நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Kiss Kiss Bang Bang (2005)

folder

சில “பெண்”களும் சில “கன்”களும் (தமிழ்நாட்டை மட்டும் பொறுத்தவரை சிலநேரங்களில் அருவா) இருந்தால் மிக இலகுவாக ஒரு ஆக்சன் படம் தயாரித்துவிடலாம் என்று ஒரு கருத்திருக்கிறது. ஹாலிவுட்டோ, கோலிவுட்டோ…பெரும்பாலான ஆக்சன் படங்கள், மிக முக்கியமாக இந்த இரண்டை நம்பியே களமிறங்குகின்றன. மிகச் சிறந்த சமீபத்திய உதாரணமாக பில்லா-2 ஐக் குறிப்பிடலாம். ஆனாலும் விதிவிலக்காக சில படங்கள் இந்த ஃபார்முலாவை நக்கலடிக்கும் அல்லது தகர்த்தெறியும் நோக்குடன் களமிறங்குவது வழக்கம். அப்படிப் பட்ட ஒரு முயற்சி தான் Kiss Kiss Bang Bang.


kisskissbangbang3
ஹாரி லாக்ஹார்ட்
….ஒரு திருட்டில் அதிகம் திறமையில்லாத ஒரு திருடன். ஒரு முறை திருடப்போகும் போது அதில் மிஸ்டேக்காகி, போலிஸிடம் இருந்து தப்பித்து ஓடும்போது….துப்பாக்கி சூடுபட்டு கூடவந்த நண்பன் இறந்துவிட…, ஏதேச்சையாக ஒரு துப்பறியும் படத்திற்கு நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் இன்டர்வியுவிக்குள் நுழைய, அங்கு சிட்டுவேஷன் சரியாக இவனுடையது போல அமைய “உண்மையாக” பர்ஃபோமன்ஸ் கொடுத்து அசத்துகிறான் ஹாரி. உடனே இவனை படத்திற்கு தேர்ந்தெடுத்து, அதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் பார்ட்டிக்கு இவன் அழைக்கப்பட…அங்கு போன இடத்தில் ஒரு உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை ரேப் பண்ண முயற்சிக்கும் ஒருவனை தடுக்கப் போக, அவன் ஹாரியை கீழே போட்டு மிதித்து உதைத்துவிட்டுப் போக, வந்து கைகொடுக்கிறான் கேய்-பெரி. (பெயரில் Gay என்று இருப்பதாலோ என்னமோ, இவர் உண்மைக்குமே ஆம்பிளைங்கள டேட் பண்ணுறார்)

ப்ரைவேட்-டிடெக்டிவ்வான கேய்-பெரியுடன் சேர்ந்து படத்தின் ரோலுக்காக ஒரு கேஸிற்கு கூடவே ட்ரெயினிங் போகிறான். போகும் இடத்தில் தவறுதலாக ஒரு கடத்தல்-கொலை சம்பவத்துடன் மூக்கை நுழைத்துக் கொள்ள முதலாவது பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதே நேரத்தில் மேலே ஹாரி காப்பாற்றிய பெண் அவனின் சிறுவயது தோழி ஹார்மணி எனத் தெரியவருகிறது. சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற கனவுடன் வந்து, இன்னும் ஒரு பியர் விளம்பரம் தவிர்த்து ஒன்றும் சாதிக்காத ஒரு அழகிய பெண். இந்த நேரம் பார்த்து ஏற்கனவே உள்ள பிரச்சினை போதாதென்று ஹார்மனியின் தங்கையும் தற்கொலை செய்து கொள்ள இரண்டு பிரச்சினைகளுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக ஹாரியின் மண்டையில் சின்னதாக க்ளிக் ஆக, அதன் மூலம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை அவிழ்ப்பது மீதிக் கதை.



kiss-kiss-bang-bang-2005
Lethal Weapon, Last Boy Scout என்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி 80-90களில் டாப்பில் இருந்தவர் ஷேன் ப்ளாக். திடீரென்று காணாமல் போய்விட்டு மீண்டும் கிட்டத்தட்ட 10வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் தான் ரீ-என்ட்ரீ. அத்துடன் இவர் இயக்கும் முதலாவது படமும் இது தான். பஞ்ச் வரிகள், செம ஆக்சன், கொஞ்சம் பிட்டு, காமெடி என ஆக்சன் படத்திற்கு என்னென்ன தேவையோ…எல்லாம் இந்தப் படத்தில் சரியான அளவில் பாவித்து உள்ளார். படமும் கொஞ்சம் கூட போரடிக்காமல் செம ஸ்பீடுல மூவ் ஆகுது. ஷேன்-டௌனி கூட்டணி மீண்டும் 2013ல் Iron-Man 3 இல் ஜோடி சேருகிறதாம் (நம்பிப் போகலாம்னு தோணுது).

படத்தின் முக்கிய பலமே நடிகர் கூட்டணி தான். ஹாரியாக அயர்ன்-மேன் புகழ் ராபர்ட் டௌனி. லொக்ஹார்ட் கரெக்டருக்கு மிகவும் பொருத்தமான தெரிவு. அயர்ன்-மேனில் டோனி ஸ்டார்க்கை எமக்குப் பிடிக்க வைத்த அதே நக்கல், டைமிங் காமெடி சேர்ந்த கதாபாத்திரம். மனுஷன் பிச்சு வாங்குறார். கேய் பெரியாக Batman Foreverல் பேட்மேனாக வந்த வால் கில்மர். (பேட்மேன் அயர்ன்மேனுக்கு லிப்-டு-லிப் கொடுக்கும் காட்சி கூட இந்தப் படத்தில் உண்டு) ரெண்டு பேருக்கும் செம கெமிஸ்ட்ரி…அட நடிப்புல சொன்னேங்க. கேய்-பெரி கரெக்டர் முதலில் ஹாரிசன் ஃபோர்ட்டுக்கு அளிக்கப்பட்டதாம்

kiss-kiss-bang-bang-michelle-monaghan
ஆனாலும் மேலே சொன்னது போல ஒரு பெண்ணைப் போடாவிட்டால் ஆக்சன் படம் பூர்த்தியாகாது தானே? அதனால்  ஹார்மணியாக மிஷேல் மொனாகன். நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இல்லாவிட்டாலும் அமெரிக்கால ரோட்டு சாதாரணமா போற பொண்ணு மாதிரி இருக்கிறதால கரெக்டருக்கும் சரியா பொருந்திப் போறாங்க. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது…அவங்களுக்கான வேலையை செம கச்சிதமா நிறைவேற்றிவிட்டாங்க. படத்திலும் இவங்கள சும்மா வந்து “காட்டிட்டு” போகவிடாமல் சரியா ஷேன் பயன்படுத்தியிருக்கார்.

ஆக்சன், காமெடி கலந்த படங்கள் பிடித்தவர்கள் எடுத்துப் பாருங்க.

ட்ரெயிலர்





“This isn’t Good Cop, Bad Cop. This is Fag and New Yorker. You’re in a lot of trouble.”

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

18 comments:

  1. படம் எப்படி இருக்குமோ தெரியாது, விமர்சனம் செம ஜாலி! டவுன்லோட் போடலாம் என்று நினைக்கிறேன். நம்ம அயன் மேனுக்காகவாவது!

    ReplyDelete
  2. ///பெயரில் Gay என்று இருப்பதாலோ என்னமோ, இவர் உண்மைக்குமே ஆம்பிளைங்கள டேட் பண்ணுறார்///

    இந்த ஆராட்சி நாட்டுக்கு ரொம்ப அவசியமானது!

    ReplyDelete
  3. /// நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இல்லாவிட்டாலும் அமெரிக்கால ரோட்டு சாதாரணமா போற பொண்ணு மாதிரி இருக்கிறதால கரெக்டருக்கும் சரியா பொருந்திப் போறாங்க.///

    அமேரிக்க படத்துக்கு உங்க பக்கத்து வீட்டு பொண்ண ஏன் அனுப்புறீங்க?

    ReplyDelete
  4. வர வர ரொம்ப அபூர்வமாத்தான் பதிவு போடுறீங்க, ஆனா விமர்சிக்கிற படம் தொடர்ந்து அருமையானதாவே இருக்கு... இந்த படம் ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்த நியாபகம் :-)

    ReplyDelete
  5. ஆசையைத் தூண்டுது விமர்சனம்..........
    விரைவில் பார்த்துவிடுகிறேன்

    ReplyDelete
  6. படம் காமெடி பிளஸ் ஆக்சன்னாய் இருக்கும் போல....தொடர்ந்து எழுதுங்கள்.....

    ReplyDelete
  7. @கிஷோகர்

    கண்டிப்பா பார்த்துட்டு சொல்லுங்க ...

    ReplyDelete
  8. @கிஷோகர்

    ஏன் நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு ஹாலிவுட்ல நடிக்குற ரேஞ்சுக்கு இருக்கக் கூடாதா?

    ReplyDelete
  9. @Baby ஆனந்தன்

    ஆகா ... பார்த்துட்டீங்களா? வருகைக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  10. @சிட்டுக்குருவி

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குருவி. :)

    ReplyDelete
  11. @chinna malai

    எழுதுவோம் எழுதுவோம். நன்றி (த)மல :)

    ReplyDelete
  12. "ஆக்சன், காமெடி கலந்த படங்கள் பிடித்தவர்கள் எடுத்துப் பாருங்க."

    அப்போ எனக்குத்தான். கண்டிப்பாக பார்க்கணும். இதோ டவுன்லோடு பண்ணப்போறன். நம்ம டோனி ஸ்டார்க்கை பார்க்னுமே...

    ReplyDelete
  13. படம் சமீபத்தில் தான் பார்த்தேன்.எனக்கு ஓகே.

    ReplyDelete
  14. விமர்சனத்துக்காகவே படம் பார்த்துரலாம்னு தோணுது!

    ReplyDelete
  15. உங்கள் விமர்சனத்திலே நல்ல படம் என்று தெரிந்து கொள்ளும் சிறந்த விமர்சனம். முன்பை போல விமர்சனம் தொடர்ச்சியாக எழுதவும்..........

    ReplyDelete
  16. நான் எதிர் பாக்குறது படத்துல இல்லாத மாறி தெரித்து

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...