நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Big Lebowski (1998)

folder

நண்பர் ராஜின் ரெகமண்டேஷனில் அண்மையில் ரசித்துப் பார்த்த ஒரு படம் No Country for Old Men. இயக்குனர்கள் பற்றி நீங்கள் ஏற்கனவே நன்கு அறிந்திருப்பீர்கள் (எனக்குத் தான் தெரிந்திருக்கவில்லை) Ethan and Joel Coen, சுருக்கமாக கோயம்புத்தூர் ப்ரதர்ஸ்  … இல்லை இல்லை …. “கோயன் ப்ரதர்ஸ்”. ராஜ் சொல்லியிருந்தது போல ஒரு திரைக்கதையில் சாதாரணமாக பாவிக்கும் அனைத்து ஃபார்முலாக்களையும் உடைத்தெறிந்த ஒரு படம் அது. (இன்னும் எனக்கு அந்த க்ளைமேக்ஸ் விளங்கவில்லை என்பது வேறு விஷயம்). இவர்களுடைய இயக்கத்தில் ஏறக்குறைய அனைத்து படங்களுமே விமர்சன ரீதியில் பெறும் வெற்றி பெற்றவை … உ.ம் Fargo, No Country for Old Men, O Brother, Where Art Thou?.

இன்று நான் இந்தப் பதிவின் மூலம் அறிமுகப்படுத்தும் படமும் காமெடிப் படமாக வெளிவந்து பெரிய ஒரு புரட்சியை உண்டுபண்ணிய ஒரு படம் தான். அது என்ன புரட்சின்னு கீழே சொல்றேன் (இப்பவே சொன்னா டென்ஷன் பில்டப் பண்ணமுடியாதில்லையா? வாசிச்சிட்டு ஓடிட்டீங்கன்னா?). வாங்க இப்ப பதிவுக்குள்ள போகலாம்.



thumb14எல்லாத்துக்கும் முதல்ல நம்ம படத்தோட ஹீரோ ஜெஃப்ரி லெபௌஸ்கி பற்றி சொல்லியே ஆகணும். ரஷ்யப் பேரு மாதிரி இருந்தாலும் இவரு எப்பவும் தன்னை த டூட் (தாதா???) அப்படீன்னு தான் சொல்லிக் கொள்வாரு. ஆனால் இவரின் தோற்றத்தைப் பார்த்தால் …. தாடி, விரிந்த பரட்டைத் தலை, செருப்பு, ஷார்ட்ஸ், ரோப் (robe) அப்படி ஃபாரீன் பிச்சைக்காரன் ரேஞ்சுல தெரிவாரு. தெரியிறது என்ன … கிட்டத்தட்ட பிச்சைக்காரன் தான். பின்ன … ஒரு எழுபது சத பால் பேக்குக்கு கையில காசில்லாம செக் எழுதுறவன் பில் கேட்ஸாவா இருப்பான்? போதாக்குறைக்கு பகலில் வீட்டுல நேரத்தை வெட்டியா ஓட்டிக் கொண்டு வைட் ரஷ்யன் (இது செய்வது எப்படின்னு என் ஃபேஸ்புக்ல ஒரு லிங்க் போட்டிருந்தேன்) குடிச்சிட்டு நைட்டுல அப்பப்போ பௌலிங் விளையாடச் செல்லும் கேஸ். த டூட்டைப் பொறுத்தவரை சமூகம் என்பது பௌலிங் அலிக்கு அவனுடன் விளையாட வரும் அவனது இரு நண்பர்கள் வோல்டர் மற்றும் டானி.

thumb12ஒரு நாள் வீட்டிற்கு வரும் டூட் வீட்டைத் திறந்ததும் இரு ரவுடிகளால் தாக்கப்படுகிறான். அவனின் முன்னாள்-போர்ன்-ஸ்டார் மனைவி பன்னி (panni இல்ல bunny) ஊர் முழுவதும் கடன் வாங்கியிருப்பதாகவும், கட்டாவிட்டால் கதை வேறுமாதிரி இருக்கும் எனவும் மிரட்டுகிறார்கள். வெயிட் வெயிட் … இப்படி ஒரு வெட்டி வெங்காயத்திற்கு முதல்ல பொண்டாட்டின்னு ஒன்னு இருக்குமா? அப்போ சம்திங் ராங். இதை டூட்டும் ரவுடிகளுக்கு சொல்ல, அவர்களுக்கும் அவர்கள் தேடி வந்த பணக்காரன் இவன் இல்லைன்னு தெரியவருது. இந்த மிஸ் அன்டர்ஸ்டேன்டிங் ஏன் வந்தது? காரணம் அந்த இருவருக்கும் பொதுவான லெபௌஸ்கி என்ற பெயர் தான். ஆனாலும் ஒரு ரவுடி ஜெஃப்ரியின் ரூமின் சென்டர் ஒவ் அட்ராக்ஷனான கார்பெட்டில் உச்சா போய்விட, இதற்கு காரணம் பணக்கார லெபௌஸ்கி தான் என கோபத்துடன் நஷ்டஈடு கேட்டுச் செல்கிறான் டூட்.

அதன் பின் நடக்கும் சம்பவங்களும் முடிவுகளும் உங்கள் கையில் ஒப்படைத்துவிடுகிறேன். கட்டாயம் படத்தை எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



thumb15மூன்று முறை பார்த்துவிட்டேன் இந்தப் படத்தை, கடந்த இரண்டு வாரங்களுக்குள்.  இந்தப் படம் பற்றிச் சொல்வதானால், திருடு போன பணத்தைச் சுற்றி நடக்கும் மெயின் கதை, அதனடியில் இருந்து வரும் ஏகப்பட்ட குழப்பங்கள், கிளைக் கதைகள் என்று கிட்டத்தட்ட ஒரு கோழி கிண்டிய குப்பை போன்ற கதை. அதனால் தான் இன்ட்ரோவுடன் கதையை நிறுத்திவிட்டேன்.ஆனால் எல்லாம் படம் செல்லச் செல்ல வெளிச்சத்திற்கு வரும். இந்த காரணத்தினாலோ என்னவோ படம் வெளிவந்த நேரத்தில் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி, படம் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆனால் காலத்தில் ஓட்டத்தில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இந்தப் படத்திற்கென்றே பல ரசிகர் மன்றங்கள் தோன்றும் அளவிற்கு பிரபல்யமடைந்து ஒரு கல்ட் க்ளாசிக்காக மாறிவிட்டது. வருஷாவருஷம் பல்வேறு இடங்களில் The Lebowski Fest என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாடுவது வழக்கம்.

இது எல்லாவற்றிற்கும் மேல் ஒருபடி மேலே போய் Dudeism என்ற பெயரில் ஒரு புதிய மதத்தையே டூட்டின் கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு வெப்சைட்டும் ஆரம்பித்து அதில் 150,000க்கும் மேல் ஃபாதர்ஸும் சேர்த்துவிட்டார்கள். விருப்பம்னா நீங்க கூட சேரலாம். கீழே இருக்கும் படம் கூட அவர்களின் கூத்தின் ஒரு சாம்பிள் தான். (சினிமாவில் இது ஒரு புரட்சி தானே?)



ஒரு த்ரில்லரையும் காமெடியையும் கலந்துகட்டி ஒரு அற்புதமான திரைக்கதையை பின்னும் திறமை எப்படித் தான் கோயன் ப்ரதர்ஸின் மண்டைக்குள் உதித்ததோ தெரியவில்லை. இவங்க ரெண்டு பேரையும் ஹாலிவுட்டின் புரட்சி மன்னர்கள் என்று சொல்லலாம்.  இது வரைக்கும் இவங்க ஒரே மாதிரி அடுத்தடுத்து இரண்டு படங்களை எடுத்ததில்லை. மனசுல என்ன தோணுதோ, அதை அவங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு வித்தியாசமான ட்ராக்கில் கதையைப் பின்னி வெற்றியடைய வைப்பதில் விற்பன்னர்கள்.

thumb6த டூட் ஆக வரும் ஜெஃப் ப்ரிட்ஜஸ், திறமையான நடிகர். அவரோட கேரியரில் பெஸ்ட் இந்தப் படம் தான் என்று அவரும், பலரும் சொன்னாலும் நடிக்க வந்து நாற்பது வருடங்களில் ஆறு முறை நாமினேட் செய்யப்பட்டு … கடைசியில் 2009ல் தான் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.

ஆக்சன், த்ரில்லர் ரசிகர்கள் நிறையப் பேருக்கு இந்த மாதிரி படங்கள் பிடிப்பதற்கான சான்ஸ் குறைவு. ஆனாலும் ஒரு முறை படத்தை எடுத்துப் ஒரு ட்ரை ஒன்னு கொடுத்துப் பாருங்களேன்.


என் ஸ்கோர் – 92
/100



படத்தின் ட்ரெயிலர்


The Dude Abides !!!

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

30 comments:

  1. No Country for Old Men படத்தின் கிளைமாக்ஸ்யை அப்படியே எடுத்து கொள்ள வேண்டும் Take It As It Comes...நல்லவன் (அந்த படத்துல நல்லவன் யாருமே கிடையாது) தான் ஜெயிப்பான் என்ற பார்முலா எல்லாம் கிடையாது...
    ஆண்டன் (சைக்கோ) மோஸ் கிட்ட ஒரு வாட்டி, "நீ பண பெட்டிய திருப்பி குடுக்காடி உன்னோட பொண்டாட்டிய (GF) கொன்னுருவேன்னு" சொல்லுவார்.
    ஆனா மோஸ்யை அதுக்கு முன்னாடியே வேற கேங் கொன்னுருவாங்க.... சோ, ஆண்டனை பொறுத்த வரை மோஸ் தன்னோட பேச்சை கேட்கல, குடுத்த வாக்கை காப்பாதல..... அந்த ஒரு காரணத்தை வச்சு ஆண்டன் அவரோட பொண்டாட்டிய (GF) கொலை செய்வார்... ஏன்னா அவர் சைக்கோ.....
    இந்த படத்தை பத்தியும் நீங்க உங்க பார்வையில் எழுதுங்க பாஸ்.......

    The Big Lebowski (1998) இந்த படத்துக்கு IMDBயில 8.2 ரேடிங் பார்த்து டவுன்லோட் பண்ணி வச்சேன்..மறந்தே போச்சு....நீங்களும் 92/100 குடுத்து இருக்கேங்க..கண்டிப்பா பார்கிறேன்..
    ஏன் பாஸ், முனு வாட்டி பார்த்தீங்க.....குழப்பம்மா..???? சுவாரிசியமா ...????

    ReplyDelete
  2. விமர்சனம் படித்த பின்னரும் பார்க்க வேண்டும் என்றே தோணவில்லை ஏன் என்றே தெரியவில்லை...

    ///ஏன் பாஸ், முனு வாட்டி பார்த்தீங்க.....குழப்பம்மா..???? சுவாரிசியமா ...????///அதெல்லாம் இருந்து இருக்காது ரொம்ப போர் அடித்து இருக்கும் நெட் வேற முடிந்து இருக்கும் வேற வழி இல்லாமல் பார்த்து இருப்பார் என்ன சரி தானே நண்பா...நானும் இப்படி தான் ஒரு படத்தை டவுன்லோட் செய்தால் கடுப்பாய் இருக்கும் பொது எல்லாம் பார்த்து கொண்டு இருப்பேன்...விமர்சனம் நல்லாத்தான் இருந்தது உங்களை எந்த குறையும் சொல்லவில்லை...

    ReplyDelete
  3. @ராஜ்

    வேணாம் பாஸ். நீங்க ஏற்கனவே ரொம்ப பக்காவா விமர்சனம் பண்ணிட்டீங்க. இனி நான் வேற திரும்ப விமர்சனம் பண்ணனுமா? வேற ஏதாச்சு எழுதுவோம்.

    ReplyDelete
  4. @chinna malai

    சே சே ... நான் ஒரே படத்தை இரு முறை பார்ப்பது மிக மிகக் குறைவு. ஏனோ தெரியவில்லை. இந்தப் படம் ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது.

    நெட் முடிந்தாலும், இன்னும் பார்க்கவேண்டிய படங்கள் ஹார்ட் டிஸ்கில் 800க்கு மேல் உள்ளன. பத்தாக்குறைக்கு விமர்சனம் படிச்சுட்டு போடும் டவுன்லோட்டும் சேர்ந்து லிஸ்ட் எகிறிட்டே போகுது.

    ReplyDelete
  5. இந்தா டவுன்லோடு பண்ணப்போறனே :D

    ReplyDelete
  6. //மூன்று முறை பார்த்துவிட்டேன் இந்தப் படத்தை, கடந்த இரண்டு
    வாரங்களுக்குள்..//
    அவ்வளவு சுவாரசியமான படமா? 92 மார்க்கெல்லாம் போட்டிருக்கீங்க.. கண்டிப்பா பார்க்கனும்!!

    ReplyDelete
  7. படத்தைப் பற்றி கேள்விபட்டு பல நாள் முன்னாடியே டவுண்லோட் பண்ணி வச்சேன். இன்னும் பாக்கல (எல்லாரும் சொல்ற டெம்ப்ளேட் பதிலையே சொல்றேன். என்ன செய்ய, அது தான் உண்மை), கூடிய சீக்கிரம் பாத்துட்டு சொல்றேன், மூணு தடவ பாக்குர அளவுக்கு வொர்த்தான்னு :-)

    ReplyDelete
  8. /**இன்னும் எனக்கு அந்த க்ளைமேக்ஸ் விளங்கவில்லை என்பது வேறு விஷயம்**/
    எனக்கும் தான் தல...

    /*ஒரு முறை படத்தை எடுத்துப் ஒரு ட்ரை ஒன்னு கொடுத்துப் பாருங்களேன்.*/
    சொல்றீங்க..பண்றேன்...உலக சினிமாவா இருந்துறாதே..

    ReplyDelete
  9. @Gobinath

    படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.

    ReplyDelete
  10. @JZ

    என்னமோ தெரியல. படமும் கேரக்டரும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

    ReplyDelete
  11. @Baby ஆனந்தன்

    நீங்க மூணு தடவ எல்லாம் பார்ப்பீங்களோ தெரியாது. பார்த்துட்டு சொல்லுங்க தல.

    ReplyDelete
  12. @Lucky Limat லக்கி லிமட்

    உலக சினிமாவா எல்லாம் இருக்காது பாஸ். ஆக்சன் எல்லாம் கம்மியாத் தான் இருக்கும். ஆனாலும் நம்பி எடுத்துப் பாருங்க.

    ReplyDelete
  13. கோயான் பிரதர்ஸின் பர்கோ[Fargo] பாருங்கள்.பக்கா கிரைம் திரில்லர்.

    ReplyDelete
  14. வாவ் எனக்கும் ரொம்ப பிடிச்ச படங்களூள் ஒண்ணு உங்க அளவுக்கு இல்ல ஒரு தடவ தான் பாத்து இருக்கேன்.., Jeff Briges விட அவரோட ஃப்ரெண்ட்டா ஞாயித்துகிழமை கார் ஓட்ட மாட்டேன்னு சொல்லிட்டு ஒருத்தர் வருவாரே அவர ரொம்ப பிடிச்சது..,

    ReplyDelete
  15. @உலக சினிமா ரசிகன்

    இப்பத் தான் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன் ரசிகரே. நன்றி.

    ReplyDelete
  16. @...αηαη∂....

    என்னைப் பொறுத்தவரை டூட்டுக்கு அடுத்தபடியாக கலக்குபவர் இவர் தான். அவர் வியட்நாம் பற்றிப் பேசும் டயலாக்ஸ் எல்லாம் செம காமெடியாக இருக்கும்.

    ReplyDelete
  17. ஃஃஃஃஃஅதன் பின் நடக்கும் சம்பவங்களும் முடிவுகளும் உங்கள் கையில் ஒப்படைத்துவிடுகிறேன். கட்டாயம் படத்தை எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஃஃஃஃ

    வணக்கம் சகோ... நீங்க இப்புடி சொல்லிப்புட்டு விமர்சன தர்மத்தை காப்பாற்றி விட்டீர்கள்.... நான் இனி இதன் முடிவை எப்போ பார்த்து முடிப்“பதோ தெரியவில்லை...

    ReplyDelete
  18. பதிவு அருமை நண்பா.. உங்கள் வலைப்பூவை எனது வலைப்பூவில் இந்த வார நண்பர் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்.. மறுப்பு ஏதும் இருப்பின் தெரிவிக்கவும்..

    ReplyDelete
  19. நல்ல விமர்சனம். தொடருங்கள்
    on your free time kindly visit my blog.
    http://dohatalkies.blogspot.com/2012/07/good-bad-and-ugly.html

    ReplyDelete
  20. விமர்சனம் நன்று...நல்ல ஒரு திரைப்படத்தை அறிமுகம் செய்து வச்சி இருக்கீங்க....கண்டிப்பா பர்கனம் நினைக்கிறன் உங்க விமர்சனம் படித்த பிறகு.

    ReplyDelete
  21. @♔ம.தி.சுதா♔

    நல்ல படம் தான். நேரம் கிடைக்கும்போது எடுத்துப் பாருங்க.

    ReplyDelete
  22. @ஹாரி பாட்டர்

    இதில் மறுக்க என்ன இருக்கிறது நண்பா? நம்ம மொக்கைகள் பிடித்திருந்ததது மகிழ்ச்சி. :)

    ReplyDelete
  23. @திண்டுக்கல் தனபாலன்

    ஓட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார். ஃபீட்பர்னரில் புது லிங்க் அப்டேட் செய்யாமல் வைத்திருந்தேன். அது தான் பிரச்சினை. இப்போ சரி பண்ணியாச்சு. :)

    ReplyDelete
  24. @Doha Talkies

    இப்போத் தான் உங்க தளத்தைப் பார்த்துட்டு வர்றேன். இன்னும் நிறையப் படங்களை அறிமுகப்படுத்துங்க.

    ReplyDelete
  25. @MuratuSingam

    உங்க ஸ்டைலுக்கு ஒத்து வருமோ தெரியல. பாருங்களேன். பிடிக்கும். பிடிக்கலைன்னா தாராளமா வந்து துப்பிட்டு போங்க.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...