நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Food Inc. (2008)

folder


எல்லாருக்கும் ஒவ்வொரு நாளும் அவசரம். காலைல லேட்டாகி எழும்புவதில் இருந்து நைட்டு வீடு வந்து கட்டில்ல படுக்கிற மட்டும் தலைக்கு மேல வேலை. போதாக்குறைக்கு இப்பல்லாம்  அநேகமான வீடுகளில் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. கேட்டா ஏதோ பொருளாதாரச் சிக்கல்னு பட்ஜெட் மினிஸ்டர் ரேஞ்சுக்கு லெக்சர். அப்போ சமைக்குறதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு? ஏதோ பன்னோ, பர்கரோ வாங்கித் வைத்துவிட்டு போறவழியிலயே வயித்துக்குள்ள தள்ளிக்க வேண்டியது தானே? டைம் மிச்சமாகும் பாருங்க?

காலையில ப்ரெட்டுக்கு பூசுற பட்டர், சீஸில் இருந்து சாயந்திரமானா ரெஸ்டாரன்டுல போய் குடிக்கிற கோக் வரைக்கும் எங்கிருந்து வருது? யார் உற்பத்தி பண்றாங்க? எப்படி உற்பத்தி பண்றாங்க? பின்னணி என்ன? இப்படி எதையாவது அலசியிருக்கீங்களா? அட்லீஸ்ட் அதுல ஒட்டியிருக்கிற லேபிளையாச்சு வாசிச்சிருக்கீங்களா? (நம்ம டியுட்டி எல்லாம் காலாவதி திகதி வாசிப்பதோடு முடிஞ்சிருதே. அதையும் எத்தன பேர் வாசிக்கிறீங்களோ?)

“ஈஈஈ”ன்னு சிரித்தபடி கட்-அவுட்டில் போஸ் கொடுக்கும் விவசாயிகள், நல்ல புஷ்டியாக வளர்ந்து சந்தோஷமாகத் தெரியும் மாடுகள், ஆடுகள், கோழிகள் … இந்த சந்தோஷம் எனும் போலியான தோற்றம் மூலம் அந்த நிறுவனத்தால் மறைக்கப்படும் உண்மைகளை என்றைக்காவது தெரிந்துகொள்ள முயற்சித்துப் பார்த்தீர்களா?

இப்படி இந்தப் பொருட்களின் அந்தத்திலிருந்து ஆதி வரைத் தேடிப் பயணித்த இயக்குனர் ரொபர்ட் கென்னர் தான் கண்டுபிடித்த பல மறைக்கப்படும் உண்மைகளை இந்த ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த டாக்குமென்டரி மூலம் நமக்குத் தெரியவைக்கிறார்.


“நம் உணவுப் பழக்கவழக்கம் கடந்த 10,000 ஆண்டுகளில் மாறியதை விட, கடந்த 50 ஆண்டுகளில் விரைவாக மாற்றமடைந்துவிட்டது”

இப்படி ஆரம்பிக்கும் படம், மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது … இறைச்சி, தானியவகை உற்பத்தி மற்றும் பெரிய கார்பரேட் கம்பனிகள் எவ்வாறு அமெரிக்க சந்தையையும் விவசாயிகளையும் சட்டம் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன.

இதில் சந்தேகமில்லாமல் ரொம்ப டச்சிங்கான ஏரியா முதல் பாகம் தான். நீட்டா பேக் பண்ணி, ஏ.ஸியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள, மிகவும் சுத்தமாக தயாரிக்கப்பட்டது என்று சுப்பர்மார்கெட்டுகளில் விற்கப்படும் இறைச்சி தயாராகும் பண்ணைகளுக்கும், இறைச்சி வெட்டப்படும் இடங்களிற்குமான பிரயாணம். பிறந்ததில் இருந்து வெட்டப்படும் வரை 24 மணிநேரமும் தமது சாணிகளுக்குள்ளேயே நிற்கும் மாடுகள், நிற்கக்கூட முடியாமல் கெமிக்கல்ஸால் பெருத்துக்கிடக்கும் கோழிகள் என்று வார்த்தைகளில் சொல்லமுடியாது.

foodinc2-jpg



மேலேயுள்ள படத்தைப் பார்த்தால், கெமிக்கல்ஸின் விளையாட்டு தெரியும். ஒரு ஷாட்டில் ஒரு கோழியைக் காட்டுவாங்க. வளர்ச்சி அதிகரித்து, பாரத்தினால் நடக்கமுடியாமல், குப்புறப் படுத்துக்கொண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும். காரணம்? போடும் இரசாயனங்கள் நெஞ்சுப்பகுதியில் இறைச்சியை அதிகரிப்பதற்காக போடப்படுபவை. இறைச்சி அதிகரித்ததும் உள்ளுறுப்புக்கள் நெரிக்கப்பட்டு மூச்சு கூட விடமுடியாமல் பண்ணிவிடும். தினமும் இப்படி இறக்கும் கோழிகளை அள்ளிக் கொண்டு போய் கொட்டும் காட்சி அதைவிடக் கொடுமை!!!

இப்படி பல கொடுமைகளுக்குப் பிறகு, இரண்டாம் பாகம் தானிய உற்பத்தியை அலசுகிறது. அமெரிக்காவின் மொத்த பயிரிடப்படும் நிலத்தில் 30வீதம் சோளத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதேபோல அமெரிக்காவில் இரண்டு பெயர்ஸ் பழங்கள் வாங்கிச் சாப்பிடும் காசைவிடக் குறைவான காசுக்கு ஒரு பர்கர் வாங்கிச் சாப்பிட்டுவிடலாமாம். அவ்வளவு ச்சீப்பா எப்படி கொடுக்கமுடிகிறது?

விடை…சோளம். இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பலமடங்கு அதிகரித்துக் கொள்ள உதவும் இன்க்ரீடியன்ட். ஆடு, மாடு, பன்னி, கோழியிலிருந்து மனுஷன் வரைக்கும் எல்லாருக்கும் சோளம் என்கிற பெயரில் நாமம் பூசிக் கொண்டிருக்கிறார்கள். மாஜரீன், கோக், சிப்ஸ் என்று எல்லா ஐட்டங்களிலும் ஏதோ ஒரு வகையில் சோளத்தைச் சேர்த்து அடிமாட்டு விலையில் நம் உடலுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு? 2000ன் பின் அமெரிக்காவில் பிறக்கும் 3ல் 1 குடிமகனுக்கு டையபிடிஸ் நிச்சயம். ஆனாலும் நல்ல காய்கறி, பழங்கள் வாங்கி சாப்பிட காசில்லாத 80வீத அமெரிக்கர்களுக்கு பீஸா, பர்கர், கோக், சிப்ஸ் தான் தேசிய உணவாம். தீமை என்று தெரிந்தும் சாப்பிட்டாக வேண்டும். வேறு வழியில்லை, காசில்லை.

thumb1


இவ்வளவு அநியாயம் பண்றாங்களே? இதை தட்டிக் கேட்க நாதியில்லையான்னு நீங்க நினைக்கலாம். ஆனா யாராலும் தட்டிக் கேட்க முடியாது. அவர்கள் வைத்தது தான் சட்டம். உதாரணமா ஒரு கோழிப் பண்ணையை எடுத்துக் கொண்டால், ஆரம்பத்தில் அவர்களே எல்லா வசதிகளும் வைத்து பண்ணையை செய்து தருவார்கள். விவசாயிக்கு கொஞ்சம் லாபம் வரும்போது, “அதை புதுப்பி, இந்த டெக்னாலஜி கொண்டு வா”ன்னு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு, அதெல்லாம் செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்கப்படும். இல்லையென்றால் கண்ட்ராக்ட் கட்!!! அதனால் காலம் முழுவதும் விவசாயி, வாங்கும் பணத்திற்காக அவர்கள் காலடியில் கிடக்கவேண்டியது தான். அது மட்டுமல்ல. அமெரிக்க உணவுக் கண்காணிப்பு துறையின் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாருமே பன்னாட்டு நிறுவனங்களின் முன்னாள் தொண்டர்களும் இன்னாள் விசுவாசிகளும் தான். ஆகவே தட்டிக் கேட்பவை சட்டத்தின் காதில் ஏறாது.

“ஒரு சாதாரண அமெரிக்க சுப்பர்மார்க்கெட்டுக்குள் பொதுவாக 47,000 வகையான பொருட்கள் இருக்கின்றனவாம். ஆனால் இவ்வளவு பொருட்களின் உற்பத்தியும், விநியோகமும் 10க்குள் அடங்கக்கூடிய மல்டி-நேஷனல் கம்பெனிகளின் கைகளில் தான் இருக்கின்றன. தெரியுமா?”

“கொலராடோ மாநிலத்தில் நீங்கள் ஒரு உணவுப் பொருளை கேலி செய்து விமர்சிக்க முடியாது. செய்தால் ஜெயில் தான்”

இதைப் போல இன்னும் பல பல விடயங்கள் படத்தில் இருக்கின்றன. நிச்சயம் எடுத்துப் பாருங்கள். அட்லீஸ்ட் ரெண்டு நாளைக்காவது உங்க சாப்பாட்டை நீங்க வேறு ஆங்கிள்ல பாப்பீங்க. முக்கியமாக ஸ்டேடஸ் பார்த்துக் கொண்டு மெக்டோனால்ட்ஸின் கோக்கையும் ஃப்ரெஞ்ச் ப்ரைஸும் தின்றுக் கொண்டு திரியிறவங்க நிச்சயம் படத்தைப் பாருங்க. அட்லீஸ்ட் உங்க எதிர்காலம் இன்னும் கொஞ்சம் ப்ரைட்டாகும். திரும்பவும் சொல்றேன், அவிங்க வேணாம்னு ஒதுக்கித் தள்ளினதைத் தான் இங்க ஏ.ஸி ரூம்ல ப்ரஸ்டீஜ்னு நினைச்சு சாப்பிட்டுட்டு இருக்கீங்க. ஹ்ம்ம் … அப்புறம் உங்க இஷ்டம்.

படம் இறுதியில் சொல்வது இது தான். “முடிந்தவரை உள்ளூர் உற்பத்திகளாக வாங்கப் பாருங்கள், கொஞ்சம் உழவர் சந்தைப் பக்கம் எட்டிப் பாருங்கள். உங்கள் உணவின் பிரயாணப் பாதையை தெரிந்து கொள்ளுங்கள், Organic உணவுகள் பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்

சத்தியமா சொல்றேன். இனிமே இந்த மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.ஸி பக்கமெல்லாம் தலைவச்சிக்கூட படுக்கமாட்டேன்!!!

 

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

11 comments:

  1. // அந்தத்திலிருந்து ஆதி வரைத் தேடிப் பயணித்த இயக்குனர் // அருமையான எழுத்து தல ரொம்ப ரசிச்சேன்

    உங்க எழுத்துக்கள் மூலமாவே அருமையான விழிப்புணர்வு தெரியுது

    // இனிமே இந்த மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.ஸி பக்கமெல்லாம் தலைவச்சிக்கூட படுக்கமாட்டேன்!!!// நான் நல்ல காலத்துலயே அந்த பக்கம் தல வச்சி படுக்க மாட்டேன்

    ReplyDelete
  2. தன் உடம்பிற்கு ஏதாவது வந்தா தான், சாப்பிடும் பொருள் மீது கவனமே வரும்...

    முன்பு : "நாற்பது வயது வரை சாப்பிடுவதற்காக வாழு... நாற்பது வயதிற்கு மேல் வாழ்வதற்காக சாப்பிடு..." என்று சொல்வார்கள்...

    இன்று : வயது = 20

    நாளை : ???

    ReplyDelete
  3. நானும் இந்த படத்தை பார்த்துளேன். படம் பார்த்ததிருந்து KFC சிக்கன் -க்கு குட்பாய் சொல்லிட்டேன்.
    தவிர burger சாப்பிடுவதை மறந்தே விட்டேன்.

    எல்லோரும் பார்க்க வேண்டிய படம். விமர்சனம் அருமை நண்பா

    ReplyDelete
  4. நண்பா விவரண படம் போலவா.. இல்லை??

    ReplyDelete
  5. இந்த படத்தையும் Super Size Me படத்தையும் பார்ப்பவர்கள் மேக்டோனால்டிற்கு போகவே மாட்டார்கள்!

    ReplyDelete
  6. பதிவை ஆரம்பத்தில் படிக்கும் போது ஹாலிவுட்டுக்கு என்னாச்சு ... வித்தியாசமான பதிவெல்லாம் போடுறாரா என்று நினைச்சேன்.. அப்புறம் தான் அவர் தனது வழமையான பதிவினை பகிர்ந்துள்லார் என்பது புரிந்தது.......

    நல்லதொரு பதிவின் மூலம் நல்ல தொரு படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  7. இன்னிக்குத்தான் கொஞ்ச நாளுக்கு அப்புறம் KFCயில சாப்டேன்! உங்க பதிவே பயமுறுத்துது.. இந்தப் படத்தை பார்த்தா இனிமே பட்டினிதான் போலயே?
    ஐ வில் ட்ரை!

    * நானு பெரிசா டாக்குமெண்டரி படம் பார்க்குறதில்லை.. ஆனா யாராவது இந்த மாதிரி அறிமுகப் படுத்தினால் தான் லிஸ்டுல சேர்ப்பேன்.. கொஞ்சம் பார்த்ததுலயே நல்ல டாகுமெண்டரி படங்கள் பத்தி அப்பப்போ எழுதவும் :)

    ReplyDelete
  8. நண்பா..
    இந்த படத்தை அல்லது documentary நிறைய முறை பார்த்துவிட்டேன்.
    என் குடும்பத்தில் உள்ளோர் மற்றும் என் நண்பர்களையும் பார்க்க சொல்லி வற்புறுத்தி உள்ளேன்.
    இந்த documentary பார்த்தபிறகு பெப்சி குடிப்பதை கூட விட்டு விட்டேன்.

    ReplyDelete
  9. நான் மெக் டி பற்றி எழுதிய போது ஹாலிவுட் பாலா Super Size Me விமர்சனம் எழுதுகிறேன் பாருங்க.. என்று எழுதினார் :-) நான் தொடர்ந்து சாப்பிடுவதில்லை என்றாலும் அவ்வப்போது இங்கே சாப்பிடுவேன்... இப்படி எல்லாம் பார்த்தால் என்ன தான் சாப்பிடுறது :-)

    ஆனால் பாலா கண்டபடி எழுதி இருந்தார்.. அங்கே சாப்பிடுகிறவர்களை சகட்டு மேனிக்கு வாரி இருந்தார்.. அவர் கிட்ட சொல்லிட்டேன்.. இதன் பிறகும் நான் சாப்பிடத்தான் போகிறேன் ஆனால், இதே வேலையா அல்ல என்று. நமக்கு தான் நல்லது சொன்னா பிடிக்காதே ;-)

    ReplyDelete
  10. இந்த FOOD INC. டாகுமெண்டரி பற்றி முன்பே கேள்வி பட்டேன், ஆனால் அப்போது நான் பார்க்க வில்லை, இப்போ நீங்கள் ஞாபக படுத்தி உள்ளீர், கண்டிப்பாக பார்கிறேன். இந்த டாகுமெண்டரி பற்றி நீங்கள் எழுதியதற்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...