சொல்றிங்க..

    ReplyDelete
  8. @ஹாலிவுட்ரசிகன்

    ஓ ... இங்கிலிஷ்ல டோடலாவே அவுட்டா? ஐ ஆம் சாரி ... உங்களுக்காகத் தான் சன் டீவி, கே டிவி, கலைஞர் என்று சில சேனல்கள் ஆரம்பிச்சிருக்காங்க. :)

    ReplyDelete
  9. //சயின்ஸ், மனித வாழ்க்கை, வரலாறு, சமயம் போன்றவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்துச்சுன்னா, வித்தியாசமான அட்டெம்ட்களில் ஆர்வம் இருந்துச்சுன்னா நிச்சயம் எடுத்துப் பாருங்க. அட்லீஸ் ஒரு ரெண்டு நாளைக்கு யோசிச்சிட்டு இருப்பீங்க…..என்னை மாதிரியே//

    திஸ் ஸ் வாட் ஐ வாண்ட்.., கருந்தேள் விமர்சனம் எழுதனப்பவே பாக்கனும்ன்னு எடுத்து வைச்சேன் ரெண்டு நாள்ல பாத்துடணும் :)

    ReplyDelete
  10. enakku romba pudicha padam boss ithu... climax lam pathu meranduten... kitta thatta da vinci code mathriyana oru story

    ReplyDelete
  11. // மண்டைய யூஸ் பண்ணி தலைமுடியை பிச்சுக் கொண்டு பார்க்க பிடிக்கும்னா இப்பவே டவுன்லோட் போடுங்க.//
    தல இப்போ தான் உருப்படியா ஒரு படாத அறிமுகம் செஞ்சு இருக்கீங்க, நான் எங்க போயி டவுன் லோஅது செய்யறது. கண்டிப்பா பார்த்தே தீர்வதுன்னு முடிவு செஞ்சுட்டேன்

    // நேற்றுத் தான் ஒரு மூட் வந்து பார்த்தேன்.// பதிவுகளில் ஆங்கங்கே வரும் ஆபாச வார்த்தைகளைத் தவிர்க்கவும் #குசும்பு....

    ReplyDelete
  12. ரொம்ப சுவாரஸ்யமான சயின்ஸ் படம்னா கண்டிப்பா பார்க்கனும் கேட்கரியேதான்!

    * கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க.. இவ்வளவு ஈஸுயாவா க்ளூவை கொடுக்கறது??

    ReplyDelete
  13. @ராஜ்

    யோவ் போங்கையா இப்பவே மண்டைய போட்டு கொழப்பிக்க விரும்பல, அந்த கேம் ல நா மூணாவது லெவல் கூட தாண்டல, கடுப்ப கிளப்பிங்

    ReplyDelete
  14. @ஹாலிவுட்ரசிகன்

    வா மச்சி நாம போயி தலிவர் கலிங்கர் டிவி பாப்போம்

    ReplyDelete
  15. கதையே இல்லாத படம்னா, நம்ம வெங்கட் பிரபு டைப் படமா இருக்குமோன்னு தோணுச்சு.. ஆனா இது வித்தியாசமா இருக்கும் போல..

    ReplyDelete
  16. ரொம்ப நாள் ஆச்சு வந்து எப்படி இருக்கீங்க....உங்க மெயில் id கிடைக்குமா chinnamalai7@gmail.com

    ReplyDelete
  17. படம் நல்ல படம்னு பல பேர் சொல்லியிருக்காங்க... நீங்களும் சொல்லிட்டீங்க (மாமூல் டயாலாகா இருக்கோ?) கண்டிப்பா பாத்துர்றேன் :-)

    ReplyDelete
  18. @...αηαη∂....

    உங்களுக்கு நிச்சயமா பிடிக்கும் பாஸ். பார்த்துடுங்க.

    ReplyDelete
  19. @முத்துசிவா

    Da Vinci Codeனு சொல்ல முடியுமா? ஆனா அந்த கதையில் வரும் கரு கொஞ்சம் இதுலயும் வரும்.

    ReplyDelete
  20. @சீனு

    சந்தோஷம்...இன்னிக்காவது உருப்படியா ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தினதுல. இது ஹாலிவுட் ப்ளாக் என்பதால் இந்த மாதிரி வார்த்தைகளுக்கு சென்சார் கிடையாது.

    ReplyDelete
  21. @JZ

    பாஸ் ... நீங்க எங்கயோ போய்ட்டிங்க. உங்களுக்கு யோசித்து க்ளு கொடுக்கிற அளவுக்கெல்லாம் நாம அறிவாளி கிடையாது.

    ReplyDelete
  22. @மொக்கராசு மாமா

    வெங்கட்பிரபு படம் மாதிரி சுவாரஸ்யமா இருக்கும். ஆனா வேறு வகையில். :)

    ReplyDelete
  23. @chinna malai

    வாங்க ... ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

    Mail ID : hollywoodrasigan@gmail.com

    ReplyDelete
  24. @Baby ஆனந்தன்

    உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன். பார்த்துட்டு சொல்லுங்க..

    ReplyDelete
  25. @ராஜ்

    ஹி ஹி ... நம்ம கட்சி சீனு நீ ... நான் Checkpoint - Factsனு ஒன்னோட அவுட். :)

    ReplyDelete
  26. கொஞ்ச மாதங்களுக்கு முன் கருந்தேளார் அறிமுகபடுத்திய போதே பார்த்து விட்டேன். ஒரே ரூமில் அதுவும் பேசிக்கொண்டே ஒரு பர பர சினிமாவை கொடுத்திருக்கிறார்கள். மேலும் ஹீரோ போட்டு உடைக்கும் பெரிய சர்ச்சைக்குரிய மேட்டர் மூலம் டாவின்சி கோட் கதையையே தூக்கி சாப்பிட்டு விட்டார்கள். கிளைமாக்ஸ் மற்றுமொரு திருப்பம்.

    ReplyDelete
  27. ///கொஞ்சம் மண்டைய யூஸ் பண்ணி///

    ரொம்மப ச்சாரி.... நமக்கு சரிப்படாத மேட்ட்ருக்கு எப்பவும் போக கூடாது, அதான் புரியாதுன்னு ஆயிடிச்சில்ல , பேசாம டொங்கிளில் டேட்டாவை சேமிப்பது நன்மை தரும்! அதானால் நோ டவுன்லோடு!

    ReplyDelete
  28. ///வித்தியாசமான அட்டெம்ட்களில் ஆர்வம் இருந்துச்சுன்னா ///

    வித்தியாசமா அட்டெம்ட் ஏதாவது பண்ணனும்னா ஒரு பத்து மாடி பில்டிங்லேர்ந்து தலை கீழா குதிக்கிறது, அப்புறம் மொட்ட ததைல தேங்க ஒடைக்கிறதுன்னு ட்ரை பன்ணணும், அத்த விட்டிட்டு ... இப்புடி ரிஸ்க் எடுத்தா படம் பாக்கணும்!

    ////சயின்ஸ், மனித வாழ்க்கை, வரலாறு, சமயம் போன்றவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்துச்சுன்னா///

    இந்த ஒரு மேட்டருக்காக பாக்கிறேன்! ஆனா புரியலன்னா எனக்கு டியூசன் எடுக்க வேண்டி வரும் ஜாக்கிரத!

    ReplyDelete
  29. நானும் அரைவாசியில் பார்த்ததாய் ஞாபகம்......
    இந்த படம்தானோ தெரியவில்லை... ( இங்கிலீசு வீக்கு நமக்கு)
    மீண்டுமொருமுறை கணணியை குடைகிறேன்

    ReplyDelete
  30. @Lucky Limat லக்கி லிமட்

    அந்த மேட்டரை சொல்லும்போது நம்ம வாயும் படத்தில் உள்ள மற்றவர்கள் போல ஆஆஆஆஆன்னு போகப்போறது நிச்சயம். :)

    ReplyDelete
  31. @கிஷோகர்

    சரிப்படாத மேட்டரா? இல்லாத மேட்டரா? சரி சரி ... உங்க டேட்டாவை வீணடித்த பாவம் எனக்கு வேணாம். :)

    ReplyDelete
  32. @சிட்டுக்குருவி

    நானும் ஃபர்ஸ்டா ஒரு பத்து நிமிடம் பார்த்துட்டு போரடிக்குதேன்னு வச்சுட்டேன். திரும்பவும் பார்க்க ஆரம்பிச்சவுடன தான் இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. :)

    ReplyDelete
  33. நம்ம நண்பர்கள் அனைவருக்கும் பிடித்துள்ளது.
    கண்டிப்பா ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும்னு நினைக்கிறன் உங்க விமர்சனமும் அப்படிதான் சொல்லுது.
    கண்டிப்பா பாத்துறேன்.இன்னக்கி நைட் டவுன்லோட் போடறேன்.

    ReplyDelete
  34. டவுன்லோட் லிஸ்ட்-ல போட்டுட்டேன்....கண்டிப்பா எனக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன்.

    ReplyDelete
  35. @MuratuSingam

    வாங்க பாஸ் ... உங்க டைப் படம்னு தான் நினைக்கிறேன். பாருங்க. :)

    ReplyDelete
  36. ரொம்ம அருமையா பதிவிடுறீங்க சகோ,,, கொஞ்சம் திரைக்கதை, வசனம், நடிப்பு மட்டும் என்றில்லாமல் தொழில்நுட்பத்தையும் விமர்சித்து பதிவிட்டால் பிச்சுக்கும்...

    தனித்துவம் பெறக்கூடிய பதிவுகள்,,,

    தொடர்க சகோ,,,

    ReplyDelete
  37. கதை போகும் போக்கைப் பார்த்தவுடனே 'அந்த' சர்ச்சைக்குரிய விஷயம் என்ன என்று புரிந்தது. உண்மையிலேயே அந்த கடைசி டிவிஸ்ட் தான் அருமை. இன்னும் சொல்வதென்றால், simple, but powerful. அருமையான படத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..

    ReplyDelete
  38. @தொழிற்களம் குழு

    கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  39. @அரவிந்த்

    //simple, but powerful.//
    சரியாகச் சொன்னீர்கள் நண்பா :)

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...