நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

யுத்தம் ஆரம்பம் 6 – சத்தமின்றி ஒரு யுத்தம்

இவ்வளவு நாள் ஏதோ ஒரு ஓரமா ஹாலிவுட் படங்களை விமர்சனம் பண்றேன்னு பல உயிர்களின் தூக்கத்தைக் கெடுத்துட்டு இருந்த என்னை  ஒரு சோதனை முயற்சியில் (நான் கேட்காமலேயே) மாட்டிவிட்டான் அருமை?? நண்பன் ஹாரி. பின்வாங்கினால் கோழை என்ற பட்டத்தைக் கொடுத்துவிடுவார்களே என்ற பயத்தில் கிறுக்கியதன் விளைவு,,, இன்றைய பதிவு.



யுத்தம் ஆரம்பம் என்று ஒரு தொடர். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு பதிவர் ஏற்றுக் கொண்டு எழுதுறாங்க. அவரவர் விருப்பப்படி அந்த அத்தியாயம் நகரும் என்பதால் ஒவ்வொரு எபிசோடும் ஸ்டோரி என்படி ட்ர்ன் ஆகும் என யாராலும் ப்ரெடிக்ட் பண்ண முடியாது. ஒருவர் முடித்த இடத்திலிருந்து மற்றவர் தொடர்வது என்ற டீலிங்கில் இதுவரை ஓடிக் கொண்டிருக்கிறது. ஹாரியின் தளத்தில் அவனது ஐடியாவில் உருவான இந்தத் தொடர் ரஜினி முதல்வரானால் என்று பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கப்பட, [2] சீனு, [3] அப்துல் பாசித், [4] (Child) சின்னா மற்றும் [5] scenecreator அவரவர் தளங்களில் கதையை அழகாக நெய்ய, பதிவுகளால் கோர்க்கப்பட்ட இந்த மாலை இப்பொழுது இந்தக் குரங்கின் கையில்.

இதற்கு முன் இந்தத் தொடரை வாசிக்காதவர்கள் மேலே உள்ள லிங்குகளில் நண்பர்களின் தளங்களில் சென்று வாசித்துவிட்டு கீழே தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாசித்துவிட்டு “நீயெல்லாம் இனி கதை எழுதினீன்னா கைய வெட்டுவேன்” என்று மனதில் தோன்றுவதையோ, அல்லது குறைகள், மிஸ்ஸாகிவிட்டது என்று நினைப்பவற்றையோ தயங்காமல் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கொட்டிவிட்டு செல்லவும்.  சிலவேளைகளில் வாசித்து முடிந்ததும் எனக்குக் ரசிகர்களிடமிருந்து கொலைமிரட்டல்கள் கூட வரலாம் (காரணம் வாசிக்கும்போது தெரியும். பயப்படாதீங்க…நான் ஒன்னும் பண்ண மாட்டேன்)

ஆஆஆஆ….மறந்துட்டேன் பாத்திங்களா? அப்படி இப்படின்னு மனசுல வந்ததையெல்லாம் கிறுக்கிவிட்டதை, தம் நேரத்தை செலவளித்து ப்ரூஃப் பார்த்து அழகாக மாற்றியமைத்துக் கொடுத்த நண்பன் ஹாரி, சீனு மற்றும் பெயர்குறிப்பிடுவதை விரும்பாத அந்த நல்ல உள்ளத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!!!  (நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது … கீப் இட் அப்)

இனி ….

Untitled


WARNING : PROCEED WITH CARE !!! 



8



“நான் அழகாயிருக்கேனாடா?”

“ம்ம்ம்…”

தலையை தோளின் மேல் சாய்த்துக்கொண்டு ஒரு விதமான மோனப்புன்னகையுடன், மெதுவாக தனது விரல்களை சூர்யாவின் கரும் கேசத்தினூடாக செலுத்தி நெருக்கம் காட்டியபடியே ஜோதிகா கேட்டாள்.

“வாயத் திறந்து சொல்லு….நிஜமாலுமே என்னைப் பிடிச்சிருக்கா?”

கட்டிலின் மேலிருந்த நைட் லாம்ப் அந்த ரொமான்ஸ் கணத்தின் உணர்ச்சியை அதிகரிக்க, இருளோ தன்னாலான உதவியாக மெல்லிய நீல ஒளியை ஜோவின் மேல் பாய்ச்சிக்கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் எடுப்பாகத் தெரிந்த ஜோவின் லாவண்யங்களைக் கூட ரசிக்க விடாமல் நித்திரையும் அசதியும் சூர்யாவின் கண்களை ஆட்சி கொண்டிருந்தது.

“ச்ச்ச்…பிடிக்காமலா கட்டி மூணு வருஷமா குடும்பம் நடத்தறேன்? கோழி கூட இன்னும் கூவல. விடியக்கால மூணு மணிக்கு ஏண்டி சாவடிக்கிற? தூக்கம் கண்ண கட்டுது. நாளைக்கு ராத்திரி பேசிக்கலாம்.” என்றபடி திரும்பிப் படுத்தான் சூர்யா.

“நானில்லாமல் உன்னால் வாழ முடியுமாடா?”

“ம்ம்ம்? நீயில்லாமக் கூட முடியும். ஆனால் Nescafe Sunrise இல்லாம இருக்கவே முடியாது…பேசாம தூங்குடி...” சூர்யாவின் உதடுகளில் எட்டிப்பார்த்த சிரிப்பு ஜோவை என்னமோ செய்ததது.

“இந்தக் கிண்டல் தானே வேணாங்கிறது? போடா…” என்று செல்லமாய் ஜோதி தள்ளிய வேளை,


'ட்ரீங்ங்ங்ங்ங்'

அழகான ஜோடியின் நெருக்கத்தை விரும்பாத சாத்தான் டெலிபோன் வடிவில் உரக்கச் சத்தமிட்டு தன் இருப்பை அறிவித்தது. எரிச்சலில் அரைத்தூக்கத்தின் கிறக்கத்துடன் ரிசீவரை காதில் பொருத்தியபடி,

“எஸ். இன்ஸ்பெக்டர் சூர்யா ஸ்பீக்கிங்”

“……………”

டெலிபோன் வயர்களினூடாக வந்த செய்தியைக் கேட்டதும் சூர்யாவின் கண்களில் ஆட்சிகொண்டிருந்த நித்திரை ஓடி மறைந்து, கோபமும் துக்கமும் குடிகொண்டன.

“வாட்? மை காட்! எத்தன மணிக்கு நடந்தது?”

“……………”
“இதோ புறப்பட்டுட்டேன். இன்னும் ட்வென்டி மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.ஓகே..”

ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்த ஜோவும் கண் திறந்தும் திறக்காமல், பாதி மூடிய கண்களினூடாக கேட்டாள்.

“யார் சூர்யா?”

“வெரி வெரி பேட் நியுஸ் ஜோ. நம் முதல்வர் இப்பொழுது உயிரோடு இல்லை…”

“நிஜமாவா? டோன்ட் ப்ளே சிக் ஜோக்ஸ் வித் மீ சூர்யா..” ஜோதிகாவின் தூக்கம் முழுவதும் கலைந்திருந்தது.

“ஏய் … இதுல போய் யாராவது விளையாடுவாங்களா? இப்ப நான் ஸ்பாட்டுக்கு தான் போறேன். நைட் வந்ததும் பேசிக்கலாம்…”

ரெண்டு நிமிடங்களில் அவசர அவசரமாய் முகத்தைக் கழுவிக் கொண்டு ரெடியாகிக் கொண்டு, ஐந்தாவது நிமிடத்தில் ஜீப்பில் ஏற, சூர்யாவின் அவசரத்தைப் புரிந்துகொண்டது போல சுமோவும் இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறந்தது.
  floral 

அதிகாலை மணி 3.30.

பரபரப்பான நாளொன்றை சந்திக்கப்போகிறோம் என்பதை அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த சென்னை நகரின் அமைதியைக் குலைத்தபடி பியட் கார் ஒன்று கணேஷின் கட்டளைக்கமைய பறந்துகொண்டிருந்தது. இரண்டு மூன்று இடங்களில் செக்யூரிட்டி செக்பாயிண்ட்கள் அவர்களின் வேகத்தை குறைத்தாலும், கணேஷின் அடையாள அட்டை காட்டப்பட்டதும் மீண்டும் வேகம் அதிகரித்தது.

பத்து நிமிடங்கள் கரைந்தபின் கார் வேகத்தைக் குறைத்துக் கொண்டு ரஜினியின் வீடு அமைந்திருக்கும் ராகவா அவெனியூவிற்குள் நுழைந்தது. லட்சங்களைக் கொட்டி வாங்கப்பட்ட க்ரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்ட பல நூறு சதுரஅடி பங்களாக்களுக்குள் அதிகாலையில் தன் கடமையைக் காட்ட குரைத்துக் கொண்டிருக்கும் சில வெளிநாட்டு நாய்களின் சத்தத்தையும், கடமையை மறந்தது தூங்கும் வாட்ச்மேன்களின் குறட்டையையும், அதிகாலை குளிர்காற்றை சாக்காக வைத்துக்கொண்டு  ஒரு சபலத்தில் உரசிக்கொண்டிருந்த மரக்கிளைகளையும் தவிர, ஒரு விபத்திற்கான எந்த அடையாளங்களுமின்றி தெருவே கப்சிப்.

“வசந்த்….உண்மையிலேயே உனக்கு வந்த செய்தி உண்மையா? என்னால் இன்னும் அந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை…”

“என்னாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை தான் பாஸ். டி.ஜி.பி ராஜேந்திரனே போன் பண்ணி சொன்னாரு. அவரு சொன்னதுக்கப்பறம் சந்தேகப்பட என்ன இருக்கு?”

“என்ன பகை இருந்தாலும் ரஜினியின் உயிர் மேல் கை வைத்ததை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை வசந்த். எவ்வளவு எளிமையான மனிதர்? யாருக்கும் எந்த தீங்கும் இன்றி ஆன்மீகம், சினிமா, இமயம் என்றிருந்தவரை அரசியல் ஆசை காட்டி இந்த சாக்கடைக்குள் இழுத்துவிட்டு … சே..இட்ஸ் எ சிக் வேர்ல்ட்…”

ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் பாஸ், ஐ மீன் Every Action has an Equal and Opposite Reaction. அட…பார்த்தீங்களா? சிலப்பதிகாரத்தில கூட ஃபிஸிக்ஸ அப்ளை பண்ணியிருக்காங்க.”

“சும்மா இரு வசந்த். நேரங் கெட்ட நேரத்தில் சிலப்பதிகாரம் மகாபாரதம்னுட்டு” அலுத்துக் கொண்டான் கணேஷ்.

“இந்த செய்தி வெளியே கசியும் பொழுது என்ன ஆகும்னு தெரியும் தானே?”
“ம்ம்ம்….ரஜினி என்ற சொல் ஒரு தனிமனித பிம்பமா? அந்த சொல்லின் பவருக்கு இன்று இந்த செய்தி கசிந்ததும் தமிழ்நாட்டின் நிலை எப்படி மாறும் என்று நினைக்கவே நெஞ்சு படபடக்குது..”

கார் வேகத்தை குறைக்காமல், வளைவை எடுத்ததும் ப்ளட் லைட் வெளிச்சத்தில் திணறிக் கொண்டிருந்த ரஜினியின் மாளிகை சின்னாபின்னமாக சிதறி புகைமூட்டத்துடன் காட்சியளித்தது. இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் நீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தன. DO NOT CROSS என மஞ்சள் பின்னனியில் பொறிக்கப்பட்ட டேப்பின் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கிய கணேஷும் வசந்தும் ரைஃபிள் சகிதம் வந்த இரு காக்கியுடைகளால் வரவேற்கப்பட்டு டி.ஜி.பியிடம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

சில ஃபார்மாலிட்டிகளுக்கு பிறகு வசந்த் பதட்டக்குரலில் விசாரித்தான்.
“சார்…பாம் வெடிச்சிருக்குன்னு சொல்றீங்க. ஆனா ஏரியாவே அமைதி இருக்கே? க்ளியர் பண்ணீட்டீங்களா?”

“இல்ல மிஸ்டர் வசந்த். அது தான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு. வாட்ச்மேன் குண்டு வெடித்ததைப் பார்த்ததாகவும், ஆனால் எந்தச் சத்தமும் வரவில்லை என்றும் சொல்கிறான்…சோ அக்கம்பக்கத்துல யாருக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இட்ஸ் ஜஸ்ட் அன்பிலீவப்ள்”

இடையில் குறுக்கிட்ட கணேஷ்,


“சார்…ஐ திங்க் திஸ் இஸ் எ டெக்னாலஜி தட் இஸ் சம்திங் நியு டு அஸ். சைலன்ஸர் துப்பாக்கியில் சுடும்போது எப்படி சத்தம் வராதோ, அதே மாதிரி இதையும் டிசைன் பண்ணியிருக்காங்க…அநேகமாக இது ஏதாவது ஹைலி கான்ஃபிடென்ஷியல் ஃபாரின் மிலிட்டரி ரிசர்ச்சாக இருக்கவும் வாய்ப்பிருக்கு”
“மே பீ யு ஆர் கரெக்ட் மிஸ்டர் கணேஷ். பாம் ஸ்க்வாட் இப்பத் தான் மொத்த பில்டிங்கையும் சல்லடை போட்டு தேடிட்டு இருக்காங்க…சீக்கிரம் தெரிஞ்சுடும்”

டி.ஜி.பி சொல்லிக்கொண்டிருக்கும் அதே சமயம் நிலத்தைத் தேய்த்துக் கொண்டு ப்ரேக் அடித்த சுமோவில் இருந்து இறங்கிய சூர்யாவும் பதட்டத்துடன் ஓடி வந்தார்.

“வாங்க மிஸ்டர் சூர்யா…உங்க சின்சியாரிட்டி தெரிந்து தானே இந்தக் கேஸை உங்களிடம் ஹேன்ட் ஓவர் பண்ணினேன்…? இப்படி நடந்திடுச்சே..?”

“ஐ ஆம் ஹானஸ்ட்லி ஸாரி ஸார் … சி.எம் மறுத்தும் அவருக்கு நாங்க ஹையஸ்ட் பாஸிபிள் செக்யுரிட்டியான த்ரீ-லேயர் ப்ரொடெக்ஷன் கொடுத்திருந்தோம். டோடலி தர்ட்டி காப்ஸ் வாஸ் ஒன் டியுட்டி டே அன்ட் நைட். வீட்டிற்கு வெளியே இருபது போலிஸும், வீட்டிற்குள்ளே பத்து பேரும். விபத்தில் இறந்தவர்கள் இந்தப் பத்து பேராத் தான் இருக்கணும்”

“10 உயிர்களை பலி கொடுத்து விட்டீர்களே சூர்யா? நாளை இத்தனை போலீஸையும் தாண்டி ஒரு பாம் எப்படி வீட்டிற்குள் போனது என்று டிபார்ட்மெண்டில் இன்க்வயரி பண்ணும்போது என்ன பதில் சொல்லப்போறீங்க…? இட்ஸ் ஈஸி டு சே ஸாரி. இதுல அந்த வீணாப்போன மீடியாவுக்கு வேற பதில் சொல்லியாகணும். எல்லாம் என் தலையெழுத்து”

மீண்டும் குறுக்கிட்ட கணேஷ்,

“சார்…இதில் இரண்டே இரண்டு பாஸிபிலிட்டிஸ் தான். ஒன்று, தெயர் இஸ் எ ப்ளாக் ஷீப் இன் அவர் டிபார்ட்மெண்ட் … இல்ல, சூத்திரதாரி முதல்வருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருக்கணும். கான் வீ ஸீ த பாடிஸ் ப்ளீஸ்?”

“ஷ்யுர் கணேஷ். பட் … சி.எம் இன் உடல் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை”

“வாட்? ஆர் யு ஷுர் டி.ஜி.பி? வாட் அபௌட் த ஃபேமிலி…?”

“ஹ்ம் … அவருடைய உள்ளுணர்வு எச்சரித்ததோ என்னமோ, நேற்று சாயந்திரமே சி.எம் மனைவியையும், மகன் விஜயையும் ஃபேமிலி ஃப்ரெண்ட் கமல் குடும்பத்துடன் ஊருக்கு அனுப்பிட்டார்”

”தேங்க் காட் … முதல்வர் மீட்டிங்கில் குண்டுவெடிப்பு நடந்ததிலிருந்து என் சந்தேகம் இன்னும் எம்.எல்.ஏ விஜயகாந்த் மீதுள்ளது. சோ…எனது இன்வெஸ்டிகேஷனை நான் அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்..இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் கொலையாளி உங்களுக்குக் கிடைப்பான். ஐ பெர்சனலி காரண்டி இட் ஸார்” என்று குண்டுவெடிப்பன்று நடந்த சம்பவங்களை மனதில் மீட்டியவாறு கணேஷ் கூறினான்.

“மீ டு கீபிங் மை ஃபிங்கர்ஸ் க்ரொஸ்ட் மிஸ்டர் கணேஷ். கீப் மீ அப்டேடட்”

டி.ஜி.பி சென்றதும் கோபமும் அவமானமும் கொப்பளித்துக் கொண்ட முகத்துடன் இருந்த சூர்யா கணேஷை ஏறிட்டுப் பார்த்து,

“விஜயகாந்த் ஒரு பச்சோந்தி. அவனிடமிருந்து நீங்கள் உண்மையை எதிர்ப்பார்க்க முடியாது கணேஷ்”

“அரசியல்வாதியென்றாலே பச்சோந்தி தானே மிஸ்டர் சூர்யா. எந்த யுத்தத்திலும் முதலில் கொல்லப்படுவது உண்மை தான். ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து க்ளுக்களை பிடித்து முன்னேறுவோம்…ரிலாக்ஸ்” என்றான் வசந்த்.

“வாட் டூ யு மீன் பை ரிலாக்ஸ் வசந்த்? மீடியா நியுஸ் வெளியிட்டவுடன் என்ன ஆகும் என்பதை யோசித்து தான் பேசுறீங்களா..?”

“கூல் டவுன் மிஸ்டர் சூர்யா. இன்னும் முதல்வரின் உடல் கிடைக்கவில்லை. ஆகவே இன்னும் அவர் உயிருடன் இருப்பதற்கான பாஸிபிளிட்டிஸ் இருக்கு. ப்ரஸ் மீட்டிங்கிலும் இதையே சொல்லுங்க. கொஞ்ச நேரத்திற்கு அவங்க வாயைக் கட்டிப் போட இது உதவும்…”

“யெஸ். குட் திங்கிங் மிஸ்டர் கணேஷ். கன்டினியு வித் யுவர் இன்வெஸ்டிகேஷன். த ஹோல் போலீஸ் டிப்பார்ட்மெண்ட் இஸ் அட் யுவர் டிஸ்பொஸல்..டேக் கேர்”

floral 



மேலே அந்த சம்பாஷணை நடந்து கொண்டிருந்த சமயம், நம் பார்வையை சற்று சென்னையின் ஒதுக்குப்புறத்தில் மரங்களால் சூழ்ந்த ஒரு அழகிய காட்டேஜின் வாசலிற்கு எடுத்துச் செல்வோம்.

காட்டேஜை விட்டு வெளியே வந்த ஒரு உருவம் மின்மினி போல விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கின் அடியில் சென்று பாக்கெட்டில் இருந்த கைபேசியில் சில இலக்கங்களை அழுத்தியது. சில நொடிகளின் பின்னர் மறுமுனையில் ஒரு கரகரத்த குரல், “ம் … ”

“எல்லாம் உங்களோட ப்ளான் படி தான் போய்ட்டிருக்கு பாஸ். ஸ்பெஷல் இட்டாலியன் மேட் பாம். 20 கே.ஜி. இந்நேரம் சத்தமேயில்லாமல் போயஸ் கார்டனில் ஒரு சுடுகாடு உருவாகியிருக்கும்…”

“குடும்பம்…?”

“அவர்கள் நேற்று மாலையே ஊருக்கு கிளம்பிட்டாங்க. டார்கெட் தனியா இருப்பதை கன்ஃபர்ம் பண்ணிட்டு தான் வெடிக்க வச்சேன்…”

“ஐ டோன்ட் கெயார் எபௌட் எனி டெத். நாம வாழணும்னா யார வேணா எத்தன பேர வேணா கொல்லலாம். தப்பேயில்ல

“எஸ் பாஸ்…”

“அடுத்த ஹிட் எப்போ ப்ளான் பண்ணியிக்கே..?”

“எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். போலீஸ் ஹீட் குறையணும். இல்லாட்டி இந்த நிலைமைல கொஞ்சம் கேர்லஸ்ஸாக போனாலும் பெரிய சிக்கலாகிவிடும்..”

“ஐ நோ … பட் யுத்தத்திற்கு வந்தபிறகு கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கக்கூடாது சீயான் .  சீக்கிரமே அடுத்தடுத்து நம்ம ப்ளான செயற்படுத்து..”

“ஓகே .. கன்ஸிடர் இட் டன் பாஸ். இன்னும் இரண்டு நாட்களில் லிஸ்டில் அடுத்த புள்ளிகளுக்கு விமோசனம் கொடுத்துடுவோம்”

“……………”

எதிர்முனையில் வந்த ஸ்டாடிக் டோன் லைன் துண்டிக்கப்பட்டதை உறுதிபடுத்தியது.



சூரியன் இரண்டு முறை தூங்கியெழும்பினான். இரண்டாம் நாள் அதிகாலை மீண்டும் சத்தமில்லாமல் சென்னையில் இரண்டு அரசியல் பிரமுகர்களின் வீடுகள் வெடித்துச் சிதறின.



யுத்தம் தொடரும் ….


floral






டிஸ்கி – இது போல ஒரு முயற்சியை ஏற்கனவே பல பிரபல பதிவர்கள் செய்திருக்காங்கன்னு ஒரு மிகப் பிரபலமான பதிவர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டேன். அவர் அதுக்கு லிங்க் தராட்டியும் நம்ம கை சும்மா இருக்காதே? அதான் கூகிள் மச்சியின் உதவியுடன் தேடி எடுத்தேன். இதையும் நேரமிருந்தா படிச்சுப் பாருங்க. (யப்பா என்னா கான்செப்ட், ரைட்டிங் ஸ்டைல்?? நாங்க எழுதுறதெல்லாம் சும்மா தூசு .. தூசு)


பதிவுகளின் தொகுப்பு இங்கே



வெயிட்.  இதுக்கு மேல சுயபுராணம் தான். வேணுங்கிறவங்க வாசிக்கலாம். இதுக்கு மேல தாங்காது சாமீன்னு சொல்றவங்க கீழே உங்க கருத்த சொல்லிட்டு திரும்பிப் பார்க்காம ஓடலாம். (டேய் டேய் … திருக்குறள் மாதிரி கதையெழுதுறது முணு பந்தி..அதுக்கு விளக்கம் நன்றியுரை லொட்டு லொசுக்கு பத்து பந்தியா?)

ஸ்ஸ்ஸ்ஸப்பா …. ஒருமாதிரி ஒரு பொறுப்பை இறக்கியாச்சு. இந்தப் பதிவையும் பொறுமையா இந்த சொல் வரைக்கும் வாசித்து வரும் உள்ளத்திற்கு மிக்க நன்றி. இந்த எபிசோட் கொஞ்ஞ்ஞ்சம் எதிர்ப்பார்த்ததை விட லென்த்தாப் போய்டிச்சு போலருக்கு. ஆனாலும் பரவாயில்லை. (எழுதுறது ஒருமுறை. இதுலயே மேக்ஸிமம் வறுக்கவேணாம்? இனி விமர்சனத்தில் கொல்றேன்) ஏதோ இந்தத் தொடருக்கு என்னாலான சிறு பங்களிப்பை செய்துட்டேன். இட் வோஸ் எ ஃபன் ரைட்!!!  இனிவரும் காலங்களிலாவது பாடசாலையோடு தலைமுழுகிய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும், முக்கியமாக சுஜாதா அவர்களின் புத்தகங்களை கொழும்பு போகும்போது எங்காவது தேடிப் பார்க்கவேண்டும். ஒன்று கூட இன்னும் வாசித்ததில்லை (ஏய் …. யாருப்பா அது கல்லடிக்கிறது?)

அப்படியே இனி ஒவ்வொரு தளங்களிலும் வெளிவரும் மற்ற பகுதிகளையும் ஃபாலோ பண்ணுங்க. Beleive me … it will be Awesome !!!


ஸ்டே ட்யூன்ட் !!!!

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

80 comments:

  1. இப்போ ரிலாக்சா இருப்பீங்களே.. #வயித்தெரிச்சல்
    நான் எப்ப மாட்டுவனோ? :)



    ReplyDelete
  2. // இதுல அந்த வீணாப்போன மீடியாவுக்கு வேற பதில் சொல்லியாகணும். எல்லாம் என் தலையெழுத்து” //
    எல்லாம் அடுத்து கதை எழுதப் போறவங்களோட தலையெழுத்து..

    ReplyDelete
  3. @JZ

    ஹி ஹி ... இனி கொஞ்சம் படம் பார்க்கணும்.

    ReplyDelete
  4. ஹாலிவுட் ரசிகனே...
    நல்லா எழுதுற...நல்லா நக்கடிக்கிற...
    கோவம்தான்...உனக்கு வரவே மாட்டேங்குது...

    அந்தக்கலையை எனக்கு கொஞ்சம் கத்துக்கொடு..ராசா.

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு. தொடரட்டும் உங்கள் தொடர் பதிவுகள்.

    ReplyDelete
  6. // Beleive me … it will be Awesome !!!//
    நம்பாதீங்க.. நான் எழுதப்போனா it will be மோசம்!

    சூப்பரா கதையெழுதுற நண்பா.. எதிர்பார்க்கவேயில்லை! முன்னனுபவமா? இல்லை பலநாள் பிராக்டீஸா??

    நானும் பெருசா நாவல்கள் வாசிச்தில்லை.. இனி தேடிப்பார்க்கனும்..

    மறுபடியும் வெல்டன்.. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. @JZ

    ஆமோதிக்கிறேன். ஸீன்க்ரியேட்டர் அஜித்-விஜய்னு கோடு போட்டாரு...நான் ரோடு போட்டுட்டேன். இனி தான் யாராச்சு தார் ஊத்தணும்.

    ReplyDelete
  8. @உலக சினிமா ரசிகன்

    கோவம் வர்றதுக்கு இப்ப என்ன ஆகிப்போச்சு தலைவரே? அப்படியே கோவம் வந்தாலும் அது வாய்க்கு வெளியே வராது. அப்ரெஸ் சப்ரெஸ் அன்ட் டிப்ரெஸ் (டி.ஆர் டயலாக்)

    பேஸிக்கலி நான் சூடு சுரண இல்லாதவன்னு கூட வச்சிக்கலாம். :-)

    ReplyDelete
  9. @JZ

    நன்றி :-)

    அதான் கடைசில சொன்னனே? கட்டுரை, கதையெழுதுறது, புத்தகம் வாசிக்கிறது எல்லாம் ஓ.லெவல் டயத்தோட முடிஞ்சு போச்சு. கடைசியா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தமிழ் எக்ஸாம்ல 300 சொற்களுக்கு குறையாமல் கட்டுரை வரைஞ்சது ஞாபகம் இருக்கு. :-)

    படங்களை குறைச்சிட்டு அந்தப் பழக்கத்தை மீண்டும் ஸ்டார்ட் பண்ணனும்.

    ReplyDelete
  10. பாஸ்....
    பர பரன்னு போச்சு கதை. முத பேரா செம....
    ராஜேஷ் குமார் க்ரைம் நாவல் ஸ்டைல்ல சில விஞ்ஞான விசயங்களை புகுத்தி இருக்கேங்க . நல்லா இருந்தது பாஸ்.
    உங்க கதை படி ரஜினி சாகலை. ஏனா அவரோட உடம்பு இன்னும் கிடைக்கல.. பார்போம் அடுத்து வரவங்க கதையை எப்படி கொண்டு போறாங்கன்னு ??

    ReplyDelete
  11. ராஜேஷ் குமார் க்ரைம் நாவல் ஸ்டைல்ல சில விஞ்ஞான விசயங்களை புகுத்தி இருக்கேங்க ( சத்தமே கேட்காம வெடிக்கிற பாம்....)

    ReplyDelete
  12. @ராஜ்

    ஹி ஹி ... அந்த பாம் முற்று முழுதாக கற்பனையே. யாரை வாசிக்கிறோமோ அவர்களின் ஸ்டைல் ஒட்டுவது தானே வழக்கம்?

    ReplyDelete
  13. @ராஜ்

    ரஜினிய கொல்வதற்கு மனசு கேட்கல. ஆனா இறந்திட்டார்னாலும் மேட்டர் இன்னும் சீரியஸாகி செம த்ரில்லா இருக்கும்னு யோசிச்சேன். அது தான் நாம தப்பிக்க “பாடி கிடைக்கலன்னு” பாயிண்ட வச்சுட்டு எஸ்ஸாகிட்டேன். இனி அடுத்து வர்றவர் பாத்துப்பார். :-)

    ReplyDelete
  14. ஆஹா கதை டேக் ஆப் ஆகிடிச்சு.இனி அடுத்ததடுத்த பகுதிகள் எழுதபோரவங்களுக்கு தான் இருக்கு தலை வலி.நன்றாக கொண்டு போய் இருக்கிறீர்கள்.இதற்க்கு முன் ஒரு தொடர் வந்ததை அறிந்து மகிழ்ச்சி.ஆனாலும் அவர்கள் பழம் தின்று கோட்டை போட்டவர்கள்.

    ReplyDelete
  15. அங்கங்கே உங்கள் கலக்கல் வரிகள் அருமை... நன்றி... (2)

    ReplyDelete
  16. கதை இப்போது சூடுபிடிச்சிருச்சு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  17. கடைசில கசாப் ஆயிட்டீங்களே அண்ணே! அது தான் குண்டு வச்சு குடிய கெடுக்கிறது.....

    ReplyDelete
  18. பேசாம நீங்க சினிமா பதிவுகளே எழுதுங்கோ அண்ணே! காரணம் நோகாம "இப்பவே டவுன்லோட் போட்டுர்ரேன்"ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடலாம். ஆனா இந்த கதைய முழுசா படிக்க வேண்டி இருக்கே.... # மச்சி ஜே.ஸட் !! சேம் பிளட்!!

    ReplyDelete
  19. அப்பவும் பாருங்க! நீங்க நேசிக்கும் சினிமாவ உங்கலால விட முடியல... நான் சூர்யா, சோதிகா கேரக்டர்களை சொன்னேன்.

    ReplyDelete
  20. @ஹாலிவுட் ரசிகன்

    நண்பா எனக்கு சுஜாதா நாவல்கள் தான் பிடிக்கும் (கொழும்பில் தான் வாங்கினேன் (52 புத்தகம்) செம விலை மச்சி.. ஆனா இந்தியால விலை குறைவு.. ராஜேஷ் குமார் நாவல்கள் எது எது சூப்பர் என்று சொன்னிங்க என்றா??? நாமளும் ட்ரை பண்ணலாமே..

    ReplyDelete
  21. ///அந்த வெளிச்சத்தில் எடுப்பாகத் தெரிந்த ஜோவின் லாவண்யங்களைக் கூட ரசிக்க விடாமல் நித்திரையும் அசதியும் சூர்யாவின் கண்களை ஆட்சி கொண்டிருந்தது.///


    எந்த மாதிரி நேரத்தில இந்த லூசுப்பயலுக்கு நித்திர வருது பாருய்யா..... சே,....

    ReplyDelete
  22. //தம் நேரத்தை செலவளித்து ப்ரூஃப் பார்த்து அழகாக மாற்றியமைத்துக் கொடுத்த நண்பன் ஹாரி,//

    பொது மக்களே ஆளாளுக்கு சொல்றாங்க சத்தியமா சொல்றன் இந்த சம்பவத்துக்கும் எனக்கும் சத்தியமா சமந்தமே இல்ல.. சின்ன எழுத்து கூட நான் மாத்தவே இல்ல.. பயபுள்ள நல்லா எழுதிட்டு தாழ்மை என்ற பேருல கிளப்புற வதந்தி தான் இது..

    மச்சி உண்மையாவே கலக்கிட்ட.. ஒரு கிரைம் நாவல் பகுதி படிச்சது போல இருந்துச்சு.. ரொமான்சா தொடங்கி கடைசில தலைவரிலயே கைய வைச்சுட்டியேபா..

    ReplyDelete
  23. ஹாலிவுட் ரசிகன் என்றதுக்காக இவ்வளவு இங்கிலிஷுபீஸா.. ஹி ஹி

    ReplyDelete
  24. விஜய காந்தை பச்சோந்தி என்று கோர்த்து விட்டதற்கு பதில்,... அந்த மஞ்சத்துண்டு டைனோசரை எப்படியாவது கோத்திருக்கலாம். அது செத்திருந்தாலும் அதன் மம்மி அலைகிறது , அது தமிழீழம் காணாமல் சாகாது என்று ஒரு போடு போட்டிருந்தால் செமையா இருந்திருக்கும்.

    ReplyDelete
  25. @JZ

    கொஞ்சம் பொறுமையா இரு ராசா வந்துரும் ஆமா குமரன் பயபுள்ளைய காணவே இல்லையே.. என்னா பண்றது?

    ReplyDelete
  26. தல சாரி! ஜே.ஸட் பிளாகில் நடந்தது இங்கேயும் தொடர்கிறது. நான்கைந்து பின்னூட்டங்கள் போட்டுவிட்டேன். ஆனால் சில பின்னூட்டங்களே தெரிகின்றன. என்னடா நடக்குது இங்க?

    ReplyDelete
  27. @ஹாலிவுட் ரசிகன்

    //ரஜினிய கொல்வதற்கு மனசு கேட்கல.//

    ஆமா மனசு கேட்டு இருக்கும் என்றா அடுத்த பாம் ஹாலிவுட் பக்கங்களுக்கு தான்..

    ReplyDelete
  28. @கிஷோகர்

    ஹி ஹி .. ஏன்யா உமக்கு அந்த மனுசன்ல அவ்வளவு காதல்????

    ReplyDelete
  29. @JZ

    அது தான் பார்க்கிறேன். இப்போ குமரனை லிஸ்டில பின்னுக்கு போட்டுட்டு அடுத்தவரை முன்னுக்கு போடு ஹாரி. அப்படியே குமரனுக்கு ஒரு மெயில தட்டு.

    ReplyDelete
  30. @ஹாலிவுட் ரசிகன்

    //சிலவேளைகளில் வாசித்து முடிந்ததும் எனக்குக் ரசிகர்களிடமிருந்து கொலைமிரட்டல்கள் கூட வரலாம்//

    இது இது தான் நான் சொன்னது ...

    ReplyDelete
  31. @scenecreator

    நன்றி பாஸ். நீங்க போட்ல ரோட்ல தான் நானும் ட்ராவல் பண்ணினேன். புதுசா எதுவும் செய்யலயே?

    நாம இப்பத் தான் காய்க்கே கல்லடிக்க ஆரம்பிச்சிருக்கோம்?

    ReplyDelete
  32. @ஹாரி பாட்டர்

    வித்தியாசமா பண்ணுவமேன்னுட்டு தான். :)

    ReplyDelete
  33. @ஹாரி பாட்டர்

    சீனுவும் சொன்னார். இங்க்லீஷ் அதிகம்னு. என்ன செய்ய ... ஐ காண்ட் ஹெல்ப் இட், இட் சீம்ஸ்.

    ReplyDelete
  34. @கிஷோகர்

    ஹி ஹி .... அது தான் கடைசியில இரண்டு அரசியல் பிரமுகர்கள் வீடு வெடிக்குதே? அதுல கேப்டனையும் வேணும்னா சேத்துக்கலாம்.

    ReplyDelete
  35. @ஹாரி பாட்டர்

    “எல்லாத்துக்கும்” தேங்க்ஸ் மச்சி ... :)

    ReplyDelete
  36. @தனிமரம்

    நன்றி நேசன் ... கதை உங்களிடம் வரும்போது அனல் பறக்க வரும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  37. @ஹாலிவுட்ரசிகன்
    ஹாரி, இந்தக் கிசோகர் பயலையும் லிஸ்டுல இழுத்துப் போட்டுருங்களேன்.. ஏன்னா அவனாலதான் எப்படி போற கதையையும் காமெடியா முடிக்க முடியும்!
    *எங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்சா இருக்கும்!

    ReplyDelete
  38. கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரே குண்டு வெடிப்பா இருக்கே? இதுல நா 17 வதாம். என்ன பண்ணப் போறேனோ? பேசாம இத காமெடிக் கதையா மாத்திரலாமே? ஆமா, "யுத்தம் ஆரம்பம் - பாகம் இரண்டு" எப்ப தலைவா ஆரம்பிக்குது? அப்பாவும் நா 17 தானா?

    நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்? எனது தளத்தில்: வேலைக்கு போறேன்!

    ReplyDelete
  39. @JZ அவருக்கு சில வேலை ஹாரி என்ற ஒரு பதிவர் இருக்கிறார் என்றே தெரிந்து இருக்காது நண்பா ஹி ஹி

    ReplyDelete
  40. @ஹாலிவுட்ரசிகன் அவரோட மெயில் இருந்தா அனுப்பிடு மச்சி

    ReplyDelete
  41. 5 ஐ விட இதில் திரில்லிங் மிக அதிகம்........
    அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  42. நாம வாழணும்னா யார வேணா எத்தன பேர வேணா கொல்லலாம். தப்பேயில்ல”
    //////////////////////////////////

    ஹா ஹா ஹா......செம செம.......

    ReplyDelete
  43. @ஹாரி பாட்டர்

    எரிமலை எப்படிப் பொறுக்கும்

    ReplyDelete
  44. @ஹாலிவுட் ரசிகன்

    தல ரஜினி உசுருக்கு மட்டும் எதாவது ஆகட்டும் எங்க அண்ணன் ஹாரி தீக்குளிப்பான்

    ReplyDelete
  45. @ஹாரி பாட்டர்

    நண்பா ராஜேஷ் குமார் நாவல்கள் இணைய தளங்களில் மின் புத்தகமாக கிடைகிறது... தரவிறக்கம் செய்து படித்துக் கொள் படித்துக் கொல்லாதே ஹி ஹி ஹி

    ReplyDelete
  46. @ஹாலிவுட்ரசிகன்

    தல இதுல ஒரு அர்த்தம் மட்டும் தானே இருக்கு # கொளுத்தி போட்டிங்

    ReplyDelete
  47. @ஹாரி பாட்டர்
    அடேய் நீ எல்லாம் சின்ன பையன் இங்க எல்லாம் வார கூடாது

    ஹாரி : அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

    ReplyDelete
  48. @ஹாரி பாட்டர்
    ஹாரி உனக்கு தற்பெருமை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்... ஹாலிக்கும் பிடிக்காதுன்னு இன்னிக்குதான் தெரிஞ்சிக் கிட்டேன்
    # எப்பா என்ன ரைமிங்கு

    ReplyDelete
  49. சுஜாதா புத்தகங்கள் படித்தது இல்லையா? நம்புவது கடினம்... தல சூப்பர்... செம பரபரப்பு செம ஸ்பீடு... இதுல நான் கை வச்சி கெடுதற வேண்டாம்னு பாக்றேன்.. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
    நல்ல எழுதி இருக்கீங்க

    ஹட்ஸ் ஆப் டூ யு..

    ஐ லைக் திஸ் சோ மச்


    அன்றும் இன்றும் என்றும் ஒரே பதில் தான் பாஸ் ...செம செம

    ReplyDelete
  50. @ஹாலிவுட்ரசிகன்


    யோவ் பாத்துயா நம்ம வீட்டுக்கு எதுவும் சேதாரம் வந்த்ரப் போகுது....

    மக்களே இந்தக் கூட்டத்திற்கும் எனக்கும் எதுவும் சமந்தம் இல்லை மக்களே...
    ஹாரி யாரு ஹாலி யாரு என்று என்றெல்லாம் எனக்கு தெரியாது மக்களே.....
    வரபோகும் ஒவ்வொரு அடுத்த ஆட்சியிலும் நான் தான் நிரந்தர முதல்வர் மக்களே

    ReplyDelete
  51. @ஹாலிவுட்ரசிகன்


    ஐ ஆம் கார்னர்... ஐ ஆம் ஜஸ்ட் ஹெல்ப்லெஸ் ... எங்கு இங்கிலீஷ்ல தெரிஞ்ச ரெண்டு வாக்கியம் இது தான்.. அதும் தலைவர் சிவாஜி ல சொன்னதால தெரியும்


    எ ஏ
    பி பீ
    சி சீ
    டி டீ

    ReplyDelete
  52. கதை வேகமாக செல்கிறது. ரஜினி வீட்டில் பாம் என்று பீதியை இன்னும் அதிகரித்துவிட்டீர்கள்.

    அபார்ட் ஃப்ரம் மை கம்மென்ட், யூ யூஸ்டு மெனி இங்கிலீஷ் வோர்ட்ஸ். ஒய் யா?

    :D :D :D

    ReplyDelete
  53. @சீனு நான் தீ குளிக்காடியும் பரபரப்புக்காக சீனு என்னை கொளுத்தியாவது விட்ருப்பான்

    ReplyDelete
  54. @சீனு டபுள் மீனிங் சீனு வாழ்க

    ReplyDelete
  55. @சீனு குருவே நீங்க தானே

    ReplyDelete
  56. @சீனு ஹா ஹா மச்சி நாங்க எல்லாம் வெளியூர் நீ தான் பக்கம் இருக்க பார்த்து பஞ்சர் ஆகிட போகுது

    ReplyDelete
  57. @Abdul Basith

    வாட் யார்... வீ ஆள் ஆர் இன் டுமில் ஜாரி ஜாரி டமில் பேமிலி யார்

    ReplyDelete
  58. @ஹாரி பாட்டர்

    அதான் பா பயமா இருக்கு... காப்டேன் காப்டேன் எனக்கு உசுரு தான் முக்கியம்...

    நான் வாழனும்னா நீங்க எத்தன பேர வேனும்லாம் கொலை பண்ணலாம்... ப்ளீஸ் காப்டேன்

    நீங்க நடிச்ச விருத்தகிரி படம் வேணும்னாலும் பார்த்து ஆகோ ஒக்கோன்னு பதிவு எழுதறேன்... ப்ளீஸ் காப்டேன்

    ReplyDelete
  59. எப்பாடி தமிழ் மனம் வோட்டு போட்டேன்

    ReplyDelete
  60. @சீனு

    ஆமாப்பா...இந்த சீனு எல்லாத்திலயும் டபுள் மீனிங் கண்டுபிடிக்கிறாரு. நான் எழுதினதையும் சேர்த்து... :)

    ReplyDelete
  61. @சிட்டுக்குருவி

    பறந்துவந்து கருத்து சொன்னமைக்கு நன்றி குருவி.

    ReplyDelete
  62. @கிஷோகர்

    இனி சினிமா சினிமா மட்டுமே. நோ ஸ்டோரி டெல்லிங் :)

    ReplyDelete
  63. @கிஷோகர்

    எல்லா கமெண்ட்டும் ஸ்பேம்க்கு போய்டிச்சு. இதுக்கு தான் ஸ்ரீலங்காவ நக்கலடிச்சு பதிவு போடவேணாங்கிறது. இப்ப பாரு நிலமய?

    ReplyDelete
  64. @சீனு

    அதான் அழகா மாத்தி தந்திங்களே?

    அப்புறம் என்ன கை வச்சி கெடுக்க வேண்டாம்னு பாக்கிறேன்???

    ReplyDelete
  65. @Abdul Basith

    யு ஸீ மிஸ்டர் பாசித் ... ஐ ஆம் ரைட்டிங் ஹாலிவுட் நோ? சோ தட் லங்குவேஜ் ஸ்டிக் வித் மை ரைட்டிங். ஓ மேன் ... கான்ட் ஹெல்ப் இட். :(

    ReplyDelete
  66. @சிகரம் பாரதி

    நீங்க தானே கடைசியா இருக்கீங்க? அனேகமா நீங்க தான் முடிச்சு வைக்கணுமோ? :)

    ReplyDelete
  67. @ஹாரி பாட்டர்சும்மா ஒரு இது தாண்ணே! என்ன இருந்தாலும் தமிழ் தாத்தா இல்லையா? ( "தா" வுக்கு பதில் வேறு ஒரு எழுத்து போட்டு அழைக்க மனம் சொன்னாலும்.. பப்ளிக்...பப்ளிக்....

    ReplyDelete
  68. @JZநண்பா நீ என் மேல் வைத்துள்ள "அபார"நம்பிக்கைக்கு என் நன்றிகள்! நம்ம ஹாரி ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அடுத்த அத்தியாயத்தை இரண்டாம் சுஜாதா எழுதுவார்! ஐ மீன் நான் தான்!

    ReplyDelete
  69. @ஹாலிவுட்ரசிகன்

    அண்ணே இதனால என்னோட பிரய்னுக்கு ஒண்ணும் ஆயிடாதே? ( இருந்தால் தானே ஆகும் என்ற பழைய காமடி எடுபடாது)

    ReplyDelete
  70. @ஹாரி பாட்டர்
    தல நீங்க என்னை பின் தொடர்வது தெரியும்.. ஆனால் நீங்கள் பிளாக்கர் என்பது எப்படி எனக்கு தெரியாமல் போனது என்று தான் எனக்கு இன்னமும் புரியவில்லை. மன்னிச்சூ....

    அப்புறம் நீங்கள் சரி என்றால், நண்பன் ஜே.ஸட் இன் வேண்டுகோளுக்கிணங்க ( ஏற்கனவே நம்ம ஹாலிவூட் ரசிகனும் கேட்டுக்கொண்டார், அன்று சில பல வேலைகள் முடியாமல் போனது) நானும் கதை எழுத தயார், உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  71. @கிஷோகர்

    இந்த ஊர்ல நம்மள யாரு மதிக்கிறாங்க? சொல்றவங்க சொன்னாத் தான் எடுபடுது. ஹ்ம்...ஃப்ரீயாவுடு ஃப்ரீயாவுடு மாமே. :)

    ReplyDelete
  72. @ஹாலிவுட்ரசிகன்
    என்னாண்னே பொசுக்குன்னு பேசிப்புட்டீங்க... நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு அண்ணே! அப்பவே எழுத ஐடியா இருந்திச்சி.. ஆனா நான் முல்லைத்தீவு பிராஜெக்டில் கொஞ்சம் பிஸியா இருந்தாதனால தான் நீங்க கேட்டப்ப என்னால முடியல. இப்போ தான் நான் வெட்டி தானே! ( அதான் கம்பஸ் மூடி கெடக்கே) , என்னவோ நீங்க சொன்னது நிறைவேற போவுது தானே... சும்மா மன்னிச்சு விடுங்கோ பாஸ்....

    ReplyDelete
  73. @சீனுவாழ்த்துக்கள் நண்பா! ட்ரீட் எப்ப?

    :D :D :D

    ReplyDelete
  74. @ஹாலிவுட்ரசிகன்ஓகே நவ் ஐ அண்டர்ஸ்டான்ட் யுவர் சிச்சிவேசன்.

    :D :D :D

    ReplyDelete
  75. நல்லா சுவாரசியமா இருக்கு நண்பா.. வாழ்த்துகள்...

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...