நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Deja Vu [2006]

deja_vu

ஏதாச்சு ஒரு விஷயத்தை பார்க்கும்போது அல்லது ஒரு சம்பவம் நம்மைச் சுற்றி நடக்கும்போது, அது ஏற்கனவே நமக்கு நடந்தது/பார்த்தது போன்று ஒரு அனுபவம் உங்களுக்கு எப்பயாச்சு நடந்திருக்கலாம். ஆனால் சரியா அந்த  டைம்ல அது மைண்ட்ல க்ளியரா இருக்காது. நம்மள மாதிரி உலகசினிமா பார்ப்பவங்களுக்கு இந்தியத் திரைப்படங்கள் பார்க்கும் போது இது மாதிரி அடிக்கடி தோணும். ( இந்தியசினிமாவுக்கு உள்ள ஒரு ஷ்பெசாலிட்டி ) இந்த கான்செப்டை வச்சுகிட்டு 2006ல் வெளிவந்த ஆக்ஷன் படம் தான் Deja Vu.



184725__dejavu_lநியு ஓர்லியன்ஸ் படகுத்துறையில் இருந்து கிட்டத்தட்ட 300 நேவி ஆபிசர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொண்டாட்டத்திற்காக ஒரு சிறு கப்பலில் கிளம்புவதுடன் படம் தொடங்குகின்றது. படகு கிளம்பி சிறிது நேரத்தில் அதில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கார் தீப்பிடிக்க, படகு வெடித்து சிதறுகிறது.

கொஞ்ச நேரத்தில் இதற்குக் காரணமான தீவிரவாதக் கும்பலை கண்டுபிடிக்க என்ட்ரியாகிறார் கேப்டன் விஜயகாந்த் … ஹையோ ஹையோ … ஏஜெண்ட் டக் கார்லின். வந்து சுற்றிமுற்றி பார்க்கிறவருக்கு இறந்து கரையொதுங்கிய க்ளெயார் என்ற ஒரு பெண்ணின் உடலையும் பார்த்து அவளைப் பற்றி விசாரிக்கச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது. அந்தப் பெண்ணின் உடல் குண்டுவெடிப்பிற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்பே கரையொதுங்கிவிட்டதால் அவளின் இறப்பிற்கும், குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தம் இருக்கிறது என டக் நினைக்கிறான். அவளைக் கொன்றவனைக் கண்டுபிடித்தால் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களைப் பிடிக்கலாம் என்பது டக்கின் எண்ணம்.

11தொடர்ந்து விசாரணை செய்யும் டக்கிற்கு இன்னும் குழப்பமான க்ளுக்கள் கிடைக்க, ஒரு கட்டத்தில் FBIயில் பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் ஒரு இளம் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்கிறான். “ஸ்நோ வைட்” என்ற ஒரு ப்ராஜெக்டில் ஈடுபட்டிருக்கும் அவர்கள், நேரம் என்ற பரிமாணத்தை வளைத்து நெளித்து என்னேன்னவோ பண்ணி இறந்தகாலத்தில் கடந்த மூன்று நாட்களுக்குள் நடந்த எந்த விடயத்தையும் திரையில் லைவா பார்க்க முடியும் என்று சொல்றாங்க. இந்த ப்ராஜெக்ட் மூலமாக எப்படி அவர்கள் க்ளெயாரை ட்ராக் பண்ணி கொலையாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதெல்லாம் நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க.



deja_vu_5சிறு வயதில் இருந்தே க்ரீக் மித்தாலஜி போல எனக்கு பிடித்த இன்னொரு சப்ஜெக்ட் டைம் ட்ராவல். படங்களில் அதிகம் ரசித்துப் பார்ப்பது அனிமேஷன் … பின்னர் நல்ல கதையுடன் கூடிய ஆக்ஷன் படங்கள். டேஜா வு இந்த ரெண்டு ஏரியாவையும் மிக்ஸ் பண்ணி கலக்கியிருக்கு. ஹீரோயினைக் காப்பாற்றும் ஹீரோ என்ற சிம்பிள் கான்செப்டை வைத்துக் கொண்டு அழகான ஒரு ஃபிக்ஷனைப் பின்னியிருக்காங்க.

என்னதான் அப்படி புதுசா இருக்கு? வழக்கமான கொலை இன்வெஸ்டிகேசன் படம் தான் பாத்துட்டு இருக்கோமான்னு நினைக்கிறப்போவே படம் டைம் ட்ராவல், சடன் ட்விஸ்ட்ன்னு ட்ராக் மாறிவிடுவதால், எனக்கு ஒரு டேஜா வு எக்ஸ்பீரியன்ஸும் வரல. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வழக்கமான ஹாலிவுட் மசாலா தான். ஆனால் இன்ட்ரெஸ்டிங்.

கதையில் எல்லாம் சயின்ஸ் ஃபிக்ஷனா இருந்தும், ஓரளவு நம்பக்கூடிய வகையில் டைம் ட்ராவலை கையாண்டு இருக்காங்க. அது ஏன் நடக்குது, இதுல அப்படி என்ன செய்ய முடியும்ன்னு எல்லாம் கொஞ்சம் டீடெயிலா சொல்றதால படம் சுவாரஸ்யமாக போகுது. ஆனால் படத்தில் கொஞ்சம் ஸ்லோவான ஏரியா இந்த விளக்கமளிக்கும் இடம் தான்.

dejavupic5டக் கார்லினாக டென்சல் வாஷிங்டன். பலமுறை சிறந்த நடிகருக்காக பரிந்துரை செய்யப்பட்டும், போயும் போயும் 2001ல் A Beautiful Mind படத்திற்காக ரசல் க்ரோவிற்கு கிடைக்கவேண்டிய விருதைத் தட்டிப் பறித்த புண்ணியவான். பெரிதாக டெக்னாலஜி தெரியாத, ஆனால் கொஞ்சம் மூளையுள்ள புத்திசாலி ஆபிசர். படத்தில் எங்கும் சொதப்பாமல் நல்ல ஒரு நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். க்ளெயாராக வரும் போலா பேட்டனுடைய அந்த அழகான இன்னெசன்ட் லுக்கே அவர் மீது நமக்கு ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணுகிறது. கடைசி 30 நிமிடம் வரை இருவரும் சந்திக்காவிட்டாலும், டக்கிற்கு திரையில் பார்த்தே க்ளெயார் மீது வரும் காதல் சொல்லப்பட்ட விதம் நன்றாக இருந்தது.

நல்ல கூலான ஐடியா. நல்ல ஆக்ஷன் என்டர்டெயினர். ஆக்சன் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.


ரேடிங் – 74/100


படத்தின் ட்ரெயிலர்

 

 

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்
ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

14 comments:

  1. நிறைவான விமர்சனம் பாஸ்.. எனக்கு என்னவோ "ஸ்நோ வைட்" கான்செப்ட் பெரிதாக காதுல பூ சுத்துற மாதிரி இருக்கு.. இருந்தாலும் சயின்ஸ்-பிக்ஷன் கலந்த கதையாக இருப்பதால் பார்த்து விடுகிறேன்!

    ReplyDelete
  2. @JZ

    டைம் ட்ராவல்னாலே காதுல பூ சுத்துற வேலை தானே. அதையெல்லாம் பார்க்காம படத்த என்ஜாய் பண்ணுங்க.

    ReplyDelete
  3. ஹா.ரசிகரே...வலைப்பக்கம் அதிக நடமாட்டமில்லை.பிஸியா?

    ReplyDelete
  4. படத்தோட கதையை ரொம்ப நல்லா விவரிச்சு இருக்கேங்க...
    எனக்கும் இந்த மாதிரி வேகமா நகரும் திரைக்கதைகள் கொண்ட படங்கள் ரொம்ப பிடிக்கும்....
    ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது...உங்க நரேஷன்ல விமர்சனம் படிக்கும் போது மறுபடியும் படம் பார்த்த மாதிரி இருக்கு..

    ReplyDelete
  5. விமர்சனம் + விசய காந்தோட சேந்து நல்லா இருக்குய்யா....ஆனாலும் செப்படி வித்தை பாத்தது போல இருக்கு - நான் இன்னும் வளரனுமோ டவுட்டு!

    ReplyDelete
  6. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்

    ReplyDelete
  7. அழகான விமர்சனம்..அறிமுகம், கதை, தங்களது பார்வைகள் என்று அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.
    கேள்விப்படாத படம்..கதைக்கூட நல்லாருக்கு.பார்க்க போகிற படங்களின் லிஸ்ட்டு ஏறிகிட்டே போவதால் இந்த படத்தை அப்புறமா கவனிச்சிக்கிறேன்..

    அடுத்த விமர்சனம் ET-யா ?? எனக்கு ரொம்ப புடிச்ச படம்.எழுதுங்கோ அழகா இருக்கும்.மிக்க நன்றி.

    ReplyDelete
  8. USB Diskய் பாதுக்கப்போம்!

    http://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html

    ReplyDelete
  9. ரொம்ப நாளா பார்க்கணும் நினைத்துகொண்டிருக்கும் படம், ஆனால் பார்கறதுக்கான நேரம் அமையல.... இப்போ உங்க விமரசனத்தை படித்த பிறகு கண்டிப்பா இந்த வாரத்துல பார்த்துடுவேன்.

    விமர்சன் சூப்பர் எப்பயும் போல......படிகரத்துக்கு ரொம்ப சுலபமா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  10. கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  11. இந்த படம் எனக்கு பிடித்த ஒன்று...நமக்கு இந்த time travel கதைகளிலே அலாதி விருப்பமுண்டு...
    நானும் என்னமோ என படத்தை பார்த்துகொண்டிருக்க திடீரென டைம் டிராவல் என நல்ல திருப்பம்

    ReplyDelete
  12. ரசிகரே . இது எனக்கு மண்டை காய வைச்ச படம் .. முதல் தடவை பார்த்தபோது புரிந்தது போல இருந்தது .. இரண்டாவது தடவை பார்த்தபோது தான் இது கிரிஸ்டாபர் நோலன் வகை படம் என்று விளங்கியது..

    படத்தில் மூன்று/நாளு தடவை டைம் திராவலிங்க் .. அதாவது .. நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்துக்கு போய், பின் அங்கே இருந்து மீண்டும் அதன் கடந்த காலத்துக்கு போய், பின் அங்கே இருந்து .... கடந்த காலம் என்பது நிகழ்காலத்தின் ரிலேட்டிவ்வான விஷயம் என்பதை உணர்த்திய படம் .. பத்து தடவை கூட பார்க்கலாம்!

    ReplyDelete
  13. ண்ணா! பார்த்திட்டேன். லேசா The source code ஜாடை அடிக்குதில்ல...பட் நல்லாயிருக்கு

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...