நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

கணனியில் இருக்கும் திரைப்படங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி? Part III

top15movies

முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சு …. சிலபேரு என்ன திடீர்னு Part IIIயப் போடுறான். மொத ரெண்டு பாகங்களும் எங்கன்னு நினைக்கலாம். என்ன சரக்கை அடிச்சுட்டு இருந்தேனோ தெரியல. ஏற்கனவே போட்ட Part III பதிவ ஒழுங்கா டைப் செய்து வச்சுட்டு ஏதோ நினைப்புல மீண்டும் Part Iல இருந்ததையே காப்பி செய்து பேஸ்ட் பண்ணித் தொலைச்சிருக்கேன். நல்லவேளை … தளம் அப்போது ஆரம்பக்கட்டத்தில் இருந்ததால் (இப்ப மட்டும் பிரபல பதிவர் ஆகிட்டதா நினைப்போன்னு நீங்க கேட்பது புரியுது) வந்தவங்களும் பெரிசா நோட் பண்ணல. பண்ணினாலும் குறை சொல்லி டிஸ்கரேஜ் பண்ண விரும்பலன்னு நினைக்கிறேன். எப்படியோ தப்பிச்சுட்டேன். ஆனா பாருங்க … பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்னு நம்ம பாட்டி அடிக்கடி சொல்லுவாங்கங்க. அது மாதிரி நண்பர் மூவேந்தன் வாசித்துவிட்டு தவறை சுட்டிக்காட்டியிருந்தார். அதுனால அரைகுறைல விட்டுவிடக்கூடாதுன்னு இப்ப முடிச்சிங் … அவருக்கு March 3ம் தேதி ஒரு வாரத்தில் எழுதுறேன்னு சொல்லி இப்ப ஒரு மாசத்தின் பின் எழுதிக் கொண்டு இருக்கேன். இப்பவே சோம்பேறித் தனம் கூடுது.

முதல்ல இதுவரைக்கும் இதற்கு முந்திய பாகங்களைப் படிக்காதவங்க, கீழே க்ளிக் பண்ணிப் படித்துக் கொள்ளவும்.

முதல் பாகம்   |   இரண்டாம் பாகம்

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


ஓகே … அட்டென்ஷன் ஸ்டுடன்ஸ். லெட்ஸ் பிகின் தி லெசன். கடைசியா எங்க விட்டேன்?  ஆங் … இன்னிக்கு XBMCஐ எவ்வாறு நிறுவி படங்களை சேர்ப்பது என்பது பற்றிப் பார்க்கலாம்.

பொறுத்தார் பூமி ஆள்வார் அப்படின்னு எங்க பாட்டி சொல்லல … யாரோ சொல்லி வச்சுட்டு போயிட்டான். இப்ப ஏன் சம்பந்தமில்லாம இந்தப் பழமொழின்னா முந்தாநாள் தான் XBMCயின் புதிய உறுதி பதிப்பான XBMC 11.0 Eden வெளியிடப்பட்டது. சோ இதோ உங்களுக்கு அப்டேடட் டுடோரியல். புதிய பதிப்பில் நிறைய விடயங்களைச் சேர்த்ததாக சொல்றாங்க.  டவுன்லோட் செய்து யூஸ் பண்ண விரும்புறவங்க இங்கு க்ளிக் செய்து உங்களுக்கு மேட்ச் ஆகும் ஒபரேடிங் சிஸ்டத்தை செலக்டி இன்ஸ்டால் பண்ணிக்கவும். இப்பதிவை வாசிப்பவங்க எல்லாம் கம்ப்யூட்டர் ஜீனியஸ் என்ற எண்ணத்தில் இன்ஸ்டால் பண்ணுவது எப்படின்னு சொல்லவில்லை.

ஏதாச்சு பிரச்சினை வந்துச்சுன்னா உதவிக்கு இங்கே க்ளிக்கவும் இல்ல என்னைக் கேட்கவும்.


இன்ஸ்டால் பண்ணிவிட்டு ஓபன் பண்ணினால் இப்படித் தான் அனேகமாக ஹோம் ஸ்கிரீன் வரவேண்டும்.

screenshot000

இப்போ மேலத் தெரியுறது தான் XBMCயுடன் வரும் confluence எனப்படும் default ஸ்கின். உங்களுக்கு வேண்டியது போல ஸ்கின்ஸை இன்டர்நெட்டிலோ, XBMC Forumஇல் அல்லது Addons இலோ சென்று பிடித்த வேறு ஸ்கின்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். நான் பாவித்துக் கொண்டிருக்கும் ஸ்கின்னான AEON MQ3ஐ XBMC Forum இல் சென்று டவுன்லோட் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

பின்னர் ஹோம் ஸ்க்ரீனில் அம்புக்குறி மூலம் Files என்ற டேப்பிற்கு சென்று, அங்கு Add Videos என்ற ஆப்சனை செலக்ட் செய்தால் வரும் பாக்ஸில் Browse என்பதை க்ளிக் செய்து உங்கள் திரைப்படங்கள் உள்ள ஃபோல்டரை தெரிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் sourceற்கு ஒரு பெயர் கொடுத்துவிட்டு ஓகே செய்தால் படங்கள் உங்கள் லைப்ரரியில் சேர்க்கப்படும். ஏற்கனவே படங்களை பாகம் இரண்டில் சொன்னபடி Ember Media Managerவில் போட்டு டிங்கரிங் செய்து வைத்திருந்தால் படங்கள் நேராக அழகாக ஒழுங்குபடுத்தப்படும்.

screenshot001 

இல்லாவிட்டால் XBMCஇல் இருக்கும் ஸ்க்ரேப்பர் ஆட்டோமேடிக்காக அந்தப் படம் பற்றித் தேடி விடயங்களை காட்டும். ஆனால் அந்தந்த ஃபைல்கள் அந்தந்த ஃபோல்டர்களுக்குள் வருமோ தெரியாது (நான் ஆரம்பத்தில் இருந்து Ember Media Manager முறையைத் தான் பாவிக்கிறேன்). இந்தமுறையில் சிலநேரங்களில் இருக்கும் படம் ஒன்றாகவும் காட்டும் படம் வேறாக மாறிவிடவும் வாய்ப்புக்கள் உண்டு. இல்லாவிட்டால் என்றைக்காவது format செய்தால், மீண்டும் படங்களைப் பற்றிய தகவல்களை இன்டர்நெட்டில் டவுன்லோடி சேர்க்க வேண்டி வரும். பீ கேர்ஃபுல்.

screenshot004 
இது வெறும் திரைப்படங்களை மட்டும் ஒழுங்குபடுத்தாமல், தொலைக்காட்சி நாடகங்கள், வீடீயோ கேம்களை ஓபன் செய்வதற்கான Launchers, காமிக்ஸை படிக்க add-on எனப் பலவும் கொட்டிக்கிடக்கின்றன். ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக என்னவோ போல இருக்கும். பழகியவுடன் Interface எவ்வளவு ஈஸியாக இருக்கிறது என்பது புரியும். சரியாக தேடிப் பார்த்து தேவையானவையையும் இதற்குள்  இணைத்துவிட்டால் நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கட்டாயம் கிடைக்கும்.

இவ்வளவு நேரம் படங்களை சேர்ப்பது பற்றிப் பேசினோம் தானே? இனி தொலைக்காட்சி நாடகங்களை சேர்ப்பது பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

இந்த ஸ்டெப் நீங்க டவுன்லோட் செய்த எபிசோட்களை அழகாக பெயரிட்டுக் கொள்ள மட்டுமே. தேவையில்லையென்றால் ஸ்கிப் பண்ணவும். (நாங்க பதிவையே ஸ்கிப் பண்ணப் போறோம். நீ ஸ்டெப் பத்திப் பேசிக்கிணு கீற) முதலில் TVRenamer எனும் சாஃப்ட்வேரை இந்தத் தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்க. பிறகு டவுன்லோட் செய்த ஃபைல்களை அதற்குள் இழுத்து ட்ராப் பண்ணிட்டு, பிறகு சரியான தொலைக்காட்சி நாடகத்தை தெரிவு செய்து விட்டு Look up titles online க்ளிக் பண்ணினா, எபிசோட்கள் சரியாக ரீநேம் செய்யப்படும். முக்கியமான விடயம், எல்லா ஃபைல் பெயர் ஆரம்பமும் நாடகத்தின் பெயருடன் தொடங்கவேண்டும். (கீழே லிஸ்டில் முதல் என்ட்ரியைப் பார்க்க)

screenshot005


அடுத்ததாக Ember Media Managerஇல் சென்று இரண்டாம் பாகத்தில் கூறியது போல நாடகங்களை சேர்த்துக் கொள்ளவும். இல்லை ஏற்கனவே நாடகங்கள் சேவ் செய்து இருக்கும் இடத்தை தெரிவு செய்து வைத்திருந்தால் Update Library எனும் பட்டனை க்ளிக் செய்யவும்.

screenshot006
அப்பேட் ஆகியவுடன் அந்த நாடகத்தை க்ளிக்கி ரைட் க்ளிக் செய்து Rescrape Show என்ற ஆப்சனை செலக்டவும்.

screenshot007


வரும் பாக்ஸில் சரியான நாடகத்தை தெரிவு செய்து கொள்ளவும். (நான் ஏற்கனவே இதை செய்து விட்டதால் ஸ்க்ரீன்ஷாட் ஸ்கிப்). அப்புறம் சில படங்கள் டவுன்லோட் ஆகும். முடிந்ததும் உங்களுக்கு பிடித்த நாடகத்திற்கான போஸ்டர், பேக்ரவுண்ட் இமேஜ், மற்றும் ஒவ்வொரு சீசனிற்கான போஸ்டர், பேக்ரவுண்ட் இமேஜ் போன்றவற்றை தெரிவு செய்து விட்டு ஓகே பண்ணுங்க.

screenshot014
அடுத்தா நாடகத்தின் டீடெய்ல்ஸ் உடன் ஒரு பாக்ஸ் தோன்றும். உங்களுக்கு ஏதாவது information சேர்க்க வேண்டியிருந்தால் அதை போட்டுவிட்டு ஓகே செய்யவும். இப்பொழுது நாடகம் தயார்.

screenshot015



ஸ்ஸ்ஸ்ஸ் … பெரிய வேலை முடிந்தது. உங்களிடம் ஸ்டாக் இருக்கும் நாடகங்கள், மற்றும் உங்க நெட் ஸ்பீடு பொறுத்து நாடகத்தை சரிக்கட்டும் நேரம் மாறுபடும்.

ரைட்டு … இனி மீண்டும் XBMCக்குள் நுழைங்க. ஹோம் ஸ்க்ரீனில் Videos மெனுவிற்கு கீழே Files என்று ஒரு லிங்க் இருக்கும். அதை க்ளிக்கி அதில் Add Videos என்ற ஆப்சனை தெரிவு செய்ங்க. (மேலே படங்களுக்கு செய்தது போல) அதில் நாடகங்கள் இருக்கும் ஃபோல்டரை ப்ரௌஸ் செய்து செலக்ட் பண்ணி Add செய்துவிட்டு அடுத்த ஸ்டெப்பில் கீழே உள்ளவாறு Directory Contains என்ற இடத்தில் TV Shows என்று மாற்றிக் கொள்ளுங்க.

screenshot008


இப்பொழுது உங்க மீடியா லைப்ரரியை Refresh செய்யவா என XBMC கேட்கும். யெஸ் என்று கட்டளையிட்டு விட்டு வெயிட் பண்ணுங்க.

தாட் இஸ் ஆல் ... அம்புட்டுத் தேன்.ஆல் இஸ் வெல். இப்பொழுது மெயின் மெனுவிற்கு சென்று அதில் TV Shows செக்சனிற்குள் என்டர் ஆகினா உங்க நாடகங்கள் அழகாக காட்சியளிக்கும். முதல் பதிவில் சொன்னபடி வேண்டிய Viewஐ தெரிவு செய்து என்ஜாய்.

screenshot009

என் டிவி சீரீஸ் கலெக்சன்



XBMCயில் கொஞ்சம் பிடித்துக் கொண்டால் என்னென்னமோ செய்யலாம். அதெல்லாம் இங்க சொல்லமுடியாது. ஆரம்பிச்சு வச்சுட்டேன். இனி நீங்க அப்படியே Touchக்கு வந்து எக்ஸ்பர்ட் ஆகவேண்டியது தான்.

இனி யாரும் வார்த்தை தவறிவிட்டாய் ஹாலிவுட்ரசிகான்னு யாரும் சொல்லமுடியாது. ஓகே … ஆரம்பித்ததை முடிச்சாச்சு.


பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இந்தப் பதிவும் தொடரும் பிரயோசனமானதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தா திரட்டிகளில் ஓட்டுப் போட்டுவிடுங்க. இல்ல கீழே பிடிக்காத விடயத்தை கூறி திட்டிவிட்டு சரிப் போங்க.


டிஸ்கி – குமரன் குமரன்னு ஒராள் இருந்தாரு. திடீர்னு சொல்லாம கொல்லாம காணாம போயிட்டாரு. எந்தப் பதிவுலும் காணோம். யாருக்காச்சு என்ன விஷயம்னு தெரியுமா? தெரிஞ்சா கமெண்ட் ஒன்னு போட்டுவிடுங்க.



அடுத்து ஒரு விமர்சனத்தில் சந்திக்கும் வரை,

ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

29 comments:

  1. ஹெலோ..நாந்தாங்க தெரிதா..எங்கயும் போகல..இங்கதான் உங்கள சுத்திட்டு..

    ReplyDelete
  2. வரவர பதிவுகளில் காமெடிப்பொடிகள் இம்ப்ரூவ் ஆகிக்கொண்டே போகுது..ஆகட்டும்..ஆகட்டும்..நல்லாத்தான் சுவையா இருக்கு..நீங்க சொன்னத டிரை பண்ணி பார்க்கிறேன்..

    அப்புறம் ஒரு குறிப்பு : ஏதோ சரியா நேரமில்ல..கடவுள் கூப்பிட்டு இருந்தாரு..போகிட்டு வந்தேன்..ஆனா, வரத்தான் கொஞ்சம் லேட்டாயிருச்சு..அடுத்த தடவ கவனிச்சுக்கிறேன்..

    ஹாலிவுட் ரசிகரே, இல்லாத நேரத்துல சில விமர்சனங்கள் போட்டு கலக்கிட்டீங்க.தொடருங்க..நான் அப்பப்ப காணாம போயிட்டு திரிம்பி வந்துடறேன்.ஜீ பும்பா.

    ReplyDelete
  3. என் கம்ப்யூட்டர்ல என்ன பண்ணியும் ஒழுங்க வரமாட்டேங்குது.., ஓபன் பண்ணினாலே எரர் தான் வருது... :((

    IcheckMovies தான் யூஸ் பண்ணுற்ங்களா.. நானும் அதான் :))

    ReplyDelete
  4. @Kumaran

    மொக்கையோ சக்கையோ காமெடி எழுதும்போது தானாவே வந்துருது. அது பலமா பலவீனமான்னு தான் தெரியல.

    கருத்துக்கு நன்றி குமரன்.

    ReplyDelete
  5. @...αηαη∂....

    என்ன எரர்னு சொல்லமுடியுமா? தெரிந்தால் தேடிப் பார்த்து சொல்லப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. @ஹாலிவுட்ரசிகன்

    ஆபிஸ்ல இருக்கேன் வீட்டுக்கு போய் சொல்றேன்..

    ReplyDelete
  7. நான் தொலைக்காட்சி நாடகங்களை டவுன்லோடுவது இல்லை.. ஸோ TV Renamer நமக்கு நோ யூஸ்.. ஆனா XBMC பயங்கரமா யூஸாவும் போலிருக்கிறது.. பார்க்க ரொம்ப அழகாயிருக்கிறது.. அறிமுகத்துக்கு நன்றி!!

    ReplyDelete
  8. "3" படம் நெட்ல இல்லை கிடைக்குமா? ஒரு இரண்டு பேரை போட்டுத்தள்ளனும்....ஹிஹி!

    ReplyDelete
  9. @வீடு சுரேஸ்குமார்

    ஹலோ? ப்ளாக் மாறிடுச்சா? ஆன்லைன்ல பார்க்கணும்னா இந்த லிங்க்ல போய் பாருங்க.

    ReplyDelete
  10. @JZ

    படங்கள் நிறைய இருந்தால் இது ரொம்ப ரொம்ப யூஸ் ஆகும். உங்களுக்கு வேண்டிய genre, IMDB Rating, Actors என படங்களை பிரித்து மேஞ்சு பார்க்கலாம்.

    ReplyDelete
  11. இனி யாரும் வார்த்தை தவறிவிட்டாய் ஹாலிவுட்ரசிகான்னு யாரும் சொல்லமுடியாது. ஓகே … ஆரம்பித்ததை முடிச்சாச்சு...:)

    ReplyDelete
  12. குமரன் குமரன்னு நீங்க கத்துனது பார்த்து வந்துட்டார் போல...

    ReplyDelete
  13. @ரெவெரி

    ஹி ஹி ... நான் சொன்னது மலேஷியாவுக்கே கேட்டுட்டுது போல.

    ReplyDelete
  14. @...αηαη∂....

    Friend Request ஒன்னு அனுப்புங்க பாஸ்.

    ReplyDelete
  15. நல்ல பதிவு சார் இப்போது தான் பார்த்தேன் ... நன்றி

    ReplyDelete
  16. இங்க என்ன வச்சி காமெடி ஏதும் பண்ணலயே..அவ்..வ்வ்வ்வு.

    ReplyDelete
  17. கண்டிப்பாக எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பயன்படுத்த முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  18. வணக்கம் நண்பா, நல்லா இருக்கிறீங்களா?

    கொஞ்ச நாளைக்கு அப்புறமா வந்திருக்கேன்! ஆனாலும்.....எனக்கு இப் பதிவின் பழைய பாகங்களைப் படிச்சதா நினைப்பில்லை! அப்பாடா தப்பிச்சேன்!

    ReplyDelete
  19. நல்லதோர் தொழில்நுட்பப் பதிவு.

    வீட்டில சீடிக்களை வரவேற்பறையில் அடுக்கியிருப்போம்! அது போல கணினியிலும் அழகாக படங்களை தொகுக்க அசத்தல் ஐடியா!

    விளக்கப் பகிர்விற்கும், விவரக் குறிப்பிற்கும் நன்றி மச்சி!

    ReplyDelete
  20. பலருக்குப் பயனுள்ள பதிவு.
    எனக்கில்லை!

    ReplyDelete
  21. @ நிரூபன் - வீட்டில HDTV இருந்தா, நண்பர்களுடன் ஜாலியா போட்டுகாட்ட ஒரு நல்ல ஷோகேஸ் போல பயன்படுத்தலாம்.

    @பாலா - பயனளித்தால் மகிழ்ச்சியே.

    @சென்னைப்பித்தன் - அதற்கென்ன? சீக்கிரமே ஒரு படத்தைப் பற்றி எழுதிவிடுகிறேன். இங்கிலிஷ் படம் பார்ப்பீங்க தானே?

    ReplyDelete
  22. நண்பா பிரயோசனமான பதிவு.....பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  23. @ஹாலிவுட்ரசிகன்

    Couldn't Connect to the server ன்னு எரர் வருது :(

    ReplyDelete
  24. பலருக்கு மிகவும் அவசியமான தொழில் நுட்பப் பதிவு நன்றி சகோ

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு...

    முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்

    ReplyDelete
  25. தாங்கள் பகிர்ந்த விதத்திற்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
  26. உபயோகமான பதிவா இருக்கு. நானும் ஒழுங்கு படுத்தி வைக்க பாக்கறேன்

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Really thanks for the post... its a wonderful experience when seeking the movies ordered aesthitically.. many many thanks !!

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...