நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

21 Jump Street [2012]

folder

ப்ளாக் ஆரம்பிச்ச டிசம்பர் மாசம் 9 பதிவு. ஜனவரில 8. அப்புறம் 7, 5ன்னு படிப்படியா குறைந்து இப்ப ஜுன் மாசத்திற்கு 1 பதிவு. என்ன நடக்குது இங்க? ஆறு மாசத்துக்குள்ளாவா டயர்ட் ஆகிட்டோம்? (கைவசம் சரக்கில்லைங்கிறத இப்படித் தான் சமாளிக்கணும்) எடுத்துப் பார்க்கிற நல்ல  படம் எல்லாம் அனேகமா எங்காவது விமர்சனம் செஞ்சிருப்பதால், நாம எதுக்கு தேவையில்லாம வியர்வை சிந்தனும்னு icheckmoviesல செக் பண்ணிட்டு கீழே அண்மையில் பார்த்த படங்கள் டேபில் அந்த விமர்சனத்திற்கு லிங்க் கொடுத்துவிட்டு ஒதுங்கிடுவது வழக்கமாயிடுச்சு. இந்த ரேஞ்சுல போனா வௌங்கிடும். சரி 40வது பதிவுக்குள்ள போவோம்.


thumb11987 - 1991 இதே பெயரில் ஓடிய ஒரு பாப்புலர் தொலைக்காட்சி நாடகமாம். சின்னப்புள்ள மாதிரி இருக்கிற ஒரு போலீஸ் பாடசாலை, காலேஜ்களில்  சட்டவிரோதச் செயல்களைச் செய்யும் கும்பல்களை பாடசாலை மாணவர் போல சேர்ந்து கண்டுபிடிக்கும் கதை. இந்த நாடகத்திற்கு இப்போது அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பங்கு இருக்கிறது. அது வேறு யாரும் அல்ல … நம்ம ஜானி டெப் தான். இந்த நாடகத்தில் நடித்து அவருக்கு கிடைத்த Teen Idol பட்டம் தான் பின்னர், நிறையப் பேரி்ன் கண்கள் அவர் மேல் திரும்ப காரணமாக அமைந்தது. Edward Scissorhands படத்தின் ஸ்கிரிப்ட் இந்த நாடகம் நடித்திருந்த போது தான் கிடைத்ததாம். (ஜானி கண்கலங்கின மேட்டர் எல்லாம் டிம்மும் டெப்பும் தொடரில் படித்துக் கொள்ளவும்)

இந்தப் படமும் ரீமேக் என்று தெரிந்ததும் … சரி ஹாலிவுட்காரனுங்க காசை வீணாக்க ஐடியா பண்ணிட்டாங்கன்னு நினைச்சு பெரிசா எதுவும் எதிர்ப்பார்க்கவும் இல்லை. போதாக்குறைக்கு ட்ரெயிலர் வேறு “சீ” ரகத்திற்கு இருக்க ரைட்டு … படம் அம்பேல் தான்னு கம்ஃபர்ம் பண்ணியாச்சு. ஆனாலும் சில நேரங்களில் படு மொக்கையான ஒரு ட்ரெயிலரைப் பார்த்துவிட்டும், ஏதோ டவுன்லோட் பண்ணிய பாவத்துக்காக பார்த்து தொலைக்கிற படங்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்துவிடும் இல்லையா? 21 Jump Street அந்த வகையைச் சேர்ந்தது.


thumb2ஷ்மிட்டும் ஜென்கோவும் இரு துருவங்கள். ஷ்மிட் கொஞ்சம் மூளையைப் பாவிப்பவன், ஆனால் ஃபிஸிகல் என்று வரும்போது கொஞ்சம் தடுமாறும் ஒரு குண்டுப் பையன். ஜென்கோ இதற்கு நேர்மாறான கேஸ். பலசாலி … ஆனால் புத்திசாலித்தன்மை குறைவு. சுருக்கமா சொன்னா ஷ்மிட் ஒரு நெர்ட் (Nerd), ஜென்கோ ஒரு ஜொக்கி (Jockey). சாதாரணமா எல்லாப் ஹாலிவுட் படங்களிலும் வருவது போல இதிலும் ஹைஸ்கூல் காலத்தில் பிரச்சனைப்படுகிறார்கள்.

மீண்டும் சந்திக்கிறார்கள் … போலீஸ் அகெடமியில். ஆனால் இங்கு இருவருக்கும் ஒரு விஷயத்தில் நன்றாக ஒத்துப்போகிறது …. சொதப்புவது!! ஜென்கோ பரீட்சைகளிலும், ஷ்மிட் உடற்பயிற்சிகளிலும் சொதப்ப, இந்த சொதப்பல் இவர்கள் இருவருக்கிடையில் ஒரு நட்புப் பாலத்தை உருவாக்குகிறது. ஒரு வழியாக ஒருவருக்கொருவர் உதவி போலீஸும் ஆகிடறாங்க. சரி … இனி நம்ம ஆக்சன் கிங் அர்ஜுன் மாதிரி அவரைத் தவிர படத்துல இருக்கிற மற்ற எல்லாரையும் சுட்டுக் கொல்லப் போறாங்கண்ணு பார்த்தா …….

thumb5ரெண்டு பேரும் சைக்கிள்ஸ்ல ஒரு பார்க்ல ரவுண்ட்ஸ் போறாங்க. அவங்க டியுட்டி … மக்கள் அங்கிருக்கும் குளம் போன்ற பப்ளிக் ப்ளேஸ்ல ஒதுங்கி நாறடிக்காமல் பார்த்துக் கொள்வது. தற்செயலாக ஒரு போதைப் பொருள் விற்கும் ஒரு ரௌடிக் கும்பலைக் காணும் இவங்க ரெண்டு பேரும் அவர்களை கைது செய்யப் போக, அதுவும் சொதப்ப, எல்லாரும் தப்பிக்க, ஜென்கோ ஒருத்தனை மட்டும் எப்படியோ பிடித்துவிடுகிறான். சந்தோஷத்துடன் ஸ்டேசன் வரும் இவங்களுக்கு இன்ஸ்பெக்டர் டோஸ் மேல டோஸ். ஏன்னா கைது செய்யும் போது இங்கிலீஸ் படங்கள்ல எல்லாம் ஒரு வசனம் சொல்லுவாங்க தெரியும் தானே? பொதுவா ஒரு போலீஸ் கைது செய்யும் போது You have the right to remain silent …. blah blah blah ன்னு சில வசனங்களை சொல்லணும். இவங்க அதை சொல்ல மறந்துட்டாங்க.

உடனே தண்டனை … அனுப்பப்படும் டிவிஷனின் பெயர் 21 Jump Street. இவங்களுக்கு கேப்டன் டிக்சன் (இது பெயர் தான். ஒரே வசனம் தான்). அவர் கொடுக்கும் ப்ராஜெக்ட் … ஒரு ஹைஸ்கூலில் நடக்கும் ஒரு மாணவனின் மரணத்திற்கு காரணமான போதை வியாபாரத்தின் பின் இருக்கும் தலைகளைக் கண்டுபிடிப்பது. அதைக் கண்டுபிடிக்க ஸ்கூல் பசங்க போலிருக்கும் ( ???? ) இந்த இருவரையும் அங்கு அனுப்புகிறார்.

கதை வழக்கம் போலத் தானே போகுது அப்படின்னு நினைக்கிறப்போ … ஜென்கோ தவறுதலாக தமது விபரங்கள் அடங்கிய ஃபைலை மாற்றி வைத்துவிட அதன் பின் நடக்கும் கூத்துக்கள் சிரிப்பு மழை. இடையில் வரும் சின்னக் காதல், பிரிவு என சில மசாலா கலந்து இறுதியில் எப்படி அந்த போதைப் பொருள் கும்பலைக் கண்டுபிடித்தார்கள் என்பது மீதிப்படம்.



thumb4எனக்கு படத்தின் மிகப் பெரிய ஆச்சரியம் ஜென்கோவாக வரும் சானிங் டேட்டம் தான். Step Upவில் பார்த்த துள்ளலாட்ட டைலரா, G.I.Joeவில் பார்த்த ஆக்சன் ஹீரோவா, The Vowவில் பார்த்த charm பையனா இந்த காமெடிப்பீஸ் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு காமெடியில் விளையாடி விட்டார். அடுத்த படமும் காமெடியில் வந்தால் நல்லாயிருக்குமே எனத் தோன்ற வைத்துவிட்டார். ஜோனா ஹில்லுக்கு ஏற்கனவே அரைச்ச மாவையே மீண்டும் அரைக்கும் வேடம், அதாவது ஹைஸ்கூல் சூழலில் பழகிக் கொள்ள முயற்சிக்கும் வேடம். Superbad படத்தில் பார்த்தது போன்ற அதே விளையாட்டுத்தனமான பையனாக, டைமிங் வசனங்களால் காமெடி பண்ணும் வேலை. படத்தின் மற்ற கரெக்டர்கள் பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. ஏதோ … நடிச்சிருக்காங்க.

ஆஆஆ … சொல்ல மறந்துட்டேன். படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் ஒரு பிரபலம் வருகிறார். (யாருன்னு இப்பவே கெஸ் பண்ணியிருப்பீங்க) ஆனா படத்துல அவரு எப்ப வருவார், எதுக்கு வருவார்னு உங்களால கண்டுபிடிக்க முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவார்.

படத்தின் முக்கிய சக்ஸஸ், நாம ஒன்றை எதிர்பார்க்க அதற்கு மறுபக்கம் ப்ளேட்டை மாற்றிவிடுவது தான். அதனால் இன்னும் சுவாரஸ்யமாக படத்துடன் ஒன்ற முடிகிறது. படத்தில் சில க்ளீஷே காட்சிகள், மரண மொக்கைகள் இருந்தாலும், ஒன்றே முக்கால் மணி நேரம் படத்தை பார்த்து முடித்தபின் தெரியும் குறைகள் ஒன்றும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இருக்காது. பார்க்கும் நேரம் முழுவதும் காமெடி, கார் சேஸிங், துப்பாக்கிச்சூடு என வேகமாக நகர்வதால் ஹாஹாவ்வ்வ்வ் என கொட்டாவியும் எல்லாம் போகாது.

படம் பார்க்கப் போறீங்கன்னா கடைசியா ஒண்ணு சொல்றேன். காலேஜ் தீம் கதைகள்,  Dick Jokes, நல்ல காமெடிப் படங்கள், ஜோனா ஹில்லின் நடிப்பு இது எல்லாம் பிடிக்கும்னா பாருங்க. இல்லண்ணா இங்கேயே அப்பீட்டாகிக்கோங்க. அடுத்த பதிவில் சந்திக்கலாம்.


என் ஸ்கோர் – 68/100



படத்தின் ட்ரெயிலர்

ட்ரெயிலர் மொக்கையா இருக்கா ???

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

19 comments:

  1. எனக்கு பாஸ் இப்புடி தொலைக்காட்சி நாடகங்களை திரைப்படமாக்குறத கண்டாலே புடிக்காது. நான் அப்பீட் ஆகிடுறன். ரொம்ப நன்றிப்பா தேவையில்லாத டவுன்லோட் செலவு மிச்சம் ஆகிடிச்சு.

    ReplyDelete
  2. ஏற்கனவே இந்த படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தது இந்த ஸ்டில் பார்த்தவுடனே பார்க்கணும் என்றே தோணலை இப்ப உங்க விமர்சனம் நல்லா இருக்கும் என தோணவைக்குது படம் பாக்குறேன்........தொடர்ந்து விமர்சனம் எழுதுங்க நண்பா எல்லோரும் ஒரே மாதிரியே விமர்சனம் எழுதுவது இல்லை தமிழ் படம்மா ஒரே நாளில் பலரும் விமர்சனம் எழுத ஏற்கனவே எழுதிய படம்மாய் இருந்தாலும் பரவாயில்லை எழுதுங்கள்.....

    ReplyDelete
  3. பாஸ்,
    அடிக்கடி எழுதுங்க....இதுக்கு முன்னாடி யாராவது ஒரு படத்தை விமர்சனம் பண்ணி இருந்தாலும்..நீங்க உங்க ஸ்டைல்ல விமர்சனம் பண்ணுங்க...
    "21 Jump Street " படத்தை நானும் பார்த்தேன் பாஸ்...சுமாரான படம் தான்...ரொம்ப சரியாக விமர்சனம் எழுதி இருக்கேங்க...
    //சில க்ளீஷே காட்சிகள், மரண மொக்கைகள் இருந்தாலும், ஒன்றே முக்கால் மணி நேரம் படத்தை பார்த்து முடித்தபின் தெரியும் குறைகள் ஒன்றும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இருக்காது///
    ரொம்ப சரியாக சொல்லி இருக்கேங்க... கேபிள் சங்கர் மாதிரியே ரொம்ப சரியாக விமர்சனம் பன்னுறேங்க....

    ReplyDelete
  4. @Gobinath

    அப்ப விட்டுற வேண்டியது தான். அடுத்த பதிவில் சந்திப்போம்.

    ReplyDelete
  5. @ chinna malai, ராஜ்,

    அப்படீங்கறீங்க? சரி ... முயற்சி பண்றேன். சோம்பேறி ஆகலாம்னா விடமாட்டேங்கிறீங்களே?

    ReplyDelete
  6. ரைட்டு.. இனிமே அப்பீட்டாகாம அடிக்கடி எழுதனும் என்னா!
    படத்தில் வரும் அந்த பிரபல தலைக்காகவே படம் பார்க்கலாம்னு தோணுது!

    ReplyDelete
  7. மத்தவங்க எழுதிய படமாக இருந்தாலும்...உங்கள் பாணியில் எழுதுங்கள்.

    ReplyDelete
  8. பாஸ் உங்களோட review பார்த்துத்தான் படங்களை download பண்ணிக்கிட்டு இருக்கிறன். நிறுத்தீராதீங்கப்பா..... எல்லாம் ஒரு சுயநலம் தான்...

    ReplyDelete
  9. /ஆஆஆ … சொல்ல மறந்துட்டேன். படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் ஒரு பிரபலம் வருகிறார். (யாருன்னு இப்பவே கெஸ் பண்ணியிருப்பீங்க) ஆனா படத்துல அவரு எப்ப வருவார், எதுக்கு வருவார்னு உங்களால கண்டுபிடிக்க முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவார்.
    //

    யாரு ஜானி டெப்பா ????

    வர வர காமெடி நல்லா வருது போல :)

    ReplyDelete
  10. @JZ

    அட்வைஸ் பண்றவரும் கொஞ்சம் அதை ஃபாலோ பண்ணாலாமே? :)

    ReplyDelete
  11. @பனங்கொட்டை (Panangkoddai)

    நிசமாவா? ஏய் ... என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலயே? :)

    ReplyDelete
  12. @உலக சினிமா ரசிகன்

    சரி நண்பரே ... இனி கொஞ்சம் எழுதுவதை அதிகப்படுத்துகிறேன்.

    ReplyDelete
  13. @...αηαη∂....

    ரொம்ப நன்றி anand. என் மொக்கைகளையும் தாங்கும் இதயம் படைச்ச கொஞ்சம் பேர் இருக்காங்களேன்னு சந்தோஷமாக்கீது.

    ReplyDelete
  14. என்னா பாஸ் படத்த பூரா சொல்லிப்புட்டீங்க...இனிமே எங்க பார்க்க...:(

    ReplyDelete
  15. @சிட்டுக்குருவி

    மன்னிச்சு ... ஆனாலும் கதையில் மறைக்கிற அளவுக்கு எல்லாம் ட்விஸ்ட்டு எல்லாம் இல்லை. பார்க்கும்போதே தெரியும் கதை தான்.

    ReplyDelete
  16. எல்லோரும் மன்னிச்சுருங்கோ...பிளீஸ்..
    சரிவிகிதமான விமர்சனம்..இந்த படத்தை அப்பவே டவுன்லோடு போடும் போது பார்த்தேன்..மொக்கையா இருக்குமோனு பயந்துட்டு (நான் பாக்குற எல்லாமே மொக்கைதான்..இதுல ஏன் இன்னொரு மொக்கைய சேர்ப்பானேனு) விட்டுட்டேன்..நீங்க ரொம்ப அழகா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி பார்த்தேன்....ஆனால் சுமாரான ஒரு காமெடி படம் தான்..கொஞ்சம் பில்ட் அப் அதிகம்....படத்துல நிறைய காட்சி நல்ல இருந்தாலும்,சில காட்சிகள் மரண மொக்கைய.. சம கடுப்பு ....ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணாம பார்த்த கொஞ்சம் நல்ல தான் இருக்கும். விமர்சனம் அருமை.

    ReplyDelete
  18. Movie konjam Mokkai than..
    but unga writing super..

    கட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.

    http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html

    ReplyDelete
  19. வேலை பளு காரணமாக எந்த படமும் பார்க்க முடியவில்லை , இந்த வார இருதியிலாவது பார்க்கலாம என்று இருக்கிறேன் . நன்றி!!!

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...