நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

She's Out of My League [2010]

folder

எப்பவுமே ஒரு நாலைஞ்சு பசங்க ஒன்னு சேர்ந்துவிட்டால், வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு வீதியோரம் உள்ள சின்ன சுவரின் மேலோ,  உட்கார்ந்து கொண்டு வரும் போகும் பெண்களை சைட் அடிப்பது வழக்கமான ஒன்று தானே? அந்த நேரத்தில் க்ராஸ் ஆகிப் போகும் ஃபிகருங்களுக்கு மார்க் போடாத பசங்களே இல்லன்னு சொல்லலாம். (நமக்கு எல்லாம் சந்தானம் சொல்வது போல ரெண்டே டைப் தான். ஒன்னு சூப்பர் ஃபிகரு. இன்னொன்னு … உங்களுக்கே தெரியும்). இந்த ஒரு காரணத்தை வச்சே நிறையப் பசங்க ஹை மார்க் பொண்ணுங்க கூட பேச தயங்குவாங்க (லோ மார்க் நல்லப் பொண்ணுங்கள கணக்கெடுக்காதது வேறு விஷயம்). அப்படியே சூப்பர் ஃபிகரு ஒன்னு ஒருவனுக்கு செட் ஆகிட்டா, நட்பு வட்டத்தில் அவன் தான் ஹீரோ. ஆனாலும் அடிமனதில் அந்தப் பையனுக்கு நம்மள இந்தப் பொண்ணு யுஸ் பண்ணுதான்னு ஒரு சந்தேகம் இருந்துட்டே தான் இருக்கும். கிட்டத்தட்ட இது போன்ற ஒரு கதைக் களத்துடன் இறங்கிய படம் தான் இன்று நாம் பார்க்கப் போகும் She’s Out of My League.


thumb2கெர்க் ஏர்போட்டில் வேலை செய்யும், எதிர்காலம் பற்றிக் கவலைப்படாத, ஒரு சொங்கிக் கூட்டத்தை நண்பர்களாக வைத்திருக்கும் என்னைப் போல ஒரு வீணாப் போனவன். ஏற்கனவே ஒரு பெண்ணால் கழற்றிவிடப்பட்டும், இவன் மூஞ்சிக்கு வேறு ஏதும் மாட்டாதுங்கறதால மீண்டும் அவளை எப்படியாவது கேர்ள் ஃபிரண்டாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இவனுக்கு நண்பர்கள் கொடுக்கும் மார்க் 5.

இந்த நேரத்தில் ஏர்போட்டிற்கு வரும் அழகான பெண்ணான (எத்தன மார்க் போடலாம்னு சி.பி கிட்ட கேட்டுக்கங்க. ஏன்னா அவரு லுக்கே தனி) மொலிக்கு சில உதவிகளைச் செய்யப் போக, ஏற்கனவே கெர்க்குக்கு முழுவதும் நேர்மாறான பொறுக்கியிடமிருந்து பிரிந்து இருக்கும் மொலி இவன் போல ஒரு நல்லவன் தான் நமக்குத் தேவை என டிஸைட் பண்ணுகிறாள். அவளுக்கு 10 மார்க் ரேடிங் போடும் நண்பர்கள் அவனவன் ரேடிங்க்கு 2பாயிண்ட்டுக்கு மேல் உள்ளப் பொண்ண லவ் பண்ணக்கூடாதுன்னும் சொல்றாங்க. ஆனாலும் ரெண்டு பேரும் லவ்வு லவ்வுன்னு லவ்வுறாங்க. இப்ப இதுல இவனின் நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை, எப்படி ஒரு சூப்பர் ஃபிகரு இப்படி ஒரு அட்டுப் பையனுக்கு மடிஞ்சுச்சுன்னு.

thumb4அப்புறம் ஒரு மாதிரி தேடிப் பார்த்து, முன்னாள் காதலன் செய்த ஈகோ டார்ச்சரினால் தான் அவனிடமிருந்து விலகி ஒரு ஆறுதலுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தான் கெர்க்குடன் பழகுவதாக அவனுக்கு அவனின் நண்பர்கள் சொல்ல, “நான் என்ன இளிச்சவாயன்னு நினைச்சு என் தலையில மிளகாய் அரைக்கப் பாக்கிறியா”ன்னு இங்கிலிஷ்ல கெர்க் மொலியிடம் கேட்க, சண்டை மூண்டு இருவரும்  பிரிய நம்மாளு ஹீரோ ”வேணாம் மச்சான் வேணாம் … இந்த மொலியின் காதலு.”ன்னு சொல்லிகிட்டு மீண்டும் பழைய ஃபிகரு கூட செட் ஆகப் பார்க்கிறார்.  
 
கடைசியில் திடீர்னு எப்படி ஃபெரண்ஸுக்கு ஞானம் பிறந்து, மறுபடி கெர்க்-மோலி ஜோடியை சேர்த்து வைக்கிறாங்கங்கறது மீதிக்கதை. 


thumb1பேஸிக்கா இப்படித் தான் கதை இருக்கப்போகுதுன்னு தெரியும் … படம் எப்படி முடியப்போகுதுன்னும் தெரியும். அப்புறம் ஏன் படத்தைப் பார்க்கணும்? ஆன்ஸ்வர் இஸ் வெரி சிம்பிள் – காமெடி. ரொமான்டிக் காமெடிகளை ரசிக்கவென என்னைப் போல ஒரு கூட்டம் இருப்பதால் ஏற்கனவே American Pie போன்ற  சில படங்களில் பார்த்த காமெடியையும், புதுசா கொஞ்சத்தையும் போட்டு கலந்து பிசைந்து கதையை ரெடி பண்ணியிருக்காங்க. (OKOKயும் இந்த டெக்னிக்கோடு தான் களமிறங்கியிருக்கு போல) இதுவே படத்தின் சுவாரஸ்யத்திற்கும், வெற்றிக்கும் காரணம். ஹீரோவின் பர்ஃபோமன்ஸ் போலவே படமும் சில இடங்களில் தடுமாறுது. போகப் போக கடைசியில் வழக்கமான ரொம்கொம்களில் வரும் க்ளிஷேக்களுக்குள் படம் அகப்படுவது கொஞ்சம் போரடிக்க வைக்கிறது.

இந்தப் படத்தில் எனக்குப் பிடிக்காம போன இன்னொரு விஷயம் ஹீரோயினுக்கான மார்க்ஸ். 10 மார்க் ஃபிகருன்னு அந்தப் புள்ளயப் பார்த்து சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர். வேணும்னா அதிகப்பட்சமா ஒரு 7-8 கொடுக்கலாம். அதுக்கு மேல முடியாது. 
 
என்னத் தான் சொன்னாலும் படத்தை ஒருமுறை நிச்சயம் ரசித்துப் பார்க்கலாம். காமெடியுடன் இந்தக் காலத்துப் யூத்துக்கு (முக்கியமா எனக்கு) சொல்லவேண்டிய ஒரு முக்கியமான மெசேஜையும் இந்தப் படம் சொல்லுது. அது என்ன மெசேஜ்னா “யாருமே உன் ரேஞ்சுக்கு ஓவரானவங்க கிடையாது. அவன் ஆண் என்றால், அவள் ஒரு பெண். அவ்வளவு தான்.”

வார இறுதியில் ஃப்ரெண்ட்ஸுடன் அமர்ந்து ஒரு ஜாலியான படத்தை பார்க்கணும்னா இதை லிஸ்டில் நோட் பண்ணி வைங்க.

அம்பானிக்கே கூட நீ மருமகனாகலாம். அதுக்கு தேவை அவருக்கு ஒரு பொண்ணு. உனக்கு கொஞ்சம் டாலண்டு.

ரேடிங் – 65/100


படத்தின் ட்ரெயிலர் -



அடுத்தப் பதிவில் சந்திப்போம்

ஹாலிவுட்ரசிகன்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

19 comments:

  1. //“யாருமே உன் ரேஞ்சுக்கு ஓவரானவங்க கிடையாது. அவன் ஆண் என்றால், அவள் ஒரு பெண். அவ்வளவு தான்"//
    என்னா தத்துவம், கலக்குறீங்க பாஸ்!
    பதிவு வழக்கமான சைஸிலும் கொஞ்சம் சின்னதான மாதிரி படுது.. இருந்தாலும் படம் பார்க்கலாம்ங்கற ஃபீலை ஏற்படுத்திவிட்டதால் 'எல்லாம் நலம்'!

    //சந்தானம் சொல்வது போல//
    //வேணாம் மச்சான் வேணாம்//
    //OKOKயும் இந்த டெக்னிக்கோடு தான்//
    படம் பார்த்துட்டு அதே ஃபீல்ல எழுதுறீங்களா??

    * இந்த வாரம் தமிழ்ப் படங்களுக்காக டெடிக்கேட் பண்ணி விட்டதால், அடுத்த வாரத்தில் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு "லிஸ்டில் நோட் பண்ணி" வைக்கிறேன்!

    ReplyDelete
  2. @JZ

    நம்ம ஊரு தியேட்டர்ல எல்லாம் ரிலீஸ் பண்ணல JZ. ட்ரெயிலர், ஆடியோ, ஆன்லைன் விமர்சனங்கள் ஏற்படுத்திய கிக்கில் எழுதியது.

    விமர்சனம் வழக்கமான சைஸ் தான்னு நினைக்கிறேன். படங்களை சின்னதாக்கி, வழக்கம் போல நடுவுல வைக்காமல் left, rightல வச்சதால பதிவு கொஞ்சம் சிறிதான மாதிரி தெரியுது. அடுத்த பதிவில் மீண்டும் பழையபடி படங்களை போட்டு நீட்டிடுவோம்.

    ReplyDelete
  3. "என் மன வானில்" பெயரை "ஹாலிட் பக்கங்கள்"னு மாத்திக்கிட்டீங்களா? உங்களுக்கு பெஸ்டுன்னு தோணிச்சுன்னா சரி!

    *சைட்டு பெயருருதான் மாத்திட்டீங்க.. சொல்லிக்கிட்டிருந்த மாதிரி உங்க பெயரையும் மாத்தி விட்றாதீங்க"
    (அப்புறம் உங்களை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது?..)

    ReplyDelete
  4. @JZ

    இல்ல பாஸ். இது கூட டெம்பரரி தான். என் மன வானில் என்ற பெயர் விமர்சனங்களுக்கு சரியான பெயர் போலத் தெரியல. சிலவேளை மீண்டும் அதுக்கே ரிவர்ட் ஆகினாலும் ஆகிடுவேன்.

    உங்ககிட்ட பெயருக்கு ஏதாச்சு ஐடியா இருக்கா?

    ReplyDelete
  5. @ஹாலிவுட்ரசிகன்

    "ஹாலிவுட் பக்கங்கள்"ங்கற பெயர் " என் மன வானில்"ஐ விட சைட்டுக்கு பொருத்தமா இருக்கு..

    இங்கிலீஸுல பெயரு வைக்கச் சொன்னா சொல்லிடுவேன்.. இது தமிழ்ல சைட்டுக்கு பொருத்தமா, புரியுறா மாதிரி இருக்கனும்ல.. அதான் யோசிக்கிறேன். கிடைத்தால் கமெண்டிடுகிறேன்..

    அவசியம் மாத்தி ஆகனும்னா -

    * பேசாம கமெண்ட் எழுத வரும் நண்பர்களிடம் title name challenge ஒண்ணு வைங்க.

    * இல்லாட்டி நீங்களே பொருத்தமா 4 பெயரு செலெக்ட் பண்ணி opinion poll வைங்க.. (எங்களுக்கு வேலை சுலபமாயிடும்)

    *ஃப்ரீயா வுடுங்க..சைட்டு பெயரா முக்கியம்? நீங்க எழுதுறதுதான் முக்கியம் நண்பா!

    ReplyDelete
  6. ஹாலிவுட் பக்கங்கள் பொருத்தமாக இருக்கிறது.இதையே தொடரவும்.

    ReplyDelete
  7. //இந்தக் காலத்துப் யூத்துக்கு (முக்கியமா எனக்கு) சொல்லவேண்டிய ஒரு முக்கியமான மெசேஜையும் இந்தப் படம் சொல்லுது. அது என்ன மெசேஜ்னா “யாருமே உன் ரேஞ்சுக்கு ஓவரானவங்க கிடையாது. அவன் ஆண் என்றால், அவள் ஒரு பெண். அவ்வளவு தான்.”//

    ச்சே கொன்னுட்டீங்க பாஸ்! நானும் நாட் பண்ணிக்கிறேன்!! :-) செமையா, சிம்பிளா எழுதியிருகீங்க! சான்ஸ் கிடைச்சா பாக்கணும்!

    ReplyDelete
  8. @உலக சினிமா ரசிகன்

    ப்ளாக்கிற்கு இதைவிட நல்ல பெயர் கிடைக்கும்வரை ஹாலிவுட் பக்கங்களையே மெயிண்டேன் பண்றேன். மிகவும் நன்றி பாஸ்.

    ReplyDelete
  9. @ஜீ...

    ஜாலியா ஒரு படம் பார்க்கணும் நினைச்சா இதை எடுத்துப் பாருங்க. சூப்பர் படம் ஒன்னு பார்க்க நினைச்சுட்டு இத எடுத்தா, அடச்சே...ன்னு தான் தோணும்.

    ReplyDelete
  10. குறிச்சு வச்சிக்கிறேன் தல.. சீக்கிரம் பாக்குறேன் :)

    ReplyDelete
  11. ஜாலியான படம் மாதிரி தெரியுது..... படம் இன்னும் பார்கால பாஸ்....கண்டிப்பாய் பார்க்கிறேன்..
    அப்புறம் ப்ளாக் பேரை மாதிட்டேங்க.."ஹாலிவுட் பக்கங்கள்" உங்க ப்ளாக்க்கு ஏத்த பேரு தான்...

    ReplyDelete
  12. இத்தனை பேரு உங்க விமர்சனங்களை படித்துவிட்டு பாராட்டும் போது நான் என்ன ? கத்துக்குட்டி..தொடக்கத்திலிருந்து இப்பொழுது வரை தங்களது விமர்சனம், பிளாக் என்பதன் ரீதியில் நிறைய மாற்றங்கள்..எழுத்தும், அனுபவ ரீதியில் தரம் உயர்ந்து வருவதை காண முடிகிறது,(இப்ப வச்சிரிக்கிற பெயரும் நல்லாருக்கு)
    தொடரட்டும் தங்கள் பணி, வாழ்த்துக்கள்.

    இந்த படம் பார்க்கிறேன் நண்பரே, ஏற்கனவே 20 படங்களுக்கு மேல பார்க்க லிஸ்ட் எடுத்து வச்சிருக்கேன்.எல்லாம் முடிந்ததும் இதையும் பார்த்திட வேண்டியதுதான், நன்றி.

    ReplyDelete
  13. படம் பார்க்கிறேன் நண்பரே...நன்றி நண்பா...

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி நண்பரே. பார்க்க முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. “யாருமே உன் ரேஞ்சுக்கு ஓவரானவங்க கிடையாது. அவன் ஆண் என்றால், அவள் ஒரு பெண். அவ்வளவு தான்.”
    எப்படி பாஸ் இப்படி எல்லாம்!!!! சூப்பர்......

    விமர்சனமும் சம கலக்கல். நம்ம டைப் படம் போல...... பார்திடவேண்டியதுதன்.

    ReplyDelete
  17. ஃஃஃஃஃஃகெர்க் ஏர்போட்டில் வேலை செய்யும், எதிர்காலம் பற்றிக் கவலைப்படாத, ஒரு சொங்கிக் கூட்டத்தை நண்பர்களாக வைத்திருக்கும் என்னைப் போல ஒரு வீணாப் போனவன்.ஃஃஃஃ

    ஹெலிவூட்டுப் படமானாலும் குப்பத்து ஸ்ரைலில் சொல்லும் திறமை தான் தங்களின் தனித்துவம்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

    ReplyDelete
  18. கருத்துக்களுக்கு நன்றி மக்காள்ஸ். படத்தைப் பார்த்தா எப்படின்னு சொல்லிடுங்க.

    ReplyDelete
  19. அம்பானிக்கே கூட நீ மருமகனாகலாம். அதுக்கு தேவை அவருக்கு ஒரு பொண்ணு. உனக்கு கொஞ்சம் டாலண்டு.

    இளைஞர்களுக்கு தேவையான கருத்துதான் !!

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...