நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Love Actually (2003) - 18+

folder


போனவாரம் நம்ம வீட்டுக்கு வந்திருந்த ஒரு பெரிசு என்கிட்ட இப்படித் தான் புலம்பிட்டு இருந்துச்சு. “என்ன உலகம்டா இது? எங்கப் பார்த்தாலும் சண்டை, வெட்டு குத்து.  மதவெறி, இனவெறி, மனுசனுக்கு மனுசன் பொறாமைப் பட்டுக்கிறானுங்க. பக்கத்து வீட்டுக்காரன் ஒரு சைக்கிள் வாங்கினா, தான் கடனுக்காச்சு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கனும்னு நினைக்கிறான். சுத்த மோசம்பா இந்த உலகம்”. இதெல்லாம் கேட்டதும் எனக்கும் வானம் பட சிம்பு மாதிரி ”என்னா வாழ்க்கடா”னு தோணிச்சு. ஆனா இந்தப் படம் பார்த்ததும் அந்த ஐடியா சுத்தமா காணாமப் போயிட்டுது.

இந்தப் படம் இந்த வரிகளுடன் தான் தொடங்குகிறது.

நாம் அனைவரும் இந்த உலகம் கொடூரமானது, பொறாமை மிக்கது என எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உற்றுக் கவனித்துப் பார்த்தால் எம்மைச் சுற்றி எவ்வளவு அன்பும் பாசமும் பரவி இருக்கிறது என்று தெரியும். அம்மா-குழந்தை, அப்பா-மகன், காதலர்கள், சகோதரர்கள், உறவினர் என்று பெரிதாக எடுத்துக்காட்டப்படாவிட்டாலும் எம்மைச் சுற்றி அன்பு இருப்பது நிச்சயம். செப்டம்பர் 11 அமெரிக்கக் கோபுரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டபின் சென்ற தொலைபேசி அழைப்புக்கள் கோபத்தினாலும், வெறுப்பாலும் எடுக்கப்பட்டவை அல்ல. அன்பாலும் பாசத்தாலும் மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்கள்



இந்த அன்பு என்பது பொதுவாக …. வெயிட் … டேய் வெண்ணை … நீயே லவ் பண்ண ஃபிகரு மாட்டாம பதிவெழுதி காலத்த ஓட்டிட்டு தானே இருக்க. மூடிட்டு மேட்டருக்கு வா.

தோ … போயிட்டேன்.



thumb3ஹாலிவுட் ரொமாண்டிக் காமெடிக்களில் ஒரு டைப் உண்டு. அதாவது நாலைந்து மேற்பட்ட கதைகளை பின்னிப் பிசைந்து சாம்பாராக்கி கடைசியில் ஒரு புள்ளியில் கொண்டு வந்து முடிப்பார்கள். New York I Love You, Valentine’s Day, New Years Eve போன்ற படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட இந்த ஃபோர்முலாவையே கையாண்டு இருக்கும்.

போதாக்குறைக்கு நடிக்கும் நடிகர்களுக்கும் அவங்கவுங்க ஸ்டேடஸிற்கு ஏற்ற மாதிரி டைம் ஒதுக்கவேண்டுமே? . இந்த மாதிரி பிரச்சினைகளாலேயே அனேகமான டைரக்டர்கள், இந்த ஏகப்பட்ட கதைகளைகளையும் குறிப்பிட்ட அந்த டைம் ஃப்ரேமிற்குள் முடிக்கமுடியாமல் திணறி அவசர அவசரமாக நாறடித்துவிடுவார்கள். இந்தப் படமும் அப்படியா?



லண்டன் நகரம். கிறிஸ்மஸ் சீசன். இந்த பிரிட்டிஷ்காரனுக்கு ஒரு பழக்கம் என்னன்னா இந்த கிறிஸ்மஸ் சீசன்ல தான் மனசுல இருக்குற லவ்வை கொட்டி உண்மைய சொல்ல நினைப்பான். (அப்போ அதுவரைக்கும்?) புதுவருட டைமில் மனதுக்கு பிடித்தவர்களுடன் இருப்பதில் அவனுக்கு ஒரு சுகம் (அவனுக்கு மட்டுமில்லை … எல்லாருக்கும் தானே).

thumb4இந்தப்படமும் கிட்டத்தட்ட 8-10 லவ் ஜோடிகளின் (மெமரி கொஞ்சம் வீக். ஹி ஹி) வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் கிறிஸ்மஸ் சீசனில் ஃபாலோ பண்ணுகிறது. கூடவே நாமும்.  சுருக்கமா மெயின் கரெக்டர்களைப் பார்ப்பதானால் …

மனைவி இறந்த சோகத்தில் மூக்கை சிந்திக்கொண்டிருக்கும் டேனியல், மற்றும் ஸ்கூலில் படிக்கும் ஒரு புள்ளய ஒன் சைட்டாக லவ்விக் கொண்டு என்ன செய்வதென தெரியாமல் முழிக்கும் மகன் சாம். அண்மையில் திருமணமான தன் நெருங்கிய நண்பன் பீட்டரின் மனைவி ஜுலியட் மீது உள்ள காதலால் தவிக்கும் மார்க். தன் சகோதரனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் கேர்ள்பிரண்ட்டால் மனம் வெறுத்து தனியே ஒரு வீட்டிற்கு செல்லும் ஜேமி, மற்றும் அங்கு வீட்டுவேலைகளைச் செய்ய வரும் ஒரேலியா. வயதாவதால் கிறிஸ்மஸ் சீசனில் ஒரு கடைசி ஹிட் பாடல் ஒன்றைக் கொடுக்க முயற்சிக்கும் பில் மற்றும் அவனின் மனேஜர் ஜோ. மனநிலை பாதிக்கப்பட்ட தம்பியால் தன் காதலிக்கும் கார்லுடன் நேரம் ஒதுக்கமுடியாமல் தடுமாறும் சாரா.

thumb6படமொன்றில் நிர்வாண செக்ஸ் காட்சிகளுக்காக டூப்பாக வரும் ஜோன் மற்றும் ஜுடிக்கிடையில் வளரும் காதல். தன் பிரிட்டிஷ் அக்சென்ட் மூலமாக பெண்களைக் கவர்ந்து லவ் பண்ணலாம் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா பயணமாகும் கொலின், தன் ஆபிஸில் வேலை செய்யும் மியா என்ற செக்ரட்டரியுடன் தன் மனைவி கரெனுக்கு தெரியாமல் ஒரு கனெக்சன் உருவாக்க முயற்சிக்கும் ஹாரி மற்றும் வீட்டுவேலைகளைக் கவனிக்க நியமிக்கப்படும் பணிப்பெண்ணான நாடலியுடன் உண்டாகும் காதலால் அமெரிக்க ஜனாதிபதியுடன் பிரச்சினையை இழுத்துக் கொள்ளத் துணியும் பிரிட்டனின் புதிய பிரதமரான டேவிட். (எல்லாரையும் கவர் பண்ணிட்டேனா) … ஆ … மற்றும் இடையில் கெஸ்ட் என்ட்ரி கொடுக்கும் ரோவன் அட்கின்ஸன் (Mr. Bean) மற்றும் சில நான் அறியா பிரபல நட்சத்திரங்கள்.

இம்புட்டு தாங்க கதை. ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்கள் போல இருக்கும் கதாபாத்திரங்களும் கதையும், நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவரின் கதையிலும் இன்னொருவரை சம்பந்தப்படுத்தி, இறுதியில் ஒரு வலை போல பின்னிவிடுவது க்யுட்.



thumb5ஆனா என்னதான் நடித்துக் கொடுத்துவிட்டாலும், இவ்வளவு பெரிய ஸ்டோரியை நாம எம்புட்டு நேரம் தான் பாக்குறது? அதனால இவ்ளோத்தையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அடக்க வேண்டிய பொறுப்பு விழுவது இயக்குனர் மற்றும் எடிட்டர் கையிலும் தான். ஆனால் இந்த விசயத்தில் நம்ம இயக்குனர் ரிசர்ட் கர்டிஸ் கில்லாடி. ரொம்பவும் போரடிக்காமல், பார்த்தது போன்ற காட்சிகளே திரும்ப வராமல் அவ்வளவு கதைகளையும் அழகாக வெறும் 130 நிமிடங்களுக்குள் செதுக்கியதற்கே இருவருக்கும் தனியாக ஒரு பாராட்டு கொடுக்கவேண்டும்.

படம் பார்க்கும்போது எனக்குத் தோன்றிய ஒரே பிரச்சினையும் மேலே சொன்னது தான். உண்மையில் இவ்வளவு கதைகளை இதற்குள் அடக்கவேண்டுமா? ஒரு மூன்று நான்கு கதைகளை தூக்கியிருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது அடியேனின் கருத்து. சில கதைகள் ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்து திடீரென காணாமல் போய் இறுதியில் திடீர் என்ட்ரி கொடுப்பது எல்லாம் தேவையில்லாத வேலை. Too many cooks spoil the soup!

ரொமாண்டிக் காமெடி வகையில் நான் பார்த்த ஓரளவு பர்ஃபெக்டான படம் என்றால் இதை கூறலாம். காரணம் என்ன தான் சின்னக் கிளைக் கதைகள் அதிகம், படம் நீளம் என்று குறைப்பட்டாலும் எல்லா நல்ல ரொமாண்டிக் படங்களும் காட்ட முயற்சிக்கும் அந்த ஃபீல் குட் உணர்வு இந்தப் படத்தில் வருவது நிச்சயம். 

thumb1நடிப்பு சூப்பர், பிரமாதம் என்று யார் பக்கமும் விரலை நீட்டிக் காட்டமுடியாது. எல்லாரும் பிரபல நட்சத்திரங்கள் (எனக்குத் தெரிந்த முகங்கள் Liam Neeson, Rown Atkinson, Colin Forth மற்றும் Chiwetel Ejiofor) ஆனால் இளம் பிரதமராக வரும் Hugh Grant இன் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் நாடலியிடம் வாலாட்ட முயற்சிக்கும் அமெரிக்கன் ஜனாதிபதியிடம் ப்ரஸ் மீட்டிங்கில் மறைமுகமாக சண்டையிழுக்கச் செல்லும் இடம் எல்லாம் நல்லாயிருந்தது. படம் முழுவதும் இது போன்ற அழகான சுவாரஸ்யமான இடங்கள் இருப்பதால் படம் பார்ப்பவர்களுக்கு ஏதாவது ஒரு இடம் அல்லது வசனம் கட்டாயம் பிடித்திருக்கும்.



மாயன்காரனுங்க இன்னும் உலகம் அழிய இன்னுமொரு அஞ்சாறு மாசம் தான் டைம் கொடுத்திருக்கானுங்க. அதுக்குள்ள இந்தப் படத்தைப் பார்த்து காதல் செய்யத் தொடங்குங்க. மனசுக்குப் புடிச்சவங்க கூட நேரம் ஒதுக்கி செலவளிங்க.


Life is good when Love is actually all around !!!



மார்க்கு – 87/100





படத்திற்கான ட்ரெயிலர்



யாருக்காச்சு தோணியிருக்குமே? இவ்வளவு நல்ல படம் ஏன் +18ன்னு போட்டிருக்குன்னு? அதாவது ஜோன் மற்றும் ஜுடியின் செக்ஸ் ஸ்டண்ஸினால் மட்டும் இந்த ரேடிங்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

26 comments:

  1. கலக்கல் நண்பா! பெயர்கள்தான் மிஸ்ஸாகிக்கிட்டேயிருக்கே தவிர, விமர்சனத்தை மிகவும் ரசிச்சேன்..
    இந்த ஃபெப்ரவரியில் தான் தீவிரமாக சில ரொமான்டிக் படங்கள் தேடியபோது, இதைப் பற்றி அறிந்தேன்.. ஆனால் மிஸ் பண்ணிட்டேன்.. கதை நன்றாக இருக்கும் போலத் தெரிவதால் அவசியம் பார்க்கிறேன்!!

    * "ஜந்தாறு மாதங்களில் காதலிப்பது எப்படி?"ன்னு உங்களை மாதிரி அனுபவசாலிகள் ஒரு விளக்கப் புத்தகம் எழுதித் தரலாமே..

    ReplyDelete
  2. சரியான இடத்தில் "எங்கேயும் காதல்" பாடலை புகுத்தியது நல்ல ரசனை! செம செம நீங்கள் சொல்லும் படத்தின் கதையை பார்த்தாலே நம்ம ஐந்தறிவுக்கு இந்த படம் புரியாதுன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  3. //மாயன்காரனுங்க இன்னும் உலகம் அழிய இன்னுமொரு அஞ்சாறு மாசம் தான் டைம் கொடுத்திருக்கானுங்க. அதுக்குள்ள இந்தப் படத்தைப் பார்த்து காதல் செய்யத் தொடங்குங்க. மனசுக்குப் புடிச்சவங்க கூட நேரம் ஒதுக்கி செலவளிங்க.//

    அவ்வ்வ்வ் அரே பகவான் இன்னும் பிகரே செட் ஆகல்லயே!!

    ReplyDelete
  4. @JZ

    தம்பி ... நீங்க இந்த வரிகளை வாசிக்கலயா?

    //நீயே லவ் பண்ண ஃபிகரு மாட்டாம பதிவெழுதி காலத்த ஓட்டிட்டு தானே இருக்க. மூடிட்டு மேட்டருக்கு வா.//

    எடுத்துப் பாருங்க. நிச்சயம் பிடிக்கும்.

    ReplyDelete
  5. @Rizi

    கிளைக்கதைகள் அதிகமென்றாலும் எல்லாம் தெளிவாக அழகாக பின்னப்பட்டிருக்கிறது. நிச்சயம் புரியும்.

    ReplyDelete
  6. காதலும்...காதல் படங்கள் பற்றிய பதிவுகளும் அலுப்பதேயில்லை.

    ReplyDelete
  7. @உலக சினிமா ரசிகன்

    நிச்சயமாக. த்ரில்லர்கள் தவிர்த்து எனக்கு அதிகம் பிடித்த ஜென்டர் இந்த ரொமாண்டிக் காமெடி தான்.

    ReplyDelete
  8. செம படம் மாதிரி தெரியுது...படத்தை ரொம்ப ரொமாண்டிக்கா விமர்சனம் பண்ணி இருக்கேங்க...ரொம்பவே ரசித்தேன்..
    ஐயோ இன்னும் அஞ்சு மாசத்துல உலகம் அழிஞ்சு போயிரும்மா.. மாயன் குரூப் நல்லா பீதியை கிளப்பறாங்கய்யா.. :)

    ReplyDelete
  9. @ராஜ்

    தொடர்ந்து தரும் சப்போர்ட்டுக்கு மிகவும் நன்றி ராஜ்.

    ம்ம்ம்ம் ... இன்னும் 285,540 (இந்த நிமிடத்திலிருந்து) நிமிடங்களே உள்ளன. (நம்பினால் மட்டும்)

    ReplyDelete
  10. நல்லா இருக்கும் போல இன்னிக்கே பார்த்துட வேண்டியது தான் விமர்சனமும் அருமை

    ReplyDelete
  11. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்..வேற வேலையில பிஸியா இருந்ததுனால பிளாகிங்க் பக்க வரவில்லை..
    விமர்சனம் வழக்கம் போல அருமை..தங்களது தனி ஸ்டைலில் அமைந்துள்ளது சிறப்பு...
    படம் தொடங்கும் வரிகளை தமிழில் படித்ததும் ஏதோ மனதில் சுட்டது..

    @@ மாயன்காரனுங்க இன்னும் உலகம் அழிய இன்னுமொரு அஞ்சாறு மாசம் தான் டைம் கொடுத்திருக்கானுங்க. அதுக்குள்ள இந்தப் படத்தைப் பார்த்து காதல் செய்யத் தொடங்குங்க. மனசுக்குப் புடிச்சவங்க கூட நேரம் ஒதுக்கி செலவளிங்க.@@
    இந்த வரிகள் நெஞ்சை அதிர வைத்தது...ரொம்ப நாளா இந்த மேட்டரை மறந்துட்டேனுங்க..ஞாபகப்படுத்தி கண்ணை கலங்க வச்சிட்டீங்க..

    ஆக மொத்ததில் பதிவு சூப்பர்..படம் பார்க்க போறேனுங்க..நன்றிங்க/.

    ReplyDelete
  12. There it goes.....:)

    என்னோட லிஸ்ட்ல இருக்கும் படம். இதுக்கு விமர்சனம் எழுதணும்னு 5 வருஷமா முக்குறேன். ஆனா மறந்து மறந்து போயிடும்.

    இந்தப் படத்தோட ப்ரோபோசிங் ஸீன் என்னோட ஆல் டைம் ஃபேவரைட்ஸ்ல ஒண்ணு. அடிச்சி பட்டைய கிளப்புங்க. என மனதுக்கு மிக நெருக்கமான படங்களில் ஒன்று.

    ReplyDelete
  13. அதுல நிறைய ப்ரோபோசிங் சீன்கள் வரும்... அதுல எது உங்களோட பேவரிட்? என்னக்கு அந்த writer episode தான். ரெண்டு பேரும் தங்களுக்கு தெரியாத மொழியில் ப்ரொபோஸ் செய்து கொள்வது மிகவும் நெகிழ்ச்சியான காட்சி. No language for love...:-)

    ReplyDelete
  14. @chinna malai

    பார்த்துவிட்டு நிச்சயம் வந்து சொல்லுங்க.

    ReplyDelete
  15. @Kumaran

    ஏன் மனசு சுட்டது? கண் கலங்க வச்சதுக்கு மன்னிக்கவும். ஆனாலும் சொல்லவேண்டியதை சொல்லித் தானே ஆகணும்? சீ்க்கிரம் எடுத்துப் பார்த்துருங்க.

    ReplyDelete
  16. @Rajesh Da Scorp

    ஆகா ... முந்திக்கிட்டதுக்கு மன்னிச்சு ... கட்டாயம் நீங்களும் எழுதுங்க தல. என்னோட வியுவ விட உங்க நடையில் செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

    வந்து ஒரு கமெண்ட் போட்டதுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. @Arunachalam

    அந்த ரைடர் லவ் ப்ரபோசல் நல்லாயிருந்தாலும், கார்ட்டுகளை வைத்து மார்க் தன் ஃப்ரெண்டின் மனைவி ஜுலியட்டுக்கு காதலை சொல்லும் விதம் செம க்யுட். ஐ ஜஸ்ட் லவ் இட்.

    ReplyDelete
  18. காதலைபற்றியா???? கண்டிப்பாக பார்க்கிறேன்.

    ”டேய் வெண்ணை … நீயே லவ் பண்ண ஃபிகரு மாட்டாம பதிவெழுதி காலத்த ஓட்டிட்டு தானே இருக்க. மூடிட்டு மேட்டருக்கு வா.” நம்மள மாதிரியே நிறையப்பேர் இருக்காங்களோ?

    ReplyDelete
  19. அடடா.., ரொம்ப நாளா சிஸ்டம்ல சும்மாவே இருக்கும் படம்.., உங்க விமர்சனத்த பாத்தா நல்லா இருக்கும் போல சீக்கிரம் பாக்கனும்.
    :)

    ReplyDelete
  20. @...αηαη∂....

    விட்றாதீங்க. சீக்கிரம் பாருங்க பாஸ்.

    ReplyDelete
  21. என்ன தல, பதிவெழுதி ரொம்ப நாள் ஆன மாதிரி தெரியுது! அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங்...

    ReplyDelete
  22. நான் இப்போது படம் பார்ப்பதில்லை ஆனால் விமர்சனம் தூண்டுகின்றது ஆனால் அடுத்த கிறீஸ்மஸ் வரமுன் பார்த்துவிடுவோம்!ம்ம்

    ReplyDelete
  23. பாஸ்,
    என்ன ஆச்சு..ரொம்ப நாளா பதிவை காணம்.ரொம்ப வேலையோ..??

    ReplyDelete
  24. எப்பயோ உங்க விமர்சனத படிச்சிட்டேன்.....கமெண்ட் பண்ணல....
    நல்ல ரொமாண்டிக் காமெடி திரைப்படம்.... அதற்கு ஏற்றார் போல் ஒரு சிறந்த விமர்சனம்.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...