நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Going Postal (2010)

Folder

டெரி ப்ரெட்சட் (Terry Prachett) யார்னு தெரியுமா? அட …. எனக்கும் யார்னு தெரியாமத் தான் இருந்துச்சு. ஊர் சுத்தினா வீட்டுல திட்டுறாங்களேன்னு அப்படியே கொஞ்சம் பதிவுலகத்தை சுத்தும்போது நம்ம “வேலிகள் தொலைத்த படலை” ஓனர் ஜே.கே ஒரு பதிவில் இவரின் மோர்ட் எனும் புத்தகம் பற்றிச் சொல்லியிருந்தார். அத அப்படியே விடாம கொஞ்சம் ஆராய்ந்து பார்த்ததன் விளைவு தான் இன்றைய பதிவு. அவரு சொன்னதென்னமோ வேறொரு புத்தகம் பற்றித் தான். நமக்கும் புக்ஸ் வாசிக்க இன்ட்ரெஸ்ட் இருந்தாலும் டைம் இல்லியே. அதான் பேசாம படத்தப் பார்த்திருவோம்னு எடுத்துப் பார்த்திட்டேன். திட்டுறவுங்க அவரு சைட்டுல போய் என்ன வேணா பண்ணிக்குங்க.



முதல்ல ப்ரெட்சட்டைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். டிஸ்க்வேர்ல்ட் (Discworld) என்றொரு தொடர். மொத்தம் 39 நாவல்கள். இக்கதைகள் எல்லாம் இடம்பெறுவது ஒரு ராட்சச ஆமையின் மேல் நிற்கும் நான்கு யானைகளின் முதுகில் பேலண்ஸ் பண்ணி இருக்கும் ஒரு உலகில்.  டோல்கின், ஷேக்ஸ்பியர் என்று பல பிரபலங்களின் எழுத்துக்களை காமெடிக்காகவும், இன்ஸ்பிரேஷனாகவும் எடுத்து எழுதிய இந்த சீரீஸ் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 55மில்லியன் பிரதிகளை விற்றுவிட்டதாம்.

thumb1

                     
இதுவரைக்கும் இந்த நாவல்களில் மூன்று கதைகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. Colors of Magic, Hogfather(ரெண்டும் இருக்கு. இன்னும் பார்க்கல) அப்பறம் இந்தப்படம். டெக்னிகலி ஸ்பீக்கிங் … இது ஒரு படமே அல்ல (அடப் போய்யா … நாம கிளம்புறோம்). இருங்க … இது யு.கே.வின் Sky1 தொலைக்காட்சியில் இரு பாகமாக வெளியிடப்பட்ட ஒரு … ஒரு … மினித்தொடர். ஐயய்யே … படத்தப் பற்றி பார்க்கனும்னு வந்துட்டு வேற எங்கேயோ கதை டைவர்ட் ஆகுதே. சரி … நாம விமர்சனத்துக்குள்ள போவோம்.



Going Postal-fanartகொஞ்சம் ஷு பொலிஷையும், ஒரு வயதான சொறிப்பிடித்த குதிரையையும் விட்டுவிட்டுச் இறந்து போகும் பெற்றோர்கள். ஒரு ரூபாவுடன் சிவாஜி படத்தில் ரஜினி ஆரம்பிப்பது போல பொலிஷையும் மனத்தைரியத்தையும் வைத்துக்கொண்டு சிறு ஏமாற்று வேலைகளை செய்ய ஆரம்பிப்பவன் தான் இந்தப் பதிவின் ஹீரோ மொயிஸ்ட் வொன் லட்விக். முதலில் சொறிக் குதிரைக்கு கறுப்பு பொலிஷ் பூசி, ஒரு தரமான குதிரையாக காட்டி விற்று பிழைப்பை நடத்தும் லட்விக் பின்னர் கொஞ்ச கொஞ்சமாக புத்தகத்தில் இருக்கும் அனைத்துவிதமான மோசடிகளையும் செய்ய ஆரம்பிக்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான். ஆனாப் பாருங்க … ஒரு நாள் வசமா காவலாளிகளிடம் மாட்டிக் கொண்டான். நிரூபிக்கக்கூடிய குற்றங்கள் எக்கச்சக்கமாக இருக்க, யு ஆர் டு பி எக்ஸிக்யுட்டட் எனக் கோர்ட் உத்தரவிடுகிறது. தூக்கிலும் போட்டுவிடுகிறார்கள்.

சவப்பெட்டிக்குள் திடீரென முழித்துப் பார்க்கும் வொன், தான் ஒரு அறையில் இன்னொரு மனிதருடன் இருப்பதை உணர்கிறான். அவர் லோர்ட் வெட்டினாரி (கெட்ட வார்த்தை இல்லைங்க). அவர் வொன்னுக்கு இரண்டு சாய்ஸ் அளிக்கிறார். ஒன்று மூடியிருக்கும் நகரத்தின் போஸ்ட் ஆபிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துவது, இல்லை நீண்ட கொடிய மரணம். உயிர் வாழ விரும்புபவனுக்கு தான் இதில் சாய்ஸே இல்லையே. வேண்டாவெறுப்பாக போஸ்ட் ஆபிஸ் வேலையை ஏற்றுக் கொள்கிறான் ... பின்னர் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில். அவனுக்கு பரோல் ஆபிசராக ஒரு களியால் செய்த ஒரு உருவம் (Golem). இந்த புதிய போஸ்ட்மாஸ்டர் பதவி பிடிக்காத ஒரே ஜென்மம் வொன் மட்டும் அல்ல. க்ளாக்ஸ் எனப்படும் ஒரு புதிய தகவல் தொடர்பு வலையமைப்பு ஒன்றை நடத்திவரும் ரீச்சர் கில்ட்டும் தான்.

going-postalதபாலகத்திற்கு சென்று பார்க்கும் வொன்னை வரவேற்பது, அவனின் இரண்டு உதவியாளர்கள் மற்றும் கட்டிடம் முழுவதும் வருடக்கணக்கில் அனுப்பப்படாமல் நிறைந்திருக்கும் கோடிக்கணக்கான தபால்கள். காரணம், இதற்கு முன் இருந்த போஸ்ட்மாஸ்டர்கள் மர்மமாக கொலை செய்யப்படுவது தான்.


அங்கிருந்து தப்பித்துச் செல்லும் வொன்னை விடாமல் துரத்தி வந்து மீண்டும் தபால் நிலைய வேலையில் தக்கவைத்துக் கொள்வதே கொலம்மின் வேலை. ஆகவே அதனிடம் இருந்து தப்பிக்கும் முறையைக் கேட்க கொலம்களைத் தயாரிக்கும் இடத்திற்குச் செல்கிறான் வொன். அங்கு அவனுக்கு அடோரா பெல் எனப்படும் பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. அவளுடன் மெல்லக் காதலில் விழுகிறான் வொன்.

இரவு வேளைகளில் தனியாக இருக்கும் வொன்னிற்கு அங்கு குவிந்திருக்கும் தபால்கள் அவன் முன்பு மோசடிகளில் ஏமாற்றியபின் ஏமாற்றப்பட்டவர்களினதும், அவர்களது குடும்பத்தினர் சந்தித்த சிக்கல்களையும் எடுத்துக் காட்டுகின்றன. அதில் அடோராவின் குடும்பமும் அடங்கும். உண்மையில் அடோராவின் தந்தைக்கு சொந்தமானதே க்ளாக்ஸ் சிஸ்டம். வொன்னின் மோசடியில் சிக்கி பண நெருக்கடி காரணமாக மரணத்தைச் சந்திக்கும் அவருக்கு பின்னர் ரீச்சர் கில்ட் தலைமைப் பொறுப்பை ஏற்கிறான். இது தெரியவந்து அடோராவிடம் வொன் உண்மையைச் சொல்லும் கட்டத்தில் தபால் நிலையத்திற்கு யாரோ தீ வைத்துவிட, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், உள்ளே சிக்கியிருக்கும் உதவியாளனைக் காப்பாற்ற உள்ளே செல்கிறான் வொன். உள்ளே பான்ஷீ எனப்படும் ஒரு வௌவால் மனிதனை சந்திக்கும் போது, அவனுக்கு ரீச்சர் கில்ட் பற்றிய உண்மைகள் தெரியவருகிறது. அதாவது போட்டி அதிகமாகிவிடும் என்பதால் பான்ஷீயை விட்டு பழைய போஸ்ட் மாஸ்டர்களைக் கொல்வது ரீச்சர் தான்.

going_postal_movie_sky1_2தபால் நிலையம் எரிந்துவிட, மக்கள் அனைவரும் க்ளாக்ஸ் சிஸ்டத்தை நாடுகிறார்கள். ஆனால் வொன் தான் மோசடிகளில் சம்பாதித்து ஒழித்து வைத்த பணத்தை கடவுள் கனவில் காட்டியது போல எடுத்து மீண்டும் போஸ்ட் ஆபிஸை கட்டியெழுப்புகிறான். அத்தோடு ஸ்டாம்ப்ஸ் சிஸ்டத்தையும் கண்டுபிடித்து அவற்றின் மூலம் தபால்மூல வருமானத்தையும் அதிகரிக்கிறான். அதே சமயம் அடோராவுக்கு பழைய போஸ்ட் மாஸ்டர்கள் , மற்றும் அவளின் அண்ணனின் மரணத்திற்கு காரணம் ரீச்சர் என்ற ஆதாரங்கள் கிடைக்க அவள் க்ளாக்ஸ் நெட்வொர்க்கை உடைக்க ஹேக்கர்ஸ் க்ரூப் ஒன்றுடன் முயற்சிக்கிறாள்.

அது பலனளிக்காத கட்டத்தில் இப்பொழுது யாருடைய சேவை சிறந்தது என்று மக்களுக்கு எடுத்துக் காட்ட கில்ட்டுக்கு போட்டி ஒன்றிற்கு சவால் விடுகிறான் வொன். அதன் பின் என்ன நடந்தது என்பதை இந்த படு சுவாரஸ்யமான இரண்டு பாக தொடரை டவுன்லோட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். (ரொம்ப குழப்பிட்டேனா?)



டெரி ப்ரெட்சட்டின் கதைகள் பற்றி ஒன்றுமே தெரியாத காரணத்தினால் இதைப் பற்றி பெரிதாக ஆராயத் தேவை இல்லை. இந்தப்படம் பார்க்க புத்தகங்களை வாசித்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் ஒரு புத்தகத்தில் இருப்பதை இரண்டு எபிசோடுகளுக்குள் ரொம்ப மெதுவாகவும் இல்லாமல், வேகமாகவும் நகர்த்தாமல் திரைக்கதை அமைந்திருப்பது ஒரு ப்ளஸ். என்னைப் போல முதல் முறை பார்ப்பவர்களுக்கும் கதை சுவாரஸ்யமாகவே இருக்கும்.

ஒன்றரை மணித்தியாலப்படி இரண்டு எபிசோட். மேத்ஸ்ல வீக்கானவங்களுக்கு சொல்றதுன்னா மூணு மணி நேரம் (டேய் டேய்). பெரிய திரைப்பட ரேஞ்சுக்கு எல்லாம் பிரமாண்டம் இல்லாவிட்டாலும் ஒரு தொலைக்காட்சி சீரீஸிற்கு என்ன தேவையோ, அந்த அளவிற்கு காட்டியிருக்காங்க. நகரத்திற்கான செட் எல்லாம் பிரமாதம். ஆனால் படத்தின் பெரும்பகுதி கொஞ்சம் இருட்டில் நடப்பது போல டிம் லைட்டிங்கில் எடுத்தது போல தெரிந்தது. அவுட்-டோர் ஷாட்ஸில் இயற்கை வெளிச்சத்தின் பங்களிப்பு இதில் நன்றாக தெரியும்.

ஆனால் செட், சினிமேட்டோகிராபி என்பதை விட படத்தை தூக்கி நிறுத்துவது நடிப்புத் தான். நடிக்கிறவங்க எல்லாருமே ப்ரிட்டன் தொலைக்காட்சியில் வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் என்பதால் மட்டமான நடிப்பு என்று சொல்வதற்கில்லை. நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தெரிவு தான்.

புத்தகம், கதை என்று ஆராயாமல் ஒரு சாதாரண என்டர்டெயினர் ஒன்றைப் பார்ப்பது போல எடுத்துக்கொள்ளுங்கள்.


மார்க்கு – 78/100


ட்ரெயிலர்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

25 comments:

  1. நல்லாருக்கு விமர்சனம்..அழகா எழுதி இருக்கீங்க நண்பா..வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி/

    ReplyDelete
  2. @Kumaran

    வாங்க குமரன். கமெண்ட்டுக்கு நன்றி.

    பதிவு எப்போ?

    ReplyDelete
  3. இன்னும் ரெண்டு நாட்கள் ஆகும் நண்பா..அப்புறம் பார்க்கலாம்..

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  5. கதையோட ப்ளாட் ரொம்ப நல்லா இருக்கு பாஸ்....நீங்க கதையா விவரிச்ச விதம் ரொம்ப அருமை..முழு சீரியல் பார்த்த திருப்தி...
    வெள்ளைக்காரன் மட்டும் தான் இந்த மாதிரி டிவி சீரியல் எல்லாம் எடுப்பான்...ஏற்கனவே கொஞ்சம் சீரியல்கள் டவுன்லோட் பண்ணி வச்சு இருக்கேன். அதை பார்த்த அப்புறம் இதை கண்டிப்பா பார்க்கிறேன்..

    ReplyDelete
  6. விமர்சனம் அருமை நண்பரே ஆனால் ரொம்ப குழம்பிட்டேன்...முதல் சிறிது நேரம் படித்த உடனே படத்தை பார்க்க ஆர்வம் தூண்டியது....

    ReplyDelete
  7. @ராஜ்

    என்ன சீரியல்ஸ்னு சொல்ல முடியுமா?

    நான் இப்போ Friends S09, Game of Thrones S02, Two and a Half Men s02 பாத்துட்டு இருக்கேன். Lost சீரிஸ் அடுத்ததா பார்க்க ஐடியா இருக்கு.

    ReplyDelete
  8. @chinna malai

    ஏன் குழப்பம்? எங்கே குழப்பம்?

    ReplyDelete
  9. I am Sorry Bro. I am using your Reviews to chose the movies to watch. Great Reviews Bro. Keep it up.

    ReplyDelete
  10. கதையை நல்லா சொல்லியிருக்கீங்க நண்பா.. நேரம் வரும்போது பார்க்க ட்ரை பண்றேன்! நன்றி!

    ReplyDelete
  11. @chinna malai

    பாஸ் ... உங்க சைட் லோட் ஆகுதில்லையே. பதிவை காணோம். ஓட்டுப்பட்டை மட்டும் தெரியுது.

    ReplyDelete
  12. @JZ

    வாங்க JZ. நேரமிருக்கும் போது ஒன்றரை மணி நேரப்படி ரெண்டு எபிசோடையும் பிரித்துப் பாருங்க.

    ReplyDelete
  13. @ரசிகரே ... அழகான விமர்சனம் ..

    ஆனா டெர்ரி ப்ரச்சட்டை கட்டாயம் நீங்க வாசிக்கோனும் .. அவர் எழுத்தில் இருக்கும் சுவாரசியமும் ஒருவித நக்கல் கலந்த நளினமும், கடவுள் என்ற விஷயத்தை அவர் டிஸ்க் வேர்ல்ட் மூலம் காட்டுவதில் உள்ள நையாண்டியும் (அவர் சீரியஸா தான் சொல்லுவார்) வாசிச்சால் மாத்திரமே கிடைக்கும் என்பது என் எண்ணம்!

    அதைவிட, டிஸ்க் வோர்ல்ட், இறப்பு(எமன்) தானே கட்டியிருக்கும் மாளிகை .. அங்கே எல்லாமே கருப்பு ... நாளை விதைக்கப்போகும் விதையை இன்றே அறுவடை செய்யும் விளைநிலங்கள். ஆக நேற்று அரிசி சாப்பிட்டால் இன்று நெல்லு விதைக்கவேண்டும் :) குழப்புகிறதா? எனக்கு இருபது நாள் எடுத்தது வாசித்துமுடிக்க .. சில பக்கங்கள் திரும்ப திரும்ப வாசித்தாலும் புரியவில்லை .. கிரஸ்டாபர் நோலன் தேவலாம்!

    மொர்ட் நாவல் விமர்சனம் ஒருமுறை வியாழ மாற்றத்தில் எழுதியிருக்கிறேன்..

    http://www.padalay.com/p/mort.html

    ReplyDelete
  14. @ஜேகே

    இப்போ கேம் ஒவ் த்ரோன்ஸ் சீரீஸை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அது முடிந்ததும் டிஸ்க்வேர்ல்ட் தொடங்கலாம். ஆனால் 33 கதைகள். வாசித்து முடிக்கும்போது தலை நரைத்துவிடும் போலயிருக்கிறதே. :)

    ReplyDelete
  15. @ஹாலிவுட்ரசிகன்

    அது சீரிஸ் என்றாலும் கதைக்கு கதை தொடர்பில்லை. ஒவ்வொரு கதையிலும் டிஸ்க் வோர்ல்டை அறிமுகப்படுத்துகிறார். எல்லாவற்றையும் வாசிக்கதேவையில்லை.

    Mort வாசியுங்கள் .. பிடித்தால் Small Gods வாங்குங்கள் .. அதற்கு மேல் ஹன்சிகா ஸ்ருதி என்று வேறு எங்காவது தாவ வேண்டியது தான் .. ஒரே ஆளு எதுக்கு? :)

    ReplyDelete
  16. அழகான விமர்சனம் ...கண்டிப்பா பார்க்கிறேன்...

    ReplyDelete
  17. ஒரு குழப்பமும் இல்லை இப்போ எல்லாம் தெளிவு மெதுவாய் படித்து தெரிந்து கொண்டேன் விமர்சனம் ரொம்ப அருமை...

    ReplyDelete
  18. நண்பா இப்போதும் முன்பை போல் தளம் லோட் ஆகுதா....

    ReplyDelete
  19. @chinna malai

    இப்போ எல்லாம் கரெக்டா லோட் ஆகுது.

    ReplyDelete
  20. விமர்சனம் மிக அருமை.
    எப்பவோ படிச்சுட்டேன் டைம் கிடைக்கலை அப்போ என்னக்கு கமெண்ட் பண்றதுக்கு... இப்ப தான் டைம் கிடைத்தது. வித்தாயசம் பண்றீங்க.... கலக்குங்க..

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...