நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

American Pie Reunion (2012) - 18+

folder


“அடடே … பசங்கள கடைசியா ஜிம்மின் கல்யாணத்தப்போ பார்த்தது. தாடி, ஹேர்ஸ்டைல்…எம்புட்டு வளந்துட்டானுங்க பயபுள்ளங்க?”...இந்த வசனம் எதுவும் கல்யாண ஃபங்க்ஷன்ல பேசப்பட்டதல்ல. இந்தப் படம் ஆரம்பிக்கும்போது என் மனதில் ஓடிய ஓர் வரி.

அமெரிக்கன் பை” … இந்த சொல்…ஏதாச்சு வெஸ்டர்ன் சாப்பாடுன்னு நெனச்சீங்கன்னா… சுத்த வேஸ்ட்டு சார் நீங்க!!! … நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க. ஆனா உங்க பாடசாலைக் காலத்தில் அல்லது காலேஜ் பீரியடில் உங்களுக்கு இந்த சொல்ல பரிச்சயமானது என்றால் உங்கள் டீனேஜ் காலம் படு குஜாலா இருந்திருக்கும். அந்த “பை” சீன், “வெப்கேம் டெலிகாஸ்ட்” எல்லாம் மறக்க முடியுமா? அது ஏன், சும்மா இருந்த MILF (அம்பி எல்லாம் ஒதுங்கிக்கோங்கோ) என்ற ஒரு சொல்லை வயசுப்பசங்க மனசில் புதைத்து பட்டிதொட்டியெல்லாம் பரவவிட்ட புகழும் இந்தப் படத்திற்கே.

thumb3

ஃப்ளேஷ்பேக் - ஒருமுறை நண்பன் ஒருவன் வீட்டில நண்பர்களோட சேர்ந்து படத்தை ரூமுக்குள் ஓடவிட்டு சத்தமாக சிரித்து சிரித்து பார்த்துக்கொண்டிருக்க, திடீரென அவனின் அம்மா காபியுடன் என்ட்ரியைக் கொடுக்க அவனவன் திடீரென வீடியோவை நிறுத்த முடியாமல், சிரிப்பையும் அடக்க முடியாமல் தடுமாற, அம்மா கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்து டென்ஷனாக … பேட் மெமரீஸ், பட் ஸ்வீட் மெமரீஸ் Smile


முதல்ல ஒரு சின்ன ஹிஸ்ட்ரி லெக்சர்

1999ம் ஆண்டு ஜுலை மாதம், 11 மில்லியன் டாலர் பட்ஜெட்டில், ஜிம் “இன்பகரமாக” டீவியில் போர்ன் பார்ப்பதை, அவன் பெற்றோர் கண்டுபிடிப்பது போல ஆரம்பித்த அமெரிக்கன் பை திரைப்படத்தின், கிட்டத்தட்ட 230 மில்லியனுக்கும் மேற்பட்ட வசூல் மழையால் பிக்-அப் ஆகி … ஜிம்மும் அவனின் நண்பர்களும் காலேஜ் போகும் இரண்டாம் பாகம், ஜிம்மின் திருமணம் நடந்த மூன்றாம் பாகம் என அடுத்தடுத்து படங்களை வெளியிட்டார்கள். அவையும் போட்ட காசை மடங்குகளில் திருப்பித்தர … ஆசை யாரை விட்டது?

2005-2009 காலப்பகுதி … பூனை குட்டி போட்டது போல வரிசையாக வருடத்திற்கு ஒன்று என்ற ரேட்டில் நான்கு படங்கள், ஒரிஜினல் கதையில் இருந்து விலகி டிவிடி ரிலீஸாக வெறும் அடல்ட் ஹியுமரையும் பிக்கினி போட்டுக் கொண்டும் இல்லாமலும் வரும் ஃபிகருங்களையும் நம்பி களமிறங்கின. விமர்சனங்கள் கழுவி கழுவி ஊத்தினாலும் வசூலை மட்டும் ஒன்றும் பண்ணமுடியவில்லை.

thumb1

எனக்கும் மூன்றாவது பாகம் வரை “வாவ்” என்று இருந்த நான் நான்காம் பாகம் பார்த்துவிட்டு “புதுசா ஒன்னும் இல்லியே” என்று மாறி மற்ற பாகங்களைப் பார்த்துவிட்டு சிரித்தாலும், கடைசியில் “அடச்சீ. இந்தப் படமும் புளிக்கும்” ரேஞ்சுக்கு போய்ட்டேன். இந்தக் கொடுமையில 8ம் பாகம் வேற வரப்போகுதாம் என்று கேள்விப்பட்டவுடன் அடுத்த விஜய் படம் ரிலீஸ் ஆகுதாம் என்ற அளவுக்கு அப்செட் ஆகிட்டேன்.

ஆனால் 8வதும் கடைசியும் என்ற சொல்லால் கவரப்பட்டு கடைசியா என்னத் தான் சொல்ல வர்றாங்க பார்ப்போம்னு படத்தைப் பார்க்க எடுத்தேன் (ஏதாச்சு புது வயசு ஃபிகரைப் பார்க்கலாம் என்பதெல்லாம் மறைமுகப் ப்ளான்)…


கதைன்னு பெரிசா ஒன்னும் கஷ்டப்படவில்லை. நண்பர்கள் எல்லாரும் காலேஜ் முடித்து வாழ்க்கையில் செட்டிலாக ஆளுக்கொரு திசையில் பறந்துவிடுகிறார்கள். பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிடுகின்றன … இந்த நேரத்தில் “Class of 1999” என்ற பெயரில் ரீயுனியன் ஒன்று ப்ளான் செய்யப்பட மீண்டும் எல்லாரும் ரியுனியனுக்கு சில நாட்களுக்கு முன்பே சந்தித்துக் கொள்கிறார்கள். பழைய கில்லாடி நண்பர்கள் சேர்ந்தால் என்ன நடக்கும்? படத்தைப் பார்த்துக் கொள்ளுங்க (என்ன செய்ய ப்ளான் பண்ணியிருப்பாங்கன்னு சாம்பிள் ஒன்று பார்க்க வேண்டுமென்றால் கீழே ஹைலைட் பண்ணவும்).

“BROS! Wouldn’t it be TOTES AMAZEBALLS if we went back to our high-school reunion, and all the 18-year-old sluts in town wanted to do us and we couldn’t do them because we were married and stuff so we just beat up their boyfriends and let them blow us while we high-fived each other and listened to Chumbawumba?? SO AWESOME, BRO! Sack tap! Last one to the jetskis sucks dicks!”

thumb3

காலேஜ் டைமில் செக்ஸ் பைத்தியமாக திரிந்த ஜிம், திருமணத்திற்கு பின் குழந்தை பிறந்ததும் ஒரு “மூட்” இல்லாமல் இருப்பது, இன்னும் சின்னப்புள்ளத்தனமாக இருக்கும் ஸ்டிஃப்ளர், ரியுனியனில் தன் முதல் காதலைக் கண்டு மனம் தடுமாறும் கெவின் என திருமணத்தின் பின்னான சிக்கல்களுடன், வழக்கம் போல அடல்ட் காமெடியையும் கலந்து இறுதியில் வாழ்க்கைக்கான புத்திமதிகளுடன் படம் நிறைவுறுகிறது.


பசங்க ஹைஸ்கூல் சீனியர் ப்ரொம்க்கு ஆள்தேடுவதில் இருந்து, காலேஜ் சென்று திருமணம் முடிக்கும்வரை அவர்களின் வாழ்க்கையோடு பயணித்த பலருக்கு இந்தப் படம் கட்டாயம் ஒரு ஸ்வீட் நாஸ்டால்ஜியா ட்ரிப்பாக அமையும்.  மற்றவர்களுக்கு படம் பிடிக்குமோ தெரியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை முதல் மூன்று படங்களிலும் நடந்த பல விடயங்களை தொட்டுப் பார்த்துக் கொண்டே படம் நகர்கிறது. அதுமட்டுமில்லாமல் மூன்று படங்களிலும் மூலையில் நடித்தவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்து இந்தப் படத்தில் நடிக்கவிட்டிருக்காங்க.

thumb2

ஆரம்பத்தில் நண்பர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி, பின் அவர்கள் சந்தித்துக் கொண்டதும் அவர்களின் கொட்டம் ஆரம்பிக்கிறது. ஆனால் எதுவும் ஃப்ரெஷ் ஜோக்ஸ் என்று இல்லை. எல்லா ஜோக்கையும் ஏற்கனவே ஏதோ ஒரு அமெரிக்கன் பை படத்தில் பார்த்துவிட்டது போன்ற ஒரு ஃபீலிங். 30 வயதாகும் இவனுங்க மீண்டும் ஹைஸ்கூல் வாழ்க்கையை சில நாட்களுக்கு வாழ முயற்சிப்பதே பெரும்பாலான படம். (ஏற்கனவே Grown Ups என்ற ஒரு படமும் இந்த கதையுடன் வந்திருக்கிறது). என் ஹியுமர்-சென்ஸில் பிரச்சினையா என்று தெரியவில்லை … படத்தில் சில அருவருப்பான காட்சிகளுக்கும் சிரித்துக் கொண்டிருந்தேன். அதே போல நீண்ட நாளாக இருந்து வந்த ஃபின்-ஸ்டிஃப்ளரின் பிரச்சினையையும் இந்தப் படத்தில் தீர்த்து வைத்துட்டாங்க. Smile


ஆனா ஒன்னு … சத்தியமா இதுக்கு மேல இந்த சீரீஸ இழுக்கணும்னு நினைச்சாங்கன்னா, பார்ப்பது கொஞ்சம் சந்தேகம் தான். பாடசாலை, காலேஜ், திருமணம் என்று எடுக்கக்கூடிய முக்கிய பருவம் எல்லாத்தையும் படமாக்கிட்டாங்க. இனி படம் எடுக்கிறதென்றால், யாராவது ஒருத்தரைக் கொன்று போட்டு அவரின் ஃபியுனரல்ல காமெடி பண்ண முயற்சித்தாத் தான் உண்டு. இந்தப் படத்துக்கே போதும்டா சாமி…ஆளை விடுங்கப்பான்னு வந்துருச்சு. ஆனாலும் இந்தப்படமும் வழக்கம் போல தயாரிப்பாளர் போட்ட 50மில்லியனை திருப்பி 200 மில்லியனாக தந்துவிட்டது. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க மக்காஸ் …. இந்தநேரம் அடுத்த ஸ்கிரிப்ட் எவனாச்சு ஹாலிவுட்ல ரெடி பண்ணிட்டு இருப்பான்.

ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

41 comments:

 1. உங்கள மாதிரி தான் நண்பா நாலு பார்ட் வரைக்கும் தான் பார்த்தேன் அப்புறம் புடிக்கவே இல்ல.., அதனால இது பாக்குற ஐடியாவே இல்ல.., :))

  ReplyDelete
 2. இது வரை இதில் ஒரு பாகம் கூட பார்த்தது இல்லை படத்தின் டைட்டில் என்னை கொஞ்சம் கூட கவரவில்லை நான் பார்க்கவில்லை என்றால் டைரக்டர் கவலைபட போறாரா...spiderman எழுதுவீங்க என எதிர்பார்த்தேன்.....

  ReplyDelete
 3. இதுக்கு முன் ஒரு கமெண்ட் போட்டேன் அது ஸ்பாம் இருக்கா இங்க தெரியவில்லை...

  ReplyDelete
 4. படத்தோட பேக்ரவுண்ட், உங்க அனுபவம் எல்லாத்தையும் கலந்தெ அருமையா விமர்சனம் தந்திருக்கீங்க! என் ஃபிரெண்டு தேடித்தேடி பார்த்து வொர்த் இல்லைன்னுட்டான்.. அதுனால நானும் பார்க்கலை..

  ReplyDelete
 5. சுவாரஸ்யம். பாக்கணும்

  ReplyDelete
 6. பாஸ்,
  போன வாரம் தான் இந்த சீரீஸ்லியே வந்த கடைசி பாகம் பார்த்தேன்... "Reunion". இந்த சீரீஸ்ல வேற எந்த படமும் பார்த்தது இல்லை....ரொம்ப காமெடி & காமநொடி கலந்த கலவை இது...எனக்கு பிடிச்சு இருந்தது...சில எடத்துல சிரிக்கிற மாதிரி இருந்தது.. மீதி பாகத்தையும் பார்க்க வேண்டும் என்று நினைச்சு இருந்தேன்...ஆனா நீங்க சொல்றதை பார்த்தா எல்லா படத்திலும் ஒரே கதை மாதிரி தான் தெரியுது....

  ReplyDelete
 7. @...αηαη∂....

  முதல் மூன்று பார்ட்டும் ரசிக்கும்படி இருக்கும். அதுக்கடுத்தபடியா இது ஓகே ரகம் ... டைம் இருந்தா பாருங்க.

  ReplyDelete
 8. @chinna malai

  ஹை ... கண்டுபிடிச்சிட்டிங்களே? ஸ்பாம்ல இருந்துச்சு. இப்ப ஓகே.

  ஸ்பைடர்மேன், அவெஞசர்ஸ் பற்றி எழுத நினைத்துவிட்டு அதுதான் பாப்புலர் பதிவர்கள் அழகா எழுதிட்டாங்களே? நாம வேற எழுதி அதை மொக்கைப்படுத்தனுமான்னு விட்டுட்டேன். :) :)

  ReplyDelete
 9. @JZ

  அப்போ ... அடுத்த விமர்சனத்தில் சந்திப்போம் தல. முதல் மூன்று பார்ட்டும் பார்க்கலைன்னா ஆரம்பத்துல ஸ்டார்ட் பண்ணுங்க. பிடிச்சிருந்தா நேரா இதுக்கு ஜம்ப் பண்ணுங்க. :)

  ReplyDelete
 10. நான் இன்னும் பார்க்கவேயில்ல இனிமேதான் ஆகனும்....
  பகிர்வுக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 11. @ராஜ்

  இந்தப் படம் பிடிச்சிருந்துச்சா? அப்போ கட்டாயம் முதல் மூன்று பாகங்களை “மட்டும்” எடுத்துப் பாருங்க பாஸ். காமெடியா சூப்பரா இருக்கும்.

  ReplyDelete
 12. @சிட்டுக்குருவி

  வருகைக்கு நன்றி நண்பா. எடுத்துப் பார்த்துட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 13. மொத்தம் 8 பகுதிகளும் பார்த்து விடேன் நண்பா.. எல்லாவற்றையும் (???) மறந்து விட்டு பார்த்தால் எல்லாமே செம காமடியான படங்கள் தான்..

  ReplyDelete
 14. //ஃப்ளேஷ்பேக் - ஒருமுறை நண்பன் ஒருவன் வீட்டில நண்பர்களோட சேர்ந்து படத்தை ரூமுக்குள் ஓடவிட்டு சத்தமாக சிரித்து சிரித்து பார்த்துக்கொண்டிருக்க, திடீரென அவனின் அம்மா காபியுடன் என்ட்ரியைக் கொடுக்க அவனவன் திடீரென வீடியோவை நிறுத்த முடியாமல், சிரிப்பையும் அடக்க முடியாமல் தடுமாற, அம்மா கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்து டென்ஷனாக … பேட் மெமரீஸ், பட் ஸ்வீட் மெமரீஸ் …//

  சில நேரம் இப்படித்தான், 'என் நண்பனுக்கு ஒரு பிரச்சினைனு' 11 மணி டாக்டர் ஷோவுக்கு லெட்டர் போடுவாங்க...இல்லையா? ;)

  ReplyDelete
 15. இந்த சீரிசில் இதை தவிர எல்லா படங்களையும் பார்த்தாகிவிட்டது. இது ஒண்ணுதான் பாக்கி. திருட்டுதனமாக பார்த்து, வயிறு குலுங்க சிரித்த நினைவுகள் வருகிறது

  ReplyDelete
 16. நீங்க சொன்ன மாதிரி முதல் மூன்று பாகங்கள் செமையாக இருக்கும்.. அதிலும் முதல் இரண்டு வாய்ப்பே இல்லை. இதன் பிறகு வந்ததெல்லாம் செக்ஸ் தான் அதிகமா இருந்ததே தவிர சுவாரசியமா இல்லை.

  ஜெல் என்று நினைத்து Quick fix ஐ ஊற்றி அவன் மாட்டிட்டு முழிக்கிறது பார்த்து சிரித்து நான் ஒரு வழி ஆகிட்டேன் :-)) அவரோட அப்பாவாக வருகிறவர் செம கூல். இதை விட முக்கியமான நேரத்துல "அதை" பிடித்து டம்ளரில் வைத்து விட அதை ஒருத்தன் குடித்து விட்டு அடிக்கிற கூத்து.. ஐயையோ வயிற்று வலியே வந்து விடும். ரணகளமான காமெடி. அமைதியாக இருக்கிறவன் அவன் நண்பனோட அம்மாவை கரக்ட் பண்ணுறது என்று.. நான் ஸ்டாப் காமெடி.

  இந்த பாகம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 17. @சீனு

  ஹி ஹி .. சிலவேளைகளில் க்ரூப் ஸ்டடிஸ்.

  ReplyDelete
 18. @பாலா

  ஹா ஹா ... நம்ம கட்சி. இதையும் பார்த்து சீரீஸை கம்ப்ளிட் பண்ணிடுங்க தல.

  ReplyDelete
 19. @கிரி

  //இதன் பிறகு வந்ததெல்லாம் செக்ஸ் தான் அதிகமா இருந்ததே தவிர சுவாரசியமா இல்லை.//

  மிகச் சரி நண்பா. நீங்க சொன்ன காமெடியெல்லாம் படங்களின் ஹைலைட்ஸ். மறக்க முடியுமா?

  ReplyDelete
 20. கலக்கல் விமர்சனம், போன வாரம் தான் டவுன்லோட் போட்டு வெச்சு இருக்கேன் இன்னும் பார்க்கவில்லை... இனி மேல்தான் பார்க்கணும்...

  மற்ற பாகங்களில் எனக்கு ரொம்ப பிடிச்சது ரெண்டாம் பாகம் தான்.....ஒன்று மற்றும் மூன்றும் சூப்பரா இருக்கும் என்ஜாய் பண்ணலாம்.... நான்காம் பாகம் பரவ இல்லை என்ற ராகம்..... மற்றது எல்லாம் பார்வர்ட் பண்ணி பார்க்கிற மாதிரியான படமாகதான் இருந்தது.

  ReplyDelete
 21. இந்த முதல் மூன்று பாகம் பார்த்த பிறகு, வேறு எதுனா படத்துல ஸ்டீப்ளர் வந்தாலும்... சந்தோஷத்துடன் வரும் அந்த சிரிப்பை நிறுத்த முடிவதில்லை........

  ReplyDelete
 22. ஹாலி தல நீங்க சொன்னது போல முதல்ல தான் டாப்பு (இது வழக்கமான எல்லா படத்துக்கும் வரும் போல) மீதி எல்லாம் டூப்பு...ஆனாலும் படம் வந்துடுச்சின்னவுடனே பார்க்க தான் தோணுது.;)

  ReplyDelete
 23. என்னிடம் கம்ப்யூட்டர் ,cd எதுவுமே இல்லாத காலத்தில்(2003) இந்த படத்தின் முதல் பாகத்தை ஒரு நண்பனின் அறையில் சில நிமிடங்கள் இந்த படம் பார்த்தேன்.பயங்கரமாக சிரித்த ஞாபகம்.அதன் பிறகு சி.டி வந்த பின் ஒரு ஆறு பாகத்தையும் ஒரே வாரத்தில் பார்த்ததில் எந்த படம் என்ன காட்சி எது எதில் என்றே குழப்பம்.ஆனாலும் நீங்கள் சொல்வது போல் மூன்று பாகத்திற்கு பிறகு பார்த்தால் திணிக்க பட்ட படமாகவே இருக்கிறது .இந்த reunion வந்துள்ளதாக சில நாட்களுக்கு முன் தான் கேள்வி பட்டேன்.பார்கிறேன்.

  ReplyDelete
 24. இந்த சீரிஸ்ல ஒரு படம் கூட முழுசா பார்க்கல பாஸ்..இந்த படம் கூட ஐஎம்டிபியில் ஏழுக்கு மேல ஸ்கோர் பண்ணிருக்கு..கண்டு ஸாக் ஆயிட்டேன்..உங்க விமர்சனம் வழக்கம் போல கலக்கல்.

  @எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க மக்காஸ் …. இந்தநேரம் அடுத்த ஸ்கிரிப்ட் எவனாச்சு ஹாலிவுட்ல ரெடி பண்ணிட்டு இருப்பான்@
  இதோ இத சொன்னீங்களே..ரைட்டு..ஹாலிவுட்ல எல்லோரும் வசூல் புலிங்க..மொக்கையா கொடுத்தாலும் வசூல் வேட்டையில பஞ்சமே இருக்காது..அதுவும் இந்த மாதிரி டீன் காமெடி பீஸ்கள் பேரும் எடுக்கும்.

  படம் எதுக்கும் பார்க்குறேன்.நன்றி.

  ReplyDelete
 25. பெரும்பாலும் குடும்ப சகிதமாய் போறதால இத மாதிரி படங்கள் நோ நோ...
  நல்லா எழுதியிருக்கீங்க..

  ReplyDelete
 26. @கோபிநாத்

  டைம் இருந்தா பாருங்க தல. பழைய காமெடிகள் ஞாபகத்திற்கு வரும். நாஸ்டால்ஜியா ட்ரிப்பா அமையும்.

  ReplyDelete
 27. @scenecreator

  பார்த்துவிட்டு சொல்லுங்க பாஸ்

  ReplyDelete
 28. @Kumaran

  என்னய்யா ... பதிவெழுதுறதுல நம்மள விட மோசமா இருக்கீங்க. மாசத்துக்கு ஒண்ணு சரி எழுதப்பாருங்க. ப்ளீஸ்.

  ReplyDelete
 29. @ரெவெரி

  சரி ... சீக்கிரம் ஒரு நல்ல குடும்பப்படமா போட்டிடுவோம்.

  ReplyDelete
 30. அண்ணே நூத்தி ஒராவது ஆளா நான் ஒங்கள ஃபாலோ பண்ணுறன் என்றதுக்காக மொய் வைக்கிறேன்னு நெனச்சிடாதீக! இப்போதான் நேர காலம் வந்ததுன்னு வச்சுக்கோங்களேன்! இனிமே அடிக்கடி சந்திக்கலாம்!

  ReplyDelete
 31. அமேரிக்கன் பை! இது மட்டும் தான் மிஸ்ஸிங்!!! பாத்துடுறேன் பாத்து!

  ReplyDelete
 32. படம் பார்த்து விட்டேன் நண்பரே,
  ஆனால் படம் கொஞ்சம் சுமார் தான்.
  விமர்சனம் அருமை.

  ReplyDelete
 33. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete
 34. @கிஷோகர் IN பக்கங்கள்

  நீங்க ரொம்ப நல்ல புள்ளையாச்சே ... இந்தப் படமெல்லாம் பார்ப்பீங்களா?

  ReplyDelete
 35. @Doha Talkies

  எனக்கு ஓகே போலத் தெரிஞ்சுது.

  ReplyDelete
 36. ண்ணா! இதன் முதல் பாகங்கள் அத்தனையும் வீட்டில் ஒளித்தொளித்து பார்த்த சின்னவயசு ஞாபகம் வருது! எல்லாப் பாகங்களினது காமெடிகளில் என் பார்வையில் உச்சகட்ட காமெடி முதல் பாகத்தில் முதல் ஸீனா வாற அந்த ‘சாக்ஸ்’ காமெடிதான். Reunion முதல் ஸீன்ல கூட அதே ‘சாக்ஸ்’ காமெடி வரும் கவனிச்சீங்களா? மலரும் நினைவுப் பதிவு!!!நன்றி

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...