நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Zodiac [2007]

folder

சத்தியமா படத்தைப் பார்த்த பிறகு என்னத்த எழுதுறதுன்னு ஒரு மண்ணும் மண்டைல வரல. (அப்புறம் ஏண்டா எழுதி உசுர வாங்குற) ஜஸ்ட் அன் எம்டி மைண்ட். “பார்த்தேன் மறந்தேன்”. அப்படித் தான் படத்தைப் பார்த்ததும் ஃபீலிங் வருது. சரி …  பார்த்தாச்சு. தோணுற என்னத்தையோ எழுதுறேன். வந்த கடமைக்காக வாசிச்சுட்டு போங்க. என் கடன் பணி செய்துக் கிடப்பதே.

இன்று வரை சான் ஃப்ரான்ஸிஸ்கோ ஏரியாவில் மிகவும் பிரபலமான, இன்னும் மூடப்படாத கொலைக் கேஸ்களில் முக்கியமானதொன்று The Zodiac Killer. 1960ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் San Francisco Chronicle பத்திரிகைக்கு தான் செய்யப்போகும் கொலைகளைப் பற்றி ஏற்கனவே துப்புக் கொடுத்தும் கடைசிவரை அகப்படாமல் தண்ணி காட்டிய ஒரு சீரியல் கில்லர். அவரைப் பற்றி Se7en, Fight Club, Girl with the Dragon Tattoo [2011] படங்களை இயக்கிய டேவிட் ஃபிஞ்சர் கிளறி இருக்கார்னா அதுல ஏதோ ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்னு நினைத்துக் கொண்டே படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். நினைத்தது நடந்ததா? பார்க்கலாம் வாங்க.thumb1ஜுலை மாதம் 4ம் திகதி. அமெரிக்கா தனக்கு சுதந்திரம் கிடைத்ததை வாணவேடிக்கைகளுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இரு கள்ளக் காதலர்கள் தம் காரை எடுத்துக் கொண்டு சிறு கொண்டாட்டம் ஒன்றைப் போட புறப்படுகிறார்கள். ஒரு அவெனியுவில் ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கும்போது திடீரென பின்னால் ஹெட்லைட்டை ஹையில் வைத்துக்கொண்டு வந்து நிற்கிறது ஒரு கார். அந்தப் பெண்ணின் கணவனாக இருக்குமோ என அந்தப் பையன் எண்ணும்போது காரில் இருந்து இறங்கி வருகிறது ஒரு உருவம். டும், டும் …பையனின் ரத்தம் பெண்ணின் முகத்தில் தெறிக்கிறது. சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணிற்கும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.

இது தான் சோடியாக் கில்லரின் இரண்டாவது கொலை. 


போல் அவெரி மற்றும் ரொபர்ட் க்ரேஸ்மித் சான் ப்ரான்ஸிஸ்கோ க்ரோனிக்ள் பத்திரிகையில் ரிப்போட்டராகவும், ஒரு கார்டீனிஸ்டாகவும் வேலை செய்பவர்கள். மேலே சொன்ன கொலை நடந்து ஒரு மாதத்தின் பின்பு பத்திரிகைக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் சோடியாக் எழுதியது போல ஒரு கடிதமும், சில குறியீடுகள் கொண்ட ஒரு கடிதாசியும் இருக்கின்றது. அந்தக் குறியீடுகளை பத்திரிகையில் வெளியிடவேண்டும் என்றும் தவறினால், கொலைகள் தொடரும் எனவும் மிரட்டலிடப்பட்டிருக்கிறது. ரொபர்ட்டிற்கு இந்தக் கொலைகள் மேல் ஆர்வம் இருந்தாலும், கார்ட்டூனிஸ்ட் என்பதால் அவனுடன் விபரங்களை பகிர மற்ற நிருபர்கள் மறுக்கிறார்கள். ஆனால் அந்தக் குறியீடுகளை குறித்துக் கொள்ளும் ரொபர்ட் அவற்றின் மீனிங்கை ஓரளவு கண்டுபிடித்துச் சொல்ல, அவெரி அவனுடன் மற்றத் தகவல்களையும் பகிர ஆரம்பிக்கிறான்.

Zodiac-fanartமேலும் தொடரும் சோடியாக் கில்லரின் கொலைகளைக் கண்டுபிடிக்க நியமிக்கப்படுபவர்கள் டேவ் டோஷி, மற்றும் பில் ஆம்ஸ்ரோங். இவர்கள் முக்கிய சந்தேக நபராக ஆர்தர் லீ என்பவரை குறி வைக்கிறார்கள். ஆனாலும் கையெழுத்து நிபுணர், ஆர்தர் சோடியாக்கின் லெட்டர்களை எழுதவில்லை என உறுதியாக சொல்கிறார். எனவே போதிய ஆதாரங்களில்லாமல் கேஸ் கைவிடப்பட்டாலும், டேவ், அவெரி, ரொபர்ட்டிற்கு அந்தக் கேஸ் மீது உள்ள ஆர்வம் ஒரு அடிக்ஷனாக மாறுவதால், டேவின் பொய் ஆதாரங்கள் சமர்ப்பித்தலால் டிபார்ட்மெண்டில் குறைந்த மதிப்பு, அவெரியின் போதைப் பொருள் பாவனை, ரொபர்ட்டின் கேஸ் மீதான ஆராய்ச்சி என அந்த மூவரின் வாழ்க்கை எவ்வாறு திசை மாறியது என்பது மீதிப் படம்.

கடைசியில் கொலையாளி ஆர்தர் லீயா, அல்லது வேறு யாராவது ஒருவனா? குற்றவாளிக்கு தண்டனை கிடைத்ததா என்பதெல்லாம் படத்தில் சொல்லப்படாது. சில விடயங்கள் உங்கள் கற்பனைக்கு.  (விக்கிபீடியா துணை)zodiac-screenshot-2007-movieடேவிட் ஃபினசர் மீண்டும் கையிலெடுத்த சீரியல் கில்லர் மேட்டர். Se7en ரத்தம், வன்முறை என்றால், Zodiac அவ்வளவாக கொலைகளைப் பற்றி நோண்டாமல், கொலைகளுக்கு பின்னான சம்பவங்களை கையிலெடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட முதல் 45 நிமிடங்களுக்குள் நடக்கும் கொலைகள் எல்லாம் நடந்து முடிந்துவிட, மீதி 2 மணித்தியாலங்களும் இன்க்வயரிஸ், கேஸ் ஃபைல்ஸ், என விசாரணைகளும், சம்பந்தப்பட்ட மூன்று பேரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் எனவும் கழிகிறது …. நமக்கு கிழிகிறது. சோடியாக் கில்லர் பற்றி பார்வையாளனுக்கு நிறைய விடயங்களைக் காட்டுவதாக எண்ணி ரொம்ம்ம்ம்ம்ப பொறுமைய சோதிக்கிறாரு ஃபின்சர். இரண்டொரு இடங்களில் “அடப்போப்பா … எனக்கு ஒரு மண்ணும் வேணாம். போய் புள்ளக் குட்டிய படிக்க வைப்போம்னு” எழும்பத் தோணும். ஆனாலும் கொஞ்சம் பொறுமையாக படத்தைப் பார்த்தால் ஒரு நல்ல த்ரில்லர் உங்களுக்கு. பொறுமை மிகவும் முக்கியம் அமைச்சரே.

படத்தை மிகவும் இன்ட்ரஸ்டாக் கொண்டு போவது மேலே சொன்ன மூன்று பேரும் தான், முக்கியமா ரொபர்ட்டா வரும் கிலன்ஹால். இரண்டரை மணித்தியாலங்கள் தன் தோளில் ஏற்றப்பட்டிருப்பதை உணர்ந்து நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றபடி டௌனியும் வழக்கமானபடி ரசிக்க வைக்கிறார்.

சுருக்கமா சொல்லுவதானால் இப்படம் சோடியாக் கில்லர் பற்றிய ஒரு டாகுமெண்ட்ரியை பார்த்தால் எப்படி இருக்குமோ, அந்த ஃபீலைத் தரக்கூடியது. நேரமிருந்தா ஒதுக்கிப் பாருங்க.


ரேடிங் – 81/100  (நேரத்தைக் குறைத்திருந்தால் கொஞ்சம் கூட்டியிருக்கலாம்)


படத்தின் ட்ரெயிலர்டிஸ்கி  - இதே போல ஜாக் த ரிப்பர்ன்னு ஒரு சீரியல் கில்லரை பேஸ் பண்ணி வந்த படம் From Hell. அதைப் பற்றி நம்ம தல கருந்தேள் அவருடைய ஒரு பதிவில அலசியிருக்காரு. கண்டிப்பா படிச்சிருங்க. படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

 

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்
ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

34 comments:

 1. இப்படி படங்கள் போரடிச்சு போச்சு தலைவா..

  பொறுமையா (Professionalலா)
  எழுதியதற்கு நன்றி...

  தொடர்ந்து கலக்குங்கள்...

  ReplyDelete
 2. @ரெவெரி

  கருத்திற்கு மிகவும் நன்றி பாஸ். எப்படிப்பட்ட படங்களை எதிர்ப்பார்க்கிறீங்கண்ணு சொல்லுங்களேன்.

  ReplyDelete
 3. யோவ் இப்படி ஒரு கொலை பற்றி பார்த்த பின்னும் படம் மனசில நிக்கல என்று சொல்ல எப்படி மனசு வந்தது...

  ReplyDelete
 4. ///அடப்போப்பா … எனக்கு ஒரு மண்ணும் வேணாம். போய் புள்ளக் குட்டிய படிக்க வைப்போம்னு////..... correct boss..... முதல் தடவ பார்க்கும் பொது ஒரு எழவும் புரியல ... மறுபடியும் பார்க்கணும்னு இன்னும் இந்த படாத வச்சுருக்கேன்(Because of the IMDB rating 7.8) ..ஆனா பொறுமை இல்ல பாஸ்..."-)

  ReplyDelete
 5. நல்ல விமர்சணம் நண்பா

  ReplyDelete
 6. செவென் படம் பார்த்த போதே இந்த படம் கண்ணில் பட்டது..அதுவே ரொம்ப அற்புதமான படம், சீரியல் கில்லிங்க், கிரைம் படங்களுக்கு ஒரு முன்னோடியாகவே கருதுகிறேன்.
  கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கிறேன் நண்பரே, எனக்கு தொடர்க்கொலைகள் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகப்பிரியம் உண்டு.நல்ல அருமையான விமர்சனம்.மிக்க நன்றி.

  ReplyDelete
 7. @KSB

  எப்ப ஓய்வா, பொறுமையா நேரமிருக்கோ ... அப்போ படத்த எடுத்துப் பாருங்க.

  ReplyDelete
 8. @♔ம.தி.சுதா♔

  மேலே சொன்னது போல நடக்கும் கொலைகள் எல்லாமே முதல் 45 நிமிடங்களுக்குள் முடிந்து விட மிச்ச 2 மணித்தியாலங்களும் இன்க்வயரி தான்.

  ReplyDelete
 9. @Kumaran

  சீக்கிரமே பார்த்துவிடுங்க குமரன். பார்த்துட்டு பிடித்திருந்தா ஒரு பதிவு போடுங்க. பிடிக்கலன்னா இங்க வந்து ஒரு கமெண்ட் போட்டுவிடுங்க.

  ReplyDelete
 10. // “பார்த்தேன் மறந்தேன்”//

  எம்டி மைண்ட்லயே இவ்வளவு விரிவாக படம் பற்றிய அலசலா????.....

  ஆனாலும் ரொம்ப பொறுமை சார் உங்களுக்கு.

  ReplyDelete
 11. @கடம்பவன குயில்

  வருகைக்கு நன்றி பாஸ். நீங்க என்னை சார்ன்னு கூப்பிடக்கூடிய அளவுக்கு இன்னும் வயசாகல. நீங்க பாஸ்னே கூப்பிட்டுக்கலாம்.

  ReplyDelete
 12. போரடிக்குதுன்னு 81 போட்ருக்கீங்க.. பெஞ்சமின் பட்டின் தந்த ஃபிஞ்சரா இப்படி?? டைம் இருந்தா பார்க்குறேன்.. ஆனா அதுக்கு நீங்க என்னோட காணாமப் போன காலதேவதைகளை கண்டுபிடிச்சு தரணும்.. ஓக்கேவா..

  * //நீங்க என்னை சார்ன்னு கூப்பிடக்கூடிய அளவுக்கு இன்னும் வயசாகல// சரி.........................

  * //போய் புள்ளக் குட்டிய படிக்க வைப்போம்னு// அப்ப எப்புடி??

  Good Night!

  ReplyDelete
 13. @JZ

  இப்போ இன்னாத் தான் சொல்ல வர்றீங்க JZ?

  ReplyDelete
 14. @ஹாலிவுட்ரசிகன்
  உங்களுக்கு புள்ளக்குட்டி இருக்குனு சொல்லவே இல்லை..

  ச்சும்மா தான்..
  ட்ரெயிலர் பார்த்தா படம் பார்க்லாம் போல இருக்கு.. ட்ரை பண்றேன்!

  *"அடுத்து வரும் விமர்சனங்கள்" பொட்டி காலியாவே இருக்கு.. ஆனால் அடுத்தடுத்து விமர்சனங்கள் வந்துகிட்டே இருக்கே..

  ReplyDelete
 15. @ஹாலிவுட்ரசிகன்

  ஹலோ ... இன்னும் ஒரு புள்ளயே செட் ஆகல. அதுக்குள்ள புள்ள-குட்டி வரைக்கும் போய்ட்டிங்களே.

  அந்தப் பெட்டி போடுறதுக்கு நல்லாத் தான் இருந்துச்சு. இப்ப அடிக்கடி அப்டேட் பண்றத யோசித்தா தான் சோம்பேறித்தனமா இருக்கு. தூக்கிறட்டுமா?

  ReplyDelete
 16. படம் ரிலிஸான சமயத்தில் டைரக்டர் பேரெல்லாம் தெரியாம பாத்தது அப்போ பிடித்தே இருந்தது.., ஆனா மறுபடி பாக்க தோணல..., நல்லா எழுதி இருக்கிங்க :)

  ReplyDelete
 17. ரொம்ப நல்ல படம்..ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது..நீங்க சொன்ன மாதிரி இந்த படத்தை பார்க்கிறதுக்கு பொறுமை ரொம்ப அவசியம்..ரொம்ப நல்லா கதைய விவரிச்சு இருக்கேங்க....முத பேரா நரேஷன் சூப்பர்...

  ReplyDelete
 18. இந்தப் படம் எனக்கும் புடிக்கும். ஃபிஞ்ச்சர் படங்களும். நல்ல கட்டுரை. அப்புறம், அதென்ன 'தல' கருந்தேள்? அவனே ஒரு வெட்டி முண்டம். வீணாப்போன தண்டம்.

  ReplyDelete
 19. அப்புறம், இந்த டெம்ப்ளேட் கடைசியா ரெண்டு வருஷம் முன்னால, ஜாலிவுட் கூலான்னு ஒருத்தரோட ப்ளாக்ல பார்த்தது. அதை இப்பதான் மறுபடி பார்க்கிறேன்.

  ReplyDelete
 20. இந்த படத்த பாக்கவா வேணாமா................. பூவா தலையா போட்டுப் பார்த்தேன்.காச எடுக்க கீழக் குனிஞ்சவன்,அப்படியே தூங்கிட்டேன்! (படம் பார்க்குறதுக்கு முன்னாடியே தூங்கிட்டேன்!!!) படம் பார்த்தா??????????

  ReplyDelete
 21. @Ganesan

  அச்சச்சோ ... அப்ப விட்ருங்க. இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.

  ReplyDelete
 22. ரொம்ப நாளா பார்க்கணும் நினைத்துகொண்டு இருக்கும் படம் இது, இன்னும் பார்கவில்லை. உங்க விமர்சனம் படிச்சதுல எனக்கு படம் கண்டிப்பா பிடிக்கும் நினைக்கிறன்.

  ReplyDelete
 23. @வீராசாமி

  அப்படியா? இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் பதிவுலகம் பக்கமே இருக்கல. என்டர் ஆனப்போ அவரின் ப்ளாக் நகல் மட்டுமே இருந்துச்சு.

  ReplyDelete
 24. @வீராசாமி

  இந்தா ... தலயப் பத்தி பேசுனீங்க அப்புறம் ... ஆமா.

  ஆனாலும் இந்த ரைட்டிங் ஸ்டைல் எங்கோ (ஃபேஸ்புக்) பார்த்த மாதிரியே ஃபீல் ஆகுதே? ஹி ஹி

  ReplyDelete
 25. @MuratuSingam

  கண்டிப்பா ... நீங்க பார்த்திருக்கிற படங்கள பார்க்கும்போது உங்களுக்கு படம் பிடிக்க வாய்ப்பு அதிகம்.

  ReplyDelete
 26. படம் எவ்ளோ மெதுவா போனா என்ன தல.. நமக்கு த்ரில் தான் முக்கியம்... Se7en, Fight Club க்கு அப்புறம் நான் பாக்கப்போற ஃபின்ச்சர் படம் இது தான்னு நினைக்கிறேன்....!! கண்டிப்பா பாத்துடுவோம்...!! :):)

  ReplyDelete
 27. அப்ப கிளைமாக்ஸ் என்ன தான் தலைவரே...

  ReplyDelete
 28. @Lucky Limat லக்கி லிமட்

  படத்தில் க்ளைமாக்ஸ்ன்னு ஒன்னு இருக்கிறதா எனக்கு தோணல. படத்தின் முடிவில் க்ரெடிட்ஸ்ல கொலைகளை செய்தது ஆர்தர் லீன்னு தப்பித்த ஒருவன் அடையாளம் காட்ட, அவரை அரெஸ்ட் பண்ண முன்பே ஆர்தர் லீ இறப்பதாகவும் சொல்லப்படுது. அவ்வளவு தான்.

  ReplyDelete
 29. @திருவாருரிலிருந்து சுதர்சன்

  அதானே த்ரில் தான் முக்கியம். யு என்ஜாய் ...

  ReplyDelete
 30. இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.

  http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_02.html

  ReplyDelete
 31. Thanks for sharing this valuable information to our vision.nice movie
  hollywood Movie latest news

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...