நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Due Date (2010)

folder

நீங்க அனேகமா அன்பே சிவம் படம் பார்த்திருப்பீங்க. கொஞ்சம் ஹாலிவுட் ஞானம் அதிகமுள்ளவங்க அப்படியே காலத்தில் கொஞ்சம் பின்னாடி போய் Planes, Trains and Automobiles படத்தையும் எடுத்துப் பார்த்திருப்பீங்க. அந்த இரண்டு படமும், அதன் காமெடியும் பிடித்திருந்தவங்க மட்டும் கீழுள்ள கோட்டைத் தாண்டி போகுமாறு கேட்டுக் கொள்கிறேன் (பர்சனல் பிட்டு – எனக்கு அசலை விட நகல் பிடித்திருந்தது). இந்த வகைப் படங்களில் இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னவங்க டு ஸ்டெப் பேக் போய் பதிவை ஸ்கிப் பண்ணிடுங்க. ஏன்னா, இந்தப் படமும் ஏறக்குறைய … அட ஏறக்குறைய என்ன, முழுசா அதே தீம் தான்.

ஓகே…மூவிங் ஓன்.


Due Date-fanart

பீடர், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள மனைவியைப் பார்க்க லாஸ் ஏஞ்சல்ஸ் செல்வதற்காக ஏர்போட்டிற்கு வரும் பிஸினஸ்மேன். வந்த இடத்தில் ஈதன் பீடரின் டாக்ஸி கதவை இடித்துக் கொண்டு சென்று காரைப் பார்க் செய்ய…ஏதேச்சையாக இருவரினதும் பேக்ஸும் கைமாற…ஏர்போட் செக்கப்பில் பீடரின் கைப்பையில் போதைப்பொருள் இருப்பதாக பிரச்சினை வர…அது அவனுடையது இல்லை என்று வாதாடி ப்ளேனுக்குள் வந்து சேர, ப்ளேனுக்குள் பீடரின் எதிரே ஈதன் இருக்க…ஈதன் பாம்ப், குண்டுவெடிப்பு என்று பேச்சுவாக்கில் உளற இருவரும் நோ-ப்ளைட் லிஸ்டில் போடப்பட்டு ப்ளேனிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

சட்ட நடவடிக்கை, தண்டனைகள் இல்லாமல் விசாரணைக்குப் பிறகு இருவரும் விடுவிக்கப்பட, பீடருக்கு அப்போது தான் அவனது பை, வாலட் எல்லாம் ப்ளைட்டில் வைத்துவிட்டு வந்தது தெரியவருகிறது. கையில் ஒத்தப்பைசா இல்லாமல் பீடர் நின்றுகொண்டிருக்கும்போது, ஈதன் கார் ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு வர, பீடர் வேண்டாவெறுப்பாக வேறு வழியின்றி ஏறிக் கொள்கிறான்.

இங்கிருந்து, இருவரும் வழியில் சந்திக்கும் காமெடி அனுபவங்கள் தான் படம்.


thumb4

ரொம்ம்ம்ம்ப நாளாக் ஹார்ட்டில் தூங்கிட்டு கிடந்தது இந்தப் படம். ரொபர்ட் டௌனி, மற்றும் ஹேங்-ஓவர் புகழ் கலிஃபியநாகிஸ் இரண்டு பேரு மேல இருந்த நம்பிக்கையில படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். இவங்க ரெண்டு பேரையும் சொல்லியும் குத்தமில்ல. அவங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் தான். ஆனால் இரண்டு திறமையான நடிகர்களைக் ஒரே காருக்குள் வைத்தால் படம் சக்ஸஸாகிவிடுமா? (உ.ம் பையா??? அடப் போய்யா)

கதை??? பல வருஷமா ஹாலிவுட்டில் தோசைமாவு மாதிரி அரைச்சு அரைச்சு புளிச்சு போன மேட்டர். கதை ஆரம்பித்து 15 நிமிடங்களுக்குள்ளேயே படத்தின் முடிவு வரைக்கும் மைண்ட்ல சைலண்டா என்னோட வர்ஷன் ஓடி முடிஞ்சுது. ஆனா முதல் 15 நிமிஷத்தையும் கடத்திட்டீங்கண்ணா தாராளமாக சிரிக்க வைக்கச் சில இடங்கள் இருக்கு. டௌனிக்கு படம் முழுவதும் முகத்தை உர்ர்ர் என்று வைத்துக் கொள்ளும் பாத்திரம். கலிஃபியநாகிஸ் வழக்கம் போல (ஹேங்ஓவர் போல) சின்னப்புள்ளத் தனமா காமெடி பண்ணும் கரெக்டர். இந்த இருவரும் சேரும் ஓரிரு இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். ஆனால் பல இடங்களில் காமெடி எடுபடாமல் எரிச்சல் தான் மிஞ்சுகிறது. கிஸ் கிஸ் பேங் பேங் படத்தில் வந்த அதே டௌனி-மொனகன் ஜோடி தான் இந்தப் படத்திலும். ஆனால் மொனகனுக்கு இதில் பெரிதாக ரோல் ஒன்றுமில்லை.

ரோட்டில் போற ரெண்டு பேர் மீட் பண்ணுவது, பேசுவது, ட்ரிப் போவது, லூசுக் காமெடி பண்ணி மத்தவன் எரிச்சலை சம்பாதித்துக் கொள்வது, இப்படி ஏற்கனவே பார்த்த விஷயங்கள் தான் படம் முழுக்க. அதனால் தான் பாதிப் படம் போகும்போது அனேகமாக அடுத்து வரும் சீன் இப்படி இருக்கும் என்று உங்களால் சொல்லக்கூடியதாக இருக்கும்.

சுருக்கமா சொன்னா, இதுவொரு ஆவரேஜ் காமெடி மூவி. காமெடிப் படம் பிடிச்சவங்க, Planes, Trains and Automobiles மாதிரி படம் பார்க்காதவங்க எடுத்துப் பார்க்கலாம். இதுவரைக்கும் சுவாரஸ்யமாக படிச்சுட்டு வந்தவங்களுக்கு, கதை தெரிஞ்சிருக்கும். தேவைன்னா டவுன்லோட் பண்ணிப் பாருங்க. தேவையில்லைன்னா அப்படியே படிச்சுட்டு ஓடிடுங்க.

ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

27 comments:

  1. பாஸ்! போன மாசம் HBOவில தொடர்ந்து போட்டு சலிப்படைய வைச்ச படம்!Robert downey jr க்காக பார்த்தேன்! சுமார் காமெடிதான். அப்பாவோட அஸ்தியில காப்பி குடிக்கிறது,pull dog வாற ஸீன்ஸ், க்ளைமாக்ஸ்ல காருக்குள்ள Galifianakis தற்செயலாக துப்பாக்கி ட்ரிக்கரை அழுத்தி downey காலை சுட்றது. போன்ற சில இடங்களை மட்டும் மீண்டும் மீண்டும் ரசிச்சு பார்த்தேன் :D

    ReplyDelete
  2. // ஹாலிவுட் ஞானம்// ஞானம் நான் இந்த இடத்துலயே அபீட் ஆய்ருப்பேன்... பயபுள்ள பழகுன தொடதுக்காக படிச்சு தான ஆகணும்.. அப்புறம் எங்களுக்கும் எப்ப தான் இந்த ஆளிவூட் ஞானம் வருமாம் ...

    ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டேன்... ஆ அடுத்த பதிவு எப்பபா .... :-)

    ReplyDelete
  3. படிச்சிட்டேன்... ஓடிற்றேன்... ஹா... ஹா...

    ReplyDelete
  4. பார்த்த படம் தான்..
    நீங்கள் சொல்வது போல சுமார் ரகம்..

    ReplyDelete
  5. படத்துல பெருசா எதுவும் இல்லைன்னா நழுவிக்கிறேனுங்கோ..

    ReplyDelete
  6. எங்கோ பார்த்த ஞாபகம் சமீபத்தில்.
    ஓரளவுக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது.

    ReplyDelete
  7. அட நம்ம வூல்ப் பக் தலைவர் ஆலன் இருக்காரு. கட்டாயம் பார்த்திட வேண்டியதுதான்.

    இவ்வகை படங்கள் எனக்கும் பிடிக்கும் நன்பரே.

    ReplyDelete
  8. அப்படியே இந்த பதிவிற்கும் நம்ம வலைப்பதிவில் லிங்கு கொடுத்தாச்சு.

    ReplyDelete
  9. நெசமாலுமே நான் வந்து பாத்தப்போ உங்க கமண்டு பாக்ஸ் ஓப்பின் ஆகல, அப்புறம் நீங்க சோஅந்துக்கு அப்புறம் கூட வந்து பாத்தேன் அப்பவும் ஊஹீம்..... ஏதோ இப்பவாச்சும் தொறந்துதே!

    ReplyDelete
  10. நம்ம ஹாங் ஓவர் பார்ட்டியோட பரம ரசிகன் நான்! அவருக்காக பாக்கலாம்னு இருக்கேன், ஆனா என்னோட குருநாதர் ஜே.ஸட் ஜகா வாங்கிறது தான் கொஞ்சம் இடிக்குது.

    ReplyDelete
  11. @மணி

    படத்தோட ஹைலைட் ஏரியா எல்லாத்தையும் சொல்லிட்டிங்க தலைவா...நீங்க சொன்ன இடங்கள் ரொம்பவே ரசிக்க வைக்கும். :)

    ReplyDelete
  12. @சீனு

    ஆமா ஆமா ... மற்ற எல்லா ஞானமும் வந்திருச்சு....தொடர்ந்து நம்ம ப்ளாக்கையும் படிச்சுட்டு வா மச்சி..கடைசியா ஹாலிவுட் ஞானமும் கிடைச்சிடும். :)

    ReplyDelete
  13. @Doha Talkies

    அட ... எல்லாரும் ஏற்கனவே பார்த்தாச்சா? நான் தான் லேட்டா?

    ReplyDelete
  14. @JZ

    படத்துல அங்கங்க கொஞ்சம் காமெடி இருக்கு நண்பா...நெட் வேஸ்ட் பண்ண விருப்பமில்லைன்னா எங்கயாச்சு 50ரூவா டிவிடி ஒன்று வாங்கிப் பாருங்க.

    ReplyDelete
  15. @Mayu Mayooresan

    அப்போ இப்பவே டவுன்லொட் போட்டுவிடுங்க...

    ReplyDelete
  16. @கிஷோகர்

    அட ... எனக்கே இந்த மாசத்துக்கான நெட்டு முடிஞ்சுப் போய் ... நான் இடிஞ்சுப் போய் இருக்கேன். இப்பத் தான் வேறொரு லைன் மூலமா ப்ளாக் பக்கம் வர்றேன். :)

    ReplyDelete
  17. @கிஷோகர்

    அடடா ... ஜே.ஸட் ... இப்படி ஒரு அடிமை கிடைக்க கொடுத்து வைக்கணும். :) :)

    ReplyDelete
  18. அருமையான சூப்பர் ஹாலிவுட் படம்

    ReplyDelete
  19. சிலர் அருமைங்குறாங்க... ஆனா எனக்கு மனசுல ஒட்டல பாஸ்... பாதிதான் பாத்தேன். பிறகு தூங்கிட்டேன்.Robert downey jr காக பாத்த படம் .

    ReplyDelete
  20. ஆங் .. முன்னாடியே வாசிச்சுட்டேனாக்கும் . கமெண்ட் போடத்தான் லேட்டு... அப்புறம் நம்ம பதிவு.

    ReplyDelete
  21. Hang Over கிரேஸ்ல பார்த்தேன் பாஸ்.. நீங்க சொல்லுற மாதிரி படம் சுமார் காமெடி ரகம் தான்.

    ReplyDelete
  22. இன்னும் பார்க்கவில்லை, எப்படியும் இந்த படத்தை ஓர் இரு வாரத்தில் பார்த்து விடுவேன்.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...