நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

eXistenZ (1999)

220px-EXISTENZ

 

ரோட்ல ஏதாவது நடந்தா ஏன் எல்லாரும் ஓரமா நின்னு வேடிக்கைப் பாக்கிறாங்கண்ணு இப்பத்தாண்டா தெரியுதுன்னு வடிவேலு சொன்னப்போ ஹீ ஹீ…ன்னு சிரிச்சுட்டுப் சேனலை மாத்திட்டு போய்ட்டேன். ஆனா சம்பந்தமேயில்லாத ஒரு விஷயத்தில் தேவையில்லாம சி.ஐ.டி மாதிரி மூக்கை நுழைச்சு “நோஸ்கட்” ஆனதுக்கப்புறம் தான் அந்தாளோட ஃபீலிங் தெரியவந்துச்சு. ஹ்ம்…ஏண்டா இப்படின்னு பேசாம ப்ளாக்க அழிச்சிட்டு திரும்பி ஓடிடலாம்னு பார்த்தா, நம்ம கடை டீயையும் குடிச்சுப் பாக்கிறதுக்காக சில அப்பாவி ஜீவன்கள் நம்ம கடைப்பக்கம் வருது. சொல்லாம கொல்லாம ஓடிட்டா, அப்புறம் நாளைக்கு வரலாறு நம்மளப் பத்தி தப்பா பேசும்ல? அட …. வர்ற கஸ்டமரையும் இப்படி ஔறி வச்சி துரத்துறனே? சரி …. நான் டீயூத்தப் போறேன்.


இந்த வீடியோ கேம் கேடகரி இருக்குங்களே? லேசுல யாரும் கைவைக்காத ரொம்ப டேஞ்சரான ஒரு சப்ஜெக்ட். கதையிலோ, சிஜியிலோ கொஞ்சம் பிசகினாலும் டார்கெட் பண்ணின “சிறு” கூட்டமும் தியேட்டர் பக்கம் திரும்பிப் பார்க்காது. எனக்குத் தெரிந்து வீடியோ-கேம் பேஸ் பண்ணி வந்த படங்கள் (ட்ரொன் தவிர்த்து) பெரிசா சக்ஸஸ் ஆனதா ஞாபகம் இல்ல. ஆனாலும் பாருங்க…டேவிட் க்ரோனன்பெர்க்குன்னு ஒரு ஆளு. வன்முறையாக மட்டுமே படமெடுக்கத் தெரிந்த மகான். அவரோட ஸ்பெஷாலிட்டி ‘உவ்வ்வே’ வரும்படியான காட்சியமைப்பு. இவரோட படங்களில் ஹாரர், வன்முறை என்பன உச்சக்கட்டத்திற்கு சென்று தாண்டவமாடும். 1996ல் வந்த Crashங்கற படத்தைப் பார்த்திருக்கீங்களா? பார்த்தா தெரியும் நான் சொன்னதன் மீனிங். இந்த வீடியோ கேம் சப்ஜெக்ட்டிலும் இந்த ஹாரர் கேடகரியை மிக்ஸ் பண்ணி வ்வே வரவைக்க அவர் எடுத்த பரீட்சார்த்த முயற்சி தான் இந்தப் படம்.


thumb5


கதையா? ஹ்ஹ்ம். (ஹாவ்வ் தூக்கம் வருது. நாளைக்கு மீதியை டைப் பண்றேன்.)

(சில மணி நேரங்களுக்குப் பிறகு … ) எங்க விட்டேன்…? ஆங் … கதை … எதிர்காலத்தில் படமெடுத்திருக்காங்க. எதிர்காலமில்லையா? டெக்னாலஜி ரொம்ப முன்னேறிடுச்சி. விருப்பப்படுற மனுஷங்க அவங்க உடம்பில பயோ-போர்ட் (USB மாதிரி) எனப்படும் ஒரு எலக்ரானிக் ஸ்லாட்டைப் பூட்டிக்கலாம். வீடியோ கேம் விளையாடுறதுன்னா கான்ஸோல்ல இருந்து வரும் கேபிளை அந்த ஸ்லாட்டில் சொருக வேண்டியது தான். வர்ச்சுவல் உலகமான ஒரு கேம் நெட்வெர்க்கிற்குள் கனெக்ட் ஆகிடுவாங்க. இதுல அந்த கிட்னி ஷேப்பான கேம் கன்ஸோல் எல்லாம் செய்யப்பட்டிருப்பது ரத்தத்திலும் சதையிலும். (இயக்குனரின் கற்பனாசக்தி)

இப்படிப்பட்ட காலக்கட்டத்தி்ல் வீடியோ கேம் உலகின் விடிவெள்ளி, அலீக்ரான்னு ஒரு அம்மணி, புதுசா ஒரு வீடியோ கேம் கண்டுபிடிக்கிறாங்க. அதுக்குப் பேரு தான் eXistenZ. இவங்க ஒரு க்ரூப்புடன் சேர்ந்து டெஸ்ட் கேமிங் பண்ணும்போது அங்கிருக்கும் ஒருவன் பல், எலும்பால்??? செய்யப்பட்ட ஒரு பிஸ்டலால் அம்மணியை சுட்டுவிடுகின்றான். ஆனா சரியா சுடாம விட்டதால படமும் முடியாம கன்டினியு ஆகுது. இப்போ செக்யுரிட்டியாக அங்கிருக்கும் ஹீரோவான டெட்  அலீக்ராவையும் இழுத்துக்கொண்டு தப்பித்து ஓடுறான்.

ஆனாப் பாருங்க. அவங்க ராசில கோளாறாகி பிழையான துப்பாக்கி சூட்டால் இவங்களின் கன்ஸோல் உடைந்துவிடுகிறது. பல மில்லியன் செலவில் உருவாக்கிய அந்த கேமின் ஒரே ஒரு காப்பி இருப்பதும் அந்த கன்ஸோலில் தான். இப்போ இதை சரிப்பார்க்க ரெண்டு பேரும் விளையாடப் போறாங்க. விளையாடுவதற்காக அந்த மாய உலகிற்குள் சென்றவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களால் திரும்பி வர முடிந்ததா? அலீக்ராவை கொலை செய்ய முயன்றவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? இதெல்லாம் தெரிஞ்சிக்க விருப்பப்படுறவங்க டவுன்லோட் பண்ணி பார்த்துக்கோங்க.


thumb6

படத்தோட ஹைலைட்டே நம்ம டைரக்டர் க்ரோனன்பெர்க் தான். அவரோட டச் இதில் இல்லாமல் போயிருந்தா பத்தோடு பதினொன்னாத் தான் இந்தப் படம் போயிருக்கும். செக்ஸுவல் உணர்ச்சியை தரக்கூடிய ஒரு பயோ-போர்ட், சதை ரத்தத்தால் செய்யப்பட்ட கேம் கன்ஸோல், இரண்டு தலை ட்ராகன், எலும்புப் பிஸ்டல்னு அவரோட ஸ்பெஷாலிட்டியை வச்சி கலக்கியிருக்கார். அதிலும் கேம் உலகில் ஹீரோவும் ஹீரோயினும்  ஒரு ஹோட்டல்ல சாப்பிடப் போவாங்க. அங்க சர்வர் ஹீரோவின் பர்த்டேக்காக “டுடே ஸ்பெஷல்” கொண்டு வந்து வைப்பான் மேசைல. எனக்கு அரைவாசியோடு அன்னிக்கு லஞ்ச் கட்!!!

படத்தில் நடித்தவங்களில் எனக்குத் தெரிந்தது ஒரே முகம் தான். ஜுட் லோ. ஆர்ட்டிஃபிஷல் இன்டெலிஜன்ஸ் படத்தில் ரோபோவாக வருவாரே? ச்ச்ச் … அத விடுங்க. ஷெர்லாக் ஹோம்ஸில் டாக்டர் வாட்சனாக வருபவாரே, இவரே அவர். ஆனாலும் இதில் நடிப்பெல்லாம் சொல்லிக் கொல்ற அளவுக்கும் இல்லை, கொள்ற அளவுக்கும் இல்லை. ஹீரோயினும் செம பீஸு. ஆனா வேறப்படத்தில் பார்த்ததா ஞாபகம் இல்லை.

விளையாடுபவர்கள் தம்மை ஒரு நெட்வெர்க்கிற்குள் இணைத்துக் கொண்டு ஒரு வர்ச்சுவல் உலகத்திற்கு போவதெல்லாம் மேட்ரிக்ஸ் படத்தை நினைவுபடுத்துகிறது. அதே போல கேமிற்குள்ளும் பல ஆழ்ந்த லெவல்கள் இருப்பது போல காட்டிவிட்டு கடைசியில் இன்செப்ஷன் பார்த்தவங்க மாதிரி நம்மை ஆக்கிவிடுகிறார் க்ரோனன்பெர்க். நோட் பண்ணிக்கோங்க …. இந்தப்படம் மேட்ரிக்ஸ், இன்செப்ஷன் வெளிவர முன்னமே ரிலீஸ் ஆகிடுச்சு. (ஆனால் இரண்டு படத்தின் பேஸிக் ஐடியா இந்தப் படத்தில் இருந்தாலும் நிச்சயமா மேட்ரிக்ஸ், இன்செப்ஷன் இதை விட பல மடங்கு என்டர்டெயினிங்கா இருக்கும்)

படத்தோட போஸ்டரைப் பார்த்தால் ஏதோ B-grade மொக்கைப் படம் போலயிருக்கும். படம் செமப் படம். ஆனா பாக்ஸ் ஆபிஸில் தான் படுதோல்வி. சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர், உவ்வே பட விரும்பிகள் எடுத்துப் பார்க்கலாம்.


ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

19 comments:

 1. முதல் பேரா - என்னன்னே புரியலியே!

  சயின்ஸ் ஃபிக்ஷன் கதைங்கறதால பார்க்கனும்தான்.. ஆனா அந்த 'உவ்வே' சமாச்சாரம்தான் பயமுறுத்துது!
  * இனிமே ஸ்கோர் வராதா?

  ReplyDelete
 2. @JZ

  முதல் பேரா சுயசொறிதல். அத விட்டு விடுங்க.

  சயின்ஸ் பிக்ஷன் பிடிக்கும்னா எடுத்துப் பாருங்க. எண்டிங் சூப்பரா இருக்கும்.

  ReplyDelete
 3. //ஏண்டா இப்படின்னு பேசாம ப்ளாக்க அழிச்சிட்டு திரும்பி ஓடிடலாம்னு பார்த்தா///
  ஏன் தல...???இப்படி எல்லாம் யோசிகிறேங்க...???ரொம்ப ரொம்ப தப்பு...இது மாதிரி எல்லாம் உங்களுக்கு திங்கிங் வரவே கூடாது... இந்த என்னத்தை மாத்துங்க..எனக்கு லைட்டா புரியுது..நீங்க ஏன் இப்படி சொன்னீங்கன்னு... :( நம்ம அப்புறமா இத பத்தி பேசலாம்..
  அப்புறம் படம் ரொம்ப உவ்வே ஹாரர் மாதிரி தெரியுது, நான் பார்கிறது டவுட் தான்.... :)

  ReplyDelete
 4. மொக்கைப் படம் போலயிருக்கும். படம் செமப் படம். //
  படம் மொக்கையா இல்ல பாக்கலாம் ரகமா? அந்த உவ்வேதான் கொஞ்சம் யோசிக்க வைக்குது...
  ஆனால் சரி முயற்சி பண்ணிப் பாப்போம்...

  ReplyDelete
 5. தமிழ் 10 ஒ 19 //
  ஹீ ஹீ... நிறைய பேர் இந்த மாறி பண்றாங்க அதான் நானும் ஒரு trial .....

  ReplyDelete
 6. // க்ரோனன்பெர்க். நோட் பண்ணிக்கோங்க// ஹா ஹா ஹா தல உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு....

  ReplyDelete
 7. டவுன்லோட் பண்ணீ ஒரு மாமாங்கமா பாக்காம இருக்குற படங்களுள் ஒண்ணு :( . உங்க விமர்சனத்த பார்த்தா நல்லா இருக்கா இல்லையான்னு ஒரு முடிவுக்கே வர முடியல இன்னும் கொஞ்ச நாள்ல பாக்கணும் :). David Cronenberg எடுத்த மத்த படங்கள் பார்த்து இருக்கீங்களா ?? சில படங்கள் செமையா இருக்கும் அதுலையும் Eastern Promises மாஸ்டர்பீஸ் கண்டிப்பா பாருங்க..

  ReplyDelete
 8. @அருண்பிரசாத் வரிக்குதிரை

  நிச்சயம் பார்க்கலாம் ரகம் தான். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 9. @ராஜ்

  வேணாம் ராஜ். விட்டுடுங்க. ட்ரை பண்ணிப் பாருங்க. பிடிக்கலாம். :)

  ReplyDelete
 10. @சீனு

  இதுல என்ன நேர்மை??? புரியலயே.

  ReplyDelete
 11. @...αηαη∂....

  படம் நல்ல படம் தான். கிட்டத்தட்ட இன்ஷெப்ஷன் போல சாயல் இருக்கும். (கடைசிக் கட்டம்). Eastern Promises எடுத்து வச்சிருக்கேன். பார்க்கணும்.

  ReplyDelete
 12. @ஹாலிவுட்ரசிகன்அது லேட்டஸ்ட் டெம்ப்ளட் மச்சி (TAMIL 10 VOTE)

  ReplyDelete
 13. ஸ்டைலு ஸ்டைலா கண்டு புடிச்சு எழுதுறாங்கப்பா.. இப்படி ஒரு படம் வெளி வந்து இருக்கு என்று நீங்க சொல்லி தான் தெரிது.. சண் டிவில போட்டா கண்டிப்பா பார்க்கிறன்.. ஏன்னா INCEPTION படம் தமிழ்ல பார்த்தும் JZ ஓட விமர்சன தொகுப்பு படிச்சும் நம்ம அறிவுக்கு சுமாரா தான் இன்னைக்கு வர விளங்கி இருக்கு.. வாழ்த்துக்கள்..


  ReplyDelete
 14. @ஹாரி பாட்டர்

  இன்செப்ஷன் லெவலுக்கு எல்லாம் குழப்ப மாட்டாங்க. முடிவு தான் அந்த மாதிரி இருக்கும். :)

  ReplyDelete
 15. நல்ல விமர்சனம் நண்பரே..
  நானும் உங்க டீ கடைக்கு அடிக்கடி வருகிறவன் தான்.
  எங்கயும் போகாதிங்க...என்ன உங்க கடை டீ எனக்கு பிடிக்கும்.
  தொடர்ந்து டீ ஆத்துங்க....

  ReplyDelete
 16. உங்கள் இந்த பதிவை நான் எப்போதோ படித்து விட்டேன்..அந்த சமயத்தில் என்னால் கமெண்ட் செய்ய முடியவில்லை. இப்போ தான் நேரம் கிடைத்தது. என் டைப் படம் போல இருக்கும் என்று நினைக்கிறன், அறிமுக படிதியதற்கு நன்றி.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...